WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Abu Ghraib abuse trial shields Pentagon,
White House war criminals
அபு கிரைப் முறைகேட்டு விசாரணையை மூடி மறைக்கும் பென்டகன், வெள்ளை மாளிகை போர்க்
கிரிமினல்கள்
By Joseph Kay
19 January 2005
Back to screen version
ஜனவரி 15 ல் ஐந்து எண்ணிக்கையான தாக்குதல்கள், கைதிகளை முறைகேடாக நடத்தியது
மற்றும் சதிச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக, விசேட நிபுணரான சார்ல்ஸ் கிரானர் மீது குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெற்ற சித்திரவதைகளில் சம்மந்தப்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மீது குற்றம்
சாட்டப்பட்ட, முழு இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கிய கிரானருக்கு, படையினர்கள் அடங்கிய ஜீரிகள் 10
ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கண்ணியக்குறைவான வேலையிலிருந்து நீக்குதல் சான்றிதழும் அளிக்கப்பட்டு தீர்ப்பளித்தது.
கிரானரின் வக்கீலான கீ வோமக் எழுப்பிய பிரதான வாதம் என்னவெனில், தனது
கட்சிக்காரர் கட்டளைகளை நிறைவேற்றினார் என்பதாகும். அமெரிக்க இராணுவ சட்டப்படி அந்தக் கட்டளைகள் சட்டபூர்வமானதாக
இருந்தால் அல்லது அது சட்டபூர்வமானது என்று சிப்பாய் நியாயமாக நம்பினால் மட்டுமே இதுபோன்ற எதிர்தரப்புவாதத்தை
கூறமுடியும்.
இதுவரை, கேடுகளை அம்பலப்படுத்துகிற புகைப்படங்கள் சென்ற இளவேனிற்காலத்தில் வெளி
வந்த பின்னர் இதுவரை ஏழு இராணுவத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதில், மூன்று பேர்கள் தமது குற்றத்தை
ஒப்புக்கொண்டிருக்கின்றனர். மற்ற மூன்று பேர்கள் மீது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் துவங்கவில்லை.
ஈராக் கைதிகள் மற்றும் சில அமெரிக்கப் படையினர்கள் தந்துள்ள அறிக்கைகளின்படி, 372
வது இராணுவ போலீஸ் கம்பெனியைச் சேர்ந்த கிரானர் மற்றொரு
சிறைக் காவலருடன் சேர்ந்து அபு கிரைப் சிறைச்சாலையில் இரவு நேரத்தில்
(shift) பணியாற்றினார். அவர் திட்டமிட்டு கைதிகளை முறைகேடாக நடத்துவதில் மற்ற அதிகாரிகளுக்கு
ஒரு தலைவராக விளங்கினார். நிர்வாண, மற்றும் துணியினால் தலையை மூடிக் கட்டப்பட்டுள்ள ஈராக் கைதிகளுடன், ஓயாது
பல்லிளித்துக் கொண்டு காணப்பட்ட இழிவான புகைப்படங்களில் அவர் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
2003 நவம்பர் 7 ல் கைதிகளை அந்த நிலையில் இருக்க கட்டாயப்படுத்தியவர் கிரானர்
ஆவர். மற்றொரு சம்பவத்தில், தலை மூடப்பட்டிருந்த ஒரு கைதியை ஒரு முறை மிக வேகமாக குத்தியதால் அந்த கைதி
சுயநினைவின்றி விழுந்தார்.
அமீன் சாயிட் அல் ஷேக் என்பவர்
சாட்சியமளித்தபோது, தன்னை தாக்கிய ''பிரதான சித்திரவதையாளர்'' கிரானர் தான் என்று குறிப்பிட்டார். ''கைகளில்
விலங்கிட்டு எட்டு மணிநேரம் என்னை ஒரு கதவில் சாத்தி வைத்திருந்தார். மற்றொரு கைதி என் மீது சிறுநீர் கழிப்பதை
பார்த்துக் கொண்டிருந்தார். இதர கைதிகள் கழிப்பறையிலிருந்து உணவு உட்கொள்ள கட்டாயப்படுத்தியதுடன், அவர்களை
மானபங்கப்படுத்தி விடுவதாக அச்சுறுத்தினார்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிரானர் செருக்குடன், பிறர் துன்பத்தில் இன்பம் கானும் சாடிஸத்தை பயன்படுத்திக்
கொண்டார். தாக்குதலுக்கு உள்ளாகிய, ரத்தம் சிந்திய கைதிகளின் புகைப்படங்களை தனது இளம் பிள்ளைகள் உட்பட
தனது குடும்பத்தினருக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். இவ்வளவு ''குளிர்ச்சி தரும் பணியை உண்மையிலேயே'' தாம் செய்ய
வேண்டியிருந்ததாக பெருமையடித்தும் கொண்டார்.
கிரானர் கொடூரமான குற்றங்களை புரிந்தவர் மற்றும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான்.
ஆனால், புஷ் நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் அவர் "கெட்டுப்போன ஒரு சில பழங்களில்" ஒருவர் என்று
சொல்லுவதும், அவரது தவறான நடவடிக்கைகள் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிரொலிக்கவில்லை என்பதும்
அபத்தமானதும் வெறுத்து ஒதுக்கத்தக்க பொய்யுமாகும்.
கிரானர் மிக முக்கியமாக இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் மிகச் சரியாக அமெரிக்க
ஆக்கிரமிப்பின் தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் புஷ் நிர்வாகம், கிரானரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர
படையினர்களும் தங்களது சொந்த முறையில் தாங்களே இத்தகைய நடவடிக்கையில் இறங்கிய "போக்கிரி" சக்திகள் என்று
தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றனர். கிரானர் மற்றும் பிறர் மீது நடத்தப்பட்டுள்ள வழக்குகள், இந்தப் பொய்யை
நிலைநாட்டுவதற்கும், அபு கிரைப் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற
கற்பனையை வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சித்திரவதை நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்கான
கொள்கைகளை வகுத்த புஷ் நிர்வாகம் மற்றும் உயர்ந்த மட்டங்களில் உள்ளவர்களது குற்றங்களை மூடி மறைப்பதற்காக,
குற்றங்களை செய்த சிறிய பதவிகளில் இருப்பவர்கள் இதில் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
கிரானரும் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளும் இராணுவ புலனாய்வு
அதிகாரிகளால் கைதிகளை சித்திரவதை செய்யுமாறும், முறைகேடாக நடத்துமாறும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த
நடவடிக்கைகள் பாதுகாப்பு துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் வகுத்த கொள்கைகள் மற்றும் வழிகாட்டி
நெறிமுறைகளின் நேரடி விளைவுதான். மற்றும் அவை வெள்ளை மாளிகையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டவை ஆகும்.
கிரானர் வழக்கில் நீதிபதியான இராணுவ கேர்னல் ஜேம்ஸ் போல், இராணுவ உயர்மட்ட
அதிகாரிகள் அல்லது அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான சான்று எதையும் விலக்கிவிட முயன்றார்.
கிரானரின் வழக்கறிஞர், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் முன்னாள் தளபதி லெப்டினட் ஜெனரல் ரிகார்டோ
சான்சேஸ், அதே போல ரம்ஸ்பெல்ட் மற்றும் அவரது புலனாய்வு துணைச் செயலாளர் ஸ்டீவன் கம்போனே ஆகியோரை
சாட்சிக் கூண்டிற்கு அழைக்கக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை நீதிபதி ஜேம்ஸ் போல் ஏற்றுக்கொள்ள
மறுத்தார். அபு கிரைப்பில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் படைத் தலைவர் கேர்னல் தோமஸ் பப்பாஸ்
சாட்சியமளிப்பதற்கு பாதுகாப்பு தரவேண்டும் என்ற வழக்கறிஞர் வோமக்கின் கோரிக்கையும் மறுக்கப்பட்டது.
இந்த தலைமை இராணுவ மற்றும் சிவிலியன் அதிகாரிகளை விசாரணையிலிருந்து விலக்கிய
பின்னர் நீதிபதி, கைதிகள் நடத்தப்படும் முறை தொடர்பாக அதிகாரிகள் தந்த கட்டளைகள் குறித்து எந்த கேள்வியும்
கேட்க அனுமதிக்கவில்லை. "Catch-22"
என்ற உயர் தர கையாளுதலை எந்தெந்த உயர்
அதிகாரிகளுக்கு இந்த முறைகேடுகள் பற்றி தெரியும் என்று சாட்சிகள் விளக்கம் தருவதற்குகூட நீதிபதி அனுமதி தர
மறுத்துவிட்டார். அத்தகைய அறிக்கைகள் வெறும் ''வதந்திகளாக'' கேள்விபட்ட தகவல்களாக இருக்கும் என்று அவர்
குறிப்பிட்டார்.
