:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Political issues facing US auto workers discussed at
Kokomo meeting
கொகோமோ கூட்டத்தில் அமெரிக்க வாகன தொழிலாளர்களை எதிர்நோக்கும் அரசியல்
பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டது
By a WSWS reporting team
17 November 2005
Back to screen version
இந்தியானாவிலுள்ள கொகொமோவில் நவம்பர் 15ல் நடைபெற்ற வாகன தொழிலாளர்கள்
கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் வாகன பாகங்களை தயாரிக்கும் டெல்பி பெருநிறுவனம் தீவிரமான வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய
வெட்டுக்களை கொண்டு வந்திருப்பதை எதிர்ப்பதற்காக இந்தக் கூட்டம் அழைக்கப்பட்டது. டெல்பி ஜெனரல் மோட்டார்ஸ்
மற்றும் இந்தியானா, ஓஹியோ, மிச்சிகன், இலிநோய் மற்றும் வின்கோன் சின்னை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட இருநூறு
தொழிலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Delphi's Electronics & Safety
பிரிவிற்கு கொக்கோமோ மையமாக உள்ளது அதில் மணித்தியால ரீதியாக பணியாற்றும் 2,300 ஊழியர்கள் உட்பட
5,000 தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியிருக்கிறது. டெட்ரோய்ட் நியூஸ் பத்திரிகைக்கு அண்மையில்
கசியவிடப்பட்ட ஒரு இரகசிய திட்டத்தின்படி கொகோமோவில் இயங்கும் அந்த நிறுவனத்தின் 9ஆவது தொழிற்கூடம் 2010
அளவில் மூடப்படுகின்ற தொழிற்சாலைகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
மணிக்கு 27 டாலரிலிருந்து 10 டாலராக வெட்டுவதுடன் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட
ஊழியர்கள் 33,000 பேர் ஓய்வூதியம், சுகாதார நலன்களை இரத்துச் செய்வது என்ற திட்டத்திற்கு சம்மதிக்க வேண்டும்
என்று டெல்பி கோரி வருகிறது. அமெரிக்க வாகன தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு
பின்நோக்கிகொண்டு செல்லும் திணிப்பிற்கு அமெரிக்க வாகன தொழிற்துறையின் முயற்சி முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் அண்மையில்
பணியாற்றிக் கொண்டுள்ள மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ சலுகைகளை பில்லியன் கணக்கான டாலர்கள்
அளவிற்கு வெட்டியது. மற்றும் அடுத்த மாதம் ஒரு மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதில் பல தொழிற்சாலைகள் மூடப்டுவதுடன் 25,000 வேலைகள் நீக்கப்படும் திட்டமும் அடங்கியிருக்கும். நிலமையை
தொடர்ந்து டெல்பி திவாலானது நீதிமன்றத்திற்கு செல்லும் என்று பல தொழிற்துறை ஆய்வாளர்கள் ஊகச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான போர்ட் அதேபோன்ற
மறுசீரமைப்புத்திட்டங்களை ஆண்டு இறுதிவாக்கில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் (UAW)
அதிகாரத்துவம் தனது நீண்டகாலக் கொள்கையான வாகன தயாரிப்பு தொழில்அதிபர்களுடன் ஒத்துழைக்கும் கொள்கையை
கடைபிடித்து தொழிலாளர்களுக்கான செலவினங்களை வெட்டுவதுடன் இலாபங்களை பெருக்குவதுடன், ஓய்வுபெற்ற
GM தொழிலாளர்கள்
தங்களது மருத்துவ சலுகைகளை வெட்டுவதை எதிர்த்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்தை தடுப்பதற்கு ஒத்துழைத்து
வருகிறது.
சென்ற வாரத்திற்கு முன்னர்
Kokomoவில் நடைபெற்றது போன்ற கூட்டம் மிச்சிகனிலுள்ள
Grand Rapids சில்
நடைபெற்றது, அதற்கு UAW
உள்ளூர் 2151 தொழிற்சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கிரக்சார்ட்வெல் தலைமை வகித்தார். மிக்சிகனிலுள்ள
Cooperstown
டெல்பி தொழிற்சாலையில் அந்தக் கூட்டம் நடந்தது. ஷாட்வெல்,
UAWவின் புதிய வழிகாட்டி
குழுவின் ஒரு ஆதரவாளர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சாதாரண தொழிலாளர்கள்
UAWவின் அதிகாரத்துவம்
காட்டிக் கொடுத்தமை தொடர்பாக தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை
பாதுகாப்பதற்கு ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தை வகுப்பது தொடர்பாக விவாதிப்பதை ஏற்றுக்கொண்டனர்.
தொழிற்சாலைக்குள் சட்டப்படி வேலை என்ற தாமதப்படுத்தும் பல்வேறு
தந்திரோபாயங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும் என்று
கட்டுப்படுத்த ஷாட்வெல் முயன்றார். அவற்றிற்கு அண்மையில்
UAW சர்வதேசத் தலைவர் ரான் கெட்டில்பிங்கர் ஒப்புதல்
அளித்துள்ளார். ("US auto union launches sham
war' against Delphi"- என்ற கட்டுரையை பார்க்க).
UAW அதிகாரத்துவத்திற்கு பரவலான
எதிர்ப்பு நிலவுவதை அவர் ஒப்புக் கொண்டாலும் UAW-விற்கு
ஒரு மாற்றீட்டை கட்டியெழுப்புவது பற்றி விவாதிக்கவோ அல்லது தொழிற்சங்கத்தைவிட்டு சுதந்திரமான ஒரு அரசியல்
போராட்டத்தை நடத்துவது பற்றி கலந்துரையாடவோ கூட்டம் நடத்தப்படவில்லை என்று கூறினார். ''டெல்பியில்
சலுகைகளை எதிர்ப்பது பற்றி பேசுவதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம் இதர அரசியல் காரணங்களை பேசுவதற்காக
அல்ல." என்று குறிப்பிட்டார். தொழிற்துறை நடவடிக்கையில் நாம் மையப்படுத்தப்படவேண்டும். ஒரு அரசியல்
கலந்துரையாடலில் நாம் கவனத்தை திசை திருப்பிவிடக்கூடாது. அது தொடர்பாக மணிக்கணக்கில் நாம் பேசிக்
கொண்டேயிருக்கலாம், ஆனால் எதற்கும் தீர்வு ஏற்படாது.'' என்று அவர் கூறினார்.
அரசியல் கலந்துரையாடலை மட்டுப்படுத்தும் முயற்சியானது,
UAW பற்றிய மாயைகளை
வளர்க்கின்ற ஒரு முன்னோக்குடனும் ஜனநாயகக் கட்சியிலுருந்து முறித்துக் கொள்வதை எதிர்ப்பதுடனும் தொடர்புபட்டது
என்பது விரைவில் தெளிவாகியது.
ஷாட்வெல்லை தொடர்ந்து
Cleveland பகுதி பிராந்திய
UAW முன்னாள்
நிர்வாகியும் தொழிற்சங்கத்தின் சர்வதேச நிர்வாகக் குழுவில் நீண்ட கால உறுப்பினருமான வாரண் டேவிஸ்,
UAW பெரும்பாலும்
நிர்வாகத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டது மற்றும் அமெரிக்க தொழிற்சங்கங்கள் "படுமோசமான இணைப்பு''
கண்ணோட்டத்தை உலகம் முழுவதிலும் பரப்பிக் கொண்டிருக்கின்றன அதன் விளைவாக சர்வதேசரீதியாக தொழிலாளர்களின்
ஊதியங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன என்று ஒப்புக்கொண்டார்.
அப்படியிருந்தும் அவர் கூறிய ஆலோசனை என்னவென்றால் தொழிலாளர்கள் கெட்டில்பிங்கரின்
அழைப்பை ஏற்று பணிகளை தாமதப்படுத்தும் சட்டப்படி வேலையையும், ஒரு வேலைநிறுத்தத்திற்கும் தயாராக வேண்டும்
அப்போதுதான் தொழிற்சங்கம் டெல்பி நிறுவனத்துடன் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒரு
''உந்துதல்'' கிடைக்கும் என்று கூறினார். சாதாரண தொழிலாளர்கள் தொழிற்கட்சி தலைமைக்கு அழுத்தங்கள்
கொடுக்கின்ற வகையில் டேவிஸ் தனது கருத்துருக்களை முன்னெடுத்து வைத்தார் என்றாலும்
UAW அதிகாரத்துவம்
நிர்வாகத்துடன் 'இணைத்திருப்பதால்' தொழிலாளர்களை ''காட்டிக் கொடுத்துவிடும்'' என்பதை ஒப்புக் கொண்டார்.
இந்த தவறான முன்னோக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜிம் லோரன்ஸ் ஆட்சேபித்தார்.
