World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Growing international tension over the Arctic

ஆர்ட்டிக் மீதாக வளரும் சர்வதேச பதட்டம்

By Niall Green
23 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

அண்மை மாதங்களில் ஆர்டிக் பிராந்தியம் தொடர்பாக நோர்வேக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பரஸ்பரம் அவநம்பிக்கையான உறவுகள், எல்லை மற்றும் சுற்றுப்புறச்சூழல் தகராறுகளை தொடர்ச்சியாக உருவாக்கியுள்ளது. இது பிரதானமாக மீன்பிடி உரிமைகள் தொடர்பான பூசல்கொண்ட உரிமைகோரல்களை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தாலும், இன்னும் மாசுபடாத ஆர்டிக் பெருங்கடலில் எண்ணெய் எரிவாயு துரப்பணப்பணிகள், போக்குவரத்து பணிகள் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இரு நாடுகளும் போட்டி போட்டுகின்றன.

ஆர்டிக் பிராந்தியம் 40 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயையும், உலகின் இயற்கை எரிவாயு இருப்புகளில் கால்பகுதியையும் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. மிக கடுமையான சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால் வடதுருவத்தில் எண்ணெய் துரப்பணப்பணிகளை மேற்கொள்வது பொருளாதார அடிப்படையில் கட்டுபடியாகாது என்று அண்மைக்காலம் வரை கருதப்பட்டது. இருப்பினும், இதர எண்ணெய், எரிவாயு கிணறுகள் வற்றிவருவதால், ஆர்டிக் பிராந்தியத்து இருப்புக்கள் தற்போது அதிக அக்கறையுடன் ஆராயப்படுட்டு வருகின்றன.

உலகின் பெருமளவு நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் நோர்வேயும் இடம் பெற்றிருக்கின்றன, மேலும் இரண்டுமே தங்களது தொழில்களை இதுவரை பெரும்பாலும் பயன்படுத்தப்படாத வடக்கு சேர்ம இருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கித்துவத்தை ஏற்றுக் கொள்கின்றன. புதிய துரப்பண நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அந்த பிராந்தியத்திலிருந்து உற்பத்தி அடுத்த தசாப்த காலத்தில் கணிசமான அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பெரியஅளவிலான உற்பத்திக்கு மிக ஏற்ற பகுதியான ஆர்டிக் கடற்கரைகளுக்கு இடையில் அமைந்திருக்கிறக்கின்ற பேரன்ஸ் கடல்பகுதி மீதான இறையாண்மை தொடர்பாக, இரண்டு நாடுகளும் போட்டி உரிமைகோரல்களை எழுப்பி வருகின்றன.

இந்த சர்ச்சைக்குரிய கோரல்கள் அக்ேடோபரில் ஒரு ரஷ்ய மீன் பிடி கப்பலில், இரண்டு நோர்வே நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் பேரன்ஸ் கடற்பகுதியில் சால்பார்டு தீவுகளுக்கு அருகே ஏறியபொழுது ஒரு சர்வதேச சம்பவத்தை உருவாக்கியது. அப்பொழுது அப்பகுதியிலிருந்த மற்றொரு ரஷ்ய கப்பலின் சுழல்விசிறியை ஒரு நோர்வே நாட்டு கடலோர காவற்படை ஹெலிகாப்டரிலிருந்து எறியப்பட்ட வலை செயலிழக்கச்செய்தது. அந்த ரஷ்ய கப்பல் இரண்டு அதிகாரிகளுடன் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், முர்மான்ஸ்க் துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நோர்வே கடலோர காவல்படை கப்பல்கள் இக்கப்பலை ரஷ்ய கடல் எல்லைக்குள் விரட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த சம்பவங்களை தொடர்ந்து பல நாட்கள் மாஸ்கோவிற்கும் ஒஸ்லோவிற்கும் இடையில் ராஜீயத்துறை பரிவர்த்தனைகளும் போட்டி உரிமைகோரல்களும் நடந்தன. ஒரு வாரத்திற்குப் பின்னர், நோர்வே நாட்டு கடலோரக் காவல்படை, வால்பார்ட் தீவுகளுக்கு வெளியில் இரண்டு ரஷ்ய மீன் பிடி படகுகளை மறித்து, ரஷ்யர்கள் "சட்ட விரோதமாக மீனை மாற்றிக் கொண்டிருப்பதாக" குற்றம்சாட்டியது.

வால்பார்ட் தீவுகளை சுற்றி கடலில் நடமாடுகின்ற வெளிநாட்டு மீன்பிடி படகுகளை நோர்வேயின் சோதனை இடும் உரிமை தொடர்பாக ரஷ்யா நீண்டகாலமாக வாக்குவாதம் செய்துவருகிறது. இதனால் நாடுகளுக்கிடையில் மோதல்கள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. வால்பார்ட் தீவுகள் மீது நோர்வே உரிமை கொண்டாடுவதை 1920 ஸ்பிட்ஸ்பெர்கன் ஒப்பந்தம் சர்வதேச அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒஸ்லோவின் கோரிக்கைகளில் அடங்கியிருக்கின்ற பிரச்சனை, முதலில் 1925-ல் எழுப்பப்பட்டது. அந்தத் தீவுகளை சுற்றி 200 கடல் மைல் எல்லை பரப்பு தனக்கு சொந்தமானது என்று நோர்வே கோரியது, அந்தக் கூற்று சோவியத் யூனியன் மற்றும் தற்போதைய ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டது. மீன்பிடி உரிமைகள் என்று வெளிவேடமாய் கூறப்பட்டிருந்தாலும், இந்த எல்லைத் தகராறு 1970-களில் வடகடல் எண்ணெய் தொழில் நோர்வே நாட்டு கடல்பகுதிகளில் வளருகின்ற வரை புறக்கணிக்கப்பட்டன.

சர்வதேச விவகாரங்களுக்கான நோர்வே நாட்டு ஆய்வுக் கழக இயக்குனரான ஸ்வர் லோர்ட்கார்ட், "பேரன்ஸ் பிராந்தியம் ஒரு பூகோள அரசியல் அச்சாணியாக மாறவிருக்கிறது" என்று கூறினார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஒரு கணிசமான வீதம் அந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவிருக்கிறது மற்றும் அந்தப்பகுதி வழியாக எதிர்காலத்தில் மிக விரைவில் அனுப்பப்படவிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

ஆர்டிக் பகுதியில் ரஷ்யாவும் நோர்வேயும் தங்களது எண்ணெய் தேடும் துரப்பணப்பணிகளை விரிவுபடுத்த விரும்புவது மட்டுமல்லாமல் ரஷ்யா, உலக சந்தைக்கு தனது பரவலான எண்ணெய் கையிருப்புக்களை கொண்டு சேர்ப்பதற்காகவும், பேரன்ஸ் கடல் துறைமுகமான முர்மான்சை உலகின் மிக முக்கியமான எரிபொருள் விநியோக மையங்களில் ஒன்றாக உயர்த்துவதற்காகவும் முர்மான்சிற்கு ஒரு பெரிய எரிபொருள் குழாய் இணைப்பை அமைப்பதற்கான திட்டங்களை தீட்டியிருக்கிறது. தன்னோடு ஒப்பிடும்போது சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாஸ்கோவின் சாதனை படுமோசமானது என்று மேலோட்டமான காரணத்தைக் கூறி, ரஷ்யா எண்ணெய் துரப்பணப்பணிகளை விரிவுபடுத்தி எரிபொருளை கொண்டு செல்வதற்கு அந்த பிராந்தியத்தில் திட்டமிட்டுள்ளதை நோர்வே ஆட்சேபித்துள்ளது.

"வடக்கு பகுதி தொடர்பாக நோர்வேக்கு தெளிவான கொள்கை எதுவுமில்லை" என்று புகார் கூறிய லோர்ட்கார்ட், அந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு மறுத்து விட்டதால் ஆர்டிக் பிராந்தியத்தில் அதன் எரிபொருள் நலன்களை வலியுறுத்தி முன்னெடுத்து செல்வதற்கு போதுமான அதிகாரம் இல்லாமல் விடப்பட்டுவிட்டது என்பதை சுட்டிக்காட்டினார். "ஐரோப்பிய ஒன்றியம், நோர்வேயின் உரிமை கோரல்களுக்கு மேலாக ரஷ்யாவின் கோரல்களை ஆதரிக்கலாம், ஏனெனில் EU விற்கு ஓஸ்லோவைவிட மாஸ்கோ மிக முக்கியத்துவம் நிறைந்த தாகும் என்று அவர் கூறினார்.

ரஷ்யாவின் எண்ணெய் எரிவாயுவை ஜேர்மனி சார்ந்திருப்பதும், தற்போது மாஸ்கோவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநாட்டி வருவதும் நோர்வேக்கு மேலும் நெருக்குதலை கொடுத்து தனது ஆர்டிக் பிராந்திய நலன்களை காப்பதற்கு வழிகாணும் நிலையை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் நோர்வேயின் அந்தஸ்து, அமெரிக்காவோடு அந்த நாடு கொண்டிருக்கின்ற உறவுகளால் கூடுதல் வலுவை பெறுகிறது.

