World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party May Day meeting in Colombo

கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் மேதி தின கூட்டம்

22 April 2005

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அனைத்துலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 அன்று கொழும்பில் ஒரு பகிரங்கக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

மே தினத்துடன் இணைவான அடிப்படைக் கோட்பாடுகளான தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியமும் சோசலிசத்திற்கான அரசியல் போராட்டமும் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் இன்றியமையாதவையாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலான அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு மற்றும் வளர்ச்சி கண்டுவரும் புதிய யுத்த ஆபத்துக்களுக்கும் மத்தியில், எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்களது சொந்த நலன்களின் பேரில் போராடுவதற்காக ஒரு பொது மூலோபாயத்தை பின்பற்றுவது அவசியமாகும்.

உலகம் பூராவும் மனித குலம் எதிர்கொண்டுள்ள கட்டவிழ்ந்துகொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு பெரும் நிறுவன கும்பல்கள் மற்றும் அவர்களின் அரசியல் சேவகர்களாலும் தீர்வுகாண முடியாது. அவர்கள் மலிவு உழைப்பு மற்றும் வளங்களுக்காக தங்களது எதிரிகளுடன் கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதே சமயம், உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக ஒரு வர்க்க யுத்தத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆசிய சுனாமி பேரழிவானது முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மிகவும் அடிப்படை தேவைகளை கூட வழங்க இலாயக்கற்றுள்ளதை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையில் பத்தாயிரக்கணக்கான மக்கள் எந்தவொரு உடனடி முன்னேற்றத்திற்கும் வாய்ப்பின்றி இன்னமும் அதிர்ச்சியூட்டும் நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தத் துண்பம் நாட்டின் உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வுகாண புதிய உறுதிப்பாட்டை வழங்கும் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பதிலாக வெகுஜனங்களுக்கு எதையுமே வழங்க முடியாத ஆளும் வர்க்கத்தால் மீண்டும் இன விரோதம் கிளரிவிடப்படுகின்றது.

சாதாரண மக்களின் பிரதிபலிப்பு முற்றிலும் எதிர்மாறானதாக இருந்தது. அரசாங்கம் உதவப் போவதில்லை என்பதை அறிந்திருந்த தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் வல்லுனர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இன, மத அல்லது மொழி பேதமற்று தங்களது நேரம், பணம் மற்றும் பொருட்களையும் பெருந்தன்மையுடன் வழங்கினர். இந்தப் பிரதிபலிப்பானது ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களை விட, தனது தேவைகள் மற்றும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சமுதாயத்தை அமைப்பதற்காக ஒன்றுகூடுவதற்கு தொழிலாளர் வர்க்கத்திற்குள்ள பிரமாண்டமான ஆற்றலை எளிதான முறையில் வெளிப்படுத்தியுள்ளது.

சோ.ச.க எமது அனைத்து வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் எமது மே தின பொதுக் கூட்டத்திற்கு வருகைதருமாறு ஆர்வத்துடன் அழைப்புவிடுக்கின்றது.

இடம்: புதிய நகர மண்டபம், கிறீன்பாத், கொழும்பு
நேரம்: பி.ப 3.00 மணி, மே 1
உரை: சோ.ச.க பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved