World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Two "sting" operations raise disturbing questions about US terror alert

அமெரிக்காவின் பயங்கரவாத முன்னெச்சரிக்கை பற்றி குழப்பமடையும் கேள்விகளை எழுப்பும் இரண்டு ''ஏமாற்று'' நடவடிக்கைகள்

By Bill Van Auken
11 August 2004

Back to screen version

அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு ''ஏமாற்று'' நடவடிக்கைகள் சமீபத்திய பயங்கரவாத எச்சரிக்கை மற்றும் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்றழைக்கப்படுவதன் முழுமையானதையும் குழப்பமடையச்செய்யும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலாவது நடவடிக்கை, அமெரிக்கா பிரிட்டன் மற்றும் பாக்கிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த புலனாய்வு அமைப்புக்கள் ஈடுபட்டுள்ள, அல்கொய்தா வலைபின்னலுக்கு எதிராக நடத்திய பெரிய சர்வதேச நடவடிக்கையாகும். இரண்டாவது நடவடிக்கை நியூயோர்க் அல்பனி பகுதியில் உள்ள குடியேற்றவாசிகளை கைது செய்ய FBI ஆல் மேற்கொண்ட சதித்திட்டத்தை தூண்டிய நடவடிக்கையாகும்.

ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால், இரண்டு நடவடிக்கையும், உண்மையான பயங்கரவாத நடவடிக்கையை தூண்டிவிடவும் மற்றும் அவற்றிற்கு எவ்விதமான விலைகொடுக்க நேரிடும்போதும், அமெரிக்கா அரசியல் முடிவுகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க மக்களை திகிலடையச்செய்ய ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்பதற்கு முதல் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்துகின்றது.

இதில் பிரதான ஏமாற்று செயற்பாடுகள் 25 வயதான மொகம்மது நயீம் நூர் கான் என்பவரை மத்தியப்படுத்தி நடைபெற்றிருக்கிறது. கணணி நிபுணரான அவர் சென்ற மாதம் பாக்கிஸ்தான் பாதுகாப்புப்படைகளால் லாகூரில் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 1இல், புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் அவரது பெயரை வெளியிட்டனர், சென்ற வாரம் வாஷிங்டன் DC, நியூயோர்க் நகரத்திலும், நியூ ஜெர்ஸி, நியூவார்கிலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை அளவை மஞ்சள் வர்ணத்திலிருந்து ஆரஞ்சு வர்ணமாக உயர்த்துவதற்கு காரணமாக இருந்த தகவலுக்கு முக்கியமான காரணம் அவர்தான் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கம்யூட்டர் அல் கொய்தா நடவடிக்கை தொடர்பான ''கருவூல புதையல்'' என்றும் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியமான அமெரிக்க இலக்கு என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன் மற்றும் நியூயோர்க் தாக்குதலுக்குள்ளான, 2001 செப்டம்பர் 11ல் முன்னர் தேதியிட்ட, பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள நிதிநிறுவனங்கள் பற்றிய கண்காணிப்பு பற்றி கம்பியூட்டரில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களை பின்னர் வெளியிட்டிருக்கிறது. மற்றும் அதில் உடனடி அச்சுறுத்தல் அல்லது பயங்கரவாத சதி பற்றி எந்த புலனாய்வுத் தகவலும் அதில் இல்லையென்று தெரியவந்தது.

ஊடகங்கள் அதிகாரபூர்வமாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைகளையும், தாக்குதல் நடைபெறவிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரிகள் விவரமில்லாத புலன் ஆய்வுத்தகவல்களை தந்ததை ஊடகங்கள் அளவிற்கதிகமாக புகழ்ந்தன. இப்படி பீதி உணர்வை கிளப்பிவிடுவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட பிரதான செய்தி நிறுவனங்கள் மிகவும் அதிகாரபூர்வமான பீதி பிரச்சாரத்திலும், போலீஸ்-அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை வாஷிங்டன் முடுக்கிவிட்டிருப்பதாலும் கிடைத்திருக்கும் மிக முக்கியமான செய்தியை சந்தேத்திற்கிடமின்றி பெரும்பாலும் ஊடகங்கள் புறக்கணித்துவிட்டன.

மொகமத் நீம் நூர் கானின் பெயரை வெள்ளை மாளிகை முதலில் நியூயோர்க் டைம்ஸிற்கு கசியவிட்டது, அந்த நேரத்தில் அவர் பாக்கிஸ்தான் புலனாய்வு இரகசிய முகவராக பணியாற்றி வந்தார். அவர் பிடிபட்ட பின்னர், தொலை தூரங்களில் பரவிக்கிடக்கும் அல் கொய்தா நடவடிக்கையாளர்களுக்கிடையில் முக்கிய தகவல் தொடர்பு பிணைப்பில் தொடர்ந்து செயல்பட சம்மதித்தார். இரகசிய மின்னஞ்சல் பயன்படுத்தி, அவர் மூத்த அல் கொய்தா அதிகாரிகளை வெளியில் வருவதற்கு ஆசைகாட்ட முயன்றார். அப்படி அவர்கள் வெளியே வரும்போது அவர்களை பாக்கிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வு முகவர்கள் கைது செய்து விட முடியும்.

அவரது பெயரை வெளியிட்டதன் மூலம், புஷ் நிர்வாகம் இரகசிய பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திவிட்டது. ஒரு மாதமாக கான் கைது செய்யப்பட்டிருக்கும் தகவலை வெளியிட்டதன்மூலம் அல் கொய்தாவினர் விழிப்படைந்து கொண்டார்கள் அதன் மூலம் முன்னணி அல்கொய்தா தலைவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள் என்று செவ்வாய்கிழமையன்று பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டனர்.

''இந்த புலனாய்வு கசியவிட்டது எங்களது திட்டத்தை சீர்குலைத்துவிட்டது என்று தான் நான் சொல்லமுடியும். அல் கொய்தா என்று சந்தேகித்த சிலர் தப்பி ஓடிவிட்டனர்'' என ஒரு மூத்த பாக்கிஸ்தான் அதிகாரி அசோசியேடட் பிரஸ்ஸிற்கு தெரிவத்தார். கான் பெயர் வெளியிடப்பட்டது ''மிகவும் அமைதியைக்குலைப்பதாகும்'' என அவர் வர்ணித்தார். ''கூட்டணி பங்காளிகள்'' எப்படி கான் கைது தொடர்பான ''இரகசியத்தகவல்'' அமெரிக்கப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

வெள்ளை மாளிகை இப்படி கசிய விட்டதை குறித்து பிரிட்டன் புலனாய்வு அதிகாரிகளும் மிகுந்த ஆவேசத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. கான் பெயர் வெளியிட நிர்பந்திக்கப்பட்டதால் பிரிட்டனில் அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தொடர்பான புலன்விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் கைவிட வேண்டிவந்தது, அவர்களுடன் கான் தொடர்பு கொண்டிருந்ததால் அவசர அவசரமாக அவர்களை கைது செய்யவேண்டி வந்தது. பத்திரிகை அறிக்கையின் படி, இந்த நடவடிக்கை வெடித்த பின் ஐந்து சந்தேக நபர்கள் பிடிபடாமல் தப்பிக்க மற்றும் பிடித்துள்ள 13 பேரிடம் எந்தவித போதுமான ஆதாரமும் இருக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பயந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

வாஷிங்டன் கையாளும் பயங்கரவாத எச்சரிக்கை ஐயத்திற்கிடமின்றி எரிச்சலான மற்றும் அறிவை மங்கவைக்கின்ற பேச்சு என்று பிரிட்டிஷ் உள்நாட்டு செயலர் டேவிட் பிளங்கட் விமர்ச்சித்ததாக ஒப்சேர்வர் பத்திரிகையாளர் எழுதிய கருத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனுடைய பத்திரிகைகள் புகார் கூறியதாக குறிப்பிட்டதில், ''ஆகையால் பயங்கரவாதம் பற்றிய கவலை அந்த நேரத்தில், எங்களுக்கு போதமானதை அந்த குறிப்பில் வெளிப்படுத்தப்படவில்லை, அதில் நாங்கள் சொல்வதற்கு போதுமானதில்லை.'' அமெரிக்க மக்களை பயங்கரவாத திகிலூட்டலுக்குள்ளாக்க புஷ் நிர்வாகம் முயற்சி செய்வதாக பிளங்கட் குற்றம்சாட்டினார்.

