:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Europe alarmed by US threats against Iran
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களால் எச்சரிக்கையடைந்துள்ள ஐரோப்பா
By Peter Schwarz
25 January 2005
Back to screen version
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தயாரிப்புகளை செய்து வருகின்றது என்ற செய்திகள்
ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களுக்குள் அச்சத்தை தூண்டிவிட்டிருக்கிறது.
அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப்படை பிரிவுகள் பல மாதங்களாக ஈரானில் செயல்பட்டு
விமானப்படை தாக்குதல்களுக்கான இலக்குகளை தேர்ந்தெடுத்து வருகின்றன மற்றும் அந்த நாட்டின் மீது ஒரு படையெடுப்பு
நடத்துவதற்கான சாத்திய கூறு உண்டு என்று அமெரிக்க பத்திரிகையாளர்
Seymour Hersh அண்மையில் நியூ யோர்கர் சஞ்சிகையில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் கட்டுரை அமெரிக்க புலனாய்வு உயர்மட்ட அதிகாரிகளை மூலதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
Harsh தகவல் துல்லியமில்லாதது என்று பென்டகன் மறுத்தாலும்,
அந்த மறுப்புகள் அரைகுறை மனதோடு வெளியிடப்பட்டவை. புஷ்ஷிடம் அந்தக் கட்டுரை பற்றி நேரடியாக கேட்கப்பட்டது,
ஈரானுக்கெதிராக ஒரு இராணுவ நடவடிக்கையை தாம் தள்ளிவிட முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, ஐரோப்பிய அரசியல் பிரதிபலிப்பு ஒரு அமைதிப்படுத்துவதாகவே
அமைந்துள்ளது. புருஸ்ஸல்ஸில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் ஈரானின் அணு தொழிற்கூடங்கள் மீது ஒரு தாக்குதலை நடத்துவது
ஒரு உண்மையான வாய்ப்பாக இன்றைய நிலவரத்தில் தெரியவில்லை, மற்றும் வாஷிங்டன் ஈராக்கில் இராணுவ அடிப்படையில்
தலையிட்டிருப்பது ஈரானுக்கெதிரான ஒரு நடவடிக்கையை சாத்தியக்கூறாகும் வகையில் அமைந்த நடவடிக்கையல்ல. இராணுவ
தேர்வு தள்ளிவிட முடியாதது என்று புஷ் வலியுறுத்தி கூறுவதை ஒரு அச்சுறுத்தலாக புரிந்துக்கொள்ளக் கூடாது, ஆனால் அது
வெறும் கற்பிதமானது, ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே எல்லா தேர்வுகளையும் தன் வசம் திறந்தே
வைத்திருக்கிறார். வாஷிங்டனில் ஊக செய்திகள் கூட நிலவுகின்றன என கூறுகின்றன. ஈரான் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்
நோக்கில் ஹேர்ஸக்கு அந்தத் தகவலை வாஷிங்டன் திட்டமிட்டே இரகசியமாக கசியவிட்டிருக்கிறது, அதன் மூலம் தடையின்றி
தெஹரான் அணுதிட்டத்தை கைவிட வேண்டுமென்று ஐரோப்பா செய்து கொண்டிருக்கும் சமரச இராஜதந்திர முயற்சிகளுக்கு
ஒரு வெற்றி கிட்டுவதற்கு உதவ முடியும்.
என்றாலும் பல ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஈரானுக்கெதிராக எந்த இராணுவ நடவடிக்கை
எடுப்பதிலும் இருந்து தங்களை மிகவும் தனிமைபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஹெர்ஸின் தகவலும் அமெரிக்க அரசாங்கத்தின்
அச்சுறுத்தலும் கடுமையாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றனர்.
ஏற்கனவே சென்ற நவம்பரில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ''ஈரானுக்கு
எதிராக இராணுவ நடவடிக்க்ைகளை நியாயப்படுத்தும்" எந்தச் சூழ்நிலையிலும் தான் கற்பனை செய்து கூட பார்க்க
முடியாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார். தற்போது, அவரது பேச்சாளர்களில் ஒருவர் "அத்தகைய ஒரு கொள்கை
எப்போதாவது இருக்குமானால், அத்தகைய கொள்கையை பிரிட்டன் ஆதரிக்கும் என்று" நினைக்கவியலாது என்று
கூறியுள்ளார்.
ஜேர்மனியில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி ஆகிய இருதரப்பையும் சார்ந்த பேச்சாளர்கள்
அமெரிக்காவின் நிலைப்பாட்டை தள்ளுபடி செய்திருக்கின்றனர். Gernot
Erler, சமூக ஜனநாயகக்கட்சி (SPD) வெளிவிவகார
நிபுணர் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், "ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தை கொள்கைக்கு வைக்கப்பட்ட
வேட்டு" என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் இந்த செய்தி தொடர்பாக பட்டும்படாமலும் மறுப்புகளை வெளியிட்டிருப்பது
குறித்து அவர் வியப்படைந்தார் மற்றும் அமெரிக்க நிர்வாகம் அதன் பயங்கரமான ஈராக் கொள்கையை விரிவுபடுத்த
முயன்றுகொண்டிருக்கிறது என்று அச்சம் தெரிவித்தார். பசுமை கட்சி தலைவரான
Claudia Roth அமெரிக்க அரசாங்கத்தின் திட்டங்கள்,
"எந்த வகையிலும் உதவுவதாக இல்லை, என்று விமர்சித்தார். அவற்றால் இந்த பிராந்தியம் முழுவதிலும் நிலவரம்
மோசமடையும் என்று எச்சரித்தார்" "இராஜதந்திர தீர்வுகள் நமக்கு தேவையே தவிர, படையின்
அச்சுறுத்தல்கள் அல்ல" என்று வலியுறுத்தினார்.
எதிர்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU)
வெளிவிவகார பேச்சாளர் Friedbert Pflueger,
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர முயற்சிகளை புஷ் ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது
நாடாளுமன்ற சகாவான Ruprecht Polenz "ஐரோப்பாவை
சேர்ந்தவர்கள், என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை மெளனமாக அமெரிக்கர்கள் கைகட்டி
பார்த்துக்கொண்டிராவிட்டாலே, நாங்கள் இன்னும் சற்று வேகமாக செல்வோம்" என்று கூறினார்.
ஹேர்ஸ் கட்டுரைக்கும் மேலாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் போர்
அச்சுறுத்தல்கள் படுபயங்கரமாக உள்ளன என்பதை பல்வேறு நிகழ்ச்சிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
புஷ் மறுதேர்தலுக்கு முன்னரே, ஜேர்மன் வாரப்பத்திரிகையான
Die Zeit வெளியிட்டிருந்த தகவலின்படி நவம்பர் துவக்கத்திலேயே நவீன-பழமைவாதிகள் தெஹ்ரானில்
ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டிருந்தனர். "முல்லாக்கள் பதவியை விட்டு சென்றாக வேண்டும்---
குண்டை செயலிழக்கச் செய்ய முடியாவிட்டால், தெஹ்ரானின் அதிகாரத்துவ கருவிகள் மாற வேண்டும் ஜோர்ஜ் புஷ் இந்தத்
தேர்தலில் வெற்றி பெறுவாரானால் இந்தத் திட்டம் விரைவில் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும்" என்று
Die Zeit வர்ணித்திருந்தது.
Die Zeit தந்துள்ள தகவலின்படி
அத்தகைய நடவடிக்கைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களில், "பென்டகன் அதிகாரிகள், மூலோபாயவாதிகள்
மற்றும் ஆதரவாளர்கள், அவர்கள் ஏற்கனவே சதாம் ஹுசேனுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்
மற்றும் வாஷிங்டன் உயர் மட்டங்களில் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளவர்கள் குறிப்பாக துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனியோடு
தொடர்புள்ளவர்கள்" அடங்குவர்.
குறிப்பாக, Die Zeit
ஒரு வலதுசாரி சிந்தனையாளரும் அமெரிக்க எண்டர்பிரைஸ்
இன்ஸ்டியூட்டை சார்ந்த 1980 களில் ஈரான் - கான்ட்ரா விவகாரத்தில் ஒரு பிரதான புள்ளியான மைக்கேல் லேடீன்
அதே போல் பென்டகன் அரசியல் திட்டமிடும் துறையின் தலைவரான டக்ளஸ் பெயத் ஆகியோரை குறிப்பிட்டிருக்கிறது. பெயத்
இஸ்ரேல் ஆட்சியோடும் நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார், அந்த ஆட்சியும் அதே போன்று தெஹ்ரானின் ஆட்சி
மாற்றத்தில் அக்கறை கொண்டிருக்கிறது. புஷ்ஷின் மறு தேர்தலினால் தாம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக இந்த வட்டாரங்கள்
உணர்கின்றன. Seymour Hersh
தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்திக் கூறியிருப்பதைப்போல், புஷ்ஷின் தேர்தல் வெற்றி "[ஈரான்
மீது], படையெடுக்க
வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட பென்டகன் சிவிலியன் தலைமையில் இடம் பெற்றிருக்கும் நவீன-பழமைவாதிகளது
நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது, இவர்களில் போல் வொல்போவிச், பாதுகாப்புத்துறை துணை செயலாளர் மற்றும்
டக்ளஸ் பெயத் பாதுகாப்பு கொள்கை துணைச்செயலாளர்". அடங்குவர்.
செனட் வெளிவிவகார குழுவில் பதவி நியமனத்தை உறுதி செய்வதற்கான விசாரணை
நடந்தபோது, வெளியுறவுத்துறை அமைச்சர் என தெரிவிக்கப்பட்டுள்ள கொண்டலீசா ரைஸ்சும் ஈரான் தொடர்பாக ஒரு
கடுமையான நிலையை அறிவித்தார். "ஏதாவது ஒரு புள்ளியில் சர்வதேச கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்ட அதன்
தவறுகளுக்கு பொறுப்பேற்குமாறு ஈரானை கேட்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார். அதே நேரத்தில், அவர் புஷ்ஷின்
''தீய அச்சு நாடுகளில்'' ஈராக், ஈரான் மற்றும் வடகொரியாவுடன்--- கியூபா, பர்மா, ஜிம்பாப்வே மற்றும்
பேலருஸை
சேர்த்து கொண்டார், அவற்றை "கொடுங்கோன்மையின் புறப்பகுதி" என்று கூறினார்--- இது அமெரிக்கா தனது
ஆக்கிரமிப்பு போக்கை உறுதியாக பின்பற்றி நிற்க கருதியிருக்கிறது என்பதற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
MSNBC தொலைக்காட்சி செய்திக்கு ஒரு
பேட்டியளித்த துணை ஜனாதிபதி செனி, ஈரான் "புதிய பலமான அணு திட்டங்களை'' அபிவிருத்தி செய்து வருவதாக
குற்றம்சாட்டினார், மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.
"உலகை சுற்றி பார்ப்போமானால் நெருக்கடிக்கான சாத்தியமான ஒரு இடம் என்று பார்த்தால் அப்போது அந்த பட்டியலில்
ஈரான் தலைமையில் நிற்கிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி புஷ் பதவியேற்பு விழா உரை அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள் கடுமையாக
எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சந்தேகங்கள் ஏதாவது மிச்சமிருக்குமானால் அவற்றையும் நீக்குகின்ற வகையில்
அமைந்திருந்தது. அமெரிக்க ஆயுதங்களை கொண்டு உலகம் முழுவதையும் "விடுவிக்கப்போவதாக" அவர் அச்சுறுத்தினார்.
இதன் பொருள் என்ன? என்பதை ஒவ்வொரு நாளும் ஈராக்கில் பார்க்க முடிகிறது, அங்கு அது "விடுவிக்கப்பட்டது" முதல்
1,00,000 திற்கு மேற்பட்ட மக்கள் மடிந்திருக்கிறார்கள். தனது நலன்களுக்கு ஒரு தடையாக உள்ளது என்று எந்த
நாட்டையாவது அமெரிக்கா கருதுமானால் அந்த நாட்டை அமெரிக்கா தாக்குவதில் இருந்து சர்வதேச சட்டம் அல்லது வேறு
இதர இடையூறுகள் எதுவும் தடுத்துவிட முடியாது என்பதை புஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரின் கட்சியான பசுமை கட்சியின் மத்திய தலைவரும்,
Reinhard Bütikofer,
புஷ் "விடுதலையின் பெரிய மதிப்பை தனது காலால் மிதித்து அழுக்கடைய வைக்கிறார்''
என்று குற்றம் சாட்டினார், "விடுதலையிலிருந்து குறைந்துவிட்ட ஒன்றுக்காக மகத்தான முழக்கமான விடுதலை ஒரு
கொள்கைக்காக கடத்தி செல்லப்பட்டிருக்கிறது." என்று அவர் மேலும் கூறினார்.
ஈராக்கில் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை தொடர்ந்து,
வாஷிங்டன் அமைதிக்கு அதிக நாட்டம் கொள்ளும் மற்றும் சமரசத்திற்கு கீழ் படியும் என்ற நம்பிக்கை முற்றிலும் தவறான
கணிப்பு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்டு விலங்கை சுற்றி வளைத்துவிட்டால் அது வெறி பிடித்து
செயல்படுவதைப்போல், புஷ் அரசாங்கம் கண்ணை மறைந்துவிட்ட கோபத்தினால் கண்டபடி தாக்குதல்களை
நடத்திவருகிறது.
இந்த வகையில், இப்போது அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை முடிவு செய்கின்ற வலதுசாரி
உட்குழுவின் மனப்போக்கிற்கும் ஹிட்லரின் நாஜி ஆட்சிக்குமிடையே குறிப்பிடத்தக்க சமாந்திரங்கள் உள்ளன. நம்பிக்கை
எதுவுமில்லை என்று தெளிவாக தெரிகின்ற நிலவரங்களில், ஹிட்லர் அடிக்கடி அனைத்தையும் பிரயோகித்து வெற்றி பெற்றார்.
சமரசமும் பின்வாங்குதலும் அவரின் விருப்பத்திற்கு ஒவ்வாதது. ஆக 1938 இல் முனிச்சில் அவர்
Sudetenland இன்
கட்டுப்பாட்டை வெற்றிகரமாக தன் கையில் எடுத்துக் கொண்டார், மற்றும் செக் நாட்டின் பாதுகாப்புகளை ஒரு துப்பாக்கிக்
குண்டை கூட வெடிக்காமல் முறியடித்தார். அது பிரிட்டீஷ் அமைதிப்படுத்தும் கொள்கையின் காரணமாக ஏற்பட்டதாகும்.
அந்த வெற்றி இரண்டாவது உலகப் போருக்கு வழியை திறந்து விட்டது. இறுதி முடிவு நீண்டகாலத்திற்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட
பின்னரும் கூட---- மூன்றாவது குடியரசு வீழ்ச்சியடைகிறவரை-- ஹிட்லர் அதே அணுகுமுறையை நிலைநாட்டி வந்தார்.
ஐரோப்பாவின் கையாலாகா தன்மை
அதிராகபூர்வமான ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரும்பாலோர், ஈரான்
மீது ஆயுதந்தாங்கிய தாக்குதல் நடத்துவதை சந்தேகத்திற்கு இடமின்றி புறக்கணித்தனர். ஒரு ஜேர்மனி செய்தி பத்திரிகை
கருத்து கூறியதைப்போல் இது, "ஐரோப்பியர்களுக்கு மட்டும் இது ஒரு சிம்ம சொப்பனகாட்சியாகாது." உலகிலேயே
எண்ணெய் உற்பத்தி செய்யும், மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான ஈரானோடு நெருக்கமான உறவுகளை
வைத்துக்கொண்டிருக்கின்ற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் இந்த பிராந்தியம் முழுவதன் ஸ்திரத்தன்மை குறித்து அஞ்சுகின்றன.
"ஈரான் தீப்பிழம்பாக எரியுமானால் அதிலிருந்து உருவாகின்ற ஒரு பாரிய நெருப்பு ஐரோப்பா வரை தொட்டுவிடும்".
என்று மற்றொரு செய்தி பத்திரிகை கருத்து கூறியுள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை வாஷிங்டனை கடுமையாக எதிர்க்கின்ற
வல்லமையில்லாதது. அப்படி செய்வதற்கு அது அமெரிக்க அரசாங்கத்திற்கு ஈரான் மீது ஒரு இராணுவ தாக்குதல்
நடத்துமானால் அதற்கு பதிலாக வார்த்தைகளில் அல்லாமல் செயலிலும் செய்து காட்டுவோம் என்று தெளிவுபடுத்த
வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச அளவில் பொருளாதாரத்தடைகளை விதிக்கவேண்டும், ஐரோப்பாவிலுள்ள
அமெரிக்க இராணுவ தளங்களை மூடவேண்டும் மற்றும் வெள்கை மாளிகையிலுள்ள வலதுசாரி உட்குழுவினர் தங்களது போர்
வெறி போக்கிலிருந்து திசை தடுமாறச் செய்வதற்கு தேவையான குறைந்தபட்ச பாதுகாப்பு தளவாடங்களை ஈரானுக்கு
தரவேண்டும்.
என்றாலும், ஐரோப்பிய அராசாங்கங்கள் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு
வல்லமையோ அல்லது விருப்பமோ இல்லாதவை. மாறாக அவை பிரிட்டிஷ் பிரதமர்
Chamberlain, 1938 இல் செக்கோஸ்லோவாக்கியா மீது
ஹிட்லர் வைத்த கோரிக்கைகள் மீது நடந்து கொண்ட முறையை போன்று செயல்படுகின்றன. அவர்கள் தெஹ்ரான், தானே
ஆயுதக்குறைப்பு செய்து கொள்ள ஏற்பதற்கு முயன்று வருகின்றன, அந்த வழியில் வாஷிங்டனை திருப்திபடுத்த நம்புகின்றன,
மற்றும் "அமைதியை'' பாதுகாக்க முடியுமென்று நம்புகின்றன. மாதக்கணக்கில், ஜேர்மனி, பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு
அமைச்சர்கள் ஈரானின் அணுதிட்டத்தை மூடுவது தொடர்பாக ஈரான் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்திவருகின்றனர்----என்றாலும்
சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஏற்பதான் அந்தத்திட்டம் நடைபெற்று வருகிறது.
ஈராக் அனுபவங்களுக்கு பின்னர் தெஹ்ரான் அத்தகைய வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளாது
என்ற உண்மை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதுதான். இப்போது, தெளிவாக தெரிந்திருப்பதைப்போல் முதல்
வளைகுடா போருக்கு பின், பாக்தாத் ஆயுதக் குறைப்பு பற்றிய வாஷிங்டனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது மற்றும்
தனது ஆயுதங்களில் ஒரு பெரும்பகுதியை அழித்துவிட்டது. இந்த சம்பவத்தில் ஐரோப்பிய அரசாங்கங்களும் பாரிய
அழுத்தத்தை கொடுத்து அந்த நாட்டிற்கு எதிரான தடைகளை ஆதரித்தன. ஆனால் இது அமெரிக்காவை ஈராக் மீது
தாக்குதல் நடத்தி வென்றெடுத்ததை தடுக்க முடியவில்லை. பேரழிவுகரமான ஆயுதங்கள் என்று அழைக்கப்பட்டவை ஒரு
சாக்கு போக்காகத்தான் சேவை செய்தன. உண்மையான குறிக்கோள், ஒரு பொம்மையாட்சியை உருவாக்குவதும் ஈராக்கை
அமெரிக்காவின் ஒரு அரை-காலனித்துவமாக மாற்றுவதும்தான்.
இதுவே ஈரானுக்கும் பொருந்துகிறது. இந்த வகையில் அமெரிக்காவின் நவீன-பழமைவாதிகள்
தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் தொடர்பாக பகிரங்கமாக பேசுவதன் மூலம் குறைந்தபட்சம் அதிக நேர்மை
கொண்டவர்களாக உள்ளனர். 1953 இல் CIA ஆதரவுடன்
நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்த ஷாவின் இரத்தக்களரி சர்வாதிகாரத்தில் 26 ஆண்டுகள், சிக்கித்தவித்த
ஒரு நாட்டில் அமெரிக்காவிற்கு கீழ்படிந்து நடக்கின்ற ஒரு ஆட்சி திரும்பவும் உருவாக்கப்படவேண்டும்.
ஐரோப்பிய அரசாங்கங்கள் அமெரிக்காவின் கொள்கையை பகிரங்கமாக எதிர்க்கவில்லை,
ஏனென்றால் அவை அதன் குறிக்கோள்களை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்கின்றன. ஈரானின் சுயநிர்ணய உரிமை மற்றும்
இறையாண்மை பற்றி அவர்களுக்கு கவலையில்லை ஆனால் இந்த பிராந்தியத்தில் அவர்களது சொந்த நலன்கள் குறித்து கவலைப்படுகின்றனர்,
அவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் ஆபத்துக்கு உள்ளாவதை காண்கின்றனர்.
ஈரான் தொடர்பான தகராறு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையே அதற்கெல்லாம்
மேலாக ஜேர்மனியுடனும் பிரான்சுடனும் உருவாகிக்கொண்டிருக்கிற மோதல் போக்குகள் மிகவும் பகிரங்கமாக வெளிவந்து
கொண்டிருப்பதை காட்டுகின்றன.
அண்மையில் பிரெஞ்சு பத்திரிகையான
politique étrangère சுட்டிக்காட்டியுள்ளதைப்போல் மத்தியதரைக்கடல் முழுவதிலும் மத்திய
கிழக்கிலிருந்து மொரோக்கோ வரை--- அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றையொன்று பெருமளவிற்கு எதிரிகளாக
எதிர்கொள்கின்றன. "மத்திய தரைக்கடல் பகுதியில் புதிய மோதல்"? என்ற தலைப்பில் அந்த பத்திரிகை எழுதியுள்ள
கட்டுரையில், முடிவுரை பகுதி கூறுவதாவது - இந்த பிராந்தியத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஐரோப்பியர்களும்
அமெரிக்கர்களும் ஒரே வகையான ஆய்வுகள் செய்தாலும் மற்றும் அதே குறிக்கோள்களை கொண்டிருந்தாலும் -
பொருளாதார மற்றும் அரசியல் தாராளவாதத்தை எடுத்து வைத்தாலும்---- பொருளாதார முயற்சிகள் தனித்தனியாக
மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் அதன் விளைவுகள் மோதலுக்கு இட்டுச்செல்லும் வல்லமை கொண்டவை.
இந்த பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பிற்கு ஐரோப்பிய மேற்கொண்டுள்ள முயற்சிகள்,
1995 "பார்சிலோனா நிகழ்ச்சிப்போக்கை'' போன்று 1998ல் அமெரிக்கா மேற்கொண்ட "இயன்சென்சாட் முயற்சி''
(Einzenstat Initiative) போன்ற திட்டங்களுக்கு
போட்டியாக உள்ளது. அப்போது மேக்ரப் ஒருங்கிணைப்பிற்கு அமெரிக்கா ஒரு திட்டத்தை தாக்கல் செய்தது. இப்போது
அமெரிக்க மேலாதிக்கத்தில், இந்த பிராந்தியத்தை மறுசீரமைப்பதற்கு "பாரிய மத்திய-கிழக்கு`` என்ற திட்டத்தை
உருவாக்கியுள்ளது, இது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா முழுவதையும் உள்ளடக்கியதாகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்கள் உலகின் இதர பிராந்தியங்களில் பெருமளவில்
மோதிக்கொள்கின்ற நிலையில் உள்ளன, முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துவிட்ட அரசுகளை போன்றவை, ரஷ்யாவுடனோ,
சீனாவுடனோ தங்களது அணுகமுறை தொடர்பாகவும், நிதி மற்றும் தொழிற்துறை கொள்கை தொடர்பாகவும்,
பெருமளவில் அமெரிக்க நலன்களோடு மோதுகின்ற போக்கை கொண்டிருக்கின்றன.
இதற்கு உதாரணம் Toulouse
நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஏர்பஸ் 380, இந்த புதிய விமானம் மூலம் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக அமெரிக்காவின்
போயிங் 747 பெரிய நீண்ட தொலைவு ஜெட் விமான ஏகபோக விற்பனைக்கு அறைகூவல் விடுகிற வகையில் ஐரோப்பிய
உருவாகியுள்ளது. ஏர்பஸ் 380 கணிசமான அளவிற்கு பெரிதானது மற்றும் சிக்கனமானது, அமெரிக்காவின் போட்டி விமானத்தைவிட
அதிக தூரம் செல்லக்கூடியது.
அந்த விமானம் பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஜேர்மன் அரசு தலைவர்கள் முன்னிலையில்
அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த நிகழ்ச்சியில் ஜேர்மன் அதிபர் ஷ்ரோடர் ஈராக் போரின் போது அமெரிக்கா பயன்படுத்திய
வாதங்களை பகிரங்கமாகவே குறிப்பிட்டார். அந்த நேரத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர்
ரம்ஸ்பெல்ட், "பழைய", மற்றும் "புதிய" ஐரோப்பாக்களுக்கிடையில் நிலவுகின்ற வேறுபாடுகளை பெரிதுபடுத்திக்
காட்டினார். "பழைய ஐரோப்பாவின் பாரம்பரியமிக்க சிறந்த ஒத்துழைப்பு, நியாய உணர்வு சமூக உணர்வு ஆகியவற்றின்
காரணமாக, ஏர்பஸ் 380 திட்டம் ஒரு வெற்றியை தந்திருக்கிறது". என்று சிரித்துக்கொண்டே ஷ்ரோடர் கூறினார்.
உலக பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக பெரிய
நிறுவனங்கள் சந்தைகளுக்காகவும் மூலப்பொருட்களுக்காகவும், மலிவு ஊதிய தொழிலாளர்களுக்காகவும்,
போராடிக்கொண்டிருப்பதன் விளைவுதான் இப்போது அட்லாண்டிக் மகாசமுத்திரத்திற்கு இந்தப்பக்கம் பெருகிவருகின்ற பதட்டமாகும்.
நவீன உற்பத்தியின் பூகோள தன்மைக்கு முதலாளித்துவ சமுதாயம் அடித்தளமாக உள்ள தேசிய அரசு கட்டுக்கோப்பிற்குமிடையில்
நிலவுகின்ற முரண்பாடுகளை முதலாளித்துவத்திற்குள் தீர்த்துவைப்பதற்கு ஒரேவழி பலாத்காரமுறையில் உலகை பங்கிடுவது
மற்றும் மறுபங்கிடுவது ஆகிய நடவடிக்கைகளில் பெரிய வல்லரசுகள் இறங்குவதுதான். இதுதான் முதலாவது மற்றும் இரண்டாவது
உலகப்போர்களுக்கான காரணமாகும் மற்றும் இதுதான் இன்றையதினம் ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையில் ஆழமாகிக்கொண்டிருக்கிற
பதட்டங்களுக்கு காரணமாகும்.
இது உற்பத்தி செய்கிற போர் ஆபத்தை, ஒரு வல்லரசை மற்றொரு வல்லரசிற்கெதிராக
ஆதரிப்பதன்மூலம், அதிக ஆக்கிரமிப்புத்தன்மையுள்ள நாட்டிற்கெதிராக ''அதிக அமைதி'' நாட்டம் கொண்ட நாட்டை
ஆதரிப்பதன்மூலம், அமெரிக்காவிற்கு எதிராக ''பழைய ஐரோப்பாவை,'' ஆதரிப்பதன் மூலம் எதிர்த்து நிற்க
முடியாது. ஏகாதிபத்தியத்திற்கும், போர் ஆபத்திற்கும் எதிரான போராட்டத்தை நடத்துவதற்கு சர்வதேச அளவிலான
தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையின் அடித்தளங்களுக்கெதிராக ஒரு சோசலிச வேலைதிட்ட அடிப்படையில்
ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டம் நடத்தப்படுவது அவசியமாகும். |