1905 ஸ்வீடனிடமிருந்து அது சுதந்திரத்தை வென்றெடுத்தது முதல், நோர்வேயின் முதலாளித்துவ வர்க்கம் வாஷிங்டனை தனது பிரதான வல்லரசு நண்பனாக கருதுகிறது. தியோடர் ரூஸ் வெல்டின் நிர்வாகம் தான் உலகிலேயே நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதலாவது அரசாங்கமாகும். மேலும் அமெரிக்காவில் வாழ்கின்ற ஏராளமான நோர்வே நாட்டு புலம் பெயர்ந்த மக்களால் அது ஒரு முக்கிய நட்பு நாடாகவே நீடித்து இருக்கிறது. நோர்வே, நேட்டோ அமைப்பின் ஒரு நிறுவன உறுப்பினர் மற்றும் குளிர்யுத்த காலத்தில் வாஷிங்டன் சோவியத் ஒன்றியத்தின் ஆர்டிக் கடற்படைக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பயனுள்ள தளமாக நோர்வே விளங்கியது.

இந்த உறவு இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது, நோர்வேயைச் சேர்ந்த துருப்புக்கள் ஆப்கனிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். ஈராக் ஆக்கிரமிப்பிலும் ஒரு சிறிய இராணுவப்பிரிவு பங்கெடுத்துக் கொண்டது.

ஆர்டிக் எண்ணெய் கிணறுகளில் அமெரிக்க நிறுவன தலைமை நிர்வாகிகளை ஈடுபடுத்துவதற்காகவும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகவும் நோர்வேயின் மன்னரும், மகாராணியும் அரசாங்க மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரமுகர்களோடு ஒரு குழுவாக அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹீஸ்டன் உட்பட பல இடங்களை பார்வையிட்டனர். நோர்வேயின் அழைப்புக்களுக்கு அமெரிக்க நிறுவனங்களின் பதிலில் உற்சாகம் குறைந்து காணப்பட்டமை பேரன்ஸ் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுப்பதற்கான செலவினங்கள்தான். இருந்தபோதிலும் ஆர்டிக் இருப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்ட காலத்திற்கு புறக்கணித்து விடமுடியா அளவிற்கு மிகப் பெரியவை.

புஷ் நிர்வாகம் நோர்வேக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பேரத்தை உருவாக்க ஒரு தரகராக, செயல்படும் என்று ஓஸ்லோ எதிர்பார்ப்பதாக லோர்ட்கார்ட் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய போட்டி நிறுவனங்களுக்கு எதிராக நோர்வேயை ஒரு இளைய பங்குதாரராக கொண்டு வாஷிங்டன் தனது எரிபொருள் பெருநிறுவனங்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இது ஒரு இயங்குமுறையாக பயன்படுத்தப்பட முடியும்.

இது ஆர்டிக் மண்டலத்தை மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையில தற்போது நடந்து கொண்டுள்ள மோதலுக்கு மற்றொரு களமாக ஆக்கிவிடும். ஜோர்ஜியா மற்றும் உக்ரேனில் அமெரிக்க ஆதரவு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை முன்னின்று செயல்படுத்தியது உட்பட, ரஷ்யாவின் செல்வாக்கு வட்டாரத்தை மட்டுப்படுத்த அல்லது திரும்பச்சுருட்டிக கொண்டுசெல்லவும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளில் இயற்கை வளங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியம் திரும்பத்திரும்ப செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், ஈராக்கில் புஷ் நிர்வாகம் சந்தித்துக் கொண்டிருக்கிற வளர்ந்து வரும் படுதோல்வியால் நோர்வேயில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற் கட்சி தலைமையிலான அரசாங்கம் தன்னை வாஷிங்டனிலிருந்து, விலகியிருக்கச் செய்யும் நோக்கில் ஒரு சிறிய இராணுவப்பிரிவை ஈராக்கிலிருந்து விலக்கிக் கொண்டது. நோர்வே வரலாற்று அடிப்படையில் அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையை பார்க்கும்போது இந்த படைவிலக்கத்திற்கு ஈடுகட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. நோர்வே ஆப்கனிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உதவுவதற்காக கூடுதல் படைகளை அனுப்ப முடியும் அல்லது இலங்கையில் "சமாதான" உடன்படிக்கையில் தரகுவேலை செய்வது போன்ற ராஜியத்துறை தொடர்புகளை வாஷிங்டனுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்.

நோர்வேயில் தனது சொந்த இராணுவ வலிமையை ஆர்டிக் மண்டலத்தில் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஒஸ்லோ கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பங்காளியாக இடம் பெற்றுள்ள சென்டர் கட்சியை சேர்ந்த ஆஸ்லால் மேரி ஹாகா, "நோர்வேயின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக" பேரன்ஸ் கடற்பகுதியை இராணுவ மயமாக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ இல்லாமல் சுதந்திரமாக எந்த முயற்சியையும் நோர்வே பயனுள்ள வகையில்செயல்படுத்த முடியாது. ரஷ்யாவுடன் ஜேர்மன் உறவில் வெறுப்பு ஏற்பட்டால்தான் அது சாத்தியம். எனவே பலவீனமான நோர்வே ஏகாதிபத்தியம் ஒரு பெரிய வல்லரசுடன் தன்னை இணைத்துக் கொண்டே ஆக வேண்டும்.

Top of page