:
ஐரோப்பா :
ஸ்பெயின்
Spain: labour reforms threaten "winter of
discontent"
ஸ்பெயின்: ''அதிருப்தியான குளிர் காலத்திற்கு'' அச்சுறுத்தும் தொழில் சீர்திருத்தங்கள்
By Keith Lee and Paul Mitchell
21 November 2005
Back to screen version
பிரதமர் ஜோஸே லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபடேரோவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE)
அரசாங்கம் திட்டமிட்ட தொழில் சீர்திருத்தங்களை விரைந்து நிறைவேற்றி வருகிறது. பல்வேறு நாடு தழுவிய வேலை நிறுத்தங்களையும்,
வெடித்துச் சிதறும் சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தங்களையும் முடிவிற்கு கொண்டுவந்து அவற்றை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு
தொழிற்சங்கங்கள் முயன்று வருகின்றன.
சர்வதேச நிதி நிறுவனங்கள் கோரி வந்த தொழில் சீர்திருத்தங்களை திணிக்கும் நோக்கில்
கடந்த ஏழு மாதங்களாக அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி
கொண்டிருக்கின்றன. அக்டோபரில் சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குனரும், ஸ்பெயினின் முன்னாள் பொருளாதார
அமைச்சருமான ரோட்ரிக்கோ டி ராடோ, ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு ''அடிப்படையின் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கின்ற
நீண்டகால பிரச்சனை தொழிற்சந்தை பற்றியதாகும். இதில் ஓய்வூதியம், சுகாதார நலன்கள் மற்றும் தொழில் சந்தை
சீர்திருத்தங்கள் அடங்கும்.'' என்பதை நினைவூட்டினார்.
கடந்த காலத்தில் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சி பல்வேறு பொது
வேலை நிறுத்தங்களை ஸ்பெயினில் தூண்டி, ஸ்பெயினில் 2002ல் வலதுசாரி மக்கள் கட்சி (PP)
அரசாங்கம் தனது முன்மொழிவுகளை பின்வாங்கிக் கொண்டு அவற்றை கைவிடச் செய்தது.
ஸ்பெயின் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் 2004 மார்ச்சில் ஒரு அறிக்கையை வெளியிட்டது---அந்த
மாதத்தில்தான் மக்கள் கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக
சோசலிச தொழிலாளர் கட்சி
பதவியேற்றது. அந்த அறிக்கையில் புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை
நடவடிக்கைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. அது கூறியது, ''ஸ்பெயின் தான் பெற்ற பயன்களை
பேணி பராமரிக்கின்ற ஆற்றல் தெளிவில்லாமல் உள்ளது: விலைவாசி உயர்வும், பணவீக்கமும் போட்டி திறனையும் உற்பத்தித்திறன்
வளர்ச்சியையும் அரித்துக்கொண்டு வருவது ஏமாற்றமளிப்பதாக உள்ளது''.
ஸ்பெயினின் பொருளாதார நிலவரம் மேலும் மோசமடையவே செய்யும். ஏனெனில்
ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் வற்றிக்கொண்டு வருகின்றன மற்றும் குறைந்த ஊதியம் பெறும் புதிய
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் போட்டியையும் சந்திக்க
வேண்டி வருகிறது என்று சர்வதேச நாணய நிதியம் மேலும் கூறிப்பிட்டது. சபடேரோ அரசாங்கம் அண்மையில் ஸ்பெயினில்
பணியாற்றிக்கொண்டுள்ள கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்தது.
சர்வதேச நாணய நிதிய அறிக்கை உற்பத்தித்திறனை பெருக்குவதற்கு தொழில்சந்தை
சீர்திருத்தங்களுக்காக வேண்டுகோள் விடுத்தது. ''இந்தப் பிரச்சனையை சமாளிப்பதற்கான வழிகாட்டிக் கொள்கை
உற்பத்தியை பெருக்குவதாக, குறைப்பதாக அல்ல. தொழிலாளர் சந்தையில் வளைந்துகொடுக்கும் தன்மையுடன்,
பிரதானமான வழி அவ்வண்ணமே பொதுவாக நடைமுறையில் இருக்கும் காலவரையறையற்ற
[நிரந்தர]
ஒப்பந்தங்களின் கட்டுப்பாடுகளை குறைக்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளது.
OECD இன் ஓர் அறிக்கை இந்த கோடை
காலத்தில் இந்த முடிவை திரும்பவும் குறிப்பிட்டது நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆகும் செலவினங்களை குறைப்பது
''நீண்டகாலமாகவே நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பணியாக இன்னும் கடுமையாகியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளது. அது
மேலும் கூறுவது 2004 ஜூலையில் அரசாங்கம் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட
''சமூக கலந்துரையாடலுக்கான சாதக பிரகடனம்'' தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களில் மேலும் முன்னேற்றங்களை
உருவாக்குவதற்கு ஒரு வாய்ப்பிற்கான வாயிலை வழங்குகிறது. இந்த பிரகடணத்தில் கையெழுத்திட்டவர்கள் உற்பத்தித்திறனும்
போட்டித்திறனும் பெருக வேண்டியது அவசியம் என்றும் வரையற்று திறந்துவிடும் ஒப்பந்தத்தின் மூலம் செலவினங்கள்
வெட்டப்பட வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்.
1990களில் பிரதான தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு பின்னரும் 70 சதவீத ஸ்பெயின்
தொழிலாளர்கள் பிராங்கோ சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த பின்னர் வென்றெடுக்கப்பட்ட கூட்டு உடன்படிக்கைகள் மற்றும்
காலவரையறையற்ற ஒப்பந்தங்களினால் இன்னும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அவை பண வீக்கத்திற்கு ஏற்ப ஊதியங்கள்
உயர்வதற்கு உறுதியளிப்பதாகவும், இதர வேலை நிபந்தனைகளையும் உரிமைகளையும், பாதுகாப்பதாகவும்
அமைந்திருந்தன. 15 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 60 வயதில் தொழிலாளர்கள் அரசு ஓய்வூதியத்தை பெற முடியும்
மற்றும் வேலையில்லாதிருப்பவர்கள் 42 மாதங்கள் வரை சலுகைகளை பெற முடியும். இந்த சலுகைகளை
ஒழித்துக்கட்டுவதை பெருவர்த்தக நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் ஒரு உயர் முன்னுரிமை நடவடிக்கையாக
மேற்கொண்டுள்ளன.
பல ஆண்டுகளாக ஸ்பெயின் அரசாங்கம் வரையற்ற-திறந்த ஒப்பந்தங்கள் மீது
தொழிலாளர்களுடன் ஒரு பகிரங்க மோதலை தவிர்த்து வந்தது. 1997ல் வர்த்தக தலைவர்களும், தொழிற்சங்கங்களும்,
மக்கள் கட்சி (PP)
அரசாங்கமும் டோலேடோ உடன்படிக்கையில் (Toledo
Pact) கையெழுத்திட்டன அது காலவரையறையற்ற ஒப்பந்தங்களுக்கு
பதிலாக தற்காலிக மற்றும் வளைந்துகொடுக்ககூடிய ஒப்பந்தங்களை பெருமளவில் பயன்படுத்த வகை செய்தது. பிரதமர்
ஜோஸ் மரியா அஸ்நார் தொழிற்ங்க தலைவர்களது ''மகத்தான முதிர்ச்சிக்காகவும்'' ''பொதுகருத்திற்காக''
தங்களது ''பாரபட்சங்களை'' கைவிட்டதற்காகவும் வெகுவாக பாராட்டினார். அரசாங்கமும், தொழிலதிபர்களும்,
தொழிலாளர்களது வேலை நிலமைகளை மதிப்பதற்கு உறுதியளிக்கும் என்று தனது பாகமாக தொழிற்சங்கங்கள் கூறின.
ஆனால் இன்றைய தினம் நடைபெற்று வருகின்ற அதிக பரவலான தாக்குதல்களுக்கு அவை தயாரிப்புகளை செய்தன.
தற்போது ஸ்பெயின் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ''பயனற்ற ஒப்பந்தங்களில்''
(Contratos basura)
பணியாற்றி வருகின்றனர்--- அவை அவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம்
தொழில்பாதுகாப்பு எதுவுமில்லை மற்றும் சலுகைகள் எதுவுமில்லை. இந்த ஆண்டு ஸ்பெயினில் உருவாக்கப்பட்டுள்ள
900.000 புதிய வேலைகளில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் இந்த வகையைச் சார்ந்தவை.
