World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

The implications of Bush's diplomatic debacle in Asia

ஆசியாவில் புஷ்ஷின் இராஜதந்திர படுதோல்வியின் தாக்கங்கள்

By Barry Grey
25 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஆசியாவில் நான்கு நாடுகளில் ஒரு வார விஜயத்திற்கு பின்னர் நவம்பர் 21ல் ஜனாதிபதி புஷ் வாஷிங்டன் திரும்பியுள்ளார். இவ்விஜயம் உள்நாடு வெளிநாடு ஆகிய இரண்டிலும் அவரது நிர்வாகத்தின் நெருக்கடியை வலியுறுத்திக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த விஜயம் ஈராக்கில் தனது ஆக்கிரமிப்பை நீடிக்கவும் மற்றும் பெருகி வரும் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கிற்கு பதிலளிக்கும் முகமாக ஒரு இராஜதந்திர மற்றும் இராணுவ மூலோபாயத்தை கடைபிடிக்க அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அந்த ஒரு மூலோபாயம் எழுச்சியடைந்துவரும் ஆசிய வல்லரசுடன் ஒரு இராணுவ மோதலில் ஈடுபடுகின்ற வழிக்கு இட்டுச் செல்கிறது.

அவரது விஜயத்தின் போது அவர் தங்கிய ஒவ்வொரு பகுதிகளிலும் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேசரீதியாகவும் ஈராக்கில் அமெரிக்க இராணுவ தலையீட்டின் பேரழிவு விளைபயன்கள் அவருக்கு தடைக்கல்லாக அமைந்தது. குறிப்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய பிராந்திய நேசநாடுகளை வடகொரியாவிற்கு எதிராக மற்றும் மிக முக்கியமாக சீனாவிற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும் என்ற வாஷிங்டனின் பிரதான பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்த விஜயம் ஒரு இராஜதந்திர படுதோல்வியாக முடிவடைந்துள்ளது. அந்த இரண்டு கூற்றுகளும் வாஷிங்டனின் முக்கிய பங்குதாரர்களான ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனும் மற்றும் அதன் முக்கிய பிராந்திய போட்டி நாடான சீனாவுடனும் புஷ் இந்த விஜயத்தின் பிரதான குறுகியகால நோக்கங்களை எதையும் சாதிப்பதற்கு இயலவில்லை.

அதில் இன்னும் படுமோசம் என்னவென்றால், புஷ் தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாக தோற்றமளிக்கையில் ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தனது வளர்ந்து வரும் சீனாவின் பொருளாதார அரசியல் செல்வாக்கை வெளிப்படையாக காட்டினார். லண்டன் Financial Times ''பசிபிக் நாடுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும்'' என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு தலையங்க கருத்தில்: ''ஆசியாவில் அதிபர் ஜோர்ஜ் புஷ் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதை நன்கு அறியக்கூடியதாக உள்ளது. அப்படியிருந்தாலும் அமெரிக்காவின் தேய்ந்து கொண்டு வருகின்ற செல்வாக்கு, ஆசியாவில் சீனா தார்மீக சுதந்திரமற்ற ஒரு வல்லரசு அந்தஸ்த்திற்கு உயர்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது.'' என்று குறிப்பிட்டு தலையங்கத்தை முடித்துள்ளது.

தென்கொரிய துறைமுக நகரான பூஷனில் நடைபெற்ற 21 நாடுகளின் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டை ஒட்டி புஷ்சின் விஜயம் அமைந்தது. அந்த மாநாட்டில் பங்கெடுத்துக் கொள்வதற்கு முன்னர் ஜப்பானிலுள்ள கோயோடோவில் தங்கினார். அதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் ஹூ ஜிந்தாவோ மற்றும் பிரதமர் வென் ஜின்பாவுடன் நேருக்கு நேராக கலந்துரையாடினார். அமெரிக்கா திரும்பும் வழியில் அவர் மங்கோலியாவின் தலைநகரான உலன் பேட்டரில் நான்கு மணி நேரம் தங்கினார்.

புஷ்ஷின் உதவியாளர்கள் உருவாக்கிய காட்சியின்படி, அவரது ஆசிய விஜயத்தில் ஜப்பானில் ஒரு உரையில் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரை'' உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் அமெரிக்கா நடத்தும் சிலுவைப்போருடன் தொடர்புபடுத்தி அதற்கான கருத்தியல் மற்றும் அரசியல் கட்டமைப்பை நிறுவிக்காட்டினார். இந்தக் கருத்தின் அடிப்படையில் அமெரிக்காவை ஆசிய ஜனநாயகங்களுக்கான சர்வதேச தலைவர்--- ஜப்பான் தலைமையில் - இது வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இராஜதந்திர நெருக்கடியை கொடுப்பதற்கு உதவுகின்ற வகையில் ஒரு பிரச்சாரம் வடிவமைக்கப்பட்ட திட்டம் மற்றும் வாஷிங்டன் சீன பிரதான நிலப்பகுதியை சுற்றி வளைக்கின்ற வகையில் இராணுவத்தை நிறுத்துவதற்கும் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை நியாயப்படுத்தவும் இது உருவாக்கப்பட்டது.

