World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German coalition government accord: a declaration of war on working people

ஜேர்மனியின் கூட்டணி அரசாங்கத்திற்கான ஒப்பந்தம்: உழைக்கும் மக்கள் மீதான ஒரு போர் அறிவிப்பு

By Dietmar Henning
19 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் புதிய "கூட்டணி அரசாங்கத்தை" அமைத்துள்ள சமூக ஜனநாயக கட்சி (SPD), கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU), மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) ஆகியவற்றின் கட்சிப் பேரவைகள் நவம்பர் 14ம் தேதி இரண்டு நாட்கள் முன்னால் பகிரங்கமாக்கப்பட்டிருந்த ஒரு உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. "ஜேர்மனிக்காக ஒன்று சேர்ந்திருத்தல்-- தைரியத்துடனும், மனித நேயத்துடனும்" என்ற தலைப்பு இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய பொருளுரையோ உழைக்கும் மக்கள் மீது, பொருளாதார, அரசியல்ரீதியில் போர் பிரகடனத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் இரண்டுமே ஒப்பந்தம் பற்றிய ஆரம்ப விமர்சனங்களை, "சமரசத்திற்காக" ஏற்கப்படவேண்டியவை என்று கூறி நிராகரித்துள்ளன. ஒரு பெரும் கூட்டணியில் இத்தன்மைதான் நிலவும் என்று அவை கூறியுள்ளன. தேர்தல் முடிவு வேறு எந்தவித சாத்தியக்கூறையையும் கொடுக்கவில்லை என்றும் அவை கூறியுள்ளன. இது ஓர் அப்பட்டமான பொய்யுரை ஆகும். தேர்தலில் ஆதரவை இழந்த இரு கட்சிகளும் செப்டம்பர் 18 அன்று பெரும்பான்மையான ஜேர்மனிய வாக்காளர்களால் தெளிவாக நிராகரிக்கப்பட்டு வந்த வலதுசாரி, சமூக எதிர்ப்பு வேலைதிட்டத்தை செயல்படுத்துவதாகத்தான் இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் கொண்டுள்ளன.

2007ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் மதிப்புக் கூடுதல் வரியில் (value added tax) 3% அதிகரிப்பு வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு அடையாளம் ஆகும். தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மதிப்புக் கூடுதல் வரியை 2% அதிகரித்து 18% ஆக்குவதாக அறிவித்திருந்தது இதன் பின்னர் கருத்துக் கணிப்புக்களில் இது பற்றி கணிசமான ஆதரவையும் இழந்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் இரண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் திட்டமிட்டிருந்த இவ்வரி உயர்வுத் திட்டத்தை சமூக ஜனநாயகக் கட்சி "மேர்க்கல்-வரி" ("மேர்க்கல்-வரி, செலவினங்கள் கூடும்" -- அங்கேலா மேர்க்கல்தான் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தலைவரும் ஜேர்மனியின் புதிய அதிபரும் ஆவார்) எதிர்த்திருந்தன. இப்பொழுது இரு கட்சிகளும் 19 சதவிகிதமாக உயர்த்தப்படுதற்கு உடன்பட்டுள்ளன!

கிட்டத்தட்ட 38 மில்லின் ஜேர்மனிய இல்லங்களுக்கு இந்தப் மதிப்புக் கூடுதல் வரி உயர்வு என்பது, தற்போதைய செலவீன வடிவமைப்பை ஒட்டி, இன்னும் கூடுதலாக ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 350 மேலதிக செலவு என்று பொருளாகும்.

