World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to commemorate anniversary of Keerthi Balasuriya's death

இலங்கை சோ.ச.க கீர்த்தி பாலசூரிய நினைவு தினத்தை கொண்டாடுகிறது

29 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), அதன் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபக பொதுச் செயலாளரான கீர்த்தி பாலசூரியவின் 18 வது இறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக பகிரங்க விரிவுரையொன்றை நடத்தவுள்ளது. தோழர் கீர்த்தி பாலசூரிய 1987, டிசம்பர் 18 அன்று தனது 39 வயதில் மாரடைப்பால் அகால மரணமானார். அவரது அகால மரணம் பு.க.க மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கும் (நா.அ.அ.கு) பேரிழப்பாக விளங்கியது.

கீர்த்தி பாலசூரிய, 1964ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்துகொண்ட லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) காட்டிக்கொடுப்புக்கு எதிரான நா.அ.அ.கு வின் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். ல.ச.ச.க யின் நடவடிக்கைகள், இலங்கை, தெற்காசியா மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு பயங்கரமான விளைவுகளை கொண்டிருந்தன. சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை கைவிட்ட ல.ச.ச.க, இனவாதத்தை அடிப்படையாக கொண்ட மத்தியதரவர்க்க தீவிரவாத அமைப்புக்கள் தோன்றுவதற்கு கதவுகளைத் திறந்துவிட்டதுடன் தீவின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்திற்கும் வழிவகுத்தது.

கீர்த்தி பாலசூரிய 1968ல் தனது 19 வயதிலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரானதோடு, எல்லா வகையிலுமான அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிச கொள்கைகளின் அடிப்படையிலான கட்சி ஒன்றைக் கட்டியெழுப்ப தனது முழு இளமைக் கால வாழ்க்கையையும் அர்ப்பணித்திருந்தார். அவர் ல.ச.ச.க யின் காட்டிக் கொடுப்பின் அரசியல் படிப்பினைகளை ஸ்தாபிப்பதில் பிரதானமாக அக்கறை கொண்டிருந்தார். இந்தப் படிப்பினைகள் இன்றைய சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாதவையாக தொடர்ந்தும் இருந்துகொண்டுள்ளன.

சோ.ச.க பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ், "சமசமாஜக் கட்சியின் 70 ஆண்டுகள் -- அதன் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் விரிவுரையாற்றுவார். இந்த விரிவுரைக்கு சமூகமளிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் அனைவருக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம்.

திகதியும் நேரமும்: 2006 ஜனவரி 5, பி.ப 4.30 மணிக்கு

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்

Top of page