இதன் உள்ளார்ந்த அச்சுறுத்தல்களுக்கு அப்பாலும் சீனாவின் பாரிய உள்நாட்டு சந்தையிலும் அங்கு கிடைக்கும் அளவற்ற மலிவுகூலி தொழிலாளர்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கு வகை செய்ய வேண்டும் என்ற தீவிர விருப்பத்தின் காரணமாக புஷ் தனது வாய்வீச்சின் வேகத்தை குறைத்து கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டது. Wal-Mart போன்ற மிகப்பெரிய சில்லறை விற்பனைக் கூடங்கள் உட்பட அமெரிக்க பெரு நிறுவனங்கள் சீனாவிலிருந்து கிடைக்கின்ற மலிவான பொருட்களை பெரிதும் நம்பியிருக்கின்றன.

புஷ்ஷிற்கு கொள்கைகளை வகுத்தளிப்பவர்கள் ஒன்றை தெளிவாகவே அறிந்திருக்கின்றனர். அது என்னவென்றால் அமெரிக்காவுடனான சீனா பாரியளவிற்கு வர்த்தக உபரியை பெற்றுள்ளது என்பதும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் கருவூல கடன்பத்திரங்களை மிக அதிகமாக வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நாடு என்பதையும், அமெரிக்க அரசாங்கத்திற்கு அது தந்திருக்கும் 252 பில்லியன் டாலர்களை திரும்பப் பெறுவதற்கு தொடங்குமானால் உலக நாணய சந்தைகளில் டாலரின் மதிப்புக்கள் வீழ்ச்சியடைந்து அமெரிக்க வட்டி விகிதங்கள் உச்சாணி கொம்பிற்கு சென்று மற்றும் அமெரிக்கா ஒரு பாரியளவு பின்னடைவிற்கு தள்ளப்பட்டு, அதனால் உலக நிதி ஸ்திரத்தன்மைக்கு அளவிட முடியாத விளைவுகள் ஏற்படும் என்பதாகும்.

உண்மையிலேயே புஷ், ஜப்பானையும், தைவானையும் தனிமைப்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகங்கள் நிலைநாட்டப்பட்டுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் சுட்டிக்காட்டி புகழ்ந்ததன் மூலம் சீனாவை கடிந்துகொள்வதாய் பொருள்படுத்தும்படி அத்தகைய உரையை ஆற்றினார். இந்த உரை குறிப்பாக சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் குறை கூறுவதாகும். தைய்வான் தீவின் மீது தனது இறையாண்மையை நிலைநாட்டுவதை சீனா அதன் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு அடித்தளமாக கொண்டிருக்கிறது. தைவான் இராணுவ நடவடிக்கைகள் மூலம் சுதந்திரம் பெறுவதற்கு எந்த முயற்சி மேற்கொண்டாலும் தனது இந்த கொள்கையை பாதுகாத்து நிற்பதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

2002ல் சீனாவின் ஜனாதிபதியாக ஹூ பதிவியேற்றது முதல் தைவானை எதிர்நோக்கியுள்ள கடற்கரை பகுதிகளில் ஏவுகணை உந்துதளங்களை கட்டியெழுப்புவதில் மேற்பார்வையிட்டார். அந்த நகர்வு இந்த பிராந்தியத்தில் பதட்டங்களை கிளறி, பென்டகன் தலைமையில் அமெரிக்க அரசமைப்பில் உள்ள சக்திகளின் கரங்களை வலுப்படுத்தி பெய்ஜிங்குடன் ஒரு மோதலுக்காக இராணுவ தயாரிப்புகளை செய்வதில் உறுதியுடன் செயல்பட்ட காரணமாகியது.

புஷ்ஷிற்கு ஏற்பட்ட துரதிருஷ்டம் என்னவென்றால் ஈராக்கில் நடைபெற்ற அமெரிக்க இரத்தக்களறி ஆக்கிரமிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சித்திரவதை இரகசிய சிறைகள், ஆள்கடத்தி ''காணாமல் போகச் செய்யும்'' அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஆகியவை ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான ஒரு சக்தி என்ற வாஷிங்டனின் நடிப்பை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் அம்பலத்திற்கு வந்திருக்கின்றன. மேலும் அவரது ''ஜனநாயக'' கூட்டணியினரான ஜப்பானிய பிரதமர் ஜீனிச்சிரோ கொய்ஷூமி இரண்டாம் உலகப்போரில் உயர் அதிகாரத்திலிருந்த போர்குற்றவாளிகள் உட்பட ஜப்பானில் மடிந்த படையினரை நினைவுபடுத்தும் வகையில் அஞ்சலி செலுத்துவதற்காக யாசுக்குமி நினைவாலயத்திற்கு (Yasukumi Shrine) செல்வதாக வலியுறுத்தியமை ஆசியா முழுவதிலும் பதட்டங்களை கொழுந்துவிட்டு எரியச்செய்தது.

உள்நாட்டில் புஷ்ஷிற்கு நெருக்கடி

புஷ்ஷை மேலும் வலுவிழக்கசெய்யும் வகையில் உள்நாட்டில் அரசியல் நெருக்கடி முற்றிக் கொண்டு வருகிறது. மிக உயர்கட்டத்தில் ரிச்சார்ட் நிக்சனின் வாட்டர்கேட் நெக்கடிக்கு பின்னர் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் கண்டிராத கருத்துக்கணிப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில் அவர் ஆசிய பயணத்தை மேற்கொண்டார். ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் காட்டுவது என்னவென்றால் பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஈராக் போரை எதிர்ப்பதுடன் அமெரிக்க துருப்புக்களை விரைவாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புவதுடன் மற்றும் புஷ்ஷூடன் சேர்ந்து சதி ஆலோசனை செய்த துணை ஜனாதிபதி டிக் செனி, பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் போன்றவர்கள் ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாகவும் அல் கொய்தாவுடன் தொடர்புகள் இருப்பதாகவும் பொய் சொல்லி நாட்டை போருக்கு இழுத்துச் சென்றனர் என்பதை நம்புகின்றனர்.

காங்கிரஸ் குடியரசுக் கட்சிக்காரர்கள் மத்தியில் கூட ஈராக்கில் ஏற்பட்டுள்ள புதைச்சேறு தொடர்பாக பொறுமையிழப்பது வளர்ந்து வருகிறது. புஷ் தனது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை இடைமறிப்பதற்கும் தான் தங்குகின்ற பல்வேறு இடங்களையும் உள்நாட்டில் தனது போர் கொள்கைகைய விமர்சிப்பவர்களை கண்டிக்கும் ஒரு அரங்காக பயன்படுத்துவதற்கும் கட்டாயத்திற்காளாகியமை- அவரது அரசியல் நிலைமை பலவீனமடைந்துவிட்டதை காட்டுகின்ற ஒரு காட்சியாகும். சென்ற வியாழனன்று நிலைமையை படுமோசமாக்குகின்ற வகையில் வியட்நாம் போரில் விருதுகள் பெற்ற முன்னாள் துருப்பும், அமெரிக்க இராணுவ நிர்வாகத்துடன் நெருக்கமான தொடர்புகள் உள்ள இராணுவ போர்வெறியரும் தற்போது பென்சில்வேனியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான ஜோன் முர்த்தா ஆறுமாதங்களுக்குள் தனது துருப்புக்களை அமெரிக்கா விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

ஜனநாயகத்திற்கு அவர் வெற்றிக்கீதம் பாடியதை விரைவில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்புவிடுபவர்களை கண்டித்த ஈராக்கில் உள்ள ஒரு அமெரிக்க அதிகாரியினால் வெளியிடப்பட்ட ஒரு அசாதாரணமான பொது அறிவிப்பை ஏற்றுக் கொண்டு மேற்கோள்காட்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இடைமறிக்க புஷ்ஷை தூண்டியது. பொதுநிர்வாகத்திற்கு இராணுவம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற கொள்கையை இப்படி பகிரங்கமாக மீறல் செய்வதை புஷ் ஏற்றுக் கொண்டு அந்த போர்முனையிலுள்ள இராணுவ அதிகாரிகளின் தீர்ப்பை தமது அரசாங்கம் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளும் என்று அறிவித்தார். இதன் விளைவு என்னவென்றால் ஜனநாயக நிர்வாகம் பற்றிய மூதுரையை கைவிட்டு, அமெரிக்க இராணுவத்தில் இராணுவ சர்வாதிகாரத்தின் பக்கம் சாய்கின்ற சக்திகளை முழுமனதுடன் ஊக்குவிப்பதாகும்.

இறுதியில் ஆசிய தலைவர்களோடு கலந்துரையாடும் போது வலியுறுத்த வேண்டிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்திருந்த அமெரிக்க மாட்டு இறைச்சி இறக்குமதிக்கு ஜப்பான் விதித்துள்ள தடையை நீக்குவதற்கான ஒரு உறுதிமொழியை கொய்ஷூமியிடமிருந்து பெறுவதற்கு புஷ் தவறி விட்டார்.

தென் கொரியாவில், நிலைமை இன்னும் மோசமடைந்து விட்டது. APEC உச்சி மாநாட்டில் புஷ் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பூஷன் தெருக்களில் கண்டனப் பேரணிகளை நடத்திய பத்தாயிரக்கணக்கான மக்கள் ஈராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமென்று கோரினார். தென்கொரியா அதிகாரிகள் தண்ணீரை வேகமாக அடித்து பொதுமக்களை கலைத்தனர். இது இந்த மாதத் தொடக்கத்தில் புஷ் ஆர்ஜண்டினாவிற்கும் இதர தென் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தபோது அவருக்கு எதிராக நிலவிய பாரிய மற்றும் சிலநேரங்களில் வன்முறை கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றதை நினைவுபடுத்துகிற வகையில் இருந்தது.

தென்கொரியா ஜனாதிபதி ரோ மூ ஹைனையும் ஈராக்கில் அமெரிக்காவிற்கு அவரது உறுதியான ஆதரவை தெரிவித்ததற்காக புஷ் அவரை பாராட்டிய சிறிது நேரம் கழித்து தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் ஈராக்கிலுள்ள தென்கொரியா துருப்புக்கள் 3,200ல் மூன்றில் ஒரு பகுதியை குறைத்துவிட பரிந்துரை செய்திருப்பதாக அறிவித்தது. இது புஷ்ஷை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள சம்பவங்களின் திருப்பமாகும். அண்மை மாதங்களில் ஈராக்கிலுள்ள தங்களது துருப்புக்களை குறைத்துக் கொண்ட அல்லது விலக்கிக் கொண்ட நாடுகளில் தென்கொரியா பத்தாவது நாடாகும்.

ஈராக் தொடர்பாக புஷ் மீது தென்கொரியாவின் எதிர்பாராத தாக்குதல் பல்வேறு பிரச்சனைகளில் வாஷிங்டனுடன் அது கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளை உணர்த்துவதை கருத்திற்கொண்டுதான். ஜப்பான் அதிக மூர்க்கத்தனமான வெளியுறவு கொள்கையை அமெரிக்கா அமைதியாக ஊக்குவித்து வருவதும், அதில் கொய்ஷூமி தேசியவாதத்திற்கும் இராணுவவாதத்திற்கும் அழைப்பு விடுவது சியோலுக்கு ஆத்திரமூட்டி ஜப்பானிய ஏகாதிபத்தியம் புத்துயிர்ப்பு பெறுவது தொடர்பான கவலைகளை அதிகரித்திருக்கிறது. இதன் விளைவாக தென்கொரியா சீனாவிற்கு நெருக்கமாக வந்திருக்கிறது. நவம்பர் 16ல் தென்கொரியாவின் ஜனாதிபதி ரோ மற்றும் சீன ஜனாதிபதி ஹூ ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இந்த பிராந்தியத்து வரலாறு பற்றி ''ஒரு பக்கத்து நாட்டின்'' கருத்துக்களுக்கு மாறாக தாங்கள் இருவரும் ஐக்கியப்பட்ட கருத்துக்களை கொண்டவர்களாக இருப்பதாக கூறியுள்ளனர்----- இது தெளிவாக ஜப்பானை குறிப்பிடுவதாகும்.

தென்கொரியாவும் சீனாவும் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் திட்டம் தொடர்பாகவும் ஐக்கியப்பட்ட அணுகு முறையை கொண்டிருக்கின்றன மற்றும் அதிக மோதல்போக்கு பாவனையுடன் அமெரிக்கவும், ஜப்பானும் விடுக்கின்ற கோரிக்கைகளை எதிர்த்து வருகின்றன. நவம்பர் 17ல் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது: ''வட கொரியா தனது அனைத்து அணு திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக அமெரிக்கா ஒரு விரிவான முன்மொழிவை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின்னர் விரிவான சோதனைகளுக்கு அனுமதிக்கப்படும். இந்த சோதனைகளில் ஆய்வாளர்கள் வட கொரியா இதுவரை அனுமதிக்காத இரகசிய இடங்களிலும் சோதனைகள் நடத்துவதாக அமையும்.

''நிர்வாக அதிகாரிகள் சிலர் ஒரு 'திட்டம் B ' பற்றி பேசுகின்றனர். வட கொரியா, ஆய்வாளர்களை அனுமதிக்க மறுத்தால் அந்த சோதனை நடத்தப்படும்'' என்று கூறுகின்றனர்.

வடகொரியா தொடர்பான நிர்வாகத்தின் அணுகுமுறையை வகுப்பதில் சம்மந்தப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் அதிகாரி தெரிவித்ததையும் அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது அவர் அத்தகைய திட்டங்களை ''பொருளாதார அரசியல் மற்றும் ஒரு தொகை இராணுவ சாத்தியப்பாடுகள்'' என்று வர்ணித்துள்ளார்.

APEC உச்சிமாநாட்டில் விவசாய மானியங்களை வெட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டது என்ற பிரகடனத்தை வெளியிடச் செய்யும் முயற்சியில் புஷ் தோல்வியடைந்தார். பினான்சியல் டைம்ஸ் அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதை போல் அந்த உச்சிமாநாட்டின் பயங்கரவாதத்தின் மீதான கண்டனம் ''பயங்கரவாதத்தின் மீதான போர் சர்வதேச சட்டத்தின் கீழ் எல்லா ஏற்புடைய கடமைப்பாடுகளையும் உள்ளடக்கியதாக, குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டத்திற்கு ஏற்ப அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தட்டிக்கழித்தது, விசாணையின்றி காவலில் வைத்திருக்கும் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கையை ஆரவாரத்துடன் அங்கீகரிப்பதும் மற்றும் எந்த அமெரிக்க அதிகாரியும் சித்திரவதையை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிர்ப்பு காட்டுவதும் அரிதாகவே அமைந்திருக்கிறது''.

பினான்சியல் டைம்ஸ் தொடர்ந்து எழுதும் போது ''இத்தோடு ஒப்பு நோக்கும் போது சீனாவின் ஜனாதிபதியான ஹூ ஜிந்தாவோ தென்கொரியாவின் தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது கைதட்டி வரவேற்றார்கள். சமாதானத்திற்கும் செழிப்பிற்க்கும் பெருந்தன்மையோடு சீனா விருப்பம் கொண்டிருப்பதாக அவர்கள் உறுதியளித்ததை வர்த்தக தலைவர்கள் பாராட்டினர்.'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

இறுதியாக அடுத்த மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்காவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என சம்மதிக்க செய்யும் முயற்சியில் புஷ் தோல்வியடைந்தார். அமெரிக்காவை பங்கெடுத்துக் கொள்ள செய்யும் முயற்சியை ஜப்பான் முன்னெடுக்கையில் தென்கொரியா அந்த விவகாரத்தில் மூச்சுவிடவில்லை.

சீனாவில் இராஜதந்திர இழிவுபடுத்துதல்கள்

சீனாவில், வாஷிங்டனின் முக்கிய பொருளாதார கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஹூவிடமிருந்து எந்த உறுதியான உத்திரவாதத்தையும் பெறாமல் புஷ் தோல்வியுற்றார். இந்தக் கோரிக்கைகளில் மேலும் சீன நாணயமான யானின் மதிப்பை உயர்த்த வேண்டும் அமெரிக்காவிற்கு சீனா செய்யும் ஏற்றுமதிகளின் விலை உயர்த்தப்பட வேண்டும் மற்றும் அமெரிக்கப் பொருட்கள் அதிக அளவில் போட்டி போடும் தன்மையை உருவாக்கி இந்த ஆண்டு அமெரிக்காவின் இரு தரப்பு வர்த்தக பற்றாக் குறையை குறைக்க வேண்டும் என்பனவாகும். இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தில் துண்டு விழும் அளவு 200 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பிரதான கோரிக்கை அமெரிக்க திரைப்படங்கள், சிறுவட்டுக்கள் (CD), மென்பொருட்கள், மற்றும் இதர அறிவுஜீவித சொத்துடமை வடிவங்கள் ஆகியவற்றில் சட்டவிரோதமாக பிரதி எடுப்பதற்கு எதிராக சீனா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பனவாகும்.

அமெரிக்காவிற்கு ஒரே பிரகாசமான அம்சம் 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிடப்பட்டுள்ள 70 போயிங் விமானங்களை வாங்குவதற்கு சீனா உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாகும். என்றாலும் சீனாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை பாரியளவிற்கு வளர்ந்து கொண்டு வருவதில் இந்தத் தொகை ஒரு வாளியிலுள்ள ஒரு சொட்டுத் தண்ணீருக்கு சமமாகும்.

சீனா, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனையில் புஷ்ஷை இராஜதந்திர வகையில் இழிவுபடுத்திப் பேசியது. அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது தொடர்பாக அத்தகைய சந்திப்புக்களுக்கான வழியை இலகுவாக்க பெய்ஜிங், அமெரிக்க - சீன உச்சிமாநாட்டை நடத்தி குறைந்த பட்சம் ஓரளவிற்கு முக்கியமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். செப்டம்பரில் ஹூ, நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ண்டபொழுது அமெரிக்க ஜனாதிபதி தனக்கு நிகராக சீன பொறுப்பில் உள்ளவரிடம் வாஷிங்டன் விடுதலை செய்ய விரும்பும் தடுப்புகாவலில் உள்ளோரின் பட்டியலை வழங்கினார். இந்த தனிமனிதர்கள் புஷ்சின் விஜயத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் இதர அரசியல் மற்றும் மத அதிருப்தியாளர்களையும் ஆட்சி கைது செய்தது. ஹூ பதவிக்கு வந்தது முதல் ஊடகங்கள் மற்றும் அறிவுஜீவிகள் மீது கொடூரமான அடக்கு முறையை மேற்கொள்வது என்ற போக்கை ஒட்டி இந்த கைதுகள் நடைபெற்றன.

புஷ்ஷின் விஜயம் தொடர்பாக அரசு-நடத்துகின்ற சீன ஊடகங்கள் மிகவும் மேலெழுந்தவாரியாகத்தான் செய்திகளை வெளியிட்டன. அவரது நிருபர்கள் மாநாட்டை அல்லது ஞாயிறன்று அரசாங்கம் அனுமதித்த புரட்டஸ்டண்ட் திருச்சபையில் அவர் கலந்து கொண்டதை ஒளிபரப்ப மறுத்துவிட்டது. இந்த சம்பவம் புஷ்சின் உள்நாட்டு அடிப்படை ஆதரவு தளத்தை நோக்கமாகக் கொண்டது---- அந்த கிறிஸ்தவ நல்லொழுக்கம் நாத்திக சீனாவை சாத்தானோடு ஒப்பிடுகிறது. தன்னை கிறிஸ்தவர்களின் பேச்சாளராக வெட்கமின்றி காட்டிக் கொண்டு அந்த தேவாலயத்திற்கு வெளியில் புஷ் ''பகிரங்கமாக கூடி வழிபாடு செய்ய ஒன்றுகூடும் கிறிஸ்தவர்களை கண்டு சீன அரசாங்கம் பயப்படாது என்பதுதான் எனது நம்பிக்கை'' என்று குறிப்பிட்டார்.

அவரது விஜயத்தில் கடைசி நிறுத்தம் வறண்ட, அச்சமூட்டும் ஜெங்கிஸ்கான் (Genghis Khan) ஆகும். அங்குதான் அதிகாரிகள் புஷ்சிற்கு கலப்படமற்ற மரியாதை செலுத்தினர். ஆசியாவின் ஸ்டெப்பி பகுதியிலுள்ள இந்த வறுமை மிக்க நாடு ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக் கொண்டிருப்பதாகும். அந்த நாடுதான் சோவியத் யூனியனிலிருந்து முதலாவதாக முறித்துக்கொண்டு 1990ல் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக சுதந்திர பிரகடணம் செய்தது.

உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் குறைந்த மக்கள் நெரிசல் உள்ள அந்த நாட்டில் வாழ்கின்ற 2.7 மில்லியன் மக்களில் 40 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர் மங்கோலிய ஆளும் செல்வந்தத் தட்டினர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு இணைந்து கொண்டிருக்கின்றனர். ஈராக்கில் பணியாற்றிக் கொண்டுள்ள 150 மங்கோலிய துருப்புக்கள் இதற்கு அடையாள சின்னமாகும்.

என்றாலும் இங்கேயும் கூட புஷ் அவரது போர் குற்றங்களுக்கு எதிரான வெகுஜன சர்வதேச எதிர்ப்பிலிருந்து முழுமையாக ஒதுக்கிவிடப்படவில்லை. உலன் பேட்டரில் நடைபெற்ற அதிகாரபூர்வமான விழாக்களுக்கு ஜனாதிபதியின் கார் அணிவகுப்பு சென்ற நேரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு கண்டனக்காரர்கள் தங்களது அடையாளச் சின்னங்களை காட்டினர். அவர்களுடன் புஷ் கைகுலுக்கினார். செங்கிஸ்கானின் ஆயுதங்களை தாங்கி நின்றவர்களுடன் புஷ் கைகுலுக்கி, குதிரைப்பாலை அருந்தியபடி தனது விருந்தினர்களை நோக்கி ''ஜனநாயகத்திற்காக பாடுபடும் சகோதரர்கள்'' என்று குறிப்பிட்டார்.

இந்த வேடிக்கை டாம்பீகம் அங்கு நிலவுகின்ற சூழ்நிலைகள் மிக ஆபதத்தான கடுமையான பின்னணி நிலவுவதை காட்டுகிறது. சீனாவையும், ரஷ்யாவையும் சுற்றி வளைக்கின்ற வகையில் பென்டகன் வகுத்துள்ள மூலோபாயத்தில் மங்கோலியா முக்கிய இடம் பெறுகிறது. அவற்றுடன் அமெரிக்கா இராணுவ கூட்டணியையும் இராணுவத்தை நிறுவவும் உள்ளது.

புஷ்ஷின் ஆசிய சுற்றுப்பணயம் முழுவதிலுமே அமெரிக்காவின் பலவீனமான நிலை வெளிப்பட்டது அது ஒரு தனி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி மட்டுமல்ல. மிக அடிப்படையாக பார்த்தால் புஷ்சின் இராஜதந்திர பிரச்சனைகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக பொருளாதார நிலை புறநிலைரீதியாக வீழ்ச்சியடைந்து வருவதை எதிரொலிக்கின்ற ஒன்றாகும்.

சீனாவுடன் அமெரிக்காவின் மலைப்பூட்டும் அளவிற்கான வர்த்தகம் மற்றும் செலுத்துகை நிலுவையும், சீனா அதன் டாலர் உடமைகளை அமெரிக்க அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதை நம்பியிருப்பதும், அமெரிக்கா ஒப்பீட்டளவில் பொருளாதார அடிப்படையில் வீழ்ச்சியடைந்து வருவதை வலுவாக எடுத்துக்காட்டுகின்ற ஒரு அம்சமாகும். இந்த சார்ந்திருக்கும் நிலை உண்மையிலேயே மிக யதார்த்தமான அரசியல் விளைபயன்களை கொண்டது. நியூயோர்க் டைம்ஸ் நவம்பர் 23 தலையங்கம் வருத்தம் தோய்ந்த குரலில் எழுதியுள்ளவாறு, ''பெய்ஜிங் தலைவர்கள் சீனாவின் உபரி, சேமிப்பு நிதியங்களையும் தனது வரவுசெலவுத் திட்டத்தில் விழும் பாரியளவு பற்றாக்குறைகளை சரிக்கட்டுவதற்கு நம்பியிருக்கின்ற ஒரு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வருகின்ற உரைகளை கேட்கின்ற மன நிலையில் இல்லை.``

