World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

North Korea pulls out of nuclear talks

அணுவாயுதப் பேச்சுக்களில் இருந்து வட கொரியா விலகிக் கொள்ளுகிறது

By Peter Symonds
14 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

"தற்காப்பிற்காகத்தான் அணுவாயுதங்களை தயாரித்திருப்பதாகவும்", உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறுவதை "காலவரையின்றி" நிறுத்திவைத்துக் கொள்ளுவதாகவும் கடந்த, வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மீண்டும் ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகளை தொடங்கும் முயற்சிகளை வட கொரியா திறம்பட முறியடித்துவிட்டது. சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, வடகொரியா ஆகியவை மாநாடு நடத்துவதை பற்றி புதிய தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் வாஷிங்டன் விரைவில் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்றும் பியோங்யாங்கிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது.

"அணுவாயுதத் தடுப்பு முயற்சிகள்" கட்டமைக்கப்படும் என்று முன்பெல்லாம் குறிப்புக் கொடுத்துவந்த போது, கடந்த வாரத்தின் அறிவிப்பு முதன் முதலாக தன்னிடம் அணுவாயுதம் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதற்கு இல்லை. தீர்ந்துவிட்ட எரிபொருள் அச்சுகளில் இருந்து புளூட்டோனியத்தை எடுப்பதற்கு வடகொரியாவிற்குப் போதுமான திறன் உள்ளது; 2002 அணுவாயுத பெருக்கத்தடை கூட்டத்தில் இருந்து அது விலகிய பின்னர், அவ்வாறு தயாரித்திருக்க வாய்ப்பு உண்டு. ஆறு அல்லது எட்டு அணு குண்டுகளை தயாரிப்பதற்கான புளோட்டோனியத்தை வடகொரியா கொண்டுள்ளது என்று அமெரிக்கா கூறினாலும், பியோங்யாங் இன்றுவரை ஒரு அணுவாயுதத்தைக்கூட சோதித்ததில்லை.

சர்வதேச செய்தி ஊடகம் வட கொரியாவின் "அச்சுறுத்தல்" பற்றி முற்றிலும் குவிமையப்படுத்தியிருக்கிறது என்றாலும், உண்மை என்னவென்றால் அமெரிக்க படையெடுப்பிற்கு, அதிலும் ஈராக் படையெடுப்பிற்கு பின்னர், பியோங்யாங் அமெரிக்காவின் இலக்காகக்கூடும் என்று அச்சப்படுவதில் நியாயம் உண்டு. 2002ம் ஆண்டு புஷ், ஈராக், ஈரான் இவற்றுடன் வட கொரியாவையும் சேர்த்து "தீமையின் அச்சு" என்று முத்திரையிட்டார். அப்பொழுதில் இருந்து வாஷிங்டன், பியோங்யாங் தன்னுடைய அணுவாயுதக் கூடங்களைக் கலைத்துவிட வேண்டும் என்று கூறியதுடன், இருதரப்புப் பேச்சு நடத்த மறுத்தது, பரஸ்பரம் படையெடுக்கவேண்டாம் என்று ஒப்பந்தம் கொள்ளலாம் என்று கூறிய பியோங்யாங்கின் அழைப்பையும் நிராகரித்துள்ளது. "தூதரக வகையில் தீர்வு காணலாம்" என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தாலும், "இராணுவ நடவடிக்கையை" நிராகரிக்கவில்லை.

கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வட கொரியாவைப் பொறுத்தவரையில் வாஷிங்டன் "ஆட்சி மாற்றத்தைத்தான்" இலக்காகக் கொண்டுள்ளது என்று பியோங்யாங் சுட்டிக்காட்டியுள்ளது. "புஷ் நிர்வாக இரண்டாம் பதவிக்காலத்தின் விருப்பம் DPRK [வட கொரியா] தனிமைப்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை தொடர்வதுதான்" என்று கூறி, மேலும் "ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைகளில் அதுவும் அதில் பங்கு கொள்ளும் ஒரு நாட்டை, DPRK ஐ, புஷ் நிர்வாகம் "கொடுங்கோன்மை ஆட்சியின் புற எல்லை" என்று கூறியுள்ள நிலையில், நாங்கள் கலந்து கொள்ளவேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை" என்றது.

