World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சுனாமி பேரழிவு

Sri Lanka: the day the tsunami devastated Hambantota

இலங்கை: சுனாமி ஹம்பந்தொட்டையை அழித்த நாள்

By a correspondent
17 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 26 சுனாமியால் மிகவும் மோசமாகப் பாதிப்புக்குள்ளான, கொழும்பிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் இலங்கையின் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஹம்பந்தொட்டை நகரவாசியொருவரின் அனுபவத் தொகுப்பே இந்த கட்டுரை. இந்த மாவட்டம் இலங்கையின் மிக வறிய மாவட்டங்களில் ஒன்றாகும். கட்டுரையாளர் உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் விபரிப்பதோடு அரசாங்க உதவிகளின் குறைபாடுகள் மற்றும் தற்போது பிரதேசவாசிகள் முகம் கொடுக்கும் நெருக்கடிகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளார்..

டிசம்பர் 26 அன்று, வெய்யிலான காலைப் பொழுதில் சுமார் 9.00 அல்லது 9.15 மணியளவில் திடீரென சூழல் மட்டுமீறிய வாகன ஹோர்ன் சத்தத்தால் நிறைந்துபோனது, வாகனங்கள் அலறிக்கொண்டு விரைந்தன, மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலைமையை இதற்கு முன்னர் அனுபவித்திருக்காமையினால் முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன். பிரமாண்டமான கடல் பேரலைகள் ஹம்பாந்தோட்ட நகர பிரதேசத்தை தாக்கியிருப்பதாகவும் உயிர்களையும் உடமைகளையும் இழுத்துச் செல்வதாகவும் ஓடிக்கொண்டிருந்தவர்கள் கூறினார்கள். எனது வீடு 12 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் அலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.

பெரும்பாலான மக்கள், கிழமைக்கான மரக்கறிகள், அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக ஞாயிறு சந்தைக்கு சென்றிருந்த தமது குடும்ப அங்கத்தவர்கள் பற்றி கவலைபட்டு குழம்பிப்போயிருந்தனர். இந்த சந்தை கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் கரகன் லேவாய கடல் நீரேரியின் வாயிலில் அமைந்திருந்தது. இந்த சந்தை 2000 ஆண்டிலேயே அந்த நிலத்திற்கு நகர்த்தப்பட்டிருந்தது.

காலை சுமார் 9.45 மணியளவில், இந்தோனேசியாவின் சமாத்ரா கரையோரத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், பெரும் கொந்தளிப்பு அலைகள் மாத்தறை மற்றும் காலி பிரதேசத்தை தாக்கியதாகவும் வானொலியில் அறிவிக்கப்பட்டது. அது ஒரு சுனாமியாகவே இருக்க வேண்டும் என்பதை நான் விளங்கிக் கொண்டதோடு மற்றைய நகரங்களுக்கும் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும் எல்லா இடங்களிலும் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புகளும் செயல் இழந்திருந்தன.

சீரழிக்கப்பட்ட பகுதியை பார்ப்பதற்காக நான் உயரமான இடத்திற்கு சென்றேன். அது கற்பனை செய்ய முடியாதளவிலான பேரழிவாக இருந்தது. ஏரிக் கரையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிறிய குடிசைகள் அமைந்திருந்தன. ஆனால் சுனாமி தாக்குதலுக்கு பின்னர் கிட்டத்தட்ட எல்லா குடில்களும் கரகன் லேவாய ஏரிக்குள் கழுவிச் செல்லப்பட்டிருந்தன. கடல் மட்டத்திலிருந்து எட்டு மீட்டர் உயரத்தில் இருந்த வீடுகளையும் அங்கு வசித்தவர்களையும் காணவில்லை. நான் சேதமான பிரதேசத்தை அன்மித்தபோது எல்லா இடங்களிலும் சடலங்கள் சிதறிக் கிடந்தன.

இந்த ஏழ்மையான கிராமப்புற பிரதேசத்தை சூழ உள்ள பண்டாகிரிய, கொன்னொறுவ, கட்டுவான, சூரியவெவ மற்றும் ரிதியாகம போன்ற கிராமங்களை சார்ந்த மக்கள், மரக்கறிகளை விற்று ஜீவியம் தேடுவதற்காக இந்த ஞாயிறு சந்தைக்கு வருவர். இவை அனைத்தும் துடைத்துக் கட்டப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், பெரிய லொறிகள் மற்றும் பயணிகள் நிறைந்த பஸ் வண்டிகளும் சுனாமியால் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மக்களுக்கு என்ன நடந்திருக்கும்? பல சடலங்கள் கரகன் லேவாய ஏரியில் மூழ்கியிருக்கலாம். அழிவின் அளவை அறிய பெருந்தொகையான மக்கள் கவலையோடும் அதிர்ச்சியோடும் அங்கு கூடியிருந்தனர். அவர்களது முகங்களில் பீதியும் கவலையும் குடி கொண்டிருந்தது.

அனைத்து வழிகளும் பயணிக்க முடியாததாக இருந்ததோடு சேதமுற்ற பிரதேசத்தின் மத்திக்கு செல்ல வழியிருக்கவில்லை. எனது கருத்துக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். ஆயினும் இந்த பேரழிவிலிருந்து உயிர் தப்பியவர்களை கண்டுபிடிக்க வழியிருக்கவில்லையா?

ஹம்பாந்தொட்டையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாநகர சபை தொழிலாளர்கள், உப்புக் கைத்தொழில் ஊழியர்கள், மீனவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் வறிய கிராமவாசிகளுமாவர். வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் போன்ற தொழிற்தகைமை வாய்ந்தவர்களும் அவர்களது குடும்பங்களும் கூட காணாமல் போயுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள சராசரி வீடுகள் 30 க்கும் 50க்கும் இடையிலான சதுர மீட்டர் விஸ்தீரணத்தைக் கொண்டவை. அவை செங்கற்களால் அமைக்கப்பட்டு ஓட்டு கூரைகளை கொண்டிருந்த போதிலும், அவற்றின் சுவர்கள் தூண்களால் வலுப்படுத்தப்பட்டவையல்ல. கொங்கிரீட் தூண்களால் வலுப்படுத்தப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் தவிர ஏனைய எல்லா வீடுகளும் கட்டிடங்களும் கிட்டத்தட்ட 100 ஹெக்டயர்கள் வரை தடைமட்டமாக்கப்பட்டுள்ளன.

மரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டவர்கள் அல்லது மாடி கட்டிடங்களில் முதலாம் மாடிக்கு ஏறிக்கொண்டவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்ப முடிந்தது. நிலத்தில் மக உறுதியாக வளர்ந்திருந்த மரங்கள் பிடுங்கி எறியப்படவில்லை. ஆனால் வீடுகள் அந்தளவு உறுதியானவை அல்ல. சுமார் மு.ப 10 மணியளவில் நிலைமைகள் முன்னேற்றமடைந்து கொண்டிருந்த போதிலும், கடலில் வழமைக்கு மாறான சேறு கலந்த கரடுமுரடான அலைகள் வீசிக்கொண்டிருந்தன.

ஹம்பந்தொட்டையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தல் அமைந்துள்ள யால வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகளின் 250 வாகணங்களில் 50 மாத்திரமே திரும்பி வந்ததாக நான் கேள்விப்பட்டேன். அங்கு சென்றவர்களில் பலர் உயிரழ்ந்திருக்கக் கூடும்.

ஹம்பந்தொட்டை துறைமுக மீனவர்களின் உபகரணங்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்ததுடன், சேதமடைந்த பல வள்ளங்கள் தரைக்கு வீசப்பட்டிருந்தன. இந்த பேரழிவுக்கு சில தினங்களின் பின்னர், டிசம்பர் 26ம் திகதி கடலில் இருந்த சில மீனவர்களை சந்தித்தேன். பெரும் பேரலைகள் கரையை தாக்குவதை கண்டு ஆழ் கடலுக்கு விரைந்தமையால் சேதங்கள் எதுவுமின்றி அவர்கள் உயிர்தப்பியிருந்தனர்.

மேலும் பேரலைகள் வரும் என்ற பீதியில், பாதிக்கப்படாத தென் கரையோரப் பகுதிகளிலும் கூட கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டன. நண்பகலோடு பலர் ஹம்பந்தொட்டையை விட்டு வெளியேறினர். அவர்கள் பிரதானமாக 25 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள சூரியவெவ மற்றும் ஓக்கியவெல கிராமங்களுக்கு நகர்ந்தனர்.

ஹம்பந்தொட்டை கரையோர பகுதயில், 15 முதல் 20 மீட்டர் வரை உயரமான 35 முதல் 50 மீட்டர் வரை அகலமான இயற்கையாக அமைந்த அழகான மணல் மேடுகள் பல காணப்பட்டன. இந்த மணல் மேடுகள் தாழ் நில பிரதேசங்களை பேரலைகளில் இருந்து பாதுகாத்தன. ஆனால் அவ்வாறான மணல் மேடுகள் இல்லாத பிரதேசங்களில், குறிப்பாக கரகன்லேவாய கடல் முகப்பில் பேரலைகள் அதிகூடிய சக்தியுடன் தாக்கி மிக மோசமான சேதத்தை விளைவித்துள்ளது.

சம்பவம் நடந்து 24 மணித்தியாலங்களின் பின்னரும், கரகன்லேவாய மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலப் பகுதியிலும் சடலங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் எதுவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை. பேரழிவிற்கு 20 நிமிடங்களுக்கு முன்னராவது எச்சரிக்கை விடுக்கப்பட்டிந்தால் ஹம்பந்தொட்டையிலும் ஏனைய கடற்கரைப் பிரதேசங்களிலும் பெரும்பாலான மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இலங்கை கடற்கரை பிரதேசத்தில் உள்ள ஒரு பொதுவான தோற்றம் என்னவென்றால், கடற்கரையிலிருந்து 100 மீட்டருக்கு இடையில், கடல் மட்டத்திலிருந்து 20 கிலோமீட்டர் உயரமான பாதுகாப்பான இடங்கள் அமைந்திருப்பதுதான் இலங்கை கரையோர பகுதிகளில் ஒரு பொதுவான தோற்றமாகும்.

நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது காலஞ்சென்ற இலங்கை புவியியலாளர் பி.டபிள்யு. விதானகே எழுதிய பல கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். அவர் பூமியதிர்ச்சிக்கும் ஏனைய அதிர்ச்சிகளுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வீடுகளையும் கட்டிடங்களையும் கட்டுவதில்லை என அதிகாரிகளைக் குற்றம் சாட்டியிருந்தார். எவ்வாறாயினும், இலங்கையின் ஆளும் வர்க்கம் அவ்வாறான ஒரு கண்ணோட்டத்தை கொண்டிருக்காததோடு ஒரு அடிப்படை முன்னெச்சரிக்கை அமைப்பையும் நிறுவியிருக்கவில்லை.

வறுமையின் காரணமாக, பெரும்பாலான இலங்கை மீனவர்கள் கடலை அண்டியே வாழத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இரவில் மீன்பிடிக்க சென்று பகலில் கடலுக்கருகில் நித்திரை கொள்ளவேண்டும். கரையில் இருக்கும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் உரிமையாளர்களிடம் இருந்து வள்ளங்களை வாடகைக்கு பெறுவதோடு பிடித்த மீன்களில் பெரும்பகுதியை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த அன்று நண்பகல் நான் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தேன். அது நீரில் மூழ்கியவர்களாலும் காயமடைந்தவர்களாலும் விரைவாக நிரம்பியிருந்தது. வைத்தியசாலை ஊழியர்கள் மிக விரைவாக செயற்பட்ட போதிலும் அவர்கள் உயிர் தப்பியவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தினர்.

சுனாமி தாக்கி 72 மணித்தியாலங்களின் பின்னரே ஏரியிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் சடலங்களை சேகரிக்க இராணுவம் அனுப்பப்பட்டது. இரு தினங்களாக 1,629 சடலங்கள், சில சிதைந்துபோன நிலையில் சேகரிக்கப்பட்டன. ஆயினும் பெருந்தொகையான மக்கள் இப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

இப்போது அரசாங்க அதிகாரிகள் வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களின் அழிமானங்களை அப்புறப்படுத்த கனரக இயந்திரங்களை பயன்படுத்த மக்களை தயார் செய்கின்றனர். ஆனால் இந்த வேலைகள் உயிர் தப்பியவர்களுக்கு அறிவிக்காமலேயே மேற்கொள்ளப்படுகிறது. கடற்கரை சூழலில் இருந்து 100 மீட்டர்களுக்கிடையில் எதையும் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்காலத்தில் அனுமதிக்காது என அறிவிக்கப்பட்டுமுள்ளது.

கடந்த தசாப்தத்தில் உல்லாச பிரயாணத்துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தற்காலிக தொழில்களின் அதிகரிப்பு, காணியோ அல்லது தொழிலோ இன்றி கரையோரப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளதைக் கண்டது. ஏனையவர்கள் மீன்பிடி கைத்தொழிலில் ஈடுபட்டனர். விவசாயத்தோடு ஒப்பிடும் போது இந்த தொழில்கள் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமானது. மிகப்பெரும் உள்ளாச பிரயாண ஹோட்டல்கள், நூற்றுக்கணக்கான சிறிய உள்ளாச பிரயாண ஹோட்டர்கள் மற்றும் கடையில் விற்கப்படும் நினைவுமலர்கள் மற்றும் அணிகலன்களும் கரையோரங்களில் அபிவிருத்தி செய்பபட்டிருந்தன. இந்த வியாபாரம் பல குடும்பங்களுக்கும் அவர்களது பிள்ளைகளின் கல்விக்கும் ஜீவனோபாயத்தை வழங்கியது. இவை அனைத்தும் இப்போது இழுத்து மூடப்படுகின்றன.

சாதாரண மக்களுக்கு அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அண்மையில் அல்லது அவர்களால் வாழ்க்கைக்கு வருமானம் தேடக்கூடிய இடங்களில் வீடுகளை மீள் அமைத்துக்கொள்ள பொருட்கள் அல்லது பணம் எங்கிருந்து எப்படி கிடைக்கும்? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்காக 600,000 ரூபாக்களை (சுமார் 600 அமெரக்க டொலர்கள்) தருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். கடந்த வருடம் மோசமான வெள்ளப் பெருக்கு இப்பிரதேசத்தல் ஏற்பட்ட போதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அவர்கள் அதே ஆபத்தான பிரதேசத்தில் மீண்டும் வீடுகளை அமைக்க நிர்ப்பந்திக்கும் விதத்தில் அவர்களுக்கு அற்ப தொகையே வழங்கப்பட்டுள்ளது.

Top of page