:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: behind the ultra-right provocation in Saxony's parliament
ஜேர்மனி:
சக்சோனி நாடாளுமன்றத்தில் அதிதீவிர வலதுசாரி ஆத்திரமூட்டல் பின்னணியில்
By Ulrich Rippert
31 January 2005
Back to screen version
சென்ற வெள்ளிக்கிழமையன்று சக்சோனி (Saxony)
மாநில நாடாளுமன்றத்தில் போரினாலும் நாஜி சர்வாதிகாரத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி
செலுத்திய நேரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து நவீன- பாசிச ஜேர்மனியின் தேசியக் கட்சி (NDP)
உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பரவலாக ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிநடப்பிற்கு பின்னர் நாடாளுமன்ற
கூட்டத்தில் கலந்து கொண்ட NDP
உறுப்பினர்கள் யூதர்களை நாஜி ஆட்சி அழித்ததை நேசநாடுகள் படை ஜேர்மன் நகரங்களின் மீது குண்டு வீசி
தாக்குதல்களை நடத்தியதோடு ஒப்பிட்டு பேசினர். அதை "ஒரு குண்டு வீச்சு படுகொலை" என்று வர்ணித்தனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து ஊடகங்களில் வெள்ளம்போல் வெளியிடப்பட்ட விமர்சனங்கள்
அந்த தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக தீவிர நடவடிக்கைள் எடுக்கப்படவேண்டும் என்றும் அனைத்து ஜனநாயகவாதிகளும்
ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டன. சில அரசியல்வாதிகள்
NPD க்கு தடைவிதிக்க
வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். அதே நேரம் மற்றவர்கள் அத்தகைய ஒரு முயற்சிக்கெதிராக எச்சரிக்கை விடுத்தனர்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் NPD
-க்கு தடை விதிப்பதற்கான ஒரு முயற்சி, NPD
கட்சியின் முன்னணி அமைப்பில் இடம் பெற்றிருக்கும் ஏழு பேர் ஜேர்மன் இரகசிய போலீஸாருக்காக பணியாற்றியவர்கள்
என்று தெரிந்ததும் தோல்வியடைந்தது. அந்தக் கட்சி மீது இனவெறியை தூண்டுவதாக கூறிய குற்றச்சாட்டுப் பட்டியலில் மேற்கோள்
காட்டப்பட்டிருந்த யூதர்களுக்கெதிரான பல வாசகங்களை எழுதியது உண்மையிலேயே ஜேர்மன் இரகசிய போலீஸ் அதிகாரிகள்தான்
என்று கூட அந்த கட்சியால் நிரூபிக்க முடிந்தது.
சக்சோனியில் நடைபெற்ற சம்பவம் பற்றி குறிப்பிட்ட சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD
- ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி) வெளிநாடுகளில் ஜேர்மனியின் கீர்த்திக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தார்,
ஒரு ஏற்றுமதியை நோக்காக கொண்ட ஒரு நாடு இதை சகித்துக்கொள்ள முடியாது என்று கூறினார். அதே நேரத்தில் வெளிவிவகாரங்கள்
அமைச்சர் ஜோஸ்கா பிஸ்ஸர் (பசுமைக் கட்சி) "ஜேர்மனிக்கு ஒரு அவமானம்" என்று பேசினார். ஜேர்மனியிலுள்ள மத்திய
யூதர்கள் கவுன்சில் தலைவரான Paul Spiegel
மீண்டும் "கண்ணியமான குடிமக்களது ஒரு கிளர்ச்சி" ஏற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கம்பெனி ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களை சேர்ந்த எவரும் தற்போது புதிய
நாஜிக்கள் முட்டாள்தனமாகவும் அப்பட்டமாகவும் ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டிருப்பதன் பின்னணியிலுள்ள பிரச்சனையை
ஆராய்வது பற்றி கவலைப்படவில்லை. வலதுசாரி தீவிரவாதக்கட்சியின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதற்கு யார்
பொறுப்பேற்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்ப எவரும் முன்வரவில்லை. மாறாக,
Dresden-ல்
நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விமர்சகர்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுவது ஒட்டுமொத்தமாக அரசியல்
அமைப்புமுறை முழுவதன் அழுகல்தன்மையைத்தான். அவர்கள் அந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன், ஒரு திரையை
-அதிபரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்- வெளிநாடுகளில் ஜேர்மனியின் கீர்த்திக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்தலை
எழுப்ப விழைந்தனர்.
ஆனால் இதில் உண்மை என்னவென்றால், செப்டம்பரில் நடைபெற்ற மாநில தேர்தல்களுக்கு
பின்னர் NPD
கட்சியைச் சார்ந்த 12 நவீன-பாசிஸ்டுகள் சக்சோனி மாநில நாடாளுமன்றத்தில் இடம்பெற்று நாளுக்கு நாள்
மிகத்தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் தீவிரமடைவது பல
சம்பவங்களால் ஊக்குவிக்கப்படுகிறது.
ஏனைய எல்லா கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் சமூக ஜனநாயகக் கட்சி
- பசுமைக் கட்சி மத்திய அரசாங்கம் மற்றும் பிராந்திய அளவிலான
CDU -
SPD கூட்டணிஅரசாங்கம்,
மேற்கொள்ளுகின்ற சமூக விரோத கொள்கைகளால் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்ற வகையில் வலதுசாரி கண்டன
வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஒருபக்கம் அவர்கள் நம்புகின்றனர். மற்றொரு பக்கம் இதர கட்சிகளிலுள்ள
வலதுசாரி வட்டாரங்களின் நேரடி ஆதரவை அவர்கள் பெறுகின்றனர். கடந்த சில மாதங்களில் இதர கட்சிகளைச்
சார்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சக்சோனி மாநில நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்புகளின்போது
பலமுறை NPD-ஐ
ஆதரித்து வாக்களித்திருக்கின்றனர்.
சமூக வாய்வீச்சு
தங்களது சமூக வாய்வீச்சிற்காக, தீவிர வலதுசாரிகள்
Hartz
IV சட்டங்கள் ஜனவரி
தொடக்கத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருவதை திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
Hartz IV திடீரென்று
பல ஜேர்மன் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மோசமடைய செய்துவிட்டது. அத்துடன் வேலை வாய்ப்பு நிலவரமோ
அல்லது சமூக நிலைமைகளோ எந்த வகையிலும் உயரும் என்ற நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுவிட்டன. மிக அண்மைக் காலம்
வரை--- அரசியல்வாதிகள், குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியைச் சார்ந்தவர்கள்---- நடப்பு சமூக கஷ்டங்கள்
தற்காலிகமானவை என்று வலியுறுத்தினர், கிழக்கு பகுதியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சிறிது காலதாமதமாகும், அதற்கு
பொறுமை காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இந்த பிரசாரத்தின் விளைவாக பல
தொழிலாளர்கள் பல்வேறு வகைப்பட்ட மறுபயிற்சி, மறுகல்வி நடவடிக்கைகளை வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில்
மேற்கொண்டனர்.
Hartz IV "கிழக்குப்பகுதியில்
மேல்நோக்கிய திருப்பும்" எப்போதுமே ஒரு கடுமையான வாய்ப்பாக கருதப்படவில்லை என்பதை தெளிவாக்குகிறது.
உண்மையிலேயே மேற்குப் பகுதியில் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. கிழக்குப் பகுதியில் நிலவுகின்ற வேலையில்லாத்
திண்டாட்ட உயர்வு மற்றும் குறைந்த ஊதியங்கள் மேற்குப்பகுதியில் சமூக உள்கட்டமைப்பை சீர்குலைக்கவும் ஊதியங்களை
வெட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கிலுள்ள மக்கள் பலர் தாங்கள் முற்றிலும் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும்
மோசடி செய்யப்பட்டு விட்டதாகவும் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஸ்தாபனப்படுத்தப்பட்ட கட்சியும் சமூக
வெட்டுக்களை எதிர்த்து நிற்காத சூழ்நிலையில், சமூக நலன்புரி அரசை ஒழித்துக்கட்டும் அரசியலுக்கு மாற்று எதுவுமில்லை
என்று கூட்டாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த நிலையில், வலதுசாரி வாய்வீச்சாளர்கள் ''சாமானிய மனிதனை
காப்பாற்றுபவர்களாக'' காட்டமுடிந்ததுடன், மக்களிடையே பெரும்பாலான பிரிவுகளைச் சார்ந்தவர்கள் மிகுந்த
நெருக்கடியிலும் ஆத்திரத்திலும் இருப்பதன் அடிப்படையில் அரசியல் ஆதரவை வென்றெடுத்துக்கொண்டனர்.
சக்சோனி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வலுவான கட்சியாக இடம் பெற்றுள்ள ஜனநாயக
சோசலிச கட்சி (PDS)
ஒரே ஒருவகையில் பாரம்பரிய கட்சியின் கூட்டணிகளுக்கு விதிவிலக்காகும். இதர கட்சிகள் தழுவிக் கொண்டுள்ள மோசடி
கோரசில் அக்கட்சி தனது பங்களிப்பாக கூடுதல் பொய்யை தருகிறது. எங்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ,
அங்கெல்லாம் Hartz
IV -க்கு
எதிராக கண்டனங்களை எழுப்புகிறது, ஆனால் தான் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொள்கின்ற மாநிலங்களில் அது
மிகுந்த விசுவாசத்தோடு வெட்டுக்களை ஆதரிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.
இதுதவிர சாதாரண குடிமக்கள் மீது அரசியல் ஸ்தாபனம் காட்டுகின்ற புறக்கணிப்பை
தீவிரவலதுசாரிகள் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. சென்ற ஆண்டு
Hartz சட்டங்களுக்கு
எதிராக நடைபெற்ற எண்ணிறந்த கண்டனப் பேரணிகளில் மில்லியன் கணக்கானோர் பங்கெடுத்துக்கொண்டனர், ஆனால்
இவற்றிற்கு அதிபர் ஷ்ரோடர் SPD
தலைவர் Müntefering
மற்றும் அனைத்து அரசியல் வட்டாரங்களின் தலைவர்களும் தந்த ஒரே பதில் "தெருக்களிலிருந்து கிளம்பிவரும்
அழுத்தங்களுக்கு நாங்கள் பதிலளிக்கமாட்டோம்" - இது ஜனநாயகத்தின் அபத்தமான திரித்தல் ஆகும்.
சென்ற மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டதை
தொடர்ந்து நிலவரம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு ஜேர்மன் மாநிலங்களின் எல்லையிலுள்ள சில
பகுதிகளில் ஒரு சில கிலோ மீட்டருக்கு அப்பால் வட்டாரத்தில் நிலவுகின்ற தொழிலாளர் ஊதிய விகிதங்களை விட மிக
சொற்ப அளவே ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகள் எதனிடமும் தீர்வு
இல்லாத காரணத்தினால், NPD
சமூக வீழ்ச்சி பற்றிய அச்சங்களை இனவெறி மற்றும் தேசியவாத வழிகளில் திருப்பிவிட முடிகிறது.
SPD - பசுமைக் கட்சி கூட்டணியும்
நேரடியாக தீவிர வலதுசாரிகள் வலையில் விழுந்து விடுகிறது. ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு புதிய குடியேற்றச்சட்டம்
செயல்படத் தொடங்கியது, அது அரசியல் தஞ்சம் புகும் அடிப்படை உரிமையை ஏறத்தாழ முற்றிலுமாக
ஒழித்துக்கட்டுகிறது. பல தசாப்தங்களாக ஜேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வெளிநாட்டவர்களை கூட, "ஒரு
ஆபத்து முன்எச்சரிக்கையை சுட்டிக்காட்டுகின்றன" என்ற அடிப்படையில் வெளியேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அந்தச்சட்டம்
அனுமதிக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காமலே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும், "வெளிநாட்டவர்
வெளியேற வேண்டும்!"
என்பது புதிய சட்டத்தின் மைய அரசியல் முழக்கமாக உள்ளது. இந்த வகையில் மத்திய அரசாங்கம்
NPD-க்கு ஒரு மைய
நிலைப்பாட்டை தந்துவிட்டது எனவே அதன் செல்வாக்கை வலுப்படுத்திவிட்டது.
Biedenkopf CDU- வின் பழுத்த
பாரம்பரியம்
சக்சோனி மாநில பாராளுமன்றத்தில் முக்கியமான கொள்கை முடிவுகள்
எடுக்கப்பட்டபோது, NPD-க்கு
கூடுதலாக இரண்டு வாக்குகள் CDU
விலிருந்து கிடைத்தவை என்பதை கோடிட்டு காட்டுகின்ற பல சமிக்கைகள் உள்ளன. ஜேர்மனி மறு ஐக்கியப்படுத்தப்பட்ட
பின்னர் முக்கிய பிரமுகரான Kurt Biedenkopf
இனால் சக்சோனி CDU
சக்திவாய்ந்த தாக்கத்திற்கு உள்ளானது. Biedenkopf
1990 முதல் 2002 வரை அந்த மாநில பிரதமராக இருந்தார்,
அவரது மாநில அரசாங்கம் எப்போதுமே அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு ஒரு வலுவான கோட்டையாகவே
விளங்கி வந்தது. நீதித்துறை அமைச்சகத்திற்கு பல ஆண்டுகள்
Steffen Heitmann அமைச்சராக இருந்தார், அவர் 1993-ல்
அவரது வெளிநாட்டு இனவெறி விமர்சனங்கள் மூலம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். இந்த
இழிபுகழுக்கு பின்னரும் அந்த நேரத்தில் பழமைவாத சான்சலர் ஹெல்மூட் கோல்
(CdU) மிகவும்
வியப்பளிக்கிற வகையில் அந்த கிழக்கு ஜேர்மன் கிறிஸ்தவ மடாலய வக்கீலை கூட்டாட்சி ஜனாதிபதி பதவிக்கு ஒரு
வேட்பாளராக முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து
Stuttgart மற்றும் இதர மேற்கு ஜேர்மன் நகரங்களுக்கு விஜயம்
செய்த Heitmann
அப்போது மிக அதிக அளவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்ற விகிதாச்சார புள்ளிவிவரங்கள்
அடிப்படையில், "நிச்சயமாக அச்சுறுத்துகின்ற வகையில் அன்னியத்தன்மையால் நான் வியப்படைந்தேன்" என்று விளக்கி
இருந்தார். "அளவிற்கதிகமாக வெளிநாட்டவர்களுக்கெதிராக ஜேர்மனியை பாதுகாத்தாக வேண்டும்" என்ற முடிவிற்கு
தான் வந்திருப்பதாக அறிவித்தார். இந்த கருத்துகளை வெளியிட்ட பின்னர், ஜேர்மனியின் மிக உயர்ந்த பொது நிர்வாகப்
பதவிக்கு தமது வேட்பு மனுவை விலக்கிக்கொண்டார், ஆனால் மேலும் ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ந்து சக்சோனியின்
நீதித்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அவரது வாரிசான
Manfred Kolbe
வலதுசாரி பவேரிய CSU
விலிருந்து வந்திருக்கிறார். அவர் 1959-ல் மேற்கு பகுதிக்கு குடியேறிவிட்ட ஒரு சக்சோனி குடும்பத்திலிருந்து
வந்திருப்பவராவார்.
இந்த வகையில் Kurt
Biedenkopf மற்றும் அவரது அரசியல் வரலாற்றை ஆராய்வது ஒரு
பயனுள்ள தகவலாகும். அவர் ஒரு தேசிய சோசலிஸ்ட் இராணுவ தொழிற்துறை தலைவரின் புதல்வர்--- அவரது தந்தை
வில்லியம் நாசி ஆட்சிக் காலத்தில் Schkopau
இருந்த புனா தொழிற்சாலையில் ஒரு தொழில்நுட்ப இயக்குனராக பணியாற்றினார். அந்த நேரத்தில் அந்த
தொழிற்சாலை I.G. Farben
கம்பெனிக்கு சொந்தமானதாகும். 1930-ல் பிறந்த
Biedenkopf ஜூனியர், 1967-ல் ஒரு பேரறிஞர் பட்டம்
பெற்றார் மற்றும் சட்டத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். அதற்கு பின்னர் அவர் கூட்டாட்சி குடியரசிலேயே
Ruhr Bochum
பல்கலைக்கழகத்தில் மிக இளம் வயது முதல்வராக (rector)
பதவியேற்றார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் CDU
-வின் மத்திய நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
அவரை அரசியலில் வளர்த்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் கலாநிதி
Fritz Ries. தொழிலதிபர்
ரைஸ்---1934 முதல் நாஜி கட்சியில் ஒரு உறுப்பினர்-- மற்றும் "ஆயுதப் படைகள் அளிப்பாளர்" என்ற முறையில்
பெரும் செல்வத்தைக் குவித்தவர், இரண்டாம் உலக போரில் இலாபம் சம்பாதித்த சமுதாய பிரிவை எடுத்துக் காட்டுபவர்.
அதே நேரத்தில் அவரது சிறப்புத் தன்மை என்னவென்றால் யூதர்களின் தொழிற்சாலைகளை நாஜி கொள்கைக்கு ஏற்ப கைப்பற்றிக்கொள்வது
மற்றும் அதற்கு பின்னர் இலாபத்தை உயர்ந்த பட்சமாக பெருக்கி கொள்வதற்கு யூத கொத்தடிமை தொழிலாளர்களையே
பயன்படுத்திக் கொள்வது.
நூலாசிரியர் Bernt
Engelmann அவரை பற்றி எழுதுகிறார்: "எடுத்துக்காட்டாக, இந்தவழியில்,
யூதர்களிடமிருந்து 'அபகரிக்கப்பட்ட' Trzebinia-விலுள்ள
(மேற்கு காலிசியா) அப்பர் சைலேசியன் ரப்பர் தொழிற்சாலையில்
மட்டுமே, அவர் 1942 ஜூன் 30 தேதியிட்ட ஒரு 'சிறை அறிக்கை'யின்படி, 2160 பேர் பெண்களும் குழந்தைகளுமாக
இருந்த, மொத்தம் 2,653 யூத கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை அவர் பயன்படுத்திக்கொண்டார். பிரதானமாக
அவர்களது உதவியோடு அதாவது கொடூரமான சுரண்டல் மூலம் அவரது ரப்பர் தொழிற்சாலையில் உற்பத்தி 12 மடங்கு
உயர்ந்தது." (Bernt Engelmann,
Schwarzbuch: Strauß, Kohl & Co., Cologne, 1976).
போலந்து Lodz
-TM Ries "ஆரியமயமாக்கப்பட்ட"
15 உருட்டாலைகள் கொண்ட பெரிய தொழிலை எடுத்துக்கொண்டார். இரண்டாம் உலகப்போர் முடிவதற்கு சற்று முன்னர்
செஞ்சேனை முன்னேறிவந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் தனது பெரும்பாலான சொத்துக்களுடன் மேற்கிற்கு தப்பி
ஓடிவிட்டார். அப்படியிருந்தாலும் ஜேர்மனி சரணடைந்த பின்னர், அவர் தன்னைத்தானே "ஒரு அகதி" என்று பிரகடனப்படுத்திக்
கொண்டார். Adenauer
அரசாங்கத்தின் கீழ், அப்போதும் செஞ்சேனையின் வசம் இருந்த தனது தொழிற்சாலைகளுக்கு இழப்பீடு கோரினார்---அந்த
கோரிக்கையில் அவர் வெற்றி பெற்றார். அந்த பணத்தைக்கொண்டு அவர்
Pfalz பிராந்தியத்தில்
Pegulan
தொழிற்சாலைகளை அமைத்தார்.
Kurt Biedenkopf உடன் இரண்டாம்
உலகப்போருக்கு பிந்திய தசாப்தங்களில் Ries
திட்டமிட்டு ஆதரித்த அரசியல்வாதிகளில் பிற்கால ஜேர்மன் கூட்டாட்சி அதிபர் ஹெல்மூட் கோல் (CDU)
மற்றும் பவேரிய பிரதமர் மற்றும் CSU
தலைவருமான Franz Franz-Josef Strauß
ஆகியோர் அடங்குவர். 1979-ல் Biedenkopf
- Ries-ன்
மகள் Ingrid-ஐ
திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஜேர்மனி ஒன்றுபட்ட பின்னர் சக்சோனி மாநில அரசாங்கத்தை
Der Spiegel
2001-ல் எழுதியிருந்ததைப்போல், "ஒரு குடும்ப வர்த்தகம்" என்று
சொல்லத்தக்க அளவிற்கு நடத்தி வந்தனர்.
வலதுசாரி தீவிரவாத வட்டாரங்களோடும் பாசிஸ்டுகளோடும்
CDUவின் தொடர்புகளில்
புதுமையோ அல்லது வியப்போ எதுவுமில்லை, "எல்லா ஜனநாயகவாதிகளும், ஐக்கியப்படவேண்டும்" என்று இப்போது
விடுத்துள்ள அழைப்புகள் தீவிர வலதுசாரிகள் வலையில் விழுகின்ற அளவிற்கு செயல்படுத்தப்படும் கொள்கைகளை
நீட்டிப்பதற்கே பயன்படும். |