:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Wellington and Sydney WSWS/ICFI meetings discuss Iraq
war and the US, Australian elections
வெலிங்டன், சிட்னியில்
WSWS/ICFI
கூட்டங்கள்: ஈராக் போர் மற்றும் அமெரிக்க, ஆஸ்திரேலிய தேர்தல்கள் பற்றி கலந்துரையாடியது
By our reporters
7 September 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI)
உலக சோசலிச வலைத் தளமும் ஆஸ்திரேலியாவில் சிட்னியிலும், நியூசிலாந்தில் வெலிங்டனிலும் கடந்த இரண்டு
வாரங்களில் வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை நடாத்தின. ''ஈராக்போரும் 2004 - அமெரிக்க தேர்தல்களும்''
என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டங்களில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர்
நிக் பீம்ஸ், WSWS
இன் சர்வதேச ஆசிரியர்குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட்
நோர்த் ஆகியோர் உரையாற்றினர்.
நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் சர்வதேச அரசியல் மற்றும்
வரலாற்று முக்கியத்துவம் குறித்து மதிப்பீடு செய்யவும் போருக்கும் சமுதாய பிற்போக்குத்தனத்திற்கும் எதிராக
தொழிலாள வர்க்கம் சர்வதேசிய மற்றும் சோசலிச முன்னோக்கை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிப்பதற்காகவும்
இந்தக் கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
ஆகஸ்ட் 29-ல் வெலிங்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு உலக சோசலிச வலைத்
தள நியூஸிலாந்து தொடர்பாளர் John
Braddock தலைமை வகித்தார்.
WSWS சார்பில்
நடத்தப்படும் முதலாவது கூட்டம் இது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நாட்டில்
ICFI -ஐ
வளர்த்தெடுப்பதற்கு அது முக்கியமான கூட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 5-ல் சிட்னியில் நடைபெற்ற கூட்டத்தை
SEP துணை தேசிய
செயலாளர் Linda Tenenbaum
ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆஸ்திரேலிய
மத்திய அரசாங்க தேர்தல்களை அறிவித்திருப்பதால் இந்தக்கூட்டம் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின்
தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைக்கும் கூட்டமாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
SEP -ன் தேர்தல் பிரச்சாரம் ஈராக் போர் மற்றும் அமெரிக்கத்
தேர்தல்கள் குறித்து விவாதங்களோடு ஆரம்பிப்பது முற்றிலும் ஏற்புடையது என்று குறிப்பிட்ட அவர், ஏனெனில் உலகின்
ஒவ்வொரு பகுதியிலும் உழைக்கும் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகளாக அவை இருக்கின்றன என்று
சுட்டிக்காட்டினார். ஆஸ்திரேலிய SEP,
அமெரிக்க SEP
மற்றும் ICFI-
இன் அனைத்து பகுதிகளுடன் பொதுவான சர்வதேச முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் பகிர்ந்துகொள்கின்றது
என Tenenbaum
குறிப்பிட்டார்.