அந்தக் கட்டுரையோடு தொடர்ந்த ஒப்சேர்வரின் ஒரு அறிக்கை ''பிரிட்டனில் நடக்கும் வழக்குகள் தொடர்பாக அமெரிக்க வட்டாரங்கள் வெளிப்படையான கருத்துக்கு சம்மதம் தெரிவித்திருப்பது பாராளுமன்றத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று விளக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவது தொடர்பான வழக்கு விசாரணையும் ஆபத்துக்குள்ளாகலாம் என்ற கவலையும் நிலவுகிறது.

Blunkett இன் கட்டுரை பிரசுரிக்கப்பட்ட அதே நாளில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ், கானின் விவகாரத்தை நிர்வாகம் கையாண்ட முறையை சரி என்று வாதிட்டார். CNN க்கு அவர் அளித்த பேட்டியில் ''பாக்கிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. நாங்கள் இந்த நடவடிக்கையில், பகிரங்கமாக அவரது பெயரை வெளியிடவில்லை'' எனவே நான் கூறுவேன், இது ''பின்னணி வட்டாரங்களால்'' கசிந்து வெளிவந்திருக்கலாம் என்று அவர் வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

ஊடகங்களினதும் அவர்களுடைய அரசாங்க வட்டாரங்களினதும் நடவடிக்கையை தெரிந்த எந்தவொரு நபருக்கும், ''பின்னணி வட்டாரம்'' என்பது தகவல்கள் பிரசுரிக்கப்படும், ஆனால் அதன் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பது தெரியும். ரைஸ் அடிக்கடி தகவல் ''பின்னணியிலிருந்து'' மக்களுக்கு நிர்வாகத்தால் வெளியிடப்படுவது பற்றியும், ''மூத்த அதிகாரிகள்'' என்ற பெயர் குறிப்பிடாத அடைமொழியை பயன்படுத்துபவர்களில் ஒருவராவார்.

''நிர்வாகம் மக்களுக்கு போதுமான தகவல்களை வழங்குவதன் மூலம், நாங்கள் ஒரு விஷேடமான, நம்பத்தக்க , வித்தியாசமானவகையான அச்சுறுத்தலை கையாளுகின்றோம் மற்றும் நடவடிக்கையை கவனத்திற்கொண்டும் இயங்குவதற்கிடையிலான ஒரு சமநிலையை நிர்வாகம் உருவாக்க விரும்பவதாக'' ரைஸ் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும், பாதுகாப்பு நிபுணர்களின் விமர்சன புயலை, கிளப்பியிருக்கிறது. கானின் பெரயை வெளியிட்டது ''பின்னடைவு'' என்றும் ''படுதோல்வி'' என்றும், ''அழிவு'' என்றும் வர்ணித்துள்ளது. சில விமர்சகர்கள் நிர்வாகம் ''தன் பாதங்களிலேயே சுட்டுக்கொண்டது'' என்று கூறியுள்ளனர்.

''இந்த விவகாரம் முழுவதும் திறமைகுறைவையும், அல்லது அதைவிட மோசமான தன்மையையும் வெளிப்படுத்துகிறது. அல் கொய்தாவினுள் அதில் பணியாற்றுபவர்களை கண்டு பிடிப்பதே சிரமம், அப்படியிருக்கும்போது, அங்கே ஒரு ஓட்டை விழுவதற்கு எப்படி நீங்கள் சம்மதித்தீர்கள்?" என்று கேட்க வேண்டும்'' என்று Jane's Defense வெளியீடுகளில் பிரிட்டிஷ் பாதுகாப்பு ஆய்வாளர் Tim Ripley எழுதியுள்ளார்.

ஓட்டை விழுவதை வாஷிங்டன் ஏன் சமரசம் செய்துகொண்டது? புஷ்ஷின் வெள்ளை மாளிகையை பற்றி கையாளும்போது அப்பட்டமான திறமைக்குறைவு, மிகவும் அடித்தளமற்ற அரசியல் கணிப்பு என்பனவற்றை நாம் தவிர்க்க முடியாது. இதில் சந்தேகதிற்கிடமற்ற ஓர் அம்சமுள்ளது பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி இடைவிடாது எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருப்பது, பொதுமக்களை பயமுறுத்துவதற்கும், புஷ்ஷை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரியைவிட அதிகமான அரசியல் இலாபத்தை பெறுவதற்கும்தான்.

மேலும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும், குடியரசுக் கட்சிக்காரர்களும், எல்லா நடவடிக்கையும் அரசாங்கத்தால் இதே சிந்தாந்த கீழ்கட்டுமானத்தால் ஏறத்தாழ மூன்றாண்டுகளாக பணியாற்றியும், வெளிநாட்டில் போர், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது தாக்குதல்கள் ஆகியவற்றை அதே பயங்கரவாத அடிப்படையில் தான் வேண்டி வரவேற்கின்றனர்.

கடைசியாக அமெரிக்க விடுத்திருக்கும் அபாய அறிவிப்பு தொடர்பாக மக்களிடையே சந்தேகங்கள் எழுவதை போக்குகின்ற வகையில் ஊடகங்களுக்கு வரவிருக்கின்ற ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்கின்ற, உறுதிப்படுத்தும் ஆதரமாக இதை வெளியிட்டார்கள். என்றாலும் கானின் அடையாளத்தை நிர்வாகம் அம்பலப்படுத்தியதற்கு கூறியுள்ள காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. கானை வெளிப்படுத்தியது அச்சுறுத்தல் எனப்படுவதை எவ்வாறு அதிக நம்பகத்தன்மையுள்ளதாக்குகின்றது?

இதற்கு ஒரு மாற்று விளக்கமும் உண்டு. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு பாக்கிஸ்தானின் இந்த மறைமுக நடவடிக்கையை சிதைத்துவிட முடிவு செய்துவிட்டார்கள். இப்படி அம்பலப்படுத்தியது, தற்செயலாக ஒரு அதிகாரி வாய்தவறி சொல்லிவிட்ட வார்தையல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொள்கை அடிப்படையில் ஒன்று திரண்ட ஊடகங்கள் உட்பட நிர்வாகத்தால் தேடி கண்டுபிடிக்கப்பட்ட ''கருவூல புதையல்'' கானுடைய கணணி என்று முழங்கின.

கானின் நடவடிக்கைகளை இரத்து செய்வதற்கான நோக்கமென்ன? என்பதுதான் கேள்வி, இதற்கு இரண்டு பதில்களை கூறமுடியும். கானின் நடவடிக்கைகள் அல்கொய்தா உளவாளிகளை பிடிக்கின்ற அளவிற்கு நெருங்கி வந்துகொண்டிருக்கிறது, அவர்கள் அப்படிப்பிடிபடுவதை வாஷிங்டனில் சிலர் விரும்பவில்லை, அல்லது அவர்கள் முடிக்க விரும்புகிற மற்றொரு நடவடிக்கையை இடையில் சீர்குலைந்துவிடும் என்ற அச்சுறுத்தல் அதனால் உருவாகியுள்ளது.

இந்த நிர்வாகம், 2001 செப்டம்பர் 11-ல் பயங்கரவாத தாக்குதல்களை, அதற்குப் பின்னனான தனது எல்லாக் கொள்கைகளுக்கும், நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொண்டு வருகிறது-- மிகக் குறிப்பாக, நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஈராக்கை பிடித்து அதன் எண்ணெய் கிணறுகளை கைப்பற்றும் தனது திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு அந்தத் தாக்குதலை பயன்படுத்திக்கொண்டது. இந்தக் காரணம் திடீரென்று விண்ணில் வெடித்துத் தோன்றிய இடிமின்னல் அல்ல என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.

செப்டம்பர் 11 சதி தொடர்பாக திரும்பத்திரும்ப பல்வேறு எச்சரிக்கைகள் வந்தும் செயல்பட தவறியிருக்கிறது, குறைந்த பட்சம் இரண்டு விமான கடத்திகள் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிந்திருந்தும், தங்களது சொந்த பெயரிலேயே அவர்கள் அமெரிக்காவில், பகிரங்கமாக செயல்பட்டும், அவர்களை போன்ற விமானக்கடத்திகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறிவிட்டது. விமானங்கள் கடத்தப்படுவதற்கு முன்னர் விமானப்பாதுகாப்பு மற்றும் அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் எழுப்புகின்ற கேள்வி இதுதான்:- அது கிரிமினல் அலட்சியப்போக்கா? அல்லது அமெரிக்க மண்ணில் ஒரு தாக்குதல் நடைபெறுவதற்கு அனுமதித்து, அதன் மூலம் போருக்கான அமெரிக்க மக்கள் ஆதரவைத்திரட்டும் வகையில் அச்சுறுத்துவதற்காகவா?

ஒரு சர்வதேச நடவடிக்கை அல் கொய்தாவிற்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் போது நடப்பு சீர்குலைவு அதே மாதிரியான கேள்விகளை எழுப்புகின்றன: அமெரிக்க நிர்வாகத்திற்குள் மற்றொரு தாக்குதல் நடப்பது பற்றி எச்சரிக்கப்பட்ட சக்திகள் இல்லையா? அவர்கள் மீண்டும் ஒருமுறை அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடக்கும் என்று அச்சுறுத்தி மீண்டும் புஷ்ஷை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்க போகிறார்களா---- அல்லது நவம்பர் தேர்தலை இரத்து செய்வதற்கு சாக்குப்போக்கை தேடிக்கொண்டிருக்கிறார்களா?

இந்த வாரம் அம்பலத்திற்கு வந்த இரண்டாவது மறைமுக நடவடிக்கை மிகச்சிறிய அளவில் நடைபெற்றதாகும். அதில் நியூயோர்க்கிலுள்ள அல்பேனியிலுள்ள இரண்டு முஸ்லீம் குடியேற்றவாசிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை FBI கவர்ந்திழுக்க ஒன்று சேர்ந்த திட்டத்தை தெரிவித்தனர். அது ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிக்கொண்டிருக்கிற பாக்கிஸ்தான் தூதரை படுகொலை செய்வதற்கு ராக்கெட்டால் செலுத்தப்படும் ஒரு வெடிகுண்டை வாங்குவது சம்மந்தப்பட்டது அந்தத் திட்டம்.

உண்மையிலேயே அப்டியொரு திட்டமில்லை ---அது முற்றிலும் FBIன் கண்டுபிடிப்பு. பாக்கிஸ்தானிலிருந்து புலப்பெயர்ந்தோர் ஒருவரை FBI கைது செய்தது. அவர் ஆங்கிலம் பேசத்தெரியாத குடியேற்றவாசிகள் வாகனசெலுத்தும் உரிமை பத்திரங்களை பெறுவதற்கு அவர்களுடன் சென்று எழுத்துத்தேர்வில் சரியான விடைகளை அவர்களுக்கு சொல்லித்தந்தார் என்பதுதான் அந்த பாக்கிஸ்தானி மீதான கூறப்பட்ட குற்றச்சாட்டாகும். ஆவணமோசடி குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு ஒரு உறுதிமொழி அளிக்கப்பட்டது, உள்ளூர் மசூதியில் உளவுபார்த்து ஆட்காட்டியாக செயல்பட்டால் அவரை நாடுகடத்துவதில்லை என்று உறுதியளிக்கப்பட்டது.

பங்களதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்த மசூதியில் ஒரு உறுப்பினராக இருக்கும் ஒருவர் தனக்கு உணவு விடுதி நடத்துவதற்காக கடன் பெற்றுத்தருமாறு பாக்கிஸ்தானியரை அணுகியபோது உடனடியாக FBI தனது பொறியை விரித்தது. குற்றச்சாட்டின்படி, FBI இன் ஆள்காட்டி பங்களாதேசத்தவரான Mohammed Mosharref Hossain உம், ஒரு ஈராக்கிய குர்து அகதியான Yassin Muhiddin Aref யும் ஈர்த்து வெடிகுண்டு செலுத்தும் ராக்கெட்டை விற்றுபணம் பெறுவதற்கு சம்மதிக்கச்செய்தார். அதற்கு கைமாறாக அவர்களுக்கு 5,000 அமெரிக்க டொலர் வழங்கப்படும்.

தனது இந்த மிக பலவீனமான வழக்கை நிலைநாட்டுவதற்காக, அந்த பங்காளதேச நபர் ஒரு ''பயங்கரவாத அமைப்பு'' என்று வர்ணித்துள்ள ஜமாத்-இ- இஸ்லாமியை ஆதரிப்பதாக கூறினார் என்று அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உண்மை என்னவென்றால் அது ஒரு அரசியல் கட்சி மற்றும் அந்த நாட்டு கூட்டணி அரசாங்கத்தில் பங்குதாரராக உள்ளது. வடக்கு ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் கண்டெடுத்த ஒரு நோட்டுப்புத்தகத்தில் இந்த குர்து அகதியின் பெயர் இடம் பெற்றிருந்தாக நீதித்துறை தெரிவித்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான ஒரு வழக்கறிஞர் சுட்டிக்காட்டப்பட்டதைப் போல் ''பயங்கரவாத சதி'' ''அரசாங்கத்தின் கற்பனையில் மட்டும்தான்'' உள்ளது, அதை ஊடகங்கள் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன. ஆரம்ப செய்திகள், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரது குர்திஸ் பின்னணி, தற்பொழுது ஈராக்கில் இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்ற அபு மூஸாத் அல் சர்காவியால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு அமெரிக்காவில் இருக்கலாம் என்று குறிப்பிடும் அளவிற்கு சென்றன.

அல்பானியில் FBI யுடைய மறைமுக நடவடிக்கையை பாகிஸ்தான் அரசாங்கம் கூர்மையாக கண்டித்துள்ளது. அல்பானியில் FBI மறைமுக நடவடிக்கைகளை, பாக்கிஸ்தான் அரசாங்கம் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் குடியேறியவர்களை வலைவிரித்து தூதர் ஒருவரை கொல்வதற்கு கண்டு பிடித்திருக்கின்ற திட்டமென்று வர்ணித்தார். பாகிஸ்தான் இராஜாங்கத்துறை அதிகாரி அது ''அதிர்ச்சியூட்டும்'' மற்றும் விபரீதமான நடவடிக்கை என்றார். தமது அரசாங்கம் வாஷிங்டனுக்கு முறையாக இராஜதந்திர கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

''இது எங்களது தூதர் மற்றும் எங்களது தூதரகம் தாக்குதலுக்கு இலக்காகும் என்ற நிலையை அதிகரித்திருக்கிறது. அவர்கள் இப்போது கடைப்பிடித்திருக்கின்ற முறை எங்களது தூதரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது'' என்று அந்த அதிகாரி கூறினார்.

மூன்று பெரிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் பற்றிய அபாயமணி ஒலிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அரசாங்கமும் ஊடகங்களும் நாடு தழுவிய அச்ச உணர்வை உருவாக்குவதற்கு முயன்று கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் அரசாங்கமே கண்டுபிடித்துள்ள ஒரு போலி சதித்திட்டத்திற்குள் சிலரை சிக்கவைத்து கைதுசெய்திருப்பது மட்டுமே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved