World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russian miners protest again, as they did 15 years ago

15 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தது போன்று, மறுபடியும் ரஷ்ய சுரங்கத்தொழிலாளர் எதிர்ப்பு

By Stanislav Smolin and Vladimir Volkov
26 August 2004

Back to screen version

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் ரஷ்யாவின் பல பாகங்களில் (Rostovskaya மற்றும் Chelyabinskaya பிராந்தியங்கள் Primorye மற்றும் Komi குடியரசு) நடைபெற்ற சுரங்கத்தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், தொழிலாள வர்க்கத்தால் தனது உரிமை மற்றும் நலன்களுக்காக வெகுஜன போராட்டத்தின் ஒரு புதிய காலம் முன்கூட்டி வருவதை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

இந்த சுரங்க வேலைநிறுத்தங்களின் சிறப்பு என்னவென்றால் ரஷ்ய வெகுஜனங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துகொண்டே போகிறது என்ற அரசாங்கம் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்ற கட்டுக்கதைகளுள் ஒன்றை அவர்கள் அம்பலப்படுத்துவதில் இருக்கிறது. உண்மையிலேயே, புட்டின் நிர்வாகம் ரஷ்ய பொருளாதாரத்தில் வெற்றிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், சமுதாயத்தின் பெரும்பிரிவினர் பெருகிவரும் சங்கடங்களை அனுபவித்துக்கொண்டும், நிரந்தரமாக வறுமை, பட்டினி மற்றும் நோய்களால் அச்சுறுத்தலுடன் போராடிக் கொண்டும் வருகின்றனர்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் முதலாளித்துவ ''சீர்திருத்தங்களுக்குப்'' பின்னர் ரஷ்ய தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் 1980-களின் இறுதியில் நிலவியதைவிட மோசமான சூழ்நிலையாக இருக்கின்றன. இந்த நிலைமை ஏற்கனவே பண்பிட்டுக்காட்டியதுபோல் நம்பிக்கை இழந்த வாழ்க்கை நிலைமைகளிலும், சிவில் உரிமைகள் கடுமையாக வெட்டப்பட்ட நிலையிலும், மக்களுடைய பரந்த தட்டினர் தற்போதுள்ள நிர்வாகத்தினால் மேலும் தாக்குதல்களைத் தான் எதிர்பார்க்க முடியும் என்று உணரத்தொடங்கியுள்ளனர்.

சுரங்கத்தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் மூர்க்கமாக உண்ணாவிரத வேலைநிறுத்தமாக வடிவம் எடுத்தது ஏனென்றால் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த சட்ட முறையின் கட்டமைப்பிற்குள்ளே எந்த வித உண்மையான அர்த்தம் இல்லாமையாலும், அதேபோல் தெளிவான அரசியல் முன்னோக்கு இல்லாததாலுமாகும்.

இந்தக் கண்டனத்தின் முழுமையான சித்திரத்தின் பெரும்பகுதியை ஊடகங்கள் மூடிமறைத்தாலும், இந்த நடவடிக்கைகளின் விளைவாக அவை பொதுமக்களின் பரவலான கவனத்தை ஈர்த்து மற்றும் தொழிலாளர்களுக்கு இறுதியில் ஊதியம் வழங்கப்பட்டது. அவர்கள் பங்கில், தொழிற்துறை மோதலில் அதிகாரிகள் தலையிட நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் தற்பொழுது நிலவும் சட்டத்தின் கட்டமைப்பிற்கு வெளியே செயல்பட்டு, சுரங்கத்தொழிலாளர்களின் கோரிக்கையை திருப்திபடுத்தும் பணத்தை கொடுக்க முயற்சித்தனர்.

பல சுரங்க உரிமையாளர்களுக்கெதிராக கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன---குறிப்பாக ஊதியம் வழங்குவது தொடர்பாக அவர்கள் நடைமுறை விதிகளை அப்பட்டமாக மீறிவருகிறார்கள் என்று ஒப்புக்கொண்ட பின்னரும் அவ்வாறு நடைபெற்றுள்ளது. எவ்வாறாயினும், இது பெரும்பாலும் அடையாள தண்டனையில் முடிந்தது, குறைந்த பட்ச அபராதக் கட்டணங்கள் வடிவத்தைதான் எடுத்தது.

இந்த வகையில் சுரங்கத்தொழிலாளர்களின் பிரச்சனைகள் மீதும், அவர்களது கோரிக்கையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பவை மீதும் அதிகாரிகள் தங்களது அலட்சியப்போக்கை வெளிப்படுத்தினர். சுரங்கத்தொழிலாளர் பிரச்சனை மக்கள் மனதில் மிகவும் முக்கியமாக வளர்வதை கிரெம்ளின், மற்றும் பிராந்திய அரசாங்கங்களை பீதியடைய செய்துள்ளதால், சமீபத்திய சம்பவங்களின் அரசியல் விளைவை மட்டுப்படுத்த சாத்தியமாக்குகின்ற எல்லா வகையிலும் முயன்று வருகிறனர்.

எதிப்புக்களின் கால வரிசை

* ஏப்ரல் 15-முதல் 27-வரை காகாசியா குடியரசைச்சார்ந்த Chernogorsk பகுதியிலுள்ள Yenisyeyskaya சுரங்கத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எட்டு பெண்கள் உட்பட, ஐம்பத்தி ஒன்பது சுரங்கத்தொழிலாளர்கள் அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அந்த சுரங்கத்தொழிலாளர்களுக்கு 2003 அக்டோபரில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை, அந்த பாக்கித்தொகையான 8.5- மில்லியன் ரூபிள்கள் (2,83,333-டாலர்கள்) திருப்பித்தரப்பட வேண்டும் என்று கோரினர். இந்த எதிர்ப்பு போராட்டத்தின்போது 54- வயதான சுரங்கத்தொழிலாளி Anatoliy Sitkin உயிர்நீத்தார், 5-பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், மற்றும் உண்ணாவிரத வேலைநிறுத்தத்தக் கடைசிநாளில் மற்றொரு சுரங்கத்தொழிலாளிக்கு மார்புவலி ஏற்பட்டது.

சிட்கின் மரணம் பற்றி பேசிய எதிர்ப்புத்தலைவர்களில் ஒருவரான Alexander Merkurev, ''எங்கள் எல்லோருக்கும் கடைசியில் போய்முடிந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையினால் அவர் கொல்லப்பட்டார்'' என்று அறிவித்தார். உண்ணாவிரத வேலைநிறுத்தத்தின் போது சிட்கின் மடிந்துவிட்டார் என்பதை ஒப்புக்கொள்ள உள்ளூர் வழக்கறிஞர் மறுத்துவிட்டார். தனது நோய்வாய்பட்ட தாய்க்கு சிகிச்சையாளிப்பதற்காக சிறிதுகாலம் அவர் சுரங்கத்தைவிட்டு சென்றிருந்தார் என்று அவர் தெரிவித்தார்.

* Komi குடியரசிலுள்ள Zapadnaya-Bis சுரங்கத்தில் ஏப்ரல் 15- முதல் 17-வரை தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள்ளேயே உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்தி சுரங்கத்திற்கு வெளியே வர மறுத்துவிட்டனர், அவர்கள் உணவை ஏற்றுக்கொள்ளவில்லை. Zapadnaya-Bis மற்றும் Kapitalnaya சுரங்கங்கள் இலாபம் இல்லாததால் மூடப்பட உள்ளது என்று அறிவிதித்திருக்கின்ற சுரங்க மற்றும் நகர தலைவர்கள் வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். என்றாலும் Inta நகர நிர்வாகத்தலைவரான Vladimir Shakhtin, சுரங்க சொத்துக்களை விற்பதற்கும் சுரங்கப்பணியாளர் சமுதாயங்களுக்கு மறுவாழ்வு தருவதற்கும் சமுதாய உதவித்திட்டத் தொகைகளை வழங்குவதற்கும் மத்திய பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யும் ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

ஏப்ரல் 26-ல் சொத்து உறவுகள் அமைச்சகம் Inta-விலுள்ள இலாபம் தராத சுரங்கங்களை மூடிவிடப்போவதாக அறிவித்தபின்னர், மேலும் 80- தொழிலாளர்கள் உண்ணாவிரதப் வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களுடன், சேர்ந்துகொண்டனர், அதன் மூலம் மிகக்குறுகிய காலத்தில் இந்தப்போராட்டத்தில் மொத்த எண்ணிக்கையான 300- தொழிலாளர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.

