World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காVote tampering feared in US presidential race அமெரிக்க ஜனாதிபதி வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடக்குமென்ற அச்சம் By Peter Daniels அமெரிக்காவில் வாக்குப்பதிவிற்கு ஏழு வாரங்கள்தான் உள்ளநிலையில், புஷ் நிர்வாகம் மறு தேர்வுக்கான தேர்தல் பிரச்சாரத்தை சூழ உள்ள நிலைமையானது, மில்லியன் கணக்கான மக்கள் வாக்குப்பதிவு நேர்மையாக நடக்குமா மற்றும் தாங்கள் அளித்த வாக்கு முறையாக எண்ணி அறிவிக்கப்படுமா என்று நம்பிக்கை இழக்க இட்டுச்செல்லும் வகையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகள் மீதாக அதிகரித்த அளவில் குவிமையப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணுவது தொடர்பாக சந்தேகங்கள், சில பகுதிகளில் காலத்துக்கு ஒவ்வாத வாக்குப்பதிவு எந்திரங்களும் வேறு சில பகுதிகளில் மின்னணு எந்திர வாக்குப்பதிவு முறையும் அறிவிக்கப்பட்டிருப்பதால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை சேர்த்து சரிபார்ப்பது சம்மந்தமாக சந்தேகங்கள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பொது அமைப்பு 30- மாகாணங்களில் ஒரே நேரத்தில் 2-மில்லியன் வாக்குகளை எண்ணுகின்ற மத்திய கணக்கீட்டு எந்திரங்களை மோசடிகள் செய்வதற்கும், வாக்குச்சீட்டுக்களையே மோசடி செய்வதற்கும், சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. (''அமெரிக்க வாக்கு எண்ணிக்கை முறையில் பாதுகாப்பு கோளாறை நுகர்வோர் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது'' என்ற கட்டுரையைக் காண்க) 2000-ல் புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5-க்கு 4-என்ற பெரும்பான்மையில் எண்ணிக்கையில், ஜோர்ஜ் புஷ்ஷை ஜனாதிபதியாக நியமிக்கும் நிலை ஏற்பட்டது, இதனை அடுத்து நாடாளுமனறம் தவறான தலைப்பில்'' அமெரிக்காவிற்கு வாக்களிக்க உதவும் சட்டத்தை'' இயற்றியது. இந்த சட்டத்தில் கண்டுள்ள விதிமுறைகளின்படி மத்திய அரசாங்கம் மாகாணங்களில் வாக்குப்பதிவு எந்திர சாதனங்களை மேம்படுத்துவதற்கு நிது ஒதுக்கீடுகளை வழங்க வகை செய்தது. 2004- ஜூன் வரை மிகப்பெரும்பாலான மத்திய நிதி வழங்கப்படவில்லை என்றாலும் 2006வரை மாநிலங்கள் புதிய வாக்குப்பதிவு எந்திரங்களை பொருத்துவதற்கு அவகாசம் தேவைப்படும். இதன் விளைவாக, வாஷிங்டன் போஸ்ட்டில் வந்திருக்கும் ஒரு செய்தியின்படி 19- மாநிலங்களைச் சேர்ந்த 32 மில்லியன் வாக்காளர்கள் பழைய பஞ்ச் கார்டு முறைகளிலேயே வாக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த முறை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புளோரிடாவில் hanging Chads மோசடிகளுக்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு ஓகியோ-வைச் சேர்ந்த 72- சதவீத வாக்காளர்கள் பஞ்ச் கார்டு வாக்குச்சீட்டுக்களையே பயன்படுத்துவார்கள் நெருக்கமாக போட்டி நிலவும் இதர 8- மாநிலங்களிலும், தொடர்ந்து இதே நடைமுறையைத்தான் பயன்படுத்துவார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடும்போது மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தும் வாக்காளர்களின் எண்ணிக்கை சதவீதம் 2 மடங்கிற்கு மேலாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய கணினி முறையில் வாக்குப்பதிவு நடக்கும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மின்னனு வாக்குப்பதிவோடு ஒப்பு நோக்குகின்ற எந்தவிதமான பதிவேடும் இருக்கப்போவதில்லை. அமெரிக்கா முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திர சாதனங்களில் முறையான ரசீதுகள் தரப்படுகின்றன. ஆனால் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்களின் வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் தரும் பாதுகாப்பு எதுவுமில்லை. என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி வாக்குப்பதிவில் மோசடிகள் நடக்கலாம் வாக்குகள் மறைக்கப்படலாம் என்று அச்சங்கள் மிதமிஞ்சிய கற்பனையோ அல்லது வெறும் கற்பனையோ அல்ல. வாக்குப்பதிவு தினத்தில் வாக்காளர்களை தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு உடனடியாக வாக்களிக்கும் நடைமுறை உள்பட வாக்குப்பதிவில் மிக அடிப்படை ஜனநாயக நெறிமுறைகள் பற்றி ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை. 50- மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைமுறைகள் மிகக் குழப்படியான முறையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. கொலம்பியா, மாவட்டத்து நடைமுறைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சுயேட்சையான மற்றும் தொழிலாள வர்க்க வேட்பாளர்களை அங்கீகரிக்கும் நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மிகப்பெரும்பாலும் மூன்றாம் தரப்பு மற்றும் தொழிலாளர் வர்க்க வேட்பாளர்களுக்கு வாக்குப் பதிவில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெறுவது மிகவும் வேறுபடுகின்றன மற்றும் பெரும்பாலானவற்றில் தடைசெய்யப்படுவனவாக உள்ளன. அமெரிக்காவிற்கு உதவும் வாக்களிப்பு சட்டம் எந்த வகையிலும் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்துவதாகவோ, தற்காத்து நிற்பதாகவோ இல்லை. அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் மிக உயர் பணக்காரர்கள் ஆதிக்கம் இறுக்கமாக இருப்பதை தளர்த்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் McCain மற்றும் Feingold ஆகிய இரண்டு செனட்டர்கள் பிரச்சார நிதியளிப்பு "சீர்திருத்த" சட்டம் தொடர்பாக தெரிவித்த பிரபலமான யோசனைகள் எப்படி பயனற்றவையாக ஆகிவிட்டனவோ அதே நிலையில் தான் Help America Vote Act- உள்ளது. பெரு வர்த்தக அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள் இருந்தாலும், சீர்திருத்தம் என்று சொல்லக்கூடிய ஒவ்வொன்றும் புதிய ஓட்டைகளை உருவாக்குவதிலும் மற்றும் பணம்தான் அமெரிக்கத் தேர்தலை முடிவு செய்யும் என்ற "டாலர் ஜனநாயகத்தை" பராமரிப்பதற்கான புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பதிலும்தான் வெற்றிபெறுகிறது. எடுத்துக்காட்டாக, 2002 மசோதாவில், வாக்காளர்களை அடையாளம் காணும் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டன. குடியரசுக் கட்சிக்காரர்களுக்கும் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட ஒரு "சமரச" ஏற்பாட்டின்படி தபால் மூலம் முதல் தடவையாக தங்களது வாக்கை பதிவு செய்து கொள்ளும்போது அப்படி பதிவு செய்து கொள்வதற்கு ஏற்கத்தக்க அடையாள அட்டை அல்லது வாக்குபதிவின் போது அத்தகைய அடையாள அட்டை காட்டப்பட வேண்டும். மாநிலங்கள் கூடுதல் நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, புளோரிடாவும், Missouri மாநிலமும் எல்லா வாக்காளர்களும் வாக்குப்பதிவின் போது அடையாள அட்டைகளை காட்டவேண்டும். என்ற 17- மாநிலங்களில் அடங்கும். பல ஏழை வாக்காளர்களுக்கு ஒட்டுநர் உரிமமோ அல்லது பிற ஏற்கத்தக்க அடையாள சான்றுகளோ இல்லை. 2002 மசோதாவில் மற்றொரு பிரிவு வாக்குச்சாவடிக்கு முதல் தடவையாக வருகின்ற வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்காவிட்டாலும், தற்காலிக (டம்மி) வாக்குச்சீட்டுக்களை தருவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த வாக்குச்சீட்டின் தகுதிபற்றி அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றாலும் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்றொரு வாக்குச்சாவடியில் அல்லது தவறான காங்கிரஸ் மாவட்டத்தில் இத்தகைய வாக்குகள் பதிவுசெய்யப்பட்டால் பல மாநிலங்களில் அதை மொத்த வாக்கில் சேர்த்துக்கொள்ள அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். அதன் மூலம் அதிகாரிகள் தவறால் ஒரு வாக்காளரின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. அண்மையில் சிக்காக்கோ தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 5914- டம்மி வாக்குகளில் 10- சதவீதத்திற்கும் குறைவானவைதான் எண்ணப்பட்டன. தற்காலிக வாக்குரிமை கோருகின்ற வாக்காளர்கள் சிக்கலான வாக்குமூலங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை மாநிலங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. இதுபோன்ற வாக்கு மூலங்களை பதிவு செய்வதில் ஏராளமான எழுத்துப்பணிகள் இருப்பதால் அது ஒரு புதுவகை கல்வியறிவு சோதனையாகவே அமைந்துவிடுகிறது. இதன்மூலம் வாக்காளர்கள் வாக்குப்பதிவில் கலந்து கொள்வதிலிருந்து ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக இது போன்ற முயற்சிகளில், ஏழைமக்கள், சிறுபான்மை தொழிலாளர்கள் ஆகியோர் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் வாக்களிக்கும் உரிமையை, ஒடுக்குவதில் குடியரசுக்கட்சி முன்னோடியாக செயல்படுகிறது. என்றாலும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் எதிராக வேட்பாளர்களை நிறுத்துகின்ற சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் பிற கட்சிகளுக்கு வாக்குப்பதிவு உரிமை கிடைக்காத வகையில் முயற்சிகளை செய்வதில் ஜனநாயக உரிமைகள் மீது தங்களது சொந்தத்தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். வாக்குப்பதிவை அமுக்குவதற்கு எதிராக ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி மிக மிதமாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தாலும், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகள் திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக கோரிக்கை விடுக்க ஜனநாயகக் கட்சிக்காரர்கள் விரும்பவில்லை அல்லது கோரிக்கைவிடுக்க இயலவில்லை. குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பது அரசியல் அடிப்படையில் மிக பிரதானமான வாக்குரிமை பறிக்கும் ஒரு திட்டமாகும். அலபாமா குடியரசுக் கட்சி தலைவரான Marty Connors சென்ற ஆண்டு எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தெளிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ''என்னைப் பொறுத்தவரை மிக வெளிப்படையாக என்னால் முடிந்தவரை தெளிவாக சொல்வதென்றால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு (வாக்களிக்கும் உரிமைகள் மீட்டுதரப்படவேண்டும் என்பதை) நாங்கள் எதிர்க்கிறோம். ஏனெனில் அத்தகைய தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் குடியரசுக்கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதில்லை'' என்று அறிவித்தார். கடந்த 20- ஆண்டுகளில் சிறையிருப்போரின் எண்ணிக்கை மிகப்பெருமளவிற்கு உயந்திருப்பதால் இது சாதாரணமான சிறிய விவகாரமல்ல. 48- மாநிலங்கள் சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுக்கின்றன. இவற்றில் 33- மாநிலங்கள் பரோலில் வருபவர்களுக்கும், 29- மாநிலங்கள் நன்னடத்தைக்கான தகுதிகாண் பருவத்தில் இருப்பவர்களுக்கும், வாக்குரிமைகளை மறுத்து வருகின்றன. சிறைத் தண்டனை அனுபவித்து வெளியில் வந்துவிட்டவர்களுக்கும், தகுதி காண் பருவத்திலோ அல்லது பரோலிலோ இல்லாதவர்களுக்கும் வாக்குரிமைகளை 14- மாநிலங்கள் நிரந்தரமாக மறுத்து வருகின்றன. இப்படி வாக்குரிமை மறுக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை 4.7- மில்லியன் ஆகும். இந்த விதிகளின் காரணமாக ஆபிரிக்க - அமெரிக்க ஆடவர்களில் 13 சதவீதம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இந்த முயற்சிகள் -வாக்குரிமைகளை மறுப்பது - தென்மாநிலங்களில் பரவலாக நடைமுறையில் உள்ளது என்றாலும் பழைய அரசியற் கூட்டு மாநிலங்களில் இது எந்த வகையிலும் எல்லைக்குட்படுத்தப் பட்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஓகியோவில், சிறை சீர்திருத்த இயக்க நிலையம், மாநிலத்தின் மீது ஒரு வழக்கு தொடர்ந்தது. விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமைகளை மீட்டுத்தருவது தொடர்பாக மாநில தேர்தல் வாரியங்களுக்கு தவறான தகவல் தந்திருக்கும் நிலவரத்தை சரிக்கட்டுவதற்காக பெடரல் நீதிபதி கட்டளையிட வேண்டுமென்று வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் நடைமுறையில் பரிசோதனையிடப்பட்டபோது ஓகியோ மாகாணத்திலுள்ள 88- தேர்தல் வாரியங்களில் 21 வாரியங்கள் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் என்று கூறிக்கொண்டு பதிவு செய்ய வந்தவர்களுக்கு தவறான தகவல்களை தந்ததாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சில வாரியங்கள் தவறான முறையில் தண்டிக்கப்பட்டவர்கள் முதலில் பரோலை பூர்த்தி செய்திருக்க வேண்டுமென்று கூறின. இதர வாரியங்கள் தவறான முறையில், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்களளைக் கேட்டன. நடைபெறவிருக்கும் தேர்தலில் புளோரிடா பிரதானமாக கவனத்தைக் கவர்கிறது. 2000 தேர்தல் தொகுதி கல்லூரியில் (Electoral College) புஷ் மிகக்குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதில் அந்த மாநிலம் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறது. புளோரிடா மாநிலம் தனது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியல்களில் இருந்து தண்டிக்கப்பட்டவர்களை நீக்குவதற்கு அண்மையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இந்தக் கோடைகாலத் தொடக்கத்தில் சிவில் உரிமைக்குழுக்கள் அபாய மணி ஒலித்தன. புளோரிடாவின் கவர்னர் Jeb Bush ஜனாதிபதியின் சகோதரர் ஆவார். புளோரிடா மாநில தேர்தல் செயலாளர் Glenda Hood மேற்கொள்ளுகின்ற நடைமுறைகளால் Hispanic வாக்காளர்கள் விட்டுவிடுகிற நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடும். அதேவேளை, பல்லாயிரக்கணக்கான கறுப்பு இன வாக்களர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டது தொடர்பான பட்டியலி 2100- க்கு மேற்பட்ட வாக்காளர்கள் தவறாக பட்டியலிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களின் வாக்கு 3-க்கு 1- என்ற அளவில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. 2000- தேர்தலில், தேர்தலே களவாடப்படுவதற்கு தீர்ப்பளித்த படுமோசமான Katharine Haris- க்குப் பதிலாக கவர்னர் புஷ்- ஆல், மிஸ் Hood தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தனது அறியாமையால் அது நடந்துவிட்டதாக அப்போது Katharine Haris கூறினார். அந்தப் பட்டியல் கவனக்குறைவாக உருவாக்கப்பட்டுவிட்டதென்று கவர்னர் சொன்னார். சட்டத்தின்படி சிவில் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் வழக்கறிஞர்கள் குழுவும், இதர குழுக்களும் இன்னும், சந்தேகத்துடனேயே உள்ளன. இது சம்மந்தமாக கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர்கள் குழுவின் இயக்குநர் Barbara Arnwine, ''புளோரிடா, வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்யவிடாதபடி தடுப்பதில் உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். குற்றவாளிகள் பட்டியல் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்றுதான் நியூயோர்க் டைம்ஸ் பத்தி கட்டுரையாளர் Bob Herbert கூறியிருப்தைப் போல், ''வாக்குப்பதிவை அமுக்குவது தொடர்பான புளோரிடாவின் முடைநாற்றம் அதிகரித்துவருகிறது." புளோரிடா சட்ட அமலாக்கத்துறை டஜன்கணக்கான ஆயுதந்தாங்கிய மாநிலத்துருப்புக்களை அண்மை மாதங்களில் Orlando நகரிலுள்ள மூத்த கருப்பர் இன வாக்காளர் இல்லங்களுக்கு அனுப்பியது. அவர்கள் வாக்காளர் மோசடி தொடர்பாக புலன்விசாரணை நடதுதவதாக கூறப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்னர் நகர மேயர் தேர்தலில் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாதவர்களது வாக்குச்சீட்டுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கின்ற சாக்குப்போக்கில் வாக்காளர்களை மிரட்டுகின்ற நடவடிக்கை இது என்று Herbert சுட்டிக்காட்டுகிறார். ''அந்த அதிகாரிகள் ஆயுதங்களுடன் சாதாரண உடுப்பில் சென்றனர்" என்று ஹெர்பர்ட் கூறினார். "1950- களிலும்,1960-களிலும் தென் மாநிலங்களில் வாக்குப்பதிவில் கலந்துகொள்ள முயன்ற கருப்பர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான வேதனைகளை இன்னும் பசுமையாக நினைவில் வைத்துக்கொண்டிருக்கும், முதியவர்கள் வாக்குப்பதிவு தொடர்பாக தங்களது வீடுகளுக்கு விசாரணை அதிகாரிகள் ஆயுதங்களோடு வருகிறார்கள் என்றதும், உறைந்துவிட்டனர்'' என்று ஹெர்பர்ட் கூறியிருக்கிறார். ஹெர்பர்ட் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து எந்தக்குற்றச் சாட்டும் எழவேண்டிய அவசியமில்லை. பலவாக்காளர்கள் ஏற்கனவே தங்களது கலவர உணர்வை வெளிப்படுத்திவிட்டனர். வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாதவர்களது வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்துவது தொடர்பாக இது போன்ற திடீர் சோதனைகள் நடத்தப்படுவது குறித்து வாக்காளர்கள் கலவரமடைந்துள்ளனர். நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வாக்குப்பதிவு அமுக்கப்படலாம் என்ற அடையாளங்கள் 2000- தேர்தலில் நடைபெற்ற மோசடிகள் தனித்தன்மை கொண்டவைகள் அல்லது விதிவிலக்காக நடைபெற்ற சம்பவங்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக இல்லை. அமெரிக்க அரசியல் கட்டுக்கோப்பில் வாக்குரிமைகள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் தொற்றுநோய் போல் நீடித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திர தேர்தல்களின் சிறப்பு குறித்து இரண்டு பெரிய கட்சிகளும், அரசாங்கமும் மேடை மீது ஏறி நீட்டி முழக்கினாலும், தேர்தல் நேரத்தில் மோசடிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் வெளிசூலா நாட்டிலிருந்து திரும்பியுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அந்த நாட்டில் வாக்குப்பதிவு நேர்மையாக நடப்பதாகவும் அமெரிக்காவில் அந்த நாட்டைவிட மிகவும் தரம் தாழ்ந்த முறையில் தான் வாக்குப்பதிவு நடக்கிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்டின் ஜனாதிபதி Hugo Chavez- ஐ பதவியிலிருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது நியாயமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்தக்கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை ஜிம்மி கார்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் பார்வையாளர்கள் வெனிசூலா நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் அளவிற்கு பணியாற்ற மறுத்து விடுவார்கள். அப்படி நடக்காமல் தடுக்க அமெரிக்க தேர்தல் நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று ஜிம்மி கார்ட்டர் ஆலோசனை கூறியுள்ளார். தற்போது வாக்களிப்பதற்கான உரிமை மீது நடத்தப்படும் தாக்குதல்களை வரலாற்று சான்றுகளின் ஓளியில் தான் பார்க்கவேண்டும் அமெரிக்காவின் முன்னாள் அடிமைகளுக்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 15-வது திருத்தத்தின் மூலம் வாக்களிக்கும் உரிமை கிடைப்பதற்கு ஒரு உள்நாட்டுப்போர் தேவைப்பட்டது. இறுதியாக 19- வது அரசியல் சட்டத்திருத்தம் தான் மகளிருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. அதற்கு முன்னர் ஏறத்தாழ 100- ஆண்டுகள் மகளிர் வாக்குரிமைக்காக போராட்டம் நடைபெற்றது. தென்பகுதி கருப்பர் இன மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பது முடிவுக்கு வரும் முன்னர் வாக்குரிமை, வரி விதிப்புக்கள் மற்றும் அடிப்படை கல்விச்சோதனைகள் மற்றும் பிற தடைக்கற்களை தாண்டிவருவதற்கு மிகப்பெருமளவில் தொழிலாளர்கள் மற்றும் சிவில் உரிமை இயக்கங்கள் போராடி வந்தன. என்றாலும், கடந்த 25- ஆண்டுகளாக முந்திய சீர்திருத்தங்களை தள்ளுபடி செய்கிற வகையில் தாக்குதல்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதர ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு எப்படி ஆளும் கட்டுக்கோப்பில் எந்தத்தரப்பினரும் இல்லையோ, அதேபோன்று வாக்களிக்கும் அடிப்படை உரிமையை தற்காத்து நிற்பதற்கும், ஆளும் வர்க்கத்தில் எந்தத்தரப்பும் இல்லை. அண்மைய பத்தாண்டுகளில் சமூக துருவமுனைப்படல்கள் மிகப்பெருமளவில் வளர்ந்து கொண்டு போவதால் ஆளும் வர்க்கத்தால் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இப்போது நடைபெறுகிற தேர்தல்களில் வாக்காளர்களில் பாதிப்பேர் தான் வாக்குப்பதிவில் கலந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு வெறுப்பின் உச்சாணிக்கே சென்று இரண்டு பெரிய கட்சிகளுக்கும், வாக்களிப்பை புறக்கணித்து நிற்கின்ற நிலையிலும் இரண்டு பெரிய கட்சிகளுமே ''இதுவும் பாதுகாப்பான நிலையல்ல'' என்று கருதி வாக்குச்சீட்டுக்களில் மோசடி செய்வது மற்றும் வாக்காளர்களை அமுக்குவது போன்ற தீவிரமான நடவடிக்கைகள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள் மீது இன்றையதினம் நடைபெற்று வருகின்ற இந்த புதிய தாக்குதல்களை முறியடிப்பதற்கு மிகப்பெருமளவில் அரசியல் போராட்டங்களை அது எடுக்கும், அந்தப் போராட்டங்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் தொடர்பான பொருந்தாத் தன்மையையும் சமத்துவமின்மையையும் வளர்க்கும் இலாப அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான தேவையை முன்வைக்கும். |