World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush, Democrats back protracted war in Iraq

ஈராக்கில் நீடிக்கும் போருக்கு புஷ், ஜனநாயக கட்சியினர் ஆதரவு

Statement of the WSWS Editorial Board
1 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதை மக்களில் ஒரு கணிசமான பெரும்பான்மையினர் ஆதரிக்கின்ற நிலையில் புஷ் நிர்வாகமும் அவரது ஜனநாயகக் கட்சி கூட்டணியினரும் ஒரு நீடித்த இரத்தம்தோய்ந்த காலனித்துவ போரை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்களை அச்சுறுத்துவதற்கு இணை சக்தியாக முயன்று வருகிறார்கள்.

போரின் ஆதரவில் இருகட்சி சார்ந்த பிரச்சாரத்தில் செனட்டர் ஜோசப் லிபர்மேனிடமிருந்தும் (கனக்டிக்கட் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்தும் அறிக்கைகள் பின்னுக்கு பின் சுருக்கமாக தொகுத்துரைக்கப்பட்டது இருவரும் ஈராக்கில் ''வெற்றிக்கான ஒரு மூலோபாயத்தை'' அறிவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர்.

செவ்வாயன்று Wall Street JournalLTM லிபர்மேனின் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன அதே நேரத்தில் புஷ் கடற்படை கழகத்தில் கப்பற்படை வீரர்களிடையே ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கூட்டத்திடையே அடுத்த நாள் உரையாற்றினார். ஈராக்கில் படுபயங்கரமான உண்மை நிலவரங்களுக்கு பெரிதும் வேறுபட்டதாக அமைந்திருக்கும் வகையில் அமெரிக்க கொள்கை வெற்றி பெற்றிருப்பதாக இருவரும் கூறினர்.

இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கும் பாக்தாத்திற்கு இடையில் தொடர்புகள் இருந்ததாக கூறிய மோசடி மற்றும் அரசாங்கம் வேண்டுமென்றே பொய்களின் அடிப்படையில் ஒரு ஆக்கிரமிப்புப் போருக்கு நாட்டை இட்டுச் சென்றது என்பதை அமெரிக்க பொதுமக்களின் பரந்த தட்டினர்கள் உணர்ந்துகொண்டுவருவதால் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் குடியரசுக் கட்சிக்காரர்களும் பாரிய அரசியல் நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தற்போது சாவுகள் எண்ணிக்கை 2,110 ஆக உள்ள அமெரிக்கத் துருப்புக்களிடையே பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போர் தொடர்பான அணுகு முறைகளில் பாரிய மாற்றம் தூண்டிவிடுவதுடன், சூறாவளி கத்திரினாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அலட்சிய போக்கில் நடந்து கொண்டது முதல் CIA தொடர்பான கசிவுகள் புஷ் நிர்வாகத்தின் கிரிமினல் குற்றத்தன்மைகள் அம்பலப்படுத்தப்பட்டிருப்பதுடன் மற்றும் வலைபோன்ற ஊழல் மோசடிகளும் குடியரசுக் கட்சியை மூழ்கடித்துள்ளது.

அதிகாரிகள் குழுக்களுக்குள்ளேயும் போருக்கான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. அது அஞ்சுவது என்னவென்றால் ஆக்கிரமிப்பும் எதிர்கிளர்ச்சி பிரச்சாரமும் அமெரிக்க இராணுவத்தை சீர்குலைப்பதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இராணுவ தலைமை அதிகாரிகளுக்கிடையில் நிலவுகின்ற இந்த கருத்து வேறுபாடுகளின் காரணமாகத்தான் இந்த மாத தொடக்கத்தில் பென்சில்வேனியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் முர்தா ஓய்வு பெற்ற ஒரு மரைன் கேர்னல் மற்றும் பென்டகனின் நீண்டகால ஆதரவாளர் ஆறு மாதங்களுக்குள் ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்க துருப்புக்களும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். வியட்நாம் முதல் ஒவ்வொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையையும் ஆதரித்து வந்த ஒருவரிடமிருந்து இந்த முன்மொழிவு வந்திருப்பது வெள்ளை மாளிகையை நெருக்கடியில் விழ வைத்துவிட்டது மற்றும் இப்போது நடைபெற்று வருகின்ற மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை நடத்துவதற்கு தூண்டுதலாக அமைந்துவிட்டது.

இந்த நிர்வாகம் இப்போதும் பெற்றிருக்கின்ற பெரிய சாதகம் என்னவென்றால் அது போருக்கான ஆதரவை அதன் தெளிவான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் பெற்றிருக்கிறது. நிதியாதிக்க சிறுகுழுவின் அடிப்படை நலன்களை இரண்டு கட்சிகளும் தற்காத்து நிற்பதால் பரந்த போர்-சார்பு பொது கருத்து அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களின் அடிப்படை ஐக்கியத்தை எதிரொலிக்கிறது.

தொடக்கத்திலிருந்தே இந்த போரின் நோக்கம் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதோ ''ஜனநாயகத்தை'' வளர்ப்பதோ அல்ல ஆனால் பாரிய அமெரிக்க இராணுவ வல்லமையை பயன்படுத்தி உலகின் எண்ணெய் வளங்களில் பெரும்பகுதியை வைத்திருக்கும் ஒரு பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதுதான் என்பதை அரசியல் ஸ்தாபனத்தில் மற்றும் அமெரிக்க நிதியங்களின் உயர்ந்த தலைமைகளும் பெருநிறுவன உலகமும் புரிந்திருக்கின்றனர். இந்த ஆளும் செல்வந்தத் தட்டின் பிரதான பிரிவுகள் விரிவான இலாபங்களையும் மூலோபாய அணுகூலங்களையும் பார்த்ததால் அத்தகைய கட்டுப்பாட்டை பெறுவதற்கு எவ்வளவு விலையும் தரலாம் --அமெரிக்க மற்றும் ஈராக் மக்கள்-- அதேபோல் போர்ச் செலவாக ஆறு பில்லியன் ஒரு மாதத்திற்கு செலவிடப்பட்டது.

ஒரு குற்றமிக்க போர் மிகவும் ஆழ்ந்த அர்த்தத்தில் அது தொடர்ந்து நீடிப்பதில் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கும் புஷ்ஷிற்கும் இடையே இருகட்சி கூட்டணி நிலவுவதில் இதுதான் அடிப்படையாகும். இதன் காரணமாகத்தான் அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்களின் போர் எதிர்ப்பு உணர்வுகளை இரண்டு கட்சிகளுமே அலட்சியம் செய்கின்றன.

இந்த கூட்டணியின் மிக வெறுக்கத்தக்க வெளிப்பாடு Wall Street JournalLTM தலையங்க பக்கங்களில் லிபர்மேன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது இவர் குடியரசுக் கட்சி வலதுசாரிகளின் மிகவும் உறுதியான குரல். அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக ''உண்மையான முன்னேற்றம்'' ஈராக்கில் உருவாகி வருவாக லிபர்மேன் கூறுகிறார் மற்றும் அமெரிக்க நவ-காலனித்துவ நடவடிக்கை ஏதோ ஒரு வகையில் ஈராக் மக்களுக்கு ஒரு ''நவீன சுய-ஆட்சி கொண்ட தனக்கு தானே பாதுகாப்பு தருகின்ற நாட்டை'' தந்திருக்கிறது என்றும் கூறுகிறார்.

அவர் நகைப்பிற்கிடமான ஒப்பாரி வைத்திருக்கிறார். ஈராக்கில் நடந்து வருகின்ற போராட்டமானது, ''சுதந்திரத்தோடும் வாய்ப்புக்களை பெற்றும் செல்வச் செழிப்போடும் வாழ விரும்பும் 27 மில்லியன் ஈராக்கியர்களுக்கும் ஏறத்தாழ 10,000 பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெறுகிறது'' என கூறுகின்றார்.

