World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Mbeki facilitates US-Sudan peace deal

அமெரிக்க - சூடான் சமாதான பேரத்திற்கு Mbeki வசதி செய்தார்

By Barbara Slaughter
15 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 1 அன்று, தென்னாபிரிக்க ஜனாதிபதி Thabo Mbeki சூடான் நாடாளுமன்றத்தில் அசாதாரண உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்தக் கூட்டம் சூடான் சுதந்திரம் பெற்ற 49வது ஆண்டுவிழாவை குறிக்கின்ற வகையிலும் சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இராணுவம்/இயக்கத்திற்கும் (SPLA/M) இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை கென்யாவிலுள்ள Naivasha-வில் கையெழுத்தான மறுநாளிலும் நடைபெற்றது.

ஜனாதிபதி அஹமது அல் பஷிரின் ஆட்சியை பெருமளவு அறிமுகப்படுத்துதலில் பாராட்டிய பின்னர் Mbeki ஆபிரிக்காவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் இரத்தக்களரி நிலைச்சான்றின் மீதாக தாக்குதல் தொடுத்தார்.

குறிப்பாக அவர் வின்ஸ்டன் சேர்ச்சிலை தனிமைப்படுத்தி, அவர் "நமது காலனித்துவ எஜமானின்'' ஒரு பிரதிநிதி என்றும், அவரை ஒரு இனவாதி என்று கண்டித்தும், பிரிட்டீஷ் காலனித்துவாதிகளான ஜெனரல் கொர்டொன், பீல்டு மார்ஸல் விஸ்கெளண்ட் ஊல்ஸ்லி மற்றும் பிரபு கிட்ச்னர் போன்றவர்களின் குற்றங்களை நியாயப்படுத்தியும், எல்லா ஆபிரிக்கர்களையும், தரங்குறைந்த மனிதர்கள் என்று சித்தரித்தார் என்றும் Mbeki குறிப்பிட்டார்.

"இந்த பிரிட்டிஷ் காலனித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகள் சூடானில் இல்லாதபோது தென்னாபிரிக்காவில் இருந்தார்கள். இப்படி மாறி மாறி ஆட்சி புரிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் சென்ற இடத்திலெல்லாம் கொடூரமான காரியங்களைச் செய்தார்கள், ஆபிரிக்க மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே அவர்களை நாகரீகமிக்கவர்களாக மாற்றவேண்டுமென்றும், தங்களது இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினர்" என்று Mbeki கூறினார்.

அவர் சேர்ச்சிலின் "ஆற்றுப்போர்" நூலில் இருந்து மேற்கோள்காட்டினார். சூடானில் கிட்ச்னர் பிரபுவின் சுரண்டலை விவரிக்கும்போது, சர்ச்சில் "முஹமதியத்தின் சாபக்கேடு பற்றி" விளக்கியபோது "அது ஒரு வெறி உணர்வு கொண்டது நாய்கடி மனிதனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தான நோயை உண்டாக்குகிறதோ அவ்வளவு ஆபத்தானது'' என்றும் விளக்கினார். அதன் விளைவு ''பயப்படத்தக்க மரணம் விளைவிக்கக்கூடிய அக்கறையின்மை---- புறக்கணிக்கிற பழக்கவழக்கங்கள், ஒழுங்கற்ற விவசாய முறை, மந்தமான வர்த்தக முறைகள் ஆகும், மேலும் எங்கெல்லாம் நபிகள் போதகரின் தொண்டர்கள் ஆளுகிறார்களோ அல்லது வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களது தரம் தாழ்ந்த உணர்வுகள் வாழ்க்கையின் சிறப்பையும் மேன்மையையும் பறித்துவிடுகிறது. புனிதத்தன்மையும் இல்லை, கண்ணியமும் இல்லை" என்று சேர்ச்சில் எழுதியிருக்கிறார்.

"முஹமதியர்களைப்பற்றி சேர்ச்சில் என்ன கூறினாரோ அதைத்தான் துல்லியமாக நமது காலனித்துவவாதிகள் எல்லா ஆபிரிக்கர்களை பற்றியும் அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருதினார்கள். அவர்களது காலனித்துவ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அணுகுமுறைத் தன்மை அமைந்திருந்தது" என்று Mbeki தொடர்ந்து குறிப்பிட்டார்.

Mbeki காலனித்துவத்தின் குற்றங்கள் தொடர்பாக குறிப்பிட்டது சந்தேகத்திற்கிடமின்றி உண்மைதான். ஆனால் அவரை நோக்கி ஒரு கேள்வி கேட்டாக வேண்டும்----- இவ்வளவு ஆவேசமாக இந்த குறிப்பிட்ட நேரத்தில் பேசியது ஏன்? இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்?

தான் ஏகாதிபத்தியத்தை விமர்சனம் செய்பவர் என்ற தனது சொந்த செல்வாக்கை உயர்த்திகொள்கின்ற நோக்கில் அந்த உரை தெளிவாக அமைந்திருந்தது. ஆனால், அதைவிட முக்கியமாக அது ஜனாதிபதி அஹமத் அல் பஷீரின் தேசிய இஸ்லாமிய முன்னணி அரசாங்கத்தின் செல்வாக்கை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகும்-----1989-ல் ஒரு இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் அந்த ஆட்சி பதவிக்கு வந்தது மற்றும் அன்றிலிருந்து சூடானை கொடூரமான ஹூரியத் சட்டத்தின்கீழ் அரசாண்டு வருகிறது---- இந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு காலனித்துவ எதிர்ப்பு நம்பகத்தன்மை வழங்குவதற்கு அவர் முயன்று வருகிறார்.

ஜனவரி 9-ல் கென்யாவின் தலைநகர் நைரோபியில் கையெழுத்தான சமாதான உடன்படிக்கை பெரிதும் பாராட்டப்படுகிறது, 21 ஆண்டுகளாக கடுஞ்சீற்றமாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது.

1999 வரை, அமெரிக்கா கார்டோம் அரசாங்கத்திற்கெதிராக SPLA/M-ஐ ஆதரித்தது, அந்த ஆட்சியை இஸ்லாமிய தீவிரவாத ஆட்சி என்றும் தீண்டத்தகாத அரசு என்றும் அமெரிக்கா கருதியது.

1998 ஆகஸ்டில், சூடானிலிருந்த ஒரே மருந்து தயாரிப்பு Al-Shiya தொழிற்சாலையை அமெரிக்கா குரூஸ் ஏவுகணைகளை வீசி தகர்த்த்து, அப்போது அங்கு இரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அது குற்றம் சாட்டியது. 1991 முதல் 1996 வரை சூடானை தளமாக கொண்டிருந்த, ஒசாமா பின் லாடனுடன் அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் தொடர்புகளை வைத்திருந்தனர் என்றும் அது குற்றம் சாட்டியது.

கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா சூடான் சமாதான சட்டத்தை இயற்றியது, அது SPLA விற்கும் இதர எதிர்க்கட்சி அமைப்புகளுக்கும் அதிகாரபூர்வமான ஆதரவு தந்தது மற்றும் அவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்தது.

கார்டோம் அரசாங்க ஆட்சியின் விதிமுறை நடவடிக்கையின் தன்மை என்னவென்றால், விவசாயிகள் நிறைந்த கிராமங்களுக்கெதிராக ''போர் பிரபுக்களின்'' குடிப்படை நடவடிக்கை எடுக்கும்போது அந்த நடவடிக்கைகளை இராணுவத்தின் மூலம் ஆதரிப்பது. இவர்களோடு குடிப்படை சேர்ந்து குடிமக்கள் பகுதிகளில் இராணுவத்தின் போர் விமானங்களையும் ஹெலிகாப்டர் குண்டு வீச்சு விமானங்களையும் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துவதால் அங்கு கிளர்ச்சிக்காரர்கள் ஆதரவு பெறுவதாக கருதப்படுகிறது. உள்நாட்டுப்போர் காலத்தில் இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், 4 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.

ஜோர்ஜ் புஷ் அமெரிக்க ஜனாதிபதியானதும் கொள்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது ஏனென்றால் சூடானின் தென்பகுதியில் ஏராளமான எண்ணெய் இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது-----அந்த பிராந்தியத்தில் 2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் எடுக்க முடியும் என்றும் தற்போது ஒரு நாளைக்கு 320,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொழிற்துறைக்கு பிரதான நிதியாக கனடா, சீனா மற்றும் மலேசியா முதலீடு செய்கின்றன.