2012ல் இருந்து 2035 இற்குள் சட்டபூர்வ ஓய்வூதியத்திற்கான வயது 65ல் இருந்து 67 என்று படிப்படியாக உயர்த்தப்படும். இதன் விளைவாக மூத்த தொழிலாளர்களிடையே இப்பொழுது 55 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 40 சதவிகிதத்தினர் மட்டுமே வேலையின்மையில் உள்ளனர் என்ற நிலைமை மாறும்; இது ஓய்வூதிய நிபந்தனைகளில் இன்னும் வெட்டுகளயே உருவாக்கும். சமீபத்திய காலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதிய அதிகரிப்பையும் பெறவில்லை மற்றும் புதிய அரசாங்கம் வரவிருக்கும் நான்கு ஆண்டுகளிலும் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று தெரிவித்துவிட்டது. வருடாந்தம் குறைந்த பட்சம் 2 சதவிகித விலைவாசி உயர்வாவது, வருமானத்தில் கணிசமான வெட்டு என்றுதான் இதற்குப் பொருளாகும்.

சாதாரண ஊதியம் பெறுவோர் கொண்டுள்ள பல வரிச்சலுகைகளையும் அகற்றுவதற்கு பெரும் கூட்டணி ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு 600 மில்லியன் யூரோக்கள் வரி வெட்டுகளை தோற்றுவிக்கும்; 2009ஐ ஒட்டி இது மொத்தம் 7 பில்லியன் யூரோக்கள் என்று ஆகும். அடுத்த ஆண்டில் இருந்து வீட்டுச் சொந்தக்காரர்களுக்கான வரிச்சலுகைகள் குறைக்கப்படும்; ஜனவரி 1, 2006ல் இருந்து தொழிலாளர்கள் ஒரு வேலையிழக்கும்போது கொடுக்கப்படும் இடைக்கால ஊதியங்களுக்கான வரிவிலக்கும் வெட்டுக்களுக்கு உட்படும்.

2007ம் ஆண்டில் வேலைக்காக பயணிப்பவர்களுக்கான சலுகைகள் குறைக்கப்படும்; திருமணமான, அல்லது ஒற்றை நபர்களில் வரி இல்லா சலுகைகளும் வெட்டப்படும். சுரங்கத் தொழிலளார்களுக்கு கொடுக்கப்படும் படிகளும், திருமண தம்பதிகள், குழத்தை பெறும் தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் ஆகியவை 2007ல் இருந்து அகற்றப்பட்டுவிடும்.

நிலக்கரிக்கு மானியங்கள் அளிக்கப்படுவது தகர்க்கப்படுவது பற்றியும் கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) அரசாங்கம் இதுகாறும் திட்டமிட்டதைவிட கூடுதலாக மானியங்களில் வெட்ட முடியும் என்ற வகையில் உடன்பாட்டிற்கு விளக்கம் காண்கிறது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா அரசாங்கத்தின் நோக்கம், 2010க்குள் 750 யூரோ மில்லியனை நிலக்கரி மானியங்கள் மூலம் சேமிக்கலாம் என்பது மாநிலத்தின் பிரதம மந்திரி ஜோர்கன் ருட்கர்ஸ் (CDU) கருத்தின்படி செயல்படுத்தக்கூடியதே என்பதாக உள்ளது.

இன்னும் கூடுதலாக வெட்டுக்கள் தற்போதைக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று கூட்டணி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக சுகாதார சேவைமுறைக்கு இது பொருந்தும். அடுத்த ஆண்டு ஜேர்மன் சுகாதார மற்றும் செவலியர் காப்புறுதித் தொகை இவற்றை முற்றிலும் மாற்றவேண்டும் என்ற கருத்தை கூட்டணி கொண்டுள்ளது. வெவ்வேறு மாதிரிகளை "நடுநிலையில் நின்று" பரிசீலனை செய்யவேண்டும் என்று இரு புறத்தாரும் விரும்புகின்றனர். ஆனால் வருங்காலத்தில் தனியார் காப்புறுதி தொகை கூடுதலான முறையில் ஜேர்மனிய காப்புறுதி முறையில் ஒரு பங்கை கொள்ளும் என்று அவை ஏற்கனவே உடன்பாட்டை கொண்டுள்ளன.

தொழிலாளர் கொள்கை

கூட்டணி ஒப்பந்தத்தின் முக்கிய கருத்து தொழிலாளர் கொள்கையில் தெளிவாக காணப்படுகிறது. முதலாளி-தொழிலாளி ஆரம்பகாலத் தொடர்பு இரண்டு ஆண்டுகாலத்திற்கு விரிவாக்கப்படுகிறது. "வேலைக்கு அமர்த்து, வேலை நீக்கு" ("hire and fire") என்ற முறையை நோக்கி இது ஒரு முக்கிய படியாகும்; முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு முதலாளி, தொழிலாளியின் பணியை இரண்டு வார முன்னறிவிப்புக் கொடுத்து, காரணம் ஏதுமின்றி நிறுத்திவிட முடியும். ஆவணம் தெரிவித்துள்ளபடி, வேலை வழங்கும் கொள்கை துறையில் "தற்பொழுது பயனற்ற, திறமையற்ற முறையில் இருக்கும் கூறுபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்."

முந்தைய சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டாட்சி அரசாங்கம் பெப்ரவரி 2006க்குள் நடத்த திட்டமிட்டிருந்த, 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலையின்மை உதவிகள் குறைப்பு நடைமுறையில் இருக்கும். மேலதிக நடவடிக்கைகளாக 30 ஆண்டுகாலம் வேலைசெய்த பின்னர், வயதான தொழிலாளர்கள் வேலையிழந்தால், அவர்கள் குறைவான வேலையின்மை உதவித்தொகைகளை பெருவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர் என்று ஒப்புக்கொண்டுள்ளது இது ஹார்ட்ஸ் IV சட்டம் என்று அழைக்கப்பட்ட அடிப்படையில் இருக்கும்.

மொத்தத்தில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் வலது-சாரி யூனியன் கட்சிகள் 4 பில்லியன் யூரோ ஆண்டு ஒன்றுக்கு, ''கட்டுக்கு மீறியதாக உள்ளது'' அவர்கள் குறிப்பிடும் வேலையின்மை சலுகைகளில் இருந்து சேமிக்க விரும்புகின்றனர். வயதான குழந்தைகளுக்கு பெற்றோர் பெறும் ஆதரவுத் தொகையும் வெட்டப்படும் மற்றும் உதவித்தொகை முறை தொடர்பான "துஷ்பிரயோக'' குற்றச்சாட்டு பிரச்சாரத்தின் மூலமாக, வேலையின்மை உதவித்தொகைகளும் கணிசமான முறையில் வெட்டப்படும்.

சமீபத்தில் பதவியில் இருந்து விலகிய பொருளாதார வேலைகொடுக்கும் மந்திரி வொல்ப்காங் கிளமண்ட் (SPD) தயாரித்துள்ள சிறிய நூலில், "நலன்புரி அரசை தானே பயன்படுத்திக்கொள்ளுதல், உறிஞ்சுதல், துஷ்பிரயோகத்திற்கு எதிராக" என்பதன் கீழ் ''ஒட்டுண்ணிகள்'' என வேலையற்றோர் குறிக்கப்பட்டுள்ளனர். தங்கள் விரோதிகளை நாஜிக்கள் இப்படித்தான் அழைத்தனர். சமூகத்தின் மிகவும் நலிந்த தட்டினர்களுக்கு எதிராக பிரச்சாரத்தின் கருத்தியல் அடித்தளத்தை இது வழங்கியது. வேலையின்மையில் வாடும் மக்கள் பற்றிய தகவல்களை சோதிக்கும் அதிகார நடைமுறைகள் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது; ஓய்வூதிய சேமிப்புக்கள், சுகாதாரக் காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் "துஷ்பிரயோக நிலைமை" ஏதேனும் நடக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும்; ஆண்டிற்கு நான்கு முறை இத்தகைய சோதனைகள் தீவிரமாக நடத்தப்படும்.

பெரும் கூட்டணியின் திட்டங்களின்படி, வேலையற்றோர் எந்தவித அடிப்படை உரிமைகளும் இல்லாத குறைவூதிய பெரும்படையாக மாற்றப்பட இருக்கின்றனர். புதிய நடவடிக்கைகள் குறைவூதிய வேலைப் பிரிவுகளின் விரிவாக்கத்திற்கு மேற்கொள்ளப்படும். வேலையற்ற ஜேர்மனியர்கள், இப்பொழுது கிழக்கு ஐரோப்பாவில் இருந்து குடியேறியுள்ள புதிய குறைவூதிய தொழிலாளர்களுக்கு பதிலாக பணியில் இருந்தப்படுவர்; பிந்தையவர்கள் இப்பொழுது பழங்கள் அறுவடை போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

BA எனப்படும் கூட்டாட்சி தொழிலாளர் நிறுவனம் ஏற்கனவே தக்க மாறுதல்களை அவற்றின் வரவு செலவுத்திட்டத்தில் வரவிருக்கும் ஆண்டிற்காக செய்துள்ளனர். 100,000 வேலையற்றோர் ஏதேனும் ஒரு வகையில் குறைவூதியப் பணியில் அமர்த்தப்படலாம் என்று BA முன்கருத்தாகக் கொண்டுள்ளது: சமூகப் பாதுகாப்பிற்காக தகுதி படைத்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதையொட்டி இன்னும் அரை மில்லியன் குறையும்; அதாவது வேலை உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை கூடுதல் என்பது "குறைந்த" அல்லது "1 யூரோ" ஊதிய வேலை எனப்படும் பணிகளின் விரிவாக்கத்தால் விளையும்.

தற்காலிக தணிப்பு நடவடிக்கைகள்

இந்தக் குறைப்புக்களுக்கு வரும் எதிர்ப்புக்களை அடக்கும் வகையில், கூட்டணி அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் சில அடையாள தற்காலிக நிவாரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "எதிர்பார்க்க்கூடிய தவிர்க்கமுடியாதவை" என்பவை குறைந்த, சராசரி ஊதியம் பெறுவோரை தாக்குவதை முக்கியமாக நோக்கம் கொண்டிருக்கவிலை என்பதை காட்டிக்கொள்ளும் வகையில், அது பணக்காரர்களையும் தாக்கும் என்று கூறப்படுகிறது. "கிட்டத்தட்ட அனைவருமே பாதிக்கப்படுவர்" என்பதுதான் Süddeutsche Zeitung பத்திரிகையுடைய தலைப்பாக இருந்தது. "சேமிப்பு அலை அனைவரையும் தாக்குகிறது" என்று Westdeutsche Allegemeine Zeitung பத்திரிகை எழுதியுள்ளது.

சொத்துக்களின் மீதான வரி என்று அழைக்கப்படுவதற்கான இருப்பு இந்த "அடையாளங்களுள்" சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. 250,000 யூரோக்கள் சம்பாதிப்பவர்கள் (திருமணமாகாதவர்கள்) அல்லது 500,000 யூரோக்கள் சம்பாதிப்பவர்கள் (திருமணமானவர்கள்) 2007ம் ஆண்டில் இருந்து வரிவிதிப்பில் 42 சதவிகிதத்திற்கு பதிலாக 45 சதவிகித வரியைப் பெறுவர். இந்த உயர்மட்ட வரிவிதிப்பு அளவு ஏற்கனவே 1998ல் (53 சதவீதம்) இருந்ததைவிட கணிசமாகக் குறைவானதாகும்; ஒரு குறிப்பிட்ட தொகையைவிட அதிகம் வருமானம் பெறுவோருக்குத்தான் இது பொருந்தும். உண்மையில் செல்வந்தர்களில் மிகக் குறைந்தவர்கள்தான் தங்கள் முழுச் சொத்துக்களையும் வரிவிதிக்க அனுமதிக்கின்றனர். வரிக்கு உட்படக்கூடிய வருமானத்தை குறைப்பதற்கும், மறைப்பதற்கும் அவர்கள் பல வழிவகைகளை கையாள்கின்றனர்; பட்டியலில் வராத நிறுவனங்கள், இரண்டாம் வருமான வளங்களை தள்ளுபடி செய்வது போல் காட்டுவது, ஆகியவை சில வழிவகைகளாகும்.

"செல்வந்தர்களின் மீது வரி" என்பது மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியைவிட வேறு ஒன்றும் இல்லை. இந்த நடவடிக்கை மூலம் எவரேனும் இலாபம் அடைவார்கள் என்றால், அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரி ஆலோசர்கள்தான். பங்குகளின் மீதான வரி அதிகரிப்பு நடவடிக்கை உட்பட, ஊகத்தில் இருந்து வரும் இலாபங்கள், நிலங்களை வைத்திருப்பவர்கள் ஆகியவற்றின் மீது கூட்டணி ஒப்பந்தம் வரிவிதிப்பை அதிகரிக்கும் என்று சமீப வாரங்களில் வெளிவந்துள்ள வதந்திகள், புதிய குடும்பங்களில் வருங்காலம் சாதமாக இருக்க செயல்படுத்தப்படும் என்று கூட்டணிக் கட்சிகள் கொடுத்துள்ள உறுதிமொழிகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை.

நலன்புரி அமைப்புக்கள் ஏற்கனவே கூட்டணித் திட்டங்களை கடுமையான விமர்சனத்திற்குட்படுத்தியுள்ளன; கத்தோலிக்க நிவாரண அமைப்பான Caritas Germany, கூட்டணியை, "ஏழைகளிடம் இருந்து பணக்காரர்களுக்கு செல்வத்தை பிரித்துக் கொடுக்கிறது" என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளது. சமூகப் பணித் துறையில் இருக்கும் மற்ற வல்லுனர்கள் கூட்டணியின் திட்டமான குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு மானியங்கள் என்பது கல்வியாளர்கள், வசதி நிறைந்தவர்களுக்குத்தான் அதிக நன்மையைக் கொடுக்குமே ஒழிய, வேலையற்றோர், குறைவூதியத்தினர் ஆகியோருக்கு அது எதிரானது என்று அறிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்களால் செல்வந்தர்களுடன், முதலாளிகளும் இலாபங்கள் அடைகின்றனர். பெருவணிக இலாபங்கள் முதலில் பயன்பெறும்; ஏனெனில் வேலைகொடுப்பவர்கள் வேலையின்மை காப்புறுதிக்காகக் கொடுக்கும் பங்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம் குறைக்கப்பட்டு 4.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். இதைத்தவிர, வணிகம் கூடுதலான நலன்களை 2008ல் இருந்து திட்டமிடப்பட்டுள்ள வரிச்சீர்திருத்தத்தின் மூலமும் பெறும். முதலீடு செய்பவர்களுக்கு தாராளமாக பணம் திரும்பி வரும் வகையில் விதிகள் திட்டமிடப்பட்டுள்ளன; இதைத்தவிர மரணவரிகள் குறைப்பும், 10 ஆண்டுகாலத்தில் அவை முற்றிலும் குறைக்கப்படும் என்ற திட்டமும் உள்ளன. "இப்படி பொருளாதாரத்திற்கு ஊக்கம் கொடுக்கும் நடவடிக்கைகள் என்பவை 6.5 பில்லியன் யூரோக்கள் அளவு உள்ளது."

"செயற்பட்டியல் 2010'' தீவிரப்படுத்தப்படுதல்

பெரும் கூட்டணி கொள்கை, ஏழைகளிடம் இருந்து மிகப் பெரிய அளவில் செல்வந்தர்களுக்கு பணத்தை திரட்டிக் கொடுத்ததற்காக அதுதான் அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்பட்டியல் 2010ன் தீவிரமான பதிப்பு ஆகும்.

