WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The Republican convention: Wall Street fetes its political stooges
குடியரசுக் கட்சி மாநாடு: வோல்ஸ்ட்ரீட் அதன் அரசியல் கையாட்களுக்கு விருந்தளித்துக்
கொண்டாட்டம்
By David Walsh
2 September 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஒரு துர்நாற்றம் நிறைந்த ஊழலின் வாடை, மாடிசன் சதுக்கத் தோட்டத்தை
சூழ்ந்துள்ளது. அமெரிக்க நவீன அரசியலில் ஊழல் படியாத பொற்காலமே இருந்தது கிடையாது. "அமெரிக்கா ஒரு
வேறுபட்ட குற்றவர்க்கத்தைக் கொண்டிருக்காத நாடு, சாத்தியமான விதிவிலக்காக காங்கிரஸ் இருக்கக் கூடும்"
என்று மார்க் ட்வைன் முன்பு காரணமில்லாமல் கூறிவிடவில்லை.
ஆனால் நியூயோர்க் நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியரசுக் கட்சியின் தேசிய
மாநாட்டிற்கு வந்துள்ள, புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள், மற்றும் தேசியச் சட்ட மன்றங்களின் உறுப்பினர்களை
விருந்தோம்பும் வகையில், பெருவணிக நிறுவனங்கள் வெட்கங்கெட்டதனத்திலும் ஒரு புதிய சாதனையைச் செய்து
கொண்டு வருகின்றன. கணக்கிலடங்கா வகையில், நிறுவனங்கள் தங்களுடைய தொழில்களை ஒழுங்குபடுத்துதல்,
கண்காணித்தல் இவற்றைச் செய்யும் பொறுப்பை நேரடியாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகளுக்கு பெரும் வெகுமதி
அளித்துக் கொண்டு வருகின்றன.
நியுயோர்க்கில் நடைபெறும் மாநாட்டுத் திருவிழாவில், கிட்டத்தட்ட திமிர்த்தனமும்,
களியாட்டத் தன்மையும் நிறைந்துள்ளது, கடந்த இருபது ஆண்டுகளாக ஒரு நிதிபிரபுத்துவமும் அரசியல் செல்வந்தத்
தட்டும், தங்களையே கட்டுப்படுத்த முடியாத வகையில், தங்களுடைய ஊழல்களில் எந்த அளவிற்கு மூழ்கி தங்களை
செல்வக் கொழிப்பில் திளைத்துவைத்துக் கொள்ளும் முயற்சியில் வியத்தகு வெற்றி கொண்டு பூரித்துள்ளது என்று எடுத்துரைக்கிறது.
தற்போதைய குடியரசுக் கட்சி தலைமையின் அறநெறி உணர்வு இழை பற்றிப் பொது
மக்களிடையே ஒப்பீட்டளவில் சில பிரமைகள் இருக்கலாம் என்றாலும், அரங்கத்தில் இருந்து அறிவுரை "மதிப்புக்கள்
பற்றி" வெற்றுரையாற்றும்போதும், அடிக்கடி "லிங்கனுடைய கட்சி என்று குறிப்பிட்டுக்கொள்ளுவதும், முற்றிலும் பெருவணிக
செல்வந்தத்தட்டின் தலையசைப்புக்கும் ஏவலுக்கும் எப்பொழும் இவர்கள் நிற்கும் உண்மையுடன் வேறுபடுத்திப் பார்க்க
இன்னும் பயன் உள்ளதாக இருக்கிறது.
போஸ்டனில் நிகழ்ந்த ஜனநாயகக் கட்சியின் மாநாடுபற்றி தன்னுடைய தகவலில்
WSWS
குறிப்பிட்டிருந்தது போல், இரண்டு நிகழ்ச்சிகளின் செலவுகளுமே, "மாநாடுகளை, விரும்பும் அரசியல் வாதிகளுக்கு
சட்ட பூர்வமான இலஞ்சம் கொடுக்கும் வடிவமைப்பில், மாநாடுகளை பயன்படுத்தும் வகையில், பெருவணிக
நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன."
குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கான செலவு கிட்டத்தட்ட $64 மில்லியன் ஆகும்;
இதை 100 பெருநிறுவனங்களும், சில தனிப்பட்ட பில்லியனர்களும் (நியூ யோர்க் மேயர் மைக்கேல் ப்ளும்பெர்க்,
டேவிட் ராக்பெல்லர் போன்றோர்) பகிர்ந்து கொள்ளுகின்றனர். ஜனநாயககட்சியின் இதன் பிரதிக்கு ஆன செலவு
$39 மில்லியன்தான்.