"சமுதாய உத்திரவாதங்களை பூர்த்திசெய்தல் மற்றும் சுரங்கம் மூடப்படுவதை கண்ணியமான முறையில் செய்யவுமான பிரச்சினைகளைத் தீர்க்க, ஏற்ற நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் குடியரசின் தலைவரான Vladimir Torlopov தந்திருந்த உறுதிமொழியை நம்பி ஏப்ரல் 27-ல் அந்த சுரங்கத்தொழிலாளர்கள் தங்களது உண்ணாவிரத வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டு சுரங்கத்திற்கு வெளியில் வந்தனர்.

* மே-10-ல் Primorsky பிராந்தியத்தைச் சேர்ந்த Rakovsky சுரங்கத்தொழிலாளர்கள் உண்ணாவிரத வேலைநிறுத்தத்தை தொடக்கினர். அவர்களுக்கு 16- மில்லியன் ரூபிள்கள் (5,33,333 டாலர்கள்) பாக்கி வரவேண்டியிருக்கிறது.

* மே 15-ல் Khakasiya பகுதியிலுள்ள Yeniseyskaya சுரங்கத்தொழிலாளர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தத்தை மீண்டும் தொடக்கினர். இதற்கு முன்னர் நடைபெற்ற உண்ணாவிரத வேலைநிறுத்த பின் விளைவால் அந்த கண்டனத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே பாக்கி ஊதியம் அதிகாரிகளால் வழங்கப்பட்டது. மீதமிருந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டது. 41- பெண்கள் உட்பட 155 சுரங்கத்தொழிலாளர்கள் இரண்டாவது எதிர்ப்பில் பங்கெடுத்துக்கொண்டனர். நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த பின்னரே எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது.

ஜூனில், உண்ணாவிரத வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட 53 வயது வாலண்டினா செஸ்டாக்கோவா, மாரடைப்பினால் மாண்டார். ''உண்ணாவிரதப்போராட்டத்தின் போது அவர் உடல் எடையை இழந்து எலும்புக் கூடாக நடமாடினார். அவர் உண்ணாவிரதத்தினால் தான் மடிந்தார் என்று நான் நம்புகிறேன், ஆனால் டாக்டர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று (தொழிற்சங்க குழு) தலைவர் Aleksandr Atyukov, Izvestia நிருபரிடம் தெரிவித்தார்.

* மே-22- ல், Rostovskaya பிராந்தியத்தைச் சார்ந்த காலாவதியாகிவிட்ட OAO Obukhovskaya சுரங்கத்தில் பணியாற்றி காயமடைந்த சுமார் 300- முன்னாள் சுரங்கத்தொழிலாளர்கள் 1997- முதல் தங்களுக்கு வரவேண்டிய பாக்கி 7 மில்லியன் ரூபிள்களை(233,333 டாலர்) மறுத்துவிட்டதால் உள்ளூர் ரயில் நிலையத்தில் மறியல் செய்தனர். அது மட்டுமல்லாமல் சட்டத்தின்படி 70- வயதுவரை தாங்கள் பெறமுடியும் என்று கூறப்படுகின்ற, பணியாற்றுகின்ற வல்லமையை இழந்துவிட்டதற்காக மேலும் 20- சதவீத கூடுதல் இழப்பீட்டையும், வழங்கவேண்டுமென்று அவர்கள் கோரினர். சுரங்கத்தொழிலாளர்கள் மீது நிர்வாகத்தினரும், போலீசாரும், நெருக்குதல்களை கொண்டுவந்தனர். அந்த எதிர்ப்பில் கலந்து கொண்ட ஐந்து தலைவர்கள்15- நாட்கள் சிறைதண்டனை என்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட 17- பேர் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டனர்.

* ஜூன் ஆரம்பத்தில் Rostovakaya மண்டலத்திலுள்ள Shakhta நகர சுரங்கக் கருவிகள் தாயரிப்பு தொழிற்சாலையை சார்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத வேலைநிறுத்தத்தை தொடக்கினர். அவர்களுடன் Novoshaktinsk -ல் உள்ள மற்ற Shaktinskiy SMU மற்றும் Autoworks Number 5-ஐச் சேர்ந்த 30- தொழிலாளர்களும் சேர்ந்துகொண்டனர். இந்தத் தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 27-மில்லியன் ரூபிள்கள் (9,00,000 டாலர்கள்) பாக்கி தரவேண்டியிருக்கிறது. ஆகஸ்டில் அந்த பாக்கியை தருவதாக நிர்வாகம் உறுதியளித்திருந்தது. Rostovugol சுரங்க நிறுவன சொத்துக்களை விற்பதன்மூலம் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிவிட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி Rostovugol சுரங்கங்கள் அனைத்தையும் விற்றாலும் சம்பள பாக்கியை தந்துவிட முடியாது. ஜூன் 21-ல் உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தது.

* ஜூலை 7-ல் Shakta (Rostovskaya பிராந்தியம்) நகரத்தைச் சார்ந்த 22 சுரங்கத்தொழிலாளர்கள் தோராயமாக 5-மில்லியன் ரூபிள்கள் (166,666 டாலர்கள்) சம்பள பாக்கி கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடக்கினர். OAO Rostovshaktostraya -வின் பல துணை நிறுவனங்கள் மூடப்பட்டது, தொழிலாளர்களுக்கு அது தொடர்பான இழப்பீடோ அல்லது சம்பள பாக்கியோ வழங்கப்படாது நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்வதற்கு வழிவகுத்தது. பல தொழிலாளர்களுக்கு ஓராண்டிற்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஜூலை 19-ல், திவாலாகிவிட்ட OOO Mining-Passage Building Administration-ஐ சேர்ந்த 30- தொழிலாளர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொள்ளத்தயாராக இருப்பதாக அறிவித்தனர். ஆகஸ்ட் 17-ல் Nezavisimaya Gazeta பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி அந்த பிராந்தியத்தை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்றும், சுமார் 300- நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டது. இந்த சம்பளபாக்கி தோராயமாக 700- மில்லியன் ரூபிள்கள் ($2,333,333 டாலர்கள்) ஆகும். ''Don பகுதியில் பட்டினி வளரும். ஏனெனில் அந்தப்பகுதியில் இப்போது உண்ணாவிரத போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சில நேரங்களில் ஊதியத்தைப்பெற ஒரே வழி உண்ணாவிரதப் போராட்டம்தான்'' என்று Nezavisimaya Gazeta பத்திரிகை எழுதியிருக்கிறது.

ஊதிய தாமதங்கள்

சம்பள பாக்கிகளின் அளவு மிக வேகமாக குறைந்துகொண்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது. 1990-களின் நடுவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் இருந்ததை ஒப்புநோக்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். என்றாலும் அரசாங்கத்தின் கூற்றை ஆழமாக ஆராயும்பொழுது அது மோசடியான வாதமென்று நிரூபிக்கப்படுகிறது.

ஊதியங்கள் வழங்கப்படுவது தொடர்பான பிரச்சனை எழுப்பப்படும்போது, மற்றைய அரசாங்க மட்டங்களுக்கு எதிர்ப்பாக இருப்பது போன்றே, பெரும்பாலும் அந்த விவாதம் மத்திய அரசாங்கத்தின் கடப்பாடுகளை சுற்றியே வருகிறது. என்றாலும் பிராந்திய நிர்வாகங்கள் ஊதியங்களை நிறுத்துவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு அவர்கள் கூறுகின்ற சமாதானம் வரிவருவாய் பற்றாக்குறை என்பதுதான். (பெரும்பாலான பிராந்திய அரசாங்கங்கள் திவாலாகிவிட்டன. செலவினத்தைவிட வருவாய் அதிகரிப்பது மிக அபூர்வம். பிராந்தியங்கள் மாஸ்கோவையே நிதி ஆதரவிற்கு சார்ந்திருக்கின்றன.)

மேலும் ஊதியக்கடமைகள் நிறைவேற்றம் என்ற புள்ளிவிவரங்களின் கீழ் அரசாங்கத்துறைதான் வரும். தனியார் நிறுவனங்கள் நிலைப்பாடு பொதுவாக மோசமாக உள்ளது.

அரசாங்க தொழிலாளர்துறை (Gosinspektsiya Truda) வெளியீட்டு அறிக்கைகளின்படி 2004- முதல் சில மாதங்களில் அரசுத்துறை சார்பில்லாத தனியார்துறை நிறுவனங்களில் 15,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. 8,800- முதலாளிகள் ஊதிய பாக்கி வைத்திருந்தனர். 6,000- முதலாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு அதிகப்பட்சம் 5,000-ரூபிள்கள் (167-டாலர்கள்) தான் அபராதம் விதிக்கப்பட்டன. பல்வேறு தொழில்களைச்சார்ந்த 5.60,000- தொழிற்சாலைகளில் சம்பளப்பாக்கி 2.2 மில்லியன் ரூபிள்கள் (73,333 டாலர்கள்) திரும்ப செலுத்தப்பட்டன என்று அரசாங்க தொழிலாளர்துறை (Gosinspektsiya Truda) அறிவித்தது.

ஆகஸ்ட் 1998- கடன் திருப்பிக் கொடுக்க முடியாநிலை நிலையின் காரணமாக, ரூபிள் மதிப்பு டாலருக்கு 5 மடங்கு வீழ்ச்சியடைந்தபோது 1990களில் குவிந்து போன சம்பளபாக்கிகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்கனவே சமாளித்தது என்று கூறிக்கொள்ள முடிந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அரசாங்கத்தின் ஏற்றுமதி வருமானம் "ரொக்கப் பணத்தை" அடிப்படையாக கொண்டிருக்கிறதோ, அதன் செலவினங்கள் (சம்பளப்பாக்கி உள்பட) ரூபிளில் கணக்கிடப்படும்பொழுது, புட்டினின் கிரெம்ளின் சம்பள பாக்கி பிரச்சினையை தொழிலாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் தீர்த்தது, தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தின் உண்மையான பணத்தை ஒருபோதும் திரும்பப்பெறவில்லை.

மே முதல் தேதி நிலவரப்படி ரஷ்யாவில் (4 மில்லியன் மக்கள்) எட்டு அரசாங்க ஊழியர்களில் ஒருவருக்கு சம்பளபாக்கி இருக்கிறது. அரசாங்கம் தந்துள்ள தகவலின்படி சம்பளபாக்கி 24 பில்லியன் ரூபிள்களாகும் (80,000 -டாலர்கள்). இது மாதாந்திர மொத்த ஊதியத்தில் 7.4- சதவீதமாகும்.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது சுகாதார மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் Mikhail Zurabov, ''ரஷ்ய குடிமக்களது நலன்களை காப்பதற்கான அமைப்பு எதுவும் உருவாக்கப்பட வில்லை'' என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த உள்ளடக்கத்தில், தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை புதுப்பித்திருப்பது முற்றிலும் இயல்பானது மற்றும் அவசியமானது ஆகும். இத்ப் போக்கு வளரும் ஏனென்றால் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் எல்லா நடவடிக்கைகளுமே (குறிப்பாக, சமூ நலன் அமைப்பின் உருமாற்றம் அது "பட்டுவாடா செய்யப்படும் விதத்திலிருந்து" பணவடிவிலான இழப்பீடு வரையில்) வெகுஜனங்களின் வாழ்க்கைத்தரத்தின் மீது தாக்குதல்கள் தொடரும் என்பதைக் குறிக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved