World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: வட அமெரிக்காBush's second inaugurationAmerica's day of shameபுஷ்ஷூடைய இரண்டாவது பதவியேற்பு விழா அமெரிக்காவுக்கு வெட்கக்கேடான நாள் By David Walsh அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை மேலாதிக்கம் செலுத்தும் தனது முயற்சியை முன்னெடுத்து செல்ல எண்ணியிருக்கிறது என்று உலகிற்கு முன்னறிவிப்பு கொடுக்கும் முறையில் ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் நேற்று தனது பதவியேற்பு விழாவில் உரையாற்றினார். அமெரிக்க ஜனாதிபதி ஆயுதங்களுக்கும் ஒரு ஜிகாத்திற்கும் அழைப்பு விடுத்தார், அதன் மூலம் அமெரிக்காவின் வழியில் குறுக்கிடுவதற்கு எந்த நாட்டையும் அல்லது அரசாங்கத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதை தெளிவுபடுத்தினார். இந்த உரையில், புஷ் மற்றும் ஆளும் செல்வந்தத்தட்டில் இடம் பெற்றுள்ள எந்த சக்திகளுக்காக அவர் குரல் கொடுக்கிறாரோ அவர்களிடையே, ஈராக் பேரழிவு அல்லது வாஷிங்டனின் இராணுவவாதத்திற்கு எதிரான சர்வதேச வெகுஜன எதிர்ப்பு, புதிய நிர்வாகம் தனது பிற்போக்குத்தனமான குறிக்கோள்களை கடைப்பிடிப்பதில் தயக்கத்தை உண்டுபண்ணும் என்று நிலவும் எந்தவித மாயையையும் நீக்குகின்ற வகையில் அமைந்திருந்தது. உண்மையான வடிவத்திற்கு ஏற்ப புஷ் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு கருத்துக்களையும் பொய்களையும் அபத்தங்களையும் தனது உரையில் குறிப்பிட்டார். அவர் பொருத்தமான வாதத்தை எழுப்பவில்லை, ஆனால் சில முக்கிய சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார், ''சுதந்திரத்தை காக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்கு உலகின் எந்த இடத்திலும் அமெரிக்கா தலையிடுவதற்கு கடவுள் தந்த கட்டளைபற்றி மையப்படுத்தி பேசினார். அவர் 20 நிமிடம் உரையாற்றினார், அதில் "சுதந்திர" அல்லது "சுதந்திரம்" என்ற வார்த்தைகளை 34 முறையும், "விடுதலை" என்ற வார்த்தையை மேலும் 12 முறையும் குறிப்பிட்டார். "சுதந்திரம்" என்ற சொல்லை இப்படி அபத்தமாக அவர் திரும்ப திரும்ப சொல்லியதாலும், நிச்சயமாக அவரது முதலாவது நிர்வாகத்தில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மற்ற இடங்களிலும் புரிந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அந்தக் குற்றங்களை எதிர்ப்பவர்கள் எவரையும் ஏமாற்றிவிட முடியாது. புஷ், துணை ஜனாதிபதி டிக் சென்னி மற்றும் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளவர்கள் இடுப்பளவு ரத்தத்திலும், சாக்கடையிலும் நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் 100,000 திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை கொல்வதற்கு பொறுப்பானவர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க போர்வீரர்கள் சாவிற்கும் உடல் ஊனங்களுக்கும் காரணமாக இருந்தவர்கள். அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் ஈராக் மக்களுக்கும் மற்றும் உலகிலுள்ள இதர மக்களுக்கும் எத்தகைய "சுதந்திரத்தை" உள்ளத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் குவாண்டாநாமோ, அபுகிரைப், மற்றும் பலூஜாவில் விளக்கிக் காட்டிவிட்டனர்: அடக்குமுறை, சித்திரவதை, இராணுவ ஆக்கிரமிப்பு ஒட்டுமொத்த நகரங்கள் அழிப்பு ஆகியவையாகும். நாஜி ஜேர்மனியும் ஏகாதிபத்திய ஜப்பானும் கூட ஐரோப்பா மற்றும் ஆசிய மக்களை, "விடுவிப்பதாகத்தான்" உறுதிமொழி அளித்தன. புஷ் உரையின் விசித்திரமான அர்த்தம் கொண்ட பிற்போக்குத்தனத்தை அது வெளியிடப்பட்ட சூழ்நிலையிலிருந்து பிரித்துப் பார்த்துவிட முடியாது. இராணுவவாதம் மற்றும் போரை நியாயப்படுத்துவதற்கு தொடர்ந்து புஷ் கூறி வருகின்ற சுதந்திரம் அவரது துவக்கவிழாவில் காணாமல் போய்விட்டது தெளிவாகத் தெரிந்தது. நாட்டின் தலைநகரில் இராணுவச்சட்டம் திணிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. கண்டனம் தெரிவித்த ஆயிரக்கணக்கானோர் போலீஸ் படையினால் கண்ணுக்கு மறைவாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பை புஷ் மீண்டும் உறுதிப்பட கூறிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பதாகையை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று ஒரு போலீஸ்காரர் கூறி கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அவர் தனது உரையை பூர்த்தி செய்யும்போது, தொலைக்காட்சி காமிராக்கள் கண்டனம் செய்து கொண்டிருந்தவர்களை காட்டின, அவர்களில் துணிவாக புஷ்ஷின் உரைகளை எதிர்த்து பரிகாசக்குரல் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பதவியேற்பு விழாவில் தலைமை தாங்கிய மிசிசிப்பி செனட்டர் Trent Lott ஆவார். 2002-ல் செனட் பெரும்பான்மை தலைவராக இருந்த இவர், 1948 ஜனாதிபதி தேர்தல் பிரசாசாரத்தில் இன ஒதுக்கல் வேலைத்திட்டத்தில் மாநில உரிமைகள் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட Strom Thurmond ஐ, புகழ்ந்துரைத்ததற்காக அந்தப்பகுதியிலிருந்து மிக இழிவான முறையில் பதவி விலகுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார். பதவியேற்பு விழா நிகழ்ச்சிகளில் குறிப்பாக "மிஸிசிப்பியின் செல்வாக்கு" சக்திவாய்ந்ததாக இருந்தது என்று ஒரு செய்தி விமர்சகர் குறிப்பிட்டார். இந்த விழா முழுவதிலும் கிறிஸ்துவ வலதுசாரியின் வெறுக்கத்தக்க ஆதிக்கத்தை உணர முடிந்தது. வழிபாடுகளும் வழிபாட்டு பாடல்களும் இறைவனுக்கு புகழ்பாடுவதும் நிறைந்திருந்தது. அமெரிக்க மக்களிடையே அச்சம் மற்றும் கலவர உணர்வை ஏற்படுத்தும் மற்றொரு வாய்ப்பாக புஷ்ஷின் உரை அமைந்திருந்தது. அவர் "உலகின் பிராந்தியங்கள் முழுவதிலும் எதிர்ப்புணர்வும் கொடுங்கோன்மையும் கொதிக்கும் நிலையில் இருப்பதாக" குறிப்பிட்டார், உண்மையென குறிப்பாக அவர் மத்திய கிழக்கை குறிப்பிடுகிறார். இதில் இந்த பிராந்தியங்களை புஷ் கொந்தளிக்கும் பகுதிகளாக மாற்றிவிட்டார். அவர் அந்தப் பிராந்தியத்தில் கொடுங்கோன்மை ஆட்சிகளை ஆதரிப்பதன் மூலமும் ஈராக் மீது படையெடுத்ததாலும் அந்த பிராந்தியங்களில் வாஷிங்டன் மீது வெறுப்புணர்வு கொதிக்கும் நிலையில் வளர்ந்து---- அமெரிக்க மக்களுக்கு "உயிர் பறிக்கும்" அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. 9/11-க்கு பின்னர் ஒரு மையமான கருத்து என்னவென்றால், உலகம் முழுவதிலும் ''சுதந்திரத்தை'' பரப்புவதற்கு அமெரிக்காவிற்கு இறைவன் தந்துள்ள கட்டளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்போடு பொருந்திப் போகிறது. அல்லது அவரது உரையின் அலங்கார சொற்களை நீக்கிவிட்டு அவரது வார்த்தைகளை வெளிப்படையாக சொல்வதென்றால், அமெரிக்க மக்கள் கொல்ல வேண்டும், அல்லது கொல்லப்பட வேண்டும். "கம்யூனிஸ்ட் கப்பல் நொருங்கிய" பின்னர் பல ஆண்டுகள் அமைதியும் சாந்தமும் நிலவியது மற்றும் அது 2001 செப்டம்பர் 11-ல் பயங்கரவாத தாக்குதல்களால் திடீரென்று சீர்குலைந்தன----அதை ஓரளவிற்கு பைபிள் பாணியில் "தீ பிடித்த நாள்" என்று அவர் கூறினார். தற்போது உலகம் முழுவதிலும் சுதந்திரம் விரிவடைவதுதான் உலகின் சமாதானத்திற்கு தலைசிறந்த நம்பிக்கை'' என்று நாம் புரிந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார். புஷ் சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, ஆனால் அவை அவர் கூறியுள்ள பாணியில் அமைந்திருக்கவில்லை. 1980-களின் கடைசியிலும் 1990களின் தொடக்கத்திலும் USSR-லும் கிழக்கு ஐரோப்பாவிலும், ஸ்ராலினிசம் சிதைந்தது அமெரிக்காவின் நடப்பு ஆக்கிரமிப்பு வெடிப்பிற்கு மேடை அமைத்துக் கொடுத்தது. சோவியத் ஒன்றியம் முடிவிற்கு வந்தது அமெரிக்காவின் ஆளும் செல்வந்தத்தட்டினரை பொறுத்தவரை, அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதை இராணுவ வலிமையை பயன்படுத்துவதன் மூலம் சரிக்கட்டுவதற்கு ஒரு வாய்ப்பை தந்தது. புஷ் நிர்வாகம் இந்த புதிய கொள்கையின் மறைக்கப்பட்டுவிட்ட வெளிப்பாடுதான், இதை நிறைவேற்றுவதற்கு செப்டம்பர் 11 சம்பவங்கள் வெறும் சாக்குபோக்கை உருவாக்கி தந்தன. புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய திட்டத்தின் ஏமாற்றுத்தன்மையை ஒட்டி அவரது பதவியேற்பு விழா உரை பீதி உணர்வையும் ஏன், பைத்தியக்காரத்தனத்தையும் வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த அரசாங்கம் இடைவிடாது திட்டமிட்டு அச்சத்தையும் ஆவேச உணர்வையும் விதைப்பதற்கு முயன்று வருகிறது. ஆனால், அந்த நிர்வாகத்திற்குள்ளேயே அதன் மனப்பான்மை மிகுந்த விரக்தியான மற்றும் சித்த பிரமை நோக்கி செல்கிறது. தன்னை உந்தித்தள்ளி மூழ்கடிக்க அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற சக்திகளை தடுத்து நிறுத்தி பின்னோக்கி தள்ளுவதற்கு ஒரு குறைந்த வாய்ப்புதான் உள்ளது என்று அமெரிக்காவின் ஆளும் செல்வந்தத்தட்டினர் நம்புகிறார்கள். "கொடுங்கோன்மைக்கு நமது உலகில் முற்றுப்புள்ளி வைப்பதுதான்'' தற்பொழுது ''நமது காலத்தில் இப்போது மேற்கொள்ள வேண்டிய பணி" என்று புஷ் அறிவித்துள்ளார். இதை ஒரு ஆபத்தான எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஈராக் படையெடுப்பு ஒரு முன்னுரைதான். புஷ்ஷின் பதவியேற்பு விழா உரை கொள்கைவழி தாக்கங்கள் எதுவுமில்லாத வெறும் சொல் அலங்காரம் என்று ஊடக விமர்சனங்களில் பெரும்பகுதி தள்ளுபடி செய்துவிட்டது. புஷ் நிர்வாகத்தின் செயலுக்கும் 1930களின் கடைசியில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்நோக்கிய பொருளாதார நிலைப்பாடு மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்ற நேரத்தில் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பெரும் தடுமாற்றத்திற்குமிடையே நமது கவனத்தை ஈர்க்கும் ஒற்றுமைகள் உள்ளன. புஷ் ஆயுதங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதன் புறநிலை பின்னணியில் இருப்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் பாரியளவு பட்ஜெட் மற்றும் வர்த்தக பற்றாக்குறைகள், அமெரிக்க டாலர்கள் மதிப்பு மிக ஆழமாக வீழ்ச்சியடைந்து கொண்டு வருவது மற்றும் நிலைநாட்ட முடியாத அளவிற்கு பெருகிவரும், ஒரு பொருளாதார கட்டமைப்பு ஆகியவை அதற்குப் பின்னணியில் உள்ளன. அவரது வார்த்தையை எடுத்துக்கொண்டு "சுதந்திர விரிவாக்கம்" என்பதை நாம் புரிந்துகொண்டால் அது ஆக்கிரமிப்பிற்கு ஒரு இரகசிய சொல்லாகும், புஷ் நேற்று உலகம் முழுவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத ஒரு இராணுவவாதக் கொள்கையை கோடிட்டுக்காட்டினார். ஈரானுக்கு எதிரான போர் முன்னேற்பாடுகளை நியூ யோர்க்கரில் ஏற்கனவே Seymour Hersh அம்பலப்படுத்தியுள்ளார். இந்த வாரம், செனட் வெளியுறவுகள் குழுவில் தனது பதவியை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான விசாரணையில் துவக்க உரையாற்றிய புஷ்ஷின் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கொண்டலீசா ரைஸ், அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல் பட்டியலில் முதன்மை இடத்திலுள்ள நாடுகளை பட்டியலிட்டார். ரைஸ் "கொடுங்கோன்மையின், காவல் சாவடிகள்" என்று சுட்டிக்காட்டியது, வடகொரியா, ஈரான், கியூபா, பேலாரஸ், ஜிம்பாப்வே, மற்றும் பர்மா ஆகியனவாகும். வெனிசுலா மற்றும் சிரியாவிற்கெதிராக அச்சுறுத்தல் பிரச்சனையும் எடுத்து வைத்தார். தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா கண்டங்களில் புஷ் நிர்வாகம் நாச வேலைகள் மற்றும் இராணுவ தலையீடு கொள்கையை விரிவுபடுத்த முன்மொழிந்திருக்கிறது. அரசாங்கங்களை கவிழ்ப்பது மற்றும் அதன் எல்லைகளில் படையெடுப்பது ஆகியவற்றிற்கு அமெரிக்காவிற்குள்ள உரிமைக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை ஜனாதிபதி தமது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டார். நாடுகளின் இறையாண்மை ஐ.நா-வின் பங்களிப்பு, ஒப்பந்தங்களின் அதிகாரபூர்வமான தன்மை, சர்வதேச சட்டத்திற்கு தேவைப்படுபவை ஆகியவை பற்றி வாய்ச்சொல் ஆதரவு கூட தெரிவிக்கப்படவில்லை. "சுதந்திர நாடுகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவது (அதாவது வாஷிங்டன் கட்டளைகளுக்கு பிளவை ஏற்படுத்துவது) தான், சுதந்திரத்தின் எதிரிகளின் பிரதான குறிக்கோள்" என்று அவர் அமெரிக்காவின் நட்பு நாடுகளை எச்சரித்தார். புஷ் "உலக மக்களை" நோக்கி உரையாற்றினார், அவர்களை "ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதாக உறுதியளித்தார். ஆனால் உலக மக்களில் மிகப்பெரும்பான்மையினர் ஏற்கனவே அவரை புரிந்து கொண்டிருக்கின்றனர். "மிகப்பெரும்பாலான தகவல்களின்படி ஜனாதிபதி புஷ் ஏறத்தாழ உலகம் முழுவதிலும் வெறுக்கப்படுகிறார், அவர் மீது உலகம் முழுவதிலும் கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது.... திரு. புஷ், வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவிற்கு மக்களால் விரும்பப்படுகிற தலைவராக இருக்கக்கூடும்" என்று கிறிஸ்டியன் சையின்ஸ் மோனிடர் குறிப்பிட்டிருக்கிறது. சர்வதேச கொள்கை அணுகுமுறை திட்டம் சென்ற ஆண்டு கடைசியில் வெளியிட்ட அறிக்கையின்படி, 32 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மக்களில் 5 பேரில் ஒருவர்தான் ஜனாதிபதி புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை'' ஆதரித்தனர். 2004 நடுவில் நடத்தப்பட்ட Zogby கருத்துக்கணிப்பில் அமெரிக்காவின் ஜனநாயக சிலுவைப்போரில் மத்திய கிழக்கில் பயனடைந்ததாக-----கருதப்பட்டவர்களில் அமெரிக்காவிற்கு ஆதரவாக உள்ள அரபு மக்களின் எண்ணிக்கை, ஆய்வு நடத்தப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் திடீரென்று படுவீழ்ச்சி கண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட எகிப்து மக்களில் 98 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு எதிரான கருத்தைத் தெரிவித்தனர். மற்றொரு ஆய்வு ஜோர்டான், மொராக்கோ, பாக்கிஸ்தான், துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் பெரும்பாலான மக்கள் வாஷிங்டன் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்'' நடத்துவது மத்திய கிழக்கில் எண்ணெய் வளத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு உலகில் ஆதிக்கம் செலுத்துவதற்குத்தான் என்று நம்புகின்றனர். அல்லது புஷ் அமெரிக்காவிலேயே தனது முடிவற்ற போருக்கும் பிற்போக்குத்தனத்திற்கும் எந்த கட்டளையும் பெற்றிருக்கவில்லை. போர் மற்றும் பயங்கரவாதம் குறித்து ஆவேச உணர்வை கிளப்பிவிட்டு மிகக்குறைந்த வாக்குகளில் அவர் வெற்றி பெற்றார், மற்றும் மக்களிடையே நிலவிய அரசியல் குழப்பத்தையும் ஜனநாயகக்கட்சியின் கையாலாகாத செயல்பாட்டையும் சுரண்டிக்கொண்டார். கடந்த அரை நூற்றாண்டுகளில் மறுதேர்தலில் கலந்து கொண்ட ஜனாதிபதிகள் எவருக்கும் இல்லாத அளவிற்கு மக்கள் படுமோசமான அளவிற்கு குறைந்த செல்வாக்கை புஷ்ஷிற்கு பதித்துள்ளனர். திடமான மற்றும் பெருகிவரும் பெரும்பான்மையினர், அவர் ஈராக் மீது படையெடுத்தது ஒரு தவறு என்று நம்புகின்றனர். சமூகப் பாதுகாப்பு அல்லது வரிவிதிப்பில் தீவிர மாற்றங்களை செய்வதில் அவருக்கு வெகு ஜன ஆதரவு இல்லை. அமெரிக்காவின் நிலவரம் குறித்து, "தனது சக குடிமக்களை" நோக்கி அவர் ஆற்றிய உரை அதற்கு முன்னர் அவர் பேசியவற்றுள் இருந்த அளவிற்கு கூட கோர்வையில்லாமல் அமைந்துவிட்டது. சில நேரங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. நாட்டில் நிலவுகின்ற கசப்பான பிளவுகளைபற்றி போகின்ற போக்கிலும் குறிப்பிட்டு பேசியும், நாட்டில் நிலவுகின்ற வறுமை, மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமை, பரவலான மக்கள் பிரிவுகளை ஒடுக்கிக்கொண்டிருக்கிற கடன்சுமை ஆகியவை பற்றி திட்டவட்டமாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. "ஒரு சில அமெரிக்கர்களின்" இலட்சியவாதம் பற்றி பேசினார், அதாவது அவர்கள் வேவு பார்ப்பவர்கள், படையெடுப்பவர்கள் மற்றும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதில் சம்பந்தப்பட்டவர்கள். "நமது போர் வீரர்களின் கடமை உணர்வு விசுவாசம் ஆகியவற்றை, உறுதிமிக்க அவர்களது முகங்களிலிருந்து" பார்த்து இளைஞர்கள் ஊக்கம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார். "அமெரிக்க சுதந்திரப் பணியை" முடித்து வைப்பதற்கு துணிவும் இலட்சியவாதமும் கொண்டவர்கள் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாக புஷ் கூறினார். அந்தப்பணி என்ன என்பதை அவர் விளக்காமல் விட்டுவிட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களை, தனியார்மயமாக்குவது குறித்து அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். "சொத்துடைமை சமுதாயத்தை" கட்டியெழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்---- இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்த சமூகத்தில் செல்வந்தத்தட்டினரின் சொத்து தொட முடியாதது, அதே நேரத்தில் மக்களில் மற்றவர்கள் தங்களுக்கு தாங்களே தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். புஷ் கவர்னராக, டெக்ஸாசில் பணியாற்றியபோது 152 பேர் தூக்கலிடப்பட்டதற்கு தலைமை வகித்தவர், தனிப்பட்ட முறையில் அவர் பிறரை கொடுமைப்படுத்தி இன்பம் காண்பது அனைவரும் அறிந்தது. அவர் "கருணையின் சிறப்புகள் பற்றி வானளாவப் பாராட்டினார் மற்றும் பலவீனமான ஒரு இதயம்" வேண்டும் என்றார். "அமெரிக்கா, இந்த இளைய நூற்றாண்டில், உலகம் முழுவதற்கும் விடுதலையை பிரகடனப்படுத்துகிறது, மற்றும் அங்கெல்லாம் வாழ்கிற எல்லா மக்களுக்கும் அதை அறிவிக்கிறது" என்று அவர் முடித்தார். உலகத்தில் குடியிருக்கும் மக்களே எச்சரிக்கை ! கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்துவிட்டது அனைத்தையும், பார்க்கும்போது, ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்டது அமெரிக்க வரலாற்றிலேயே மிக ஆழமான வெட்கக்கேடான சம்பவமாகும். இந்த நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களின் மேல் குற்றச் செயல் முடை நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. புஷ்ஷிற்கு வரவேற்பு தந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவர்கள் ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்தனர்: அவர் மக்களில் மிகவும் பிற்போக்கான மற்றும் அறியாமையிலுள்ள பிரிவுகளுக்காகத்தான் அவர் பேசுகிறார். அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினரிடம் அமெரிக்க முதலாளித்துவத்தில், நிலவும் முரண்பாடுகளுக்கு ஒரு அறிவுபூர்வமான அல்லது முற்போக்கான தீர்வு எதுவும் இல்லை, அது, போதைப்பொருட்களை புகைத்துக்கொண்டு, கண்ணை மூடி பேரழிவு நடப்பதை கண்டுகொள்ளாமல் தார்மீக ஒழுக்கத்திலும் அறிவுஜீவித்தனத்தில் பூஜ்ஜியமான ஜோர்ஜ் டபுள்யூ.புஷ்ஷை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறது. புஷ் மற்றும் அவரது நிர்வாகத்தின் கொள்கைகள் மீது அமெரிக்க மக்களுக்கு இருக்கும் மகத்தான எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு உண்மையான அரசியல் குரல் தேவை. செனட்டர் ஜோன் கெர்ரி உட்பட ஜனநாயகக்கட்சியின் முன்னாள் மற்றும் இன்றைய தலைவர்கள் மீது, எந்தவிதமான மாயையும் மனதில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை, நேற்று பதவியேற்பு விழாவில் அவர்கள் கீழ்ப்படிந்து கலந்து கொண்டார்கள். புஷ்ஷிற்கு உள்ள மகத்தான மற்றும் உள்ளார்ந்த எதிர்ப்பை ஐக்கியப்படுத்தப்பட வேண்டும், இன்றைக்கு இருக்கும் ஒட்டு மொத்த சமூக-பொருளாதார அடித்தளத்திற்கும் எதிராக அது திருப்பிவிடப்பட வேண்டும். |