இதற்கு அமெரிக்கா விடையிறுத்த வகை குறிப்பிடத்தகுந்த முறையில் தீவிரம் காட்டப்படாது இருந்து வருகிறது. ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஸ்காட் மக்லெலன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூறினார்: "இதற்கு முன்பும் வடகொரியாவில் இருந்து இத்தகைய சொற்ஜாலங்களைக் கேட்டிருக்கிறோம்." அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலீசா ரைஸ், பேச்சுவார்த்தைகளில் இருந்து பியோங்யாங் விலகிக்கொள்ளுவதாகக் கூறியிருக்கும் முடிவு "துரதிருஷ்டமானது" என்றும் "சர்வதேசச் சமூகத்தில் இருந்து வட கொரியா தனிமைப்படுத்தப்படுதலை அதிகப்படுத்தும்" என்றும் கூறியுள்ளார். அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் வடகொரியா தன்னிடம் அணுவாயுதங்கள் இருப்பது பற்றிய கூற்றில் அவநம்பிக்கை தெரிவித்திருப்பதுடன், "பல நேரங்களில் அவர்கள் வேறு பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளதும் தவறாகவே போய் இருக்கின்றன" என்றும் கூறினார்.

இத்தகைய குறைந்த ஒலியில் வெளிப்படும் கருத்துக்கள் ஈராக், ஈரானில் வாஷிங்டன் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரிடையானது ஆகும். ஈரான் அணுவாயுதத் திட்டத்தை கொண்டுள்ளது என்ற நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு, புஷ்ஷின் இரண்டாம் நிர்வாகம், பெருகிய முறையில் சண்டைக்கும் நிற்கும் போக்கைக் காட்டி வருகிறது. ஈராக்கைப் பொறுத்தவரையில், அமெரிக்கா அந்த நாட்டை, ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய நேரடிப் பொய்களின் அடிப்படையில், ஆக்கிரமித்துள்ளது. அப்படியிருந்தும், பியோங்யாங் வெளிப்படையாகத் தன்னிடம் அணுவாயுதம் இருக்கிறது என்று கூறினாலும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒருவேளை அது வெற்றுச் சொற்களைக் கூறுகிறது என்றுதான் கருதுகின்றனர்.

வட கொரியாவின் அறிக்கைக்கு வாஷிங்டன் விடையிறுக்கும் முறை, வாஷிங்டனுடைய இலக்குகளைப் பொறுத்தவரையில் பேரழிவு ஆயுதங்கள் எனப்படுபவையோ, "கொடுங்கோன்மை ஆட்சிக்கு" முற்றுப்புள்ளி வைத்தல் என்பதோ பொருட்டல்ல என்பதைத் தெரிவிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய இராணுவபலத்தை உலகின் முக்கிய பகுதிகளில் நிறுவிக்கொள்ளுவதற்குப் போலிக்காரணங்கள்தாம் இவை. ஈராக், ஈரான் போல் இல்லாமல், வட கொரியாவிடம் எண்ணை வளம் ஏதும் இல்லை. ஆனால் மிகக் குறைந்த கூலி உழைப்புத் திறனுக்கான வளம் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் உள்ள இடத்தில், சீனா, தென்கொரியா, ஜப்பான் இவற்றுக்கு அடுத்ததாக உள்ளது. வட கொரியாவின் குறைவூதியத் தொழிலாளரை பயன்படுத்திக் கொள்ளும் தென் கொரியா விடுத்த சூரிய ஒளித் திட்டம் வட கிழக்கு ஆசியா, ஐரோப்பாவிற்கிடையே போக்குவரத்து திறனைப் பயன்படுத்துதல் ஆகியவை அமெரிக்காவின் மிரட்டலினால் வலுவிழந்து விட்டது.

பல நாடுகள் பங்குபெறும் பேச்சுவார்த்தைகள் தேவை என்று வலியுறுத்துவதின் மூலம், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார, மூலோபாய நலன்கள் அந்தப் பகுதியில் மேலாதிக்கம் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கை என்ற உட்குறிப்படங்கிய அச்சுறுத்தல், வடகொரியாவின் அண்டை நாடுகளில் குறிப்பாக தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அமெரிக்கா கூறும் முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த அழுத்தத்தைக் கொடுக்கும். சீனா தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி வடகொரியாவை மிரட்டி பேச்சுவார்த்தைகளில் பங்கு பெற்று, அமெரிக்க விதிகளை ஏற்கச் செய்யவேண்டும் என்றும் புஷ் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க ஆத்திரமூட்டல்கள்

இப்பொழுதுள்ள நெருக்கடி 2002ல், வட கொரிய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் இரகசிய யுரேனிய அடர்த்தித் திட்டம் தங்களிடம் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்ற வாஷிங்டனுடைய கூற்றுடன் வெடித்து எழுந்தது. பியோங்யாங் பகிரங்கமாக இதை மறுத்தாலும் புஷ் நிர்வாகம் 1994ம் ஆண்டு ஏற்கப்பட்ட கட்டமைப்பை (Agreed Framework) இரத்துச் செய்துவிட்டது; அதன்படி வட கொரியா தான் மேற்கொண்டுள்ள அணுவாயுதச் சோதனைத் திட்டங்களை நிறுத்திக் கைவிட்டுவிடுவதாகவும் இதற்கு ஈடாக எரிபொருள், இரண்டு மென்னீர் உலைத் திட்டங்களைப் பெறுவதற்கும், உறவுகளைச் சீரமைத்துக் கொள்ளுவதாகவும் ஒப்புக் கொண்டிருந்தது.

1990கள் முழுவதிலும் வலதுசாரிக் குடியரசுக் கட்சியினர் Agreed Framework இல் கையெழுத்திட்டதற்காக கிளின்டன் நிர்வாகத்தைக் கண்டித்ததுடன், அணுவாயுதத் திட்டம் ஒன்றை கொண்டுள்ளது என்று வடகொரியாவையும் குற்றம் சாட்டினர். அதிகாரத்தில் 2000ம் ஆண்டு இருத்தப்பட்டவுடன், புஷ் நிர்வாகம் வடகொரியாவுடன் உறவுகளை உடனடியாக உறையவைத்தது. ஒரு நீண்ட காலக் கொள்கைப் பரிசீலனைக்குப் பிறகு, வெள்ளை மாளிகை, புதிய நிபந்தனைகள் பட்டியல் ஒன்றை பியோங்யாங் ஏற்கவேண்டும் என்று அறிவித்ததுடன் இன்னும் கடுமையான அணுகுமுறைகள் வரும் என்றும் தெரிவித்தது. 2002ம் ஆண்டுக் குற்றச்சாட்டுக்கள் எரிபொருள் வழங்குதலை நிறுத்தவதற்கு போலிக் காரணமாயின; மென்னீர் உலைத்திட்டங்கள் கட்டப்படுதலும் நிறுத்தப்பட்டன; 2003ல் முடிவடையும் எனக் கூறப்பட்டிருந்த அந்தப் பணி அப்பொழுதுதான் தொடக்கப்பட்டிருந்தது.

இதற்கு விடையிறுக்கும் வகையில் வடகொரியா, அணுவாயுதப் பெருக்க ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதுடன் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) ஆய்வாளர்களை நாட்டில் இருந்து வெளியேற்றி, தன்னுடைய அணுவாயுத திட்டங்களை பழையபடி தொடக்கியது. முறையாக இருநாடுகளும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளுவதில்லை என்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் உடன்படிக்கையாகக் கையெழுத்திட தான் தயார் என்று பலமுறையும் பியோங்யாங் அறிவித்தது. இந்த அறிவிப்புக்களை வெள்ளை மாளிகை உதறித்தள்ளியது; நேரடியாகப் பேச்சு வார்த்தைகளுக்கும் தயாராக இல்லை என மறுத்ததுடன் "தீய நடவடிக்கைக்கு" தான் வெகுமதி அளிக்காது என்றும் அறிவித்தது.

சீனாவில் இருந்து அழுத்தம் வந்தவுடன், வடகொரியா, ஆறு நாடுகள் பங்கு பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புதல் கொடுத்தது: இது ஆகஸ்ட் 2003ல் தொடங்கியது. 2004 ஜூன் மாதம் மூன்றாம் சுற்றுப் பேச்சு வார்த்தைகளின்போது, அமெரிக்க அதிகாரிகள் ஒரு வரைவு ஒப்பந்தத்தைக் காட்டினர், இதில் வடகொரியாமீது கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன; அதற்கு ஈடாக எரிபொருள் எண்ணை அளித்தல்களும், வருங்காலப் பாதுகாப்பு பற்றிய தெளிவற்ற உத்தரவாதங்களும் கொடுக்கப்பட்டன. ஈராக்கிய நெருக்கடியில் ஆழ்ந்த அமெரிக்கா, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு இந்தப் பிரச்சினை பெரிதுபடுத்தப்படவேண்டாம் என்ற கருத்தை ஓரளவு கொண்டிருந்தது. ஆயினும் கடந்த செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த, நான்காம் பேச்சுவார்த்தைச் சுற்றுக்களில், வட கொரியா பங்கு பெற மறுத்துவிட்டது.

அமெரிக்கத் தேர்தல்கள் முடிந்த பின்னர், புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தைகள் தொடரப்படுவதற்கு அழுத்தம் கொடுத்து, வடகொரியா அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச முடிவை ஏற்க வலியுறுத்தியது. பியோங்யாங்கின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அதன் அணுவாயுத நடவடிக்கைகள் பற்றி அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் புதிய குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. அவை அனைத்தும் ஈராக்கிய படையெடுப்பை நியாயப்படுத்த கூறப்பட்டிருந்த பொய்களின் தரக் குறியீடுகளில் கூறப்பட்டிருந்தன. ஒரு, யுரேனிய அடர்த்திப் பெருக்கத்திற்கு தேவையான, பெரும் யுரேனிய ஹெக்சாப்ளோரைட் (UF6) தகரப்பெட்டி லிபியாவில் காணப்பட்டது, அது வடகொரியாவில் இருந்து வந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

New York Times ல் பெப்ரவரி 2ம் தேதி வந்த கட்டுரை ஒன்றில், ஆற்றல் துறையிலுள்ள அமெரிக்க வல்லுளனர்கள் "வட கொரியா லிபியாவிற்கு அனுப்பப்படவேண்டிய யுரேனியப் பதத்தை விற்றது உறுதி" என அழுத்தந்திருத்தமாக நம்புவதாகக் கூறினர். இப்படிச் சான்று என அழைக்கப்பட்டதற்கு, பெயர்கூறும் ஆதாரம் இல்லாத நிலையில், சுற்றிவளைத்துக் கூறப்பட்ட தன்மையைத்தான் அது கொண்டிருந்தது. புளூட்டோனிய துகள்கள் இருந்த அடையாளங்களும், மாதிரியில் இருந்த யுரேனிய ஐசோடோப்புகளின் சேர்க்கையும் கிட்டத்தட்ட UF6 வட கொரியாவில் இருந்து வந்தது என்று எடுத்துக்காட்டும் "கைரேகை" இருந்ததாக விஞ்ஞானிகள் கூறினர்.

இது உண்மையாகவே இருந்தாலும் கூட, இக்கூற்று வடகொரியா, ஒப்புமையில் ஒளவுமறைவற்ற, UF 6 ஐ உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டது என்றுதான் சுட்டிக்காட்டும். யுரேனிய அடர்த்திக்காக எரிவாயுவைக் கொண்டு வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களை சுழற்சிமுறையால் பிரித்தல் முறையைக் கட்டமைத்தல் என்பது மிகச் சிக்கல் வாய்ந்த நுட்பமுடைய பணியாகும்; அதிலும் அணுவாயுத தயாரிப்பிற்காக தேவையான தரத்தையுடைய யுரேனிய அடர்த்தியை தயாரிப்பு மிகக் கடினமாகும். சர்வதேச ஆய்விற்காக தன்னுடைய அணுவாயுதத்திட்டங்களை காட்ட முன்வந்தபோது லிபியா இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை. அமெரிக்கா வடகொரியா அவ்வாறு செய்ய இயலும் என்பதற்கான ஆதாரங்களையும் கொடுக்கவில்லை.