அவர் 2004 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அவர்
ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் ஓஹியோ டேடனிலுள்ள GM
பிரேக் தொழிற்சாலையில் UAW
உறுப்பினர். (லோரன்ஸ் பணியாற்றிய தொழிற்சாலை டெல்பியின் ஓர் அங்கமாக ஆயிற்று அதற்கு பின்னர்
GM 1999ல் அதை
எடுத்துக் கொண்டது.)
''இந்தக் கூட்டத்தில் அரசியல் வேண்டாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ஆனால் அதுவே
அரசியல்தான். தொழிற்துறை நடவடிக்கை அவசியம்தான் என்றாலும் தொழிலாளர்கள் ஒரு புதிய உலக யதார்த்தத்தை
எதிர்கொள்கின்றனர்'' என்று லோரன்ஸ் குறிப்பிட்டார். மலிவு கூலிக்காக பூகோளத்தில் புதிய இடங்களை தேடிக்
கொண்டிருக்கின்ற சர்வதேச பெருநிறுவனங்களை அவர் சுட்டிக் காட்டினார். ''1996ல் டேடனில் நாங்கள் வேலை
நிறுத்தம் செய்தோம் மற்றும் தற்போது அந்த தொழிற்சாலை இருந்த இடத்தில் ஒரு கான்கிரீட் துண்டுதான் நிற்கிறது
வேறொன்றுமில்லை.''
''இது ஒரு தொழிற்சங்க போராட்டம் அல்ல. ஆனால் ஒரு அரசியல் போராட்டமாகும்.
தொழிலாள வர்க்கத்தில் 90 சதவீதமானோர் தொழிற்சங்கங்களில் இல்லை. இலாப நோக்கு முறைக்கு எதிராக ஒட்டு
மொத்த தொழிலாள வர்க்கத்தையும் நாம் ஐக்கியப்படுத்தப்படவேண்டும்''.
லோரன்ஸ் தமது உரையை நிறைவு செய்யும் போது
UAW இலிருந்து
உடைத்துக்கொண்டு வெளியில் வர வேண்டுமென்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான சர்வதேச அரசியல்
இயக்கத்தை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ''டெல்பிக்கும்
GM-ற்கும் இரண்டு அரசியல் கட்சிகள் அவர்கள் பக்கம் இருக்கின்றன
மற்றும் நமக்கு ஒரு அரசியல் கட்சி கூட இல்லை'' என்று லோரன்ஸ் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லோரன்ஸ் உரைக்கு கைதட்டி தங்களது வரவேற்பை
தெரிவித்தனர் மற்றும் அந்த விவாதத்தின் தன்மை மாறத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஷாட்வெல் முன்மொழிவுகளில்
காணப்பட்ட குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர் மற்றும் டெல்பி நிறுவனத்தையும் திவால்
நீதிமன்றத்தையும் புஷ் நிர்வாகத்தையும் எதிர்த்து போரிடுவதற்கு இதர வழிகளை தேட ஆரம்பித்தனர்.
WSWS நிருபர்களில் ஒருவரான ஜெர்ரி
ஐசாக் மேடையில் ஏறி உரையாற்றினார். ''21ம் நூற்றாண்டு நாடுகடந்த நிறுவனங்களை எதிர்த்து, 19ம் நூற்றாண்டு
தொழிற்கூட தந்திரோபாயங்களை கொண்டு தொழிலாளர்கள் போராட முடியாது'' என்று அவர் கூறினார்.
தொழிற்துறை நடவடிக்கையில் மிக துணிச்சலாக செயல்படக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தொழிலாளர்கள் ஆனால்
அரசியலை புரிந்து கொள்வதும், அரசியல் வழிகளை கண்டுகொள்வதும் மிக முக்கியமான தேவைகளாகும் என்று அவர்
வாதிட்டார். UAW
மற்றும் AFC-CIO
இனால் வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட
PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஆரம்பித்து
கட்டர்பில்லர் வேலை நிறுத்தங்கள் வரை மற்றும் அண்மையில் நோர்த் வெஸ்ட் ஏர்-லைன்ஸ் இயந்திர தொழில் வேலை
நிறுத்தங்களை காட்டிக்கொடுத்த நீண்ட நிலைச்சான்றை பற்றி கவனத்தில் கொள்ளுமாறு தொழிலாளர்களை அவர்
கேட்டுக்கொண்டார். தொழிற்சங்கங்கள் இனி தொழிலாளர்களுக்கான அமைப்பு அல்ல ஆனால் அவை தொழிற்சங்க
அதிகாரத்துவ அமைப்புக்கள், அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானவை''.