நீதிபதி ஜேம்ஸ் போல் சாட்சியமளிக்க அனுமதித்த மிக மூத்த அதிகாரியான பிரிகேடியர்
ஜெனரல் ஜெனிஸ் கார்ப்பின்ஸ்கி கிரானர் வழக்கில் சாட்சியமளிக்கவில்லை. ஆனால், மற்றொரு வழக்கான ஜாவால்
டேவிஸில் அவர் சாட்சியமளிக்கிறார். கார்ப்பின்ஸ்கி ஈராக்கிலுள்ள அமெரிக்க சிறைகளில் முன்னர் தலைவராக
பணியாற்றியவர். அவர், படைத் தளபதியான சான்சேஸ், ஈராக் புலனாய்வு முறைகளை மதிப்பீடு செய்வதற்கு
ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட ஜெப்ரி மில்லர், மேஜர் ஜெனரல் பார்பரா பாஸ்ட் மற்றும் ஈராக்கில் இராணுவ புலனாய்வின்
முன்னாள் தலைவர் ஆகியோர் இந்த சித்திரவதைகளுக்கு பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.
கிரானர் வழக்கில் ஆஜராகி சாட்சியமளித்தவர்கள் பிரதானமாக அபு கிரைப்பில்
பணியாற்றிய படையினர்கள் மற்றும் சில கைதிகள் ஆவர். இந்த சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏழு
தனிநபர்களுக்கும் அப்பால், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கோடிட்டு
காட்டியுள்ளனர். ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள வேறு சில படையினர்கள்,
கிரானரும் மற்றவர்களும் தங்களது நடவடிக்கைகளில் இராணுவ புலனாய்வு மற்றும்
CIA அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். விசாரணை நோக்கங்களுக்காக கைதிகளை
''மிருதுவாக்குவதற்கு'' அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
முன்னாள் சிறப்பு நிபுணர் மேகன் அம்புல் என்பவர், அபு கிரைப் சித்திரவதைகள்
தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். "எல்லா நேரத்திலும் இராணுவ புலனாய்வு
அதிகாரிகள் எங்களை ஊக்குவித்தார்கள். அந்த இராணுவ அதிகாரிகள் எங்களிடம் நேரில் வந்து கைதிகளை எவ்வாறு
நடத்தவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாக எங்களுக்கு கூறினர்" என்று அவர் தெரிவித்தார். ''கைதிகளை
இழிவுபடுத்துவதற்காக அவர்கள் குளிக்கும்போது அவர்களை சுட்டிக்காட்டி எள்ளி நகையாடவேண்டும்'' என்று அவரிடம்
புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
அந்த சிறையில் வைக்கப்பட்டிருந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரையில், அந்த சிறையில்
நடைபெற்ற முறைகேடுகள் பற்றிய புகைப்படங்களை அபு கிரைப் கூட்டு புலனாய்வு மற்றும் சிறைத் தலைமை அதிகாரியான
லெப்டினட் கேர்னல் ஸ்டீவன் ஜோர்டான் பார்த்ததாகவும் அம்புல் கூறினார்.
"ஒரு நல்ல பணியை செய்திருப்பதாக" கிரானரை, ஜோர்டான் பாராட்டியதாக இராணுவ
தலைவர் பிரைன் லிப்பின்ஸ்கி என்பவர் சாட்சியமளித்தார். பிரமிட்டு போல் நிர்வாணமாக கைதிகளை ஒருவர் மீது ஒருவர்
அமரவைத்த சம்பவம் நடைபெற்றவுடன் இந்த பாராட்டு நடந்தது. என்றாலும், அவரது செயல்பாடு பற்றிய அறிக்கையில்
ஒரு சுவற்றில் கைதியின் தலையை முட்டி நொறுக்கியதாக கிரானர் கண்டிக்கப்பட்டிருந்தார். அந்த நடவடிக்கைக்காக
கிரானர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்காக விடுப்பு
தரப்பட்டது.
ஜனவரி 11 ல் வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில், அபு கிரைப் சித்திரவதை
தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றம் புரிந்ததாக ஒப்புக்கொண்ட இவான் பிரடரிக் என்பவர், இந்த நடவடிக்கை
தொடர்பாக கூறுகையில் ''காப்டனிலிருந்து லெப்டினட் கேர்னல்கள் வரை ஆறு மூத்த அதிகாரிகளை தாம்
கலந்தாலோசித்ததாகவும்'' ஆனால், அவர்கள் எப்போதுமே இந்த நடவடிக்கையை நிறுத்திவிடுமாறு கூறவில்லை என்றும்
குறிப்பிட்டார். தன்னை 'Agent Romero' என்று
அடையாளப்படுத்தும் ஒரு CIA அதிகாரி, கிளர்ச்சிக்காரர்
என்று சந்தேகிக்கப்படுபவரை விசாரிப்பதற்காக அவரை "மென்மைப்படுத்த வேண்டும்" என்று தன்னிடம் கூறியதாக
பிரடரிக் குறிப்பிட்டார். இராணுவத்தினர் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் அந்தக்
கைதியை கொன்றுவிடவேண்டாம் என்று மட்டுமே கூறினார் என்று பிரடரிக் தெரிவித்தார்.
2003 கடைசியில் அபு கிரைப் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த பின்னர் தனது பிளட்டூன்
தலைவருக்கு படைத் தலைவரான கென்னி டேவிஸ், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் "அங்கு நிர்வாண நிலையில் கைதிகள்
தொடர்பாக ஏதோ முறைகேடுகளை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்''. இந்த பிரச்சனை தொடர்பாக
மேலும் கேள்விகளை அனுமதிக்க நீதிபதி போல் மறுத்துவிட்டார்.
இராணுவ புலனாய்வு, CIA,
மற்றும் கிரானர் உட்பட இராணுவ போலீஸ் படையினர்கள் கைதிகளை சித்திரவதை செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள்
என்றால் ----நிச்சயமாக ஊக்குவிக்கப்பட்டார்கள்---- அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் இதை செய்யவில்லை.
மாறாக, அபுகிரைப் மற்றும் இதர ஈராக் சிறைச்சாலைகளில் விசாரணை நடவடிக்கைகளை மேலும் முடுக்கிவிட வேண்டும்
என்பதற்கான நிர்பந்தம் நேரடியாக ரம்ஸ்பெல்ட் மற்றும் சான்சேஸிடமிருந்து வந்தது. மற்றும், இது புஷ் நிர்வாகக்
கொள்கையின் ஓர் அங்கமாக இருந்தது.
அம்புலினுடைய வக்கீல் ஹேர்வே வோல்சர் ஏன் நீதிபதி போல், ஜோர்டான், பாப்பாஸ்
மற்றும் இதர தலைமை அபுகிரைப் அதிகாரிகள் தொடர்பான கேள்விகளை மடக்குவதில் மிகுந்த குறியாக இருக்கிறார்
என்பதற்கான காரணத்தை விளக்கினார். "மேலே செல்லச் செல்ல பென்டகன் வரை தொடர்புள்ளவர்களுக்கு மேலும்
பிரச்சனை வரும். பாப்பாஸ், சன்சேசை சுட்டிக் காட்டுவார், அதை அவர்கள் விரும்பவில்லை. சான்சாஸ் கூட
ரம்ஸ்பெல்டை சுட்டிக்காட்டுவார். அதையும் அவர்கள் விரும்பவில்லை. ரம்ஸ்பெல்ட், புஷ்ஷையும் வெள்ளை மாளிகை
[சட்ட ஆலோசகரான ஆல்பர்டோ]
கொன்சாலசையும் சுட்டிக்காட்டுவார். அதை அவர்கள் நிச்சயமாக விரும்பவில்லை" என்று வக்கீல் ஹேர்வே
வோல்சர் கூறினார்.
"சார்ல்ஸ் கார்னர் என்ன செய்திருந்தாலும், அது எவ்வளவு கொடூரமான நடவடிக்கையாக
இருந்தாலும் சித்திரவதை செய்வதற்கு மற்றும் அபுகிரைப் சிறையிலுள்ளவர்களை முறைகேடாக நடத்துவதற்கு தனக்கு
அதிகாரம் தந்த கொள்கைகளை வகுத்த சிற்பிகளுக்காக அவர் பழியை ஏற்றுக்கொள்கிறார்" என்று அரசியல் சட்ட
உரிமைகள் தொடர்பான அமைப்பின் (CCR) தலைவர் மைக்கல்
ரெட்னர் கூறினார். ஒரு சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை வைத்து ரம்ஸ்பெல்ட்டின் பங்களிப்பு பற்றி ஆராய வேண்டும் என்று
CCR கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு ஜேர்மன் நீதிமன்றத்தில்
ஏற்கெனவே இந்த அமைப்பு ரம்ஸ்பெல்ட் மற்றும் பிறருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு மனுக்களை தாக்கலும்
செய்திருக்கிறது.
அபு கிரைப் சித்திரவதைகள் அம்பலத்திற்கு வந்த பின்னணியை நினைவு கூர்வது பயனுள்ளது.
2001 செப்டம்பர் 11 க்கு பின்னர், சர்வதேச சட்டத்தில் போர்க் கைதிகளுக்கு பாரம்பரியமாக அனுமதிக்கப்படுகிற
உரிமைகள் உட்பட ஜனநாயக உரிமைகள் மீது, தீவிரமான தாக்குதலை நடத்துவதற்கு புஷ் நிர்வாகம் உடனடியாக அந்தத்
தாக்குதல்களை தனக்கு சாதகமாக சுரண்டிக் கொண்டது.
புஷ் நிர்வாகம், ஆப்கானிஸ்தான் மற்றும் கியூபா குவாண்டாநாமோ வளைகுடா சிறை
முகாம்களிலுள்ள கைதிகளை ஜெனீவா ஒப்பந்தங்களின்படி போர்க் கைதிகளாக நடத்துவதில்லை என்று முடிவு செய்தது. இது
சம்மந்தமாக CIA விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து,
தற்போது அட்டர்னி ஜெனரலாக புஷ்ஷினால் நியமிக்கப்பட்டிருக்கும் கொன்சலாசுக்கு ஒரு குறிப்பு தாக்கல்
செய்யப்பட்டது. அந்தக் குறிப்பு சித்திரவதை சம்மந்தமாக மிகக் குறுகலான சட்ட விளக்கம் தருவதால்,
சித்திரவதைக்கெதிராக அமெரிக்க சட்டங்களும் சர்வதேச சட்டங்களும் தடைவிதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றுவதற்கு
அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி ஒரு தலைமைத் தளபதி என்ற முறையில் கைதிகளை சித்திரவதை செய்வதற்கு கட்டளையிடும்
உரிமை படைத்தவராக உள்ளார் என்று 2002 ஆகஸ்டில் அந்தக் குறிப்பில் எழுதப்பட்டது.
இந்த வளர்ச்சிப் போக்கில் புஷ்ஷிற்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது. அமெரிக்க
வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்கோட் ஹோர்டோன்
ஆஸ்திரேலிய செய்திப் பத்திரிகையான ஏஜ்ஜிற்கு பேட்டியளிக்கும்போது பின்வருமாறு கூறினார்: "ஜனாதிபதி நடவடிக்கை
எடுத்தார் என்ற காரணம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. இப்போது நான் மேலும் பல ஆவணங்களை
பார்த்திருக்கிறேன். அந்த ஆவணங்கள் 2002 ஏப்ரலில் இருந்து தோராயமாக ஏதாவதொரு தேதியில் ஜனாதிபதி இதில்
உறுதியாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவை விவரமாக இல்லாவிட்டாலும் தீவிரமான விசாரணை
நடைமுறைகள் சம்மந்தப்பட்டதாகும்.''
பத்திரிகையாளர் செமூர் ஹேர்ஸ் என்பவர் தனது நூலான
Chain of Command-ல் குறிப்பிட்டிருப்பது
என்னவென்றால், 2001 கடைசியில் அல்லது 2002 துவக்கத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் புஷ் ஒரு உயர் ரகசிய
கட்டளையில் கையெழுத்திட்டார். அது பாதுகாப்புத்துறை சிறப்பாக அணுகும் வேலைத்திட்டத்தை
(Special Access Program - SAP) அமைக்க வேண்டும் என்று அங்கீகாரமளித்தது. இது அமைப்பு
எந்த நெறிமுறை அல்லது கண்காணிப்பிற்கும் வெளியில் இருந்து செயல்படுகிறது. இந்த
SAP தான் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ரகசிய விசாரணை நடைமுறைகளுக்கு பொறுப்பு வகித்த அமைப்பாகும்.
இராணுவத்தின் சொந்த விசாரணைகளில் ஒன்றை மேஜர் ஜெனரல் ஜோர்ஜ் பே என்பவர்
நடத்தியிருக்கிறார். 2002 டிசம்பரில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில், "ஆப்கானிஸ்தானில் விசாரணை செய்பவர்கள்
கைதிகளின் ஆடைகளை நீக்கிவிட்டு தனிமைச் சிறையில் நீண்ட நேரத்திற்கு வைத்திருந்திருக்கிறார்கள். உடலை வருத்தும் நிலையில்
உட்கார வைக்கப்பட்டிருக்கின்றனர், நாயைக் கண்டால் பயப்படுகின்ற தன்மையை சுரண்டிக் கொள்கின்றனர் தூக்கம் மற்றும்
வெளிச்சம் மறுக்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2003 ஏப்ரலில், ஒரு மிக விரைவான விசாரணை நடைமுறைகளை குவாண்டாநாமோ
வளைகுடாவிற்காக ரம்ஸ்பெல்ட் ஒப்புதல் அளித்தார். அதில் மேலே கூறப்பட்ட பல விசாரணை நடைமுறைகள் சேர்க்கப்பட்டிருந்தன.
பின்னர் அந்த பட்டியல் சம்பிரதாய முறையில் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அண்மையில் அமெரிக்க சிவில் உரிமை
ஒன்றியம் (American Civil Liberties Union-ACLU)
வெளியிட்ட பல்வேறு ஆவணங்கள் உட்பட குவாண்டாநாமோ வளைகுடாவில் சித்திரவதை என்பது வழக்கமான சிறை நடவடிக்கையாகவே
ஆகிவிட்டது என்பதை நிரூபிப்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
அந்த நேரத்தில் குவாண்டாநாமோ வளைகுடா சிறையில் தலைமை அதிகாரியாக பணியாற்றி
வந்த மேஜர் ஜெனரல் மில்லர் என்பவர், 2003 கடைசியில் அபு கிரைப்பிற்கு அனுப்பப்பட்டார். முன்னாள் பாதுகாப்புத்
துறை செயலாளரான ஜேம்ஸ் சுல்சிங்கர் தலைமையில் நடைபெற்ற விசாரணைக் குழு மூடி மறைத்து வெளியிட்ட அறிக்கையில்
கூட 2004 ஆகஸ்டில் கியூபா சிறைச்சாலை நடைமுறைகள் ஈராக்கிற்கு "குடியேறி விட்டதாக" ஒப்புக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க சிவில் உரிமை ஒன்றியம் ஒரு FBI ஏஜெண்டிடமிருந்து
பெற்ற ஒரு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணத்தில் மில்லர்,
FBI சட்டவிரோத நடைமுறைகள் என்று கருதுகின்ற நடவடிக்கைகளை ஈராக்கில் செயல்படுத்துவதற்காக
அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் ரம்ஸ்பெல்ட்டிடம் இருந்து நேரடியாக அந்த அதிகாரத்தை பெற்றார் என்று
இந்த அமைப்புவெளியிட்ட ஆவணம் விளக்குகிறது.
ஈராக்கில் அமெரிக்க இராணுவம் சமாளிப்பதற்கு சிரமப்படும் அளவிற்கு வளர்ந்து வருகின்ற
எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்கும் ஒரு முயற்சியாக, குவாண்டாநாமோவில் பயன்படுத்தப்பட்ட சித்திரவதை மற்றும்
முறைகேட்டு நடைமுறைகள் ஈராக்கிற்கு மாற்றப்பட்டன.
இத்தகைய சித்திரவதைக் கொள்கைக்கு மிகப்பெருமளவில் பொறுப்பாக இருந்தவர்கள்
தண்டிக்கப்படுவதற்கு பதிலாக, அவர்கள் புஷ்ஷின் இரண்டாவது நிர்வாகத்தில் தங்களது பதவிகளை மேலும் வலுப்படுத்திக்
கொண்டுள்ளனர். கொன்சாலஸ் புதிய அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மற்றும் ரம்ஸ்பெல்ட்
பாதுகாப்பு அமைச்சராகவே நீடிக்கிறார். ஹேர்ஸ் கூறியுள்ளதைப்போல், சிறப்பாக அணுகும் வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல்
வழங்கிய கொண்டலீசா ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து வெளியுறவு செயலராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். |