:
ஆசியா :
சுனாமி பேரழிவு
Asian tsunami disaster: the political
issues
SEP/WSWS public meeting in Ambalangoda,
Sri Lanka
ஆசிய சுனாமி பேரழிவு: அரசியல் பிரச்சினைகள்
இலங்கையின் அம்பலாங்கொடையில் சோ.ச.க/உ.சோ.வ.த
பகிரங்கக் கூட்டம்
24 February 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
சோசலிச சமத்துவக் கட்சி, டிசம்பர் 26ம் திகதி சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட
தென் கரையோர நகரங்களில் ஒன்றான அம்பலாங்கொடையில் பகிரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
இக்கூட்டத்தில் இந்த பேரழிவினால் எழுப்பபட்டுள்ள வரலாற்று, அரசியல் பிரச்சினைகள் கலந்துரையாடப்படும்.
இலங்கையையும் ஏனைய தெற்காசிய நாடுகளையும் சுனாமி தாக்கி இரண்டு மாதங்கள்
கடந்த பின்னரும், தப்பிப்பிழைத்த ஆயிரக்கணக்கானவர்கள் போதும் போதாது என்ற நிலையில் தற்காலிக நிலைமையில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாக்குறுதியளிக்கப்பட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. புதிய வீடமைப்புத்
திட்டங்கள் தாமதமாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் ஆத்திரத்தையிட்டு பீதி கொண்டுள்ள
அரசாங்கம் பரந்த அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதோடு நிவாரண நடவடிக்கைகளுக்காக இராணுவத்தை
பொறுப்பாக நியமித்துள்ளது.
கொழும்பில் உள்ள அரசியல் கட்சிகளும் மற்றும் வெளிநாட்டு சக்திகளும், இந்த பேரழிவை
தமது சொந்த நலன்களுக்காக சுரண்டி வருகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இந்த அவலத்தை
"ஐக்கியத்துக்கு" அழைப்புவிடுக்க பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தனது கொள்கைகளுக்கு எதிரான விமர்சனங்களை
அடக்க முயற்சிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பலவீனமடைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிராக இராணுவம் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சாடைகாட்டி வருகின்றது. அமெரிக்கா, வியட்நாம்
போருக்குப் பின் மிகப் பெரிய கடற்படையை இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்புவதன் ஊடாக, தென்கிழக்காசியாவில்
இராணுவ தொடர்புகளை மீள்ஸ்தாபிதம் செய்துகொள்ள இந்த பெருந்துன்பத்தை சுரண்டிக்கொண்டுள்ளது.
தவிர்க்க முடியாத வகையில் மிக வறிய சமுதாயத் தட்டான பாதிக்கப்பட்டவர்கள்
எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இந்த அவமதிப்பும் அலட்சியமும், ஆளும்
வர்க்கத்திடம் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள எல்லையற்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வும் கிடையாது
என்பதை சாதாரணமாக அம்பலப்படுத்தியுள்ளன. அம்பலங்கொடையில் நடைபெறவுள்ள உலக சோசலிச வலைத்
தளம்/ சோசலிச சமத்துவக் கட்சி கூட்டமானது வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் யுத்தத்திற்கும் ஒரு சோசலிச
பதிலீட்டை அபிவிருத்தி செய்யும்.
சோ.ச.க பொதுச் செயலாளரும் உ.சோ.வ.த சர்வதேச ஆசிரியர்குழு உறுப்பினருமான
விஜே டயஸ் பிரதான அறிக்கையை முன்வைப்பார்.
திகதியும் நேரமும்: பெப்பிரவரி 27, மாலை 4.00 மணி
இடம்: அம்பலாங்கொட நகர மண்டபம்
Top of page |