:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
University students in US face higher
tuition and loan debt
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களை எதிர்நோக்கும் கட்டண உயர்வும் கடன்சுமையும்
By Naomi Spencer
3 August 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
Additional reporting by Adam Haig, Kevin Kearney and
David Rodriguez
அமெரிக்க அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சங்கம் தந்துள்ள
தகவலின்படி இந்த ஆண்டு அமெரிக்காவில் பொது பல்கலைக்கழகங்கள் படிப்புக் கட்டணத்தை சராசரி 8 சதவீதம்
உயர்த்தும். சென்ற கல்வி ஆண்டு கட்டணம் 10.5 சதவீதம் உயர்த்தப்பட்டது, மற்றும் 2003ல் 13 சதவீதம் உயர்த்தப்பட்டது.
அதே நேரத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தேவை அடிப்படையிலான
உதவித் திட்டங்கள் வெட்டப்படுகின்ற நேரத்தில் இந்த கட்டண உயர்வும் வருகிறது.
பள்ளியை பொறுத்து கட்டண உயர்வு வேறுபடுகிறது. சில பள்ளிகளில் மாணவர்கள் 20
அல்லது அதற்கு மேற்பட்ட கட்டண உயர்வை எதிர்நோக்கியுள்ளனர். சில மாநிலங்களில் இந்த போக்கு 1990களின்
கடைசியிலிருந்து பெருகிவருகிறது. அந்த நெருக்கடியை பெருக்குகின்ற வகையில் அண்மைகாலத்தில் பொருளாதார மந்தநிலையும்
அரசு நிதி பற்றாக்குறைகளும் அமைந்துள்ளன. மாநிலங்கள் தங்ளது வரவு செலவு திட்டங்களை சமப்படுத்த முயலுகின்றன----இந்த
முயற்சி அடிக்கடி வரி வெட்டுக்களால் மோசமடைகின்றன----- அரசு நிதி வழங்கும் இருபெரும் திட்டங்களான
கல்வி மற்றும் மருத்துவ உதவித்திட்டங்களுக்கான செலவினங்கள் வெட்டப்படுகின்றன.
2000 முதல், படிப்பு கட்டண உதவித்திட்டங்கள் வெட்டும் மற்றும் பொது பல்கலைக்கழக
கட்டணங்கள் 35 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதும் இணைந்து பல குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை
சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறமுடியாத அளவிற்கு செலவினம் அதிகரித்துவிட்டது. கட்டண உயர்வுடன், சில
பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் பொது பணவீக்கத்தைவிட அதிகமாக கட்டணத்தை இரட்டை தான வீதத்தில் உயர்த்தி
விடுகின்றன. உயர்கல்வி செலவீன குறியீட்டின்படி அது 4.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த குறியீடு பல்கலைக்கழகங்கள்
செயல்படுவதற்கான குறிப்பிட்ட சேவைகள் மற்றும் பொருட்களின் செலவினங்களை மதிப்பிடுவதாகும்.
தொழிலாள வர்க்க மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க விரும்பும்போது பள்ளிச் செலவினங்களை
ஈடுகட்டுவதற்கு பெருமளவில் கடன்களை பெற்று ஈடுகட்டுவதைத்தவிர வேறுவழியில்லை மற்றும் உயர்வட்டி விகிதமுள்ள
கிரெடிட் கார்டுகளை நம்பியிருக்கின்றனர். கல்லூரி வாரியம் தந்துள்ள தகவலின்படி 25 சதவீத மாணவர்கள் உண்மையிலேயே
தங்களது கல்விக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு
வகுப்புக்களில் குறிப்பாக படிக்கின்ற மாணவர்கள் தனியார் கடன்கொடுப்பவர்களை நம்பியிருக்கின்றனர். கல்விக்கான
அமெரிக்க சபையில் (ACE)
வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, 2004ல் பட்டம் பெற்ற எல்லா மாணவர்களும் ஏறத்தாழ பாதிப்பேர் தங்களது
பள்ளிச் செலவினங்களை ஈடுகட்டுவதற்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியிருக்கின்றனர், இதனால் அவர்களுக்கு
சராசரியாக நிலுவை 3900 டாலர்கள் உள்ளது.
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களை சார்ந்த பட்டப்படிப்பு
மாணவர்களில் மூன்றிற்கு இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை மத்திய அரசின் கல்விக்கடன்
மூலம் முடித்திருக்கின்றனர். அமெரிக்க கல்வித்துறை புள்ளிவிவரங்கள் கோடிட்டு காட்டியிருப்பது என்னவென்றால் ஆண்டு
வருமானம் 20,000 டாலருக்கும் குறைந்த அனைத்து சுயாதீனமான மாணவர்களில் ஏறத்தாழ நான்கில் மூன்றுபகுதியினர்,
கல்லூரி படிப்பை முடித்து கடன்காரர்களாக வெளியேற்றியிருக்கின்றனர். அவர்களின் சராசரிக்கடன் 19,130
டாலர்கள். இது வேறு எந்த வருமானம் பெறும் குழுவையும் விட அதிகமான கடன்சுமையாகும்.
இதற்கிடையில்,
Leveraging Education Assistance
Partnerships (LEAP) திட்டத்திற்காக மத்திய அரசு
வழங்கிவரும் உதவியின் மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டது, பணத்தேவைகள் அதிகம் தேவையுள்ள
மாணவர்களை குறிவைத்து திட்டவட்டமாக வகுக்கப்பட்ட மானியங்கள் குறைந்தவிட்டன. மாநில அளவில், தேவைகள்
அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம் கடந்த தசாப்தத்தில் 15 சதவீதம் குறைந்துவிட்டது. அதேபோன்று,
அமைப்புக்கள் அடிப்படையில் வழங்கப்படும் மானியங்கள் நிதித் தேவைகளைவிட தகுதிகளை அதிகமாக மதிப்பிடுவதால்
உயர் வருமானக்கார மாணவர்களுக்கு அது கிடைத்துவிடுகிறது. இது மிகக்கடுமையாக தனியார் அமைப்புக்களில்
உணரப்படுகிறது, பொருளாதார தேவைகளை தள்ளிவிட்டு பொதுவான மானியங்கள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்கா முழுவதிலும் பல பல்கலைக்கழக மாணவர்களிடம் உலக சோசலிச
வலைத் தளம் பேசியது, அவர்கள் தங்களது கல்விக்கு நிதியளிப்பதற்கு அவர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சனைகளை வர்ணித்தனர்.
கிழக்கு கென்டகி பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை ஆரம்பக்கல்வியை முக்கிய
பாடமாக எடுத்திருக்கும் ஜெனிபர் ஒவ்வொரு பருவத்திலும் அதிகபட்ச
Stafford
கடன்களை கோருகிறார். ஒரு மணி நேரத்திற்கு 5.40 டாலர் மற்றும் 6.50 டாலர் வருமானம் தரும் இரண்டு
பணிகளில் ஈடுபடுகிறார். இப்படி படிக்கும்போதே பணியாற்றும் வேலைகள் பொதுவாக குறைந்த ஊதிய விகிதத்தில்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களது நிதித் தேவைகள் அடிப்படையில் வழங்கப்படுகிறது" அது இன்னும் எனது
படிப்புக்கட்டண செலவினங்களுக்கு கிட்டவாக கூட வரவில்லை" என்று அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம்
கூறினார். மாநிலத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு தற்போது கிழக்கு கென்டகி பல்கலைக்கழகம் ஒரு
பருவத்திற்கு 6,500 டாலர் கட்டணம் வசூலிக்கிறது.
