:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
Wealth and poverty in modern Russia
நவீன ரஷ்யாவில் செல்வமும் வறுமையும்
By Vladimir Volkov and Julia Denenberg
11 March 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
சமூக நலன்களை கணிசமான அளவிற்குக் குறைந்த ரொக்க ஊதியமாக மாற்றியிருப்பதைக்
கண்டித்து பிரதானமாக ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
(See:
Russia: wave of protests
against welfare cuts, 27 January, 2005; and
Russia: Putin lays siege
to social benefits, 21 September, 2004.)
சமூக பாதுகாப்புப் பயன்கள் தொடர்பான புதிய சட்டங்களை அமுல்படுத்துவதில்
தோன்றியுள்ள பிரச்சனைகள் காரணமாக பரவலான கண்டனங்கள் பரவியிருப்பதாக அரசாங்கம் கூற முயன்றாலும்,
இந்த சட்டங்கள் அவசியமென்றும் அவை தவிர்க்க முடியாதவை என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும், ஓய்வூதியம் பெறுவோர்களின் கண்டனங்கள் பெரிய மிதக்கும் பனிகட்டியின் ஒரு துளிதான். முன்னாள்
சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்டுவிட்ட பாரிய சமூக ஏற்றதாழ்வுகளின்
அளவை இந்த பெருகிவரும் அதிருப்தி எடுத்துக்காட்டுகிறது.
தனது புத்தாண்டு உரையில், மிகப்பெருமளவில் ரஷ்யாவில் முந்தைய ஆண்டுகளுக்கு மேலாக
சமூக நிலைமை மேம்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி விலாடிமீர் புட்டின் கூறினார். என்றாலும், ஒரு சில நாட்களுக்கு
பின்னர் கண்டனப் பேரணிகள் வெடித்துக் கிளம்பியதானது, மக்களில் பரந்த பிரிவுகளைச் சார்ந்தவர்கள் இந்த பிரச்சனை
தொடர்பாக என்ன நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
நவீன ரஷ்யாவின் சமூக நிலவரத்தை மேலெழுந்த வாரியாக சோதனையிட்டால் கூட,
அது ஒரு ஆழமாக பிளவுபட்ட சமுதாயத்தை அம்பலப்படுத்துகிறது. ஏராளமான புள்ளி விவர ஆவணங்கள்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறுபட்ட இரண்டு உலகங்கள் ரஷ்யாவில் நிலவுவதைக் காட்டுகின்றன. ஒன்று
---செல்வம் மற்றும் சொகுசு வாழ்க்கை--- அதில் முக்கியத்துவமற்ற சிறுபான்மையினர் வாழ்கின்றனர்.
மற்றொன்றில் ---சிதைந்து வரும் சமூக உலகத்தில் வாழ்வின் அன்றாடத் தேவைகளுக்கு கடினமாக போராட்டம்
நடத்திக் கொண்டிருக்கிறவர்கள் ஆவர். ---அதில் பல மில்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
செல்வம் வினியோகிக்கப்பட்டிருப்பது தொடர்பான புள்ளி விவரங்கள் அப்பட்டமான
இந்த சமூக துருவமுனைப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அரசாங்க புள்ளிவிவரத்தின்படி, ரஷ்ய
சமுதாயத்தில் மிகப்பெரும் வருமானம் பெறுபவர்கள், பரம ஏழைகளை விட 15 மடங்கு கூடுதலாக வருமானம்
பெறுகின்றனர். ---இது உலகின் முன்னணி நாடுகளில் நிலவுகின்ற மிக உயர்ந்த சமூக ஏற்றதாழ்வுகளில் ஒன்றாகும்.
மாஸ்கோவில் இந்த வேறுபாடு 53 மடங்காக உள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழே
சென்ற ஆண்டு இறுதியில் உலக வங்கி பிரசுரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ரஷ்ய மக்களில்
20 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மாதம் 1000 ரூபிள்கள் (30
யூரோவிற்கும் குறைவு அல்லது 38 டாலர்கள்) என்று விளக்கப்பட்டிருக்கிறது.
மிகப்பெரும்பாலான ரஷ்ய குடும்பங்கள் வறுமையின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
வருமானத்தில் சராசரியாக 10 சதவீதம் குறையுமென்றால், வறுமை விகிதம் 50 சதவீதம் உயருமென்று உலக
வங்கி கணக்கிட்டுள்ளது. சராசரி தொழில் நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்கள் தலைமையிலான உழைக்கும்
குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் தான் மிகப்பெரும்பாலும் ரஷ்யாவில் ஏழைகளாக உள்ளனர்.
ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தாழ்ந்த வரிசையிலுள்ள சிவில் ஊழியர்கள் உட்பட
பொதுத்துறையில்தான் மிகப் பெரும்பாலான ஏழைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். சுகாதார சேவைகளில்
பணியாற்றும் தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட மிகக் குறைந்த வருமானம் பெறுகின்ற
பணிகள்தான்-----பெரிய சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தத் துறைகளில் பணியாற்றுகின்ற
தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை படுமோசமாக இருப்பதால் சமுதாயம் சார்ந்திருக்கின்ற அவர்கள்
செயலாற்றிக்கொண்டிருக்கும் கட்டமைப்புகளும் சிதைகின்றன.
வசதிபடைத்தவர்கள் ஏழைகளை விட அல்லது ஏழ்மை நிலைக்கு
வந்துகொண்டிருப்பவர்களை விட அதிக சலுகைகளையும் பயன்களையும் பெறுகின்றனர். (குழந்தைகள் நீங்கலாக)
நடுத்தர அளவில் வழங்கப்படுகிற சமூக உதவித் தொகைகளை ஒப்புநோக்கும்போது, சமூகத்தில் ஏழைப்
பிரிவுகளைவிட பணக்கார பிரிவினருக்குத்தான் அத் தொகைகள் அதிக அளவில் கிடைக்கிறது.
ரஷ்யாவின் தேசிய புள்ளி விவர அலுவலகம் அதிகாரபூர்வமாக மொத்தம் 31
மில்லியன் மக்கள் (22 சதவீதம்) ஏழைகள் என்று வகைப்படுத்துகிறது. என்றாலும், இதர ஆய்வுகள் வறுமை
விகிதத்தை 40 சதவீதம் அல்லது அதற்கு மேலாக குறிப்பிட்டிருக்கின்றன.
வாழ்க்கைத் தரங்கள் தொடர்பான அனைத்து ரஷ்ய நிலையம் (The
All-Russian Centre) வறுமையின் பல்வேறு நிலைகள்
குறித்து கீழ்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
2003 இறுதியில், சராசரி மாத வருமானம் 2,121 ரூபிள்கள் (60 யூரோக்கள்
/ 77 டாலர் மாத வருமானம்) எனக் கணக்கிடப்பட்டது. பணியிலிருப்பவர்கள் 2,300 ரூபிள்கள் (65
யூரோக்கள் / 83 டாலர்கள்) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், 1600 ரூபிள்கள் (45 யூரோக்கள் / 58
டாலர்கள்) பெற்றனர். இந்த வருமான அளவுகளுக்கு கீழே பெறுகின்றவர்கள் ஏழைகள் என்று
வகைப்படுத்தப்பட்டனர். ஒரு இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள், மிகவும் படுமோசமான நிலையிலிருப்பவர்கள்
ஆவர். இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் நபர்வாரி வருமானம் 2121 க்கும் 4400 ரூபிள்களுக்கும்
இடைப்பட்ட வருமானமாகும். (60-126 யூரோக்கள் / 77-161 டாலர்கள்) மக்கள் தொகையில் ஒரு
கணிசமான பிரிவினர் இந்த இரண்டு வகைகளை சார்ந்தவர்கள் என்று ஆதாரங் கொள்ளப்படுகிறது.
