World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The execution of Stanley Tookie Williams

ருக்கி வில்லியம்ஸின் மரண தண்டனை நிறைவேற்றம்

By the WSWS Editorial Board
13 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

திங்களன்று கலிபோர்னியா கவர்னர் ஆர்னோல்ட் ஸ்வார்ஷ்நேக்கர் கருணை மன்னிப்புக் கொடுக்க மறுத்ததால் தொடங்கப்பட்ட மூர்க்கமான மரணதண்டனை நிறைவேற்றல் நள்ளிரவிற்கு பின்னர் ஸ்ரான்லி ருக்கி வில்லியம்ஸ்க்கு விஷ ஊசி போட்ட அரச கொலை மூலம் உச்சத்தை அடைந்தது.

தொலைக்காட்சியினால் பிடிக்கப்பட்ட மரண அறையில் காத்திருக்கும் காட்சிகள் நிறைந்த, இக்கொடூரமான நிகழ்வு, அமெரிக்க சமூகத்தின் பிற்போக்குத் தன்மை, அமெரிக்க ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் மற்றும் செய்தி ஊடக எடுபிடிகளின் சீரழிவு, ஆகியவற்றிற்கு சாட்சியமாக உள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் கிரிப்ஸ் கும்பலை நிறுவியிருந்த, 1981ல் பல கொலைகளை செய்ததற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வில்லியம்ஸ், தான் நிரபராதி என்று வலியுறுத்திக் கொண்டே மரணத்தை எதிர்கொண்டார். 51 வயதான வில்லியம்ஸ் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தன்னுடைய கும்பலின் கடந்த காலத்தை துறந்திருந்தார். சான் குவின்டின் சிறைச் சாலையில் மரணத்தை எதிர் நோக்கியிருந்த காலக்கட்டத்தில், தெருக்களில் உள்ள கும்பல்கள் பற்றி எச்சரிக்கும் பல நூல்களை சிறுவர்களுக்காக அவர் எழுதி இருந்தார்.

இவருடைய வழக்கு மரணதண்டனை எதிர்ப்பாளர்கள், முக்கியமான ஹாலிவுட் பிரமுகர்கள் மற்றும், National Assoication for the Advancement of Colored People அமைப்பின் உறுப்பினர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது; அதில் முக்கியமான ஹாலிவுட் பிரமுகர்களும், National Assoication for the Advancement of Colored People அமைப்பின் உறுப்பினர்களும் இருந்தனர். வில்லியம்ஸிற்கு மரணதண்டனை கூடாது என்று அவர்கள் ஸ்வார்ஷ்நேக்கரிடம் முறையிட்டிருந்தனர்; தன்னுடைய கடந்த காலத்தை அவர் துறந்துவிட்டதாகவும் இளைஞர்களுக்கு, குறிப்பாகவும், சமுதாயத்திற்கு மொத்தமாகவும் ஒரு நல்ல பங்களிப்பை எழுத்து மூலம் கொடுத்துள்ளார் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

ஒரு முக்கியமான ஜனநாயகக் கட்சிக்காரரை சிலநாட்களின் முன்தான் தன்னுடைய தலைமை ஊழியராக நியமித்திருந்த குடியரசுக் கட்சியை சேர்ந்த கவர்னர், வில்லியம்சின் வக்கீல்களை சந்தித்து பலநாட்கள் அவர்களுடைய முறையீட்டை பரிசீலித்தார். ஆனால் திங்கள் அன்று சான் பிரான்ஸிஸ்கோவின் 9வது சுற்று நீதிமன்றம் மரணதண்டனை நிறைவேற்றல் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்ற வில்லியம்சின் வேண்டுகோளை தள்ளுபடி செய்தபின்னர், ஸ்வார்ஷ்நேக்கர் கருணை மனுவை நிராகரித்து, மரண தண்டனையை நிறைவேற்றும் ஆறுபக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.