பெருநிறுவனமுறையின் தாராள மனத்தின் சில உதாரணங்கள்: ஜெனரல் மோட்டார்ஸ்,
குடியரசுக் கட்சியினரின் உபயோகத்திற்காக 300 கார்கள், பஸ்கள், மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைப்
பிரதிநிதிகளை அழைத்து வருவதற்கும், திருப்பிக் கொண்டுவிடுவதற்கும் கொடுத்துள்ளனர்: நெக்ஸ்டெல் நிறுவனம்
கம்பியில்லாத் தொலைபேசிகள், பிளாக் பெரிகள் இவற்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர்; மைக்ரோசாப்ட்
நிறுவனம், தேவையான மென்பொருள் கருவிகளை அளித்துள்ளனர்; பானாசோனிக் நிறுவனம் 100
Viera
அதிமதிப்புடைய ப்ளாஸ்மா கண்காணிப்பு இயந்திரங்கள்- ஒவ்வொன்றும் $8,000 விலை மதிப்புடையன - நியூ
யோர்க்கிற்கும் போஸ்டனுக்கும் கொடுத்துள்ளன.
Altria Group ( கிராப்ட்
புட்ஸ், மற்றும் பிலிப் மோரிஸின் இணைப்பு நிறுவனம்),
AT&T, Verizon, பெரும் மருந்துத் தயாரிப்பு
நிறுவனங்களான Pfizer, Bristol-Keyers
Squibb ஆகியவை, அன்பளிப்புக்கள் கொடுந்த வேறு சில
அமைப்புக்கள் ஆகும். Time Warner
உடைய தலைமை நிர்வாக அதிகாரி, குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கு வந்துள்ள 15,000 செய்தியாளர்களுக்கு,
1 மில்லியன் டாலர் செலவில் விருந்து ஒன்று கொடுக்கிறார்.
பெருநிறுவனங்களின் அன்பளிப்பு, வியத்தகுவகையில் வெளிப்படையாகவும், வெட்கங்
கெட்டதனமாகவும் இருப்பதைக் கண்டு அமெரிக்க செய்தி ஊடகம் கூட அதைக் கருத்திற் கொள்ள வேண்டியதாயிற்று.
சென்ட் பீட்டர்ஸ்பேர்க் (புளோரிடா) டைம்ஸ் இன் வணிக நிருபர்
Robert Trigaux,
"உதாரணமாக, புளாரிடாவின் பிரதிநிதிகள் ஹில்டன் ஒட்டலில் பெரிய அறைகளை தங்கள் தலைமை அலுவலகங்களாக்
கொண்டுள்ளனர். அந்த அறையின் வாயிலில் உள்ள குறிப்பு தெரிவிப்பதுபோல் இது
Gulfstream Gas
நிறுவனத்தின் உபயமாகும். அந்நிறுவனம் வில்லியம் காஸ், டியூக் எனர்ஜி இவற்றின் கூட்டு நிறுவனமாகும்; அது
இயற்கை வாயுவை மத்திய புளோரிடா நுகர்வோருக்கு, 400 மைல் பரப்பளவிற்கு, $1.6 பில்லியன் எரிவாயுக்
குழாய்கள் அலபாமாக் கிணறுகளில் இருந்து கொண்டு வந்து கொடுக்கிறது", என்று குறிப்பிட்டுள்ளார்.
Trigaux தொடர்கிறார்:
"சட்டம் இயற்றுவதில் செல்வாக்கான நிலையைக் கொண்டுள்ள தேசிய சட்ட மன்ற உறுப்பினர்களில்
முக்கியமானவர்களை கெளரவப்படுத்துவதில், புளோரிடாவில் உள்ள பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் வச்சோவியா
என்ற இரு பெரும் வங்கிகள் முன்னணியில் உள்ளன; நியூ யோர்க் நகரத்தின் பண உலகில் உயர்ந்த இடத்தை
அடைவதில் ஆர்வம் காட்டும் வட கரோலினா நிறுவனங்கள் ஆகிய இவை புஷ் பிரச்சாரத்திற்கு முக்கிய
அன்பளிப்புக்களை கொடுப்பனவாகும்; இந்த வாரம் பெரிய விருந்துகளை கொடுப்பதிலும் அவை முன்னிற்கின்றன."
மேலும், "ஈராக்கில் நடக்கும் மிகச் செலவுபிடிக்கும் போரின் இடையே, பெரிய
பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களையும் மறக்கவேண்டாம். லாக்ஹீட் மார்டின், கென்டக்கியின் பிரதிநிதி
ஹரால்ட் ரோஜர்ஸிற்கு ஒரு வரவேற்பு விருந்தைக் கொடுக்கிறது. ...இதைத்தவிர சிறப்பு மாநாட்டு
வெளியீடுகளில் சுதந்திரச் சிலையை 'நாம் யாருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும்
மறவோம்' என்ற விளம்பரத்துடன் வெளியிட்டுள்ளது. ஹட்சன் ஆற்றையொட்டி, போயிங் நிறுவனம், மன்ற
உளவுத்துறைத் தலைவர் பிரதிநிதி போர்டர் காசை அடுத்து வந்துள்ள மிச்சிகன் பிரதிநிதி, பீட்டர்
ஹோக்ஸ்ட்ராவிற்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளது."
The Philadelphis Inquirer
இன் மாரியோ எப். கட்டபியானி குறிப்பிடுகிறார்: "இங்கு, முதலாளித்துவத்தின் மெக்கா நகரத்தில், பெரு வணிக
நிறுவனங்கள் பல மாதங்கள் தொடர்ந்து சிறந்த இடங்கள், சிறந்த விருந்து தயாரித்துத் திட்டமிடுவோர், சிறந்த
வகைகள் இவற்றை நான்குநாள் குடியரசுக் கட்சி தேசிய மாநாட்டில் பங்கு பெறுபவர்களை சிறப்பிக்கும் பெரும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளன."
'"Daimler
Chryzler, Union Pacific, General Motors
மற்றும் பலரும் மன்றத் தலைவர் ஜே. டெனிஸ் ஹாஸ்டெர்ட்டை கெளரவிக்கின்றனர். அமெரிக்க வங்கி, மன்ற
விதிக்குழுத் தலைவர் டேவிட் டிரேயிரை, "Big Apple
Martini and Bowling" என்ற விழாக்கூத்திற்குப் பதிவு
செய்துள்ளனர்.
"PepsiCo செனட்மன்ற
பெரும்பான்மை தலைவர், 2008 தேர்தலில் போட்டியிடலாம் எனப்படும், பில் பிரஸ்டை கெளரவப்படுத்த
தேர்ந்தெடுத்துள்ளது. நியூ யோர்க்கின் மதிப்பீட்டிலேயே பெரும் தொகை எனக் கருதப்படும், மூன்று மணி நேர
வரவேற்புநிகழ்ச்சியான Metropolitan Museum
Reception க்கு, $125,000 செலவழிக்கிறது."
New York Newsday
எரிச்சலுடன் வர்ணிக்கிறது: "உங்களுடைய டெக்சாஸ் டூ-ஸ்டெப் மற்றும் கெளபாய் காலணிகளைக் காட்ட
விரும்புகிறீர்களா? 'Good Ol" Honky Tonk
Salute" என்று பிரதிநிதி ஜோ பார்டன் (டெக்சாஸ் குடியரசு),
மன்றத்தின் ஆற்றல் மற்றும் வணிகக் குழுத் தலைவருக்குக் கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ளுங்கள். அதன் மூலம்
நீங்கள் அணு ஆற்றல் நிறுவனம், தேசிய சுரங்கச் சங்கம், எடிசன் எலெக்ட்ரிக் நிறுவனம் (பயன்பாடுகள் வர்த்தகச்
சங்கம்) இவற்றில் உள்ளோரையும் அறிந்து கொள்ளலாம்; ஏனென்றால் அவர்கள் தனித்தனியே $20,000
கொடுத்து விழா கொண்டாடுகின்றனர்."
" இன்னும் உயர்நிலை உணர்வு தேவையா?,
பிராங் சினட்ரா ஜூனியர் வானவில் அறையில் இசைப்பதைக் கேட்கவேண்டுமா? "தடையற்ற சந்தைத் தத்துவத்தை
ஆதரித்து, ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை' நடத்தும்
American Council for Excellence and Opportunity
என்ற 'அறக்கட்டளைக்கு' $25,000-ஆவது குறைந்தது கொடுங்கள்."
New York Times இல்
சாம் ராபர்ட்ஸ், இத்தகைய பெருஞ்செலவு விழாக்கள் "தேசிய மாநாடுகளில் தயவைச் சம்பாதிக்கும் வழக்கும்
பரந்திருப்பதையும், இடைத்தரகர்கள், வணிகச் சங்கங்கள், மற்ற குழுக்களிலுள்ளோர் ஏற்கனவே அதிகாரத்தில்
இருப்போரை நாடவும், பிரதிநிதிகள் வந்து சென்ற பின்னர், தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன"
என்பதை விளக்குகிறது. அவர் மேலும் எழுதுகிறார்: "இடைத்தரகர்கள், வர்த்தகச் சங்கங்கள், மற்ற விழைவோர்
குழுக்களும் அவர்களுடைய பிரதிநிதிகளும் புஷ் நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வணக்கம் செலுத்துவது
மட்டும் இன்றி, குறிப்பாக மன்றத்தை நடத்துபவர்கள் மற்றும் அதன் முக்கிய குழுக்களுக்கும் மரியாதை செலுத்துகின்றனர்."
புஷ் நிர்வாக அதிகாரிகள், காாங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியின் தலைவர்களின்
திக்கில் பணம் அள்ளி வீசப்படுவது பற்றிய வெளிப்படையான கட்டுரைகளில் ஒன்று வாஷிங்டன் போஸ்டில்
"வோல் ஸ்ரீட் விருந்தளிக்கிறது" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 30 அன்று வெளிவந்தது.
இங்கு உண்மையிலேயே பெருந்தொகையைக் காணலாம். குடியரசு மாநாடு "மிக
உயர்ந்த அளவிற்கு நிதிநிறுவனப் பிரபுக்களினால் செலவிற்கும் பெருந்தீனிக்கும் உட்படுத்தப்படுகிறது" என்று
விளக்கியுள்ளது. மாநாட்டின் 78 முக்கிய நன்கொடையாளர்களில் 31 பெரிய நிறுவனங்களும் நிதி,
காப்பீட்டுத்துறை, கணக்கு எழுதுதல், வங்கித்துறை இவற்றில் தனிப்பட்ட முறையில் தொடர்பு உடையவர்களாகும்.
இந்த நிறுவனங்கள், புஷ் நிர்வாகத்திற்கு நன்றிக்கடன்படுவதற்கு பல காரணங்கள்
உண்டு. அரசாங்கத்தின் நடவடிக்கைகளான செல்வத்தைப் பெரு நிறுவன செல்வந்தத் தட்டினருக்கு மறுபங்கீடு
செய்வதில் இவை மில்லியன்கணக்கான டாலர்களைத் திரட்டியுள்ளன. இந்த நடவடிக்கைகளில் மூலதன நலன்கள்மீதான
வரிக் குறைப்பு, பங்கு லாபத்தில் வரிகுறைப்பு போன்றவை உள்ளன; இவை கூட்டாட்சியின் வருவாயை $125.3
பில்லியன் அளவு 2010 வரை குறைத்துள்ளது; இந்தப் பெருந்தொகையில் ஒரு பங்கு வோல் ஸ்ரீட் நிறுவனங்களின்
கருவூலங்களுக்கும் அவர்களுடைய உயர்மட்ட முதலீட்டாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் செல்கிறது.
பெரு வணிகம் மற்றும் செல்வந்தர்களுக்கு, வரிக் குறைப்புக்களை
நிரந்தரமாக்குவதாக புஷ் உறுதிமொழி அளித்துள்ளதுடன், பெரு நில உடைமைமீதான வரியையும்
அகற்றப்போவதாகக் கூறியுள்ளார். பிந்தைய நடவடிக்கை அரசாங்க வருவாய்க்கு 10 ஆண்டுகளில் $133.2
பில்லியன் இழப்பைக் கொடுக்கும்.
ரிச்சர்ட் ஹன்ட் என்னும் பாதுகாப்புப் பத்திரத் தொழில்துறைச் சங்கத்தின் துணைத்
தலைவர், போஸ்ட்டிற்கு, "எந்த நிர்வாகமும் ஜனாதிபதி புஷ் மற்றும் இந்தத் தேசியச் சட்ட மன்றம்
செய்துள்ள அளவிற்கு நலன்களைச் செய்ததில்லை. எங்களுடைய தொழிலுக்கு பெரும் உதவி அளித்த சட்ட மன்ற
உறுப்பினர்களை பெருமைப்படுத்துவதில் ஒரு வகையாகத்தான் இந்த நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் இருக்கின்றன"
என்று கூறியுள்ளார்.
SIA , பத்திரச் சந்தைச் சங்கம்,
அமெரிக்க வங்கிகள் சங்கம், நிதிப் பணிகள் அரங்கு ஆகியவை ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு நன்கொடையளித்துள்ளன.
பிரதிநிதி மைக்கேல் ஜி. ஆக்ஸ்லீ (குடியரசுக் கட்சி-ஓகையோ), மன்ற நிதிப்பணிகள்
குழுவின் தலைவருக்கு அளிக்கப்படும் விருந்துகள் குறிப்பிடத்தக்கவையாகும். ஆக்ஸ்லீயும் அவருடைய குழுவும்
பெருநிறுவனக் கணக்குகள் ஊழல்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டிருந்தனர்; தங்களால் இயன்ற அளவுக்குப்
பெரு வணிகத்தை அதிகம் அம்பலப்படுத்தாமலும், கணக்குச் சீர்திருத்தச் சட்டங்களின் கடுமையைப் பெரிதும்
குறைக்கவும் பாடுபட்டிருந்தனர்.
மேலே மேற்கோளிடப்பட்டுள்ள
Newsday கட்டுரை ஆக்ஸ்லீயைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி
ஒன்றைப் பற்றிக் கூறுகிறது: "இவர் மன்றத்தின் சக்திவாய்ந்த நிதிப்பணிகள் குழுவின் தலைவராக இருக்கிறார் என்பது
Sevcurities Industry Association,
Bond Market Association இவற்றின் பார்வைக்குத்
தப்பவில்லை; அவை மாலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான நன்கொடைகளைக் கொண்டு வந்துள்ளன."
ஆக்ஸ்லீ நிதிப்பணித் தொழிலில் இருந்து பெருந்தொகையை பெறுகிறார். 2003-04
புள்ளிவிவரங்களின்படி, பாதுகாப்பு பத்திரங்கள், முதலீட்டு நிறுவனங்களில் இருந்து இவர் $197,656 -ம்,
$191,800 வணிக வங்கிகளில் இருந்து, $125,500 காப்பீட்டுத் துறை நிறுவனங்களில் இருந்து, $111,999
நிதி/கடனளிப்போர் நிறுவனங்களில் இருந்து, $98,000 கணக்கு எழுதும் நிறுவனங்களில் இருந்து, $61,250 நிலச்
சொத்து நிறுவனங்களில் இருந்து, $55,000 கணினி/வலைத்தள நிறுவனங்களில் இருந்து, $54,250 வக்கீல்கள்,
வக்கீல்கள் நிறுவனங்களில் இருந்து மற்றும் $40,038 மருந்துத் தயாரிப்பு, சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு
நிறுவனங்களில் இருந்து பெற்றுள்ளார்.
இச்சட்ட மன்ற உறுப்பினர் சமீபத்தில்
Gannett News Service இடம், தான் மன்றத்தில்
போடும் வாக்குகள் தொழில் நிறுவனங்களின் அளிப்புக்களினால் செல்வாக்கிற்கு உட்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள மற்ற விருந்துகள் அமெரிக்க வங்கியாளர்கள் சங்கம்
செனட்டர் ரிச்சர்ட் சி. ஷெல்பி (அலபாமா-குடியரசு), செனட்டர் வங்கிக் குழுத் தலைவராக இருப்பவர், மற்றும்
மன்றத்தின் மூலதனச் சந்தை பற்றிய துணைக்குழுவின் தலைவரான பிரதிநிதி ரிச்சர்ட் எச். பேக்கர் (லூசியானா)
ஆகியோருக்கு உள்ளன. பிந்தைய விருந்திற்கு "மூலதனச்சந்தைக்கு ஒரு வணக்கம்" என்ற தலைப்பு கொடுக்கப்
பட்டிருக்கிறது; இது National Association of
Securities Dealers இன் அன்பளிப்பில் நடைபெறுகிறது.
புஷ் மறுதேர்தல் பிரச்சார முயற்சிக்குப் பெரும் நன்கொடை அளிப்பவர்களில் இன்னும்
சிலர், நிதி நிறுவனங்கள், கணக்கு நிறுவனங்கள் ஆகியவற்றில் மூத்த நிர்வாகிகளாக இருப்பவர்கள் ஆவர். இதில் உயர்
10 இடங்களில், மார்கன் ஸ்டான்லி டீன் விட்டர் ($517,680), மெரில் லின்ச் ($486,154),
Pricewaterhouse Corp.($484,150),
மற்றும் UBS
Financial Services ($335,650), உள்ளன.
நிதித் தொழில் துறையினால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் $12.2 மில்லியன் பணத்தைக்
குடியரசுக் கட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். அவர்கள் ஜனநாயகக்கட்சிக்கு $8.7 மில்லியனைக்
கொடுத்துள்ளனர்.
See Also
:
குடியரசுக் கட்சியின் மாநாடு
தொடக்கம்: போர் மற்றும் பிற்போக்கின் பணியில் பீதியைக் கிளப்பிவிடுதல்
குடியரசுக்கட்சி மாநாடு
நடைபெறுவதை ஒட்டி
நியூயோர்க்கில் பிரமாண்டமான புஷ்-எதிர்ப்புப் பேரணி
Top of page |