பின்னர் கூட்டத் தலைவர் ஆஸ்திரேலிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக்
கட்சிக்கான வேட்பாளர்களை அறிவித்தார். ஆஸ்திரேலிய தேர்தலில் நியூ செளத் வேல்ஸிலிருந்து
செனட்டிற்கு நிக் பீம்ஸ் மற்றும் டெர்ரிகுக் போட்டியிடுவதாகவும் கீழ் சபைக்கு வெரிவாவின் மேற்கு சிட்னிக்கு
Mike Head-
ம், கிங்ஸ்போர்ட் -ஸ்மித்திற்கு James Cogan
மற்றும் மெல்போர்னில் பாட்மன் வடக்குப் பகுதி இடத்திற்கு
Peter Byrne ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
சிட்னியிலும், வெலிங்டனிலும் நடைபெற்ற கூட்டங்களில் முக்கிய உரையாற்றியவர் டேவிட்
நோர்த் ஆவார். அவரது மிகப்பரந்த மற்றும் ஆழமான அறிக்கையில், உலகம் முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி
தேர்தல் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதை விளக்கினார். அமெரிக்காவில் அதிகாரபூர்வமான அரசியலைக்
குறிக்கும் மிகக்கொடூரமான மற்றும் கிரிமினல் தன்மையின் பூகோள விளைபயன்கள் பற்றிய வளர்ந்துவரும் விழிப்பினால்
இது செயற்தூண்டல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எந்தளவிற்கு அடிப்படை ஜனநாயக கருத்துருக்கள்
முற்றிலும் அன்னியப்பட்டுப்போய் நிற்கிறது என்பதை அண்மையில் நடந்து முடிந்துள்ள குடியரசுக் கட்சியின் மாநாடு
தெளிவாக எடுத்துக்காட்டுவதாக பேச்சாளர் விவரித்தார். ஜோன் கெர்ரி ஜனாதிபதியாக
தேர்ந்தெடுக்கப்படுவதால் முதலாளித்துவ ஜனநாயகம் சீர்குலைவதை அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
காட்டுமிராண்டித்தனத்தை மாற்றப் போவதில்லை. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டுமே
அமெரிக்காவின் உலக மேலாதிக்க மூலோபாய குறிக்கோளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த உலக
மேலாதிக்கத்தை எப்படி சிறப்பாக நிலைநாட்டுவது என்ற தந்திரோபாய வழிமுறைகளில்தான் இருகட்சிகளும்
வேறுபாடு கொண்டிருக்கின்றன.
இருகட்சி அரசியல் கட்டுக்கோப்பில் நெருக்கடி ஆழமாக வளர்ந்து கொண்டிருப்பதன்
பின்னே, அமெரிக்காவின் வலிமை அதன் ஏகாதிபத்திய எதிரிநாடுகளோடு ஒப்பிடும்போது குறைந்துகொண்டே
வருவதில் காணப்படும் நீடித்த பொருளாதார நெருக்கடியாக இருக்கிறது. இந்த நெருக்கடிகள் அமெரிக்க சமுதாய
கட்டமைப்பில் பெரும்மாற்றங்களை ஒத்திருக்கின்றன.
கடந்த 30- ஆண்டுகளுக்கு மேலாக அதிர்ச்சியூட்டும் வகையில் சமூக ஏற்றத்தாழ்வுகள்
பெருகிவருவதை பல்வேறு வரைபடங்களின் எடுத்துக்காட்டுகளோடு நோர்த் விளக்கினார். ''அளவு கடந்த வகையில்
செல்வம் ஒரு பக்கம் திரண்டுகொண்டிருக்கிறது மற்றொரு பக்கம் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கொண்டுள்ளது
அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைமுறிவிற்கு அடிப்படையாகும்'' என்று அவர் விளக்கினார்.
''கடந்த மூன்றாண்டுகளாக அரசாங்கம் போலீஸ்ராஜிய நடவடிக்கைகளை மிகப்பெருமளவில் விரிவுபடுத்திவருவதற்கு
காரணம் "பயங்கரவாத அச்சுறுத்தல்" என்று கூறப்படுதில் இருந்து அல்ல, அமெரிக்க சமுதாயத்திற்குள்ளேயே
நிலவுகின்ற மிகத்தீவிரமான கூர்மையான சமூக மற்றும் வர்க்கப் பதட்டங்களிலிருந்து எழுகின்றது.''
இந்த முரண்பாடுகள் புரட்சிகரமான தாக்கங்களை உள்ளடக்கியவை. ''உலகளவில்
புரட்சிகரமான வர்க்கப் போராட்டம் ஒரே நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றதால் பண்பிடப்படும் புதிய
காலகட்டத்தில் நாம் இப்போது நுழைந்து கொண்டிருக்கிறோம். இதில் இன்றைய மார்க்சிச இயக்கத்தை எதிர்
நோக்கியுள்ள அறைகூவல் என்னவென்றால் இந்த உலக இயக்கத்தை அதன் அடிப்படை ரீதியான சர்வதேசத்
தன்மையுடன் உட்கிரகிக்க வேண்டும், சோசலிச நம்பிக்கையில் மீண்டும் புத்துயிரூட்ட வேண்டும், மற்றும் கடந்த
நூற்றாண்டின் படிப்பினைகளின் அடிப்படையில் கல்வி புகட்ட வேண்டும். இந்த முன்னோக்கின் அடிப்படையில்தான்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக்
கட்சி 2004- தேர்தல்களில் அதன் தலையீட்டைச் செய்கிறது.
நிம் பீம்ஸ் தனது அறிக்கையில், ஈராக் போரின் வரலாற்றுத் தாக்கங்கள் பற்றியும்,
புஷ் நிர்வாகமும் அதன் நட்பு நாடுகளும் புரிந்துள்ள பல்வேறு குற்றங்கள் குறித்தும் விவரித்தார். இரண்டாவது
உலகப் போருக்கு பின்னர் நூரம்பேர்க்கில் நாஜி போர்க்குற்றவாளிகள் மீது நடைபெற்ற விசாரணைகள் இன்றைய
நடப்புக்கு எவ்வாறு ஏற்புடையவையாக உள்ளன என்பதை விளக்கினார். மேலை நாடுகளின் வழக்குதொடுநர்கள்
ஒன்றை தெளிவாக அறிவித்திருப்பதுபோல, பிரதிவாதிகளுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, அவர்கள்
ஆக்கிரமிப்புப்போரை திட்டமிட்டு நடத்தினார்கள், அதன் தன்மை, அரசியல், இராணுவ, பொருளாதார அல்லது
இதர கண்ணோட்டங்கள் எதுவாக இருந்தாலும், அது குற்றம் தான் என்று விளக்கம் தரப்பட்டிருக்கின்றது.
வெலிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பீம்ஸ் ஆற்றிய உரையின் மையம் அமெரிக்கா
தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பின் சூறையாடும் தன்மை பற்றிய விவரமான ஆய்வாக இருந்தது. தற்போது
ஈராக்கில் கலைக்கப்பட்டுள்ள கூட்டணி இடைக்கால ஆணையம், அமெரிக்க நலன்களுக்கு ஈராக் பொருளாதாரத்தை
திறந்துவிடுவதற்கு மற்றும் ஈராக்கின் இயற்கை வளங்கள் அமெரிக்க பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காக எடுத்த
பல்வேறு நடவடிக்கைகளை விவரித்தார். ஜூன் மாதம் வெளியிடப்பட்ட கிருஸ்தவ உதவி அமைப்பு ஒன்றின்
அறிக்கையில், ஆக்கிரமிப்பு அதிகாரிகள், ஈராக் எண்ணெய் வருமானத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் வரம்பின்றி
கொள்ளையடித்திருப்பதை விளக்கியிருந்ததை பேச்சாளர் விளக்கிக்காட்டினார்.
சிட்னியில் நடைபெற்ற கூட்டத்தில்,
SEP இன்
வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்குகளை விளக்குவதில் ஒருமுகப்படுத்தினார் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேர்தலில்
தலையிடுவதற்கான அடிப்படைகளை எடுத்துரைத்தார். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளைப்போன்று
ஆஸ்திரேலியாவிலும் மிக வேகமாக "முதலாளித்துவ ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளும்,
அமைப்புக்களும் விரைவாய் சிதைந்து கொண்டுவருவதை" விவரித்தார்.
நிலைபெற்றுவிட்ட அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈராக்
போர் பற்றி குறிப்பிடுவதற்கு கூட மறுத்திருப்பது முக்கியம்வாய்ந்ததோடு அவற்றைப்பற்றி அறியும்படியும் செய்திருக்கின்றன.
''இது மிகப்பரவலான இயல்நிகழ்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுவதிலும் ஆளும் வர்க்கங்களின் கொள்கைகள்
ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளை உருவாக்கிகொண்டிருக்கின்றன. அப்படியிருந்தும் பரவலான பொதுமக்களது தேவைகள்,
எதிர்பார்ப்புக்கள், கவலைகள், ஜனநாயக முயற்சிகள் மற்றும் நலன்களை வெளிப்படுத்துவதற்கு தற்போதுள்ள
அரசியல் கட்டுக்கோப்பிற்குள்ளே எந்தவிதமான வழியுமில்லை''
''தொழிலாள வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள இன்றைய எரிந்துகொண்டிருக்கும்
விஷயம் என்னவென்றால் இந்த முட்டுக்கட்டை நிலையிலிருந்து வெளியேற ஒரு வழிகாண்பதுதான். இதுதான் அமெரிக்கத்
தேர்தலில் SEP
பிரச்சாரத்தின் மற்றும் ஆஸ்திரேலிய தேர்தல்களில் SEP
ஆல் செய்யப்படும் தலையீட்டின் முக்கியத்துவம் ஆகும். நமது பிரச்சாரம் அனைத்திற்கும் மேலாக சர்வதேசிய
சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை மீண்டும் நோக்குநிலைகொள்ளச் செய்தலை
பொறுப்பெடுக்க, கருத்துக்களையும் வாதங்களையும் அபிவிருத்தி செய்வதாகும்.''
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டமானது,
தொழிற்கட்சி, பசுமைக்கட்சி, மற்றும் இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு எந்தவித ஆதரவளிப்பதையும்
விலக்குவதாகும் என்று பீம்ஸ் விளக்கினார். சோசலிச கூட்டு போன்ற தீவிர எதிர்ப்புக்குழுக்களின் நிலைப்பாட்டிற்கு
எதிராக, தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதால் எந்த வகையிலும் தொழிலாள வர்க்கத்தின்
நலன்கள் முன்னெடுத்துச் செல்லப்பட முடியாது என்று விளக்கினார்.
"இன்றைய தினம் தொழிலாள வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து
புஷ்ஷிடம் இருந்தோ அல்லது ஹோவார்ட் ஆட்சியிலிருந்தோ வரவில்லை. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும்
மாபெரும் ஆபத்து என்னவெனில், மனித இனத்தை ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுக்குள் ஆழ்த்திக்கொண்டுடிருக்கின்ற
முதலாளித்துவ அமைப்பின் சிதைவு மற்றும் நிலைமுறிவால் விளைவிக்கப்பட்ட மாபெரும் எழுச்சிகளுக்கு அரசியற்பதிலை
அபிவிருத்தி செய்யாது, சீரழிந்த பாராளுமன்ற அமைப்பின் எல்லைகளுக்குள் அரசியல் ரீதியாக தொடர்ந்து
மாட்டிக்கொண்டிருப்பதுதான்.''
இரண்டு அறிக்கைகளையும் தொடர்ந்து, இரண்டு கூட்டங்களிலும் ஆர்வத்துடன் கலந்து
கொண்டவர்கள், பேச்சாளர்களை நோக்கி விரிவான அடிப்படையில் முக்கியமான பிரச்சனைகள் குறித்து கேள்விகளை
எழுப்பினர். இஸ்லாமிய அடிப்படைவாதம், அராஜகவாதம், மாவோ வாதம், அமெரிக்காவில் பாசிசம்,
ஏகாதிபத்தியத்திற்கெதிராக நடத்தப்படுகின்ற போராட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மூலோபாயம், மற்றும்
நடைமுறைகள் பற்றி கேள்விகள் இவற்றுள் உள்ளடங்குவன.
சிட்னியில் நடைபெற்ற கூட்டத்தில் தீவிர வலதுசாரி, ஜனநாயகக் கட்சி செனட்டர்
Zell Miller
குடியரசுக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டது பற்றியும் ஜனநாயகக்
கட்சிக்குள் நிலவுகின்ற கோஷ்டி பிளவுகள் பற்றியும் டேவிட் நோர்த்திடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவரது
விரிவான பதிலில், நோர்த் ஜனநாயகக் கட்சியின் வரலாறு பற்றியும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தோடு அதன்
உறவுகள் பற்றியும் மதிப்பீடு செய்தார்.
தனது பதிலில், நடைபெறவிருக்கின்ற தேர்தல் முடிவு நிச்சயமற்றதாக உள்ளது என்று
குறிப்பிட்ட டேவிட் நோர்த், இந்த தேர்தல் போட்டியை ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறைகள் மூலம்
தீர்க்கும் உண்மையான ஆபத்து இருப்பதாக எச்சரித்தார். இந்த சாத்தியக்கூறை தள்ளிவிட முடியாது, கெர்ரி
வெற்றி பெறுவாரானால் புஷ் நிர்வாகம் ஆட்சியை விட்டு நீங்குவதற்கு மறுக்கும் இது நடக்குமானால் குடியரசுக்
கட்சியின் ஜனநாயக விரோதத்தாக்குதல்களை ஜனநாயகக் கட்சியினர் உடனடியாக ஏற்பர், அவர்கள்
பொதுமக்களை திரட்டி சவால் செய்யமாட்டார்கள், இது நடக்கும் என்று வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்திற்கு
வழக்கு செல்லும்போது மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புஷ் நிர்வாகம் பதவியில் நீடிக்கட்டும் என்று
தீர்ப்பளிப்பார்கள். நவம்பர் தேர்தலில் முடிவு எதுவாக இருந்தாலும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக்
கட்சிகளுக்கு எதிராக மிக வேகமாக அரசியல் எதிர்ப்பு வளரும் என்று டேவிட் நோர்த் எச்சரித்தார்,
அமெரிக்காவில் அரசியல் நிலவரத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.
சிட்னிக்கூட்ட முடிவில், SEP
தேர்தல் நிதிக்காக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 4,000- டாலர்களை சோசலிச சமத்துவக் கட்சிக்கு
தேர்தல் நிதியாக நன்கொடை வழங்கினர். பலர் தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்காளாக பணியாற்ற
முன்வந்தனர். அமெரிக்க SEP
தேர்தல் அறிக்கை உட்பட பல்வேறு மார்க்சிச வெளியீடுகளை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வாங்கினர்.
சிட்னி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலரிடம்
WSWS நிருபர்கள்
பேசினர். பிஜியில் பிறந்த கணக்காளர் மொஹமத் அலி அதற்கு முன்னர்
WSWS
பிரச்சாரத்தினர் மூலம் இந்தக்கூட்டம் பற்றி அறிந்து கொண்டார். அவர் கூறினார்: ''புஷ் அல்லது கெர்ரியை
நம்பமுடியாது என்பதே எனது கருத்து. அமெரிக்காவிலுள்ள பொதுமக்கள் ஈராக் போருக்கெதிராக தங்களது
உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி இதில் முன்னிலை எடுக்குமானால் அமெரிக்க
பொதுமக்களிடம் கணிசமான ஆதரவைப் பெற முடியுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.... டேவிட் நோர்த்தின்
உரையிலிருந்து அமெரிக்க அரசியல் பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டேன். இந்தக் கூட்டத்தில் கலந்து
கொண்டவர்களது உள்ளத்தையும், செவிகளையும் அவர் திறந்து வைத்திருக்கிறார்.
''ஈராக் போர் முற்றிலும் நியாயமற்றது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில்
உலகத் தலைவர்கள் அந்தப்போர் பற்றிய உண்மையை கூறாதது உலகமே வஞ்சிக்கப்பட்டுவிட்டது என்று
நினைக்கிறேன். புஷ் நிர்வாகத்தின் உச்சியிலுள்ள கையளவு நபர்களால் இந்தப் போர் நடத்தப்பட்டிருக்கிறது,
அதனால் அவர்கள் அமெரிக்காவின் சாதாரண குடிமக்களது நம்பிக்கையை பெறவில்லை''
அரசாங்க ஊழியர்
Hayley, இந்த கூட்டத்தில் முக்கியமான இரண்டு பிரச்சனைகள்
தன்னை தொட்டதாகக் குறிப்பிட்டார். ''முதலாவதாக எனது உள்ளத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது
அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகின்ற தேர்தல்களில் இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று
வேறுபட்டவையல்ல. எனவே தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெற்றாலும் மிகப்பெரும்பாலான மக்களிடையே
எந்தவிதமான மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.
''இரண்டாவதாக கடந்த சில ஆண்டுகளாக நான் வருமானத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள்
பற்றி அறிவேன், என்றாலும் டேவிட் நோர்த் வரைபடங்கள் மூலம் விளக்கிக்காட்டிய விதத்தின் மூலம் செல்வ உடைமையில்
திட்டவட்டமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்துகொண்டேன். அந்த வரைபடங்கள் தெளிவாக எடுத்துக்காட்டியதைப்போல்
நாட்டு மக்களில் பரம ஏழைகளாக இருக்கின்ற 20- சதவீதம் பேரிடம் 3- சதவீத சொத்துக்கள் தான் உள்ளன.
ஆனால் மிகப்பெரும் பணக்காரர்களாக உள்ள 5- சதவீதத்தினரிடம் நாட்டின் 80- சதவீத சொத்துக்கள்
குவிந்திருக்கின்றன. இப்படி தெளிவாக விளக்கம் தந்திருப்பது நல்லது''
SEP - தேர்தல் பிரச்சாரம் தொழிற்கட்சி
மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல உழைக்கும் மக்களிடம் சோசலிச நனவை அபிவிருத்தி செய்ய
வேண்டுமென்பதற்காகத் தான் என்பதை Hayley
ஒப்புக்கொண்டார். ''அக்டோபர் 9-ல் இதனால் உடனடியாக அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை,
ஆனால் இது விழிப்புணர்வை ஏற்படுத்தப்போகிறது. இந்தக் கட்சியின் அடிப்படை நோக்கம் தற்போது மக்களுக்கு
கல்வியூட்டுவதுதான். தேர்தலில் போட்டியிட்டு இது போன்ற விளக்கங்களை மக்களுக்குத்தருவது நல்ல
தொடக்கம்தான்'' என்று அவர் கூறினார்.
ஊடகங்கள் பற்றி பயில்கின்ற மாணவர்
Anouk,
இந்தக்கூட்டம் "உண்மைக் கண்ணைத் திறந்தது" என்றார். ''டேவிட் நோர்த் சுட்டிக்காட்டிய புள்ளிவிவரங்களில்
நான் மிகுந்த அக்கறை கொண்டேன். கடந்த பல ஆண்டுகளில் எப்படி செல்வம் சிலர் கையில் குவிந்து கொண்டிருக்கிறது
என்பதை அறிந்துகொண்டேன். அது இந்தக்கூட்டத்தின் ஓர் அம்சமாகும்.
''ஒவ்வொரு நாளும்
WSWS கட்டுரைகளை நான் வாசிக்கிறேன், ஆனால் இக்கூட்டத்தின்
தரமானது நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறந்ததாக அமைந்திருக்கிறது. டேவிட் நோர்த் உரையாற்றுவதை
கேட்க நன்றாக இருந்தது. அவர் கட்டுரைகள் பலவற்றை படித்திருக்கிறேன் ஆனால் அவர் பேசியதை இதற்குமுன்னர்
கேட்டதில்லை. வரலாற்று உள்ளடக்கத்தில் எல்லா உண்மைகளையும் வைக்கும் விதம் சிறப்பானது என்று
நினைத்தேன்.''
தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆதரிக்கும் இடதுசாரி
குழுக்களுக்கு SEP
எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றி அவர் என் நினைக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அந்தக்கட்சிகள்
சந்தர்ப்பவாதக் கட்சிகள் என்று அனுக் வர்ணித்தார். ''எந்தவிதமான சுயாதீனமான மாற்றையும் அல்லது
முன்னோக்கையும் தடுக்கும் அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி போல தொழிற்கட்சி மற்றும் லிபரல்களை
இருகட்சி கட்டுக்கோப்பின் அங்கங்கள் என்று நான் கருதுகிறேன். இந்த இதர கட்சிகள் அடிப்படை பிரச்சனைகளை
ஆராய்வதில்லை. கொள்கை அடிப்படையில் SEP
அந்தக் கட்சிகளில் இருந்து வேறுபடுகிறது. தொழிற்கட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது அந்தக் கட்சிகளின் நோக்கம்,
அழுகல் மற்றும் சிதைந்த அரசியல் கட்டுக்கோப்பை சேதமுறாது கட்டிக்காப்பதை தவிர வேறு என்ன அது சாதிக்கப்போகிறது?"
என்று அந்த மாணவர் குறிப்பிட்டார்.
Top of page |