27 மில்லியனுக்கு 10,000 பேர் என்ற வித்தியாசம் உண்மையாக இருக்குமானால் 2,7000 பேருக்கு 1 வீதம் என்ற கணக்கில் பார்க்கும் போது ஏன் 160,000 அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கிற்கு தேவைப்படுகின்றன மற்றும் அவர்கள் ஏன் எதிர்ப்பை ஒடுக்கும் வல்லமை இல்லாதவர்களாக அல்லது பாக்தாத்தின் மையப் பகுதியை கூட பாதுகாக்க முடியாது உள்ளனர்? இந்த முரண்பாடுகளை விளக்குவதற்கு லிபர்மேன் கவலைப்படவில்லை. அல்லது அவர் இந்த ''10,000'' பேர் ஏன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை அதை விட பல மடங்கு ஈராக்கியர்களை சிறை வைத்த பின்னரும் அல்லது ஆக்கிரமிப்புப் படைகள் கொன்று குவித்த பின்னரும் எப்படி அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்-----சென்ற ஆண்டு ஒரு வாரத்திற்கு 150 வீதம் நடைபெற்ற கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் இப்போது 700 ஆக அதிகரித்திருப்பது எப்படி என்பதையும் விளக்கவில்லை.

ஈராக்கின் 82 சதவீதமான மக்கள் ''இப்போதிலிருந்து ஓராண்டில் தங்களது வாழ்வு ஈராக்கில் மேம்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக'' காட்டும் புனையப்பெற்ற கருத்துக் கணிப்புக்களை அவர் மேற்கோள்காட்டுக்கிறார். மேலும் நிலவரம் படுமோசமடையாமல் எப்படி இருக்க முடியும் என்பதை பல ஈராக்கியர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

80 சதவீத ஈராக்கியர் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று கருத்துக் கணப்புக்களில் கூறப்பட்டிருப்பதை லிபர்மேன் குறிப்பிடவில்லை அல்லது அண்மையில் கெய்ரோவில் போட்டி சியைட், குர்திஸ் மற்றும் சுன்னி தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற போது அவர்கள் தயாரித்த பொது கருத்து அடிப்படையிலான அறிக்கையில் அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான ''கால அட்டவணையை'' கோரினர். அது புஷ்ஷூம் அவரும் நினைத்து பார்க்க முடியாதது என்று கூறுகின்றனர்.

மாறாக அமெரிக்க மக்கள் போர் தொடர்பாக ''தோல்வி மனப்பான்மைக்கு'' இடம் தந்திருப்பதை அவர் கடிந்துகொள்கிறார். ''ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி புஷ் அமெரிக்காவை ஈராக் போரில் ஈடுபடுத்துவதற்கு எப்படி செயல்பட்டார் என்பது பற்றி அதிக முக்கியத்துவப்படுத்துகிறார்களே தவிர வரும் ஆண்டுகளிலும் மாதங்களிலும் ஈராக்கில் நமது முன்னேற்றம் எப்படி தொடர வேண்டும் என்பதில் அவர்கள் கவலைப்படவில்லை'' என்று அவர் நாடாளுமன்றத்திலுள்ள தனது சொந்த கட்சிக்காரர்கள் சிலரை தாக்குதலுக்குட்படுத்துகிறார்.

புஷ் நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் எப்படி அமெரிக்காவை போருக்கு இட்டுச் சென்றது என்பது பொருத்தமற்ற பழைய காலத்து வரலாறு அல்ல. 2003 இல் நடத்தப்பட்ட படையெடுப்பு போர்க்குற்றம் என்ற சொல்லின் கடுமையான சொல்லுக்கு பொருத்தமானது-----அது ஒரு ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத ஆக்கிரமிப்பு போர், அது நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட அடிப்படை குற்றமாகும். அது இந்தப் போருக்கான காரணங்கள் குறித்து நிர்வாகம் பொய் சொல்லியது ஈராக் ஒரு அணு ஆயுத பயங்கரவாத தாக்குதல் மூலம் அமெரிக்க நகரங்களை அச்சுறுத்தி கொண்டிருப்பதாக கூறி அமெரிக்க மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு பயமுறுத்த முயன்றது.

இந்த அடிப்படையில் ஒரு போரை தொடக்க முடியும் என்ற உண்மையை ஜனநாயகவாதிகளிடமிருந்து உண்மையான எதிர்ப்பு எதுவும் இல்லாதது ஆளும் செல்வந்தத் தட்டினர் எந்த அளவிற்கு அமெரிக்க மக்களது ஜனநாயக உரிமைகளை முற்றிலும் துச்சமாக மதிக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய ஒரு குற்றமிக்க மற்றும் சூறையாடும் முயற்சி மூலம் எந்த சொற்களின் அர்த்தத்திலும் முன்னேற்றம் ஏற்பட முடியாது புதிய மற்றும் அதைவிட பெரிய குற்றங்கள் மட்டுமே நடக்கும்.

