World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: police raids against CWC leaders

இலங்கை: இ.தொ.கா தலைவர்களுக்கு எதிராக பொலிஸார் தேடுதல்

By S. Jayanth
17 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிராக (இ.தொ.கா) கடந்த மூன்று வாரங்களுள் இரு முறை நடந்த பொலிஸ் தேடுதல், கட்சியைப் பிளவுபடுத்தவும் மற்றும் தனது பலவீனமான சிறுபான்மை அரசாங்கத்தை தூக்கி நிறுத்துவதற்காக சில இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதற்கும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கையின் ஒரு பாகமாகவே தோன்றுகிறது.

இந்த பொலிஸ் நடவடிக்கைகள், இலங்கையின் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தேயிலை தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் சுரண்டிக்கொள்வதற்கும் ஆகும்.

ஒரு கலப்பு அரசியல் கட்சியும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை அடிப்படையாக கொண்ட ஒரு தொழிற்சங்கமுமான வலதுசாரி இ.தொ.கா, முன்னைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தபோதிலும், நவம்பர் 17 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிக்கு மாறியது.

முதலாவது பொலிஸ் தேடுதல் நவம்பர் 25 அன்று நடந்தது. மத்திய தோட்டப்புற பிரதேசமான கொட்டகலையில் அமைந்துள்ள, இ.தொ.கா கட்டுப்பாட்டிலான நுவரெலியா பிரதேச சபையால் பராமரிக்கப்படும் ஒரு இளைஞர் நிலையத்தில் தேடுதல் நடத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒரு விசேட குழு கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கான காரணம், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை தேடுவதாக கூறப்பட்டது. பொலிசாரின் படி, அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஒரு பெருந்தொகை தொலைக்காட்சிப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள் மற்றும் தோட்ட கூரைத் தகடுகளையும் கண்டுபிடித்துள்ளதோடு, இந்தக் களஞ்சியம் இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர் வி. புத்திரசிகாமனியால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களஞ்சியசாலைக்கு பொலிஸார் சீல் வைத்திருந்த போதிலும், குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்பட்டிருக்கவில்லை. ஆயினும், இந்தப் பொருட்கள் மோசடியின் மூலம் பெறப்பட்டவை என ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இரண்டாவது தேடுதல் நடவடிக்கை, இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் வீட்டில் கடந்த திங்களன்று மீண்டும் கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதராங்களை தேடுவதாக பொலிஸார் தெரிவித்த போதிலும், அவர்கள் அவ்வாறான எதையும் கண்டுபிடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.

இலங்கையின் ஏனைய பிரதான கட்சிகளை போலவே, இ.தொ.கா உம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பது பெரிதும் ஆச்சரியத்திற்குரியதல்ல. இந்த அமைப்பு மிகவும் வறிய தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக சேவையாற்றவில்லை. மாறாக, சுரண்டலை மேற்பார்வை செய்ய உதவும் பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சிறிய தமிழ் செல்வந்தர்களின் நலன்களுக்காகவே சேவையாற்றுகிறது. தமது விசுவாசிகளுக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொடுக்கும் ஒரு காப்பு அமைப்பு என்ற வகையில் தனது செல்வாக்கை பராமரித்து வருகின்றது.

எவ்வாறெனினும், பொலிஸ் தேடுதலின் குறிக்கோளானது இலங்கையில் உள்ள பரந்த அரசாங்க மோசடிகளை அம்பலப்படுத்துவதை இலக்காக் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, இது குறைந்த பட்சம் இ.தொ.கா வின் ஒரு பகுதியை தன்னும் மீண்டும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் ஆசனங்களில் அமர வைப்பதற்காக கரட்டையும் பிரம்பையும் வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் அனுகுமுறையின் ஒரு பாகமாகும். தற்போது இராஜபக்ஷ 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 70 உறுப்பினர்களையே கொண்டுள்ளதோடு இடைவெளியை நிரப்புவதற்காக அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றார்.

அமைச்சுப் பதவிகளுக்கும் ஏனைய இலாபங்களுக்கும் எந்தப் பக்கம் சிறந்த வாய்ப்புக்கள் உள்ளனவோ அந்தப் பக்கத்திற்கு தாவுவதில் தொண்டமானும் இ.தொ.கா வும் பேர்போனவர்கள். ஆயினும், சுதந்திர முன்னணியில் மீண்டும் இணைந்துகொள்வது என்பது இ.தொ.கா தலைமைக்கு ஒரு அரசியல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக நடந்த தேர்தல் இனவாத வழிமுறைகளில் மோசமான துருவப்படுத்தப்பட்டிருந்தது. இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டுக்காக பிரச்சாரம் செய்துவரும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்கள தீவிரவாதக் கட்சிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார். மீண்டும் யுத்தம் வெடிக்குமோ என்ற பீதியினாலும் இனவாத துன்புறுத்தல்களினாலும் பீதி கொண்ட பெரும்பான்மையான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்க் கட்சியான ஐ.தே.க வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இராஜபக்ஷவிற்கான எதிர்ப்பு குறிப்பிடத்தக்கது. தேர்தலின் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் மீதான சிங்கள குண்டர்களின் இனவாத தாக்குதல்கள் பதட்ட நிலைமைகளை மட்டுமே அதிகரிக்கச் செய்தன. இ.தொ.கா வின் அறிக்கை ஒன்று, இன்று எமது மக்கள் மாத்தளை, கலஹா, தெல்தொட்ட, நாவலப்பிட்டிய, இரத்தினபுரி, ரக்வான, நிவித்திகல, மத்துகம, புலத்சிங்கள, அல்பிட்டிய மற்றும் தெனியாய போன்ற பிரதேசங்களில் அச்சுறுத்தல்களுக்கும் தொந்தரவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தது. இதன் விளைவாக, தனது சொந்த ஆதரவுத் தளத்தை இழக்கும் ஆபத்துடன் இன்னுமொரு தலைகீழ் மாற்றத்தை தொண்டமானால் செய்ய முடியாது.

தேர்தலில் குறுகிய வெற்றி பெற்ற இராஜபக்ஷ, இ.தொ.கா மற்றும் ஏனைய தோட்டப்புற தொழிற்சங்கங்களதும் ஆதரவைப் பெறுவதற்காக ஒரு நிச்சயமான முயற்சியை மேற்கொள்கின்றார். பதவிக்கு வந்து சில நாட்களுக்குள் அரசாங்கத்திற்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகை, "தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள" ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளதை சிறப்பாக வெளிப்படுத்தி முன்பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரை: "அரசாங்க திட்டத்தின் கீழ், நீண்ட காலமாக அரசியல்வாதிகளின் கைகளில் அடமானப் பொருளாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்கு முன்னுரிமை வழங்கப்படும்," என குறிப்பாக தெரிவிக்கப்படிருந்தது.

தனது முன்னோடிகளைப் போலவே, "தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு" இராஜபக்ஷ எதையும் செய்யப் போவதில்லை. இந்த "அவசர நடவடிக்கைகள்", புதிய அரசாங்கத்தின் திட்டங்களை நிர்வகிக்கும் எதிர்பார்ப்புகளை காட்டி இ.தொ.கா மற்றும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து ஒரு பகுதியினரை உள்ளீர்த்துக் கொள்வதும் மற்றும் அதன் மூலம் தமது கந்தலாகிப்போன நற்பெயருக்கு தேவையான முண்டுகோலை பெற்றுக்கொள்வதாகும். இந்த பொலிஸ் தேடுதல்கள், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காததற்கான விளைவுகளை நினைவூட்டுவதாகும்.

தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டதன் மூலம் இன்னுமொரு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. புலிகளின் சாத்தியமான தாக்குதல்களுக்கு எதிராக பெயரளவில் அவர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை அமைச்சர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் அமைச்சரவை பாதுகாப்பு பகுதியின் விசேட பிரிவால் வழங்கப்பட்ட தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர்களை கொண்டுள்ளனர். இ.தொ.கா முறைப்பாடுகள் செய்திருந்த போதிலும் இந்தத் தீர்மானத்தை பற்றி அரசாங்கம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

மூடி மறைக்கப்படாத அச்சறுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் தூண்டுதல்களுக்கு இ.தொ.கா வின் பிரதிபலிப்பானது ஒரு கலைவயாக உள்ளது. டிசம்பர் 5 அன்று கட்சி ஊடகங்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கை, எந்தவொரு மோசடி நடவடிக்கையையும் மறுத்ததோடு "கொடுநோக்கங்கொண்ட முயற்சியுடன் ஒரு அரசியல் பழிவாங்கல் நடப்பதாக" குற்றஞ்சாட்டியது. இந்த அறிக்கை, "தொண்டமானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு" என பிரகடனம் செய்த போதிலும், இரஜபக்ஷவை விமர்சிப்பதை தவிர்த்துக்கொண்டதோடு "அரசியல் பழிவாங்கல்களுக்காக" இ.தொ.கா வை விட்டு விலகியவர்கள் மீது குற்றஞ் சாட்டியது.

டிசம்பர் 8 வெளியான அறிக்கை, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் இ.தொ.கா ஒரு "நெருக்கமான ஒத்துழைப்பை" எதிர்பார்ப்பதாக கூறியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பாராட்டியது. உண்மையில், இன்னுமொரு அரசியல் குத்துக்கரணத்தை அடிப்பதற்கு தற்போதைய நிலைமை அனுகூலமானதா என்பதையிட்டு தொண்டமான் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

எவ்வாறெனினும், இ.தொ.கா தலைமைத்துவத்தின் ஏனையவர்கள் வசியப்பட்டிருந்தனர். எம்.எஸ். செல்லசாமி, வடிவேல் சுரேஷ், கே. ஜெகதீஸ்வரன் மற்றும் வீ. புத்திரசிகாமனி ஆகிய நான்கு இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் இராஜபக்ஷவை சந்தித்திருந்தனர். அரசாங்கத்தில் இணைவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர்கள் பகிரங்கமாக மறுத்ததோடு, இருவர் தொண்டமானையே ஆதரிப்பதாக எழுத்துமூலம் வாக்குறுதியளித்துள்ளனர். ஆயினும், வடிவேல் சுரேஷ் கரணம் அடித்துவிட்டார். கடந்த புதன் கிழமையன்று அவர் சுகாதார பிரதி அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துகொண்டார்.

இந்த அற்பத்தனமான சூழ்ச்சித் திட்டங்கள், இராஜபக்ஷவோ அல்லது இ.தொ.கா வோ தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களையிட்டு சற்றேனும் அக்கறைகொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. இந்த அரசியல் பேரம்பேசல்கள் வழமைக்கு மாறானவை அல்ல. அதேவேளை, இ.தொ.கா தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் பொலிஸும் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவும் வெளிப்படையாக தலையீடு செய்தமை, ஒரு புதிய இடைவெளியை சேர்த்துள்ளது. இது ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்கொண்டுள்ள மிகவும் அவநம்பிக்கையான நிலமையையும் மற்றும் தங்களை சிக்கலில் இருந்து அகற்றுவதற்கான அவர்களின் முயற்சியின் இரக்கமின்மையையும் மீண்டும் ஒரு முறை சுட்டிக்காடியுள்ளது.

Top of page