WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Canada's Liberal government falls, setting stage for
January election
கனடாவின் தாராளவாத அரசாங்கத்தின் வீழ்ச்சி, ஜனவரி தேர்தலுக்கான அரங்கை
உருவாக்கியுள்ளது
By Keith Jones
29 November 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
கனடாவின் சிறுபான்மை தாராளவாத கட்சி அரசாங்கம் திங்கள் இரவு கவிழ்ந்தது.
மூன்று எதிர்க்கட்சிகளான---வலதுசாரி பழைமைவாதிகள், கியூபெக் சார்பு சுதந்திரமான
Bloc Quebecois
மற்றும் சமூக-ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவை ஒரு பழைமைவாத கட்சியின் நம்பிக்கையில்லா
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
இன்று காலை பிரதமர் போல் மார்டின் அதிகாரபூர்வமாக ஆளுனரிடம் தனது அரசாங்கம்
மக்கள் சபையில் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று தெரிவித்து 2004 ஜூனில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை
கலைக்க கேட்டு கொண்ட பின்னர், மத்திய கூட்டாட்சி தேர்தல் ஜனவரி 16 திங்களன்று அல்லது ஜனவரி 23ல்
நடைபெறும்.
12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போல் மார்டின் மற்றும் ஜோன் கிரிட்டியனின்
தாராளவாத கட்சி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது பரந்தரீதியாக தாக்குதல் நடத்துவதற்கும்
பத்தாயிரக்கணக்கான பில்லியன்களை பொது மற்றும் சமூக சேவைகளுக்கு வெட்டுவதிலும் அதே நேரத்தில் பெருவர்த்தகங்களுக்கும்
வசதிபடைத்தவர்களுக்கும் பல சுற்றுக்கள் திரும்பத்திரும்ப வரிக்குறைப்புகளை கொண்டு வருவதிலும் தலைமை தாங்கி
நடவடிக்கைகளை மேற்கொண்டது. ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரால் மார்டின்-கிரிட்டியன்
அரசாங்கம் நீண்டகாலமாக நிலவிவரும் நீதித்துறை கொள்கைகளை தலைக்கீழாய் புரட்டி விட்டு அடிப்படை சிவில்
உரிமைகளை தாக்குதலுக்குட்படுத்தியது. கனடாவின் இராணுவத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு
அனுப்பியதன் மூலம் புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஈராக் மற்றும் மத்திய ஆசிய போர்களுக்கு கணிசமான ஆதரவு
தந்திருக்கிறது. கனடா வெளிநாடுகளில் தனது நலன்களை வலியுறுத்தி நிலைநாட்டியாக வேண்டும் என்பதாலும் கனடாவின்
ஆயுதப்படைகளை விரிவுபடுத்துவதிலும் மீண்டும் ஆயுதமயமாக்குவதிலும் பாரியளவிலான ஒரு திட்டத்தில் தாராளவாதக்
கட்சியும் இறங்கியுள்ளது.
தாராளவாதிகளின் வலதுசாரி நிலைச்சான்றைப்பற்றி நம்பிக்கையில்லா தீர்மானத்தில்
பழைமைவாதிகள் எதுவும் குறிப்பிடாததில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. மாறாக ஊழலுக்காக அரசாங்கத்தை அது
குற்றம்சாட்டியிருக்கிறது.
Bloc Quebecois இன்
தேர்தல் மூலோபாயத்தை ஒட்டியும் குறிப்பாக பழைமைவாத கட்சியின் அதிகாரபூர்வ எதிர்ப்பை ஒட்டியும் இந்த
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த கட்சி 2004 வாக்கில் வலதுசாரி பொதுமக்கள் கனடா கூட்டணி (Canadian
Alliance) மற்றும் ஆளும் வர்க்கத்தில் அரசாங்கத்தின்
பாரம்பரிய மாற்றுக்கட்சியான முற்போக்கு பழைமைவாதிகள் (Progressive
Conservatives) இணைப்பில் உருவாக்கப்பட்டது.
