World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காHoward Dean named Democratic chairman: cosmetic change for a right-wing party ஜனநாயகக் கட்சி தலைவராக ஹோவர்ட் டீன் நியமனம் பெறுகிறார்: வலதுசாரிக் கட்சிக்கு ஒரு வண்ணப் பூச்சு By Patrick Martin ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக முன்னணியில் இருந்த வேட்பாளர் பிரச்சாரம் கட்சி நடைமுறையின் எதிர்ப்பு காரணமாக ஓராண்டிற்கு முன் தடம் புரண்டுபோன, பழைய வெர்மான்ட் கவர்னர் ஹோவர்ட் டீன் ஜனநாயகக் கட்சியின் தலைவராக சனிக்கிழமையன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவினால் (DNC), குரல் வாக்கு மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆறு வேட்பாளர்கள் பங்கு பெற்றிருந்து இந்த இரண்டு மாத காலப் போட்டியில், மற்றவர்கள் தேசிய அளவில் அறிந்திருக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், ஒருவர் பின் ஒருவராக விலகிக் கொண்டனர். இந்தப் பிரச்சாரத்தின் திருப்பு முனையாக, DNC உறுப்பினர்கள் வாக்குப் போடும் தகுதியுடைய 447 பேருக்குத்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் என்றிருந்த நிலையில், மாநில ஜனநாயகக் கட்சி தலைவர்களின் குழு தன்னுடைய ஒப்புதலை டீனுக்குக் கொடுத்தது; இவ்வாறு செய்கையில் இதனுடைய நிர்வாகக் குழுவின் வாக்கை இது மாற்றிவிட்டது. தொடக்கத்தில் நிர்வாகக் குழு மூன்று வகையாக, 6 வாக்குகள் டீனுக்கு என்றும், 5 வாக்குகள் டான்னி பெளலர் என்று பழைய DNC தலைவர் டான் பெளலருடைய மகனுக்கு என்றும், 3 வாக்குளை பழைய தேசிய சட்ட மன்ற உறுப்பினரான டெக்சாசின் மார்டின் பிராஸ்டுக்கும் கொடுத்திருந்தது. பிராஸ்ட்டின் ஆதரவாளர்கள் பின்னர் தங்களுடைய ஆதரவை முதலில் பெளலருக்கு, டீனைத் தடுக்கும் வகையில் போட்டனர். ஆனால் அனைத்து மாநிலப் பிரிவுகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் இருந்த பெரிய குழு, டீனுக்கான ஆதரவை 21 என்பதில் இருந்து 56 க்கு உயர்த்தி வாக்குகளை அளித்தது. அதுவரை, காங்கிரசின் ஜனநாயகக் கட்சி தலைமை டீன் கட்சிக்கு தலைமை தாங்குவதை ஒன்றும் இரகசியமாக வைத்திருக்கவில்லை; அது முதலில் பிராஸ்டுக்கும், பின்னர் பழைய தேசிய சட்ட மன்ற உறுப்பினரும், 9/11 குழு உறுப்பினர்களில் ஒருவருமான டிமோதி ரோமெருக்கும் உயரிடத்திற்கு ஆதரவை கொடுத்திருந்தது. இந்த இரண்டு வேட்பாளர்களும் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் குழுவின் வலதுசாரி தொடர்பை கொண்டிருந்தும்கூட அதிக ஆதரவை பெற முடியவில்லை. மாநில தலைவர்களின் வாக்குகளுக்கு பின்னர் டீனை நிறுத்தவேண்டும் என்ற எந்த முயற்சியும் பலனளிக்காமற் போயிற்று. ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தோல்வியுற்றிருந்த செனட்டர் ஜோன் கெர்ரியினால் இது தெளிவாக அடையாளம் காட்டப்பட்டது. NBC இன் "செய்தியாளர்களை சந்தியுங்கள்" என்ற பேட்டி நிகழ்ச்சியில், கடந்தகாலத்தில் ஈராக் போர் எதிர்ப்பு, மற்றும் ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்தல் பிரச்சாரக்காலத்தில் எதிர்ப்புக் காட்டியதால், டீன் ஏற்புடையவரா எனக் கேட்கப்பட்டதற்கு, தன்னுடைய முன்னாள் போட்டியாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கான