ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Anti-terrorism legislation tramples on civil
liberties
பிரான்ஸ்: பயங்கரவாத-எதிர்ப்புச் சட்டம் குடி உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கிறது
By Antoine Lerougetel
5 December 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு
பிரான்சின் பாராளுமன்றம் நவம்பர் 29 அன்று ஆதரவளித்து வாக்களித்தது.
இந்தச் சட்டம், தன்னுடைய குடிமக்களை மின்னணு முறையில் கண்காணிப்பதற்கு, பொது
இடங்களில் செயல்படும் காமிராக்களை பயன்படுத்துதல், இணையதள நடவடிக்கைகளை பதிவு செய்தல்,
கண்காணித்தல், அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள் பாதுகாப்பு என்பவற்றை செயல்படுத்துவதின் மூலம்
அரசு அதிகாரங்களை பெரிதும் அதிகரித்துள்ளது.
ஆளும் UMP (Union
for a Popular Movement), வலது-மைய பிரெஞ்சு
ஜனநாயகத்திற்கான ஒன்றியம் UDF (Union for
French Democracy) ஆகிய இரண்டு கட்சிகளுடைய ஆதரவில்
373 வாக்குகள் இதற்கு கிடைத்தன. சோசலிஸ்ட் கட்சி வாக்களிக்கவில்லை. சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட
27 வாக்குகள் கம்யூனிஸ்ட் கட்சி, மூன்று பசுமைக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மூன்று சோசலிஸ்ட் கட்சி பிரதிநிதிகளால்
அளிக்கப்பட்டன.
அக்டோபர் 27ம் தேதி முதல் நாடெங்கிலும் இளைஞர்கள் கலகம் ஏற்பட்டு
அதையொட்டி அவசரகால நிலைமையை அரசாங்கம் அறிவித்ததற்கு எந்த உண்மையான எதிர்ப்பையும் அதிகாரபூர்வ
இடது கொடுக்க மறுத்த நிலையானது, ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும்
சார்க்கோசி ஆகியோரால் தலைமை தாங்கப்படும் கோலிசவாதிகளுக்கு குடி உரிமைகள் மீது இன்னும் ஆழ்ந்த
தாக்குதல்கள் நடத்த ஊக்கம் கொடுத்துவிட்டது. குறிப்பிட்ட புறநகர்ப்பகுதிகளில் கலகப்படைப்பிரிவு போலீசார்
இன்னமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்; ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது மற்றும் சோசலிச கட்சியின் அங்கீகாரத்துடன்
12 நாட்களுக்கு போலீஸ் நடவடிக்கைகள் மீது நீதித்துறைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது என்று கொண்டுவரப்பட்ட
அவசரகால நிலைமையானது, சோசலிசக் கட்சியின் பெயரளவிலான எதிர்ப்பு மட்டுமே இருக்கையில் மேலும் மூன்று
மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9ம் தேதி பாரிஸ் நகரில் மக்கள் கூடும் உரிமை 22 மணி நேரத்திற்கு நிறுத்தி
வைக்கப்பட்டது என்பது இந்த சார்க்கோசி சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.
இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் ஒரு கலகத்திற்கான திட்டம் இருந்தமை இணையதள கண்காணிப்பின்
மூலம் தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.
பயங்கரவாதம் பற்றிய போலிக் காரணங்கள், அதிலும் லண்டன், மாட்ரிட்
குண்டுவீச்சுக்கள், மற்றும் அக்டோபர்/நவம்பர் நிகழ்ந்த இளைஞர் கலவரங்கள் ஆகியவை இன்னும் கூடுதலான வகையில்
அரச அதிகாரங்கள் பெருகிய முறையில் பயன்படுத்தப்பட்டு, உலகளவில் போட்டித்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வருவதை தடுக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20 அன்று முடிவுற்ற சோசலிஸ்ட் கட்சியின் அவசர கூட்டமானது சம்பிரதாய
முறையில் அவசரகால சட்ட நீடிப்பை எதிர்த்தபோதிலும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டும், கூடுதலான
போலீஸ் நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்தியது. சார்க்கோசியின் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை
இக்கட்சி எதிர் கொண்ட வகை அடக்குமுறை சட்டத்திற்கு மறைமுகமான கட்சியின் ஆதரவை திரையிட்டு மூடும் நடவடிக்கைபோல்தான்
இருந்தது.
பாராளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டமை பற்றி
Agence France Press (AFP)
இவ்வாறு குறிப்பிட்டது: "ஒரு அபூர்வ நிகழ்வு: சோசலிஸ்டுகளின் "பொறுப்புணர்வை"
திரு. சர்கோசி விரைந்து பாராட்ட, அதேவேளை சார்க்கோசிக்கு முன்னால் உள்துறை மந்திரியாக இருந்த சோசலிஸ்ட்
கட்சியின் Daniel Vaillant,
அனைத்து விவாதங்களிலிருந்தும் தவிர்த்துக்கொள்ளுமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பை விடுக்க, விவாதமானது
அரசாங்கத்தில், பெரும்பான்மை மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த வகையில் இடம்பெற்றது."
நவம்பர் 23 அன்று Le
Figaro வியந்து கூறியதாவது: "ஜூலை 7 லண்டன் குண்டுவீச்சுக்களுக்குப்
பின்னர் நிக்கோலா சர்க்கோசியால் விரிவாய் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பிரதிநிதிகள்
சிறிதும் பூசலற்ற சூழ்நிலையில் ஆய்வுசெய்து கொண்டிருப்பது வியக்கத்தக்கது ஆகும்....... மனித உரிமைகள்
பாதுகாப்புக்கான அமைப்புக்கள் மற்றும் சட்டத்துறையினர் எரிச்சலுறும் நிலையில், சோசலிஸ்ட் பிரதிநிதிகள் அரசாங்கத்தின்
பொருளுரைக்கு ஆதரவாக வாக்களிக்க எண்ணிக்கொண்டிருந்தனர்."
மனித உரிமைகள் குழு, நீதிபதிகள் சங்கம், பிரான்சின் வக்கீல்கள் சங்கம் அனைத்தும்
இந்த சட்டத்தை சுதந்திரத்தை அழிக்கும் தன்மையுடையது
என்று அறிவித்தன.
Parisien இதழிற்கு நவம்பர்
29 அன்று கொடுத்த பேட்டி ஒன்றில், பாராளுமன்ற சோசலிஸ்ட் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான
Jean-Marc Ayraud
கூறினார்: "இதற்கு எதிராக வாக்களிப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் பேச்சுக்கே இடமில்லாதது. ஜனநாயகங்கள்
பயங்கரவாத ஆபத்தை எதிர்கொள்ளும்போது, தங்களை எப்படி தற்காத்துக்கொள்ளுவது என்பது பற்றி நன்கு அறிந்து
கொள்ள வேண்டும். சில குறிப்புக்களில் குறைபாடுகள் இருந்த போதிலும் கூட,
சட்டத்தில் உள்ள பொருளுரையின்படியிலான நடவடிக்கைகள் ஒன்றும்
சுதந்திரத்தை குறைப்பவையும் அல்ல; சட்ட பூர்வமான தடுப்புக்களும் அல்ல.
கடந்த வாரம் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டின் அவசர கூட்டத்தில் எடுத்த நிலைப்பாட்டை
அவர் மேலும் அதிகமாக முன்னுக்கு கொண்டுவந்து, சட்டம் ஒழுங்கை பொறுத்தவரையில் அவற்றை பாதுகாக்க சோசலிஸ்ட்
கட்சி முக்கியமானதான இருக்கும் என்றார். "பொது ஒழுங்கு, பாதுகாப்பு இவற்றின்மீதான மரியாதை உறுதிப்பாடு
என்பவை வலதிற்குத்தான் என்ற வகையில் கடமையை கைவிட்டுவிட்டால், இடது மிகப் பெரிய தவறை செய்துவிடும்."