"நடுத்தர தட்டினர்" என்று வாழ்க்கைத் தரங்களுக்கான அமைப்பு கருத்தில்
எடுத்துக்கொள்வது நபர்வாரி மாத வருமானம் 4,400 க்கும் 15,000 ரூபிள்களுக்கும் இடைப்பட்ட
வருமானங்களைப் பெறும் குடும்பங்கள் (126-430 யூரோக்கள் / 161-550 டாலர்கள்) ஆகும். மேற்கு
நாடுகளின் தரங்களோடு ஒப்பிடும்போது, இந்த அளவிற்கு வருமானம் பெறுபவர்கள் வறுமையில் இருப்பதாக
பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறது.
ரஷ்ய சமுதாயத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களும், இளைஞர்களும் பரம ஏழைப்
பிரிவுகளாக உள்ளனர். சமூக கணக்கெடுக்கும் நிதியம் (Social
Opinions Fund) ஏறத்தாழ இளைஞர்கள் தங்களது முதுமைக்
காலத்திற்காக சேமிப்பு எதுவும் செய்வதில்லை என்று கூறுகிறது (1 சதவீதம்தான் செய்யப்படுகிறது).
இளைஞர்களில் மூன்றில் இரு பகுதியினர் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு தங்களிடம் வசதியில்லை என்று
கூறியுள்ளனர். கிராமப் புறங்களில் அல்லது சிறிய நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் ஏழைகளாக
மாறுகின்ற மிகப்பெரிய ஆபத்தில் உள்ளனர். மேற்கு நாடுகளில் பெரும்பாலும் பெரிய நகரங்களில்தான் ஏழைகள்
செறிவாக (concentrate)
வாழ்கின்றனர். இந்த நிலையோடு ஒப்பிடும்போது கிராமங்களிலும் நகரங்களிலும் அடிக்கடி ஏழைகள் அதிகமாக
காணப்படுகின்றனர்.
குழந்தைகள் உள்ள குடும்பங்கள் குறிப்பாக இரண்டு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட
குழந்தைகள் உள்ள குடும்பங்கள் நிரந்தரமாக வறுமை ஆபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிப்
படிப்பை முடித்ததும் தொழிற்பயிற்சி வகுப்புக்களில் சேருகின்ற வாய்ப்புக்கள் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில்
வாழ்கின்றனர். சிறப்பு தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த
15 சதவீத குழந்தைகள் மட்டுமே சேர முடிகிறது. வறுமை நீடித்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணி ஒன்று
கல்வித்தரம் மிகக் குறைவாக இருப்பதுதான்.
ஏழைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். அல்லது மது வகைகளுக்கு எளிதில்
இலக்காகின்றனர். ஐரோப்பாவைவிட ரஷ்யாவில் காச நோய் சம்பவங்களுக்கு பத்து மடங்கு அவர்கள் அதிகமாக
இலக்காகின்றனர்.
1990 களின் துவக்கத்திலிருந்து 8 மில்லியன் ரஷ்ய மக்கள் வயது முதிர்ச்சிக்கு
முன்னரே இறந்துவிட்டதாக அறிவியல் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் இறப்பு விகிதம் ஒன்றரை
மடங்கு அதிகரித்துள்ளது. 2003 ல், ஒரு உயர்ந்த புள்ளியாக வாழ்கின்ற 1,000 பேரில் 16.4 பேர்
மடிந்துவிட்டனர்.
சராசரி ரஷ்யர் ஒருவர் தற்போது 58 ஆண்டுகள்தான் வாழமுடியும்.
அப்படியென்றால் திருமணமான பெண்கள் சராசரியாக 15 ஆண்டுகள் விதவைகளாக இருப்பர். இதற்குக் காரணம்
பெண்கள் வாழும் வயது அதிகம் என்பதோடு அவர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வதுமாகும்.