அரசியல் ஒடுக்குமுறை மற்றும் பாரியளவு தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டுவது, ஒரு விரிவான உள்நாட்டு சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடான சீனா மிகவேகமாக அமெரிக்காவை வெகு தூரம் பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் தொழிற்பட்டறையாக வளர்ந்து வருகிறது. இன்னும் அமெரிக்க பொருளாதாரத்தை விட ஏழாவது இடத்திலேயே இருக்கின்ற சீனப் பொருளாதாரம் அந்த இடைவெளியை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருகிறது.

இதற்கு ஒரு மேற்கோள்காட்டக்கூடிய புள்ளிவிபரம்: 1979ல் 13,000 கார்களை தயாரித்த சீனா சென்ற ஆண்டு 5 மில்லியனுக்கு மேற்பட்ட கார்களை தயாரித்திருக்கிறது. இந்தப் புள்ளி விவரம் காட்டுகின்ற சிறப்பை வலியுறுத்துகின்ற வகையில் புஷ் ஆசியாவில் இருக்கும்போதே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மற்றொரு சுற்று தொழிற்சாலைகள் மூடல்களையும் வேலை வெட்டுக்களையும் அறிவித்திருக்கிறது அதற்கிடையில் அமெரிக்காவின் தொழிற்துறை வலிமையின் சின்னமாக முன்னர் விளங்கிய அந்த நிறுவனம் திவாலாவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பரவலாக ஊகங்கள் நிலவி வருகின்றன.

சீனா தனது பொருளாதார அதிகாரத்தை பயன்படுத்தி தனது செல்வாக்கை பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படைகளில் உலகம் முழுவதிலும் விரிவுபடுத்தி பலப்படுத்திக் கொள்ளவும் தனது இராணுவத்தை உருவாக்கிக்கொள்ளவும் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரம்பரிய ''கொல்லைப் புறம்'' என்று கருதப்படும் இலத்தீன் அமெரிக்காவில் கூட சீனா நுழைந்துவிட்டது. பிரேசிலிலும் இதர தென் அமெரிக்க நாடுகளிலும் அதன் முதலீடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. APEC உச்சி மாநாட்டில் சீனாவும் சிலி நாடும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன அது ஒரு இலத்தீன் அமெரிக்க நாட்டிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தமாகும்.

ஆபிரிக்காவிலும் மிகவேகமாக வளர்ந்து வரும் முதலீட்டாளராக சீனா உள்ளது.

அமெரிக்க இராணுவ ''இராஜதந்திரம்''

தனது பொருளாதார வீழ்ச்சிக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ வாதம் வெடித்துச் சிதறியிருக்கிறது. பூகோள தொழிற்துறை மற்றும் நிதி மேலாதிக்கத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்டுகின்ற வகையில் தனது மிகப் பெரிய இராணுவ வலிமையை அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டினர் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றனர். இதில் சீனா விதிவிலக்காக அமையும் என்று நம்புவதற்கு ஏதாவது அடிப்படை உண்டா? அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றொரு ஆசிய சக்திவாய்ந்த வல்லரசு வளர்வதை சமாதானமான முறையில் ஏற்றுக் கொள்ளுமா?

சீனாவுடன் பொருளாதார உறவு கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு எதிராக இராணுவ முன்னேற்பாடுகள் செய்யும் வாஷிங்டனின் இரு-வழி கொள்கை மீது குவிமையப்படுத்தும் நவம்பர் 17இல் வெளியிடப்பட்ட வோல் ஸ்ரீட் ஜேர்னல் கட்டுரையால் இதற்குப் பதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அந்த ஆசிரியர், ஜே சொலமன் நடப்பு புஷ் நிர்வாகத்திற்குள் உள்ள சீனா தொடர்பான அமெரிக்க கொள்கைக்கான சுலோகத்தை மேற்கோள்காட்டியுள்ளார்: சீனா தொடர்பான அமெரிக்க கொள்கைக்கான சுலோகத்தை மேற்கோள்காட்டியுள்ளார்: "எதிர்கொண்டு கட்டுப்படுத்தல்" (''Congagement"), இது எதிர்கொள்ளல் (Engagement) மற்றும் கட்டுப்படுத்தல் (Containment) இணைந்த ஒரு வார்த்தை பிரயோகம்

