WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Democrats complicit with Christian right, Republicans in Schiavo case
ஷியாவோ வழக்கில் கிறிஸ்தவ வலதுசாரிகளுடன் ஜனநாயகக் கட்சியினர் இணைந்து செயல்படுகின்றனர்
By Joseph Kay
23 March 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும்,
குடியரசு வலதுசாரிகள் முன் அடிபணிந்து நிற்பதையும் மீண்டும் ஒருதடவை ஜனநாயகக் கட்சி நிரூபித்துள்ளது. காங்கிரஸில்
இருந்த ஜனநாயக கட்சியினர் திங்கட்கிழமை காலையில், மிகக் கடுமையாக மூளைப்பாதிப்பு ஏற்பட்டுள்ள குடும்பப்
பூசல் நிறைந்திருந்து நீதிமன்றத்திற்கு வந்துவிட்ட டெர்ரி ஷியாவோ வழக்கில் புளோரிடா நீதிமன்றங்கள் கூறிய
தீர்ப்புக்களை அகற்றும் சட்டமியற்றும் பணிக்கு துணைக் கருவிகளாக நின்றனர்
திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட பின்னர் சட்டமாகிவிட்ட
இந்தச் சட்ட வரைவு, இரு கட்சிகள் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பெற்ற ஒரு சட்டமாகும். சட்ட மன்றத்தின் இரு
பிரிவுகளிலும் ஜனநாயகக் கட்சி தலைமையின் ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டிராவிட்டால் இது சட்டமாக இயற்றப்பட்டிருக்க
முடியாது.
ஜனநாயகக் கட்சி மிகத் தெளிவானமுறையில் செனட் மன்றத்தின் ஒரு சமரசத்திட்டத்திற்கு
பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், பிரதிநிதிகள் மற்றத்தில் இருந்த குடியரசுக் கட்சியினரை கடிந்துகொள்ளும்
வகையில் செனட்டு மன்ற சிறுபான்மை கட்சித் தலைவரான ஹாரி ரீட் "மன்ற குடியரசுக் கட்சியினர் இருகட்சி ஆதரவுடைய
சட்டவரைவை நிறைவேற்றுவதற்கு மறுத்தால், அவர்கள்தான் விளைவுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்."
எனத்தெரிவித்தார்.
ஈஸ்டர் இடைவெளிக்காக ஒத்திவைக்கப்படுவதற்கு சற்று முன்னால், மார்ச் 16ம் தேதி
சட்டமன்றம் பின்னர் சட்டமாக கையெழுத்திடப்பட்ட சட்டத்தைவிட பரந்த தன்மையுடைய சட்ட வரைவு ஒன்றை
இயற்றியிருந்தது. செனட்மன்ற பெரும்பான்மை கட்சித் தலைவர் பில் பிரிஸ்டுடன் ஒன்றாக செயலாற்றி, ரீட் ஒரு
சமரச சட்டவரைவிற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தி அது குறிப்பாக டெர்ரி ஷியாவோ வழக்கிற்கு பொருந்தும்
வகையில் அமைத்திருந்தார். செனட் மன்றமும், பிரதிநிதிகள் மன்றமும் இந்தச் சட்டவரைவை ஏற்று, அந்தந்த
மன்றத்தில் இருந்து ஜனநாயக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றவும் செய்தது.
செனட் மன்றத்தில், ஜனநாயகக் கட்சியினர் இந்தச் சட்டவரைவிற்கு முழுவாக்குகளும்
கிடைக்காதவாறு நடந்து கொண்டார்கள். மாறாக, செனட் தலைமை, குறைந்த பட்ச எண்ணிக்கையிலாவது
உறுப்பினர்கள் மன்றத்தில் (சாதாரணப் பெரும்பான்மை) இருக்க வேண்டும் என்ற தேவையை நிராகரிக்கும் வகையில்,
வாய்மூலமான வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றினர். மூன்று செனட்டு உறுப்பினர்கள்தான்
இறுதியில் சட்டவரைவிற்கு வாக்களிப்பதற்கு எஞ்சியிருந்தனர். ஒரு ஜனநாயககட்சி செனட் உறுப்பனர் இந்த முறைக்கு
எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும்கூட, அவர்கள் குறைந்தபட்ச வாக்காளர்-உறுப்பினர்கள் இருந்து வாக்கெடுக்கவேண்டும்
என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.
சமரச சட்டவரைவு செனட் மன்றத்தில் இயற்றப்பட்ட பின்னர், அது பிரதிநிதிகள்
மன்றத்திற்கு அனுப்பப்பட்டது; அங்கு ஒரு சில ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு முழு மன்றத்தின் வாக்களிப்பால்
தோற்கடிக்கப்பட்டது. இதிலும்கூட ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒத்துழைக்க முன்வந்ததால்தான், இது
இயற்றப்பட முடிந்தது. இறுதி வாக்களிப்பு, திங்கள் காலை (ஞாயிறு நள்ளிரவிற்குப் பின் எடுக்கப்பட்டது), 203
ஆதரவு 58 எதிர்ப்பு என்ற முறையில் பதிவாயிற்று. சட்டவரைவிற்கு ஆதரவு கொடுத்தவர்களில் 47 ஜனநாயகக்
கட்சியினர் இருந்தனர்; 53 ஜனநாயகக் கட்சியினர் அதை எதிர்த்து வாக்களித்திருந்தனர். ஈஸ்டர் இடைவெளிக்குப்
பின்னர் திரும்பிய பாதிக்கு மேலான ஜனநாயகக் கட்சியினர், இந்த அரசியலமைப்பிற்கு முரணான, ஜனநாயக
விரோத சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஜனநாயகக் கட்சிக் கொறடாவான
Steny Hoyer,
ஜனநாயகக் கட்சியினர் சட்டவரைவிற்கு எதிராக திரளவேண்டும் என்ற முயற்சி எதையும் கொள்ளவில்லை. மாறாக,
அவரவர் "தங்கள் மனச்சாட்சிப்படி" வாக்களிக்கலாம் என்று அவர் கூறிவிட்டார்: இதன் பொருள் மன்றத்தில் உள்ள
ஜனநாயகத் தலைமை இந்தச் சட்ட வரைவு நிறைவேறுவதை அனுமதிக்கத் தயாராக இருந்தது என்பதாகும்.
மன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது;
ஏனெனில் ஜனநாயகக் கட்சியினர் விரும்பியிருந்தால் மிகஎளிதில் சட்டமியற்றப்படுவதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
சட்டவரைவிற்கு, விரைவாக முடிக்கப்படவேண்டும் என்ற முன்னுரிமை கொடுக்கப்பட்டாதால், இதற்கு மன்றத்தில்
வாக்கெடுப்பு நடத்தும்போது இருக்கும் உறுப்பினர்களின் மூன்றில் இரு பங்கு வாக்குகள் வேண்டும் என்ற விதி உள்ளது.
இருந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்திருந்தால் வாக்கெடுப்பு
156-100 என்று பதிவு ஆகியிருக்கும்; சட்டம் இயற்றப்பட்டிருக்க முடியாது. மாறாக 202 மன்ற ஜனநாயக
உறுப்பினர்களில் 146 பேர் சட்டவரைவிற்கு எதிராக வாக்களித்திருந்தால், அது மன்றத்தின் எஞ்சியிருக்கும்
உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் கூட, தோற்றுப் போயிருக்கும்.
மன்றத்தில் இருக்கும் பல ஜனநாயகக் கட்சியினரும், மாசச்சுசட்சின் ஸ்டீவன் லின்ச்
போன்றார், குடியரசுக்கட்சியில் மிகப் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டிற்கு வெளிப்படையான ஆதரவைக்
கொடுத்தார்கள். "நான் முக்கியமாகக் கூறவிருப்பது பெற்றோர்களுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என்பதுதான்.
அவர்களுக்கு இது மிகவும் உளைச்சல் தருவதாகவும், உள்ளத்தை நோகடிப்பதாகவும் இருக்கும்" என்று லின்ச்
அறிவித்தார்.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்புடையவை,
அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளுக்கும் இடையே நிலவ வேண்டிய கட்டுப்படுத்தி- சமநிலைப்படுத்தும் தன்மை மற்றும்
மாநில நீதிமன்றங்களின் அதிகார வரம்பு பற்றித் தெளிவாக்கப்பட்டவை, அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, லின்ச்
பின்வருமாறு தெரிவித்தார்: "தேசிய சுகாதார கொள்கை பற்றிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாம் மருத்துவர்கள்
போலத்தான் செயலாற்றுகிறோம்." இந்தத் தர்க்கத்தின்படி, எந்தத் தனி மனிதருடைய சுகாதாரம் பற்றிய
முடிவுகளையும் காங்கிரஸ் ஒருதலைப்பட்ச முடிவை, தான் எப்படி, எவ்வாறு, விரும்புகிறதோ, அப்படி எடுக்க
முடியும் போலும்.
இரண்டு பிரிவுகளிலும் இருந்த பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினர் எந்த
விவாதத்திலும் பங்கு பெறுவதை தவிர்த்து, பகிரங்க அறிக்கைகளை கொடுப்பதையும் தவிர்த்தனர். செனட்டர்களான
ஹில்லேரி கிளின்டன், ஜோன் கெர்ரி போன்றவர்கள் எந்தக் கருத்தையும் கூறாததுடன், சட்டவரைவை
எதிர்ப்பதற்கும் முன்வரவில்லை.
செனட் உறுப்பினரான எட்வார்ட் கென்னடி "காங்கிரஸ் எடுக்கும் எந்த
நடவடிக்கையும் ஆக்கபூர்வமாகவும், கட்சி அரசியலில் இருந்து தனித்து நிற்கவும் நான் ஆவன செய்வேன்; ஒரு
சோகம் நிறைந்த நிலைமையை, இந்தக் கொடூரமான சோகம் இன்னும் அதிக சோகம் ஆகாவண்ணம் நான்
பாதுகாக்க விரும்புகிறேன்" என்று வெற்று அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். செனட்டு மன்றத்தில் சட்டவரைவிற்கு
எதிராக வாக்களிப்பதற்கு கென்னடி வரவில்லை; ஏனெனில் சமரசம் முற்றிலும் "கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது"
என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார் போலும்.
வார இறுதியில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புக்கள் பொதுமக்கள்
கூட்டாட்சி அரசாங்கம் ஷியாவோ வழக்கில் தலையிடுவதை பெரும்பான்மையாக எதிர்ப்பதைத்தான் காட்டுகின்றன.
அதாவது குடியரசுக் கட்சியனருடன் இச் சட்டத்தை இயற்றுவதற்கு ஒத்துழைத்த வகையில், ஜனநாயகக் கட்சியினர்
தங்களுடைய நடவடிக்கைக்கு மக்களுடைய ஆதரவிற்காக குறிப்பிடத்தக்க வகையில் காத்திருக்கவில்லை என்பது நன்கு
புலனாகும்.
திங்களன்று ABC News
வெளியிட்ட கருத்துக் கணிப்பு, "அமெரிக்கர்கள் பரந்த அளவில், வன்மையாக டெர்ரி ஷியாவோ வழக்கில்
கூட்டாட்சி அரசாங்கத் தலையீட்டை நிராகரிக்கின்றனர்; மற்றும் கணிசமான பெரும்பான்மை காங்கிரஸ் அரசியல்
ஆதாயத்திற்காக தன்னுடைய வரம்புகளை மீறி நடந்து கொள்ளுகிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்" என்றும்
கண்டு பிடித்துள்ளது. கருத்துக் கணிப்பின் விடையின்படி மக்களில் 63 சதவிகிதத்தினர் ஷியாவோவின் உணவு செலுத்தும்
குழாய் அகற்றப்பட வேண்டும் என்றும் 60 சதவிகிதத்தினர் கூட்டரசின் தலையீட்டை எதிர்க்கின்றனர் என்றும் தெரிய
வந்துள்ளது. தங்களைக் குடியரசுக்கட்சியினர் என்று அழைத்துக் கொண்டவர்கள்கூட அப்பெண்மணியன் உணவு செலுத்தப்படும்
குழாய் அகற்றப்படுவதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பின்படி, மக்கட்தொகையில் மூன்றில் இரு பங்கு காங்கிரசின் தலையீடு
அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்றும் டெர்ரி ஷியாவொ பற்றிய அக்கறை அதிகம் கிடையாது என்றும்
நம்புகிறது.
பல தசாப்தங்களாக அமெரிக்கர்கள் உட்பட்டு வரும் இடையறா வலதுசாரி
பிரச்சாரத்தினால் ஏற்பட்ட குழப்பும் இருந்தபோதிலும் கூட, உண்மையான ஜனநாயக அல்லது முற்போக்கு சக்தி
அரசியல் நடைமுறைக்குள் இல்லை என்று இருந்தாலும் கூட, அமெரிக்க மக்களிடையே, ஜனநாயகக்
கொள்ளகைகளுக்கு ஆழ்ந்த மனஉணர்வு உள்ளது நன்கு தெரிகிறது. இந்த மனஉணர்வுகள்தான் கொள்கையற்ற,
கோழைத்தனமான, அசட்டையில் ஆழ்ந்துள்ள ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் எதிரிடையாக
உள்ளன.
ஜனநாயகக் கட்சி அரசியல் வாதிகளின் உண்மையான அக்கறை, வாஷிங்டன் போஸ்டில்
பெயரிடாமல் வந்த ஓர் உயர் செல்வாக்குடைய ஜனநாயகக் கட்சியனரால் மிகத் தெளிவாக கோடிட்டுக்
காட்டப்பட்டது: ஷியாவோ வழக்கு பற்றிய சட்டத்தைக் குறிப்பிட்டுக் கூறுகையில் அவர் "நம்முடைய மக்கள்
இதைப்பற்றி ஆத்திரம் கொண்டுள்ளனர்" என்றார். "ஜனநாயகக் கட்சியினர் கருத்துக் கணிப்புக்களைப் பற்றி நன்கு
அறிவர் (அதாவது பொது மக்கள் சட்டத்திற்கு விரோதப் போக்கை சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதை);
ஆயினும்கூட இந்த உயர்மட்ட கட்சியாளர் பிற்போக்கு குழுக்களின் தீவிரம், உறுதிப்பாடு பற்றி எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்; இக்குழுக்களில் பலர் கருக்கலைப்பு அரசியலில் ஊறியவர்கள்; அவர்கள்
ஷியாவோ பெயரளவிற்கு உயிருடன் இருக்க வேண்டும் எனக் கோருபவர்கள்" எனத் தெரிவித்ததாக போஸ்ட்
குறிப்பிட்டுள்ளது.
வேறுவிதமாகக் கூறினால், ஜனநாயகக் கட்சி ஒரு வெறிபிடித்த, பிற்போக்குத்
தன்மை மிகுந்த அமெரிக்க மக்கட்தொகைப் பிரிவு ஒன்றை பற்றிக் கூடுதலான கவனத்தைச் செலுத்துகிறது; அதாவது
கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், அரைகுறை பாசிசக் குழுக்கள் என்று அரசாங்கத்தை ஷியாவோ வழக்கில் தலையீடு
செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் குழுக்கள், மக்கள் விராதப் போக்கையும், கருக்கலைப்பு எதிர்ப்பையும்
தங்கள் செயற்பட்டியலில் கொண்டுள் குழுக்கள் இவை; ஆனால் ஜனநாயகக் கட்சி அவர்களுடைய நீண்டகால
ஜனநாயகக் கொள்கைகள் ஒரு புறம் இருக்க, தம் தொகுதி மக்களில் பெரும்பாலானவர்களுடையடைய
கருத்துக்களைப் பொருட்படுத்தவில்லை. குடியரசுக் கட்சியினரை விட ஜனநாயகக் கட்சியனரின் நிலைப்பாடும்
சிடுமூஞ்சித்தனம் நிறைந்ததேயாகும்; இதில் பெரிய வேறுபாடு என்னவென்றால் ஜனநாயகக் கட்சியனரை
பொறுத்தவரையில் அவர்களின் சிடுமூஞ்சித்தனத்திற்கு அடிபணிந்து நிற்பதுடன், கோழைத்தனத்துடன் இணைந்துள்ளது.
இப்படிப்பட் குடியரசுக் கட்சியின் வலதுக்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மை,
குடியரசுக் கட்சியினரின் கொள்கைக்கு மக்களிடையே உள்ள எதிர்ப்பை பற்றியும் பொருட்படுத்தா தன்மை, ஒரு
குழப்பமான நிலையல்ல.
1990களின் கடைசிப் பகுதியில், கிளின்டன் நிர்வாகத்தை அகற்றுவதற்கு ஓர் ஊழலை
உற்பத்தி செய்து குடியரசுக் கட்சி மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு மிகப் பரந்த விரோதப்போக்கு காணப்பட்டது.
சுயாதீனமான வக்கீல் கென்னத் ஸ்டார் நிகழ்த்திய சூனிய வேட்டைக்கும் அதைத் தொடர்ந்த பெரிய குற்ற
விசாரணைக்கும் மக்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்தது; 1998ல் நடைபெற்ற இடைக்கால தேர்தல்களின்போது,
குடியரசுக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் பெற்ற பெரிய தோல்வியில் இது வெளிப்படுத்தப்பட்டது; ஆயினும்கூட,
ஜனநாயகக் கட்சி பெரிய குற்ற விசாரணை நடவடிக்கைக்கு தீவிர எதிர்ப்புக் காட்டவில்லை என்பதோடு, ஸ்டார்
விசாரணைக்கு பின்னணியில் இருந்த வலதுசாரி சதியை அம்பலப்படுத்தவும் மறுத்துவிட்டது.
கிளின்டன் பெரிய விசாரணைக்குட்படுதவற்கு நிபந்தனையற்ற சரணடைந்த நிலை
2000ம் ஆண்டு திருடப்பட்ட தேர்தலுக்கு அரங்கு அமைத்துக் கொடுத்தது: அத்தேர்தலில் மக்கள்
வாக்கையிழந்திருந்த புஷ்ஷிற்கு வாக்குகள் எண்ணப்படாமல் நசுக்கப்பட்ட முறையில் ஜனாதிபதி பதவி அன்பளிப்பாக
கொடுக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான அல் கோர் தன்னுடைய ஆதரவாளர்களை அரசியல்
அமைப்பிற்கு முரணான தலைமை நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருக்குமாறு கூறினார்; அந்தத் தீர்ப்பின்படி
புளோரிடாவில் வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுதல் நிறுத்திவைக்கப்பட்டு புஷ் பதவியில் இருத்தப்பட்டார்.
2004ம் ஆண்டில் புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது கூட வலதுசாரி பிரச்சாரமான
ஜனநாயக வேட்பாளர் ஜோன் கெர்ரி மிகக் கூடுதலான முறையில் குடியரசு வலதின் ஆதரவைப் பெற முயன்ற வகையில்
நடந்து கொண்டதால்தான்: அதிலும் குறிப்பாக மத, "கலாச்சாரப்" பிரச்சினைகளில் அவர் நடந்து கொண்ட விதம்
அவ்வாறு இருந்தது. முக்கிய ஜனநாயகக் கட்சியினர், ஹில்லேரி கிளின்டன் உட்பட கருக்கலைப்பு உரிமைகளில் சமரசத்திற்கு
இடம் உண்டு எனக் கூறிய அறிக்கைகளை வெளியிட்டனர்.
ஜனநாயகக் கட்சி ஷியாவோ வழக்கில் இணைந்து நிற்கும் நிலை, ஜனநாயக உரிமைகளின்
மீது பெருகிய தாக்குதல்கள் வரும், அவற்றை எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குத் தெளிவான எச்சரிக்கை
ஆகும். இந்த வழக்கில் கூட்டாட்சித் தலையீடு வேண்டும் என்று ஆதரவு கொடுப்பவர்கள் இந்த நிலைப்பாட்டில்
வேண்டுமென்றே டெர்ரி ஷியாவோவின் "வாழும் உரிமை" பற்றி குழப்பி, அதை தனிப்பட்ட உரிமைகளின் தலையீட்டுடன்
தவறாகவும் பிணைத்து நியாயப்படுத்தி விட்டனர். இந்த வழக்கை அவர்கள், தங்களுடைய மற்றோரு "வாழும் உரிமை"
என்ற பெயரில் பெரிதுபடுத்த உள்ள கருக்கலைப்புப் பிரச்சினையை ஊக்குவிக்கத்தான் தெளிவாக பாடுபடுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியினர் ஷியாவோ வழக்கில் நிபந்தனையற்று சரணடைய விரும்பிகிறார்கள்
என்றால், இறுதியில் அவர்கள் கருக்கலைப்பு பிரச்சினையிலும் நிபந்தனையற்று சரணடையாமாட்டார்கள் என்று எவரேனும்
சந்தேகிப்பதற்கு இடம் உள்ளதா? ஷியாவோ வழக்கின் தனிப்பட்ட சுதந்திரத்தில் சட்டவிரோதமான தாக்குதலை
நடத்தியுள்ள ஜனநாயகக் கட்சியின் பங்கு, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அது விருப்பமும், திறனும் அற்று உள்ளது
என்பதற்கு மற்றொரு நிரூபணமாகி உள்ளது.
See Also:
டெரி ஷியாவோ வழக்கில், புஷ், காங்கிரஸ் தலையீடு: பிற்போக்குத்தனத்திற்கு உதவுவதில் அரசியல் அயோக்கியத்தனம்
Top of
page |