சோவியத் ஒன்றியத்தில் அன்றாட வாழ்வில் பாதகமான விளைவுகளை சந்தித்த
பொழுதிலும், இன்றைய சமகாலத்திய ரஷ்யர்களைவிட மிகப்பெரும்பாலான மக்களின் சமூக நிலவரம் அப்பொழுது
நன்றாகவே இருந்தன. இன்றைய தினம், வயது வந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஊதியம்
அவர்களது வாழ்க்கை தேவைகளை ஈடுகட்டுவதில் 27 சதவீத அளவிற்குதான் உள்ளது. ஒரு குழந்தைக்கு
தேவைப்படும் அவசிய செலவினங்களில் 3 சதவீதத்தை மட்டுமே ஈடுகட்டுகின்ற அளவிற்கு குழந்தைகளுக்கான
உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுவோரின் குறைந்தபட்ச செலவினங்களில் 46 சதவீதத்தை
மட்டுமே ஈடுகட்டுகின்ற அளவிற்குத்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சோவியத் ஒன்றியத்தில் வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்ச
நுகர்வு தேவைகளுக்கும் ஒன்றரை மடங்கு அதிகமாகும். எனவே, குறைந்தபட்ச நுகர்பொருள் தேவைகளை
ஈடுகட்டுவதற்கு ரஷ்யாவில் குறைந்தபட்ச ஊதியம் மும்மடங்காக உயர்த்தப்படவேண்டும்.
கல்வி முறை மற்றும் சுகாதார சேவைகளில் ஒரு உண்மையான சீர்திருத்தத்தை
கொண்டு வராமல் வறுமைக்கெதிரான ஒரு கடுமையான போராட்டம் நடத்துவது இயலாத காரியம். மக்களில்
பரந்த தட்டினருக்கு இவை இரண்டும் எளிதில் கிடைத்தாக வேண்டும். என்றாலும், இப்போது நிலைமை
எதிர்த்திசையில் சென்று கொண்டிருக்கிறது.
மிகப்பெரும் எண்ணிக்கையிலான ரஷ்ய மக்களுக்கு, மேலும் முதலாளித்துவ
''சீர்திருத்தங்களை'' முன்னெடுத்துச் செல்வது தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்தாது என்பது தெளிவாகிக்
கொண்டு வருகிறது.
பெரும் செல்வந்தர்களின் இறுதி வண்ணங்கள்
இன்னொரு ரஷ்யா உள்ளது. சூக்கோட்கா (Chukotka
- அலாஸ்காவின் பெர்ரிங் வளைகுடாவிற்கு குறுக்கேயுள்ள பகுதி)
தொலைதூர பிராந்தியத்தின் கவர்னரான ரோமன் ஆப்ராம்விச் (Roman
Abramovich) இந்த அவதாரங்களின் பிரதிநிதியாகவும்,
ரஷ்யாவின் எண்ணெய் பெருநிறுவனமான Sibneft-ல்
தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டி வரும் உரிமையாளருமாக உள்ளார். இப்போது அவர் பிரிட்டனில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். அங்கு மிகப்பெரிய பணக்காரராக கருதப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டனின்
மிகப்பிரபலமான கால்பந்து கிளப்பான Chelsea-வை
மிக மலைப்பூட்டும் தொகை கொடுத்து அவர் விலைக்கு வாங்கியுள்ளார்.
உலகிலேயே மிகப்பெரும் பில்லியனர்கள் அதிகமுள்ள மூன்றாவது நாடு ரஷ்யாவாகும்.
அது மிகப்பெரும் தொழில் நிறுவனங்களில் 13 வது வரிசையில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, ரஷ்ய பில்லியனர்கள் ரஷ்ய பெருந்தொழில்
நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பில் பாதியை தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கின்றனர். இவற்றை ஒப்பு
நோக்கும் போது, அமெரிக்காவில் இந்தத் தொகை 6 சதவீதம்தான்.
ரஷ்யாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் மிகப்பெரும் பங்குகள் இந்த மிக சிறிய சமூக
தட்டினரிடம்தான் உள்ளது. 2003 ல் உலக வங்கி செய்திருந்த மதிப்பீட்டின்படி, ரஷ்யாவின் 23 பெரு வர்த்தகக்
குழுக்கள் அனைத்து ரஷ்ய தொழில்துறை உற்பத்தியில் 57 சதவீதத்தை தங்களுக்கு சொந்தமாக்கி
கொண்டிருக்கின்றன.
Forbes சஞ்சிகை
வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ரஷ்யாவின் பொருளாதார உற்பத்தியளவு 458 பில்லியன் டாலர்கள் என்ற
மதிப்பீட்டின் அடிப்படையில் உலகின் வேறு எந்த நாட்டையும்விட ரஷ்யாவில் அதிக (36) பில்லியனர்கள் உள்ளனர்.
இந்த 36 மிகப்பெரிய ரஷ்ய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலர்கள் ஆகும். இது நாட்டின்
மொத்த பொருளாதார உற்பத்தியில் 24 சதவீதமாகும்.
மிகப்பெரும்பாலான ரஷ்ய பில்லியனர்களும், மில்லியனர்களும் (multimillionaires)
கச்சா பொருட்களையும், அவற்றோடு தொடர்புடைய தொழில்துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கின்றனர். இது ரஷ்யாவின் 100 பெரும் பணக்காரர்களில் 66 பேருக்கு பொருந்துமென்று
Forbes
பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மற்றைய 34 கோடீஸ்வரர்கள் தங்களது செல்வத்தை புதிய வர்த்தகத் துறைகள் மூலம்
---அதற்கெல்லாம் மேலாக தொலைபேசி, தகவல் தொடர்புகள், கட்டுமானம், உணவு உற்பத்தி மற்றும்
சில்லறை வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்துள்ளார்கள்.
சாதாரண குடிமக்கள் அல்லது ஓய்வுதியம் பெறுபவரோடு ஒப்பு நோக்கி பார்க்க
முடியாத அளவிற்கு தலைமை மேலாளர்களின் (top
managers) வருமானம் மிக அதிகமாக உள்ளது. இந்த
வகையில் நகரங்களில் தரப்படுகின்ற ஊதியங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிடுகின்ற
Gaseta.ru
தந்துள்ள தகவலின்படி, இந்த மேலாளர்கள் ஆண்டிற்கு 1 முதல் 3 மில்லியன்
டாலர்களை ஊதியமாக பெறுகின்றனர்.
Lukoil நிறுவனத் தலைவர் 1.5
மில்லியன் டாலர்களை வருமானமாக பெறுகிறார். வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டிவிடுமானால் அவருக்கு
2.2 மில்லியன் டாலர்கள் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் துணைத்தலைவர் ஆண்டிற்கு 800,000 டாலர்களைப்
பெறுகிறார். அவருக்கு 1.1 மில்லியன் டாலர் வரை போனஸ் வழங்கப்படுகிறது.
Yukos நிறுவனம்
அரசால் கலைக்கப்படும் வரை, இந்த நிறுவனத்திலும் இதே அளவிற்குத்தான் ஊதியங்கள் வழங்கப்பட்டன.
யுனைடெட் மெக்கானிகல் என்ஜினியரிங் வேர்க்ஸ் மற்றும்
Tyumen எண்ணெய்
நிறுவனம் போன்ற பெருந்தொழில் நிறுவனங்களில் உள்ள நிர்வாகிகளுக்கான அடிப்படை ஊதியம் 500,000
டாலர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையாகும்.
Basis Element அலுமினிய நிறுவன தலைவர்
Oleg Deripaska,
2001 ல் காக்காசியா சைபீரியா குடியரசில் அவர் பெற்ற வருமானத்திற்கு 294 மில்லியன் டாலர்களை வரியாக
செலுத்தியிருக்கிறார். குடியரசின் மொத்த வருமானத்தில் 10 சதவீதம் அவரது ஊதியமாகும்.
சில நேரங்களில் அவர்களை ''புதிய ரஷ்யர்கள்'' என்றழைக்கிறார்கள். அவர்கள்
அடிக்கடி வெளிநாடுகளில்தான் வாழ்கின்றனர். அவர்களை மிகப்பெரும் செலவான ஓட்டல்கள் கிளப்புகள் மற்றும்
உணவு விடுதியில்தான் காண முடியும். அவர்களுக்கு பந்தயக் குதிரைகளும், படகுகளும், மாளிகைகளும் சொந்தமாக
இருக்கின்றன. ஒவ்வொரு பில்லியனரும் தனக்கென்று ஒரு உல்லாசப் படகையும், விமானத்தையும் வைத்திருக்கிறார்.
அவர்கள் குறிப்பாக அதிக மதிப்பிலான அரும்பொருட்களையும், நகைகளையும், ஐரோப்பாவின் தலைநகர்களில் மிக
அதிக மதிப்புள்ள சொத்துக்களையும் வாங்குகிறார்கள். அவர்களது கவனத்தை சிறப்பாக ஈர்ப்பது லண்டன்
நகரமாகும்.
லண்டன் சொத்துச் சந்தையில் முதலீடு செய்துள்ள அனைத்து வெளிநாட்டவர்களிலும்
மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்யர்கள் ஆவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ரஷ்யர்களுக்கு வழங்கப்பட்ட
பிரிட்டிஷ் விசாக்களின் எண்ணிக்கை 8 மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது லண்டனில் வாழ்கின்ற 2,50,000
ரஷ்யர்களில் 700 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ரஷ்யாவின் புதுப்பணக்காரர்கள் (nouveaux
riches) தங்களது மிகவும் ஊதாரிச் செலவுகளை வெளிச்சம்
போட்டுக்காட்டுவது வாடிக்கையாக உள்ளன. பிரான்சின் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைத் தொடரிலுள்ள செல்வந்த
தட்டினர் பனிச்சறுக்கு விளையாட்டு நடத்தும்
Courchevel சுற்றுலாத் தளத்தில் 20,000 ரஷ்யர்கள்
''சொகுசு வாழ்வில் மூழ்கித் திளைத்தார்கள், குடித்தார்கள், உணவருந்தினார்கள்'' கடைப் பகுதியில் தங்களுக்கு
வேண்டிய துணிகளை வாங்கினார்கள் என்று அண்மையில் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரைபுன் செய்தி வெளியிட்டது.
அங்குள்ள 4 நட்சத்திர ஓட்டல்களில் ஒரு இரவு தங்குவதற்கு 550 லிருந்து 1,240 யூரோக்கள் வரை (704
முதல் 1600 டாலர்கள் கட்டணமாகும்) செலவாகும். அங்கு ஒரு போத்தல் ஒயின் விலை
1,750
யூரோவாகும் (2.239 டாலர்கள்). அங்கு திறக்கப்பட்டுள்ள புதிய ஓட்டலான
Byblos des Neiges
ல் உள்ள அறை 220 சதுர மீட்டர்களைக் கொண்டது. இதில் தங்க ஒரு இரவுக்
கட்டணம் மட்டும் 6,500
யூரோவாகும் (8,318 டாலர்கள்).
அந்தப் பகுதிக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அலைபோல் வந்து குவிந்து கொண்டிருப்பதால்,
அதைச் சமாளிப்பதற்கு ரஷ்ய பனிச்சறுக்கு விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக இண்டர்நேஷனல்
ஹெரால்ட் டிரைபுன் எழுதியுள்ளது. அங்கு எல்லா இடங்களிலும் ரஷ்ய விளம்பரங்கள் காணப்படுகின்றன. ''இது
எங்களுக்கு மிகவும் வியப்பூட்டும் வர்த்தகம்'' என்று ஒரு உள்ளூர் நான்கு நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் இதுபற்றி
குறிப்பிட்டார்.
புட்டின் அரசாங்கத்தினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ''தேசிய ஐக்கிய'' பிரார்த்தனையில்
அமைந்திருக்கிற பின்னணியின் உண்மை இதுதான். எனவே, சாதாரண ரஷ்ய மக்கள் தங்களது அதிருப்தியை மிகப்பெருமளவில்
எடுத்துக்காட்டிக் கொண்டு வருவது அதிகரிப்பதும், தங்களது நிலவரம் மோசமடைவதை கண்டனம் செய்து வருவதிலும்
வியப்படைவதற்கு எதுவுமில்லை. ரஷ்யாவில் பெருகிவரும் சமூக பிரச்சனைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வும்
இல்லாத சூழ்நிலைகளில், இந்தக் கண்டனங்கள் நீடிப்பதும் தீவிரமடைவதும் தவிர்க்க முடியாது.
Top of page
|