World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Leipzig: "industrial beacon" and growing poverty

Snapshot of an east German metropolis

லைப்சிக்: ''தொழிற்துறை கலங்கரை விளக்கமும்'' பெருகிவரும் வறுமையும்

கிழக்கு ஜேர்மன் நகர்ப்புறத்தின் ஒரு கணப்பொழுதுக் காட்சி

By Ulrich Rippert and Florian Linden
16 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் அரசாங்கத்தின் Hartz-IV சமூக நல வெட்டுக்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சக்சோனி மாகாணத்திலுள்ள கிழக்கு ஜேர்மனியின் பிரதான நகரமான லைப்சிக்கில் மிகப்பெரிய கண்டனப்பேரணிகள் சில நடந்துள்ளன. 1989-ல் இலையுதிர்காலத்தில் அந்த நகரத்தின் Nikolai மாதா கோயில் பகுதியில் இருந்துதான் கிழக்கு ஜேர்மன் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான வாராந்திர எதிர்ப்புப்பேரணிகள் தொடங்கின, பேர்லின் தடுப்புச்சுவர் சிதைக்கப்பட்டு இரு ஜேர்மனிகளும் இணைவதற்கு முன்னர் இந்த வார பேரணிகள் நடைபெற்றன, அதற்கு இணையாக இப்போது முறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்போது, ஏறத்தாழ 15- ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நகரம் மிகக்கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. நகரின் மையப்பகுதி தூய்மையாக்கப்பட்டிருக்கிறது. பழைய காலத்து மாளிகைகளுக்கு அருகில் புதிய வர்த்தக நிறுவனங்களும், அலுவலக கட்டடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பழைய காலத்து மாளிகைகள் அந்த நகரம் நிறுவப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை Johann Sebastian Bach தோமஸ் சர்ச்சின் மதபோதகராகவும் Johann Wolfgang von Goethe, லைப்சிக் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தை நினைவுபடுத்துகின்ற வகையில் அந்தப் பழைய காலத்து கட்டடங்கள் உள்ளன. மத்திய ரயில் நிலையம் மூன்றடுக்கு வர்த்தக மையமாக மாற்றப்பட்டுவிட்டது, அதில் நீரூற்றுக்களும், ஓய்வு எடுத்துக்கொள்ளும் பகுதிகளும் அடங்கியுள்ளன.

லைப்சிக் நகர நிர்வாகம் அதை "கிழக்குப்பகுதியின் பொருளாதார மீட்சி" யின் சின்னம் என்று சித்தரித்துக்காட்டுகிறது. "புதிய, முன்மாதிரியை ஏற்படுத்தும் தொழில்கள்" பற்றி பளபளப்பான கையேடுகள் வெளியிடப்பட்டு அவை லைப்சிக்கின் சிறப்பிற்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, புதிய Porsche மற்றும் BMW கார் தொழிற்சாலைகள் "தொழிற்துறை கலங்கரை விளக்கங்கள்" என்று பாராட்டப்படுகின்றன.

என்றாலும் ஒரு சில டிராம் ஸ்டேஷன்களுக்கப்பால் அந்தப்பகுதியின் சூழ்நிலைகளே திடீரென்று மாறிக்காணப்படுகின்றன, பாழாகிக் கிடக்கும் வீடுகள், தாறுமாறான வராண்டாக்கள் புறக்கணிக்கப்பட்ட முற்றங்களாகவே காணப்படுகின்றன. இங்கே வறுமையும், சமுதாயத்தின் தேவைகளும் நம் முன்னே காட்சி தருகின்றன. மூடப்பட்டுவிட்ட அடைக்கப்பட்டுக்கிடக்கும் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை பேர்லின் சுவர் நீக்கப்பட்டபின் எவ்வளவு பேர் சுதந்திரமாக வாழ்வதற்கு முயன்று «தாற்றுவிட்டார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

வீட்டுவசதி பிளாக்குகள் முழுவதுமே காலியாகக்கிடக்கிறது. ஸ்ராலினிச ஆட்சி முடிந்தபின்னர் உழைக்கும் பருவத்தில் இருந்த 100,000 நகரவாசிகள் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், ஏறத்தாழ 20 சதவீதத்தினர் மேற்கு ஜேர்மனியில் சென்று குடியேறிவிட்டனர். லைப்சிக்கில் அதிகாரபூர்வமாக வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20- சதவீதமாகும். நகரத்தின் சில பகுதிகளில் வேலையில்லாதிருப்போரின் எண்ணிக்கை 30- சதவீதத்தையும் எளிதாக தாண்டிவிடும் பல பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு கீழேயான ஒவ்வொரு இரண்டாவது மனிதருமே, வேலையில்லாதிருக்கிறார்கள்.

கிழக்கு ஜேர்மனி முழுவதிலும் ஒட்டுமொத்த வேலையில்லாத் திண்டாட்ட அளவு மேற்கு ஜேர்மனியை விட இரண்டு மடங்காக இருந்தாலும் லைப்சிக்கில் நகரில் அந்த சராசரியையும்விட அதிகமாக வேலையில்லாதவர்கள் தொகை உள்ளது. நகரத்தில் மிகப்பெரும் தொகையினர் வீடற்றவர்கள், போதைப்பொருட்கள் பழக்கமுள்ளவர்கள், சமூகநல உதவித்தொகைகளை பெறுபவர்கள்.

வேலையற்றோருக்கு உதவும் நிலையத்திற்கு விஜயம்

''வேலையில்லாதிருப்போர் இறுதியாக ஒரு வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதற்காக Hartz-IV நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் Wolfgang Clement- கூறியிருப்பதுதான், இங்குள்ள மக்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. இந்த மனிதர் இங்குள்ள மக்கள் மிகத்தீவிரமாக வேலை தேடி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ளவில்லை. அப்படி வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.''

இந்த வார்த்தைகளோடு தனது அலுவலகத்தில் கிரிஸ்டியான் லாம்ஸ் எங்களை வரவேற்றார்.

லைப்சிக் வேலையற்றோர் நிலைய (LEZ) தலைவராக 51- வயதான அவர் பணியாற்றி வருகிறார். வேலையில்லாதிருப்போர்களே, சொந்த முயற்சியில் நடத்துகின்ற அலுவலகமல்ல அது. ஆனால் வாழ்க்கைத் தொழில்சார்ந்தவரை அமர்த்தும் மற்றும் ஆதரிக்கும் ஏஜென்சியாகும். பல்வேறு வட்டாரங்கள் நிதியளித்து இந்த LEZ- நடத்தப்படுகிறது. ஒரு டஜன் ஆலோசகர்கள் பணியாற்றுகின்றனர் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள் மேலும் கல்வி கற்பதற்கான திட்டங்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் கடன்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

ஒவ்வொரு நாளும் தான் தொடர்பு கொள்ளும் வேலையற்றவர்கள் பலரது ஆத்திரத்தையும் விரக்தியையும் கிரிஸ்டியன் லாம்ஸ் விளக்கினார். ''இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய அடிப்படை தகவல் எதுவும் பேர்லினில் உள்ள அமைச்சகத்திற்கும், அதிபரின் அலுவலகத்திற்கும் கிடைக்கவில்லையென்று நான் நம்புகிறேன். இந்த கட்டத்திற்குள் நுழைகின்ற பலருக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை அவர்கள் முற்றிலுமாக பாதுகாப்பற்றநிலையில் உள்ளனர். அது தவிர அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். அரசாங்கம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் அதிக வேவைவாய்ப்பும், சமூக நீதியும் கிடைக்குமென்று உறுதியளிப்பதோடு மட்டுமல்லாமல், ஸ்தூலமாக அறிக்கைகளையும் வெளியிடுகிறார்கள்.

''கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் உங்களது ஆயுள் காப்பீட்டையும், முதிய வயது காப்பீட்டையும் நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டுமென்று திரும்பத்திரும்ப வலியுறுத்தி கூறப்பட்டு வந்தது. பலர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திட்டங்களில் சேர்ந்தார்கள்..... இப்போது? இப்போது இந்த அரசாங்கம் அத்தகைய இன்சூரன்ஸ் பாலிசிகளை நிதி சொத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. அவற்றை செலுத்தி முடிக்க வேண்டும் மற்றும் அவை முழுவதையும் பயன்படுத்திக்கொண்டுவிட்ட பின்னர்தான் வேலையில்லாலத் திண்டாட்ட உதவித்திட்டம் இரண்டின்படி ஒரு சென்ட் உங்களுக்கு உதவி கிடைக்கும். இது மிக ஆழமாகப் பார்த்தால் நியாயமற்றது'' (2005- ஜனவரி 1-முதல் செயல்படத்துவங்கும், வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகை திட்டத்திற்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது).

இந்த மாற்றங்கள் உண்மையிலேயே செய்யப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்காக சில நேரங்களில் தனது அலுவலகத்திற்கு மக்கள் வந்து கொண்டிருப்பதாக லாம்ஸ் தெரிவித்தார். அவர்கள் அதை நம்ப முடியவில்லை. ''ஒவ்வொரு திங்கட்கிழமையும் தெருக்களில் நடைபெறும் ஆவேசமான எதிர்ப்புப்பேரணிகளை மற்றும் கடன்கள் பற்றிய ஆலோசனைகள் குறித்து கண்ணீர் சிந்துவதை மட்டும் நான் பார்க்கவில்லை. மக்களிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் நடத்தும்போது அவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதை அமைதியாக கண்டனம் தெரிவிப்பதை காணமுடிகிறது'' என்றும் கூறினார்.

வேலையில்லாத் திண்டாட்ட உதவி இரண்டு (II) திட்டத்தின்கீழ் உதவி பெறுவோர் தங்களது மாடிக்குடியிருப்புக்களில் இருந்து சிறிய வீடுகளுக்குச்செல்ல நிர்பந்திக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு லாம்ஸ் அளித்த விளக்கம்: ''இந்த சட்டம் தொடர்பான பல விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தனித்தனி நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது. சில நேரங்களில் ஆலோசகர்களுக்குமே பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. முழுமைபெறாத ஒரு திட்டத்தை அமைச்சர் Clement கொடூரமான பலாத்காரத்தின்மூலம் செயற்படுத்த விரும்புவது சமூக விரோத மற்றும் சரியான சிந்தனையில்லாமல் நிலவரம் முழுவதையும் படுமோசமாக்கி விடுகிறது.

''ஏற்கனவே வீட்டுவசதி தொடர்பாக திட்டவட்டமான விதிமுறைகள் உள்ளன. எனக்கு சரியாக நினைவிருக்குமென்றால் தனியாக வாழ்வதற்கு அதிக பட்சம் 40-சதுர மீட்டரும், இருவர் வாழ்வதற்கு 60-சதுர மீட்டரும் இப்படியே உயர்ந்துகொண்டு போகிறது. இதனால் சிலர் தங்களது வீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் சிதைந்துவிட்ட குடும்பங்கள் அல்லது குடும்பம் பிரிந்த பின்னர் பெரிய மாடிக்குடியிருப்புக்களில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டுள்ள குடும்பங்களுக்கு இதனால் குறிப்பாக பாதிப்பு ஏற்படும். இத்ந விதிகளை செயல்படுத்தும் அதிகாரிதான் முடிவு செய்கிறார். இதில் எந்தளவிற்கு நீக்குப்போக்குடன் முடிவு செய்யவேண்டும் என்பது தெளிவாக இல்லை''

லைப்சிக்கில் நடைபெறும் திங்கள் பேரணிகள் பற்றி விளக்கிய லாம்ஸ் நடவடிக்கைகள் கூட்டணி: சமூக நீதி- சமூக சேவைகள் இரத்து எதிர்ப்பு- ஆகிய இயக்கங்கள் நடத்துகின்ற பேரணிகளில் தாம் கலந்துகொள்வதாக குறிப்பிட்டார். ஜூன் மாதத்திலேயே இத்தகைய பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 30-ல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. Hartz-IV சட்டங்களுக்கு எதிராக கண்டனங்களை தொடக்குவது இதன் நோக்கம். என்றாலும் புதிய சட்டம் பற்றிய விவரங்கள் வெளியில் தெரிந்ததும், மக்களிடையே ஆத்திர உணர்வு உருவாகி Magbeburg- ல் நடந்ததைப்போல் முன்கூட்டியே திங்கள் பேரணிகள் தொடங்கிவிட்டன. ''சம்பவங்கள் எங்களை கடந்து சென்றன", என்று லாம்ஸ் குறிப்பிட்டார்.

வீடற்றவர்களுக்கு ஆலோசனை அலுவலகத்தில்.......

Gohlis புறநகர் பகுதியில் LEZ-க்கு சில பிளாக்குகள் தள்ளி வீடற்றவர்களுக்கு ஒரு கஞ்சித்தொட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வீடற்றவர்கள் 50-முதல் 70- பேருக்கு சூடான உணவு வழங்கப்படுவதாக அந்த அலுவலகதில் பொறுப்பு வகிக்கும் ஊழியர் தெரிவித்தார். மேல் விவரம் எதையும் தெரிவிக்க தமக்கு அதிகாரமில்லை என்றும் குறிப்பிட்டார். அங்கீகாரம் பெறாத முறையில் பத்திரிகைகளுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடாது என்று அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது.

வீடற்றவர்களுக்கான மருந்தக Four walls, அதன் தலைமை அதிகாரி Constanze Klenk தனது துறை அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனைக்கு பின்னரே எங்களுடன் பேசினார். நகரத்தின் சமுதாய துயரங்கள் குறித்து மறைப்பதற்கு மாநில நிர்வாகம் பெரும்முயற்சி செய்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது. வீடற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த மருந்தகத்தில் 100- முதல் 150- பேர் வரைதான் வீடற்றவர்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நகரப்பகுதியை பொறுத்தவரை இது அதிகம். வீடற்ற பெரும்பாலோர் தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது மரத்தடியில் தங்குகின்றனர்.

வீடற்றவர்கள் அதிகரிப்பதற்கு காரணம் வாடகை பாக்கிதான். ஏற்கனவே வாடகை பாக்கி உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் Hartz-IV சட்டத்தின்கீழ் இந்த நிலை மோசமடையுமா? என்பது பற்றி எதுவும் சொல்ல Klenk விரும்பவில்லை. ''என்றாலும் நிலைமை திருந்தாது என்பது மட்டும் நிச்சயம்" என அவ்வம்மையார் ஒப்புக் கொண்டார். எங்கிருந்து வேலைகள் கிடைக்கும்? உண்மையிலேயே, இப்போது அதிக அளவில் ஊதியம் பெறும் பணிகளை 600,000- ஒரு யூரோ பணிகள் இடப்பெயர்ச்சி செய்யும் போது நிலைமை தொடர்ந்து மோசமடையவே செய்யும்''.

சில நேரங்களில் அமைச்சர் Clement காமிராக்கள் முன்தோன்றி தனது ஆத்திரமூட்டும் கருத்துக்களைக் கூறும்போது மிக நிதானமாக அவர் நிற்பது குறித்து சில நேரங்களில் Klenk வியப்படைவார். ''இந்த மனிதர் தான் என்ன செய்கிறோம், இங்குள்ள மக்களது கருத்து என்ன? என்பது குறித்து முற்றிலும் சிந்தனை எதுவுமில்லாது இருக்கிறார் என்ற அடிப்படையில் மட்டுமே நீங்கள் இதனை விளக்க முடியும். தனிமனித கண்ணியம் என்று ஒன்று உண்டு, அந்த தனி மனித கண்ணியம் அழிக்கப்படும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகள், கணக்கிட முடியாதவை என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அந்த நடவடிக்கைகளால் கவலைகள்தான் அதிகரித்திருக்கின்றன'' என்று Klenk குறிப்பிட்டார்.

Top of page