கடந்த ஆண்டு தனது சொந்த வாடகை மற்ற வசதிகளுக்கான கட்டணங்களை அவர்
செலுத்தி வந்தாலும் ஜெனிபர் சட்டநுட்ப அடிப்படையில் பார்த்தால் அவரது வயதைக் கருதி அவர்
''சுயாதீனமான'' தனிமனிதர் என்று கருத முடியாது, எனவே அவர் மாணவர் உதவிக்கான எந்த தகுதியும்
இல்லாதவர். "எனது பெற்றோரின் வருமான அடிப்படையில் மானியங்கள் பெறுவதற்கு தகுதியில்லாத ஒரு மாணவி
நான். அவர்கள் எனக்கு உதவ வேண்டும், ஆனால் அவர்கள் உதவுகின்ற நிலையில் இல்லை" என்று அவர்
சொன்னார், தனது பாட்டன் பாட்டி, பற்றாக்குறையை சரிகட்ட உதவுவதாகவும் கூறினார், அவர் மேலும்
கூறினார், "எனது தாயும் ஒன்றுவிட்ட தந்தையும் நீங்கள் கூறுகின்ற மத்தியதர வர்க்கம் அல்லது குறைந்த
வருவாயுள்ள, மத்திய தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் என நான் கருதுகிறேன், ஆனால் அவர்கள் வீட்டிற்கு பணம்
செலுத்த வேண்டியிருக்கிறது. எனது சகோதரனை கவனிக்க வேண்டியிருக்கிறது, அவர்களுக்கு ஏராளமான கடன்
உள்ளது". அவர் பட்டப்படிப்பை முடிக்கும்போது குறைந்தபட்சம் 18,000 டாலர் கடன்காரியாக வெளியே
வரவேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
அந்த மாநிலத்திலுள்ள மிகப்பெரும்பாலான பல்கலைக்கழகங்களை போல் கிழக்கு
கென்டகி பல்கலைக்கழகமும் தனது அலுவலர்களையும் கல்வி திட்டங்களையும் சீரமைப்பு செய்கின்ற நேரத்திலேயே
படிப்புக் கட்டணங்களை உயர்த்தியது. 2005-2006 கல்வியாண்டில் 12.8 சதவீத கட்டண உயர்வு
முன்மொழியப்பட்டிருப்பது மாணவ அமைப்பை அதிர்ச்சியுற செய்துவிட்டது மற்றும் அவர்கள் ஆத்திரமடைகிற வகையில்
நிர்வாகிகள் வாரியம், ஆலோசனை எதுவும் கேட்காமல் ஒரு 23 சதவீத கட்டணத்தை உயர்த்திவிட்டது. அத்துடன்
அதற்குபின்னர் ஒவ்வொரு பருவத்திற்கும் 400 டாலர் கட்டணத்தை உயர்த்திவிட்டது.
பட்டதாரி மாணவர்களும் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர
பணி செய்பவர்களும் தங்கள் கட்டணங்களை முழுமையாக செலுத்த வேண்டியிருக்கிறது. லொண்டா, கிழக்கு கென்டகி
பல்கலைக்கழகத்தில் முதலாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். அவர் உயர் நிலைப்பள்ளி ஒன்றில் முழுநேர ஆங்கில
ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மற்றும் அவர் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு மணி
நேரம் பயணம் செய்யவேண்டியிருக்கிறது. முதலாண்டு படிப்பிற்கு தானே 680 டாலர் கட்டணத்தை செலுத்தினார்,
இன்னும் அவர் பட்டப்படிப்பிற்கு முந்திய கல்விக்கடன் 11,000 டாலர்கள் பாக்கி செலுத்த வேண்டியிருக்கிறது.
அவர் பட்டம் படித்து வேலை கிடைத்ததும் கடனை திரும்ப செலுத்த வேண்டிய திட்டம் புகுந்தது, ஒரு மாதத்திற்கு
அவர் 257 டாலர் செலுத்த வேண்டும். அது அவரது ஆரம்ப சம்பளத்தில் கால் பகுதியாகும். எனவே அவர் மிக
விரைவாக முடிவு செய்து முழு நேர ஆசிரியராகி அதிகம் சம்பாதித்து கடனை அடைக்க முடியும் என்று முடிவு
செய்தார்.
ஓராண்டிற்கு பின்னர், லொண்டா தனது கடனை சமாளிக்க முடியுமா என சந்தேகிக்க
ஆரம்பித்தார், அந்தக் கடனுக்கு ஏற்கனவே 900 டாலர் வட்டி சேர்ந்துவிட்டது. அவரது கணவரும் ஒரு ஆசிரியர்
பட்ட மேற்படிப்பு வகுப்பில் படிக்கிறார், அவருக்கு மாணவர் படிப்பு கடன் பாக்கி 25,000 டாலர் உள்ளது.
