:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
A revealing commentary by a German newspaper
The price of Ukrainian democracy
ஒரு ஜேர்மனிய நாளேட்டின் வெளிப்படுத்தும் வகையிலான
வர்ணனை
உக்ரேனிய ஜனநாயகத்திற்கான மதிப்பு
By Peter Schwarz
31 December 2004
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஜேர்மன்
Suddeutsche Zeiung செய்தித்தாள், உக்ரேனிய
ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றிய முடிவுகளை வெளியிட்ட கட்டுரை ஒன்றிற்கு "ஜனநாயகத்திற்கு வெற்றி" என்ற தலைப்பைக்
கொடுத்திருந்தது. இக்கட்டுரையை எழுதிய தோமஸ் ஊர்பன் என்பவர் இந்த ஏட்டின் ஐரோப்பிய சிறப்புச் செய்தியாளராவார்.
பல வாரங்களாக, இவர் கீவில் இருக்கும் ஆரஞ்சு எதிர்க் கட்சியை மிகச் சிறப்புடனும், திறனாய்வற்ற கட்டுரைகள்
மூலமும் புகழ்ந்து விவரித்து வந்துள்ளார். ஆனால் தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் வெற்றியின் பெருமிதம் ததும்பி
நிற்கும் நேரத்தில் அவர் தான் நினைத்தையும் விடக் கூடுதலாகவே உக்ரேனிய ஜனநாயகத்தின் தன்மையை பற்றி
விவரித்துள்ளார்.
ஊர்பன் எழுதுகிறார்: "ஒரு விஷயத்தை யுஷ்செங்கோவ் செய்து முடிக்க இயலாது:
அதாவது தொழிற்துறையில் உள்ள தன்னலச் சிறுகுழுக்களின் ஏகபோகத்தை இவரால் விரைவில் முறிக்க முடியாது. இவர்
மிகவும் கவனத்துடன்தான் செயல்படவேண்டும்; ஆயினும் கூட அவற்றையெல்லாம் ஒன்றாகத் திரட்டி ஓர் இடைக்கால
தடையற்ற சந்தைப் பொருளாதாராமாக மாற்றுவது என்பது மோசமான செயல் அல்ல. 1990களில், ஓரளவு குற்றம்
சார்ந்த முறையிலேயே பெரும் செல்வத்தை குவிப்பதற்கு பதறியடித்துச் செயல்பட்ட தன்னலச் சிறுகுழுக்களே இப்பொழுது
சட்டப்பாதுகாப்பையும், பெருமித நிலைபற்றியும் காக்கவேண்டும் என்ற அக்கறையைக் கொண்டுள்ளனர். சர்வதேச
அளவில் அவர்கள் உக்ரேனிய உயர்குடியினர் என்ற அந்தஸ்தில் அறியப்படவேண்டும் என்று கருதுகின்றனர். வெறியுடன்
அலைந்திருந்த இந்த முதலாளித்துவக்குழு தனக்கென இப்பொழுது கெளரவம் என்ற சால்வையை அணிந்து கொண்டு
உலவ நினைக்கிறது; இது நாட்டை ஜனநாயகப் படுத்தவேண்டும் என்ற திட்டத்துடன் நன்றாகவே இயைந்து நிற்கிறது.
பெரும்பாலான தன்னலச் சிறுகுழுக்கள், ஒரு நல்ல முறையில் வரிசெலுத்துபவர்கள் என்ற நிலைக்கு
வருவார்களேயானால், எளிதில் சிக்கல்களில் இருந்து விடுபடுவர்; ஏனெனில் அவர்களுடைய குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை
நிரூபிப்பது மிகக் கடினம்; அதுதான் ஒரு புதிய திருப்பத்தை தொடக்குவதற்கு கொடுக்க வேண்டிய விலையாகும்."
எனவே இவ்வாறுதான உக்ரேனிய ஜனநாயகம் இப்பொழுது வெளிப்பட்டுள்ளது: தங்கள்
பெரும் சொத்துக்களை குற்றம் சார்ந்த முறையில் திரட்டிய தன்னலச் சிறுகுழுக்களுக்கு சட்டபூர்வமான
பாதுகாப்பும்; வெறியார்ந்த கொள்ளை முறையை கொண்டிருந்த முதலாளாத்துவத்திற்கு கெளரவம் என்ற அணிகலனும்
தேவை. ஒருமுறையேனும் நாங்களும் ஊர்பனுடன் ஒத்துப்போக நினைக்கிறோம். உண்மையில் இந்தத் திசையில்தான்
விக்டர் யுஷ்செங்கொ மற்றும் ஜூலியா டிமோஷ்செங்கோ இவர்கள் ஜனநாயகத்தை நோக்கி இயக்கும் பாதையின்
திசை அமைந்துள்ளது.
ஜனநாயகம் என்றால் பொதுமக்களுடைய விருப்பத்திற்கேற்ற ஆட்சி என்ற
பொருளாகும். உண்மையான ஜனநாயகம் என்ற நிலையில் மக்கட்தொகையின் பரந்த தட்டுக்கள் தங்களுடைய
அடிப்படைத் தேவையை முறையாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற பெயரளவில் இல்லாமல் உண்மை
வாழ்விலும் முடியும் என்ற அடிப்படை நிலவுகிறது. சில முறையான சடங்குகளான வாக்குகளை அளித்தல் (கடந்த
மறுபடி உத்திரவிடப்பட்டு நடந்த தேர்தலில் இது கடைபிடிக்கப்பட்டதா என்பதும் சந்தேகத்திற்கு உட்பட்டுவிட்டது)
போன்றவை உண்மையான ஜனநாயகத்தின் தேவைகளைத் திருப்தி செய்ய இயலாததாகும். சமுதாயத்தின்
சொத்துக்கள், பெருஞ்செல்வக் குவிப்புடைய ஒரு மிகச் சிறிய பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை,
பெரும்பாலான மக்கள் தங்களுடைய சராசரி மாத வருமானம் 30க்கும் 100க்கும் இடைப்பட்ட யூரோக்களில்
வாழ்க்கையை நடத்தவேண்டும் என்றுள்ளவரை, உண்மையான ஜனநாயகம் என்பது இருக்கப்போவதில்லை.
ஜனநாயகமும் சமூக சமத்துவமற்ற நிலையும் இயைந்து செயல்பட முடியாதவை என்பது
கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கிலும் வெளிப்படையாகி உள்ளது; சமுதாயத்தின் துருவமுனைப்படுத்தல்களை அடுத்து
புஷ் நிர்வாகத்தால் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுவரும் அமெரிக்காவில்
கூட குறைந்த தன்மையில் இந்நிலைப்பாடு இல்லை. பொதுக் கருத்துக்களை முறையாகத் திரித்து மாற்றுதல், ஆட்சி
உயர் சிறுகுழுவிற்கு எதிரான தீவிர எதிர்ப்பு எதையும் முன்வைக்காத தன்மையை இலக்காகக் கொண்டு, பில்லியன்
கணக்கான தொகையை விழுங்கும் ஒரு பெரிய தொழில்முறையாக தேர்தல்கள் மாற்றப்பட்டுவிட்டுள்ளன. செய்தி
ஊடகத்தின் சுதந்திரம் என்பது நிதியளிவில் சக்தி வாய்ந்த நிறுவனங்கள் செய்தி ஊடகத்தை நிறுவிக் கட்டுப்படுத்தி
அவர்கள் விரும்பும் வகையில் இயக்கும் ஒரு கருவியாக இழிந்து விட்டது. உண்மையில் உக்ரேனிய அரசாங்கத்தால்
செய்தி ஊடகத்தை தன் விருப்பிற்கேற்ப திரித்துச் செயல்படவைக்கும் வகைகள் கையாளப்பட்ட அப்பட்டமான
செயல்பாடுகள் ஒரு ரூபேர்ட் முர்டோக் அல்லது ஒரு சில்வியோ பேர்லுஸ்கோனியுடைய பிற்போக்கு
முறையோடுதான் ஒப்பிடப்பட முடியும்.
உரிய முறையில் ஜனநாயக உறவுகள் எனக் கூறக்குடிய நிலையை அறிமுகப்படுத்தக்
கூடிய செயலுக்கு முதலில் இன்றியமையாமல் இருக்கவேண்டிய தன்மையை ஊர்பன் தெளிவிடன் நிரகாரித்துவிட்டுள்ளதுதான்
ஆகும். அத்தன்மையின்படி தொழிற்றுறையிலும், நிதியவழிகளிலும் தன்னலச் சிறுகுழுக்கள் கொண்டுள்ள ஏகபோக உரிமைகள்
முறித்துத் தள்ளப்பட வேண்டியவையாகும். மேலும், சட்டநெறியற்று குவிக்கப்பட்டுள்ள செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட்டு
சமூக நலன்களான முதியோர் ஓய்வூதியத் திட்டம், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலைகள் உருவாக்குதல்,
நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்தை வளர்த்தல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அத்தகைய
முன்னோக்குதான் நாட்டின் கிழக்கு, மேற்குப்பகுதிகளுக்கு இடையே உள்ள பிளவைக் கடக்க உதவும்; இப்பிளவோ
உக்ரைனை விரைவாக உடைத்துவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது. மேலும் உண்மையான சமூக
முரண்பாடுகளான, புதிய பணம் படைத்த உயர்பிரிவினருக்கும் பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கும் இடையே
உள்ள பிளவை அம்பலப்படுத்தியும் காட்டியுள்ளது.
ஜனநாயக எதிர்ப்பு என்று கூறப்படும் அமைப்பு இதைச் சிறிதும் கருத்திற்
கொள்ளவில்லை. தான் உட்கார்ந்து கொண்டிருக்கும் மரக்கிளையை இரம்பம் (வாள்) கொண்டு அறுத்துச் சாய்ப்பதைத்தான்
யுஷ்செங்கோவின் முகாமும் செய்யவிரும்புகிறது. மிகப் பெரும் படாடோபத்துடன் கூடிய மக்களைத் திருப்திப்படுத்தும்
தன்னலச் செயற்பாட்டைக் கொண்டிருந்தபோதிலும்கூட, ஆரஞ்சுப் புரட்சி என்று அழைக்கப்படும் புரட்சி எதையும்
உண்மையில் மாற்றிவிடவில்லை. ஒரு சொத்துடைய சிறு குழுவின் ஆட்சிக்குப் பதிலாக மற்றொரு சொத்துடைய சிறு
குழு, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. மிகச் சரியாகவே ஊர்பன் குறிப்பிட்டுள்ளபடி, இக்காரணத்தை ஒட்டித்தான்,
தொழிற்துறை தன்னலச் சிறுகுழுக்களின் ஏகபோக உரிமைகளை இது முறிக்க இயலாது.
தன்னுடைய ஜனநாயகம் தொடர்பான உரிமை கோரல்களை, நீண்ட காலத்திற்கு
யுஷ்செங்கோவால் தக்கவைத்துக் கொள்ள இயலாது. அவருடைய ஒத்துழைப்பாளரான ஜூலியா டிமொஷெங்கோவும்
ஏற்கனவே ஜனாதிபதியின் எந்த அதிகாரங்கள் கடுமையாக எதிர்க்கட்சியின் தாக்குதலுக்கு உட்பட்டனவோ, அவை
தக்க வைக்கப்பட வேண்டும் என்றுதான் கோரியுள்ளார். இந்த அதிகாரங்களை யுஷ்செங்கோ எதற்காக இன்றியமையதவை
என்று கருதிகிறார் என்றால் அவருக்கு முன் ஆட்சியில் இருந்த குச்சமாவின் உதாரணத்தைத்தான் இவரும் பின் பற்ற
விரும்புகிறார்: அதாவது அனைத்து எதிர்ப்புக்களையும் அடக்குதல் என்பதேயாகும் அது.
See Also :
உக்ரைன் அதிகாரப்
போராட்டம்: அரசியல் சட்ட ஒப்பந்தம் எதிர்க்கட்சி தலைவர் யுஷ்செங்கோவிற்கு சாதகம்
உக்ரைனில் அதிகாரப்
போராட்டம்: யுஷ்செங்கோவும் யானுகோவிச்சும் எதற்காக நிற்கின்றனர்?
உக்ரைனில் அதிகாரப்
போராட்டம் தொடர்கின்றது
உக்ரைன்: உக்ரேனிய எதிர்ப்பு
அணியில் அதிதீவிர வலதுசாரி குழுக்கள் ஆர்வமான பங்கு
உக்ரைன் தேர்தல் சர்ச்சையில்
அமெரிக்கா தலையிடுகிறது: திரு. பெளல் அவர்களே உங்களை யார் கேட்டது?
Top of page |