தற்போதுள்ள ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு முறைக்கு சவால்
விடுகின்ற ஒரு அரசியல் போராட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று ஐசாக் வலியுறுத்திக் கூறினார். இலாப
முறை மக்கள் தொகையில் தலைமை இடத்திலுள்ள 1 சதவீத ''பணக்கார முதலீட்டாளர்கள் டெல்பியன் ஸ்டீவ்மில்லர்
போன்ற பெருநிறுவன உயர் நிர்வாகிகளும்தான் பயனடைகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்தகையதொரு போராட்டம் சோசலிசத்திற்காக போராடும் அடிப்படையை
கொண்டதாக இருக் வேண்டும் என்று அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
UAW அதிகாரத்துவம்
நீண்டகாலமாக கம்யூனிச எதிர்ப்பை பயன்படுத்தி அதன் எதிரிகளை ஒதுக்கித் தள்ளியது அவற்றில் 1930 களில்
UAW வை உருவாக்கிய
இடதுசாரி முன்னோடிகளும் சோசலிஸ்ட்டுக்களும் அடங்குவர் என்று அவர் விளக்கினார். முதலாளித்துவ வர்க்கத்தின்
கையிலிருந்து ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் வாகன தொழிற்சாலையையும் தொழிலாள வர்க்கம் எடுத்துக்கொண்டு
தமது ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
"நாம் இந்த பழைய அதிகாரத்துவமாக்கப்பட்ட தொழிற்சங்கங்களினதும், பெருவர்த்தக
நிறுவனங்களின் நலன்களுக்காக பணியாற்றி வரும் ஜனநாயகக் கட்சியினதும் மூடுதிரைகளில் இருந்து உடைத்துக்கொண்டு
வெளியே வர வேண்டும்'' என்று அவர் சொன்னார். டெல்பி தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை குறைந்த ஊதிய
பணிகளை எதிர் கொண்டுள்ள மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்காக போர்களில் ஈடுபடுவதற்கு அனுப்பப்படுவதை
எதிர்நோக்கும் இளைஞர்களோடு இணைந்து தங்களது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தக் கருத்துக்களை கைதட்டி வரவேற்றனர் மற்றும் அதைத் தொடர்ந்து மிக ஆழமான
கேள்விகள் எழுப்பப்பட்டதோடு கலந்துரையாடலும் நடைபெற்றது. டெல்பி கொக்கோமொ வளாகத்தில் ஏழு ஆண்டுகள்
பணியாற்றியுள்ள ஒரு இளம் தொழிலாளியான ஸ்கொட் மேடையில் ஏறி ஷாட்வெல்லை நோக்கி கேள்விகளை விடுத்தார்.
''நீதிமன்றம் ஊதிய வெட்டை திணிக்கின்ற போது 60 நாட்களில் நாங்கள் அனைத்தையும் இழக்கப் போகிறோம்.
அப்போது டெல்பி என்கிற டாங்கியை நாம் இந்த சட்டப்படி வேலை என்ற கடலைக்கொட்டையைக் கொண்டு எப்படி
போரிடப் போகிறோம்?'' என்று கேட்டார்.
அந்தக் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் "இடது" போக்குகளை ஆதரிக்கின்ற
Labor Notes மற்றும்
சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO)
போன்றவற்றின் பல ஆதரவாளர்கள் தொழிற்சங்க சீர்திருத்தவாதம் மற்றும்
UAW அதிகாரத்துவம்
போன்ற பிரமைகளை வளர்ப்பதற்கு தங்களால் முடிந்தவரை பாடுபட்டனர். அதில் ஒரு கருத்து அம்பலத்திற்கு வந்தது.
ISOவின்
உறுப்பினர் ஒருவர் ''நான் சோசலிசத்திற்கும் புரட்சிக்கும் எப்போதுமே ஆதரவு தருகிறேன். ஆனால்
UAW அதற்கு தயாராக
இல்லை.'' என்று குறிப்பிட்டார். இது எதனை எடுத்துக்காட்டுகின்றது என்றால், பல தசாப்தங்களாக அந்த இலாப
அமைப்பை பாதுகாக்க தன்னை அர்ப்பணித்தும் வர்க்க ஒத்துழைப்பு கொள்கையை பின்தொடர்ந்தும் வந்த ஒரு அமைப்பை
எவ்வாறு புரட்சிகர போராட்ட கருவியாக மாற்ற முடியும்!
தொழிலாளர்களிடையே கணிசமான அளவிற்கு குழப்பம் நிலவி வந்தாலும் திவாலான நீதிமன்ற
நீதிபதிக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் முறையீடுகள் செய்தால் அதனால் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்று
ஆலோசனைகள் கூறப்பட்டாலும் WSWS
உம் சோசலிச சமத்துவ கட்சியும் தலையிட்டதால் ஒரு கடுமையான விவாதம் நடத்துவதற்கு
தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு மற்றும் வாகன தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சனைகளை எழுப்ப
தொடங்கினர்.
கூட்டம் முடிந்த பின்னர் தொழிலாளர்கள் சோசலிசத்தையும் சோசலிச சமத்துவ கட்சியின்
வரலாற்றையும் விவாதிப்பதில் மற்றும் UAW
அதிகாரத்துவத்திற்கு எதிரான அதன் போராட்டத்தை விவாதிப்பதிலும் ஆர்வத்துடன் கவனம் செலுத்தினர். பலர் சோசலிச
சமத்துவ கட்சியின் வெளியீடுகளை வாங்கினார்கள் மற்றும் WSWS
நிருபர்களுடன் உரையாடினார்கள்.
WSWS வாசகரான கிறிஸ்,
கொகோமோவில் கிறைஸ்லர் தொழிற்சாலையில் 12 ஆண்டுகள் பணியாற்றியவர் அவர் டெல்பியில் ஊதிய வெட்டுக்கள் மற்றும்
சலுகை வெட்டுக்கள் கொண்டு வரப்பட்டிருப்பது குறித்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். ''இது இலாபம், பேராசை
மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை---- இது வர்க்க போராட்டம்,'' முதலாளித்துவ வாதிகள் தொழிலாளர்கள் தியாகத்தில்
தங்களது பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.
''சட்டப்படி பணியாற்றுவோம் என்ற மூலோபாயத்தின் மீது எனக்கு சந்தேகங்கள் உண்டு.
ஏனென்றால் பெரு நிறுவனங்கள் அவற்றை முறியடிப்பதற்கும் எப்போதுமே வழிகளை வைத்திருக்கின்றன. இதை நான்
முன்னரே சொல்லியிருக்கிறேன் மற்றும் மீண்டும் அதை நான் சொல்வேன்----- இது தொழிற்சங்கத்திற்கு அப்பாற்பட்ட
பிரச்சனை, இது ஒரு சமூக பிரச்சனை, இது ஒரு தொழிலாள வர்க்க பிரச்சனை. மில்லியன் கணக்கான தொழிற்சங்கம்
சாராத தொழிலாளர்கள் Wal-Mart
இலும் பிற இடங்களிலும் பணியாற்றி வருகின்றனர். முன்பு எப்போதுமே
இல்லாததைவிட இப்போது தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கம் சாராத தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து
பணியாற்ற வேண்டும். குறைந்த பட்ச ஊதிய தொழிலாளர் என்ற முறையில்:
இனி உங்களது குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகாது. ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் இணைந்து நிற்க
வேண்டும். அப்படி இணைந்து நிற்பதன் மூலம்தான் இந்த முதலாளித்துவ பேராசையை முறியடிக்க முடியும்''.
கூட்டத்தில் ஷாட்வெல்லுக்கு அறைகூவல் விடுத்த இளம் தொழிலாளி ஸ்கொட் தனக்கு
WSWS நன்கு
தெரிந்ததுதான் என்று கூறினார். யாராவது ஒருவர் தொழிற்சங்கத்திற்கு எதிராக நிற்க வேண்டும்'' என்று அவர்
குறிப்பிட்டார். ''அதை சீர்திருத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.'' கூட்டத்தில் அரசியல் விவாதத்தை தவிர்ப்பதற்கு
மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றி கேட்கப்பட்ட போது ஸ்கொட்
WSWS இடம்
''எவ்வளவிற்கு அரசியல் பற்றியதோ அந்தளவிற்கு UAW
பற்றியும் விவாதிக்க வேண்டும்'' என்று கூறினார்.
30 ஆண்டுகள் GM
இல் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற டிக் என்னும் தொழிலாளி
WSWS இடம் '' நீங்கள்
எந்த பேச்சாளரையும் விட அதிக சிந்தனை தரும் கருத்துக்களை சொன்னீர்கள் என்று கூறினார்.
UAW அதிகாரத்துவம்
பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு அவர் ''அவர்கள் ஒட்டுண்ணிகள்'' என குறிப்பிட்டார். |