"அந்த கடனை நாங்கள் அடைக்க முடியாது என்று நான் கருதுகிறேன், மற்றும் அதை செலுத்துவதற்கு எந்த
வழியுமில்லை" என்று WSWS
இடம் அவர் கூறினார். லொண்டாவும் அவரது கணவரும் முழுநேர
பணியாளர்களாக வேலை பார்க்கும் மாதாந்திர அடமான கடன்பாக்கி 700 டாலரையும் போக்குவரத்து
செலவுகளையும் சரிகட்டுவதற்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஆகஸ்டில் பட்டதாரி மாணவர்களுக்கு
ஒரு வகுப்பிற்கு படிப்புக்கட்டணம் 800 டாலர் உயர்ந்துவிட்டது. "இப்போதே நாங்கள் அதற்காக சேமிப்பதற்கு
தாவிக்குதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நடப்பதைப் பார்த்தால் பொதுமக்கள் எப்படி உயர் கல்வி பெறுவது?"
ஒரு பொது சேவை பட்டதாரி மாணவர் ஏலி அவர் விஸ்கான்சலில் உள்ள ஒரு
தனியார் Marquette University
இல் படிக்கிறார். அவரது படிப்புக் கட்டணம் பொது உதவி மூலம்
கிடைக்கிறது. அவர் பணியாற்றுகிற சம்மந்தப்பட்ட பகுதி நேர பணிக்கு பதிலாக படிப்பிற்கான உதவித்தொகையும்
வழங்கப்படுகிறது. அண்மையில் பட்ட மேற்படிப்பு பட்டம் பெற்ற அவரது கணவர் உள்ளூர் பொதுப்பள்ளியில் முழு
நேர ஆசிரியராக பணியாற்றுகிறார். இருவரும் சேர்ந்து ஆண்டிற்கு சுமார் 33,000 டாலர்களை
சம்பாதிக்கின்றனர், அது வாடகை, எரிவாயு தங்களது குழந்தைக்கு அப்போதைக்கப்போது பராமரிப்பிற்கு
போதுமானது. என்றாலும், இந்த ஆண்டு கடைசியில் அவரது கணவர் கடன் 15,000 டாலருக்கு தவணை செலுத்த
தொடங்க வேண்டும் மற்றும் அடுத்த ஆண்டு ஏலி தனது சொந்தக் கடனுக்கு தவணை செலுத்த வேண்டி வரும். இவரது
மொத்தக்கடன் 14,000 டாலர்கள் ஆகும்.
ஏலியும் அவரது கணவரும் இந்தக்கடன் தொடங்குகின்ற நேரத்தில் அடுத்த ஆண்டு ஒரு
வெளிநாட்டு பட்ட மேற்படிப்பு திட்டத்தில் இணைவதற்கு சம்மதித்துவிட்டனர். அதன் மூலம் கடன் தவணை மேலும்
தள்ளிப்போகும். அப்படியிருந்தும், "மிக விரைவாக எங்களது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும்
என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.
2004ல் நாடு முழுவதிலும் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட அனைத்து பட்டப்படிப்பிற்கு
முந்திய பட்டங்களை பெற்றவர்களும் தங்களது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு மத்திய கடன் பெற்றிருக்கின்றனர் என்று
அமெரிக்க கல்வி கவுன்சில் (ACE)
அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தக் கடன் மத்திய தொகை 16,432 டாலர்கள்.
இந்தப் புள்ளி விவரப்படி மத்திய அரசாங்க கடன் பாக்கி செலுத்தும் 10 ஆண்டுத் திட்டப்படி அண்மையில் பட்டம்
பெற்ற ஒரு மாணவர் 6 மாத சலுகைக்காலம் முடிந்ததும் மாதம் 189 டாலர்களை திரும்ப செலுத்த வேண்டும்.
வேலை வாய்ப்பு சந்தை தேங்கிக்கிடக்கும் நிலையில் அண்மையில் பட்டம் பெற்றவர்களுக்கு இது ஒரு கணிசமான
அழுத்தங்களாகும் மற்றும் பல காரணிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கின்றன. போதுமான ஊதியங்கள் கிடைக்கவில்லை.
கல்லூரியில் சேர்வதற்கு நீண்டகாலம் கடன் தவணையை தள்ளிவைக்க வேண்டியிருக்கிறது என்றாலும் கடனை இப்படி
தள்ளிவைப்பது அதை அதிகரிக்கிறது. அமெரிக்க கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2004ல்
பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் சராசரியாக மத்திய அரச கடன் 26,119 டாலர்களை செலுத்த
வேண்டியிருக்கிறது.
சில கலிபோர்னியா பொது பல்கலைக்கழகங்கள் கடந்த சில நிதியாண்டுகளாக
மானியங்களை அதிகரித்திருக்கின்றது, அது கவர்னர் ஆர்னால்டு ஷவார்ஸ்நெக்கருக்கும் பல்கலைக்கழக
தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின் ஓர் அங்கமாகும். கடந்த 4 ஆண்டுகளாக மானியங்கள்
வெட்டப்பட்டதற்கு பதிலாக கலிஃபோர்னியா அரசு பல்கலைக்கழகம் (CSU)
மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கிடையில் சென்ற ஆண்டு ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின்படி அரசு
திட்டவட்டமாக குறிப்பிடும் "பொறுப்புக்களை சுமத்தும்" கல்வித்திட்டங்களை ஊக்குவிக்கின்ற வகையில் சமூக
சேவைகளை செயல்படுத்துகின்ற துறைகள் போன்றவற்றிற்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
2005-2006, கல்வியாண்டில் கலிஃபோர்னியா அரசு பல்கலைக்கழகம் மற்றும்
கலிஃபோர்னியா பல்கலைக்கழக (UC)
நிர்வாக குழுக்கள் 8 சதவீத பட்டப்படிப்பிற்கு முந்திய கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தன. இதன் மூலம்
கட்டணம் 457 டாலர்கள் உயர்ந்து ஓராண்டிற்கு 6,141 டாலர்களாக ஆயிற்று. அதிகாரபூர்வமான மாகாண
வரவு செலவுதிட்ட உள்ளடக்கும் தந்துள்ள தகவலின்படி, கலிஃபோர்னியா அரசு பல்கலைக்கழகம் மற்றும்
கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு மிதமான 10
சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள் ஓராண்டிற்கு கட்டணம்
7,000 டாலர்கள் செலுத்த வேண்டும். தொழில் முறையில் சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவற்றை
படிப்பவர்கள் குறைந்தபட்சம் ஆண்டிற்கு 15,000 டாலர்கள் செலுத்த வேண்டும்.
டேவிஸ்சிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஷாம்மார் இரண்டாம் ஆண்டு
சட்டம் படிக்கிறார். மிகப்பெருமளவில் வாழ்க்கை செலவு ஆகின்ற ஒரு பகுதியில் அவர் வாடகை வாகனம்
நிறுத்துமிடம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 21,000 டாலருக்கு மேல் கட்டணம் செலுத்த
வேண்டிய ஒரு தனிப்பட்ட மாணவராவர். "படிப்புக் கட்டணம் மடத்தனமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.'' என்று
குறிப்பிட்டார். நான் முழு நேர பணி செய்து முதலாண்டு சட்டப்படிப்பை முடித்தேன். அது மிகவும் கடினமானது.
நான் செலுத்த வேண்டிய கடனை பார்க்கும் போது சட்டத்தில் எந்தத்துறையை தேர்ந்தெடுப்பது அல்லது
யாருக்காக வாதாடுவது என்பதில் எனக்கு எந்தத்துறையை தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை" என்று அவர்
கூறினார். சட்டப்படிப்பை முடித்து அவர் வெளியேறும்போது, பெரும்பாலும் மத்திய அரசகடனாக 70,000 முதல்
80,000 டாலர்கள் வரை பாக்கியாகிவிடும் என்று அவர் மதிப்பிட்டிருக்கிறார்.
மிகப்பெரும்பாலான தொழில்முறை மாணவர்கள் இதே நிலையில்தான் உள்ளனர்.
தொழில் முறை பட்டதாரிகளில் 89 சதவீதம் பேர் சராசரியாக 63,500 டாலர்கள் கடனுடன் பட்டம் பெற்று
வருவதாக அமெரிக்க கல்வி கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய கடனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தவணை
செலுத்தும் முறைப்படி ஒவ்வொரு மாதமும் 730 டாலர்களை செலுத்த வேண்டும். இது தவிர உயர் பட்டங்களை
பெற விரும்புகின்ற பல மாணவர்கள் பள்ளிக்கடன்களை உயர்ந்தபட்ச அளவிற்கு பெற்றிருக்கின்றனர். மேலும் தனியார்
வங்கிக்கடன்கள் மூலம் உதவி பெற்றிருக்கின்றனர்.
கிழக்கு கரோலினா பல்கலைக்கழகம் வடக்கு கரோலினா பல்கலைக்கழக
வரவுசெலவுதிட்ட கட்டுப்பாட்டிலுள்ள 16 கல்வி நிறுவனங்களில் ஒன்று, வடக்கு கரோலினா பல்கலைக்கழக
கவர்னர்கள் குழு கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக கல்லூரிகளில் படிப்பவர்களது செலவினங்களை
இரட்டிப்பாக்கிவிட்டது. வடக்கு கரோலினா அரசியல் சட்டப்படி உயர்கல்வி தருவதற்கு கடமைப்பட்டதாகும்.
மாநில வரவுசெலவுதிட்ட ஒதுக்கீடுகள் குறைவதாலும், தேவை அடிப்படையிலான மானியங்கள் குறைக்கப்பட்டிருப்பதும்
மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
சென்ற ஆண்டு கிழக்கு கரோலினா பல்கலைக்கழகம் படிப்புக் கட்டணத்தை 300
டாலர் உயர்த்திவிட்டது. மற்றும் இந்த ஆண்டு மீண்டும் மாநில மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் 2000 டாலர்கள்
என்றும் மாநிலத்திலிருந்துகு வெளியிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு 7100 டாலர்கள் என்றும் உயர்த்திவிட்டது.
ஆஷ்லி, ஒரு கிழக்கு கரோலினா பல்கலைக்கழகம் முதலாண்டு ஆரம்பக்கல்வியை முக்கிய பாடமாக படிப்பவர்,
அவர் பல்வேறு தேவைகள் அடிப்படையிலான மானியங்களையும் உதவி தொகைகளையும் உதவித்தொகை அடிப்படையில்
இல்லாத மானியத்தகுதி பெறாத Stafford
கடன்களை ஒரு மத்திய பெர்கின்ஸ் கடனையும் பெற்றிருக்கிறார். இவ்வளவிற்கும் பின்னர் இந்த உதவி அந்த
மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கான படிப்புக் கட்டணத்திற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. தனது நிதி
நிலையை சரிக்கட்டுகின்ற அளவிற்கு போதுமான குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கவில்லையே என்று அவர்
வருந்துகிறார். "படிக்கும்போது பணியாற்றுவது ஓரளவிற்கு உதவியாக உள்ளது. ஆனால் கூடுதலாக ஒரு வேலை
வேண்டும்" வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் கவர்னர்கள் குழு 2006-2007 கல்வியாண்டிற்கு மேலும் குறைந்த
பட்சம் 300 டாலர்களை கிழக்கு கரோலினா பல்கலைக்கழகம் படிப்புக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
முறை-ரீதியாக மாணவர்கள் அரசாங்க சங்கத்தின் படி, வடக்கு கரோலினா
பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற மாணவர்கள் தேவை அடிப்படையிலான மானியங்களுக்கும் மனுச் செய்கின்றனர்,
படிக்கும் காலத்தில் மிக அதிகமாக கடன்களை பெறுகின்றனர். ஷெர்ரி, ஒரு கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில்
முதலாண்டு படிக்கின்ற அரசியல் அறிவியலை முக்கிய பாடமாக பயிலும் மாணவி, அவரது நிதிநிலைமை "இருண்டிருப்பதாக"
வர்ணிக்கிறார். அந்த மாகாணத்தை சேர்ந்த அவர் படிப்பு கட்டணத்தை செலுத்துகிறார்,
Stafford கடன்களை
பெற்றிருக்கிறார், பணியாற்றவும் செய்கிறார். அப்படியிருந்தும், பாட நூல்களை வாங்குவதற்கு கணிசமான அளவிற்கு
கிரெடிட் கார்ட் கடன்களை பெற்றிருக்கிறார். படிப்பு கட்டண விகிதங்கள் உயர்த்தப்பட்டு அதே நேரத்தில் தேவை
அடிப்படையிலான உதவிகள் குறைக்கப்பட்டிருப்பது அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது."படிக்கும்
காலத்தில் பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, அது மிகவும் பயங்கரமானது.... ஆனால் ஏராளமானவர்களுக்கு
அத்தகைய பணி கிடைக்கவில்லை".
