ஐரோப்பா
:
பிரான்ஸ்
Left press in France all but ignores Sarkozy's Anti-Terrorist
Bill
சார்க்கோசியின் பயங்கரவாத - எதிர்ப்புச் சட்டத்தை, பிரான்சின் இடது பத்திரிகை
உலகம் கிட்டத்தட்ட முற்றிலும் அசட்டை செய்துள்ளது
By Antoine Lerougetel
9 December 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
"நிக்கோலா சார்க்கோசியின் [உள்துறை மந்திரி] பயங்கரவாத-எதிர்ப்பு சட்ட
வரைவை, நேற்று பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டனர். இது வீடியோ கண்காணிப்பு, நிர்வாக முறை கண்காணிப்பு,
தடுப்புக்கள் இவற்றை அதிகரித்துள்ளதுடன், அபராத தொகைகளையும் அதிகப்படுத்தியுள்ளது.
"இந்த சட்டவரைவிற்கு ஆதரவாக (Union
for a Popular Movement and the Union for French Democracy
இடமிருந்து) 373 வாக்குகளும், (கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரிடமிருந்து) எதிராக 27 வாக்குகளும்
விழுந்தன. சோசலிஸ்ட் கட்சி, அதன் திருத்தங்கள் சில ஏற்கப்படவில்லை என்பதால் வருந்தி வாக்குப் பதிவு செய்யவில்லை."
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான
L'Humanite
பாராளுமன்றத்தில் பயங்கரவாத- எதிர்ப்பு சட்டவரைவு பற்றி நிகழ்ந்த மூன்று நாட்கள் விவாதத்தை பற்றி எழுதியது
மொத்தமே இவ்வளவுதான். நவம்பர் 30 பதிப்பில், வாரச் செய்திகள் தொகுப்பில் கடைசி இடத்தில் இதுபற்றி
எழுதப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால் செய்யப்பட்ட விமர்சனங்களை பற்றிக் கூட
L'Humanite
குறிப்புக்களைக் கொடுக்கவில்லை.
நவம்பர் 23, 24ம் தேதிகளில், தேசிய பாராளுமன்றத்தில் நான்கு கூட்டங்களுக்கும்
மேலாக பயங்கரவாத-எதிர்ப்பு சட்டம் விவாதிக்கப்பட்டு, நவம்பர் 29 அன்று இறுதிக் கூட்டத்தில் அதன்மீது
வாக்கு எடுக்கப்பட்டது. பிரான்சில் போலீஸ் அரசை அமைப்பதற்கான சட்டபூர்வ வடிவமைப்பில் இன்னும் ஒரு முக்கிய
கட்டத்தை இது பிரதிநிதித்துவம் செய்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் நலன்களைத்
தீவிரமாக பாதுகாக்கும் எந்த செய்திப் பத்திரிகையும் சட்ட வரைவின் விதிகள், உட்குறிப்புக்கள் பற்றி முதற்பக்க
தலைப்புக்கள், முக்கிய கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டிருக்கும்.
பதிலாக,
L'Humanite வலதுசாரி ஏடான
Le Figaro
செலுத்திய கவனத்தைவிட மிகக் குறைவான கவனத்தைத்தான் இந்த சட்டத்திற்கு காட்டியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியும்,
L'Humanite இன் ஆசிரியர் குழுவும் நவம்பர் 29 அன்று
பாராளுமன்றத்தில் நிகழ்ந்த வாக்குப்பதிவின் தீவிரத்தன்மை பற்றி நன்கு அறிவர். நவம்பர் 22 அன்று
L'Humanite
குடி உரிமைகள் அமைப்புக்களால், சட்டவரைவின் உட்குறிப்புக்கள் சிலவற்றை தெரிவிப்பதற்காக கூட்டப்பட்டிருந்த
செய்தியாளர் மாநாட்டில் சுருக்கமாக தகவல் கொடுத்திருந்தது.
League of Human Rights
இன் கெளரவ தலைவர் Henri Leclerc
ஐ மேற்கோளிட்டு இக்கட்டுரை, சட்டவரைவின் விதிகளை "குடியுரிமைகள் மீதான
முழுத் தடைகள்" என்று விவரித்துள்ளது. அனைத்து தொலைபேசி, இணைய தள தொடர்புகளையும் அரசாங்கம்
கண்காணிக்கலாம். இத்தகைய அரசு ஒற்று வேலைக்கு இச்சேவைகளை வழங்குவோர் மற்றும் நிறுவனங்கள்
ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளதை இது பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
உள்துறை மந்திரியின் வட்டார பிரதிநிதிகளான
préfets களுடைய
அதிகாரம் விரிவாக்கப்பட்டு, அவர்களுக்கு மசூதிகள் உட்பட வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குறுகிய
எல்லையை கண்காணிக்கும் நிழற்படக் கருவிகளை பொருத்துவதற்கு வலியுறுத்தும் அதிகாரம், அதை மறுப்பவர்களுக்கு
150,000 யூரோக்கள் அபராதம் விதித்தல் ஆகியவை கொடுக்கப்படுகிறது.
சட்டத்தின் நோக்கம் "நீதித்துறை கட்டுப்பாடு" என்னும் தடுப்புக்களில் இருந்து
அரசை விடுவிக்க வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. கட்டுரையின் ஆசிரியரான
Laurent Mouloud
குறிப்பிடுவதாவது: "இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நேரடியாக கட்டுப்படுத்துவதில் இதற்கு
பொறுப்புக் கொண்டுள்ள உள்துறை மந்திரியின் நிர்வாக முறைகளை எளிதாக்குவதற்கு நீதிபதிகள் தலையீட்டை
தவிர்ப்போம்."
இதே பிரச்சினைகளை மறுநாள் ஒரு கட்டுரையிலும் செய்தித்தாள் எடுத்துக்
கொண்டது. பாராளுமன்ற விவாதம் அன்றைக்கு நடக்க இருப்பதாக வாசகர்களுக்கு அது நினைவூட்டியது.
நவம்பர் 22 அன்று சட்டவரைவை மன்றத்திற்கு அளிக்கும்போது, சார்க்கோசி
"எந்த நீதித்துறை நடவடிக்கையும் இல்லாமல்" தகவலை பெறுவதற்கான அதிகாரம் அரசிற்கு கொடுக்கப்பட
வேண்டும் என்று குறிப்பாக அழைப்பு விடுத்தார். அறிவிக்கப்படாத கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் உரைகள்
தேசிய பாராளுமன்றத்தின் இனைய தளத்தில் காணலாம். (http://www.assemblee-nationale.fr/).
ஆட்சியில் உள்ள கோலிச உறுப்பினர்களின் இருக்கைகளில் இருந்து
வெளிவந்த எதிர்ப்புக்களுக்கு இடையே கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி
Michel Vaxes
கூறினார்: "உங்களுடைய சட்டத்தின் பொருளுரை நம் குடிமக்கள் அனைவரையும் சந்தேகத்திற்கு உரியவர்கள் என்ற
நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. தன்னுடைய தனிவாழ்க்கை அன்றாட கண்காணிப்பிற்கு உட்பட்டது என்பதை ஏற்கும்
வகையில்தான் குடிமகன் தன்னுடைய நிரபராதி தன்மையை நிரூபிக்க முடியும்."
அப்படியிருந்தும் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் பிரதிநிதிகள் குறிப்பிட்ட கருத்துக்களை
தன்னுடைய நாளேட்டில் ஏன் பிரசுரிக்க விரும்பவில்லை, தான் எதிர்க்கும் ஒரு சட்டத்தை எந்த கருத்தும் கூறாமல்
ஏன் அனுமதித்தது? இதில் இருந்து எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே முடிவு அதன் எதிர்ப்பு வெறும்
பதிவாக்கப்படுவதற்குத்தான் என்று ஆகிறது.
ஒரு வகையில், 2007 ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள்
வரவிருக்கையில், இடது கூட்டணியில் இன்னொரு தடவை சோசலிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைக்க விரும்பும் கம்யூனிஸ்ட்
கட்சி அதை பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கவலைகொண்டிருக்கக் கூடும். ஆனால், இறுதியில்
சோசலிஸ்ட் கட்சி சட்டவரைவுக்கெதிராக வாக்கு அளிப்பதைக் காட்டிலும் வராமலேயே இருந்துவிட்டது. ஆனால்,
சோசலிஸ்ட் கட்சியின் கணிசமான பிரதிநிதிகள் சார்க்கோசியின் சட்டத்திற்கு ஆதரவு தருவதைத்தான்
விரும்பியிருந்தனர்.
இன்னும் அடிப்படையில், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தால் ஆன இந்த அல்லது
அந்த தாக்குதலுக்கு எதிராக எப்பொழுதாவது வேலைநிறுத்தம் செய்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி பிரெஞ்சு அரசின்
அரசியல் மற்றும் சமூக உறுதித்தன்மையை அச்சுறுத்தும் வகையில் எதையும் செய்யாது.
தங்களை தேர்ந்தெடுத்த தொகுதிகள் மற்றும் தாங்கள் பதவி வகிக்கும் நகராட்சிகள்
--பலவும் தொழிலாளர்கள், குடிபெயர்ந்தோர் நிறைந்த, வறிய பகுதியினரை கொண்டுள்ளன-- இவற்றின்
விமர்சனங்களில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க
வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அதற்கு மேல் அது எதையும் செய்யத் தயாராக இல்லை. தன்னுடைய
ஊடக வசதிகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை திரட்டவோ, எச்சரிக்கை
விடுக்கவோ அது தயாராக இல்லை.
உண்மையில், பயங்கரவாத-எதிர்ப்பு சட்டம் பற்றிய
L'Humanite
ன் பகுப்பாய்வில் முக்கிய புறக்கணிப்பு என்னவென்றால் அதன் அடிப்படை நோக்கத்தை அடையாளம் காட்டியதாகும்.
அரசாங்கத்தின் புதிய தாராள கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை அடக்குவதற்குத் தேவையான
அதிகாரத்தை பெறுதல் என்பதுதான்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பிரெஞ்சு ஸ்ராலினிஸ்ட்டுக்களின் அரசியல் விடையிறுப்பு தங்களை
ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்கள் என்று தவறாக கூறிக்கொள்ளும் இடது கட்சிகளிலும் எதிரொலித்துள்ளது.
Lutte Ouvriere (தொழிலாளர்
போராட்டம்)
மற்றும் Parti des Travailleurs (தொழிலாளர்
கட்சி)
இரண்டும் இந்த சட்டவரைவு பற்றியோ அல்லது பாராளுமன்றத்தில் இது இயற்றப்பட்டுவிட்டது பற்றியோ தங்கள்
வெளியீடுகளில் கூறவே இல்லை. Ligue Communiste
Révolutionnaire (புரட்சி கம்யூனிஸ்ட் கழகம்) நவம்பர்
30 அன்று "நம்முடைய குடி உரிமைகளுக்கு ஒரு துக்க தினம்" என்ற தலைப்பில் சுருக்கமான செய்தி அறிக்கையை
வெளியிட்டது.
LCR இன் வாரந்திர ஏடான
Rouge
(சிவப்பு) இந்த சட்டத்தைப்பற்றி
Christian Piquet
ஆல் எழுதப்பட்ட அதன் ஒரே குறிப்பான தலையங்கம் ஒன்றை வெளியிட்டது. அரசாங்கத்தின் கொள்கைகளில்
இருக்கும் பிற்போக்கு தன்மை பற்றி சரியான கருத்துக்களை ஏதோ சம்பிரதாய ரீதியாக வெளியிட்டது. "ஏன்
அரசாங்கமும், அதன் பின் உள்ள முழு வலதும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக உணர்வானேன்? சோசலிஸ்ட் கட்சியில்
இடது பிரிவு ஒன்று நெருக்கடி நிலைமையை ஆணையிடும் பொருட்டு காலனித்துவ முறையிலான நெருக்கடிச் சட்டத்தை
கொண்டு வந்துள்ளதை ஏற்றுள்ளது. பின்னர் அதன் நீட்டிப்பை அது எதிர்த்திருந்தபோதிலும், இதே இடது ஒரு சில
சிறிய மாற்றங்களுக்காக, இப்பொழுது பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்திற்கு வாக்களிக்க போகிறது."
இத்தகைய விமர்சனங்கள் ஒன்றும்
LCR ஐ சோசலிஸ்ட்
அல்லது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் இருந்து தடுத்து நிறுத்திவிடப் போவதில்லை. அதன் மூலம் அரசியல்
நடைமுறையில் தன்னுடைய இடத்தை இடது என்பதை நிலைநிறுத்திக் கொள்ள இது முற்படுகிறது. மாதக்கணக்கில்
LCR,
லோரன் பாபியுஸ் (Laurent Fabius)
போன்ற சோசலிஸ்ட் கட்சியின் பிரச்சாரவாதிகளுடன் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிரான மேடைகளை ஒழுங்கு
செய்ததோடு அதனுடன் பகிர்ந்தும் கொண்டது. சமீபத்திய மாதங்களில் இது அச் சக்திகளுடன் கூட்டணி வேண்டும்
என்ற கருத்திற்கு ஆதரவு தேடுகிறது.
LCR ,
Lutte Ouvriere
மற்றும் Parti des Travailleurs
ல் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி வரை, பிரான்சில் இடது என்று அழைக்கப்படுவதின் முக்கிய
செயற்பாடு, பிரெஞ்சு அரசை சமூகப் புரட்சியில் இருந்து காத்திட வேண்டும் என்பதேயாகும். இந்த உலகளாவிய
போட்டி, முதலாளித்துவ நெருக்கடி என்று பெருகியிருக்கும் காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் கடந்த காலத்தில்
போராடி பெற்ற சமூக வெற்றிகள் மற்றும் வாழ்க்கை தர தகர்ப்புக்களுக்கு பெருகிய அழுத்தம் உள்ள நேரத்தில்,
இத்தகைய அமைப்புக்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு எந்தவித சீரிய முயற்சியை கொள்வதற்கும்
திராணியற்றவை என தங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
See Also:
பிரான்ஸ்: பயங்கரவாத-எதிர்ப்புச்
சட்டம் குடி உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிறது
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பேராயம்
அரசாங்க அடக்குமுறைக்கு ஆதரவு
Top of page
|