ஒரு பொது விசாரணையில் தொடக்க அறிக்கை நவம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது
அதில் கியூபெக்கில் கனடா அரசாங்கத்தின் செல்வாக்கை பெருக்குவதற்கு மத்திய அரசாங்கம் மேற்கொண்ட ஒரு
பிரசார திட்டம் பல்வேறு தாராளவாதிகளின் நண்பர்களான விளம்பர நிறுவனங்களுக்கு பயனளிப்பதாக அமைந்தது.
அவர்கள் கியூபெக்கிலுள்ள மத்திய தாராளவாத கட்சிக்கு கைலஞ்சங்களை கொடுத்தது. அத்தகைய ஊழல் கனடா
அரசியலில் ஒரு புதுமையல்ல. ஆனால் இந்த ''விளம்பர மோசடி'' இதற்கு முன்னர் எப்போதுமே
நடைபெற்றதில்லை என்று பழைமைவாதிகள் அறிவித்தது மற்றும் தாராளவாத கட்சியை ஒரு உண்மையான குற்றமிக்க
அமைப்பு என்று சித்தரிக்க முயன்று வருகின்றனர்.
அவர்களது வெட்கங்கெட்ட பெருவர்த்தக-சார்பு கொள்கைகளுக்கும் அமெரிக்க குடியரசுக்
கட்சியின் வலதுசாரியை பின்பற்றி நடப்பதற்கு மற்றும் சமூக பழமைவாதம், தாராளவாத ஊழலுக்காக கனடாவின்
வாக்காளர்கள் திரும்பத்திரும்ப அவர்களை வெறுத்தபோதும் வருகின்ற தேர்தலில் தாராளவாதிகளின் ஊழலை ஒரு
பொதுஜன கருத்தெடுப்பு போன்று நடத்த பழைமைவாதிகள் மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். முதலாவதாகவும்
மிக முக்கியமாகவும் கனடாவை வலதுசாரி பக்கம் திருப்புவதற்கான தங்களது திட்டத்தை விவாதிப்பதை தவிர்க்கின்றனர்.
இரண்டாவதாக ஒட்டாவா பில்லியன் கணக்கில் வரி செலுத்துவோரின் டாலர்களை பாழாக்கி வருகின்றனர் என்பதற்கு
விளம்பர மோசடியை ஒரு சான்றாக காட்ட கருதுகின்றனர் மற்றும் அரசாங்க செலவினத்தை உழைக்கும் மக்களுக்கு
துன்பம் இல்லாமல் கடுமையாக குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.
பழைமைவாதிகளின் தேர்தல் திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு முக்கியமான நடவடிக்கையே
நம்பிக்கையில்லா தீர்மானமாகும். அரசாங்கம் மக்கள் சபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதற்கு காரணம் ஒரு
''பெயரிடப்பட்ட கலாச்சாரம், ஊழல், மோசடிகள், அப்பட்டமாக நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியதால்தான்''
என்று அது குறிப்பிடுகிறது. பழைமைவாதிகள் நவீன பழைமைவாத சிந்தனையாளர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையில்
இயங்கி வருகின்றனர் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொரு திருப்பத்திலும் இந்த தீர்மானத்தை ஒரு
சான்றாக சுட்டிக்காட்டி தாராளவாதிகளின் ஊழலும் அரசாங்கத்தில் தார்மீக நெறி கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும்
தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவார்கள் மற்றும் பயன்படுத்தியாக வேண்டும்.
புதிய ஜனநாயக கட்சி (NDP)
பழைமைவாத மூலோபாயத்தை செயல்படுத்துவதில் ஒரு விருப்பமிக்க
கருவியாக உள்ளது. அது இதற்கு முன்னர் மார்டின் தாராளவாதிகளுடன் ஒத்துழைத்ததை போன்று இப்போதும் செயல்பட்டு
வருகிறது.