மிச்சிகனில், எட்டு பொது பல்கலைக்கழகங்கள் அண்மையில் படிப்புக் கட்டணத்தை
7.5 சதவீதம் முதல் 19 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளன. செப்டம்பர் வரை மாகாண சட்டமன்றம்
கல்விக்கு நிதியளிப்பது பற்றி ஒரு முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. எனவே பெரும்பாலான
பல்கலைக் கழகங்கள் பொதுகருத்து அடிப்படையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உயர்கல்வி மானியங்களை
வெட்டும். அந்த மாகாணத்தின் இரண்டு பெரும் பள்ளிகள், மிச்சிகன் பல்கலைக்கழகமும், மிச்சிகன் அரசு ஆகும்.
கடைசியாக இந்தப் பருவத்திற்கு முழு நேர படிப்புக்கட்டணம் சராசரியாக 500 டாலர் உயர்த்தப்பட்டிருக்கிறது.
கிராண்ட் ராப்பிட்ஸ் மிச்சிகன் பெர்ரிஸ் பல்கலைக்கழக கென்டால் கலைக்கல்லூரி
தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று J.D
நம்புகிறார். அவர் சில கல்லூரி வகுப்புகளுக்கு சென்று வருகிறார். என்றாலும் உள்ளூர் உணவு விடுதி ஒன்றில் பணியாளராக
உள்ளார். இப்போது அவருக்கு இரண்டு மாத வாடகை பாக்கி உள்ளது. இதற்கு முன்னர் ஒரு குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருப்பதால்
நல்ல ஊதியம் தருகின்ற பணிகளை பெற முடியவில்லை. என்றாலும், மாணவர் உதவிக்கான தகுதியையும் அது கட்டுப்படுத்தக்கூடும்.
அவருக்கு மத்திய உதவி மறுக்கப்படுமானால் J.D
அதிக வட்டி விகிதத்தில் ஒரு தனியார் கடனை பெறுவதைத்தவிர வேறு வழியில்லை. "ஒவ்வொருவருக்கும் கல்வி
கற்பதற்கான ஒரு உரிமை இருக்க வேண்டும், மற்றும் அவர்கள் உண்பதற்கு உணவும் வேண்டும். நான் ஒரு பட்டம் பெற்ற
பின்னர், எனது வாழ்நாள் முழுவதிலும் நான் அந்தக் கடனை அடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தக் கடனை
அடைப்பதற்காக நான் எப்போதுமே எல்லாவற்றையும் மறந்தவனாக வாழ வேண்டும். அத்துடன் நான்
வாழ்வதற்கே இந்த எனது பட்டத்தை பயன்படுத்தாது போகலாம். இதற்கு முன்னர் நான் செய்து வந்த பணியிலேயே
தேங்கிக் கிடக்க வேண்டியதுதான்" என்று J.D WSWS
இற்கு கூறினார்.
Top of page |