World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Musharraf imposes former Citibank official as Pakistan's prime minister

முஷாரஃப் சிட்டி வங்கி முன்னாள் அதிகாரியை பாக்கிஸ்தான் பிரதமராக அமர்த்தினார்

By Vilani Peiris and Keith Jones
3 September 2004

Back to screen version

அமெரிக்க ஆதரவு பெற்ற பாக்கிதானின் இராணுவ சக்திவாய்ந்தவரும், ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான பர்வேஸ் முஷாரஃப் நியூயோர்க் சிட்டிவங்கி முன்னாள் தலைமை அதிகாரி சவுகத் அஜீஸை நாட்டின் பிரதமராக அமர்த்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தேசிய சபை வாக்கெடுப்பின் விளைவாக அதிகாரபூர்வமாக அஸிஸ் (Aziz) பிரதமராகிவிட்டார். ஆனால் ஜூன் கடைசியில் அப்போதைய பிரதமர் Zafarullah Khan Jamali-யை பதவி விலக வலியுறுத்தி, முஷாரஃப் அற்தற்குப்பின் பதவிக்கு அமர்த்துபவராக Aziz -ஐ தெரிவித்து, அதன்மூலம் நாட்டிற்கு தற்பொழுது இராணுவம் ஆதரவு தரும் நாடாளுமன்றக் கட்சியான பாக்கிஸ்தான் காயிதே ஆசம் முஸ்லீம் லீக்கிற்கும் (PMLQ) செய்ய வேண்டியது என்ன என்பதை நிலைநாட்டிக் காட்டினார்.

வெள்ளியன்று நடைபெற்ற வாக்கெடுப்பை எதிர்கட்சி முழுமையாக புறக்கணித்தது. 15- கட்சி ஜனநாயக மீட்பு கூட்டணியை (ARD) சேர்ந்த, சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் Makhdoom Javed Hashmi-யை சபைக்கு முன் கொண்டுவர வேண்டுமென்று அரசாங்கத்திற்கு கட்டளையிட சபையின் சபாநாயகர் மறுத்துவிட்ட பின்னர், எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று ''முஷாரஃப் வெளியேற வேண்டுமென்றும் ''போலி பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றும் முழக்கங்களை எழுப்பினர். ஹாஷ்மி சிறிதுகாலமாக சிறையிலிருக்கிறார் மற்றும் ஏப்ரல் மாதம் அவர் மீது கலவரத்தை தூண்டியதாகவும் நாட்டு துரோக குற்றங்களை செய்ததாகவும் கட்டுக்கதை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு 23-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சபாநாயகர் ஹாஷ்மி பெயர் முன்மொழியப்பட அனுமதித்திருந்தார், ஆனால், தெளிவாக இரணுவத்திலிருந்து அழுத்தங்கள் வரும் என்று மறுத்துவிட்டார், ஹாஷ்மி நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டால் அது Aziz பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதன் முக்கியத்துவத்தை குறைத்துவிடும் மேலும் நாடகத்தை அம்பலப்படுத்திவிடும் என்று இராணுவம் பயந்தது.

