:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: labour court confirms dismissal of
Opel auto worker in "wildcat strike"
ஜேர்மனி: ''தன்னியல்பான வேலைநிறுத்தத்தில்'' ஓப்பல் கார் தொழிலாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டதை
தொழில் நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது
By Ulrich Rippert
28 July 2005
Back to screen
version
ஜூலை 19 இல் போகுமிலுள்ள தொழில் நீதிமன்றம் ஓப்பல் கார் தொழிலாளி
Richard Kaczorowski
எதிரான வழக்கில் தீர்ப்பளித்தது. 45 வயதான அந்தத் தொழிற்சாலையின் திட்டமிடல் துறையில் பணியாற்றி வந்த அந்த
தொழிலாளி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்திருந்தார். விசாரணையின்போது, அவருக்கு எதிராக
கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணம் இல்லாதவை என்றும் சென்ற ஆண்டு கடைசியில் அந்த நிறுவனத்தில் எடுக்கப்பட்ட
ஒழுங்கு நடவடிக்கைகளின் சில காரணம் இல்லாதவை என்றும் அவரால் நிரூபிக்க முடிந்தது.
உடனடி பதவிநீக்கம் அளவிற்கு அதிகமானது என்றும் சட்டவிரோதமானது என்றும் தொழில்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதற்கு பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முன்னறிவிப்பு கொடுக்கப்பட்ட
பதவி நீக்கம் என்று மாற்றி மற்றும் தன்னை அந்த நிறுவனம் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற
Kaczorowski இன்
கோரிக்கையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
தொழில் நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி
van der Leeden
வாய்மொழியாக வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. மே மாதம் நடைபெற்ற விசாரணையின் முதல் நாளில் சாட்சிகளை
குறுக்கு விசாரணை செய்து முடித்த பின்னர் பதவி நீக்கத்திற்கு தரப்பட்ட காரணம்----அதாவது,
Kaczorowski
அச்சுறுத்தினார், எச்சரித்தார், தன்னோடு பணியாற்றிய தொழிலாளர்களை இழிவுபடுத்தினார்--- என்ற அடிப்படை காரணங்களை
ஏற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்த van der
Leeden தற்போது இது ஒரு பிரச்சனை அல்ல என்று அறிவித்திருக்கிறார்.
மாறாக அவர் தமது தீர்ப்பின் மற்றொரு காரணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்:
"சென்ற ஆண்டு கடைசியில் நடைபெற்ற சுயாதீனமான வேலை நிறுத்தத்தை
எவ்வாறு அழைத்தாலும் [சட்டரீதியான
காரணங்களுக்காக தொழிலாளர்கள் தங்களது வெளிநடப்பை ''தொடர்ந்து நடைபெற்ற தகவல் அறிவிப்பு கூட்டம்'',
வேலைநிறுத்தம் அல்ல என உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்]
அது சட்டவிரோதமானது. மனுதாரர் அதில் கலந்துகொண்டது, மட்டுமல்லாமல் ----அதில் அவர் பங்கெடுத்துக்கொண்டது
வேலைநீக்கத்தை நியாயப்படுத்துவதாக ஆகாது--- அவர் திட்டவட்டமாக இந்த வேலைநிறுத்தத்தில் மற்றவர்கள் கலந்து
கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். அது
[வேலை வாய்ப்பு]
ஒப்பந்தத்தை வேண்டுமென்றே மீறுவதும் மற்றும் அதனால் ஒரு தொழில்துறை அமைதியை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது."
இந்த வார்த்தைகளோடு இந்த விசாரணையில் என்ன தொக்கிநிற்கிறது என்பதை நீதிபதி
தெளிவுபடுத்தினார். சென்ற அக்டோபரில் தன்னிச்சையாக வெளிநடப்பு மற்றும் கண்டன நடவடிக்கை முன்னரே கிரிமினல்
குற்ற நடவடிக்கைகளாக கருதப்பட வேண்டும் மற்றும் எல்லா தொழிலாளர்களையும் மிரட்ட வேண்டும் என்பதே அது.
இந்த முடிவுடன் ஒரு தொழிலாளியை தேர்ந்தெடுத்து, அவரை ஒரு முன்மாதிரியாக ஆக்கி அவரையும் மற்றொரு
தொழிற்சாலை தொழிலாளர் சபையின் ஒரு உறுப்பினரையும் முன்னறிவிப்பு கொடுக்காமல் பதவி நீக்கம்
செய்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு வாரம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது அது
அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட ''தொடர் தகவல் தெரிவிப்பு கூட்டமாக'' ஏற்பாடு
செய்யப்பட்டது, அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தம் பற்றி விவாதித்தனர் மற்றும், மிகப்பெரும்பாலோர்
குறிப்பாக, தொழிற்சாலை தொழிற்சங்க அங்கத்தவர்கள் முடிந்த வரை ஒன்றுபட்ட ஒருவருக்கொருவர் உதவுகின்ற
வகையில் நடவடிக்கை எடுப்பதை உறுதிபடுத்திக்கொள்வதற்கு பணியாற்றி வந்தனர்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அந்த வாரம் நடைபெற்ற ஏறத்தாழ அனைத்து
ஊழியர்களின் நடவடிக்கையை போன்றதுதான் Richard
Kaczorowski இன் செயல்பாடுகளும். ஆனால் தற்போது அதில்
சம்மந்தப்பட்டவர்கள் அனைவர் சார்பிலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
நீதிபதி வான் டெர் லீடன், தனது குறிப்புக்களிலிருந்து படிக்காமல் அவரது சுருக்கமான
அறிக்கையை வெளியிட்டார், அவரது வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் கவலைப்பட்டார் என்று
தோன்றுகிறது. "ஒரு உதாரணத்தை ஏற்படுத்துவது பற்றியதல்ல அது!".
என்று அவர் மேலும் கூறினார். மனுதாரர் கண்டனங்களில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், "ஒரு சிறப்பு
நடவடிக்கையிலும்" பங்கெடுத்துக்கொண்டார், மற்றும் சட்டவிரோதமான செயலுக்கு அழைப்பு விடுத்தார். இதுதான்
அவரது தவறான நடத்தைக்கு ஆதாரமாகும் மற்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அடிப்படைக்காரணங்களும்
ஆகும் என்று வான் டெர் லீடன் கூறினார்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக
Kaczorowski
அறிவித்தார்.
முரண்பாடுகள்
இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் போக்கிலிருந்து முரண்படுகின்ற வகையில் தீர்ப்பு
அமைந்திருப்பதில் குறிப்பிடத்தக்கது. உண்மைகள் தெளிவானவை. சென்ற அக்டோபரில் போக்கும் தொழிற்சாலையில்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களை மேற்கொண்ட சில நாட்களில் ஓப்பல் உடனடியாக
Richard Kocsoroswki
யையும் தொழிற்சாலை சங்க உறுப்பினர்
Turhan Ersinயும்
வேலை நீக்கம் செய்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட அந்த வேலை நிறுத்தத்தால் போக்குமிலுள்ள
ஓப்பல் தொழிற்சாலை முழுவதும் ஒரு முழு வாரத்திற்கு மூடப்பட்டது.
இந்தக் கண்டனம் அந்த தொழிற்சாலையை மூடுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்டது,
அப்படி மூடுவதால் ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவர் மற்றும் அந்தக் கண்டனத்திற்கு
இதர தொழிற்சாலைகளிலும் ஒட்டுமொத்தமாக மக்களிடமும் பரவலான ஆதரவு திரண்டது. தொழிற்சங்கங்கத்திற்கும்,
தொழிற்சாலை தொழிற்சங்க அங்கத்தவர்களும் கொடுத்த சக்திவாய்ந்த அழுத்தங்களை தொடர்ந்து அந்த வேலை
நிறுத்தம் ஒரு முடிவிற்கு வந்தது.
தொழிற்சாலை தொழிற்சங்க சபையின் ஒரு உறுப்பினராக
Turhan Ersin
பணியாற்றி வந்ததால் அவர் தனது பதவிநீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அந்த நிறுவனம் தனது
நடவடிக்கையை செயல்படுத்துவதற்காக தொழில் நீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விசாரணை
ஏற்கெனவே தொடங்கிவிட்டது. என்றாலும், ஒரு சாதாரண தொழிலாளி என்ற முறையில்,
Richard Kaczorowski-க்கு
பதவி நீக்கத்திற்கெதிரான அத்தகைய பாதுகாப்பை அனுபவிக்க எதுவுமில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது
உடனடியாக நடைமுறைக்கு வந்தது. 18 ஆண்டுகள் பொருத்தும் பிரிவில் பணியாற்றியதுடன் சேர்த்து --24 ஆண்டுகள் அந்த
நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர்-- அவர் வேலையிழந்தார் மற்றும் அதற்கு பின்னர் ''அவர் தானே வேலையிழக்க
காரணமானதாக'' குற்றச்சாட்டப்பட்டு, அவர் வேலையில்லாதோருக்கு கிடைக்கும் இழப்பீட்டை மூன்று மாதங்கள் வரை
பெற முடியாதவாறு தடுக்கப்பட்டார்.
தன்னை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று
Kaczorowski செய்த
முறையீட்டின் மீது முதல் நாள் விசாரணை மே 10ல் நடைபெற்றது. அந்த நிறுவனத்தின் ஐந்து சாட்சிகளின் வாக்கு
மூலத்தை மையமாகக் கொண்டு இந்த விசாரணை நடைபெற்றது. இந்த சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அந்த
நிறுவனம் எழுத்து மூலம் பதவி நீக்க அறிவிப்பு கொடுத்ததை நியாயப்படுத்தியது மற்றும்
Kaczorowski பயமுறுத்தினார் மற்றும் சக ஊழியர்களை வன்முறையில்
அச்சுறுத்தல்களால் மிரட்டினார் என்று நிறுவனம் கூறிற்று. என்றாலும் குறுக்கு விசாரணையின்போது, நான்கு சாட்சிகள்
Kaczorowski
யோடு தாங்கள் பேசிய எந்த நேரத்திலும் அவர் அச்சுறுத்தியதாக நாங்கள் கருதவில்லை என்று ஒப்புக்கொண்டனர்.
மூத்த ஊழியர் W.
மட்டுமே அந்தக் குற்றச்சாட்டை உறுதிபடுத்தினார் என்றாலும் அவரும் "மனுதாரரை பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை"
என்று ஒப்புக்கொண்டார்.
இப்படி தெளிவாக சாட்சியம் அளிக்கப்பட்ட பின்னர் கட்டாயப்படுத்துதல் அல்லது எந்த
வகையிலும் அச்சுறுத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை சாட்சிகள் உறுதிபடுத்த தவறியதை தொடர்ந்து முதல்நாள்
விசாரணை முடிவில் நீதிபதி வான்-டெர்-லீடன் மனுதாரருக்கான எதிர்தரப்பு சாட்சிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டிய
அவசியமில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் மனுதாரர் சார்பில் தீர்ப்பளிக்க மறுத்துவிட்டார். ஆனால்
நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சமரச பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் என்றும் ஒரு உடன்பாடு உருவாக
வற்புறுத்தலாம் என்றும் யோசனை கூறினார்.
இரண்டாவது நாள் விசாரணை ஜூலை 19ல் நடைபெற்றது, அதில் தொழிற்சாலை
தொழிற்சங்க உறுப்பினர்கள் பலரும் மேற்பார்வையாளர்களும் மற்றும் சக ஊழியர்களும் கலந்து கொண்டனர். ஒரு
உடன்பாடு தொடர்பாக கலந்துரையாடல்கள் தொடங்கின. என்றாலும், நிர்வாகத்தின் பிரதிநிதிகள் 30,000 முதல்
40,000 யூரோக்கள் வரையிலான ஆட்குறைப்பு இழப்பீடு தொகைக்கு மேல் தருவதற்கு விருப்பம் இல்லாதவர்களாக
இருந்தனர், மற்றும் Kaczorowski,
தன்னை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அதற்கு பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, நீதிமன்றம் ஆலோசனைக்காக ஒத்தி
வைக்கப்பட்டது. பதவி நீக்க முன்னறிவிப்பை இரத்து செய்வதைத் தவிர இந்த வழக்கின் உண்மைகளை பார்த்தால் வேறு
எந்த தீர்ப்பும் வழங்கப்பட முடியாது என்று அந்த விசாரணையில் கலந்து கொண்ட பல பார்வையாளர்கள் முடிவு
செய்தனர். எனவே முடிவு அறிவிக்கப்பட்டதும் கணிசமான வியப்பு உருவாயிற்று. தீர்ப்பின் எழுத்து வடிவம் இன்னும்
கிடைக்கவில்லை, ஆனால் வாய்மொழி விபரத்தில் நீதிபதி van
der Leeden பதவி நீக்கத்திற்கான காரணங்களை தந்தார். அதில்
முதல் நாள் விசாரணையில் நடைபெற்றதும் சாட்சிகளின் குறுக்கு விசாரணையையும் பற்றி குறிப்பிடப்படவில்லை.
ஓப்பலுக்காக வாதாடுகின்ற பேக்கர் & மெக்கன்சி அலுவலகத்தை சேர்ந்த வழக்கறிஞர்
டாக்டர் மார்குஸ் கப்பன்ஹேகன் தயாரித்துள்ள மனுவில், இரண்டாவதாக குறிப்பிடுப்படும் அம்சம் என்னவென்றால், "முன்னறிவிப்பு
இல்லாமல் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் 2004 நவம்பர் 16ல் மனுதாரர் நான்கு சக ஊழியர்களை
வன்முறை மூலம் அச்சுறுத்தினார், எச்சரிக்கை செய்தார், மற்றும் அவர்களை இழிவுபடுத்தினார்" என்பதாகும். இந்தக்
கூற்றுகள் சாட்சிகள் தந்த வாக்குமூலத்தால் மறுக்கப்பட்டிருக்கின்றன. மேலே கூறப்பட்ட காரணத்தை இப்போது நீதிபதி
வான் டெர் லீடன் பதவி நீக்கத்திற்கான காரணமாக கூறுகிறார்----அதாவது "ஒப்பந்தத்தை மீறுவதற்கான
கோரிக்கை" என்பது-----அதற்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது, எனவே ஏற்றுக்கொள்ள முடியாது.
சக கார் தொழிலாளர்களுடன் ஒரு கண்டன நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடல்
நடைபெற்றபோது, மற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவது, சட்டவிரோதமான நடவடிக்கை என்று
கருதப்படுமானால் பல தொழிற்சங்க அங்கத்தவர்கள் உட்பட போக்கும் ஒப்பல் தொழிற்சாலையின் ஊழியர்கள் 9,600
பேரில் மிகப்பெரும்பாலானவர்கள் சாட்சி கூண்டில் உட்கார்ந்தியிக்கவேண்டும். உண்மையிலேயே என்ன நடந்திருக்கிறது
என்றால், ஒரு தொழிலாளியை முன் உதாரணமாக தண்டித்திருக்கிறார்கள். என்றாலும், அத்தகைய பழிவாங்கும்
நடவடிக்கை ஜேர்மனியின் தொழிற்துறை சட்டத்தில் திட்டவட்டமாக தடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த சட்டத்தில் இதற்கு ஏற்புடைய பகுதி கீழ்கண்டவாறு வருகிறது. "அந்த
தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற அனைவரும் சட்டம் மற்றும் நியாய கொள்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட
வேண்டும். இனம், மதம், பிறந்த இடம், நாடு, அரசியல் அல்லது தொழிற்சங்க நடவடிக்கை அல்லது அவரது
கருத்துக்களுக்காக வேறுவிதமாக நடத்தப்படக்கூடாது. அதற்கு அனுமதிக்கக் கூடாது." (ு
75 ஜீணீக்ஷீணீரீக்ஷீணீஜீலீ 1 ஙிமீtக்ஷீக்ஷிநி). சட்ட விமர்சன நூலில்
(பார்க்க:
Gnade/Kehrmann/Schneider/Klebe/Ratayczak)
திட்டவட்டமான குறிப்பு இந்த பத்தி தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்களிலும், தொழில் தகராறுகளில் ஒழுங்கு
நடவடிக்க்ைகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Richard Koczoroswki இன்
நடவடிக்கை பிரதிநிதித்துவப்படுத்துவது "தொழிற்துறை அமைதியை கடுமையாக மீறுகின்ற ஒரு செயல்" என்பதும் உண்மைக்கு
மாறானது. உண்மையிலேயே, போக்குமில்
ஓப்பல் தொழிற்சாலைகளில் நிரந்தரமாக தொழில் அமைதி சீர்குலைந்ததற்கு
காரணம் ஐரோப்பிய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் (தொழிற்சாலையின் உடன்பாட்டு பேச்சுக் குழுக்களை
புறக்கணித்துவிட்டு) ஒருதலைபட்சமாக தன்னிச்சையாக தனது ஐரோப்பிய ஒன்றிய தொழிற்சாலைகளில் 10,000
தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வது என்ற முடிவை ஊடகங்கள் மூலம் அறிவித்ததுதான்.
இந்த அம்சத்தை வழக்கறிஞர் டாக்டர். தோமஸ் குரோட் தயாரித்துள்ள மனுவில் மிக
விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். முதல் நாள் விசாரணைக்கு பின்னர்,
Richard Kaczorowski
தனது வக்கீலை மாற்றிவிட்டார், நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் பரிந்துரை செய்தவற்றில் அசட்டையாக நடந்து
கொண்டார் என்பதைத் தொடர்ந்து வக்கீல் மாற்றப்பட்டார். தற்போது பிரபலமான பேராசிரியர் டாக்டர் ஹார்ட்ஸ்டாங்க்
அலுவலகத்தை சார்ந்த பிரபல வக்கீல் Dr. Grote,
Koczoroswki இற்காக வாதாடி வருகிறார்.