உண்மையில், இப்படிப்பட்ட பரபரப்பான குற்றச்சாட்டே, வாஷிங்டன் போஸ்ட் தன்னுடைய பெப்ரவரி 3ம்தேதிப் பதிப்பில் தெளிவாக்கியுள்ளதுபோல் மிகத் தவறானது ஆகும். IAEA விஞ்ஞானிகள் இதேபோன்ற சோதனைகளை லிபிய UF6 ல் நடத்தியுள்ளனர் என்றும் சான்றுகள் உறுதியாக இல்லை என்று முடிவெடுத்ததாகவும் அறிக்கை கூறுகிறது. அவர்கள் புளூட்டோனியத் துகள்களையும் காணவில்லை; வட கொரியா அல்லது பாக்கிஸ்தான் (அதனை வழங்கக் கூடிய மற்றொரு நாடு) ஆகியவற்றில் இருந்து மாதிரிகளும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு முழுத்தன்மையில் பார்த்தால்தான் ஐசோடெப்பிலான "கைரேகை" போன்ற ஆதாரங்களை ஒப்பிட முடியும். அப்படியே யுரேனியம் வடகொரியாவில் இருந்து வந்திருந்தாலும், UF6 அங்கு உற்பத்தி செய்யப்பட்டதா என்பதையும் நிர்ணயிக்க முடியாது.

அறிவியல் மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக் கூடத்தின் (Institute for Science and International Security) தலைவரான டேவிட் ஆல்பிரைட், பாகிஸ்தானில் இருந்து UF 6 வந்திருக்கக் கூடும் என்ற கருத்து ஒதுக்கப்படுவதற்கு இல்லை என வாஷிங்டன் போஸ்ட்டிற்குத் தெரிவித்தார்: "இது ஏன் இப்பொழுது கூறப்படுகிறது என்பது எனக்கு பெரும் வியப்பை அளிக்கிறது; இது கூறப்பட்டுள்ள நேரம் வடகொரியாவிடம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுக்க இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது."

நியூ யோர்க் டைம்ஸ் வெளிவந்த நேரத்திலேயே, புஷ் நிர்வாகம் இரண்டு மூத்த தேசியப் பாதுகாப்பு முகவாண்மையின் அதிகாரிகளான மைக்கேல் கிரீன் மற்றும் வில்லியம் டோபியை ஆசியாவிற்கு அனுப்பி இந்த "சான்றைப் பற்றி" ஜப்பானிய, தென்கொரிய, சீன அரசாங்கங்களுடன் விவாதிக்க வைத்தது. பியோங்யாங்குடன் ஒரு முறையான பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள பெய்ஜிங், குறிப்பாக, அமெரிக்காவால் வடகொரியாமீது கடுமையான நிலைப்பாட்டைக் கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் முக்கிய வணிகப் பங்காளியாகவும் எண்ணெய் அளிப்புநாடாகவும் சீனா உள்ளது.

வாஷிங்டனுடைய சூழ்ச்சி நடவடிக்கைகள், இன்னும் ஒரு முறை ஆறு நாடுகளின் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளுவதில் பயனில்லை என்பதை, வடகொரியாவிற்கு உறுதியாகப் புலப்படுத்தியிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. தன்னுடைய பதவி ஏற்பு உரையில், வருங்கால அமெரிக்க தூண்டுதல்கள், மற்றும் ஆக்கிரமிப்புகள் "தீமையின் அச்சு" மற்றும் உலகம் முழுவதில் இருந்தும் "கொடுங்கோன்மையின் புறநிலையங்கள்" இவற்றில் இருந்து வரக்கூடியவை பற்றியும் பேசியுள்ளார். "ஆட்சி மாற்றம்" என்றதுதான் வடகொரியாவில் புஷ் நிர்வாகத்தின் இரண்டாம் பதவிக்காலத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்பதை பியோங்யாங் தெளிவாக உணர்ந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வேண்டுமென்றே நெருக்கடிகளை தூண்டும் வகையில் நடந்து கொள்வதால், வாஷிங்டன் முரட்டுத்னமான முறையில் பேரழிவு விளைவுகளை தரக்கூடிய தொடர் நிகழ்ச்சிப்போக்குகளை தொடக்கியுள்ளது.

Top of page