குடி உரிமைகளை அழித்தலுடன் அரசின் அதிகாரத்தை விரிவுபடுத்தும் தன்மையில் உள்ள
சட்டத்தின் முக்கியத்துவத்திற்கும், வெகு விரைவில் அது ஏற்கப்பட்டதிற்கும் இடையிலான வேறுபாடு பெயரளவிற்கு
இடதானாலும், வலதானாலும் அரசியல் உயர் அடுக்குகளிடையே, சமூக உரிமைகள், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின்மீது
நடக்கும் தாக்குதல்களால் தூண்டப்படும் எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தையும் நசுக்குவதில் உள்ள அடிப்படை ஒற்றுமையை
விளக்கிக் காட்டுகிறது. விவாதம் அக்கறையின்றி செய்யப்பட்ட தன்மை பற்றி
AFP குறிப்பிடுவதாவது:
"பசுமைக் கட்சியில் Noël Mamère
தான் வெளிப்படையாகப் பேசினார்; சிலவேளைகளில் அவருக்கு கம்யூனிஸ்ட்
Michel Vaxès (ஒரு
முன்னணி உறுப்பினராக இல்லாதவர்) ஆதரவு கொடுத்தார்; 'அடிப்படை உரிமைகளை தாக்கும் தன்மையுடையவை'
" என்று அவர் சட்டத்தை பற்றிக் குறிப்பிட்டார்.
வாக்கு எடுப்பதற்கு முன்பு சோசலிஸ்ட் பாராளுமன்ற குழுவினர் நடத்திய கூட்டத்தில்
சோசலிஸ்டுகள் வாக்களிக்காமல் இருப்பர் என்று முடிவு எடுக்கப்பட்டது; அதில் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்க
வேண்டும் என்று கூறிய குறிப்பிடத் தக்க சிறுபான்மையினரில்
Vaillant
இருந்தார். வாக்குப் பதிவில் இருந்து பல முக்கிய உறுப்பினர்கள் விலகிக் கொண்டனர்; இதில் தன்னை இடது பிரிவினர்
என்று கூறிக்கொள்ளும் Arnaud Montebourg
ம் இருந்தார்.
சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் பேசுவதாக கூறிய
Jean Floch
அரசிற்கு தன்னிச்சையான அதிகாரங்கள் கொடுக்கப்படுவதை மூடிமறைக்கும் வகையில் பேசினார்: "நம்முடைய சக
குடிமக்களின் பாதுகாப்பை உறுதியளிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும் என்பதை ஏற்றாலும், சட்ட
வரம்பு பற்றியதில் நாம் கடுமையாக இருக்கவேண்டும், அப்பொழுதுதான் சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படும்...
நம்முடைய பொறுப்புக்களை முற்றிலும் உணர்ந்த வகையில், இந்த சட்டப் பொருளுரை மீது வாக்களிப்பதை தவிர்க்கிறோம்."
இவ்வாறு தன்னுடைய கருத்து நெறியாக்கப்பட்டுவிட்டதால், சார்க்கோசி பாராளுமன்றத்தில்
அறிவிக்க முடிந்ததாவது: "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது வலது பிரச்சினையாகவும் இல்லை
இடது பிரச்சினையாகவும் இல்லை, மாறாக எந்த அரசாங்கமாயினும் தன்னுடைய சட்டபூர்வ கருவிகளை வலுப்படுத்திக்
கொள்ளுவதின் தொடர்ச்சியாகத்தான் அது காட்சியளிக்கிறது."
ஒரு நிரந்தரமான போலீஸ் அரசை நோக்கிய ஒரு பெரிய நடவடிக்கை, பத்திரிகைகளில்
இருந்து எந்தவிதமான அக்கறை கொண்ட கருத்துக்களும் போதாதவகையில் கடந்துசெல்ல விடப்பட்டிருக்கிறது.
சார்க்கோசியின் சட்டவரைவு மிகக் குறைவான விவரங்களுடன்தான் வெளியிடப்பட்டது; அதன் குடி உரிமைகள் மீதான
உட்குறிப்புக்கள் முழுவதும் வெளிக் கொண்டுவரப்படவில்லை.
பல தொடர் வெடிகுண்டு வீச்சுக்கள் நிகழ்ந்த பின்னர் 1986க்குப் பின்னர் பயங்கரவாத
சட்டங்கள் கணிசமான அரசின் அதிகாரங்களை கட்டமைத்துள்ளன. பாரிஸ் வழக்குத் தொடரும் அலுவலகத்தின் 14ம்
பிரிவினை அடிப்படையாக கொண்ட நீதிபதி Bruguière
தலைமையில் பயங்கரவாத-எதிர்ப்பு நீதிபதிகள் கொண்ட சிறப்பு நடுவர் குழு ஒன்றை இச்சட்டம் நிறுவியுள்ளது. இவர்களுக்கு
ஒருதலைப்பட்சமாக ஏராளமானவர்களை கைது செய்யும் உரிமை, தற்காலிக தடுப்புக் காவல் அதிகாரம் ஆகியவை,
"தவறு செய்பவர்களுடன் தொடர்பு" என்ற பெயரில் ஒருவர் நிலைப்பாட்டை குற்றம் என்று கூறும் தெளிவற்ற அதிகாரங்களை
செலுத்தும் நிலை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் கோர்சிகன், பாஸ்க், ஈரானிய, அல்ஜீரிய,
இஸ்லாமிய சந்தேகத்திற்குரியவர்கள் என்று மட்டும் அல்லாமல் பிரெஞ்சு குடிமக்கள்மீதும் செலுத்தப்பட்டுள்ளன; நூற்றுக்
கணக்கான சந்தேகத்திற்குட்பட்டவர்கள் நான்கு ஆண்டு காலம்கூட எந்த விசாரணையும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு மண்ணில் மனித உரிமைகள் பெரிதும் மதிப்பற்ற வகையில் வீசியெறியப்படுது பற்றி, பொதுவாக இடது கட்சிகள்
அலட்சியப் போக்கைத்தான் காட்டியுள்ளன.
Bruguière குழுவின் அதிகாரங்களை
பற்றி பிளேயரும், புஷ்ஷும் பொறாமையுடன் ஆழ்ந்து சிந்திக்கலாம் என்றாலும்கூட, பிரெஞ்சு அரசு நாட்டின் மிகப்
பரந்த தனிப்பட்ட சட்டங்களை தகர்ப்பது பற்றி அவா கொண்டுள்ளது. 60,000 கண்காணிப்புக் காமிராக்கள் தற்போது
நடவடிக்கையில் இருக்கும்போது, பிரிட்டிஷ் மக்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்து கண்காணிக்கும்
4 மில்லியன் கருவிகளுக்கு போட்டியிட்டு சமநிலை அடைய அது
காத்திருக்க முடியாது. நாள் ஒன்றிற்கு ஒரு சராரசி லண்டன் நகரவாசி வேலைக்கு சென்று திரும்புவதற்குள்ளாக
300 தடவைகள் புகைப்படம் எடுக்கப்படுகிறார்.
இந்தச் சட்டத்தின் முக்கிய விதிகளாவன:
* உள்துறை மந்திரியின் உத்தரவிற்கு
கீழ்ப்பணிந்து நடக்கும் மத்திய, வட்டார அரசாங்கங்களில் பிரதிநிதிகளான
Prefets
எனப்படுவோர், "பயங்ரவாத நடவடிக்கைகள் கண்டுபிடிக்கும் வகையில் தக்க இடங்களில் உள்ள வசதிகளை
பெருக்கும் வகையில் புகைப்படமெடுக்கும் கருவிகளை பொருத்துவதற்கு உரிய நடவடிக்கைகள்" எடுக்க அதிகாரம்
கொடுக்கப்படுவர். தேவையான கருவிகளை பொருத்த மறுப்பு தெரிவிக்கும் செயல் 150,000 யூரோக்கள்
அபராதத்திற்கு உட்படும். இன்னும் பரந்த அளவில் உயர்தரக் கருவிகள் பொருத்தப்படுதலும் பரிசீலனைக்கு
உட்பட்டுள்ளது.
* இணையதளம், தொலைபேசி வசதி
கொடுப்பவர்கள்(providers)
"தாங்கள் வைத்திருக்கும், சேகரிக்கும் தகவல்களை சிறப்பாக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள தேசிய போலீஸ்,
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு" கட்டாயமாக அளிக்க வேண்டும். இந்த வசதி கொடுப்பவர்கள் பயன்படுத்துபவர்கள்
தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள், "தொலை இயக்கக் கருவிகள் உள்ள இடங்கள்" போன்ற தொழில்நுட்ப
தகவலையும் அளிக்க வேண்டும். அரசு தகவல் சேகரிப்பவர்கள் நீதித்துறை கட்டுப்பாட்டை பெரிதும் தவிர்க்க
முடியும்: "ஒரு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டுப்பாட்டிற்குள் செயலாற்ற வேண்டும் என்று இப்பொழுதுள்ள
வரைமுறை மிகவும் தடுப்பை தருகிறது." பயங்கரவாத எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பு பிரிவினரின்
அதிகாரிகள் இப்பொழுது இந்தக் கண்காணிப்பிற்காக மிகமிகக் குறைந்த நீதித்துறைக் கட்டுப்பாட்டிற்குத்தான் உட்படுத்தப்படுவர்.
தாங்கள் அனுப்பும் செய்திகளுடைய பொருளுரை கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படமாட்டாது என்று பொதுமக்களுக்கு
உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது.
* கார்கள், அவற்றில் செல்லுபவர்கள்
மின்னணு முறையில் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு, திரைப்படமும் எடுக்கப்படும் மற்றும் பல நாடுகளுக்கு ஊடாக
செல்லும் இரயில்களில் அடையாள அட்டை சோதனைகள் மீது இப்பொழுதுள்ள தடைகள் குறைக்கப்படும். விமான
மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள், பயண முகவர்கள் பயணிகள் பற்றிய முழுவிவரங்களையும் கொடுக்க வேண்டும்.
* தகாதவர்களுடன் தொடர்பு"
அல்லது சதித்திட்டம் என்ற குற்றம், இதன் விதிமுறைகள் தெளிவற்றவையாக இருந்து ஒரேவிதமான வசதிகளை பயன்படுத்தியவர்களாக
இருந்தாலும், தண்டனைகள் கூடுதலான வகையில் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது: குற்றவாளிகளுடன் தொடர்பு உடையவர்
என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டால், சிறை தண்டனை 20 ஆண்டுகள் என்று இரட்டிப்பாக்கப்படும்; "சதித்திட்ட குழுக்களின்
தலைவர்கள், அமைப்பாளர்கள்" 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக தண்டனை உயர்வை பெறுவர்.
* விசாரணையின்றி கைதிகளை காவலில்
வகைக்கும் கால அளவு நான்கில் இருந்து ஆறு நாட்களுக்கு அதிகரிக்கப்படலாம்; பயங்கரவாத எதிர்ப்பு நீதிபதிகள்
இதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. உண்மையில், இந்தச் சட்டம் "தேசிய அதிகாரங்கள் உடைய சிறப்பு
நீதிபதிகளிடம்தான்" இந்த வழக்குகள் விசாரணைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறுகிறது: அதாவது, குற்றச்சாட்டு
போடப்படும் என்று உறுதிமொழி இருந்தாலே காலவரையின்றி சிறையில் ஒருவரை இருத்தும் கருத்துடைய
Bruguière
குழுவின் பாரிஸ் 14ம் பிரிவு நீதிபதிகள் இதை கருத்திற் கொள்ளுவர் என்று ஆகிறது.
இச்சட்டத்தின் இன்னொரு முக்கியமான நடவடிக்கை பிரெஞ்சு குடிமகனாகும் காலத்தை
10 லிருந்து 15 ஆண்டுகளாக நீடித்தல், இதன்மூலம் இயல்பாகவே பிரெஞ்சு குடிமகனாகிவிட்ட ஒரு நபரை அவர்
நாட்டுக் குடிமகன் இல்லை என்று பறித்துவிடமுடியும். இத்தகைய இழப்பை கொடுக்கக் கூடிய குற்றங்களின் தன்மை
மிகவும் தெளிவற்றதாகவும், பலவற்றையும் தொகுத்துக் கூறுவதாகவும் உள்ளது. அதாவது, "நாட்டின் நலன்களுக்கு
எதிராக செயல்படுவது; ஒரு பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவது; ஒரு பிரெஞ்சு குடிமகனுக்கு ஒவ்வா செயல்களை
செய்வது மற்றும் பிரான்சின் நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது, என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன.
வரையறுக்கப்படாத, புதிர் நிறைந்த பிரெஞ்சு சாராம்சம் என்று கூறப்படுவது நீண்டகாலமாக
பிரெஞ்சு குடிமக்களாகி இருப்பவர்களை அடக்குவதற்கு தடையற்ற வாய்ப்புக்களை கொடுத்துள்ளது; "பிரெஞ்சு வகையல்ல"
என்று ஒரு குற்றத்தை இது நிறுவப் பயன்படும். பிரெஞ்சு கொடியை ஏறக் மறுத்தல், நாட்டின் கொடியை எடுத்துச்
செல்ல மறுத்தல், மற்றொரு நாட்டின் கொடியை எடுத்துச் செல்லுதல், தேசிய கீதத்திற்கு அவமதிப்பு, மற்றொரு
நாட்டின் கீதத்தை இசைத்தல் எல்லாவிற்றிற்கும் இது பொருந்துமா? அரசாங்கத்தின் கொள்கைக்கு இணக்கம்
காட்டாவிடில்? இந்தப்பட்டியல் கணக்கிலடங்காமல் போகிறது. சட்டத்தைப் பற்றி செய்தி ஊடகத்தில் வந்துள்ள
வர்ணனைகள், சுருக்கங்கள் இதைப் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த விதியை நியாயப்படுத்தி முன்னுரை கூறுவதாவது: "பிரெஞ்சு குடிமகன் என்ற
அந்தஸ்து பெறப்பட்டுவிட்டால், போராளி சட்ட பூர்வமாக வெளியேற்றப்பட முடியாது; மேலும் பல நாடுகளுக்கு
செல்வதற்கு விசா வாங்க வேண்டிய தேவையும் இல்லை. எனவே அத்தகைய மூலோபாயங்கள் கையாளப்படாமல்
இருப்பதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்."
குடியேற்றக் கட்டுப்பாடு மிகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதோடு, பிரான்சின் அடிப்படை
நிர்வாக அலகான, பிரான்சில் உள்ள கம்யூன்கள் 36,000த்தின் மேயர்களுக்கு கூடுதலான போலீஸ் பொறுப்புக்களும்
கொடுக்கப்பட்டுள்ளதோடு, ஆட்சியின் உயரடுக்குகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திடம் வளர்ந்து,
பெருகி வரும் மகத்தான சீற்றத்தை எதிர்கொள்ளவும் தயாராகிவிட்டது. இவையனைத்தும் அவசரகால நிலைமையை
நிரந்தரமாக கொள்ளும் நிலையை, அதாவது ஒரு போலீஸ் அரசிற்கான நடைமுறை இலக்கணத்தை கொடுத்துள்ளன.
சட்டத்திற்கான முன்னுரை மிகத் தெளிவாக உள்ளது: "பிரான்ஸ் பயங்கரவாத அச்சுறுத்தகளின் மிக உயர்ந்த தரத்தை
எதிர்கொள்ளுவதற்காக புதிய சட்டபூர்வ கருவிகளை கொள்ள வேண்டும். அதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
சில நீண்டகாலப் பயன்பாடு கருதி இயற்றப்பட்டுள்ளன; மற்றவை மூன்று ஆண்டு காலத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம்."
மூன்று வார காலப்பகுதியில், சிறப்பு அதிகாரங்கள் 12 நாட்களில் இருந்து மூன்று
மாதங்கள், பின்னர் மூன்றாண்டுகள் அல்லது காலவரையற்றது என்று நீட்டிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும்,
ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான இத்தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அரசியல் அளவில் திரட்டப்பட்டிருந்தால்
இந்த வளர்ச்சிகள் நிறுத்தப்பட்டிருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி உட்பட, இடதினால் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும்
முயற்சி இல்லாத நிலையில் ---அவசரகால நிலைக்கு எதிரான அவற்றின் வாக்குகள், இப்பொழுது பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டத்திற்கு ஆதரவு என்று அவர்களுடைய நிலைப்பாடு முற்றிலும் செயல் சாராத தன்மையைத்தான்
கொண்டுள்ளது-- இது பிரான்சில் ஆளும் உயரடுக்குகள் தங்கள் ஜனநாயக விரோதச் செயற்பட்டியலை திணிப்பதை
அனுமதிப்பதில் பெரிதும் தீர்மானகரமான ஒன்றாக இருந்திருக்கிறது.
See Also:
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பேராயம்
அரசாங்க அடக்குமுறைக்கு ஆதரவு
Top of
page |