ஐரோப்பா
:
பிரான்ஸ்
French government encourages employers'
jobs blackmail
வேலைக்கு அமர்த்துபவர்கள் வேலை மிரட்டல் செய்வதை பிரெஞ்சு அரசாங்கம் ஊக்குவிக்கிறது
By Pierre Mabut
9 September 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
அண்மை வாரங்களில், பிரெஞ்சுக் கம்பெனிகள் தொழிலாளரின் வேலைகள் மற்றும்
வாழ்க்கைத் தரங்களின் மீது குறிப்பிடத்தக்க பல்வேறு தாக்குதல்களை தொடுத்துள்ளன. தொழிலதிபர்கள் இந்த வகையில்
கார் பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான
Bosch தொழிலாளர்களை 36- மணிநேரப்பணிக்கு 35- மணி நேர
ஊதியம் என்ற ஒப்பந்தத்தை செய்வதற்கு வெற்றிகரமாக சம்மதிக்கவைக்க முயற்சித்தது அல்லது அவர்கள் செக் குடியரசுக்கு
உற்பத்தியை மாற்றிவிட நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டது போன்ற, ஊதியவெட்டுக்களை திணிப்பதற்கு ஒரு வழிமுறையாக
வெளி நாடுகளுக்கு நிறுவனங்களை மாற்றுவது உள்பட அடங்கும்.
மற்றொரு நிறுவனமான
Snappon GDX Automotive நிறுவன பிரிவுகள் அனைத்தும்
24- மணி நேரத்தில் வேகமாக உற்பத்தியை துடைத்துக்கட்டிவிட்டு செக் குடியரசிற்கு மாற்றப்பட்டுள்ளன. இப்படி
ஒரு தொழிற்சாலையே மாற்றப்படுவதை CRS
கலவரத்தடுப்பு போலீசார் நேரடியாகக் கண்காணித்து கொண்டு நின்றனர். இரவோடு இரவாக 225 பேருக்கு
வேலை போய்விட்டது. Snappon
நிறுவனம் கார்பாகங்கள் தயாரிப்புக் கம்பெனி அமெரிக்காவின் ஜெனரல் கார்பரேஷன் குழுவின் துணை நிறுவனம்
ஆகும்.
இதற்கு முன்னர் ஜூலை 15-ல் அந்தக் கம்பெனி நிர்வாகம் இரவோடு இரவாக இயந்திர
சாதனங்களை அப்புறப்படுத்த முயன்றது, தொழிலாளர்கள் தடுப்பு அரண்களை உருவாக்கி மறியல் செய்ததால் அது
நடக்கவில்லை. என்றாலும் ஆகஸ்ட் 26-ல் ''இடையூறு எதுவுமின்றி வர்த்தகம் மற்றும் சொத்துரிமைகளை பாதுகாப்பதற்கான''
நீதிபதி தொழிலாளர்கள் வேலைநீக்கத்தை சட்டபூர்வமாக தொழிலாளர் குழு மூலம் எதிர்ப்பதற்கும்
கட்டளையிட்டார். ஆனால் உள்ளூர் தேசிய அரசு அதிகாரி
Snappon நிறுவனம்
தனது வர்த்தகம் முழுவதையும் செக் குடியரசிற்கு மாற்றுகின்ற வரையில் அந்தப் பிரச்சனையை கிடப்பில்
போட்டுவிட்டார்.
இந்த நிறுவனம் உற்பத்திச் செலவுகளை குறைக்கின்ற நோக்கத்தோடு (குறிப்பாக
தொழிலாளர் செலவினங்களை) தனது வாடிக்கையாளர்களான
PSA Peugeout போன்ற நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பாவின்
புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருவதால் அதற்கு அருகாமையில் இருக்க வேண்டும்
என்பதற்காகவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற பிராந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்
தோல்விகளால் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அரசியல் அடிப்படையில் பலவீனமடைந்துள்ளதால், அரசாங்கம்
வீண் ஜம்பத்திற்காக நாட்டின் ''சமூக ஒற்றுமை''' பற்றி கவலை தெரிவித்திருக்கிறது. உண்மையிலேயே, சிராக்
ஆட்சி பிரெஞ்சு வர்த்தகங்கள் பூகோளத்தில் மலிவு சாத்தியமுள்ள தொழிலாளரை உருவாக்குவதையும், பூகோள
சந்தை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் பொதுவாக ''போட்டி மிக்கதாக'' இருப்பதை முழுமையாக
ஆதரித்தும் வருகின்றது.
