World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Secretary of State Rice's tour

US-European rift deepens over Iran

வெளியுறவு அமைச்சர் ரைசின் பயணம்

ஈரானைப் பற்றிய அமெரிக்க - ஐரோப்பிய பூசல்கள் ஆழமடைகின்றது

By Ulrich Rippert
7 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் என பதவி உறுதிசெய்யப்பட்ட சில நாட்களில், கொண்டோலீசா ரைஸ் ஐரோப்பா முழுவதும் சூறாவளிப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். ஒரு வாரத்திற்குள் அவர் இலண்டன், பேர்லின், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், வார்சோ, ரோம் மற்றும் அங்காராவிற்கு பயணித்திருந்தார். அங்காராவில் அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்ஜீ லாவ்ரோவையும் சந்தித்தார். டெல் அவிவிலும், பாலஸ்தீனிய பகுதிகளிலும் சிறிது நேரம் நிற்பதற்கும் அவர் நேரத்தை ஒதுக்கியிருந்தார்.

பல வர்ணனையாளர்களும் இந்தப் பயணத்தை "வசீகரத் தாக்குதல்" (Charm offensive) என்று வர்ணித்திருந்தபோதிலும், அட்லான்டிக் கடந்த உறவுகளில் நெருக்கடிகளை குறைக்க பயன்படும் என்று கருதியிருந்தாலும், இப்பயணத்தின் விளைவு முற்றிலும் எதிராகத்தான் போயிருக்கிறது. தூதரக நுட்பக்கூறுகளின் பரிவர்த்தனைக்கு பின்னணியில், மாறுபட்ட நலன்கள், கருத்துக்கள் இவற்றிற்கிடையேயான பூசல்களும் நன்கு கையாளப்பட்டு, இதில் ஈரானிய பிரச்சினை மத்திய இடத்தை கொண்டுள்ளது.

மூத்த அமெரிக்க செய்தியாளர் செய்மர் ஹெர்ஷ் ஈரான் மீதான அமெரிக்க போர் தயாரிப்புக்களை அம்பலப்படுத்திய பின்னர், பல்வேறு அமெரிக்க பிரதிநிதிகளால் போர்வெறி கருத்துக்கள் கூறப்பட்ட பின்னர், ஐரோப்பிய அரசியல்வாதிகளிடையே வாஷிங்டன் தெஹ்ரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதலுக்கான தீவிர தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது பற்றி சிறிதே சந்தேகமிருந்தது. இது பேர்லின், பாரிஸ் என்று மட்டுமல்லாமல் இலண்டனாலும் உறுதியாக நிராகரிக்கப்பட்டுள்ள இலக்கு ஆகும்.

ஜேர்மன் சஞ்சிகையான Der Spiegel கடந்த வாரம் முதல் பக்கத்தில் "ஈரானுக்கு எதிராக அமெரிக்கா; அடுத்த போரா?" என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டது. ஈரானுக்கு எதிராக தன்னுடைய நாட்டு மக்களுக்காக விடுத்த ஆரம்ப உரையில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் விடுத்த அறிக்கைகளும், உரை பற்றிய தலையங்கங்களும் ஜேர்மன், பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தமை, ஈராக்கில் நடந்து கொண்டதை போலவே ஈரானிலும் அமெரிக்கா நடந்துகொள்ள கூடும் என்ற பரந்த அச்சத்தைத்தான் சுட்டிக்காட்டியது.

அவருடைய ஐரோப்பிய பயணத்தின் முதல் நிறுத்தமான இலண்டனில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மீண்டும் ஈரானிய அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். ஜனநாயக முறைமையற்ற அரசு என்று குற்றம் சாட்டியதுடன், அது சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்றும் மனித உரிமைகளை மதிப்பதில்லை என்றும் அவர் குறைகூறினார். புஷ் நிர்வாகத்தின் இரண்டாம் நான்காண்டு பதவிக்காலத்திற்குள் ஈரான் மீது போர் தொடுக்கக் கூடும் என்று அவர் கருதுகிறாரா எனக் கேட்கப்பட்டதற்கு, ரைஸ் அத்தகைய தாக்குதல் "தற்சமயம் செயற்பட்டியலில் இல்லை" என்று மட்டுமே தெரிவித்தார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கை பற்றிய கருத்து வேறுபாடுகள், ஈராக்கிய போர் தொடர்பாக காணப்பட்ட வேறுபாடுகளைவிட ஆழ்ந்த தன்மையுடையனவாகும். இது ஏற்கனவே அட்லான்டிக் கடந்த ஆழ்ந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதுடன், ஐரோப்பாவில் ஒரு பிளவையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனி, பிரான்ஸ் என்பவை மட்டும் அல்லாமல் பிரிட்டனும் முக்கிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை ஈரானில் கொண்டுள்ளது. 30 பேர் அடங்கிய, பிரிட்டிஷ் வணிகர் குழு ஒன்று, கடந்த நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்றிற்கும் தெஹ்ரான் அரசாங்கத்திற்கும் இடையே ஈரானிய அணுத்திட்டம் பற்றி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்ட சிலநாட்களுக்கு பின்னர் ஈரானுக்கு சென்றது. ஜேர்மன் பசுமைக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் ஜேர்மனிய ஹென்ரிக் போல் நிறுவனத்தின் கருத்தின்படி, பிரிட்டிஷ் வணிக, தொழில் மந்திரியான பாட்ரீசியா ஹிவிட் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிக உறவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருகி வளர்ந்துள்ளதை வலியுறுத்தியதாகவும் இது இரு பக்கத்துக்கும் முக்கிய நன்மையை கொடுத்துள்ளது என கூறியதாக தெரிகிறது. இந்த அம்மையாருடைய அமைச்சரகம் கிட்டத்தட்ட நூறு நிறுவனங்கள் ஈரானில் கடந்த ஆண்டு மட்டும் செயல்படுவதற்கு எளிதில் வழிவகுத்து தந்திருந்தது.

இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுக்கு செய்யும் ஏற்றுமதிகள் 2003 உடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன. தெஹ்ரானுடைய மிகமுக்கிய ஐரோப்பிய வர்த்தக பங்குதாரர்கள் ஜேர்மனி, இத்தாலி, மற்றும் பிரான்ஸ் ஆகும். அதே நேரத்தில் ஈரான் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆற்றல் அளிப்புக்களை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கையும் கொண்டுள்ளது.

ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களுடைய பொருளாதார நலன்களை பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கவில்லை. தெஹ்ரானுக்கு எதிரான இராணுவத்தாக்குதல் அப்பகுதி முழுவதையும் அரசியலில் உறுதியற்ற தன்மையை, ஈராக்கிய போரை காட்டிலும் கூடுதலாக ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

தன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே, வெளியுறவு அமைச்சர் ரைஸ், அமெரிக்க படைகளின் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் ஐரோப்பா நேரடியாயக பங்கு கொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாக தெளிவுபடுத்தினார்: இது ஜேர்மனியாலும், பிரான்சாலும் ஏற்கப்படவில்லை. மேலும் இவ்வம்மையார் ஐரோப்பிய ஒன்றியம் சீனாவிற்கு எதிரான தற்போதைய ஆயுதமளிப்பு தடைகளை அகற்றிக் கொள்ளும் திட்டத்தை கைவிடுமாறும் கோரினார். தங்களுடைய பங்கிற்கு ஐரோப்பிய நாடுகள் ஈரான் நெருக்கடிக்கு, ஆயுதபலத்தை காட்டாமல், அமெரிக்கா தூதரக முறைகளில் பரிகாரம் காணவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பலவிதமான தூதரக நெறி முயற்சிகளின் பின்புலத்தில் இரு பக்கத்தாரும் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

அமெரிக்காவின் பூகோள-அரசியல் உத்திகளின் கண்ணொட்டத்திலும், மத்திய கிழக்கு, காஸ்பிய பகுதிகளில் சக்தி இருப்புக்களின் மீது தடையற்ற கட்டுப்பாட்டை நிறுவும் அதன் முயற்சியை அடுத்தும், வாஷிங்டன் ஈரான்மீது தன்னுடைய கவனத்தை சமீப காலமாக செலுத்தியுள்ளது. இந்நாட்டின் எல்லை நேரடியாக காஸ்பிய பகுதியில் இருப்துடன் எண்ணெய், எரிவாயு போக்குவரத்துக்களுக்கு ஒரு நவீன குழாய்த்திட்டம் உலக சந்தைக்கு அனுப்பப்படுவதில் நேரடியான சிறந்த வாய்ப்பையும் கொண்டிருக்கிறது. புஷ் அரசாங்கம் ஏற்கனவே துருக்கி, ஆப்கானிஸ்தான், ஈராக் என்ற அப்பகுதியில் உள்ள மூன்று அண்டை நாடுகளிலும் தன்னுடைய இராணுவத்தை கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய அரசாங்கங்கள் மத்திய கிழக்கில் ஒரு இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஏற்கவில்லை என்றாலும், அமெரிக்க அரசாங்கத்தையும் அதன் வெளியுறவு அமைச்சரையும் நேரடியாக எதிர்க்க தயாராக இல்லை. பேர்லின் அல்லது பாரிஸ், இலண்டனை பற்றிக் கூறத் தேவையில்லை, இவற்றில் இவருமே புஷ் அரசாங்கத்தையும் அதன் முந்தைய தேசியப்பாதுகாப்பு ஆலோசகரையும், சர்வதேச சட்டத்தை முழுமையாக முறித்துள்ள ஈராக்கிய போர் பற்றியோ அல்லது பின்னர் நிகழ்ந்த தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் பற்றியோ, எதிர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை.

ஈரான் அல்லது வேறு எந்த நாட்டின்மீதும் வெளிப்படையான அல்லது மறைமுகமான போர் அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள தாம் தயாராக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் ரைசிடம் ஒளிவு மறைவின்றி வலியுறுத்துவதோடு மட்டுமில்லாமல், அத்தகைய மேலும் கூடிய இராணுவ நடவடிக்கைகள் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க தளங்களை உடனடியான முற்றுகைக்கும், தடைகளுக்கும் ஆளாகவைக்கும் என்று விவரிக்காததுடன் கூட, ஐரோப்பிய அரசியல் வட்டங்கள் இதற்கு முற்றிலும் மாறான வகையில்தான் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள அழுத்தங்களை தொடர்ந்து, ஜேர்மனியில் Krupp AG, ஈரானிய செல்வாக்கை அதில் குறைக்கும் பொருட்டு அந்த நிறுவனத்தின் ஈரானிய பங்குகளை திருப்பி எடுத்துக் கொள்ளுவதாக கூறியிருக்கிறது. பிரிட்டனின் பெரிய ஆற்றல் நிறுவனமான Shell, ஸ்பெயினின் Repsol YDF உடன் சேர்ந்துகொண்டு ஈரானுடன் கடந்த கோடையில் இயற்கை வாயுப் பொருள் பற்றி விரிவான உடன்படிக்கையை கொண்டிருந்தது: இப்பொழுது உற்பத்தி திட்டங்களை "தற்காலிகமாக" நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளது.

அரசியல் மட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மோசமான உடன்பாட்டில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்றும் பார்த்து வருகிறது. அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், டொனால்ட் ரம்ஸ்பெல்டின் மீது போர்க்குற்றங்களை சுமத்தி, ஒரு பேர்லினை அடிப்படையாக கொண்ட அட்டர்னி அலுவலகம் சட்டபூர்வ வழக்கு ஒன்றை கொண்டு வந்திருப்பதை கருத்திற்கொண்டு, ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரியான பீட்டர் ஸ்ட்ரக் (சமூக ஜனநாயகக் கட்சி) அந்த வழக்கு ஆரம்ப விசாரணை கட்டத்தைக்கூட அடையாது என்று தன்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மூனிச்சில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியுள்ள ரம்ஸ்பெல்டின் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஸ்ட்ரக் வற்புறுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் உள்துறை மந்திரியான ஓட்டோ ஷிலி (SPD) கடந்த வாரம் அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி புஷ்ஷுடன் முன்னறிவிப்பு இல்லாமல் நடத்திய விவாதம் ஒன்றில் இன்னும் தெளிவான உறுதிப்பாட்டை காட்டியுள்ளார், பின்னர் இதைப்பற்றி பேசுகையில் ஷிலி குறிப்பிட்டார்: "இது ஒரு பெரும் கெளரவம்; எல்லா நாட்டு உள்துறை மந்திரிகளுக்கும் இது கிடைத்துவிடுவதில்லை." செய்தி நிருபர்களின் தகவல்கள், ஈராக்கிய அபிவிருத்தி நிதிக்கு ஜேர்மனி உதவும் என்று ஷிலி புஷ்ஷிடம் தெரிவித்ததாக கூறுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, வாஷிங்டனிடம் காட்டப்படும் இத்தகைய கோழைத்தனமான அணுகுமுறை போக்கு, அமெரிக்க போர்த்திட்டங்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து வெளியே கொண்டு வந்துவிட்டால், மக்களிடையே பெரும் சக்திவாய்ந்த எதிர்விளைவுகளை கட்டவிழ்த்துவிடக் கூடும் என்ற அச்சம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிடமும் இருப்பதை காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஈராக்கிய போருக்கு எதிராக வெளிப்பட்டதை அவை தெளிவாகவே நினைவு கூருகின்றனர், பழையபடி அதுபோல் நிகழக்கூடாது, அது தவிர்க்கப்படவேண்டும் என்றுதான் விரும்புகின்றன.

ஐரோப்பிய அரசியல் வட்டாரங்கள், போருக்கு எதிரான பரந்துபட்ட மக்களின் எதிர்ப்புக்கள் சமூக பிரச்சனைகளையும் கையில் எடுத்துக்கொண்டு உள்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராக எழுச்சி பெறக்கூடும் என்று அஞ்சுகின்றன. ஓட்டோ ஷீலி அமெரிக்க முன்னாள் தலைமை அரசாங்க வக்கீல் ஜோன் ஆஷ்கிரோப்டுடனான தன்னுடைய பிரத்தியேக நட்பை வலியுறுத்தி பேசியுள்ளமை தற்செயலான நிகழ்வு அல்ல. அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய மக்களுக்கெதிராக கொண்டுள்ள ஈவிரக்கமற்ற சட்டம் மற்றும் ஒழுங்கு கொள்கைகளால் ஷீலி மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஜேர்மனியும் ஏனைய ஐரோப்பிய அரசாங்கங்களும் தத்தம் சொந்த ஏகாதிபத்திய இலக்குகளை தொடர்கின்றன; இவற்றை வெகுஜனங்களிடம் இருந்து மறைக்க அவை முயலுகின்றன. இது அமெரிக்கவின் தற்போதைய அரசாங்கம் ஜனநாயகம், சுதந்திரம் இவற்றிற்காக எத்தனை தீவிர கோஷங்களையும், அழைப்புக்களையும் விடுக்கிறதோ, அதுபோல்தான் உள்ளது. இந்நிலைமைகளின் கீழ், பெரும் சக்திகளுக்கு இடையே உள்ள பூசல்கள் தீவிரமாக ஒரு வடிவத்தை கொள்கின்றன அது முதலாம் உலகப்போரின் ஆரம்பத்திற்கு முன்னரான இருண்ட நாட்களை நினைவுறுத்தும் வகையில் இருக்கின்றன.

See Also:

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களால் எச்சரிக்கையடைந்துள்ள ஐரோப்பா

ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பதட்டங்கள் ஆழமாகின்றன

Top of page