அண்மையில் லிபர்மேன் ஈராக்கிற்கு விஜயம் செய்த போது ''தூய்மைப்படுத்தும் நிலைநாட்டும் மற்றும் உருவாக்கும்'' பணி நடப்பதை பார்த்ததாக பெருமையடித்துக் கொண்டார் ''தூய்மைப்படுத்துவதிலும் நிலை நாட்டுவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

''தூய்மைப்படுத்துவது'' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான வார்த்தைதான் நாஜிக்கள் பயன்படுத்திய ''அழித்தொழித்தல்'' என்ற சொல்லாகும். அது கிழக்கு ஐரோப்பிய யூதர்களையும் தங்களது இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அனைத்து இதர பிரிவினர்களையும் ''தூய்மைப்படுத்துவதை'' அவர்கள் இவ்வாறு வர்ணித்தனர். பல்லூஜாவிலும் இதர இடங்களிலும் பார்த்த கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் சிவிலியன் மக்களின் வெகுஜன வெளியேற்றுகின்ற கொள்கையை குறிக்கும்.

''கட்டியெழுப்பப்பட்டது'' என்ற நடவடிக்கையை பொறுத்தவரை ''மிதமிஞ்சிய அளவிற்கு பணம் வீணாக்கப்பட்டிருக்கிறது அல்லது திருடப்பட்டிருக்கிறது'' தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதை ஜனநாயகக் கட்சி செனட்டர் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யாரால் அப்படி நடந்தது என்பதை நேர்த்தியாய் அவர் தவிர்த்தார் ஏனெனில் அவர் அரசியல்ரீதியாக தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களை பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவர்களைத்தான் அவரும் நிர்வாகமும் தங்களது ஆதரவிற்காக நம்பியிருக்கிறது.

அடுத்த நாள் புஷ்ஷின் உரைக்கு ஒரு முன் கருத்தாக லிபர்மேனின் கட்டுரை அமைந்திருந்தது மற்றும் அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்படுவதற்கு எந்த காலக்கெடுவையும் நிர்ணயிப்பதை புறக்கணிப்பதற்கான ஒப்புதலை கனடிக்கட் செனட்டர் மேற்கோள்காட்டியதில் ஜனாதிபதி பிரதி உபகாரமாக செயல்பட்டார். அமெரிக்க இராணுவம் ஈராக்கில் அல்லது அருகில் வருடக்கணக்கில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த தேவையாகும் என்ற ஓரளவிற்கு வெளிபடையான லிபர்மேனின் மதிப்பிட்டை தமது உரையில் சேர்த்துக் கொள்ளாது அவர் புறக்கணித்து விட்டார்.

முதலில் போரை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே பீதிபரப்பும் முறைகளை புஷ் திரும்ப குறிப்பிட்டார் 2001 செப்டம்பர் 11ல் நியூயோர்க் நகரம் மற்றும் வாஷிங்டன் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதாக பழி போடப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாதிகளோடு ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களை ஒப்பிட்டார்.

''நாம் ஈராக்கில் அந்த எதிரியோடு சண்டையிட்டு அழிக்காவிட்டால் அவர்கள் இயங்காது இருக்க மாட்டார்கள். நமது சொந்த எல்லைகளுக்குள் உலகம் முழுவதிலும் அமெரிக்கர்களுக்கு எதிராக அவர்கள் சதித்திட்டம் தீட்டுவார்கள் மற்றும் கொலையும் செய்வார்கள். இந்த பயங்கரவாதிகளோடு ஈராக்கில் போரிடுவதன் மூலம் சீருடையில் உள்ள அமெரிக்கர்கள் அமெரிக்க மக்களின் ஒரு நேரடி அச்சுறுத்தலை முறியடித்துக் கொண்டிருக்கின்றனர்'' என்று புஷ் அறிவித்தார்.

இது ஒரு துணிச்சலான பொய்யாகும். ''ஈராக்கில் எதிரியோடு போரிடுவது மற்றும் அழிப்பது என்பது, நகரங்களில் குண்டுவீசுவது சோதனைச் சாவடிகளில் குடும்பங்களை கொல்வது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை சித்திரவதை செய்வது மற்றும் அபுகிரைப் மற்றும் இதர சிறைச்சாலைகளில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளாகும். இது எதிர்ப்பிற்கான புதிய வீரர்களை அணிதிரட்டுவதில் ஒரு வற்றாத வினியோகத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு போரிடுபவர்கள் ஈராக்கிற்குள் இடம் பெயர்ந்து வந்த அல்-கொய்தா உறுப்பினர்கள் என்ற வாஷிங்டனின் கூற்றுக்களை பொய்யாக்கும் வகையில் அத்தகைய ''வெளிநாட்டு போர்வீரர்களில்'' கணிசமான எண்ணிக்கை கொல்லப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை என்பது எடுத்துக்காட்டுகிறது.

கணிசமான எண்ணிக்கைக்கான அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் ஈராக்கிய மக்களுக்கு எதிரான போர் நீடிக்கும் என்று புஷ் வெளிப்படையாக விளக்கினார். ''நமது இராணுவ நடமாட்டம் தெளிவாக தெரிகின்ற அளவிற்கு இல்லாமல் குறைந்து விட்டாலும் அது தீர்க்கமாகவும் மரணம் விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கும். எங்கு எதிரி ஒழுங்கமைத்தாலும் அதை சந்திக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும்' என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகையதொரு இராணுவ நடமாட்டத்தின் தன்மை குறித்து இந்த வாரம் Seymour Hersh விவரமாக எழுதியுள்ள கட்டுரை New Yorker இல் வெளியிடப்பட்டிருக்கிறது. நடப்பு மற்றும் முன்னாள் பென்டகன் மற்றும் புலனாய்வு அதிகாரிகளது கருத்துக்களை மேற்கோள் காட்டி ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் அனுப்பும் எண்ணிக்கையை குறைப்பதோடு இணைத்து ஈராக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மிகத்தீவிரமான அமெரிக்க விமானப்படை வலிமையை பயன்படுத்திக் கொள்வதற்கான முன்மொழிவுகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று ஹெர்ஸ் எழுதுகிறார்----- இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஈராக் மக்களை பணியச் செய்வதற்கு ஒரு குண்டுவீச்சு நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்கப் போர் விமானங்கள் ஈராக்கின் மாநகர மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் எடையுள் குண்டுகளை நூற்றுக்கணக்கில் பயன்படுத்தியதால் 2002 மார்ச்சில் நடைபெற்ற ஆக்கிரமிப்பிற்கு பின்னர் 1,00,000திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதில் அந்த விமானப்படை குண்டுவீச்சுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

''இதில் உள்ள ஆபத்து பற்றி இராணுவ நிபுணர்கள் என்னிடம் கூறியது தரைப்படைகள் விலக்கிக் கொள்ளப்படும் போது அமெரிக்கர்கள் பலியாகும் எண்ணிக்கை குறையும் என்றாலும் யார் எதன் மீது குண்டு வீசுகிறார்கள் என்பதில் கண்டிப்பான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் ஒட்டு மொத்தமாக பலாத்காரத்தின் அளவும் ஈராக்கியர்கள் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்'' என்று ஹெர்ஸ் எழுதுகிறார்.

ஈராக்கிய இராணுவ பிரிவுகளுக்கு அமெரிக்க விமானப்படை ஆதரவு வழங்கும் என்ற முன் மொழிவு இன அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள ஈராக் இராணுவப் பிரிவுகள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக விமானப்படை தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்ற கலவரமூட்டும் சாத்தியக் கூறை எழுப்பியுள்ளது. ஹெர்சின் கட்டுரை தெளிவுபடுத்தியிருப்பதை போல் ஏற்கனவே அவ்விடத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

புதன் கிழமையன்று கப்பற்படை கழகத்தில் தனது உரையில் வடக்கு ஈராக்கிள்ள டெல் அபாரில் அண்மையில் நடைபெற்ற முற்றுகை அமெரிக்கா பயிற்சியளித்த ஈராக் இராணுவப்படைகள் பயன்படுத்தப்படுவதை மெய்பித்துக்காட்டுவதாக புஷ் மேற்கோள்காட்டியிருக்கிறார். ''ஈராக் படைப்பிரிவுகள் தங்களது சொந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன... எதிர் போர்வீரர்களை வேட்டையாடின மற்றும் கட்டிடங்களை பகுதி பகுதியாக சோதனையிட்டன.'' என்று புஷ் அறிவித்தார். அவர் ஒரு ஈராக் படையினன் கூறியதை ''பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும் என்ற உணர்வுதான் எங்களது நோக்கமாகயிருந்தது.'' என்பதை குறிப்பிட்டார்.

அந்த தாக்குதலில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி கூறியதை ஹெர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார் பெரும்பாலும் ஷியைட் ஈராக் படைகள் ''ஒரு ஷியைட் அவர்களை பற்றி என்ன சொன்னாலும் அந்த அடிப்படையில் எந்த சுன்னியையும் கைது செய்து வருகின்றனர். அவர்கள் ஷியைட்டுக்கள் சார்பில் சுன்னிக்களை கொல்கின்றனர்.'' என்று அந்த அமெரிக்க அதிகாரி கூறியிருந்தார். அந்தக் கொலைகளை செய்தவர்களில் ஓய்வு பெற்ற அமெரிக்க சிறப்புப் படைகளின் ஒர் போர் வீரர் தலைமையில் வந்த ஒரு ஷியைட் குடிப்படை பிரிவும் அடங்கும் என்று அதிகாரி குறிப்பிட்டார். ''என்னைப் போன்ற மக்களுக்கு அது மனச்சோர்வை ஏற்படுத்திவிட்டது'' என்று அந்த அதிகாரி ஹெர்சிடம் கூறினார்.

புஷ் மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஆகிய இரண்டு தரப்பினருமே முன்னெடுத்து வைக்கின்ற ''வெற்றிக்கான மூலோபாயத்தின்'' வருந்தத்தக்க உண்மை இதுதான். கொலைக்குழுக்கள் பழிவாங்கும் குண்டு வீச்சுக்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பை ஆதரிப்பதற்காக அது அமையும். ஈராக் மக்களுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு வருவது என்னவென்றால் வெகுஜனங்களை கொன்று அந்த நாட்டை இரத்தகளறியாக்குவதன் நோக்கமாகும். ஒரு அரை மில்லியன் ஒரு மில்லியன் அல்லது இரண்டு மில்லியன் மக்களை கொல்ல ஈடுபடுவதாக இருந்தால் கூட நாட்டையும் அதன் எண்ணெய் செல்வத்தை அமெரிக்கா ஆதிக்கத்திற்காக அதன் எதிர்ப்பை ஒடுக்குவதற்கு தேவைப்படும் அளவிற்கு ஈராக்கில் போர் குற்றங்களை பின்தொடர அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினர் தயாராகி வருகின்றனர்.

போருக்கு எதிர்பு தெரிவிப்பவர்களை மிரட்டுகின்ற ஒரு முயற்சியாக கடற்படை அதிகாரிகளிடம் பேசும் போது புஷ் குறிப்பிட்டார்: ''ஒரு பணியை முடிப்பதற்காக நீங்கள் உங்களது வாழ்வை தியாகம் செய்வதற்கு தயராகும் நேரத்தில் நீங்கள் எமது நாட்டின் தலைநகரில் உங்களது கடமையை ஆட்சேபிப்பதை கேட்க விரும்ப மாட்டீர்கள். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாஷிங்டன் DC இல் காரசாரமான வாய் வீச்சுக்கள் ஏராளமாக நடக்கும் என்றாலும் ஒன்று மட்டும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது: அது அமெரிக்க மக்கள் உங்கள் பின் நிற்கின்றனர் என்பதுதான்.''

ஒட்டு மொத்த மக்களிடையில் போருக்கு வெகுஜன எதிர்ப்பின் மங்கலான நிழல் அளவிற்கு கூட வாஷிங்டனில் விவாதங்கள் நடைபெறவில்லை என்பது தான் உண்மை. ஜனநாயகக் கட்சி தலைமை தனது சொந்த சந்தர்ப்பவாத இரட்டைவேட காரணங்களுக்காக நிர்வாகம் போரை நடத்துவது குறித்து ஆட்சேபனைகளை எழுப்பிக் கொண்டிருந்தாலும் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டது.

புஷ்சின் உரைக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு என்று கூறப்படுவது செனட் சபையின் சிறுபான்மைத் தலைவர் ஹேரி ரீடின் உரையிலிருந்து தெரிந்தது அவர் ஜனாதிபதி ''ஈராக்கில் வெற்றிக்கான ஒரு உண்மையான மூலோபாயத்தை வகுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை மீண்டும் இழந்து விட்டார்'' என்று கடிந்து கொண்டார்.

ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்துக் கணிப்புக்கள் திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டியிருப்பதை போல் பிரச்சனை ''வெற்றி'' அல்லது ''தோல்வி'' பற்றிய ஒரு மூலோபாயம் அல்ல. ஈராக்கிலிருந்து தாய் நாட்டிற்கு துருப்புக்களை கொண்டு வருவது தான் பிரச்சனை. இந்த போர் ஒரு குற்றம் என்பதை மில்லியன் கணக்கான மக்கள் உணர்ந்திருக்கின்றனர். மற்றும் இது தொடங்கப்பட்ட வழி குறித்து தார்மீக அடிப்படையில் ஆத்திரமடைந்துள்ளனர் ஈராக்கில் பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து பலாத்காரம் பயன்படுத்தப்பட்டு வருவதும் எண்ணெய் ஏகபோக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிதியாதிக்க செல்வந்தத் தட்டினர் ஆகியோரின் இலாப நலன்களை பாதுகாப்பதற்காக அமெரிக்க படையினர் கொல்லப்படுவதையும் உடல் ஊனம் அடைவதையும் கண்டு ஆத்திரமடைகின்றனர்.

அமெரிக்க மக்களில் இந்த பரவலான பிரிவை சார்ந்தவர்கள் அரசியல் உரிமையற்றவர்களாக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது கருத்துக்களும் அபிலாஷைகளும் அமெரிக்காவின் இரண்டு கட்சி முறைகளுக்குள் கடுமையாக பிரதிபலிக்கவில்லை.

இரண்டு கட்சிகளும் வளர்த்து வருகின்ற ''வெற்றிக்கான மூலோபாயம்'' ஈராக் படுகொலைகள் நீடிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் புதிய ஆக்கிரமிப்பு போர்களை மேற்கொள்ளவும் தான். ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ள போருக்கும் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டுள்ள புதிய போர்களுக்கும் எதிராக நடைபெற வேண்டிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரே வழி ஜனநாயகக் கட்சியிலிருந்து தீர்க்கமாக உடைத்துக்கொண்டு ஒரு புதிய சோசலிச கட்சியை கட்டியெழுப்புவதாகும். அது அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்த்தை சுயாதீனமான அரசியலில் அணிதிரட்டுவதற்காக போராடுவதாகும்.

2006ல் நடைபெறவிருக்கின்ற இடைக்கால தேர்தல்களில் வரவிக்கின்ற எரியும் பிரச்சனை இதுதான். 2002 தேர்தலை போன்று மீண்டும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அந்த வாக்குப் பதிவு ஈராக் போருக்கான ஒரு பொதுஜனகருத்தெடுப்பாக மாற்றப்பட்டு விடாது தடுக்க முயலுவார்கள். போருக்கு எதிரான ஒரு உண்மையான இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புவர்கள், ஈராக்கிலிருந்து துருப்புக்களை விலக்கிக் கொள்வதை நிர்பந்திப்பதாக அமைய வேண்டும் என்று விரும்புவார்கள் - ஜனநாயகக் கட்சிக்காரர்களும் குடியரசுக் கட்சிக்காரர்களும் இணைந்த இருகட்சி சார்ந்த கூட்டணியில் இருந்து தகுந்த அரசியல் முடிவுகளுக்கு வந்தாக வேண்டும்.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், சமூக பிற்போக்கு, போருக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முடிந்த வரை மிகப் பரந்த மக்களது முன்பாக இந்தத் தேர்தல்களில் சொந்த வேட்பாளரை நிறுத்தி சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிட எண்ணங்கொண்டுள்ளது. தனது பிரச்சாரத்தின் மையக்கோரிக்கையாக உடனடியாகவும் நிபந்தனை எதுவும் இல்லாமலும் ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் விலக்கிக் கொள்ள வேண்டுமென்பது இருப்பதுடன் மற்றும் இந்த போருக்கு சதித்திட்டம் தீட்டிய அனைவரையும் அரசியல் அடிப்படையிலும் குற்றவியல் அடிப்படையிலும் பொறுப்பாக்கும்.

Top of page