திறனைக் கொள்ளுவது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கெர்ரி தெரிவித்தார். ஆனால் தேசிய சட்ட மன்ற உறுப்பினர்கள் "கட்சியின் தலைமைப்பீடத்தில் ஒரு பேச்சாளர் இருப்பதை விரும்பவில்லை" என்று அவர் உடன்கூறினார். ( அமெரிக்க அரசியலில் கட்சித் தலமை என்பது பொதுவாக நிதி திரட்டுவோர் அல்லது திரைக்குப் பின்னணியில் கட்சிக்காக அரசியல் செயலைப் புரியும், டீனுக்கு முன்பிரிந்த டெரி மக் ஆலிப்பே போன்றோர்தான் வகிக்கப்படும்; இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர் அல்லது வேட்பாளர் திறனுடைய நபரால் வகிக்கப்படுவதில்லை. இந்தப் பதவிக்கு தன்னுடைய வேட்புத்தன்மையை அறிவித்த முறையில், டீன் 2008 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின், ஜனாதிபதி வேட்பாள நியமனத்திற்காக விரும்பவில்லை என்ற பொருளைத்தான் கொடுத்துள்ளார்.)சனிக்கிழமையன்று உத்தியோகபூர்வமான DNC வாக்கு வருவதற்கு சில தினங்கள் முன்பே வாஷிங்டனில் செனட் சிறுபான்மை தலைவர் ஹாரி ரீட், மன்ற சிறுபான்மைத்தலைவர் நான்சி பெலோசி மற்றும் உயர்மட்ட ஜனநாயகவாதிகள் பலரை டீன் சந்தித்திருந்தார். செய்தி ஊடகத்தின் கருத்தின்படி, ஒவ்வொருவரிடமும் இவர் தான் உள்ளூர், மாநில ஜனநாயகக் கட்சி அமைப்பின் பிரிவுகளை வளர்க்கப் பாடுபடப்போவதாகவும், கொள்கை விஷயங்கள் சட்டமன்ற தலைவர்களின் பொறுப்பாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். பலமுறையும் நிருபர்களால் ஈராக் பற்றிய அவருடைய நிலைப்பாடு கேட்கப்பட்டபோது, டீன், அது தேசியச்சட்ட மன்ற உறுப்பினர்களின் வரம்பு என்றும், அதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்றும் "நான் விரைவில் வாக்களிக்க இல்லாத எதைப்பற்றியும் அறிவிப்புக் கொடுக்க தேவையில்லை" என்றும் குறிப்பிட்டார். தன்னுடைய பங்கிற்கு வெள்ளியன்று ரீட் கூறியதாவது: "டீனுக்குத் தன்னுடைய வேலை என்ன என்றும் செய்திகள் அளிப்பது அல்ல என்றும் தெரியும் என நினைக்கிறேன். ஜனநாயக கட்சித் தலைமையில் இருந்து வரும் செய்தியை நிறைவேற்ற வேண்டியதுதான் அவருடைய கடமையாகும்." இப்பதவி ஏற்பு உரை சனிக்கிழமை நடந்தபோது டீன் ஈராக் பற்றி ஒருமுறைதான் குறிப்பிட்டார்: அதுவும் புஷ் போரின் செலவைப் பற்றி சட்ட மன்றத்திற்கான பட்ஜெட் உரையில் குறிப்பிடாததற்கான விமர்சனமாகும். செய்தி ஊடகத்தால் நேரடியாக கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் விடையிறுத்தார்: "என்னுடைய கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை; ஆனால் கொள்கை பற்றிய அறிவிப்புக்கள் பெரும்பாலும் சட்ட மன்றத் தலைவைர்களிடம் இருந்துதான் வெளிவருமே ஒழிய என்னால் வகுக்கப்படுபவை அல்ல." ஏற்புரையின் தன்மை மிகக் குறைவான ஒலியிலும், வலதுசாரித்தனம் நிறைந்தும், ஜனநாயகக் கட்சி "நிதிய முறையில் பொறுப்பு கொண்டிருப்பதை" விளக்கும் வகையிலும், புஷ் நிர்வாகத்தை "என்ரோன் பாணியில் நாட்டின் மூலதனத்தைப் பற்றி பொறுப்புக் கொண்டிருப்பதாக" தாக்கிய வகையிலும் இருந்தது. டீன், புஷ்ஷின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டுதல் போன்ற, உள்நாட்டுப் பிரச்சினைகளை பற்றியே அதிக கவனம் காட்டினார். ஈராக் போரைப் பற்றி எதுவும் கூறாமல், டீன் ஜனநாயகக் கட்சி "வலிமையான, திறமையான" கொள்கைகளை தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் மேற்கொள்ளும் என்ற கருத்தை தெரிவித்தார். "ஜனநாயகக் கட்சியினர்தாம் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். ஜனநாயகக் கட்சியினர்தான் நம்முடைய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜனநாயகக் கட்சியனர்தாம் இப்பொழுது நம்முடைய பாதுகாப்புத் துறையில் எஞ்சியிருக்கும் பிளவுகளை மூடுவதற்கும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயகக் கட்சியினர்தாம் உளவுத்துறை பிரிவு சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். ஜனநாயகக் கட்சியனர்தான் இன்றைய அச்சுறுத்தல்கள், மற்றும் நாளைய அச்சுறுத்தல்களையும், அதாவது உலகெங்கிலும் அணுவாயுத அச்சம் இருக்கக் கூடாது என்பதை பாதுகாக்கும் வகையில், நேர்மையுடன் சந்திக்கவேண்டிய வெளிநாட்டுக் கொள்கை ஒன்றிற்காக போராடுகின்றனர்." இப்படிப்பட்ட ஹோவர்ட் டீனின் புதிய அவதாரம், 2003-2004 தேர்தல் பிரச்சாரத்தில் போரெதிர்ப்பு வேட்பாளராக அவர் தன்னை காட்டிக் கொண்டது கொள்கை அடிப்படையில் அல்ல என்பதையும், ஈராக்கிய போருக்கு மக்கள் காட்டிய எதிர்ப்பை, தவிர்த்துக் கொண்டு இருக்கும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய தன்மையைத்தான் கொண்டிருந்தது என்பதையும் நிரூபிக்கிறது. இப்பொழுது டீனின் ஆலோசகர்களும், உதவியாளர்களும் ஊடகத்திற்குப் பலமுறையும் கூறிக்கொண்டு வருவதுபோல், 12 ஆண்டுகளுக்கு முன் வெர்மான்டின் கவர்னராக இருந்தபோது கையாண்ட பாதைக்கு மீண்டும் வந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் நிதிப் பொறுப்பு, மற்றும் நிதானப் போக்குடைய தாராளவாத கொள்கை சமூக பிரச்சினைகளில் வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் மறுபடியும் வெளிப்படுத்துகிறார். இந்தப் பிரச்சினைகளில்கூட, வலியுறுத்தல் "தாராளவாதம்" என்பதைவிட, "நிதானம்" என்பதில் கூடுதலாக உள்ளது. கடந்த வாரம் செனட்டர் ஹிலாரி கிளின்டன் ஆற்றிய உரையுடன் தனக்கு உடன்பாடு உள்ளது என்பதைத்தான் டீன் தெரிவித்துள்ளார்; அந்த அம்மையார் ஜனநாயகக் கட்சி கருக்கலைப்பு எதிர்ப்புத் தீவிரவாதிகளுக்கு முறையீடு செய்யும் வகையில் தேவையற்ற கருக்களைத் தடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு நல்குமாறும் அதையொட்டி கருக்கலைப்புக்கள் குறையும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த அணுகுமுறை "இலக்கைச் சரியாகத் தொடுகிறது" என்ற கருத்தை டீன் தெரிவித்து, "ஜனநாயகவாதிகள் ஒன்றும் கருக்கலைப்பிற்கு ஆதரவாளர்கள் அல்லர் என்று மேலும் கூறினார். எங்களுடைய நம்பிக்கை நாங்கள் கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் என்றில்லாமல், ஒரு பெண் தனக்கு என்ன தேவை என்பதைத் தானே முடிவெடுக்கும் உரிமை உடையவர் என்று நம்புவதாகும்." புஷ்ஷிற்கு வாக்களித்துள்ள தெற்கு, மேற்கு மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் அமைப்பை கட்டமைக்கும் வகையில் தன்னுடைய பெரும் கவனக்குவிப்பு இருக்கும் என்று டீன் கூறினார். புராடெஸ்டென்ட் அடிப்படைவாதிகள், கன்சர்வேடிவ் கத்தோலிக்க வாக்காளர்களுக்கும் அழைப்பு விடும் வகையில் இது இருக்கும் என்று அவர் கூறினார். "நாங்கள் உறுதியாக சமயத் துறையையும் அடைய உள்ளோம். ஜனநாயகக் கட்சியின் சமூகப் பணி கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகப்பணி போன்றதுதான்". இப்படிப்பட்ட கருத்துக்களெல்லாம் கூறப்பட்டபோதிலும்கூட, டீனுடைய வெற்றியை ஜனநாயகக் கட்சி இடது புறம் நகர்ந்துவிட்டது என்று கூறும் முயற்சிகள் செய்தி ஊடகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன: இன்னும் சொல்லப்போனால் கட்சி இயந்திரமே கிளர்ச்சியாளர்கள் அல்லது போர் எதிர்ப்பு சக்திகளால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது. இதுபோல் உண்மையில் இருந்து தூரவிலகியிருப்பது வேறு எதுவும் கிடையாது. சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் செனட்டர் கெர்ரி குறிப்பாக டீனுடைய பங்கு, வேட்பாளர் பந்தயதைத் தான் கைவிட்டபின்னரும்கூட, ஜனாபதித் தேர்தலில் சிறப்பாக இருந்தது பற்றிப் புகழ்ந்து கூறினார். மூன்றாம் கட்சி வேட்பாளர் ரால்ப் நாடெருடன் விவாதித்திருந்த டீன், போர் எதிர்ப்புக் கொள்கை காரணமாகவும், ஈராக் போருக்கு கெர்ரி-எட்வர்ட்ஸ் ஆதரவு கொடுப்பதால் சீற்றம் அடைந்து, ஜனநாயகக் கட்சியில் இருந்து எவரும் முறிந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய முயற்சிகள் அனைத்தையும் செலவிட்டார். இதேபோன்ற கருத்துக்கள்தான் DNC தலைவர் பதவிக்கு போட்டியிடும்போதும் டீனுடைய தன்மையாக உள்ளன. புஷ்ஷின் போர்க் கொள்கை, சமூகப் பிற்போக்கு இவற்றிற்கு மக்கள் எதிர்ப்புணர்வின் கிளர்ச்சிஎழுச்சி அதிகமாக வரும் என்ற எதிர்பார்ப்பில், டீன் ஜனநாயகக் கட்சிக்கு அரசியலில் ஒரு முக மாற்றத்தைக் கொடுத்து, அதேநேரத்தில் முதலாளித்துவ இரு கட்சி முறை வரம்பை மீறி புஷ் நிர்வாகத்திற்கு எதிராக எந்த அரசியல் இயக்கமும் வெளிவராது என்பதை வலியுறுத்துவதில் குறியாக உள்ளார். டிசம்பர் மாதம் "செய்தியாளர்களைச் சந்தியுங்கள்" என்ற பேட்டியில் டீன் ஜனநாயகக் கட்சியைப் புதுப்பிப்பதில் தன்னுடைய இலக்கு எவ்வாறு இருக்கும் என்று பட்டியலிட்டுக் கூறினார்: "உண்மையில், ஒரு மாதிரியாகத் தோன்றினாலும், நான் ஒருமித்த கருத்து வேண்டும் என்ற கருத்துடையவன்தான். அனைத்துப் பிரிவுகளையும் (கன்னைகளையும்) ஒன்றுபடுத்திக் கொண்டுவரவேண்டும் என்ற நம்பிக்கையைத்தான் நான் கொண்டிருக்கிறேன். அது சில காலம் பிடிக்கலாம்; ஏனென்றால், நான் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது கட்சியை வறுத்துத்தான் எடுத்தேன்; ஆனால் அதற்குத் தக்க காரணம் இருந்தது. ஆனால் நான் ஒரு ஜனநாயகக் கட்சியாளர். அமெரிக்காவைச் சீர்திருத்துவதற்கு மற்ற கட்சிகளைவிடக் கூடுதலான முறையில் ஜனநாயகக் கட்சி சிறந்தது என்று நான் நினைக்கிறேன்; மற்றவற்றில் துவக்கத்தில் இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் அல்லது துவக்கத்தில் இருந்து ஏதேனும் நலக் குழுக்களின் ஆதரவை நாடவேண்டும் என்று உள்ளது." வேறுவிதமாகக் கூறினால், டீனுடைய பங்கு ஈராக் போர் எதிர்ப்பாளர் என்னும் முறையில் அவர் பெற்றிருந்த நம்பகத்தன்மையைக் கட்சிக்கு கொடுத்து "துவக்கத்தில் இருந்து" துவங்கும் எந்த அமைப்பையும் தடைசெய்தல் வேண்டும், அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம், மற்றும் அதன் ஆக்கிரமிப்புப் போர்களை உண்மையாக எதிர்க்கும் சுயாதீனமான அரசியல் கட்சியை கட்டி எழுப்புதல் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். |