அது எப்படியிருந்தாலும், ''சமூக ஒற்றுமை'' கொள்கை கைவிடப்படுவதற்கு
பிரதமர் ஜோன் பியர்
ரஃப்ரன் (Jean-Pierre
Raffarin) வலதுசாரி அரசாங்கத்திற்கு பிரெஞ்சு
தொழிலதிபர்கள் கூட்டமைப்பிலிருந்து MEDEF
(Movement of French Enterprises) பெருகிவரும்
அழுத்தத்தின் கீழ் இருக்கிறது. அந்தக் கூட்டமைப்பின் தலைவரான
Ernest-Antoine Seillière
இந்த மாதம் நடைபெற்ற ஆண்டு பேரவைக்கூட்டத்தில் உரையாற்றும்போது,
சிராக் - ரஃபரனின் கொள்கைகளால் சமுதாயத்தில் சலுகைகள் பறிக்கப்பட்டவர்கள், இந்த அரசாங்கத்தின்
தன்மையின் போக்கால் பொது மக்கள் உதவி மிக குறைவாக பெற்றுவிட முடிகிறது என்று குறிப்பிட்டார்.
பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த இரண்டாண்டு
காலத்திற்கு மேலாக (சட்டப்பூர்வமான தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை) பரவலாக்கும் திட்டத்தை அரசாங்கம்
கைவிட்டது தொடர்பாக தொழிலதிபர் சங்கத்தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Figaro
சஞ்சிகையில் அண்மையில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு பேட்டியில்
Seillière
சமூக நலன் புரி அமைப்புக்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.
MEDEF, Raffarin அரசாங்கம்
வேலையில்லாத்திண்டாட்டத்தில் சிக்கித் தவிப்போர் மீது தாக்குதல் தொடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சிதெரிவித்தது,
ஆறு மாதங்களுக்குப் பின்னர் எந்த வேலை எங்கு கிடைத்தாலும், அதை ஒப்புக்கொள்ளாவிட்டால், வேலையில்லாத்
திண்டாட்ட உதவித்தொகை ஓரளவிற்கு அல்லது முழுமையாக வெட்டப்படும். இது சம்மந்தமாக
Baron Seillière, Figaro
பேட்டியில் மிகத்தெளிவாக அறிவித்திருக்கிறார். ''வேலையைக் காப்பாற்றிக்கொண்டு நீண்டநேரம் பணியாற்ற
சம்மதிக்க வேண்டுமே தவிர, 35- மணிநேரம் தான் பணியாற்றுவோம் என்று பிடிவாதமாக இருந்து வேலையை இழந்துவிடக்கூடாது''
என்று கூறியிருந்தார்.
அண்மையில் அரசாங்கம் ஒவ்வொரு தொழிற்சாலை மட்டத்திலும், 35 மணிநேர
வாரப்பணி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து திரும்ப பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வகைசெய்யும்,
தொழிலாளர் நல சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது, இதன்மூலம்
Bosch பாணியில்
இதர தொழிற்சாலைகளிலும் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு வகை செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்
போருக்குப் பின்னர் எந்த உள்ளூர் ஒப்பந்தமும் தேசிய தொழிலாளர் ஒப்பந்தத்தைவிட மோசமான
வேலைநிலைமைகளை உருவாக்கி விடக்கூடாது என்ற கொள்கைவழி நிலைநாட்டப்பட்டு வந்தது. முன்னாள் சமூகநல
மற்றும் தொழிலாளர் அமைச்சரும் இன்றைய கல்வியமைச்சருமான
François Fillon
தொழிலாளர் நெறிமுறைகளில் கொண்டுவந்த மாற்றங்கள் அவற்றை சீர்குலைப்பதாக அமைந்துவிட்ட''சமூக
ஒற்றுமை'' கொள்கை கீழறுக்கப்பட்டு வருகிறது.
MEDEF கூட்ட தொடக்கத்தில்
Bosch
கம்பெனி ஊதியவெட்டு ஒப்பந்தம் பற்றி வலியுறுத்திக்கூறிய
Seillière, ''பொருளாதார அவசியத்தின் அடிப்படையில்
சமுதாய நலன்கள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதாக'' குறிப்பிட்டார்.
இந்த முறை ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கோழிப்பண்ணை நடத்துகின்ற
Doux
நிறுவனத்திடமிருந்து மற்றொரு பேரிடி தொழிலாளர்களுக்கு வந்திருக்கிறது. ஆகஸ்ட் 26-ல், அந்த நிறுவனம்
வாராந்திர குறைந்த நேர பணிகளை கைவிடுவதாகவும், சராசரி ஊதியத்தை வெட்டுவதாகவும், அறிவித்ததாக
தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ஒரு மணிநேரத்திற்கு 7.61- யூரோக்கள் வீதம் சட்டபூர்வமான குறைந்த பட்ச
ஊதியம் பெற்றுவருகின்ற அந்த கோழிப்பண்ணை தொழிலாளர்கள் ஆண்டிற்கு 500 யூரோக்கள் வரை ஊதிய வெட்டிற்கு
இலக்காக போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இத்தாலிய மின்சாரக் கண்ணாடி இன்சுலேட்டர்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தின்
துணை நிறுவனமான பிரெஞ்சு Sediver
கம்பெனி உற்பத்திப்பிரிவுகளை தொழிலாளர்கள் ஊதிய வெட்டிற்கு சம்மதிக்காவிட்டால், சீனாவிலும், பிரேசிலிலும்
உள்ள தனது துணை நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்போவதாக அறிவித்திருக்கிறது. 25-முதல் 30- சதவீத ஊதிய
வெட்டிற்கு தொழிலாளர்கள் சம்மதித்தால், 294 வேலைகளில் 150 தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை
காப்பாற்ற முடியுமென்று அந்தக் கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. அப்படியே தொழிலாளர்கள் ஊதிய வெட்டிற்கு
சம்மதித்தாலும், அந்தத் தொழிற்சாலைகள் இரண்டாண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள்
நம்புகின்றனர்.
பிரான்சின் கிழக்கு பகுதியில், எலக்ட்ரானிக் உபகரணங்களை தயாரிக்கும் அமெரிக்க
நிறுவனமான Vishay
தனது Colmar
தொழிற்சாலையை மூடிவிட முடிவு செய்திருக்கிறது, இதன் மூலம் 292- தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்
அந்த நிறுவனம் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளதில் ''போட்டியிடும் செயற்பாட்டை பாதுகாப்பதற்காக
diodes-க்கள்
தயாரிக்கும் பிரிவுகள் சீனாவிற்கும், ஹாங்கேரிக்கும் மாற்றப்படுகிறது மற்றும்
Colmar
தொழிற்சாலை மூடப்படும் செயல் நடந்துகொண்டுள்ளது'' என்று அறிவித்திருக்கிறது.
Colmar -ல் உள்ள
Vishay பிரிவு
கார்கள், கம்பியூட்டர்கள், மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோனிக் பொருட்களை தயாரிக்கின்ற
நிறுவனங்கள் பயன்படுத்துகின்ற டிரான்சிஸ்டர்கள் மற்றும்
diode-களை தயாரிக்கும் சிறப்பு நிறுவனமாகும்.
இப்படி மாற்றப்படுவதற்கான காரணத்தையும், இந்த நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் விளக்கியுள்ளது,
''சிறப்பான diode-கள்
பிரிவின் சந்தை தன்மை குறித்து எதிர்கொள்வது, எலக்ட்ரானிக் உற்பத்தி மற்றும் அவசியமான சப்ளைகளை
பெருமளவில் உற்பத்தி குறைந்த நாடுகளான, சிறப்பாக ஆசிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதால், சில்லறை
விலைகள் குறைந்து கொண்டு வருகின்றன. 2005- முதல் வளர்ச்சி மிகக் கடுமையாக வீழ்ச்சியடையும்'' என்று
விளக்கியுள்ளது.
செக் குடியரசிலுள்ள, தொழிற்சாலையில் தங்களைவிட ஊதியம் 40 சதவீதம் குறைவாக
வழங்கப்பட்டு வருவதாக Vishay
தொழிலாளர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்தத் தொழிற்சாலை அமெரிக்காவில்
ITT நிறுவனத்தினால்
Colmar-ல்
1960-பதுகளில் துவக்கப்பட்டது, அப்போது 600- பேர் பணியாற்றிவந்தனர். அப்போது அமெரிக்க செமி
கண்டக்டர்கள் நிறுவனம் Vishay
நிறுவனத்தோடு பல ஆண்டுகளுக்கு முன்னர் இணைக்கப்பட்ட வரைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக்
குறைந்து கொண்டு வருகிறது.
பிரான்சில் தேசிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் 9.8 சதவீதமாக உள்ளது.
(இளைஞர்கள் 20- சதவீதம்பேர்) நீண்டகால அடிப்படையில் வேலையில்லாத் திண்டாட்டம் படிப்படியாக உயர்ந்து
கொண்டு வருகிறது, வாரத்திற்கு 35-மணிநேர பணி என்கிற சட்டத்தில் எந்தவிதமான வளைந்து கொடுப்புமில்லாமல்
புறகணிக்கப்போவதாக தொழிற்சங்கங்கள் கொள்கை அடிப்படையில் பாவனை காட்டி வருகின்றன. என்றாலும்
நடைமுறையில் ஏற்கனவே சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது, கம்பெனிகள் தொழிற்சாலைகள்
மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி உடன்படிக்கைகளை செய்துகொள்ள முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவது மற்றும் அத்துடன் பூகோளமயத்தினால்
ஏற்படுகின்ற பரந்த தாக்கமும் சேர்ந்துகொண்டு தேசிய அடிப்படையில் அமைந்த தொழிற்சங்கங்கள் கம்பனிகளது
அச்சுறுத்தலையும், வேறுநாடுகளுக்கு உற்பத்தியை மாற்றிவிடுவதாக கூறுகின்ற அச்சுறுத்தலின் விளைவையும் எதிர்கொண்டுள்ளன.
அரசாங்கத்துடன் நேரடியாக ஒத்துழைத்து அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் வேலைவாய்ப்பு, தொடர்பான
பேச்சுவார்த்தைகளில் புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது என்று தொழிற்சங்கங்கள் கோரிவருகின்றன.
அரசாங்கத்துடன் இந்த வாரத்தின் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த பின்னர்
பெரும்பாலும் நடுத்தர மேலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய
CGC மற்றும்
CFTC தொழிற்சங்கங்கள்,
கம்பனிகள் தொழிற்துறை ஒப்பந்தங்களை மீறி தொழிற்துறை மட்டத்தில் ஒற்றுமையை சிதைக்கின்ற வகையில் நேரடியாக
பேச்சுவார்த்தை நடத்திவருவதாக புகார் கூறின. ஒவ்வொரு தொழிற்பிரிவு வாரியாக அரசாங்கம், ''சரிப்படுத்தும்''
பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கத்திலுள்ள
CGT தொழிற்சங்கத்
தலைவர் Bernard Thibault
அவரச முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென்றும், தொழிற்சாலைகள்
வேறுநாடுகளுக்கு மாற்றப்படுவதற்கு எதிராக திட்டம் தீட்டப்பட வேண்டுமென்றும்,'' என்று கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில், தொழிலதிபர்களது தலைவரான
Seillière, Ruffain
ஆட்சி கடந்த மூன்றாண்டுகளாக தொழிலதிபர்களுக்கு எதுவும் செய்யவில்லை
என்று வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து அரசாங்கம் கம்பனி இலாபத்தில் 900- மில்லியன் யூரோக்கள் அளவிற்கு
வரிவெட்டு செய்ய சம்மதித்திருப்பதுடன் 2005-ல் இலாபத்தின்மீது விதிக்கப்படும் 3-சதவீத உபரி வரியும் இரத்து
செய்யப்படுமென்று உறுதியளித்துள்ளது.
பிரான்சில் தொழிலதிபர்கள் நடத்திவருகின்ற வேலை மிரட்டல்கள் தொழிலாளர் உரிமை
தாக்குதல் முன்னெடுப்பு ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஜேர்மனியிலும், ஐரோப்பிய நாடுகளிலும், உலகம் முழுவதிலும்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வேறு நாட்டிற்கு மாற்றும் அச்சுறுத்தலின் பின்னணியின் சர்வதேச உண்மையை தொழிற்சங்க
தலைவர்கள் புறக்கணிக்கின்றனர். உற்பத்திகள் பூகோளமயமாக்கப்பட்ட பின்னர் முதலீடுகள் அதிக இலாபம்
கிடைக்கும் குறைந்த ஊதிய தொழிலாளர்கள் நிறைந்திருக்கிற நாடுகளைத்தான் நாடிச்செல்லும். அவர்கள் இந்த பிரச்சனைக்கு
சில தேசிய தீர்வு கண்டுபிடிக்கமுடியும் என்பது பாசாங்கானதும் மற்றும் தொழிலாளர் சமூக நலனை தேசிய-அரசுக்குள்
உறுதி செய்வது என்பது சொற் சிலம்பமும் ஆகும்.
Top of page |