இது சமூக ஜனநாயகக் கட்சி பசுமைக் கட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்திய வரிச்சலுகைகள், செல்வந்தர், பெருவணிகம் இருக்கும் விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்திப் பெரும் மிச்சம் மட்டும் இல்லாமல், ஏழைகளுக்கும் வேலையற்றோருக்கும் கொடுக்கப்படும் செலவீனங்கள் பெருகிவிட்டதால் அதற்காகப் புதிய வரவுசெலவுத்திட்டத்தில் வரவிருக்கும் வெட்டுக்களை நியாயப்படுத்தவும் பயன்படுகின்றன.

"நிலைமை இப்பொழுது மோசமாக இருப்பதாலும் ஒருங்கிணைப்பதற்கான அழுத்தம் (செலவினங்களை வெட்டுவதற்கு) அதிகமாக இருப்பதாலும், ஏற்கத்தக்க அரசு நிதியங்களை அடுத்த தலைமுறைக்கு மாற்றுவதற்கு நாங்கள் விரும்புகிறோம்" என்று சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் கட்சிகளின் கூட்டணி ஒப்பந்தம் கூறியுள்ளது. "பல தசாப்தங்களாக அரசாங்கம் எப்பொழுதும் புதிய, பரந்த விருப்பங்களையும் செலவுகளையும் திருப்திப்படுத்தமுடியும் என்ற தொடர்ச்சியான போலித்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; அதையொட்டி கடன்சுமை அதிகளவில் பெருகுவதற்கு காரணமாக இருந்த செலவழிக்கும் இயக்கமும், பரிசோதனைகளும் முறிக்கப்பட வேண்டும்."

இது உண்மை நிலையை முற்றிலும் சிதைக்கும் தன்மையுடைய கருத்தாகும்.

அடிப்படை சமூகப் பிரச்சினைகளை நெறிப்படுத்தி மக்களுடைய இன்றியமையாத தேவைகளை அரசியல் பாதுகாக்கும் என்ற கருத்துருக்களிலிருந்து கூட்டணி உடன்பாடு அதிகாரபூர்வமாக விலகிச் செல்கிறது. ஜேர்மனியின் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையான வெகுஜன வேலையின்மையை சமாளித்துக் கடப்பதற்கு பெரும் கூட்டணி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த உடன்பாடு நீங்கலாக பெருவணிகத்தின் நலன்களுக்காக அரசு வரவுசெலவுத் திட்டத்தை மாற்றியமைக்கும் தொடர்பைத்தான் கொண்டுள்ளது.

போருக்குப் பிந்தைய காலத்தில் இருந்த சமூகச் சீர்திருத்தவாத கோட்பாட்டின் தன்மை சிறிதும் இப்பொழுது இல்லை; அது முதலாளித்துவம் அல்லது சுதந்திர-சந்தைப் பொருளாதாரம் எதிரிடயாக உள்ள சமூக நலன்களைச் சமரசத்திற்கு உட்படுத்திவிடும் திறன் உடையதாக இருந்தது என்று வாதிடப்படுகிறது. "சமூக சுதந்திர-சந்தை பொருளாதாரம்" என்ற சொற்றொடர் 191 பக்க ஒப்பந்த உடன்பாட்டில் ஒருமுறைதான் "ஒரு சமூக சுதந்திர-சந்தை பொருளாதாரத்திற்கான சரியான அரசியல்" என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் பற்றி உள்விளக்கம் கொடுக்கும் வர்ணனையொன்றில் Süddeutsche Zeitung பத்திரிகை குறிப்பிடுவதாவது: "இப்பொழுது வெளிப்படும் அரசியல் நடைமுறைவாதம், வருங்கால அரசாங்கத்திற்கும் இதுதான் கூறுபாடாக இருக்கக் கூடும் -- சம அளவில் புதிரானதும் , ஏராளமான விளைவுகளயும் ஏற்படுத்தும் தர்க்கத்தைத்தான் இது பின்பற்றுகின்றது. ....பொருளாதார, சமூக நெருக்கடியை தீர்க்க தன்னை அர்ப்பணித்துள்ள ஒவ்வொரு கொள்கையும் மிக முன்னறியக்கூடிய அண்மைக்காலத்தில் ஒரு சமச்சீரற்ற அமைப்பாகத்தான் இருக்கும். வருமானம், செல்வம் இவற்றின் சூழ்நிலைகளுக்கு இடையே உள்ள பாரிய பிளைவை தடுக்க எந்த அரசியல் தீர்வும் இல்லாததோடு, சமூகம் பெருகிய முறையில் பிரிவுற்று போகும் தன்மையையும் எவராலும் நிறுத்திவிட முடியாது. ஏழை நாடுகள், செல்வந்த நாடுகள் இவற்றிற்கு இடையே இருக்கும் சமச்சீரற்ற தன்மை ஒரு புறம் இருக்க, இவைதான் உலகம் முழுவதும் செல்வப்பகிர்விற்கு அழுத்தம் கொடுக்கும் காணங்களும்''.

இக்கருத்து எந்த வடிவமைப்பிலும் ஜனநாயகம் வேண்டும் என்பது நிராகரிக்கப்படுவதைத்தான் பிரதிபலிக்கிறது. "வருமானம், செல்வம் இவற்றிற்கிடையே எப்பொழுதும் பெருகி வரும் வியத்தகு பிளவு" தீர்க்கப்படமுடியாதது, சரிசெய்யப்பட முடியாதது என்றால், ஜனநாயகத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அடிப்படை ஏதும் கிடையாது. அத்தகைய அரசியல் சர்வாதிகார வடிவமைப்புகளை கொண்ட ஆட்சியின் மூலம்தான் செயல்படுத்தப்படமுடியும்.

பெருவணிக குழுக்களின் அழுத்தம், அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றை கையாண்டு ஜேர்மனியில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது, அரசாங்கமே முன்னின்று ஒரு அரசு மாறுதலை கொண்டுவந்தது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. கூட்டணியின் உடன்பாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் மீதான போர் என்பது இந்த முன்கூட்டிய தேர்தல் சட்ட விரோதமாக்கப்பட்டதன் நேரடி விளைவு ஆகும்.

அரசின் ஆயுதமயமாக்கலும் ஜனநாயக உரிமைகளின் தகர்ப்பும்

தன்னுடைய திட்டங்களின் கடும் தாக்கத்தை பற்றிப் பெரும் கூட்டணி நனவுபூர்வமாக உள்ளது; மக்களுடன் வரவிருக்கும் மோதல்களை எதிர்கொள்ளுவதற்கு அது தயாராகிக் கொண்டு வருகிறது. ஜனநாயக உரிமைகள் தடைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன; அரசு இயந்திரம் வலிமையடைந்துள்ளது. ஜேர்மனியின் பாதுகாப்பு மற்றும் போலீஸ் துறைகள் விரிவாக்கப்பட இருக்கின்றன. இவ்விதத்தில் புதிய அரசாங்கம் சமூக ஜனநாயகக்கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கமும் அதன் உள்துறை மந்திரி ஒட்டோ ஷில்லி (SPD) அறிமுகப்படுத்தியுள்ள ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இருந்து பலன்களை பெறலாம்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்டன; ஒப்பந்தத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி, அவை விரிவாக்கப்பட உள்ளன. "தகவல் பாதுகாப்பை பொறுத்த தேவையான நடவடிக்கைகள் உதாரணத்திற்கு, எந்த அளவிற்கு சட்ட கட்டுப்பாட்டிற்குள் கொண்டவரப்பட்டால், பயங்கரவாதம், குற்றம் இவற்றிற்கு எதிரான திறமயான போராட்டத்திற்கு உதவும் என்பதை நாங்கள் ஆராய்கிறோம்." என்று கூட்டணி ஒப்பந்தம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுக்களில் இணைக்கப்படவிருக்கும் உடற்கூறு பற்றிய நடைமுறைகள், அடையாள அட்டைகள் கொடுத்தல் ஆகியவை அதிகப்படுத்தப்படும். 2007ல் DNA (மரபணு) பகுப்பாய்வு குற்ற விசாரணையில் பயன்படுத்தப்படுவது விரிவாக்கப்படலாமா என்றும் முடிவு செய்யப்படும்.

ஜேர்மனிய இராணுவப் படைகள் உள்நாட்டில் பயன்படுத்தப்படுதல் உறுதியாகியுள்ளது. ஆனால் கூட்டணிவாதிகள் இங்கு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தக்க தீர்ப்பிற்காக காத்துள்ளனர். ஜேர்மனியின் மிக உயர்மட்ட நீதிமன்றம் படைகள் உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதற்கு ஆதரவு கொடுத்துவிட்டால், ஜேர்மனிய அரசியலமைப்பில் மாறுதல்கள் உடனடியாக கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; தற்போது அரசியலமைப்பு அத்தகைய மாறுதல்களை தடுத்துள்ளது.

ஜேர்மனியின் முக்கிய போலீஸ் அதிகாரத் துறையான கூட்டாட்சி குற்றவியில் விசாரணை அலுவலகம் (Federal Criminal Investigation Office), பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்று அழைக்கப்படுவதை செயல்படுத்த அனுமதிக்கப்படும்; இதுவரை அது ஜேர்மனிய பிராந்திய அரசுப் போலீசாரின் அதிகாரவரம்பிற்குள்தான் இருந்தது. மற்றவர்களையும் தொடர்புபடுத்தி சுட்டிக்காட்டும் குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை கொடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுக்கவேண்டும் என்ற விவாதத்திற்குரிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும் மாறுதல்களையும் பரிசீலிக்கும் நோக்கை ஜேர்மனிய சட்டத்துறை வட்டங்கள் கொண்டுள்ளன. 1999ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி அரசாங்கம் இந்த நடவடிக்கையை புதுப்பிக்க மறுத்தது; தொடக்கத்தில் இது 1970களில் அரசாங்கம் செம்படை அராஜகவாதிகளுக்கு (Red Army Anarchists) எதிரான பிரச்சாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இப்பொழுது கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியினர் அந்த அரசியலமைப்பு சந்தேகங்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு உடன்பட்டுள்ளனர்.

பிரான்சில் நடந்து கொண்டிருக்கும் இளைஞர் எழுச்சியின் பின்னணியில், கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு கூறுபாடு குறிப்பிடத்தக்க வகையில் கவனிக்கத்தக்கதாக உள்ளது. "தடுப்புக் காவலில்" உளரீதியாக நோயுற்றவர்களும், பாலியல் குற்றவாளிகளும் மட்டும் அடைத்து வகைக்கப்படமாட்டார்கள், அதாவது காலவரையற்ற தடுப்புக் காவல் என்பதில்; சமூக ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் அரசியல்வாதிகள் இந்த காட்டுமிராண்டித்தனமான கட்டுப்பாட்டை இளைஞர்கள்மீது சுமத்தவும் முடிவெடுத்துள்ளனர்: "[காலவரையற்ற தடுப்புக்காவல்] சுமத்தப்படுவதற்கான நிபந்தனை குற்றவாளியால் ஏற்படக்கூடிய சிறப்புவகை ஆபத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்." உண்மையில் இந்த சட்டம் அரசாங்கம் இளவயதுக் குற்றவாளிகளை ஆண்டுக் கணக்கில் அல்லது தசாப்தக் கணக்கில் காவலில் வைக்கும், திரும்ப மூடுவதற்கு முடியாத வெள்ள தடுப்பு கதவுகளை திறந்துவிடுவது போன்ற நடவடிக்கையையே அனுமதிக்கும்."

Top of page