பல தீயநோக்கங்களை கொண்ட அரசியல் கணக்குகளால் உந்தப் பெற்ற கவர்னரின் முடிவிற்கு கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சித் தலைமையில் இருந்து தீவிர எதிர்ப்பு ஏதும் வரவில்லை. ஒரு சில அறைகுறையான விதிவிலக்குகளை தவிர, முக்கியமான ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகள் மரண அமைதியைத்தான் கொண்டிருந்தனர்.

மரணதண்டனை நிறைவேற்றப்படும் சில மணிகள் வரையில்கூட, மாநில, கூட்டாட்சிகளில் ஒவ்வொரு நீதித்துறைப் பிரிவும் தலையிடுவதற்கு மறுத்துவிட்டன: கலிபோர்னிய மாநில தலைமை நீதிமன்றம், அமெரிக்க 9வது சுற்று மேல்முறையீட்டு மன்றம், இறுதியில் தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி சாண்ட்ரா டே ஓ' கோனர் வில்லியம்சிற்காக வாதாடிய வழக்குரைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட இறுதி சட்டபூர்வ முயற்சிகளை நிராகரித்தார்.

ஸ்ரான்லி ருக்கி வில்லியம்ஸின் கொலை, 1960ம் ஆண்டு காரில் செஸ்மன் (Caryl Chessman) இதே சிறையில் மரணதண்டனை பெற்று 45 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்துள்ளது. 1948ம் ஆண்டு செஸ்மனுக்கு கொள்ளை, கடத்தல் ஆகியவற்றிற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மரணத்திற்காக காத்திருக்கும்போது அவர் நான்கு புத்தகங்களை எழுதினார்; அவர் எழுதிய அந்நான்கு நூல்களில் ஒன்று பிரபல்யமாக விற்பனையையானதுடன், அவர் சட்டத்துறையில் பயிற்சி பெறவும் காரணமானது.

அவருடைய வழக்கையொட்டி அவருடைய உயிரைப் பாதுகாக்க சக்திவாய்ந்த இயக்கம் ஒன்று தோன்றி, மத்தியகால மிச்சசொச்சமாகிய மரணதண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென கோரப்பட்டது. சர்வதேச அளவில் ஆல்பேர்ட் ஷ்வைட்சர், ஆல்டுஸ் ஹக்ஸ்லி, பப்லோ காசல்ஸ் போன்றோரும் இந்த இயக்கத்தில் பங்கு பெற்றிருந்தனர். அக்காலத்தில் செஸ்மன் 12 ஆண்டு காலம் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்ததே மரண தண்டனையின் கொடுமையான, மனிதத்தன்மையற்ற நிலைக்கு நிரூபணம் என்று வாதிடப்பட்டிருந்தது.

தான் நிரபராதி என்று எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டே செஸ்மன் மரணத்தை சந்தித்தார்; ஆனால் அவர் பட்ட துன்பம் மரண தண்டனைக்கு எதிராக ஓர் இயக்கத்திற்கு வலிமை கொடுத்தது; பின்னர் பல ஆண்டுகாலம் ஐக்கிய அமெரிக்காவில் அது அகற்றப்பட்டிருந்தது என்ற வெற்றியையும் கொண்டது.

இப்பொழுது, செஸ்மன் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை கொண்டுவரப்பட்டு 30 ஆண்டுகள் ஆன பின்னர், வில்லியம்ஸ் மரணதண்டனைக்காளாகிய 1,003 ஆவது நபராகிறார். கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மரணத்திற்கு காத்திருந்த பின்னர் அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அவர்மீது சுமத்தப்பட்டிருந்த மிகக் கொடூரமான கொலைகள் செய்த குற்றவாளிதான் அவர் என்று கொண்டாலும், 25 ஆண்டுகள் மரணதண்டனை நிறைவேற்றுபவரின் நிழலின் கீழ் மரணத்திற்காக காத்திருந்து, பின்னர் விஷ ஊசியில் வாழ்க்கை முடிதல் என்பதில் எந்தவித பகுத்தறிவோ, மனிதமுறையிலான நியாயமோ இல்லை. அதிலும் அதிகரித்தளவில் தண்டனைக்கு எதிர்ப்பு வந்துள்ள சூழ்நிலையிலும், தவறான தீர்ப்புக்கள் உள்ளன என்பதற்கான அதிகரித்த சாட்சியங்களும் இருக்கையிலும், ஏழைகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக கடுமையாக நீதித்துறை நடந்து கொள்ளும் நிலையில் இவ்வாறு நேர்ந்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் இப்பொழுது 3,415 கைதிகள் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு காத்துள்ளனர்; இதில் 54 பெண்களும் அடங்குவர். கலிபோர்னியாவில் 15 பெண்கள் உட்பட 648 பேர் காத்துள்ளனர்; கூட்டமைப்பிலேயே மிக அதிக அளவு காத்திருக்கும் நபர்கள் இங்குதான் உள்ளனர்.

1977ம் ஆண்டு மரண தண்டனை மீண்டும் கொண்டுவரப்பட்டபின்னர், கலிபோர்னியா ஆண்டு ஒன்றுக்கு 12 கைதிகளுக்கு அதை நிறைவேற்றியுள்ளது. வில்லியம்சிற்கு முன்பு இரண்டு கைதிகளுடைய கருணை மனுவை ஸ்வார்ஷ்நேக்கர் நிராகரித்துள்ளார். அவருக்கு முன் பதவியில் இருந்த ஜனநாயகக் கட்சி கவர்னரான கிரே டேவிஸ் தன்னுடைய ஐந்தாண்டு பதவிக்காலத்தில் ஐந்து அரச கொலைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

இத்தனை இரத்தம் சிந்தப்பட்ட பின்னரும்கூட, அரசியல் ஸ்தாபனத்தின் எந்தப் பிரிவும் வில்லியம்சின் கொலையை எதிர்க்க முன்வராதது, அமெரிக்க சமூகத்தினதும் மற்றும் அதை நிர்வாகம் செய்பவர்கள் மீதும் நீங்காப்பழிக்குரிய குற்றச்சாட்டு ஆகும்.

வில்லியம்ஸ் வழக்கில் ஸ்வார்ஷ்நேக்கருடைய முடிவு மிக இழிந்த காரணங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக மாநில, தேசிய அரசியலில் மிக அதிக வலதுசாரித் தன்மையுடைய சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக இது நடந்துள்ளது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 12 மணி நேரத்திற்குள்ளாக, ஸ்வார்ஷ்நேக்கருடைய அலுவலகம் தண்டனையை நியாயப்படுத்திய அதன் அறிக்கையை வெளியிட்டது. இறுதி முடிவை வெளியிட, வேண்டுமென்றே கவர்னர் தாமதப்படுத்தியமை உண்மையான ஐயம் அவருக்கு இதில் இருந்தது என்பதால் அல்ல, மாறாக முடிவெடுக்கும் மற்றும் நிறைவேற்றப்படும் நேரங்களுக்கு இடையே உள்ள கால அவகாசத்தைக் குறைத்து வில்லியம்சின் உயிரை காப்பாற்ற இன்னும் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

இந்த கால அவகாசம் தெற்கு லொஸ் ஏஞ்சல்ஸின் தெருக்களில் எவ்வித வன்முறை வெடிப்புக்கள் ஏற்பட்டாலும் அதற்கெதிராக போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப்படை கூறுபாடுகளை திரட்டுவதற்கு தயாரிப்புக்கள் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.

இறுதியில் கவர்னர் கருக்கலைப்பு-எதிர்ப்பு வெறி ("உயிர் வாழும் உரிமையை" பாதுகாத்தல் என்று தவறான முறையில் பெயரிடப்பட்ட) மற்றும் மரண தண்டனைக்கு தீவிர ஆதரவு ஆகியவை இணைந்த குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி அடித்தளத்தை திருப்தி செய்வதற்காக வேண்டுமென்றே ஒரு முடிவை எடுத்தார்.

இறுதிவரை வில்லியம்சும் உறுதியுடன் போராடினார்; உயிர் பறிக்கப்படும் நிலையில் கொடுக்கப்படும் மரபார்ந்த கடைசி உணவை, தன்னைக் கொல்பவர்களிடம் இருந்து எந்தத் தயவும் வேண்டாம் என்று கூறி மறுத்தார். கடந்த வாரம் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் அறிவித்ததாவது: "என்னை கொல்லவிருக்கும் இடத்தில் இருந்து உணவோ, குடிநீரோ, பரிவோ எனக்குத் தேவையில்லை. இழிவு தரும், இகழ்வான காட்சியை எவரும் பார்க்கவரவேண்டாம் எனக் கோருகிறேன். அந்த எண்ணமே அருவெறுப்பையும், மனிதாபிமானமற்ற தன்மையையும்தான் கொடுக்கிறது. மற்றொரு மனித உயிர் இறப்பதை ஒரு மனிதன் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது என்பது இகழ்விற்கு உரியது."

கருணை காட்ட கவர்னர் மறுத்ததானது, ஜனநாயகக் கட்சியின் சூசன் கென்னடியை அவருடைய அலுவலர்களின் தலைமைப் பொறுப்பில் நியமித்தபின்னர் நடந்த முக்கியமான நடவடிக்கையாகும்; அத்தேர்வே கலிபோர்னிய குடியரசுக் கட்சியில் முக்கியமானவர்களின் சீற்றத்தை தூண்டியது. கடந்த மாதம் நடைபெற்ற சிறப்புத் தேர்தலில் அவமானகரமான முறையில் அவர் ஆதரவு கொடுத்திருந்த வலதுசாரி கருத்துக்கள் நான்கும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியினருக்கு சமாதான தூதுவிடும் வகையில் ஸ்வார்ஷ்நேக்கர் கென்னடியை தேர்ந்தெடுத்தார்.

வில்லியம்ஸின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதுடன், ஸ்வார்ஷ்நேக்கர் வலதுசாரி ஜனநாயகக் கட்சிக்கு தேவையான சூழ்ச்சிக்கையாளல்களை சமிக்ஞையாகக் கொடுத்துள்ளார்; ஏனெனில் மாநில சட்டமன்றத்தில் அது பெரும்பான்மையை பெற்றுள்ளதன் காரணமாக அவர்களுடைய அரசியல் செயற்திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்க்கட்சியில் இன்னும் அவர் தங்கியிருக்க முடியும்.

கருணை மனுவை நிராகரித்த அறிக்கையில், கைதி தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்வார்ஷ்நேக்கர் முன்வைத்திருந்தார்: "ஸ்ரான்லி வில்லியம்ஸ் தான் நிரபராதி என்று வலியுறுத்துகிறார்; இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நான்கு கொலையுண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருதல், வருந்துதல் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் கூறியுள்ளார்... இந்த அறிவற்ற மிருகத்தனமான கொலைகளுக்காக மன்னிப்புக் கேட்பதும், வருத்தம் தெரிவிப்பதும் இல்லையென்றால், உய்வதற்கே வழியில்லை."

அல்பேர்ட் ஓவன்ஸ், யென் இ யாங், சாய்-ஷாய் சென் யாங் மற்றும் யூ ஷின் யாங் லின் ஆகியோர் 1979ல் கொலைசெய்யப்பட்ட குற்றத்தை வில்லியம்ஸ் தொடர்ந்து மறுத்துத்தான் வந்துள்ளார். 1981ம் ஆண்டு வில்லியம்ஸ் விசாரணையில் பயன்படுத்தப்பட்ட சாட்சியங்களை, இச்சாட்சிகளே மற்ற கொலைகளை செய்தவர்கள் என்றும் குறைவாக தண்டனை பெறுவதற்காக அவர்கள் இப்படி சாட்சியம் கொடுத்துள்ளனர் என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தாக்கியுள்ளனர் மேலும் சிறையில் இருந்த ஒற்றர் அதிகமாக வில்லியம்சுக்கு தெரியாதபோதிலும், தான் வில்லியம்சின் நம்பிக்கைக்குரியவர் என்று சாட்சியம் கொடுத்துள்ளார்.

கருணை மனுவை கடுமையாக எதிர்த்த, சக்தி வாய்ந்த சிறைக்காவலர்கள் சங்கத்தின் ஆதரவை திரட்ட வேண்டுமென்ற ஸ்வார்ஷ்நேக்கரின் நோக்கமும் ஒரு கூடுதலான அரசியல் காரணியாகும். அது கருணைகாட்ட வேண்டுமென்ற முயற்சியை கடுமையாக எதிர்க்கிறது மற்றும் வில்லியம்ஸின் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை உண்மையாய் கோருகிறது. இந்த உள்ளடக்கத்தில் ஸ்வார்ஷ்நேக்கரின் கருணைமனு நிராகரிப்பு அறிக்கையில் உள்ள மற்றொரு பகுதி குறிப்பிடத்தக்கவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

"சிறையில் என் வாழ்வு" என்ற தன்னுடைய நினைவுக் குறிப்பை வில்லியம்ஸ் 1998ல் வெளியிட்டபோது அந்நூலை "நெல்சன் மண்டேலா, ஏஞ்சலா டேவிஸ், மால்கம் எக்ஸ், அசாடா ஷாகுர், ஜேரோனிமோ ஜ ஜகா பிராட், ரமோனா ஆபிரிக்கா, ஜோன் ஆபிரிக்கா, லியோனார்ட் பெல்டியர், தொருபா அல் முஜாகிட், ஜோர்ஜ் ஜாக்சன், முமியா அபு ஜமல் மற்றும் கணக்கிலடங்கா ஆடவர், பெண்டிர், இளைஞர் என சிறைக்கம்பிகளுக்கு பின் நரகம் போன்ற வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு சமர்ப்பணம்" என்று எழுதியுள்ளதை கலிபோர்னிய கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பட்டியிலில் குற்றம் கூறக் கூடிய வகையில் ஏதும் இல்லை; முக்கியமான கறுப்பு இன தேசிய வாதிகளும், போலீஸ் வன்முறையாலும் வேண்டுமென்றே புனையப்பட்டதாலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள்தான் உள்ளன. ஆனால் ஸ்வார்ஷ்நேக்கர், கறுப்புச் சிறுத்தை, சிறை நடவடிக்கை ஆர்வலர் ஜோர்ஜ் ஜாக்சன் பெயர் இருப்பதையும், அவர் 1971ல் சிறைக்காவலர்களால் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டி, "ஜோர்ஜ் ஜாக்சனுடைய பெயர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது, வில்லியம்ஸ் இன்னும் சீர்திருந்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு, வன்முறை, ஒழுங்கீனம் ஆகியவற்றை சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முறையான வகை என்ற கருத்தை இன்னும் கொண்டுள்ளார் என்பதையும் காட்டுகிறது என்று எழுதியுள்ளார்.

ஜோர்ஜ் ஜாக்சன் பற்றிய குறிப்பு மற்றும் அதையொட்டிய கவர்னரின் அறிக்கையில் நீண்ட தேவையற்ற விளக்கவுரை ஆகியவை புரிந்து கொள்ளமுடியாதது போல் தோன்றும்; ஏனெனில் 34 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வை அது குறிப்பிடுகிறது. ஆனால் சான் க்வென்டினில் அரசே ஜாக்சனை கொலை செய்தது, அதுவும் அமெரிக்க அரசாங்கம் கறுப்பு தேசியவாதிகள், போரெதிர்ப்பு ஆர்வலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அரசியலளவில் எதிர்ப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக அடக்கு முறையை கையாண்ட உச்ச கட்டத்தில் இது நிகழ்ந்தது. ஸ்ரான்லி ருக்கி வில்லியம்ஸ் அரசாங்கத்தால் அதே சிறைச் சாலையில் கொலை செய்யப்படுவதும் போர், ஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக போரிடவேண்டும் என்று புறப்படும் ஒரு புதிய தலைமுறையை அச்சுறுத்தும் நோக்கத்தை கொண்டதாகும்.

Top of page