இந்த எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா ஆர்வம் காட்டியது, எனவே அந்த நாட்டில் குறிப்பாக எண்ணெய் உற்பத்தி செய்யும் பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது-----ஒரு முன்னுரிமை நடவடிக்கையாயிற்று. எனவே அமெரிக்கா தேசிய இஸ்லாமிய முன்னணி ஆட்சியை சாதகமாக ஆக்கிக் கொள்ள முயன்றது. புஷ் உடன்படிக்கைக்கான பேரம் ஒன்றை உருவாக்குவதற்காக ஒரு சிறப்புதூதரை நியமித்தார் மற்றும் பிரிட்டன், இத்தாலி மற்றும் நோர்வேயுடன் சேர்ந்து இரண்டு போட்டிதரப்புக்குமிடையில் ஒரு சமாதான பேரம் உருவாவதற்கு வலியுறுத்தினார்.

செப்டம்பர் 11-க்கு பின், அல் பஷீர் பின் லாடனின் கூட்டாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 30 பேரையும் அல்கொய்தா தொடர்பான 200 புலனாய்வு கோப்புகளையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததால் அது அவரை பாராட்டியது. இதற்கு கைமாறாக, அரசாங்கத்துடன் ஒரு பேரத்திற்கு இணங்குமாறு தென்பகுதி கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சமாதான முன்னெடுப்புகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. அரசாங்கம் குண்டு வீசி தாக்குதல் நடத்துவது நீடித்தது, ஆனால் அமெரிக்கா கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டது ஏனென்றால் உள்ளூர் கிராமங்கள்தான் அழிக்கப்பட்டன. அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர், உள்ளூர் மக்களது ஆதரவோடு எண்ணெய் கிணறுகளை தாக்குவது கிளர்ச்சிக்காரர்களுக்கு இயலாத காரியமாயிற்று.

சூடான் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை போன்ற அமைப்புக்கள் கண்டித்தன. 2002-ல் கிறிஸ்தவ உதவி அமைப்பு, அரசாங்கம் ''ஒருபகுதி மக்களின் உயிர்களையும், கட்டடங்களையும், பயிர்களையும் அழித்துச்செல்லும் கொள்கையை'' நடைமுறைப்படுத்துவதாக குற்றம் சாட்டியது.

ஜனவரி 9-ல் இறுதி வடிவம் தரப்பட்ட சமாதான பேரம், அரசாங்க அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு வகை செய்கிறது, இதனால் SPLA / M 28 சதவீத அமைச்சர் பதவிகளை பெறும். பல ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ள கிளர்ச்சித் தலைவர் John Garang துணை ஜனாதிபதியாக ஆவார், எண்ணெய் வருவாய் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் 50ற்கு 50 ஆக பகிர்ந்தளிக்கப்படும், இருப்பினும், பல நிபுணர்கள் அல் பஷீரும் அவரது ஆதரவாளர்களும் உடன்படிக்கையின் இந்தப் பகுதியை உண்மையிலேயே நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். வட பகுதியில் தொடர்ந்து ஷரியா சட்டம்தான் செயல்படுத்தப்படும்.

இதற்கிடையில் மேற்கு சூடானில் டர்புர் பகுதியில் மோதல் நீடித்துக்கொண்டிருக்கிறது. 2003-ல் அப்பகுதியில் சண்டை தொடங்கியது, சூடான் விடுதலை இராணுவ/இயக்கம் (SLA/M) தெற்கில் நடைபெறும் கிளர்ச்சியினால் உத்வேகம் பெற்று கார்டோமிலிலுள்ள தேசிய இஸ்லாமிய அரசிற்கெதிராக ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டது.

அரசாங்கம் டர்புர் பகுதியிலும் இதர பகுதிகளில் கடைபிடித்து வரும் அதே நடவடிக்கைகளை கிளர்ச்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொண்டது. Janjaweed என்றழைக்கப்படும் தீவிரவாதிகளை அரசாங்கம் பொதுமக்களை பயமுறுத்துவதற்கும் கிராமங்களை தீயிடுவதற்கும் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்வதற்கும் பயன்படுத்தியது. தெற்கில் போன்று, ஹெலிகாப்டர் குண்டுவீச்சுகளையும், பெரிய குண்டுகளையும் கொண்டு அரசாங்க படைகள் கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்தன. சுமார் 70,000 குடிமக்கள் கொல்லப்பட்டனர். மில்லியன் கணக்கானோர் இடம் பெயர்ந்து பக்கத்திலுள்ள சாட் நாட்டிற்கும் அகதிகள் முகாம்களுக்கும் தப்பி ஓடினர்.

2004-ல் டர்புர் நிலவரம் உலகின் ஊடகங்களில் தலைப்பு செய்தியாயிற்று. அதனால் கார்டோம் ஆட்சி மீது உலகம் முழுவதும் பரவலாக கண்டனங்களும், இனப்படுகொலை நடப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஐ.நா மனித உரிமைகள் கமிஷன் அங்கு அட்டூழியங்கள் நடப்பதாக அறிக்கை தந்தது மற்றும் ''அந்த குற்றங்களுக்கு உடந்தையாக சூடான் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை'' என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிவித்தது.

வாய்மொழியாக Kahrtoum அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் மேற்கு நாட்டு அரசுகளும் எச்சரிக்கை விடுத்தபின்னர், ஐ.நா வை தவிர்த்துவிட்டு ---- ஐ.நா வில் சீனாவும் இதர நாடுகளும் சூடான் அரசாங்கத்தை ஆதரிப்பதால் அந்த நாடுகள் ஒரு இராணுவ தலையீட்டை தடுத்து நிறுத்திவிடும் என்பதற்காக --- அவை "ஆபிரிக்க தீர்வின்" அவசியம் குறித்து அறிவித்தன. அப்பகுதியில் ஆபிரிக்க யூனியன் (AU) துருப்புக்களை ''அமைதி காப்புப் படையாக'' அனுப்ப முடிவு செய்தன. மேற்கு நாடுகளிடமிருந்து எந்தவிதமான நிதியுதவியும் வராத நிலையில் ஒரு உறுப்பு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதில் தயக்கம் காரணமாக, பிரான்சு நாடு அளவிற்குள்ள எல்லை பகுதியை கண்காணிப்பதற்கு ஆபிரிக்க யூனியன் 400 துருப்புக்களை மட்டுமே அனுப்பியுள்ளது.

மேற்கு நாடுகளின் ஆதரவோடு தலையீடு இருக்குமானால் டர்புரில் தனக்கு மதிப்புக்குறைவு ஏற்படும் என்று கவலைபட்ட சூடான் ஆட்சி அண்மையில் இராணுவ ஆதரவோடு கிராமங்களில் Janjaweed தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கிறது. ஆனால் அண்மையில் வந்துள்ள செய்திகள் டர்புர் பிராந்தியத்தில் கிளர்ச்சிப்படைகளும் விரிவான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும், தென்பகுதியில் SPLA/M-டன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் சமாதான பேரத்தினால் ஊக்குவிக்கப்பட்டு கிளர்ச்சிக்காரர்களும் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தன. சென்ற வாரம் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் தந்திருக்கிற அறிக்கையில், நிலவரம் மோசமடைந்து வருவதாகவும், ''ஆயுதங்கள் குவிக்கப்பட்டு பலாத்காரம் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும்,'' இதில் ''அரசாங்கம் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் இரண்டு தரப்பினருமே சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறி வருவதாகவும் அரசாங்கம் பாரியளவு படைகளையும் அவற்றின் நடமாட்டத்தையும் பெருக்கியிருப்பதாகவும்" கூறியுள்ளார்.

சென்ற மாதம் குழந்தைகளை காப்பாற்றுவதற்கான அறக்கட்டளை அமைப்பு டர்புரில் பணியாற்றி வருகிற தனது ஊழியர்கள் 350 பேரையும், திரும்ப அழைத்துக்கொள்வதாக அறிவித்தது ஏனென்றால் அப்பகுதியில் ஊழியர்கள் பணியாற்ற முடியாத அளவிற்கு படுமோசமான நிலவரம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. அதற்கு முந்திய வாரம் அந்த அமைப்பின் 4 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா வும் இதர உதவிக் குழுக்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டன. சென்ற கோடைகாலம் முழுவதிலும் இனப்படுகொலை பற்றி கூக்குரல் எழுப்ப்பட்டுக்கொண்டிருந்தது. டர்புர் மக்களை அனைவரும் கைவிட்டு விட்டனர், அவர்களுக்கு உணவுமில்லை மருந்துமில்லை மற்றும் எந்தவிதமான பாதுகாப்புமில்லை.

இவை எல்லாவற்றிலும் Mbeki -ன் பங்களிப்பு என்ன?

அவரது காலனித்துவ எதிர்ப்பு வாய்வீச்சுக்குப் பின்னால் கார்டோம் செல்வந்தத்தட்டினருக்கு தந்த பாராட்டுதலுக்கு பின்புலமான Mbeki சூடான் ஆட்சிக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். மேலும் மேற்கு நாடுகளின் ஆதரவு கிடைக்கவேண்டுமென்றால், நாட்டின் எண்ணெய் வளத்தை தெற்கிலுள்ள முன்னாள் எதிரிகளோடு பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் தங்களது கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு மேற்கிலுள்ள கிளர்ச்சி படைகளோடும் அரசு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே Mbeki -ன் எச்சரிக்கையாகும். ஆபிரிக்க கண்டத்தில் இதர புரூண்டி, காங்கோ போன்ற நாடுகளின் தகராறுகளிலும் தென்னாப்பிரிக்கா தலையிடுகிறது என்ற வாய்வீச்சை பயன்படுத்தி Mbeki சூடானில் அரபு மக்களுக்கும் கருப்பர்களுக்குமிடையில் நிலவுகின்ற மோதல் தென்னாபிரிக்காவில் கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலைப் போன்றதுதான் என்று குறிப்பிட்டார். "ஏதோ ஒரு வகையில் சமாதானம் அல்லது சமரச முயற்சி தேவை" என்று குறிப்பிட்டார். இதை சற்று தெளிவாக ராஜியதந்திர சொல்லாடலை குறைத்து சொல்வதென்றால், சூடான் அரசாங்கமும் மேற்குப்பகுதி கிளர்ச்சிக்காரர்களும் ஒரு சமரசத்திற்கு வந்தாக வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் ஆப்பிரிக்க ஒன்றியம் தலையிடும் அதற்கு அடுத்தகட்டம் தென்னாபிரிக்கா தலையிடும் நடவடிக்கைதான்.

இது முற்றிலும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கொள்கை வழியை ஒட்டியே அமைந்திருக்கிறது, ஏனென்றால் கார்டோம் ஆட்சி தென்பகுதியில் சமாதான உடன்படிக்கைக்கு சம்மதித்திருப்பதை வரவேற்கின்ற அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் டர்புருடன் ஒரு பேரத்திற்கு வருமாறும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. சூடானில் மேற்குப்பகுதி மக்கள் இன்றைய தினம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைப்பாடுகளால் கவலைப்பட்டு அதனால் உந்தப்பட்டு தென் ஆபிரிக்கா வாஷிங்டனைப் போன்று செயல்படவில்லை. மேற்கு நாடுகளைப் போன்று சூடானின் எண்ணெய் மற்றும் கனிம வளத்தை பகிர்ந்து கொள்வதுதான் தென்னாபிரிக்காவின் அக்கறையாகும். தென்னாபிரிக்காவின் Business Day செய்திப்பத்திரிக்கை தந்துள்ள தகவலின்படி, Mbeki சூடான் விஜயத்தில் சூடானின் பெரும் எண்ணெய் வளத்தை துறப்பணம் செய்வதில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு வகைசெய்யும் ஒரு புதிய உடன்படிக்கையில் Mbeki -ம் அல் பஷீரும் கையெழுத்திடுவதும் அடங்கியிருக்கிறது. "தென்னாபிரிக்கா மற்றும் சூடான் அரசாங்கங்கள் இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் விரிவு படுத்துவதிலும் உறுதி கொண்டிருக்கின்றன."

Top of page