World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சுனாமி பேரழிவுWhy has India blocked foreign tsunami aid to the Nicobar and Andaman islands?அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு வெளிநாட்டு சுனாமி உதவியை இந்தியா தடுத்தது ஏன்? By Parwini Zora and Daniel Woreck டிசம்பர் 26-ல் சுனாமி தொலைதூரத்திலுள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் கூட்டத்தை தாக்கியதால் மிகப்பெரியதொரு பேரழிவு ஏற்பட்டது. வங்கக் கடலில் தாழ்ந்த பெரும்பாலும் மக்கள் வாழாத 572 சிறிய தீவுகள் கூட்டம் அன்றைய தினம் ஏற்பட்ட பாரியளவு நிலநடுக்கம் கருக்கொண்ட பகுதிக்கு மிக அருகாமையிலுள்ள இந்திய எல்லைப்பகுதியாகும். கடலால் வெள்ளமாக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த நிலநடுக்கத்தின் தொடர் அதிர்வுகளாலும் அது தாக்கப்பட்டது. அதிகாரபூர்வமான பலியானோர் எண்ணிக்கை 1800க்கு மேல் ஆகும், ஆனால் 5,500க்கு மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை, அவர்கள் மடிந்துவிட்டதாக கருதப்படுகிறது. முழுமையான அர்த்தத்தில் இந்தியாவில் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மக்கள் தொகை, 3,56,000 பேர்தான் எனவே பாதிப்பு தமிழ்நாட்டை விட ஒப்பீட்டளவில் மிகவும் கடுமையானதாகும். 2,88,000 பேர் அல்லது மொத்த மக்களில் 80 சதவீதம் இங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த 38 தீவுகளை சார்ந்த தப்பிப்பிழைத்தவர்கள் ஏறத்தாழ 12,000 பேர் அந்தமான் தலைநகரான போர்ட் பிளேயருக்கு அப்புறப்படுத்தப்பட்டனர், என்றாலும் ஜனவரி 4-ல் இப்படி வெளியேறி வருவது தடுத்து நிறுத்தப்பட்டது ஏனெனில் நகரிலுள்ள உதவி முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. போர்ட் பிளேயரிலுள்ள மிகப்பெரும்பாலான பள்ளிகளில் அகதிகள் அளவிற்கதிகமாக குவிந்திருக்கின்றனர் மற்றவர்கள் பிளாஸ்டிக் தகடுகளை முகாம்களாக அமைத்து தங்கியிருக்கின்றனர். அந்தத் தீவு கூட்டத்தில் பரவலாக அமைக்கப்பட்டுள்ள உதவி முகாம்களில் 40,000 மக்கள் தஞ்சம் புகுந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த முகாம்கள் உள்ளூர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இயங்குகின்றன அவர்கள் மத்திய அரசாங்கத்தினால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள், இந்திய இராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் வருபவர்கள். பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு போதுமான அவசர உதவிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக இந்திய அரசாங்கம் கூறிற்று. என்றாலும் தப்பிப்பிழைத்தவர்கள் உதவிகள் கிடைப்பதில் தாமதங்கள் பற்றியும் மருத்துவ உதவி பற்றாக்குறை பற்றியும் மற்றும் இந்திய இராணுவம் உதவி நடவடிக்கையை மேற்கொள்ளும் முறையையும் விமர்சித்தனர். அரசாங்கம் இந்த மனக்குறைகளை பொருட்படுத்தவில்லை என்பதுடன், வெளிநாட்டு உதவிக் குழுக்களின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டது. அந்தத்தீவு கூட்டங்கள் முழுவதிலும் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே சர்வதேச அமைப்பு UNICEF. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் உதவிப்பணி செய்யும் தொழிலாளர்கள் போர்ட் பிளேயரில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் மற்ற எந்த தீவிற்கும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச உதவிக்குழுக்கள் உள்ளூர் அமைப்புகளுக்கு உதவி தருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் இந்த நடவடிக்கைகளும் கூட கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவாரத்திற்கு முன்னர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகள் அனுப்பப்படும் உதவிகளை கைப்பற்றி சென்று விடுவதாக புகார் கூறினர். போர்ட் பிளேயருக்கு கப்பலில் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை துறைமுகங்களில் இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுகின்றனர், அரசாங்க அமைப்புகள் வினியோகிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர். BBC தந்துள்ள ஒரு தகவலின்படி: "அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் ஆள்மாறாட்டம் செய்துகூட உதவி நடவடிக்கைகளில் வெளிநாட்டு சேவைக்குழுக்கள் கலந்து கொள்வதை தடுப்பதில் உறுதியாக உள்ளது". இதில் ஒரு தெளிவான கேள்வி எழுகிறது: அந்தமானில் வெளிநாட்டு உதவி கிடைப்பதில் ஏன் இவ்வளவு கூர்ந்துணரப்படுகிறது? ஆரம்பத்திலிருந்தே, புதுதில்லி வெளிநாட்டு உதவி இந்தியாவிற்கு தேவையில்லை என்று வலியுறுத்தி வந்தது. "வெளிநாட்டு உதவியை நாங்கள் ஏற்பதில்லை, என்று நாங்கள் முடிவு செய்ததற்கு காரணம் அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு எங்களிடம் எல்லா வளங்களும் உள்ளன என்பதுதான்..... இந்த பேரழிவை சமாளிப்பதில் உடனடியாகவும் பயனுள்ள வகையிலும் நாங்கள் நடவடிக்கையில் இறங்கினோம்" என்று இந்திய வெளியுறவு செயலர் சியாம் சுரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். உண்மையிலேயே, அரசாங்கம் மேலும் ஒரு படி சென்றது. இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய பிராந்திய வல்லரசாக வரவேண்டும் என்ற அதன் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதுதில்லி அவசரமாக மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேஷிய மாகாணமான ஆஷே இற்கு விரைந்தனுப்பியது. சமாதான காலத்தில் இதுவரையில்லாத மிகப்பெரிய நடவடிக்கையாக ----"கடல் அலை நடவடிக்கையின்"---- கீழ் இந்திய கடற்படை ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 32 கப்பல்களை அனுப்பியது. கல்கத்தாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங் ஒரு விஜயம் மேற்கொண்டிருந்த போது, "சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிற்கு எங்களது நடவடிக்கை ஒரு பொய்யான தற்பெருமை அல்லது பேரினவாதத்தால் உருவாக்கப்படவில்லை. நாங்கள் பூகோள சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருப்பதிலும் வேலை செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று குறிப்பிட்டார், அப்படியிருந்தும் "தனது சொந்தக்காலிலேயே நின்று சமாளிக்கும் திறமையும் வல்லமையும் இந்தியா பெற்றிருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும்" என்று பெருமைப்பட்டுக்கொண்டார். ஆனால் தென்னிந்தியாவில் உதவி நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு இல்லை என்பது ஊடகங்களில் தலைகாட்ட ஆரம்பித்ததும், புதுதில்லி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளிநாடுகளின் நேரடி உதவியை இன்னும் ஏற்றுக்கொள்ள மறுத்துவந்தாலும், சிங் அரசாங்கம் ஐ.நா, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தது. பல்வேறு உதவிக்குழுக்களும் அரசு சாராத அமைப்புகளும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏற்கெனவே ஓரளவிற்கு உதவிகளை வழங்கிவருகின்றன. நுட்பம் வாய்ந்த இராணுவத்தளங்கள் என்றாலும் அந்தமான் நிக்கோபார் தீவுக் குழுவில் கடுமையான கட்டுப்பாடுகள் படைகளால் விதிக்கப்பட்டிருக்கின்றன. பூர்வ குடிகளை காப்பாற்றவேண்டிய அவசியம் குறித்து இந்திய அரசாங்கம் சுட்டிக்காட்டினாலும், அந்தத் தீவுகளில் இந்தியாவின் இராணுவ தளங்கள் அமைக்கப்பட்டிருப்பது பற்றி நிலவுகின்ற இரகசியத்தை காப்பதில் அதிகம் கவலை கொண்டிருக்கிறது. டில்லியை அடித்தளமாக கொண்ட சமாதானம் மற்றும் மோதல்கள் பற்றிய ஆய்வு அமைப்பை சேர்ந்த ஒரு ஆய்வாளரான சுபா சந்திரன் BBC-க்கு தெரிவித்திருப்பதை போல், இது "ஒரு கெடுபிடிப்போர் மனப்போக்கு. இந்தியா அந்தமானிலுள்ள தனது இராணுவ அமைப்புக்கள் குறித்து மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது. தீவுகளின் தென்மேற்கு முனை, இந்தோனேஷியாவின் சுமத்ராவிற்கு 150 கி.மீ அருகில்தான் உள்ளது. வட மேற்கு முனை பர்மாவிற்கு சொந்தமான கொக்கோ தீவுகளுக்கும் 50 கி.மீ குறைவாகதான் உள்ளது. எனவே இந்தத் தீவுகள் மலாக்கா ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதை கண்காணிப்பதற்கு ஏற்றநிலையில் உள்ளவையாகும், இது மத்திய கிழக்கிலிருந்து வடகிழக்கு ஆசியாவிற்கும் விரிவான ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும் ஒரு முக்கிய கடல்வழி தளமாகும். ஜப்பானுக்கும், சீனாவிற்கும் உயிர்நாடியான எண்ணெய் சப்ளைகள் உட்பட ஒரு கணிசமான அளவிற்கு உலக வர்த்தகம் இந்த நீரிணை வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனாவுடன் ஒரு மோதல் ஏற்படுமானால் அந்த நேரத்தில் அந்த நீரிணையை ஒரு உயிர்நாடியான சப்ளைகளை "தடைப்படுத்துகின்ற முனையாக" பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அமெரிக்க இராணுவ மூலோபாயம் வகுப்பவர்கள் நீண்ட காலமாக ஆராய்ந்து வருகின்றனர். இப்பகுதி பெருகிவரும் ஆதிக்கப்போட்டியை குவிமையப்படுத்தும் பகுதியாகும். சீனா தனது சப்ளை வழித்தடங்களை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக பர்மாவுடன் தனது உறவுகளை வலுபடுத்திக்கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் இராணுவ தளங்களையும் எலக்டிரானிக் கண்காணிப்பு வசதிகளையும் உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணியை மேம்படுத்தி வருகின்ற இந்தியா, பர்மாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் சீனா தன்னை நிலைநாட்டிக்கொண்டிருப்பதற்கு ''எதிராக'' நிக்கோபார் மற்றும் அந்தமான் தீவுகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. 2001-ல் இந்தியா 2 பில்லியன் டாலர்கள் செலவுசெய்து அந்தமான் நிக்கோபார் இராணுவ ஆணையகத்தை அமைந்திருக்கிறதாக மதிப்பிடப்படுகிறது, அது கூட்டாக இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடல் எல்லைக்காவல் படையினரால் நடத்தப்படுகிறது, அது அந்தத் தீவுக் கூட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. ஒரு போர் விமானப் பிரிவு மற்றும் ஒரு ஹெலிகாப்டர் பிரிவு உட்பட இந்திய விமானப்படை கணிசமான அளவிற்கு அங்கு நிலை கொண்டுள்ளது. இராணுவம் ஒரு முழு டிவிஷன் அல்லது 8,000 போர் வீரர்களை அந்தத் தீவுகளில் நிறுத்தவிருக்கிறது. அந்தத் தீவுக் கூட்டங்கள் முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை நிலையங்களை ஸ்தாபித்திருக்கிறது. சென்ற ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்னர், முன்னைய பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான கூட்டணி அரசாங்கம் உருவாக்கிய ஒட்டுமொத்த இராணுவ விரிவாக்கத் திட்டங்களை காங்கிரஸ் நீடித்து செயல்படுத்திக்கொண்டுள்ளது. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவீனம், மேலும் 27 சதவீதம் உயர்த்தப்பட்டு 17.63 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது, அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 2.5 சதவீதமாக அமைந்திருக்கின்றது. படைகள் பெறவிருக்கின்ற தளவாடங்களில் 3 பிரான்சு நாட்டு ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்களும், 115 பன்னோக்கு-போர்விமானங்களும், மூன்று பால்கன் ரக விமான எச்சரிக்கை ராடார் அமைப்புகளும், ஒரு ரஷ்ய விமானந்தாங்கி கப்பலும் அடங்கும். முந்திய ஆட்சியாளர்கள் வாஷிங்டனுடன் நிலைநாட்டி வந்த நெருக்கமான இராணுவ உறவுகளை நிலைநாட்டுவதில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தயக்கம் காட்டவில்லை. சென்ற ஜூலை -ஆகஸ்டில், அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்ற ஒத்துழைப்பு இடி பயிற்சிகள் என்று குறிக்கப்பட்ட அமெரிக்க விமானப்படை பயிற்சிகளில் இந்திய விமானப்படை கலந்து கொண்டது. அக்டோபரில், கோவா அருகே அரபிக் கடலில் அமெரிக்க விமானப்படையுடன் பயிற்சியில் ஈடுபட்டது. Asia Times வலைத்தளத்தில் சென்ற நவம்பர் மாதம் ஒரு கட்டுரை "கடற்படை இந்திய மூலோபாய அபிலாஷைகளை எதிரொலிக்கிறது" என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தது. அந்தக் கட்டுரை இந்திய கடற்படை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டின. "இதில் எல்லாவற்றையும் விட கவனத்தை கவர்வது, இந்திய கடற்படை தென்சீனக்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அனுப்பப்படவிருக்கிறது. அதன் மூலம் இந்திய போர் கப்பல்கள் வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய துறைமுகங்களை தொடவிருக்கின்றன. தென் சீனக்கடலில் இவ்வளவு விரிவானதொரு செயற்திட்டத்தை முதல் தடவையாக இந்திய கடற்படை மேற்கொள்ளவிருக்கிறது." அந்தக் கட்டுரையாசிரியர்---அமெரிக்க மூலோபாய ஆய்வாளர், டாக்டர் டொனால்ட் பேர்லின்--- மலாக்கா நீரிணையில் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூருடன் இந்தியா கலந்துரையாடிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். நிக்கோபாரிலிருந்து இந்தோனேஷியாவின் சபாங் தீவை பிரிக்கின்ற, ஆறு ®AK «êùTM என்றழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே இந்திய மற்றும் இந்தோனேஷிய கடற்படைகள் கூட்டாக ரோந்து பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த கால்வாய் சாதாரணமாக மலாக்கா நீரிணைக்குள் நுழைகின்ற அல்லது வெளியேறுகின்ற சர்வதேச கப்பல்கள் அனைத்தும் பயன்படுத்திக்கொள்வதாகும். மலாக்கா நீரிணைக்கும் அதற்கப்பாலும் தனது கடற்படை நடமாடவேண்டும் என்ற அதன் அபிலாஷைகளுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள இந்தியாவின் மூலோபாயம் மிக்க இராணுவ தளங்கள் மிக முக்கியமானதாகும். தீவில் இந்த இராணுவ நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்காக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் தலைவிதி தெளிவாக கடைசியாக கருதிப்பார்த்தலுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. |