நீதிமன்ற விசாரணையில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட தொழிலாளர்கள் தீர்ப்பைக்
கேட்டதும் ஆவேசமாக பதிலளித்தனர். அதே நாளில் அந்தக் கார் தொழிற்சாலையின்
B பிரிவு பொருத்தும்
தொழிலாளர்கள் ஒரு தீர்மானத்தை இயற்றினர். "போக்குமின் தொழில் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள்
கண்டிக்கிறோம் ஏனெனில் அந்தத் தீர்ப்பு எங்களது சக தொழிலாளியான ரிச்சர்ட்டுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட
அனைத்து பதவி நீக்க முன்னறிவுப்புக்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற முறையீட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது"
என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான வேலைகளை அழிப்பது நிறுவனங்களுக்கு முற்றிலும் சட்டபூர்வமான
நடவடிக்கையாக இருக்கின்ற நேரத்தில், ''எதிர்ப்பு தெரிவித்தால் தொழிலாளர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக
நடத்தப்படுகின்றனர்.'' "இந்த மோசடியான தீர்ப்பை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் மற்றும் ரிச்சார்ட்டை திரும்ப
வேலையில் சேர்த்துக் கொள்ள கோருகிறோம் மற்றும் அவருக்கு ஊழியர்களும், தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும்,
தொழிற்சங்கமும் முழு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறோம்" என தீர்மானம் மேலும் கூறுகிறது.
என்றாலும் அந்தத் தீர்ப்பு தொழிலாளர் ஒருமைப்பாடு பிரகடனத்திற்கு மேல் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. அந்த தீர்ப்பு ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் எதிராக
வந்திருக்கிறது, குறிப்பாக தாங்கள் வேலை அழிப்பதை எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத
அவர்களுக்கு எதிராக அந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்றால்,
தொழிலாளர்களுக்கு விரிவான மற்றும் விளக்கங்கள் தர வேண்டியது அவசியமாகும். இவற்றில் தொழிற்சங்கம் மற்றும்
தொழிற்சாலை தொழிற்சங்க குழுவின் தலைமையின் நடத்தை பற்றி விமர்சனரீதியாக ஆராயப்படவேண்டும்.
கண்டன நடவடிக்கையில் சம்மந்தப்பட்டவர்களை அந்தத் தொழில் தகராறு முடிந்ததும்
நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எதையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தப்பிரிவை
தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கமான IG
மெட்டலோ அல்லது தொழிற்சாலை தொழிற்சங்கமோ ஏன் கேட்கவில்லை? 1960
களின் கடைசியில் நடைபெற்ற பெரிய தொழிற்துறை தகராறுகளைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களால் அத்தகைய
உறுதிப்பாடுகளை முறையாக கோரப்பட்டது. இந்த கோரிக்கையில் எழுப்ப மறுத்ததின் மூலம் அந்தத் தகராறில்
சம்மந்தப்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் அனைவரது ஒருமைப்பாட்டிற்கும் வெளிப்படையான ஒரு பேரிடியாகும்
மற்றும் நிர்வாகம் தனது விருப்பப்படி தனிப்பட்ட தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து தண்டிக்க முடிந்திருக்கிறது.
தொழிற்சாலை தொழிற்சங்ககுழு சனிக்கிழமையன்று கூடுதல் பணியை ஒப்புக்கொள்வதற்கு ஏன்
சம்மதித்தது? அதன்மூலம், வார்த்தைகள் பரிமாறப்பட்டன, அதையே காரணமாகக் கொண்டு பதவி நீக்க முன்னறிவிப்பு
கொடுத்திருக்கிறார்கள். இந்த பதவி நீக்கங்களை கண்டித்து ஏற்கனவே 3,000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்ட
பின்னரும், பதவியிலிருந்து நீக்கப்பட்ட சக தொழிலாளர்களான
Richard Kaczorowski மற்றும்
Turhan Ersin
ஆகியோருக்கு ஆதரவாக எந்தவித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்க தொழிற்சாலை தொழிற்சங்ககுழு ஏன்
மறுத்துவிட்டது? |