:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
Rice defends illegal "renditions," threatens to
reveal European collaboration in US crimes
கைதிகள் சட்ட விரோதமாக "கடத்தப்படுவதை'' பாதுகாக்கும் ரைஸ், அமெரிக்கக் குற்றங்களில்
ஐரோப்பிய ஒத்துழைப்பை அம்பலப்படுத்துவதாக அச்சுறுத்தல்
By Chris Marsden
6 December 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது
நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தரவேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில்
தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பிய விமர்சர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிபோடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை
ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான
நிலையங்களை CIA
விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும்
CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக
செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார்.
மூன்றாம் தரப்பு நாடுகளில் கைதிகளை கடத்தும் நடவடிக்கைகளை பயங்கரவாதிகள்
என்று சந்தேகப்படுபவர்களுக்கு எதிராக எந்த நீதிமன்ற நடைமுறையும் இல்லாமல் அமெரிக்காவின் சட்டங்கள் செயல்படாது
என்று அமெரிக்க அரசாங்கம் கருதுகிறதோ அத்தகைய நாடுகளில் கைதிகளை கடத்துகின்றது. அமெரிக்க வெளியுறவுத்துறையினால்
சித்திரவதையை கடைபிடிக்கும் நாடுகள் என்று சுட்டிக்காட்டும் நாடுகளுக்கு வாஷிங்டன் வழக்கமாக இக்கைதிகளை
அனுப்புகிறது. ''அசாதாரணமான கடத்துதல்'' என்பது வெளிநாட்டு மண்ணில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை
வெளிநாடுகளில் அமைந்திருக்கும் சிறைச்சாலைகளில் காணாமற்போவதற்கு முன்னர் அந்த நபரையே கடத்திச்
செல்லும் நடவடிக்கையை குறிப்பதாகும்.
ரைஸ் தமது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை பேர்லினில் ஆரம்பிக்கிறார் மற்றும்
நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரஸ்சல்ஸ் செல்கிறார். அவரது
விஜயத்திற்கு முன்னர் குறைந்தபட்சம் எட்டு ஐரோப்பிய நாடுகள் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கடத்தல்
நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட CIA
விமான நிலையங்களை பயன்படுத்தியதா என்பது பற்றி விளக்கம் தருமாறு
வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜேர்மன் மற்றும் பிரிட்டனின் விமான நிலையங்கள் மிகவும் அடிக்கடி
பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
ஜேர்மனிக்கு புறப்படுவதற்கு முன்னர் ஆன்ரூஸ் விமானப்படைத்தளத்தில் திங்களன்று
உரையாற்றியபோது வெளிநாடுகளுக்கு விமானத்தின் மூலம் சந்தேகத்திற்குரிய நபர்களை உண்மையில் அமெரிக்கா
கொண்டு சென்றது மற்றும் பல தகாப்தங்களாக இப்படித்தான் செய்து வருகிறது என்று ரைஸ் குறிப்பிட்டார். இது
சித்திரவதையை செய்வதற்கு வசதியாக அல்ல என்றும் சர்வதேச சட்டத்தின்கீழ் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது
என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இரகசிய சிறைகளை
CIA நடத்தி
வருகிறதா என்பதை கூற மறுத்துவிட்டார். ''புலனாய்வு சட்ட அமுலாக்கம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின்
வெற்றிக்கு ஊறு விளைவிக்கும் தகவலை நாம் விவாதிக்க முடியாது. இதே கருத்தை இதர நாடுகளும்
பகிர்ந்துகொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று குறிப்பிட்டார். அத்தகைய
CIA சிறைகள் போலந்து மற்றும் ரூமேனியாவுடன் இதர ஆறு
நாடுகளிலும் இருக்கக்கூடும் என்று அறியப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்குப் பின்னர் ரைஸ் தனது தாக்குதலை நேரடியாக ஐரோப்பா மீது
திருப்பினார். அடிக்கடி ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் உதவியிருக்கின்றன.
அவற்றால் பயனும் அடைந்திருக்கின்றன என்று வலியுறுத்திய அவர் ''சில அரசாங்கங்கள் அமெரிக்காவுடன்
புலனாய்வு, சட்ட செயல்பாடு அல்லது இராணுவ விவகாரங்களில் ஒத்துழைத்து வருகின்றன. அந்த ஒத்துழைப்பு
என்பது ஒரு இருவழிப்பாதையாகும்.'' என குறிப்பிட்டார்.
''அமெரிக்கா இதர நாடுகளின் இறையாண்மையை----மதிக்கிறது மற்றும்
தொடர்ந்தும் மதித்துவரும்'' என்று அவர் மேலும் கூறினார். மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது தீங்கு
எதுவுமில்லாத சொற்றொடராக காணப்படும் இது உண்மையில் ஐரோப்பாவிற்கு எதிராக விடுவிக்கப்பட்ட ஒரு
அச்சுறுத்தலாகும். இதர நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா மறுக்கிறது என்று சொல்வதன்மூலம்
CIA விமானங்கள்
பறப்பது பற்றி ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு தகவல் தரப்பட்டது என்று பொருள்பட ரைஸ் குறிப்பிட்டார்.
சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறுகின்ற இதர நடைமுறையில் கடத்துதல் உட்பட பயங்கரவாதத்திற்கு எதிரான
போர் என்று அழைக்கப்படுவதன் ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்காவோடு ஐரோப்பா ஒத்துழைத்தை அவர்
மிகப்பொதுவாக நினைவூட்டுகிறார்.
டிசம்பர் 4ல் உரையாற்றிய ஜனாதிபதி புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ஸ்டீபன் ஹாட்லே அதே கருத்துப்பட பேசினார், ''எங்களோடு ஒத்துழைத்துக் கொண்டிருக்கும் நாடுகளை
ஆபத்திற்கு உள்ளாக்கும் வகையில்'' பகிரங்கமாக கடத்துதல் பற்றி பேசுவது அமைந்துவிடும். அவர் குறிப்பிட்டது
நேரடியாக CIA
இனால் ''கடத்தப்பட்டு'', கைது மற்றும் சித்திரவதைகளில் நேரடியாக
ஈடுபடுகின்ற எட்டு நாடுகளுக்கும் அப்பால் செல்கின்ற நோக்கில் அமைந்தவை.
ஐரோப்பாவின் தலைநகர்களில் அத்தகைய அச்சுறுத்தல்கள் கேட்காமல்
விடப்படபோவதில்லை மற்றும் ரைஸ் ஐரோப்பிய அதிகாரிகளுடன் நடத்தும் தனிப்பட்ட கூட்டங்களில் இதைவிட
அதிகமான வெளிப்படையாக ரைஸ் கூறுவார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஒரு ஐரோப்பிய இராஜதந்திரி
ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ''ஐரோப்பிய அரசாங்கங்கள் இதை வற்புறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பது மிகத்தெளிவாக உள்ளது... பல வாரங்கள் அவர்கள்
நியாயப்படுத்துவதிலேயே உறுதியாக நின்றனர் ஆனால் திடீரென்று அந்த எல்லைக்கோடு நம்ப முடியாத அளவிற்கு
கடுமையாகிவிட்டது'' என கூறினார்.
தங்களது அமெரிக்க நண்பரிடமிருந்து சம்பிரதாய முறையில் ஒதுங்கி நின்றுகொள்ள
ஐரோப்பிய அரசாங்கங்கள் விரும்புகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை மற்றும் அதே நேரத்தில்
அமெரிக்கா தாங்கள் உடந்தையாக செயல்பட்டதை அம்பலப்படுத்திவிடக்கூடும் என்ற சாத்தியக்கூறு பற்றி
பயப்படுகின்றனர். கடத்துதல் தொடர்பாக பொதுமக்களின் ஆத்திரம் வளர்ந்துவருகிறது.
எடுத்துக்காட்டாக பிரிட்டனில் லிபர்டி (Liberty)
என்கிற மனித உரிமைகள் குழு சிவில் விமானப் போக்குவரத்து மசோதாவிற்கு ஒரு திருத்தத்தை தாக்கல்
செய்யவிருக்கிறது. அதன்படி பிரிட்டனின் விமான வான்வெளி வழித்தடத்தில் பறக்கின்ற எந்த விமானத்திலாவது
வழக்கத்திற்கு மாறான கடத்துதல் கைதிகள் ஏற்றிச்செல்லப்படுகிறார்கள் என்று சந்தேகிப்பார்களானால் அந்த
விமானத்தை தரையிறங்க கட்டளையிட்டு போலீசாரும் சுங்க அதிகாரிகளும் சோதனையிட செய்யுமாறு உள்துறை
செயலர் கடமைப்படுவார். அமெரிக்காவின் சிவில் உரிமைகளுக்கான ஒன்றியம்
(ACLU) ஒரு
இரகசிய CIA
சிறைக்கு ஆப்கனிஸ்தானுக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஆணை ஏற்றிச்சென்று சித்திரவதை செய்ததாக
கூறப்படுகின்ற அந்த நபரின் சார்பில் CIA
மீது அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்தை மீறியதாக வழக்கு தொடரப்போவதாக
அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கைதிகளை ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற விமானங்களை இயக்குகின்ற
அல்லது சொந்தமாக வைத்திருக்கின்ற பெருநிறுவனங்களின் பெயர்களை வெளியிடப்போவதாகவும்,
ACLU
அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம்விட மிகுந்த கவலை தருவது பிரிட்டனின் சர்வக்கட்சி நாடாளுமன்றக்குழு
கடத்துதல் மோசடி தொடர்பாக புலன் விசாரணை செய்து ஒரு அறிக்கை தருவதற்கு நியூயோர்க் பல்கலைக்கழகத்தின்
சட்டப் பள்ளியை சார்ந்த மனித உரிமைகள் மற்றும் பூகோள நீதி மையத்தை ஏற்பாடு செய்ததுதான். அந்த அறிக்கையில்
கூறப்பட்டிருப்பது பிரதமர் டோனி பிளேயரின் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு
CIA கடத்தும் விமானங்களை அனுமதித்திருக்குமானால் அது சர்வதேச
சட்டத்தை மீறிய குற்றமாகும்.
அந்த அறிக்கை முடிவுரையில் கூறியிருப்பது: ''ஒரு தவறான செயலை புரிவதற்கு ஒரு
அரசிற்கு உதவுகின்ற அல்லது ஒத்துழைக்கின்ற மற்றொரு அரசு சர்வதேச அளவில் அப்படிச் செய்ததற்கு
பொறுப்பாகும்.... நூரம்பேர்க் விசாரணைகளிலிருந்து குறைந்தபட்சம் சர்வதேச குற்றவியல் சட்டத்தில்
உடந்தையாக செயல்பட்டவர்களின் சட்டப்பூர்வமான பொறுப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.''
ஒரு குற்றவியல் சதியாலோசனையில் பிரிட்டனும் பல பிற ஐரோப்பிய
அரசாங்கங்களும் உடந்தையாக உண்மையில் செயல்பட்டது பற்றிய விவரங்கள் தொடர்ந்து பகிரங்கமாக
வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகளுக்கு பல அமெரிக்க ஊடகங்கள்தான் மூலமாகவுள்ளன.
ஜேர்மனியில் CIA
விமானங்கள் அடிக்கடி மிகப்பெருமளவில் குறைந்தபட்சம் 437 தடவைகள் இறங்கியிருக்கின்றன. இவ்வளவு விமானங்கள்
அரசாங்கத்திற்கு தெரியாமல் இறங்கியிருக்கும் என்பது நம்பகத்தன்மை கொண்டதல்ல. அத்தகைய சந்தேகங்கள்
Washington Post
டிசம்பர் 4ல் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. தனது குடிமக்களில் ஒருவர்
பிடிக்கப்பட்டு மூன்றாவது நாட்டில் ஒப்படைக்கப்பட்டு
CIA இனால் தவறான முறையில் கைது செய்யப்பட்டது பற்றி
ஜேர்மனி மெளனம் சாதித்தது என்று அந்த செய்தி குற்றம்சாட்டியது.
CIA பின்னர் அந்த
மனிதர் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
2003 டிசம்பர் 31ல் மாசிடோனியாவில் காலித் எல் மாஸ்ரி கைது செய்யப்பட்டு
அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஆப்கானிஸ்தானிலுள்ள இரகசிய சிறைக்கு விமானத்தில் கொண்டு
செல்லப்பட்டார். Washington Post
தந்துள்ள தகவலின்படி விமான குறிப்பு புத்தகம் காட்டுவதுபோல்
CIA
இன் முன்னோடி நிறுவனத்தின் பெயரில் விமான பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாஸ்ரி சொல்லியபடி
அவர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அன்று அந்த விமானம் மாஸிடோனியாவிலிருந்து பறந்திருக்கிறது.
CIA தான் ஒரு
தவறான மனிதரை கைது செய்திருப்பதை அறிந்ததும் ஐந்து மாதங்களுக்கு பின்னர் அவர் ஐரோப்பாவிற்கு திரும்ப
கொண்டுவரப்பட்டார்.
அந்த செய்தி பத்திரிகை வெளியிட்டிருப்பது; ''CIA
இன் அல்-கொய்தா பிரிவின் பயங்கரவாத எதிர் நடவடிக்கை
மையத்தலைவர் 'அவர் தேவையான ஒருவர் என்று நம்பியதால்', மாஸ்ரி ஐந்து மாதங்கள் சிறையில்
வைக்கப்பட்டிருந்ததாக ஒரு முன்னாள் CIA
அதிகாரி குறிப்பிட்டார். அவருக்கு உண்மையில் தெரியாது. அவர் ஒரு அனுமானத்தின் பெயரில்தான் கைது
செய்தார்.''
மாஸ்ரி விடுதலை செய்யப்படுவதற்கு முன்னரே, 2004 மேயில் ஜேர்மனியின்
அமெரிக்க தூதர் டானியல் கோட்ஸ் உள்துறை அமைச்சர் ஒட்டோ ஷில்லியிடம் மாஸ்ரி தவறான முறையில் கைது
செய்யப்பட்டார்'' என்று கூறினார். ''மாஸ்ரி பகிரங்கமாக இதுபற்றி வெளியிட்டாலும்கூட, ஜேர்மன்
அரசாங்கத்திடம் சொல்லப்பட்டதை ஜேர்மன் அரசாங்கம் வெளியிடக்கூடாது என்ற ஒரு கோரிக்கையும்
விடப்பட்டது'' என்று போஸ்ட் எழுதுகிறது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட அரசு
வழக்கறிஞர் உட்பட ஜேர்மன் அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு மதிப்பளித்தனர்.
Time சஞ்சிகையும் இந்த
உண்மையை தெளிவுபடுத்துகிறது: ''பகிரங்கமாக அமெரிக்காவின் கண்களில் குத்துகின்ற நாடுகள்கூட பின்னணியில்
அமெரிக்காவோடு கைகோர்த்து செயல்படுகின்றன. ஈராக் கொள்கை தொடர்பாக பிரான்சின் எதிர்ப்பிற்கு எந்த
விளக்கமும் சுருக்க உரையும் தர வேண்டியதில்லை அது ஒரு இரகசிய கூட்டு நடவடிக்கை நிலையத்தை
CIA உடன் பாரிஸ்
நகரில் கூட்டணியினரின் தளம் (Alliance Base)
என்றழைக்கப்படும் நிலையத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறது. மற்றும் அந்த அமைப்புடன் உள்ள உறவு
"சுதந்திரத்தை நாடும்'' கும்பல்களுக்கு வியப்பூட்டுவதாக அமையும்.''
Washington Post
கட்டுரை வாஷிங்டனுடன் ஐரோப்பிய வல்லரசுகள் உடந்தையாக செயல்பட்டதன் மூலம் புரிந்த பாரிய குற்றங்களை
வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
அதன் மதிப்பீட்டின்படி CIA
உம் மற்ற இதர புலனாய்வு அமைப்புக்களும் அவர்களது
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் 3,000 மக்களை பிடித்தார்கள். அவர்களில் பலர் எந்தக்
குற்றமும் செய்யாத அப்பாவிகள் மற்றும் அவர்கள் மிக அற்பமான சாக்குப்போக்குகள் மூலம் கைது
செய்யப்பட்டனர். CIA
அப்படிச் சொல்கிறது என்பதைத்தவிர அவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லை ஏனெனில்
அவர்களுக்கு எதிரான சாட்சியத்தை சோதித்து பார்ப்பதற்கு எந்த அமைப்பும் இல்லை வேறு எந்த ஆதாரமும்
இல்லை. ஒரு அதிகாரி Washington Post
இடம் கூறியது என்னவென்றால் தவறாக கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் ஒரு அல்-கொய்தா உறுப்பினருக்கு குறைந்த
மதிப்பெண்கள் வழங்கினார் என்பதால் அவரை சுட்டிக்காட்டினர்.
CIA நடவடிக்கையை பயங்கரவாத
எதிர்ப்பு நிலையம் (CTC)
நடத்தி வருகிறது. Post
தந்துள்ள தகவலின்படி வழக்கு அதிகாரிகள் இணை இராணுவத்தினர், ஆய்வாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை
கொண்ட கடத்தல் குழு ஆட்களை கடத்துவதையும், ஆட்கள் காணாமல் போவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
ஒரு நகரத்தின் தெருவிலோ அல்லது ஒரு தொலைதூரத்து மலைக்குன்று பகுதியிலோ, அல்லது உள்ளூர் அதிகாரிகள்
காத்திருக்கையில் ஒரு விமான நிலையத்தின் ஒதுக்குப்புறத்திலோ யாராவது ஒருவரை எப்படி பிடிப்பது என்பதுதான்
அவர்களது பணி.
'' கடத்தும் குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒரு எளிய ஆனால் நிர்ணயிக்கப்பட்ட
நடைமுறையை பின்பற்றுகின்றனர்: முகமூடிகள் உட்பட உச்சந்தலையிலிருந்து கால் பாதத்தின் விரல்கள் வரை கறுப்பு
உடையால் கைது செய்யப்பட்டவர்களை மூடி அவர்களது கண்களைக் கட்டி புதிதாக பிடிக்கப்பட்டவர்களின் ஆடைகளை
வெட்டி அதற்குப் பின்னர் குடல் கழுவும் மருந்தையும், தூக்க மருந்துகளையும் தருவார்கள். கைதிகள் அவர்களது
பின்பகுதியில் வைத்துக்கொள்வதற்கு ஒரு துணியையும், ஒரு நாள் பயணத்திற்கு தேவைப்படுகின்ற ஆடையையும்
தருவார்கள்.``
9/11-க்கு பின்னர் பயங்கரவாத எதிர்நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்ட
CIA அதிகாரிகளின் எண்ணிக்கை 300 இலிருந்து 1200ஆக நான்கு
மடங்கு பெருகிவிட்டது. வெள்ளை மாளிகையோடும் ஜனாதிபதி புஷ்சோடும் நேரடியாக தொடர்பு வைத்திருந்த ஜே.
காப்பர் பிளாக் தொடக்கத்தில்
பயங்கரவாத எதிர்ப்பு நிலைய (CTC)
தலைவராக பணியாற்றியவர்.
Post விளக்குகிறது:
''9/11 தாக்குதல்களுக்கு ஆறு நாட்களுக்கு பின்னர் புஷ் ஒரு முக்கிய இரகசிய ஜனாதிபதி குறிப்பில்
கையெழுத்திட்டார். இதற்கு முன்னர் கண்டிராத அளவில் இரகசிய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அது அதிகாரமளித்தது
அதில் படுபயங்கரமான நடவடிக்கைகளும் மூன்றாவது நாடுகளில் கைதிகளை கடத்துவதும், தவறான தகவல் தரும்
பிரச்சாரங்களும் மற்றும் அல்-கொய்தா எதிரிக்கு எதிராக வலைத்தள தாக்குதல்களும் அடங்கியிருந்தன என்பதை
நடப்பு மற்றும் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் பிளாக்கின் அணுகுமுறை சில
CIA அதிகாரிகள்
நம்பியதைப் போன்று அந்தப் பணியை முடிப்பதற்கு தேவைப்படும் சரியான நடவடிக்கைகளாகும்.``
Top of page |