சென்ற வசந்த காலத்தில் தாராளவாதிகளுடன் புதிய ஜனநாயக கட்சி ஒரு
நாடாளுமன்ற கூட்டணி அமைத்தது மார்டின் அரசாங்கத்தை ஆட்சியில் நீடிக்க உதவியது. அதற்கு பரிமாற்றமாக பல
ஆண்டுகள் வரை செயல்படுத்த தொடங்காத ஒரு பெருநிறுவன வரி விலக்க சலுகையை தற்காலிகமாக திரும்பப்
பெறவும் சமூக செலவினங்களை ஒரு மிதமான அளவிற்கு உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மாத
தொடக்கத்தில் சமூக ஜனநாயகவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில் தாராளவாதிகளுக்கு தங்களது ஆதரவை விலக்கிக்
கொள்வதாக குறிப்பிட்டனர் மற்றும் உடனடியாக பழைமைவாதிகளோடும்
Bloc Quebecois
உடனும் பணியாற்ற தொடங்கினர்.
புதிய ஜனநாயக கட்சி தனது சொந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது அதில் தாராளவாதிகளின் வலதுசாரி
நிலைச்சான்றை குறித்து குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருக்க முடியும். பழைமைவாதிகள் அத்தகைய தீர்மானம்
எதையும் ஆதரித்திருக்க மாட்டார்கள். அதன் மூலம் தாராளவாதிகளோடு தங்களது வர்க்க ஒற்றுமையை
வெளிப்படுத்திக்காட்டினார்கள்.
தாராளவாத அரசாங்கத்திற்கு தங்களது ஆதரவை மறுக்கின்ற வகையில் அல்லது
மோசடி வியாபாரம் என்கின்ற திரைச்சீலைக்கு பின்னால் ஆட்சி அதிகாரத்திற்கு வர முயலுகின்ற வலதுசாரி
பிரச்சாரத்தின் சட்டபூர்வமான தன்மையை மறுக்கின்ற வகையில் ஒரு உண்மையான தொழிலாள வர்க்க கட்சி
பழைமைவாதிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்திருக்க வேண்டும்.
என்றாலும்
புதிய ஜனநாயக கட்சி அத்தகையதொரு நிலையை எடுக்கும் வல்லமை
இல்லாதது. மாறாக பழைமைவாதிகளும் Bloc
Quebecois உம் உருவாக்கிய ஒரு மூலோபாயத்தின் ஓர்
அங்கமாக அது அரசாங்கம் ஜனவரி தொடக்கத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று சட்டபூர்வமாக
கட்டுப்படுத்தாத ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. அப்போது தாராளவாதிகள் இந்த தீர்மானத்தை
புறக்கணித்தனர் விளம்பர மோசடி பற்றி நடைபெற்று வருகின்ற பொது விசாரணையின் இரண்டாவது மற்றும் இறுதி
அறிக்கை கிடைத்து 30 நாட்களுக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற மார்டினின் உறுதிமொழியை
மேற்கோள்காட்டி அதற்குப்பின் அப்போது தாராளவாதிகள் இந்தத் தீர்மானத்தை புறக்கணித்தனர். அந்த நிலையில்
பழைமைவாதிகளோடு சேர்ந்துகொண்டு புதிய ஜனநாயக கட்சி வாக்களித்தமை அதன் மூலம் அவர்களுக்கு மிகச்
சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு உதவியது.
கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக புதிய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகள் அது
பெருவர்த்தக கட்சிகளின் பிற்சேர்க்கை தான் என்பதை எடுத்துக்காட்டுகின்றன மற்றும் தொழிலாள வர்க்கத்தின்
சுதந்திரமான நலன்களுக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற வல்லமை முற்றிலும் இல்லாதது என்பதை காட்டி விட்டது.
தற்போது நடத்தப்பட்டு வரும் கருத்துக் கணிப்புக்களின் படி தாராளவாதிகள் அல்லது
பழைமைவாதிகள் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கின்ற அளவிற்கு பெரும்பான்மை பெற மாட்டார்கள்
மற்றும் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் வாக்குப் பதிவை புறக்கணிப்பார்கள் என்று தெரிவித்துள்ளன.
புதிய ஜனநாயக கட்சி உட்பட அனைத்து பாரம்பரிய கட்சிகள் மீதும் பரவலாக
பொது மக்களிடையே வெறுப்பு நிலவுகிறது. ஏனெனில் அவர்கள் அனைவருமே பொது மற்றும் சமூக சேவைகளை
வெட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மற்றும் சமூக வாழ்வில் பெருவர்த்தகங்களின் மேலாதிக்கத்தை
வலுப்படுத்தியவர்கள். தற்போது அரசியல் ஒழுங்குடன் உழைக்கும் மக்களின் விரக்தி, கோபம் மற்றும்
அந்நியப்பட்டிருக்கும் நிலை தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்க அபிவிருத்தியின் வடிவத்தில்
ஒரு நனவான செயல்வடிவம் ஏற்படவில்லை.
கனடாவில் உள்ள தொழிற்சங்கங்கள் உலகம் முழுவதும் உள்ள மற்றைய தொழிற்சங்கங்களை
போன்று விரிவடைந்து வரும் மூலதனத்தின் தாக்குதலை சமாளிப்பதற்கு பெருநிறுவன போட்டியை உறுதிப்படுத்துகின்ற
பெயரால் பெருவணிகங்களுடன் தங்களது ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வருகின்றன. வலதுசாரி போக்கின் அரசியல் வெளிப்பாடுதான்
கனடாவின் தொழிலாளர் காங்கிரஸ்
புதிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தந்து வருவதும் புதிய ஜனநாயக கட்சி-தாராளவாத
கூட்டணி அரசாங்கத்தை வளர்ப்பதின் சாத்தியக்கூறும்
Bloc Quebecois உடன் கியூபெக் தொழிற்சங்கங்கள் கூட்டணி
சேர்ந்து கொண்டிருப்பதும் அதன் சகோதரக் கட்சி மாகாண அளவில் பெருவர்த்தக
Parti Quebecois
கட்சியாக கூட்டணி சேர்ந்து கொண்டிருப்பதும் தான்.
இதற்கிடையில் கனடாவிலுள்ள பெரு நிறுவனங்கள் இரண்டு பெரிய கட்சிகள் மீதும் அதிருப்தி
கொண்டிருக்கின்றன. அவ்விரு கட்சிகளும் மிச்சமிருக்கின்ற நலன்புரி அரசு சலுகைகளை இரத்து செய்வதில் போதுமான
விறுவிறுப்போடும் உறுதியோடும் செயல்படவில்லை. மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு புதிய நெருக்கமான
பங்குதாரர் முறையை வளர்க்கவில்லை என்று நம்புகின்றன. குறிப்பாக வலதுசாரி சிந்தனை குழுவும் பெருநிறுவன
ஊடகங்களும் அண்மையில் உச்சநீதிமன்றம் தனியார் மருத்துவ காப்புறுதி கட்டுப்பாடுகளை இரத்து செய்ததை ஒரு ஆயுதமாகக்
கொண்டு கனடா முழுவதும் செயல்பட்டு வருகின்ற பொதுசுகாதார காப்புறுதி திட்டமான மெடிக்கேரை (Medicare)
தாக்கித் தகர்ப்பதற்கு தவறிவிட்டதாக தாராளவாதிகளையும் பழைமைவாதிகளையும் கண்டித்துள்ளன.
எதிர்வரும் வாரங்களில் உலக சோசலிச வலைத் தளம் கனடா தேர்தல்
பிரசாரம் பற்றி விரிவான தகவல்களை திரட்டித் தரும். அது ஒட்டு மொத்த அரசியல் நிர்வாகமும் வலதுசாரி
பக்கம் திரும்பிக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்துவதாகவும் ஒரு புதிய சோசலிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்திற்காக
கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்ட அடித்தளங்களை தெளிவுபடுத்துவதாகவும் அமைந்திருக்கும். கனடாவின் அடுத்த
அரசாங்கத்தை எந்தக் கட்சி அல்லது கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் எதிர்வருகின்ற காலகட்டம் ஒரு பெரிய
வர்க்க மோதலை தீவிரப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
Top of page
|