ஆறு கட்சி இஸ்லாமிய கட்சியின் கூட்டணியான Muttahida Majlis-i-Amal (MMA,) ARD- யுடன் சேர்ந்து வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பில் கலந்துகொண்டது. 2002- அக்டோபரில் இராணுவம் முன்னின்று நடத்திய தேர்தல் வரை பணியாற்றி வந்த ஜமாலியை முஷாரப் ராஜினாமா செய்து வெளியேற்றியது, 2004-க்கு பின்னரும் முஷாரஃபே ஆயுதங்களின் தலைவராகவும், ஜனாதிபதியாகவும், சட்டபூர்வமாக நீடிக்கவேண்டுமென்ற இராணுவத் தளபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள ஜமாலி மறுத்துவிட்டதால் அவரை நிர்பந்தித்து பதவி விலகுமாறு முஷ்ராப் செய்தார். சென்ற ஆண்டு கடைசியில், MMA, ARD- யிலிருந்து பிரிந்து, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப்பெற்று சில அரசியல் சட்ட திருத்தங்களை கொண்டுவர ஜமாலிக்கு உதவியது. அந்த மாற்றங்கள் ஜனாதிபதி என்ற முறையில் முஷாரஃபின் அதிகாரங்களை பெரிதும் பெருக்கின, அவரது பதவிக்காலம் 2007- வரை நீடிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்டதன் மூலம் இராணுவத்திற்கு அரசாங்க கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பரிமாற்றமாக, MMA- விற்கு ஒரு உறுதிமொழி தரப்பட்டது - மனம்போன மற்றும் நுட்ப வல்லமைபடைத்த வார்த்தைகள் அடங்கிய திருத்தம் ஒன்றை கொண்டுவந்து - 2004 இறுதிவாக்கில் முஷாரஃப் தனது இராணுவத்தளபதி பதவியைவிட்டு விடுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜமாலிக்குப் பதிலாக பிரதமர் பொறுப்பிற்கு, Aziz முயற்சிக்கவேண்டுமென்றால் தேசிய சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஆகஸ்ட் 18-ல் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் Aziz தேர்ந்தெடுக்கப்பட்டதாக இது அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் முடிவுகள் மோசடிகள் நிறைந்தவை என்றும் அச்சுறுத்தப்பட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் சான்றளித்தன, வாக்குப்பதிவிற்கு முதல்நாள் மூன்று எதிர்க்கட்சி தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 30- ஆண்டுகளாக சிட்டிவங்கி ஊழியராக பணியாற்றிவந்த Aziz, அந்த வங்கியின் துணைத்தலைவர்களில் ஒருவராக பணியாற்றியவர், 1999- அக்டோபரில் அதிகாரத்தைப் பிடித்துக்கொண்ட முஷாரஃப் அவரை பாக்கிஸ்தானுக்கு திரும்பிவருமாறு கேட்டுக்கொண்டார். அவர் பாக்கிஸ்தான் வந்து ஏறத்தாழ ஐந்தாண்டுகள் நிதியமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை விதிமுறையினை வகுத்து, அரசாங்க செலவினங்களை வெட்டியும் தனியார்மயமாக்கல், நெறிமுறைகள் தளர்வுகளை அழுத்தம் கொடுத்து முன்னெடுத்தும் சென்றார். இதற்காக அவரை சர்வதேச வர்த்தக பத்திரிகைகளும் வாஷிங்டனும் பாராட்டின.

ஆகஸ்ட் 9-ல் நடைபெற்ற பாக்கிஸ்தான் வர்த்தக மற்றும் தொழிலதிபர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அதன் தலைவர் அஸிஸ்ஸிற்கு ஆதரவு தெரிவித்தார். விரைவில் பிரதமராக பொறுப்பேற்க இருந்த Aziz, அப்போது வெளியிட்ட அறிவிப்பில் வங்கிகளை தனியார் மயமாக்கும் ''முதல் கட்ட'', போட்டி வெற்றிகரமாக நடந்தேறியதாகவும், இப்போது பாக்கிஸ்தானின் தொழிற்துறை வளர்ச்சி வங்கியை தனியார்மயமாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும்" குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு பாக்கிஸ்தான் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6- சதவீதத்திற்கு மேல் சென்று கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, பாக்கிஸ்தானின் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக Aziz கூறினார். நிச்சயமாக பாக்கிஸ்தானின் வெளிசெலாவணி இருப்பு 9/11-க்கு பிந்திய அமெரிக்க உதவியினாலும் வெளிநாடுகளில் வாழ்கின்ற பாக்கிஸ்தானியர் அனுப்புகின்ற பணத்தினாலும் 1999-க்கு பின்னர் இருந்து அதிகம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. அப்போது கிளிண்டன் நிர்வாகம் பாக்கிஸ்தான் மிக வேகமாக திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அச்சம் தெரிவித்தது. இதில் மிகுந்த ஆழமான கவனம் செலுத்தும் பாக்கிஸ்தான் பத்திரிகை விமர்சகர்கள், Aziz கூற்றுக்கும், முதலாளித்துவ பூகோளமயமாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சமூக துருவமுனைப்புகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையால் சென்ற மே மாதம் இந்தியாவில் BJP தலைமையிலான அரசாங்கம் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததை ஒப்புநோக்கியும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பிரதமர் என்கிற முறையில் Aziz ஆற்றிய முதல் உரையில், நவீன-தாராளவாத சந்தை ''சீர்திருத்தங்களை'' நீடிக்கப்போவதாக உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்கள் நிலை உயரவில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ''நமது....மிகப்பெரிய சவால்,'' பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் பயன்களை அடிமட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் வகுத்துள்ள வழியை நிலைநாட்டவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியின் ''விநியோக" முறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்து உதட்டளவில் Aziz பேசினாலும், தனது அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ''குறிப்பாக பயங்கரவாதம்'' தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். இவற்றை "பராம்பரிய முறைகளால்" இனி கட்டுப்படுத்தவியலாது என்று குறிப்பிட்டார்---- போலீசாரும் இராணுவப்படைகளும் மனித உரிமைகளை மீறுவதில் இழிபுகழ் பெற்று செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒரு நாட்டில் இச்சொற்றொடர் உறையவைக்கும் விளைவுகளை மட்டுமே கொண்டிருக்க முடியும். சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் ''திறமையை சீர்படுத்துவதற்காக'' அவை சீரமைக்கப்படும் என்றும் Aziz குறிப்பிட்டார்.