அக்டோபர் மத்தியில் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE)
அரசாங்கம் புதிய சட்டத்தை அறிவித்தது. அது நிரந்தர ஒப்பந்தங்களில்
பணியாற்றுகின்ற தொழிலாளர்களை நிறுவனங்கள் எளிதாக வேலையிலிருந்து நீக்குவதற்கும் மலிவான இழப்பீடுகளை
வழங்குவதற்கும் வகை செய்தது. நிறுவனங்கள் திவாலாவது அல்லது பெரும் நிதி இழப்புகளுக்கு உள்ளாகும் போது
அத்தகைய ''நியாயமான'' காரணங்களுக்காக வேலைநீக்கம் செய்யப்படுகின்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற
நஸ்ட ஈட்டுத்தொகை ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் 20 நாட்கள் ஊதியம் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டு ஓராண்டு
ஊதியத்தை அதிகபட்சமாக இழப்பீடாக வழங்குவதற்கு வகை செய்யப்பட்டது. ''நியாயமாற்ற'' காரணங்களுக்காக
ஆட்குறைப்பு செய்யப்படுகின்ற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சேவைக்கு 33 நாட்களுக்கான ஊதியம் இழப்பீடாக
வழங்கப்படும். தற்போது பல தொழிலாளர்கள் 45 நாட்கள் வரை விட்டுவிலகும் ஊதியத்தை இழப்பீடாக பெற முடியும்.
அதுவும் அதிகபட்ச சேவை ஆண்டுகள் மூன்றரை ஆண்டுகளாகும்.
எரிபொருட்கள் விலை உயர்விற்கு எதிராக பார ஊர்தி ஓட்டுநர்கள் இரண்டு நாட்கள்
வேலை நிறுத்தம் செய்ததால் தொழில்துறைக்கும் கடைகளுக்கும் பொருள்களை வழங்குவதில் சீர்குலைவு ஏற்பட்டது அதைத்
தொடர்ந்து இந்த முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த மாதத்தின் பின் பகுதியில் எரிபொருள் செலவினங்கள்
உயர்வதை கண்டித்து மீனவர்களும், ஆர்பாட்டம் செய்தனர். ஸ்பெயினிலுள்ள எல்லா பெரிய துறைமுகங்களிலும் நான்கு
நாட்கள் முற்றுகையிட்டனர். படகுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரண்டு வேலை நிறுத்தங்களிலும்
சபடேரோ சலுகைகளை தந்தார் ஒன்று வரிகளை குறைத்தார் அல்லது மானியங்களை அதிகரித்தார்.
தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கும் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அந்தத் துறையில்
வெட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ள 2006-2012 நிலக்கரி சுரங்கங்கள் திட்டத்தை செயல்படுத்த சோசலிச
தொழிலாளர் கட்சி அரசாங்கம் முயன்றபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள்
நவம்பர் தொடக்கத்தில் வேலை நிறுத்தம் செய்தனர்.
நவம்பர் 3ல் 48 மணி நேர தேசிய வேலை நிறுத்தம் தொடங்கியது அதில் ஏறத்தாழ
நாட்டின் 8,600 சுரங்கத் தொழிலாளர்களும் ஈடுபட்டனர். ஸ்பெயினில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க பகுதி அஸ்டூரியாஸ்
அந்த பிராந்தியம், போர்குணமிக்க தொழிலாள வர்க்க நடவடிக்கையின் வரலாற்றை கொண்டதாகும். சுரங்கத்
தொழிலாளர்கள் தடுப்புக்களை ஏற்படுத்தினார்கள் சாலைகளை தடுத்தார்கள் மற்றும் ஏறத்தாழ அந்த பிராந்தியத்தை
தனிமைப்படுத்திவிட்டனர். போலீசாருடன் அவர்கள் போரிட்டனர். அவர்கள் கண்ணீர்புகை, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி
கண்டனக்காரர்களை விரட்டுவதற்கு திட்டமிட்டனர். காலிசியா, அரகோன், ஆன்டலூசியா, கேஸ்டில்லா-லா மஞ்சா
மற்றும் கேடலோனியாவில் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்.
நிலக்கரி ஸ்பெயினில் மிகவும் ஏராளமாக கிடைக்கின்ற உள்நாட்டு எரிசக்தி வளமாக
இருந்தபோதிலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் படிப்படியாக குறைத்துக்கொண்டு
வந்தன. மலிவான இறக்குமதிகள் அதிகரித்தன கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஐரோப்பிய நிலக்கரி மற்றும்
எஃகு பொது ஒப்பந்தம் 2002ல் முடிவிற்கு வந்தபோது நிலக்கரி சுரங்கங்களுக்கும் மின்சார உற்பத்தியாளர்களுக்கும்
வழங்கப்பட்டு வந்த மானியங்கள் குறைக்கப்பட்டன. 1998 முதல் 2005 வரை நிலக்கரி சுரங்கங்கள் திட்டத்தின் கீழ்
அந்த தொழிற்துறைக்கான மானியம் சுமார் 11.7 பில்லியன் அளவிற்கு இருந்தது, ஆனால் புதிய திட்டம் அதை 7.6
பில்லியன் அளவிற்கு குறைத்தது. இதன் ஒரு விளைவாக 1981ல் வேலை வாய்ப்பு அளவு 51,000 ஆக இருந்தது.
இன்றைய தினம் 8,600 ஆக முந்திய மக்கள் கட்சி அரசாங்கம் நிர்ணயித்த இலக்கான 17,000 ஐ விட மிகக்
குறைவாக தாழ்ந்துவிட்டது.
ஐந்து நாட்களுக்கு பின்னர் UGT
உம் ஸ்ராலினிஸ்ட்டுகளின் தலைமையிலான தொழிலாளர்கள் குழுவின்
தொழிற்சங்க சம்மேளனமும் சுரங்க வேலை நிறுத்தத்தை கைவிட்டன. திட்டத்திலுள்ள எல்லா முன்மொழிவுகளையும்
ஏறத்தாழ ஏற்றுக்கொண்டன. ஓய்வு பெறும் வயதை 52ஆக வைத்திருப்பது மட்டும்தான் எஞ்சியுள்ள ஒரேயொரு சலுகை
போல் தோன்றுகிறது. ஆனால் இதுவும்கூட இரண்டு ஆண்டுகளுக்குதான் மதிக்கப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் ஜோஸ்
மோன்டில்லா குறிப்பிட்டார். புதிய பேரத்தின்படி இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி 12 மில்லியன் டன்களிலிருந்து 2012ல்
9 மில்லியன் டன்களாக வெட்டப்படும். அதே காலகட்டத்தில் நடப்பு தொழிலாளர்களது எண்ணிக்கையான 8600ல் இருந்து
5,800 ஆக வெட்டப்படும்.
சுரங்கத் தொழிலாளர்கள் பேரம் முடிவடைந்து இரண்டு நாட்களுக்கு பின்னர்
பார்சிலோனாவிலுள்ள வோல்க்ஸ்வேகனுக்கு சொந்தமான கார் தயாரிப்பாளர்
SEAT நிறுவனத்தில்
1400 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து உற்பத்தியை வெட்டும் திட்டத்திற்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தம்
நடைபெற்றது. ஏற்கனவே பணியாற்றும் நேரத்தையும் ஊதியங்களையும் ஒவ்வொருவருக்கும் வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டதை
தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
உயர்ந்துவரும் எரிபொருள் செலவினங்களுக்கு எதிராக விவசாயிகளும் நடவடிக்கையில்
இறங்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர். ''சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்வோம்''
என்று விவசாய தொழிற்சங்கமான COAG
இன் பொதுச்செயலாளர் மிகுவேல் லோப்பஸ் எச்சரித்தார். இந்த ஆண்டு எரிபொருள்
விலைகள் படுவேகமாக உயர்ந்துகொண்டிருப்பதாலும், 1947 இற்கு பின் இந்த கோடை காலத்தில் இதுவரை இல்லாத
அளவிற்கு படுமோசமான வறட்சி ஏற்பட்டதாலும் விவசாயிகள் 4 பில்லியன் அளவிற்கு இழப்புகளை சந்தித்ததாக விவசாயிகள்
கூறுகின்றனர். விவசாயிகளது வேலை நிறுத்தம் நவம்பர் மத்தியில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது ஆனால் சில
பகுதிகளில் திடீர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.
பொது வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனமான
RTVE இல் உள்ள தொழிற்சங்கங்கள்
டிசம்பர் 17ல் வேலை வெட்டிற்கு தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் மற்றும் ஸ்பெயினில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ்
பரிசுச் சீட்டு இடத்தில் டிசம்பர் 22 அன்று 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்யவும் தொழிற்சங்கங்கள் அழைப்பு
விடுத்திருக்கின்றன.
வேலை நிறுத்த இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு
அப்பாலும், அதிகாரபூர்வமற்ற பல திடீர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளளன மற்றும் மேலும் பல வேலை நிறுத்தங்கள்
நடைபெறக்கூடும். இதனால் உந்தப்பட்டு தொழிற்சங்கங்கள் சப்படேரோவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் இந்த வேகத்தோடு
சீர்திருத்தங்களை அவர் கொண்டு செல்வாரானால் அவர் ''அதிருப்தியான குளிர்காலத்தை'' சந்திக்க வேண்டியிருக்கும்
என்று கூறியுள்ளனர்.
அரசாங்கத்தின் மிக நெருக்கமான ஆதரவு செய்தி பத்திரிகை
El Pais
பின்வாங்க கூடாது என்று வலியுறுத்தி கூறியுள்ளது. ''இல்லை என்று எப்படி சொல்வது என்பதை அரசாங்கம்
உண்மையிலேயே தெரிந்திருக்கிறதா'' என்ற தலைப்பில் அந்த பத்திரிகை எழுதியுள்ள தலையங்கத்தில் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்திலும் அரசாங்கம் பின்வாங்குவது அவற்றை ''அணிதிரட்டுவதற்குத்தான்
மேலும் தூண்டும்'' என்று எச்சரித்துள்ளது.
சுரங்கத் தொழிலாளர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதும் நிலக்கரி சுரங்கங்கள் திட்டம்
திணிக்கப்பட்டிருப்பதும் காட்டுவது என்னவென்றால் தொழிற்சங்கம் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தோடு சேர்ந்து
கொண்டு சமூக அதிருப்தியை திசை திருப்பவும் ஸ்பெயின் முதலாளித்துவத்தை முண்டு கொடுக்கவும் மீண்டும் ஒரு தீர்க்கமான
பங்கை வகித்து வருகின்றன. புதிய தாக்குதல்களை தடுப்பது ஒரு புறம் இருக்க, தொழிலாள வர்க்கம் தனது கடந்தகால
நலன்களை பாதுகாப்பதற்குகூட மிகவும் போர்குணமிக்க தொழிற்சங்க போராட்டம் எவ்வித வழிவகைகளையும்
வழங்கமுடியாதுள்ளது என்பது ஒரு எச்சரிக்கையாகும்.
இதுதான் பிரிட்டனில் 1984ல் நடைபெற்ற ஓராண்டு வேலை நிறுத்தத்தின் முக்கிய
படிப்பினையாகும். மிகவும் உறுதியான கொள்கைப்பிடிப்பான சுரங்கத் தொழிலாளர்களும், பொதுவான தொழிலாளர்களும்
நம்பியது என்னவென்றால் போர்குணமிக்க செயல்பாடு மட்டுமே தங்களது தலைவர்கள் போராடுவதற்கும், வெற்றியை
உறுதி செய்து தருவதற்கும் போதுமானவை என்பதாகும். எவ்வாறிருந்தபோதிலும், அது எடுத்துக்காட்டியது என்னவென்றால்
தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புக்கள் ஏற்கனவே சீரழிவின் ஒரு உயர்ந்த கட்டத்தை அடைந்துவிட்டது
என்பதாகும். 1970களின் நடுவிலிருந்து ஆரம்பித்து 1980களில் வேகமடைந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது,
சமூக ஜனநாயகத்தினதும் தொழிற்சங்கங்களினதும் தேசிய சீர்திருத்தவாத கொள்கையை திவாலாக்கி ஒரு புதிய சோசலிச
கட்சியை கட்ட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. |