அவர் எழுதுகிறார்: ''இந்த ஆண்டு குறிப்பாக பாதுகாப்புத் துறையில் மிக வேகமாக இராணுவ மற்றும் அமெரிக்க பொருளாதார தலைவர்களையும் பிடித்துக் கொண்ட முரண்பட்ட உணர்வுகளை கலப்பது சில நேரங்களில் ஒரு அருவருக்கத்தக்க முயற்சியாகும். இதன் கருத்து என்னவென்றால் சீனாவுடன் பொருளாதாரரீதியாக நெருக்கமான உறவுகளை நீடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பென்டகன் ஆசியாவில் சுற்றி வளைக்கும் புதிய இராணுவ கூட்டை----- இந்தியாவிலிருந்து மங்கோலியா வழியாக ஜப்பான் வரை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கிறது--- -இது சீனாவின் எவ்வித துணிச்சலான இராணுவ நடவடிக்கைக்கும் எதிரான ஒரு வகை பாதுகாப்பு கொள்கையாகும்.

அந்தக் கட்டுரையுடன் சீனாவின் வரைபடம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சீனாவை இந்தியா, இந்தோனேஷியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் மங்கோலியா சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு நாட்டிலும் அதன் இராணுவ நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் அதிகரிப்பதற்கான அண்மை முயற்சிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சீனாவின் எழுச்சியைத் தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கையின் மைய அம்சம் இந்தியாவுடன் இராணுவ மற்றும் இராஜதந்திர உறவுகளில் குவிமையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று சொலமன் குறிப்பிடுகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, பொதுதேவைக்கான அணு மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும என்று புஷ் அறிவித்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார்-----இந்த அணுவாயுத வல்லரசு அது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதுள்ளது.

இந்த ஆண்டு பெரிய இராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு விற்பதற்கான கட்டுப்பாடுகளை வாஷிங்டன் நீக்கிவிட்டது. அதன்மூலம் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களான லொக்ஹீட்-மார்டின் ஜெட் விமானங்களை விற்பதில் போட்டிபோட முடியும். ஏவுகணை தற்காப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்வதில் ஒத்துழைப்பது குறித்து இரண்டு நாடுகளும் விவாதித்து வருகின்றன.

சொலமன் தொடர்ந்து எழுதுகிறார்: ''அண்மை மாதங்களில் வியட்நாமிற்கும், இந்தோனேஷியாவிற்கும் பென்டகன் உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. ஜூனில் ஹனோய் அரசாங்கம் IMET என்றழைக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ பயிற்சித் திட்டத்தில் வியட்நாம் துருப்புக்களை சேர்க்கும் என்றும் கூறியுள்ளது. இந்தோனேஷிய துருப்புக்களுக்கும் IMET பயிற்சியை அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது.

ஜப்பான தொடர்பாக ''சென்ற மாதம் திரு.ரம்ஸ்பெல்ட் டோக்கியோவுடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி அறிவித்தார். அது அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை அமெரிக்கா ஜப்பானில் நிறுத்துவதற்கும், Patriot ஏவுகணை தடுப்பு அமைப்புக்களை உருவாக்கவும் வகை செய்வதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான புலனாய்வு மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவும் வகை செய்கிறது''.

''புஷ் நிர்வாகம் நட்புறவை வளர்த்து வருகின்ற சீனாவின் மற்றொரு பக்கத்து நாடு மங்கோலியா`` என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. இரண்டு நாடுகளின் இராணுவங்களும் இணைந்து பணியாற்றுவதற்கு பென்டகன் வேலை செய்து வருகிறது.

ஈராக் தொடர்பான அமெரிக்க கொள்கையை வளர்ப்பதில் முன்னணி பங்கு வகித்த நவீன பழைமைவாத சிந்தனையாளர்களின் அதே வலைபின்னல்தான் நிர்வாகத்தின் சீனக் கொள்கையை வகுப்பவர்கள் என்று சொலமன் எழுதுகிறார். ''1999ல் Rand Corp. அறிக்கை தயாரித்த ஏழு ஆசிரியர்களில் இருவர் சீனாவை "எதிர்கொண்டு கட்டுப்படுத்தல்" (''Congagement") என்ற பதத்தை முதலில் கூறியவர்கள் தற்போது புஷ் நிர்வாகத்தில் அதிகாரிகளாவர். அந்த இருவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதில் பென்டகனின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் ஆப்ராம் சுல்ஸ்கி மற்றும் ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதர் சல்மே காலிஷாத் ஆவர்.

''ஆசியாவில் இராணுவ கூட்டாளிகளின் புதிய வலைப்பின்னலை அபிவிருத்திசெய்யுமாறு அமெரிக்காவை வலியுறுத்துவதில், 'இந்த நடவடிக்கையின் கூறப்படாது இருக்கும் நியாயப்படுத்தல், பிராந்திய மேலாதிக்கத்தை தேடும் எந்தவித சீன முயற்சிகளுக்கும் சீனாவை விலைகொடுக்கும்படி வலியுறுத்துவதாக இருக்கும், அதன்மூலமாய் தடுத்து நிறுத்துவதாக இருக்கும்,' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது."

Top of page