2004- ஆரம்பத்திலிருந்து, பாக்கிஸ்தான் பாதுகாப்புப்படைகள் ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' தாக்குதல் நடவடிக்கைகளை பெருக்கியுள்ளன, வரலாற்று அடிப்படையில் பெருமளவில் தன்னாட்சி உரிமைபெற்று விளங்குகின்ற மலைவாழ்மக்கள் பகுதிகளில் இராணுவம் திடீர்த் தாக்குதல்களை நடத்தி, பெருமளவில் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்கா கொடுத்துவருகின்ற தீவிர அழுத்தங்கள் காரணமாகவும் இந்த தாக்குதல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாக்கிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் அல் கொய்தா தலைவர்கள் பலரை, ''அக்டோபரில் வியப்பூட்டும்'' வகையில் பிடித்துவிட வேண்டியது அவசியமென்று புஷ் நிர்வாகம் தனது விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக பாக்கிஸ்தான் பத்திரிகைகளில் நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அக்டோபரில் ஆப்கனிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை சீர்குலைக்கிற வகையில் பாக்கிஸ்தான் எல்லைப் பிராந்தியங்களில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற கவலையும் வாஷிங்டனில் நிலவுகிறது. அமெரிக்கா காபூலில் நியமித்துள்ள ஆட்சிக்கும் சர்வதேச மற்றும் பொதுமக்களது சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரில் தலையிட்டதன் மூலமும் பல்வேறு ஆயுதந்தாங்கிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களோடு நீண்ட நெருக்கமான உறவுகளுடனும், முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தான் இராணுவமும் செயல்பட்டுவருகிறது என்பதில் எந்த கேள்வியுமில்லை---- சென்ற டிசம்பரில் அச்சுறுத்தும் மிக நுட்பமான ஆயுதங்களை (Sophisticated) பயன்படுத்தி இரண்டுமுறை தளபதி/ ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு முயற்சிகள் நடைபெற்றுள்ளனன.

எதிர்க்கட்சி அணிகளில் பெனாசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முன்னாள் பிரதமதர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட PML கட்சியின் நவாஸ் ஷெரீப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் MMA ஆகிய குழுக்களின் ஆதரவாளர்கள்------ மற்றும் சர்வதேச மனித உரிமை குழுக்கள் பாக்கிஸ்தான் இராணுவத்தின் ''பயங்கரவாதத்திற்கெதிரான'' நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளன, அது அமெரிக்க இராணுவம், CIA மற்றும் FBI- ன் நெருக்கமான ஒத்துழைப்போடு இயங்கி வருகின்றன. மலைப்பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் முறையின்றி இராணுவத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதால் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன, முறையின்றி கைது செய்யப்படுகிறார்கள், விளக்கம் எதுவும் தரப்படாமலே சாவுகள் மற்றும் தனிமனிதர்கள் திடீரென்று காணாமல் போய்விடுவது, மற்றும் காலனித்துவ பாணியில் கூட்டுத் தண்டனைகளும் சக்கின்றது, உணவு மற்றும் இதர அவசியப்பொருட்கள் மலைவாழ் மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கப்படுகிறது.

முஷாரஃபின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான'' பிரச்சாரம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இஸ்லாமாபாத்தின் உடந்தைப்போக்கு ஆகியவை பஸ்தூன் நலன்களுக்கு விரோதமானவை என்று பரவலாக கருதப்படுகிறது----- ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாண இரண்டிலும், மிகப்பெரிய இனக்குழுவாக இருப்பதால்- பாக்கிஸ்தானுக்குள்ளேயே தேசிய இன பதட்டங்கள் மேலும் அதிகரித்து பிரிவினைவாத உணர்வுகள் கொழுந்துவிட்டு எரியலாம் என்று பாக்கிஸ்தான் ஆளும் செல்வந்த தட்டுகளுக்கிடையே கவலைகள் பெருகிவருகின்றன. அண்மை மாதங்களில் மேற்கத்திய மாகாணமான பலூச்சிஸ்தானில் தேசியவாத கிளர்ச்சி மீண்டும் தோன்றியுள்ளது. நாடாளுமன்றம் பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களித்த அன்றையதினம், பலூச்சிஸ்தானின் தேசியவாதக் கட்சிகள் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தும் புதிதாக மூன்று இராணுவத் தளங்களை அங்கே அமைப்பதற்கு எதிராகவும் பொது வேலைநிறுத்தத்தை நடத்தின.

வெடிக்கும் நிலை

பதவி உயர்த்தப்பட்ட Aziz-ற்கு ---மக்களது ஆதரவு இல்லை-- அவர் ஒரு ''தொழில்துறை நிபுணர்''. அவரை பிரதமர் பதவிக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் முஷாரஃப் கரங்களில் மேலும் அதிகாரம் குவிந்துள்ளது. இது வாஷிங்டனுக்கு மகிழ்ச்சியூட்டுகின்ற அர்த்தத்தோடு, அத்துடன் அரசாங்கத்தின் அன்றாட நிர்வாகத்தை தினசரி பொறுப்பு அமெரிக்காவிற்கு ஆதரவான நீண்ட அனுபவமுள்ள தொழில்முறை நிபுணருக்கு வோல் ஸ்ரீட்டில் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 2001- இஸ்லாமாபாத், தலிபான் ஆட்சிக்கு தனது தொடர்ந்திருந்த ஆதரவை விலக்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானை அமெரிக்கா வென்றெடுப்பதற்கு உதவுவது என்று முடிவுசெய்ததிலிருந்து முஷாரஃபின் ஆட்சி புஷ் நிர்வாகத்தின் தரகனாக அதேபோல் அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறது. வாஷிங்டன் திரும்பத்திரும்ப ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென்று நிர்பந்தங்களை கொடுத்துக்கொண்டு வந்தாலும், மோசடி தேர்தல்கள் நடத்துவது உள்பட, பாக்கிஸ்தான் மக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை அந்த சர்வாதிகாரி பயன்படுத்தி வந்தாலும் அதனது ஆட்சிக்கு ஜனநாயக வேடம்கட்டி வருகிறது. அந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ப அமெரிக்க அரசுத்துறை, Aziz பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியுள்ளது.

Aziz-ஐ பிரதமராக்கி இராணுவ தலைவர் பதவியை விட்டுவிட முஷாரஃப் தயக்கம் காட்டிவருவது அவரது ஆட்சிக்கு நிலவும் நெருக்கடியையும், பலவீனத்தையும் காட்டுகிறது. இந்த வாரம் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் Paul Krugman சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள், முஷாரஃப் ஆட்சி சிக்கலகற்ற மேலும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்ற சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் முன் கூட்டியே அதிக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டன் பாக்கிஸ்தானுக்கு கூடுதல் நிதி வழங்கி வந்தாலும், அதில் பெரும்பகுதி இராணுவத்திற்கு செல்கிறது, வாஷிங்டன் மேற்கொண்டுவரும் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இஸ்லாமாபாத் மீது திணித்துள்ளது, இது மக்களிடையே ஆழமான எதிர்ப்பையும் சமுதாயக் கொந்தளிப்பைத் தூண்டுகிறதாயும் இருக்கின்றன --- அமெரிக்காவின் மேலாதிக்கக் கொள்கைகள் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவுவதுடன் பாக்கிஸ்தானின் வளங்களையும் தொழிலாளர் சக்திகளையும் சர்வதேச மூலதனத்தால் சுரண்டுகின்ற செயல்திறம் கொண்டது என்று கருதுகின்றனர்.

பாக்கிஸ்தான் மக்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்பதற்கு சினங்கொள்வதற்கு எல்லா காரணங்களும் உண்டு. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக, அமெரிக்கா தனது சூறையாடும் பெரு வல்லரசு குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக திரும்பத்திரும்ப பாக்கிஸ்தான் இராணுவ சர்வாதிகாரங்களை ஆதரித்தும் தாங்கிப்பிடித்தும் வருகிறது. அமெரிக்கக் கட்டளைப்படி பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரில் தலையிட்டதன் மூலம் தளபதி ஜியாவின் சர்வாதிகாரத்திற்கு வாஷிங்டன் பாதுகாப்பு அரணாக அமைந்தது, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் குறுங்குழுவாத மத மோதல்கள் வளர்வதற்கு ஊக்குவித்தும், மேலும் நாடு முழுவதிலும் துருப்பிடித்த துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம் வளர்வதற்கும் வகைசெய்தது.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதற்கு இஸ்லாமாபாத் உதவுமென்று புஷ் நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த முடிவோடு, அமெரிக்கா ஐ.நா-வில் தனது சலுகையை பயன்படுத்தி பாக்கிஸ்தான் தூதர் Jehangir Ashraf Qazi-யை ஈராக்கிற்கான ஐ.நா- பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது. ஈராக்கில் அமெரிக்கப்படை எடுப்பிற்கு மிகப்பெருமளவில் பொது மக்களிடையே எதிர்ப்பு நீடிப்பதை எடுத்துக் கொண்டால், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் பங்கேற்பது ஒரு புறம் இருக்கட்டும், துருப்புக்களை பாக்தாத்திற்கு அனுப்புவதற்கு முயல்வதில் முஷாஃரப் ஆட்சி துணிச்சல் பெறவில்லை.

மேலும், பாக்கிஸ்தான் மக்களிடையே வளர்ந்துவரும் எதிர்ப்பு மட்டுமல்லாமல் பாக்கிஸ்தான் செல்வந்த தட்டிற்குள்ளேயே பாக்கிஸ்தானின் மூலோபாய நோக்குநிலை தொடர்பாக நிலவுகின்ற பல்வேறு மோதல்கள் ஆகியவற்றை சமாளிக்கவேண்டியிருக்கிறது. அமெரிக்க அழுத்தத்தின் கீழ், முஷாஃரப் பல்வேறு கொள்கை மாற்றங்களை --தாலிபானைக் கைவிட்டமை, காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சிக்கு பாக்கிஸ்தான் ஆதரவு வெட்டப்பட்டமை, இந்தியாவுடன் வெளிப்படையாகவே சமரசப்பேச்சு வார்த்தைகள் தொடங்கியமை, அணு ஆயுதத் தொழில் நுட்பத்தை இரகசியமாக விற்பனை செய்வது தடுக்கப்பட்டமை ஆகியவற்றை-- செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கம் நீண்டகாலமாகசெயல்படுத்திக் கொண்டு வருகின்ற மூலோபாய முயற்சிகளை வெட்டிமுறித்தது.

பாக்கிஸ்தான் அரசு எந்திரத்துக்குள்ளேயே இஸ்லாமிய அரசியல் தீவிரவாதத்திற்கு வலுவான ஆதரவு நிலவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி ஜியா இஸ்லாமியவாத சிந்தாந்தங்களை தனது ஆட்சியின் கொள்கையாக ஏற்றுக்கொண்டார். இப்போது MMA வில் இடம்பெற்றுள்ள சக்திகளை ஆதரித்து, தொழிலாள வர்க்கத்திற்கும் தாராளவாத முதலாளித்துவ எதிர்கட்சிகளுக்கும் எதிராக அவற்றை பயன்படுத்தியும், சமூகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக மதரஸாக்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமியப் பள்ளிகள் சங்கிலித்தொடர் போல் நாடெங்கும் உருவாவதை ஊக்குவித்தார். அதற்கிடையில் பாக்கிஸ்தானின் இரகசிய போலீசான உள் புலனாய்வு துறை (Inter-Service Intelligence Agency) ஆப்கானிஸ்தானின் முஜாஹீதின்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை உதவுவதற்கு ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டது. 1990-களில் ISI அவர்களையும் அவர்களது பாக்கிஸ்தான் கூட்டணியினரையும் பயன்படுத்தி, காஷ்மீர் கிளர்ச்சியில் ஆரம்பத்தில் தலைமைதாங்கிய மதச்சார்பற்ற தேசியவாதிகளை ஓரங்கட்டியது.

தலிபான் மூலம் பாரம்பரிய பழமைவாத அமைப்புக்களோடு தொடர்பு இருப்பதால், பல்வேறு வகையான இஸ்லாமிய இயக்கத்துடன் நீண்ட காலமாக சட நலன்களுக்காக அரசியலில் தவிர்க்கவியலாது பின்னிப்பிணைந்துள்ளதாலும், தற்போது முஷ்ராப் ஆட்சி ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பாக்கிஸ்தானின் மூலோபாய நலன்களை காப்பதிலும் அல் கொய்தாவை ஒடுக்குவதிலும் ulema மற்றும் மதரஸாக்களை கட்டுப்படுத்துவதிலும் பல்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் பாக்கிஸ்தான் இராணுவம் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் (NWFP) பலுசிஸ்தானிலும், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாலும் பொதுமக்களிடையே தோன்றியுள்ள எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள MMA முயன்றாலும், அதற்கும் முஷாரஃப் ஆட்சிக்குமிடையில் உறவுகள் சவுகரியமாக இல்லாது, ஒருநேரம் இருப்பது, ஒரு நேரம் விலகுவது என்றிருக்கிறது. பலூச்சிஸ்தானில் MMA வும் முஷாரஃப் ஆதரவு முஸ்லிம் லீக்கும் (PML-Q) கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. சென்ற டிசம்பர் மாதம் முஷாரஃப்பின் சர்வாதிகார ஆட்சி ஜனநாயக வேடம் கட்டிக்கொள்வதற்கு அரசியல் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு MMA தனது வாக்குகளை வழங்கியது. ARD-க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் MMA யைவிட அதிகமாக இருந்தாலும், மே மாதம் சபாநாயகர் இராணுவத்தின் வற்புறுத்தலால் MMA தலைவரை அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். சென்ற மாதம் உள்துறை அமைச்சர் MMA யிலுள்ள சிலருக்கு அல்கொய்தாவோடு தொடர்புகள் இருப்பதாக குற்றம் சாட்டுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், PML-Q- தலைவர் ஒருவர் இப்போதுள்ள சூழ்நிலைகளால் MMA அரசாங்கத்தை தாக்க வேண்டி வருகிறது என்று வருந்தியும், அவர்கள்தான் இயல்பான நண்பர்கள் என்றும் குறிப்பிட்டார்.

பாக்கிஸ்தானின் சிதைவுபட்ட மற்றும் சமூகரீதியாக துருவமுனைபட்டிருக்கும் சமுதாயத்திற்குள்ளே ஆதரவைப் பெறுவதிலும் வாஷிங்டனின் கோரிக்கைகளை சமாளிப்பதில் முயற்சிப்பதிலும் முஷாரஃப் பல்வேறு வகைப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுக்கிடையில் மிக ஆபத்தான கழைக்கூத்தாடி வேடம்கட்டி ஆடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved