WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraq elections: a democratic façade for a US
puppet state
ஈராக்கிய தேர்தல்கள்: ஒரு அமெரிக்க பொம்மை அரசிற்காக ஒரு ஜனநாயக பகட்டு
நாடகம்
By James Cogan
14 December 2005
Back to screen
version
நாளை ஈராக்கில் நடைபெறவிருக்கும் தேர்தல் அந்த நாட்டிற்கும் மற்றும் பரந்தரீதியான
மத்திய கிழக்கிற்கும் ஒரு ஜனநாயகத்தின் மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்த்தபடி புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு
கூறியுள்ளது. உண்மை என்னவென்றால் அது நாட்டின் பிரதான மத மற்றும் இனக்குழுக்களிடையே பெரும் மோதலை
உருவாக்குவதுடன், சமூக மற்றும் வர்க்க பதட்டங்களை அதிகரித்து, அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள்
மீது ஈராக் மக்களிடம் பாரிய விரோதப்போக்கை உருவாக்கும்.
ஒரு இடைமருவு அரசாங்கத்திற்காக ஜனவரி 30ல் நடைபெற்ற தேர்தல்கள், புதிய
அரசியலமைப்பு நகலை உருவாக்கியதுடன் மற்றும் அக்டோபர் 15ல் நடைபெற்ற கருத்தெடுப்பு ஆகிய இந்த ஆண்டு
ஒட்டுமொத்த அமெரிக்கக் கட்டுப்பாட்டில் அமைந்த அரசியல் ஸ்தாபனம் அனைத்துமே, நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு
வளத்தை சூறையாடுவதற்கு சட்டரீதியான நியாயப்படுத்தலுக்கான ஒரு மூடுதிரையை வழங்கும் நோக்கமாக கொண்டதுடன்
மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் காலவரையின்றி நிலைகொண்டிருப்பதற்கு அனுமதி வழங்கும் ஒரு பொம்மை அரசாங்கத்தை
அமைப்பதற்காகவே.
இந்த வாரம் நடக்கும் வாக்குப் பதிவு இறுதி கட்டமாகும். இதில் அடுத்த நாடாளுமன்றத்தில்
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கின்ற 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்
ஆகிய இருவரையும் தெரிவு செய்வதும் அடங்கியிருக்கிறது. நாட்டிலுள்ள 18 மாகாணங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாக்தாத் மக்கள்
தொகை அதிகமுள்ள மாகாணம் அது 59 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும். மொத்தம் 230 பேர் மாகாணங்களால்
தேர்ந்தெடுக்கப்படுவர். மிச்சமுள்ள 45 உறுப்பினர்கள் ஒரு தேசிய சாராசரி விகிதாரத்தின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதிய அரசாங்கம் விரும்பினால் கூட ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நடைமுறைகளான அமெரிக்க
படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அடுத்ததாக மாற்ற முடியாது. ஈராக்கிய பொருளாதாரம் சீரழிந்துவிட்டது, வேலையில்லதோர்
எண்ணிக்கை 50 சதவீதம் நெருங்கிவிட்டது, ஊட்டசத்து குறைவு வளர்ந்து வருகிறது சமூக சேவைகள் செயல்படவில்லை மற்றும்
ஊழல் மலிந்து கிடக்கிறது. புதிய அரசியலமைப்பு ஏற்கனவே புதிதாக எண்ணெய் மேம்படுத்தும் நடவடிக்கைகளை பிராந்திய
அல்லது மாகாண அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டது அவை பன்னாட்டு பெரு நிறுவனங்களோடு நீண்ட கால
ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன.
இந்தக் கட்டமைப்பை நிலை நாட்டுவதற்காக அமெரிக்க இராணுவமும் ஈராக் பாதுகாப்புப்
படைகளும் ஒவ்வொரு மாதமும் நூற்றுக் கணக்கில் மக்களை கொன்று குவிக்கின்ற அளவிற்கு எங்கெல்லாம் கிளர்ச்சி எதிர்ப்பு
குழுக்கள் தீவிரமாக செயல்படுகிறார்களோ அங்கெல்லாம் இரத்தக்களரி நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. அடுத்த
ஆண்டு அமெரிக்கத் துருப்புக்கள் 20,000 விலக்கிக் கொள்ளப்படும் என்ற பேச்சு நிலவினாலும் ஊகிக்கக்கூடியளவிற்கு எதிர்காலத்தில்
100,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் படைகள் ஈராக்கில் நீடிக்கவே செய்யும்.
இந்த உண்மையை எதிரொலிப்பதற்கு பதிலாக தேர்தல் பிரசாரத்தில் இனவாத, குழுவாத
பிரச்சனைகளே மேலோங்கி நிற்கின்றன. பிரதான கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் நவீன காலனி
ஆதிக்கத்தையும் நாட்டை பெரு நிறுவனங்கள் சூறையாடுவதையும் ஏற்றுக்கொண்டு விட்டனர். மில்லியன் கணக்கான ஈராக்
மக்கள் எதிர்கொண்டுள்ள சமூக பேரழிவிற்கு அவர்களிடம் விடை எதுவுமில்லை.
ஒரு வேட்பாளரை நியமிக்கும் ஆற்றலும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கின் மீது திணித்துள்ள தேர்தல் சட்டங்களின் கீழ் உயர்நிலைப் பள்ளி தேர்வு பெற்ற 30
வயதை கடந்தவர்கள் தான் தகுதியுடையவராகமுடியும். ஈராக்கில் 19 வயது இளைஞர்கள் அதிகம் மற்றும் ஆண்களில்
55.9 சதவீதத்தினரும் பெண்களில் 24.4 சதவீதம் பேரும் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் பெரும்பான்மை மக்கள்
வேட்பாளர்களாக நிற்க முடியாதவாறு விலக்கப்பட்டிருக்கின்றனர்.
ஈராக்கியர்கள் தங்கள் மத, இன, பழங்குடி, கல்வித்தரம், பிராந்தியம் அல்லது
நகரத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. ஆளும் செல்வந்த தட்டின் குறிப்பிட்ட
பிரிவினரின் செல்வாக்கிற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முக்கிய குறிக்கோளாக பயன்படுத்துகிறது --அது
ஷியைட், சுன்னி, குர்திஷ் அல்லது இதர குழுக்களாக இருந்தாலும்-- ஒரு அமெரிக்க ஆதிக்கம் செலுத்துகின்ற ஈராக்கில்
அந்த செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் தனிச்சலுகைகளுக்கும் செல்வதை திரட்டுவதற்கும் அந்த அரசியல் அந்தஸ்த்தை
நோக்கமாக கொண்டுள்ளது.
மதகுருமார்களும் குடிப்படைகளும், ஷியைட் முஸ்லீம்கள் --ஈராக் மக்களில்
பெரும்பாலோர்-- மீண்டும் ஐக்கிய ஈராக்கிய கூட்டணிக்கு (UIA)
--பிரதமர் இப்ராஹீம் அல்- ஜாப்பாரி இன் தாவா இயக்கம் ஈராக்
இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சில் (SCIRI)
மெக்தாதா அல்-சதரின் சதரிஸ்ட் இயக்கம் மற்றும் ஒரு டஜன் இதர மதக்குழுக்களின் இடையிலான கூட்டணிக்கு
வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
2004ல் சதரிஸ்ட்டுகள் அமெரிக்க இராணுவத்துடன் பெரிய போர்களை புரிந்தனர் மற்றும்
சுன்னி அரபு மக்களிடையே நிலவுகின்ற கிளர்ச்சி அமைப்புக்களுக்கு தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவித்தனர். சாதரிஸ்டுகள்
சுன்னி அமைப்புக்களோடு ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிக் கொள்வார்கள் என்ற ஊகங்கள் கூட ஒரு கட்டத்தில்
நிலவின. என்றாலும் கடந்த ஓராண்டிற்கு மேலாக அந்த இயக்கம் தனது ஆக்கிரமிப்பாளர்களுக்கு படிப்படியாக
அடிபணிந்துவிட்டது மற்றும் அரசியல் நிலைமை பெறுவதற்கு ஆணையில்
SCIRI உடன் அவற்றின்
வேறுபாட்டை ஒரு புறமாக ஒதுக்கிவைத்தது. சமீப மாதங்களில், ஐக்கிய ஈராக்கிய கூட்டணியில் பங்குபெறுவதற்கு
SCIRI உடன்
சதர் ஒரு பேரத்தை உருவாக்கிக் கொண்டார் அதற்கு மாற்றீடாக மூன்றில் ஒரு பகுதி வேட்பாளர்களுக்கு நியமனம்
கிடைத்தது.
SCIRI இற்கும் தாவாவிற்கும் எதிர்ப்பு
வளர்ந்து கொண்டு வந்தாலும் ஐக்கிய ஈராக்கிய கூட்டணி
நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் நடந்த தேர்தல்களில் அவர்கள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கு ஒரு
காலகெடுவை நிர்ணயிப்பதாகவும் வாழ்க்கை தரத்தை துரிதமாக உயர்த்துவதற்கும் உறுதியளித்தனர். ஐக்கிய ஈராக்கிய
கூட்டணி
தலைமையிலான அரசாங்கம் இரண்டையுமே செய்யவில்லை. ஷியைட்டுக்கள் ஆதிக்கம் செலுத்தும் உள்துறை அமைச்சகமும்
ஆயுதப்படைகளும் கொலைகள் சித்திரவதை மற்றும் மிரட்டலை செய்கின்றன மற்றும் மதச்சார்பற்ற ஈராக் மக்கள் மீது
கூட இஸ்லாமிய சட்டத்தை திணிக்கின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன.
என்றாலும் சதரிஸ்டுகள் இன்னும் நகர்புற ஏழை ஷியைட்டுக்களிடம் செல்வாக்கு
பெற்றிருக்கின்றனர் பாக்தாத்திலும் இதர நகரங்களிலும் ஐக்கிய ஈராக்கிய கூட்டணியிற்கு ஒரு கணிசமான வாக்குகளுக்கு
உறுதி செய்து தந்துள்ளன. மேலும் ஐக்கிய ஈராக்கிய கூட்டணிக்கு மீண்டும் அலி-அல்-சிஸ்தானியின் மறைமுக அதரவு
தரப்பட்டிருக்கிறது அவர் ஈராக்கிலுள்ள ஷியைட் மத போதகர்களில் முன்னணியில் உள்ளவர். அது கிராமப்புறங்களிலுள்ள
ஷியைட்டுக்களை ஒன்று சேர்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் ஜனவரியில் நடைபெற்றதைப்போல் நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஈராக்கிய கூட்டணி
ஒரு பெரும்பான்மை இடத்தை பெற முடியாது போகலாம். முந்திய தேர்தல்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் அதன்
பலூஜா அட்டூழியங்களுக்கும் எதிராக மிகப் பெருமளவில் புறக்கணித்த சுன்னி அராபியர்களை இந்த முறை வாக்களிக்குமாறு
மதத் தலைவர்களும் கிளர்ச்சிக்குழுக்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். சுன்னிகளை அடித்தளமாகக் கொண்ட
கூட்டணிகளில் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் ஒரு கூட்டணியான ஈராக்கியர் சமரச முன்னணி மற்றும் மதச்சார்பற்ற
கட்சிகளின் ஒரு கூட்டணியான தேசிய பேச்சுவார்த்தை ஈராக்கியர் முன்னணி, அது சதாம் ஹுசேனின் பாத்திஸ்ட் கட்சி
போன்ற கொள்கைகளை எடுத்துக் கூறி வருகிறது.
சுன்னிக்களது பட்டியல்களை சேர்ந்த வேட்பாளர்கள் 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி
பெறக் கூடும். புஷ் நிர்வாகமும் ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகமும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெற்றுவரும்
ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை பிளப்பதற்காக பாக்தாத்திலுள்ள பொம்மை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சுன்னி
செல்வந்தத் தட்டினரையும் முன்னாள் பாத்திஸ்ட் ஆட்சியில் இடம் பெற்றிருந்தவர்களையும் தீவிரமாக வலியுறுத்தி
வருகின்றனர்.
கிளர்ச்சிக் குழுவோடு தொடர்புடைய ஈராக் இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் லண்டனை
தளமாகக்கொண்ட Telegraph
இடம் டிசம்பர் 11ல் கூறியது என்னவென்றால், வாக்குப் பதிவை புறக்கணிப்பதற்கு
அல்-கொய்தா விடுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்தும் சுன்னிக்களை பாதுகாப்பதற்கு கொரில்லா போர் வீரர்கள்
நடவடிக்கை எடுப்பர். ''அரசியலில் பயன் பெறுவதற்காக சுன்னிக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்களை
தாக்குவார்களானால் அவர்கள் எங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை அறிக்கைகளை நாங்கள்
அனுப்பியிருக்கிறோம்'' என்று அவர் அறிவித்தார். ஒரு கிளர்ச்சித் தலைவர் அபு அப்துல்லாவையும் அந்த செய்தி
பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது. அவர் ''அல்கொய்தா தலைவரான முஷாப்-அல் சர்காவி ஒரு அமெரிக்க
இஸ்ரேலிய மற்றும் ஈரானிய முகவர். அவர் நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்க வேண்டும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது தான் சுன்னிக்கள் ஆக்கிரமிப்பை சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள்'' என்று முத்திரை குத்தியுள்ளார்.
வடக்கு ஈராக்கிலுள்ள பெரும்பான்மை குருதிஷ் மாகாணங்களில் குர்திஷ் கூட்டணி
(KA) 50 தொகுதிகளில்
வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குர்திஸ்தானின் குர்திஷ் தேசபக்த ஒன்றியம் மற்றும் குர்திஸ்தான்
ஜனநாயகக் கட்சி ஆகியவற்றிடையே
குர்திஷ் கூட்டணி
மையம் கொண்டிருக்கிறது. அதன் முன்னோக்கும் அதில் இடம் பெற்றுள்ள செல்வந்தத்
தட்டினரும் ஈராக்கின் ஒரு மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதன்
நோக்கம் என்னவென்றால் கிர்குக் நகரமும் வடக்கு பகுதி ஈராக்கின் இலாபம் தரும் எண்ணெய் கிணறுகளும் குர்து
பிராந்திய அரசாங்கத்தின் (KRG)
பகுதிகளாக இணைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து
கொள்வதற்காகத்தான். அது தனி அரசைப் போல் வடக்கு ஈராக்கை ஆட்சி செய்கிறது.
அல்லாவி மற்றும் சலாபிக்கு அமெரிக்க ஆதரவு
நீண்ட கால அமெரிக்காவின் கைப்பாவைகளான அயாத் அல்லாவி மற்றும அஹமது சலாபி
ஆகியோர் தலைமையிலான கூட்டணிகளுக்கு அதிக அளவில் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து
தருவதற்காக அமெரிக்க தூதரகமும் ஆக்கிரமிப்புப் படைகளும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஐக்கிய
ஈராக்கிய கூட்டணி அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு ஒத்துழைத்து வந்தாலும் வாஷிங்டன் விரும்புகின்ற ஆளும் கட்சியாக
ஷியா அடிப்படைவாதிகள் இல்லை. SCIRI
ஈரானிய ஆட்சியோடு நெருக்கமான உறவு வைத்திருக்கிறது அது அமெரிக்க
ஆக்கிரமிப்பின் அடுத்த இலக்காக இருக்கக் கூடும். சென்ற ஆண்டு நடைபெற்ற ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சியை
தொடர்ந்து சாதர் அமைப்பை சந்தேகக் கண்ணோடு நோக்கி வருகிறது.
நவம்பரில் அமெரிக்க இராணுவம் ஒரு கைதிகள் முகாமில் திடீர் சோதனை நடத்தியபோது
அங்கு SCIRI
இன் பாதர் அமைப்பிலிருந்து ஈராக் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட குடிப்படையினர்
சுன்னி கைதிகளை சித்திரவதை செய்வதை கண்டுபிடித்தனர். ஈராக்கிலுள்ள ஊடகங்கள், அம்பலத்திற்கு வந்த இந்த
தகவல்களை பயன்படுத்தி ஐக்கிய ஈராக்கிய கூட்டணி மற்றும்
SCIRI இன் செல்வாக்கை சிதைக்கவும் வாக்குப் பதிவில் சுன்னிக்கள்
அதிக அளவில் கலந்து கொள்ளவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய கிழக்கிலிருந்து பணக்கார
நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஏராளமான பணங்களை அல்லாவியின் ஈராக் தேசிய பட்டியல் கூட்டணிக்கு குவித்து
தொலைக்காட்சி மற்றும் செய்தி பத்திரிகை விளம்பரங்களுக்கு அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு மதச்சார்பற்ற ஷியாவான அல்லாவி முன்னாள் பாத்திஸ்ட் மற்றும் ஈராக் மீது
அமெரிக்கா படையெடுப்பதற்கு திட்டமிட்டதிலும் முன்னேற்பாடு செய்ததிலும் உதவியவராவர், புஷ் நிர்வாகம் 2004
ஜூனில் அவரை இடைக்கால பிரதமராக நியமித்தது. 2004 ஆகஸ்டில் அவர் நஜாப் நகரத்திலுள்ள பிரதான ஷியைட் மத
அமைப்புக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட சாதரிஸ்ட் குடிப்படையினரை வெளியேற்றுவதற்கு அமெரிக்க
இராணுவ தாக்குதலுக்கு அனுமதியளித்தார். 2004 நவம்பரில் பிரதானமாக சுன்னி அரபு மக்கள் வாழ்கின்ற பல்லூஜா மீது
அமெரிக்காவின் இரத்தக் களரி தாக்குதலுக்கு அல்லாவி தனது ஆசியை வழங்கினார்.
அவர் இடைக்கால பிரதமராக இருந்த நேரத்தில் அல்லாவி ஹூசேன் ஆட்சியில் பணியாற்றி
வந்த ஏராளமான உளவுத்துறை அதிகாரிகளை CIA
கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கிய புலனாய்வு அமைப்பில் நியமித்தார். அதே நேரத்தில் அமெரிக்க சிறப்புப் படைகள் ஈராக்
உள்துறை அமைச்சகத்துடன் சேர்ந்து போலீஸ் அதிரடிப்படைகளை உருவாக்கப்பணியாற்றியது-----அந்த வடிவம்தான் இப்போது
ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் நூற்றுக் கணக்கில் சித்திரவதை செய்யப்படுவதற்கும் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட வகையில்
படுகொலைகள் செய்வதற்கும் பொறுப்பாகும்.
பல ஈராக்கியர் அல்லாவியின் கொடூரத் தன்மை எப்படிப்பட்டது என்பதை சுட்டிக் காட்டும்
போது அவரை ''மீசையில்லாத சதாம் ஹூசேன்'' என்று கூறுகின்றனர். அப்படியிருந்தும் அவரது பிரச்சாரம் நேரடியாக
அனைத்து மத இன பின்னணியை கொண்டவர்களாக நாட்டில் நிலவும் இனவாத அடிப்படைகளை கண்டு கலவரம் அடைந்துள்ள
மதச்சார்பற்ற ஈராக்கியருக்கு நேரடியாக வேண்டுகோள் விடுப்பதாக பிரச்சாரம் அமைந்திருக்கிறது. அடிப்படைவாதிகளை
விட குறைந்த தீங்குள்ளவர் என்று சித்தரிக்கப்படுவதுடன், மற்றும் ஈராக்கின் ஐக்கியத்தை நிலைநாட்டக் கூடிய ஒருவர்
என்று கூறப்படுகிறார். அவரது கூட்டணியில் இணைந்து இந்த பொய்யை நிலை நாட்டுவதில் உதவுகின்ற ஒரு அமைப்பு ஈராக்
கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
அஹமது சலாபியின் ஈராக் தேசிய காங்கிரசும் ஷியைட் அடிப்படைவாதிகளுக்கு ஒரு மாற்றீடாக
முன்னெத்து வைக்கப்படுகிறது. அமெரிக்க படையெடுப்போடு ஒத்துழைத்த வெளிநாடுகளில் வாழும் ஈராக்கியர்களில் சலாபி
முக்கியமான ஒருவர். அவர் பொருளாதாரத்தை சுதந்திரச் சந்தை கொள்கை அடிப்படையில் மறுசீரமைப்பதில் உறுதியெடுத்துக்
கொண்டிருக்கிறார்.
2004 ஆரம்பத்தில் அமெரிக்க இராணுவம் தீவிரமாக முன்னாள் பாத்திஸ்டுகளை புதிய ஈராக்
பாதுகாப்புப் படைகளில் தீவிரமாக நியமித்துக் கொண்டிருந்த நேரத்தில் பாத்திஸ்ட்டுகளை நிர்வாகத்திலிருந்து ஒழித்துக்
கட்ட வேண்டும் என்று சலாபி வற்புறுத்தி வந்ததால் அவர் வாஷிங்டனின் ஆதரவை இழந்தார். சாதரிஸ்டுகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும்
இடையில் ஒரு சமாதான பேச்சு வார்த்தையை நடத்தியதன் மூலம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு புத்துயிர் ஊட்டிக்
கொண்டார்கள். ஜனவரியில் நடைபெற்ற தேர்தல்களில் அதற்கு பின்னர் நடந்த பதவி பேரங்களில் ஐக்கிய ஈராக் கூட்டணியுடன்
இணைந்து இடைக்கால அரசாங்கத்தின் துணை பிரதமர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
சென்ற மாதம் சலாபி வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபோது புஷ் நிர்வாகம் அவரை
பாராட்டி விருந்தளித்தது. அவரது ஈராக் தேசிய காங்கிரஸ் பல இடங்களில் வெற்றி பெற முடியாவிட்டாலும் சலாபிக்கு
அமெரிக்க ஆதரவு இருப்பதால் அவர் அடுத்த அரசாங்கத்தில் ஒரு முக்கிய பதவியை பெறக் கூடும்.
Washington Post
பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோள்காட்டி
துணை ஜனாதிபதி டிக்-செனி சலாபி ஈராக் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்ற தலைவர் என்று குறிப்பிட்டது.
ஜனவரி வரை இறுதி தேர்தல் முடிவுகள் தெரியாதிருக்கக்கூடும். அத்துடன் ஈராக்கிற்குள்
வாக்களிப்பவர்களை தவிர வெளிநாடுகளில் வாழ்கின்ற 1.5 மில்லியன் ஈராக்கியர்களும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள்.
என்றாலும் இறுதி முடிவுகள் வருவதற்கு முன்னரே, வாஷிங்டனின் நலன்களை பாதுகாக்கின்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்காக
போட்டிக் குழுக்களுக்கிடையில் பின்னணியில் இழிவான பேரங்களை அமெரிக்க அதிகாரிகள் நடத்துவார்கள். |