WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா :
கனடா
Canada:budget cuts have contributed to spread of super-bug
கனடா: வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் உயர்வகைக் கிருமிகள் பரவுதலுக்குக் காரணமாகியுள்ளன
By Guy Charron
30 August 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
கனேடிய மருத்துவ சங்க ஏட்டில் (Canadian
Medical Association Journal -CMAJ),
தொடர்ந்த பதிப்புக்களில் வெளிவந்துள்ள அறிக்கைகள், அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் கனேடிய
மருத்துவமனைகளில் சுகாதாரத்தை தாழ்த்தும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதையும், அதையொட்டி
Clostridium Difficile
பாக்டீரியா நுண்ணுயிரியினால் வரும் தொற்று வியாதிகளும், இறப்புக்களும் அபாயகரமான உயர்விற்கு வழிவகுத்துள்ளன
என்றும் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில்,
CMJ,
ஷேர்புரூக் பல்கலைக்கழக மருத்துவமனையில் (CHUS),
ஒரு தொற்றுநோய் வல்லுனராக இருக்கும் டாக்டர் ஜாக் பெபனுடைய அறிக்கையை வெளியிட்டது; இதன்படி
C. difficile
எனப்படும் நுண்ணுயிரி கடந்த 18
மாதங்களில் கியூபெக் மருத்துவமனையில் நூற்றிற்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புடன் தொடர்பு கொண்டுள்ளது
கூறப்படுகிறது.
இந்த ஏட்டின் ஜூலை இதழில், தொற்றுவியாதி வல்லுனர்கள் குழு ஒன்று,
மொன்ட்ரீயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் குறைந்தது 79 நபர்களும், கால்கரி மருத்துவமனையில் 4
நபர்களும் கிட்டத்தட்ட இதேகாலக்கட்டத்தில்
C.difficile
யினால் பாதிக்கப்பட்டு இறந்துபோயினர் என்று தெரிவித்துள்ளது.
C. difficile
என்பது குடல் வழியில் செழிக்கும்
பாக்டீரியாவாகும்; இது கடுமையான வயிற்றுப் போக்கை ஏற்படுத்துவதுடன், சில தீவிரத் தன்மை உடைய நோயாளிகளிடையே
குடல் பெருக்கத்தையும் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக மருத்துவமனைகளில் வயது முதிர்ந்த நோயாளிகள்,
மற்றொரு தொற்றுநோயான நியூமோனியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, ஆன்டிபயோடிக் செலுத்தப்பட்டு
சிகிச்சை பெறுவோரைப் பாதிக்கும். இந்த ஆன்டிபயோடிக் குடலின் நலன் தரும் பாக்டீரியா தொகுப்புக்களை வலுவழிக்கச்
செய்கிறது; இதையொட்டி பல ஆன்டிபயோடிக்குகளை எதிர்க்கும் சக்தியுடைய
C. difficile
குடலில் வேரூன்றி, கிருமிகள் பெருகுவதற்கு வழிகோலப்படுகிறது.
C. difficile
தோற்றுவிக்கும் தொற்றுநோய்கள்
பெருகி விட்டதாகப் பெபனுடைய அறிவிக்கை தெரிவிக்கிறது. 1991-92ல்
CHUSல்
உள்ள இரண்டு மருத்துவமனைகளில் 169 நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர்; பத்தாண்டுகளுக்குப் பின்னர்
ஆண்டின் மொத்த எண்ணிக்கை 244 ஆக உயர்ந்தது. 2003 அளவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 390
ஆக உயர்ந்து, இந்த ஆண்டு முதல் ஆறுமாத காலத்தில் எண்ணிக்கை 325 ஆக இருந்தது.
கனடாவின் மற்ற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், இதனை
ஒரு பெரிய போக்கின் பகுதியே எனச் சுட்டிக்காட்டுகின்றன. தகவல் கிடைத்துள்ள ஆறு மொன்ட்ரீயல் மருத்துவமனைகளில்,
2003ம் ஆண்டு, C.
dificile
னால் ஏற்படும் தொற்று நோய் 1400 பேருக்கும்
மேலாகத் தாக்கியது என்றும், கால்கிரி மருத்துவமனைகளில் 2000-01ல் 1100 நோயாளிகளுக்கும் மேலாகத்
தாக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கின்றன.
"மருத்து மனையினால் விளையும் தொற்றுநோய்களில், நாம் பெற்றுள்ளவற்றில் மிகக்
கடுமையான தொற்று வியாதியாக இது உள்ளது" என்று டாக்டர் பெபன் கூறியுள்ளார்.
"2004ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவே, கியூபெக் மாநிலத்தில்
CPAD
தாக்கியுள்ளது [C.difficile
தொடர்புடைய வயிற்றுப் போக்கு]
என்ற கண்டுபிடிப்பு ஏற்பட்டு 30 நாட்களுக்குள் 1000 நோயாளிகள் இறந்திருப்பர் எனக் கூற முடியும்" என்று
டாக்டர் பெபன் எச்சரித்துள்ளார். இது உண்மையென்று நிரூபணமானால், கிட்டத்தட்ட இதனால் ஏற்படும்
உயிரிழப்புக்கள் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மொத்தத்தில் பாதி என ஆகிவிடும்.
டாக்டர் பெபனுடைய அறிக்கையை கியூபெக் அரசாங்கம், பீதியைப் பரப்பும்
அறிக்கை என்று எளிதில் திறமையுடன் உதறிவிட்டிருக்கிறது கனேடியச் செய்தி ஊடகத்திற்கு, லிபரல் கட்சியின்
சுகாதார மந்திரி போல் குய்யார்ட் தெரிவித்தார்: "பாக்டீரியா அவர்களிடத்தே இருந்தபோது நூறு பேர்
இறந்துள்ளனர். இதனால் அவர்களுடைய மரணம் இந்த பாக்டீரியாவினால் ஏற்பட்டது என்று கூறுவதற்கு இல்லை."
டாக்டர் பெபன், அனைத்து மரணங்களுமே "உயர் ரக
C.difficile"
யின் மூலம் வந்தவை என்ற கருத்தைக் கூறிவிடவில்லை. தொற்று வந்தவர்களில் பலர் ஏற்கனவே மோசமாக
நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள்தாம். ஆனால் அவருடைய அறிக்கைக்கு அதிகாரபூர்வமான பொருட்படுத்தாத
தன்மையைக் கண்டு அவர் சீற்றம் அடைந்துள்ளார். "நானே இந்த நோயாளிகள் சிலரைப் பார்த்திருக்கிறேன்.
பெரும்பாலானவர்கள்
C.difficile
யினால் நேரடியாகப் பாதிப்பிற்குட்பட்டவர்கள்"
என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் பெபனுடைய அறிக்கை
C. difficile
கூடுதலான முறையில் பெருகிவிட்டது என்றும்,
அதனுடைய வன்மை அதிகமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது முக்கியத்துவமானது. 1991ம் ஆண்டு
C. difficile
தொற்று உள்ளது என்று
அடையாளம் கண்டிபிடிக்கப்பட்டவர்கள் முப்பது நாட்களுள் 5% இறப்பிற்கு உட்பட்ட நிலையில், 2001ல் இறப்பு
விகிதம் 14 சதவிகிதமாகப் போய்விட்டது.
ஆராய்ச்சியாளர்கள் தொற்றின் பரப்பிற்கும், கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு
முறையின் செலவினங்களுக்கு, மிகப் பெரிய வெட்டுக்கள் கூட்டாட்சி தாராள, மாநில தாராளக் கட்சியான
Parti Quebecois,
Conservative, NDP
அரசாங்கங்களால் நடத்தப்பட்டதற்கும் நேரடித் தொடர்பை காட்டியுள்ளதால், அரசாங்கம் மிக விரைவில்
C. dificile
உடைய முக்கியத்துவத்தைக்
குறைத்துப் பேசுகிறது. மருத்துவமனைகளுக்கு வரும் செலவினத்தொகையின் குறைப்பினால் சுகாதாரத்தன்மை
குறைக்கப்பட்டு விடுவதோடு, நோயாளிகள் அதிகமாகப் பிரிவுகளில் திணிக்கப்படுவதும், மருத்துவ ஊழியர்கள்
குறைதலும் சேர்ந்து விட்டன.
"C. dificile :
ஒரு அஞ்சத்தக்க எதிரி" ("C.
dificile: A formidable foe")
என்ற ஜூலை மாத CMAJ
அறிக்கையில், "பல அமைப்புக்களிலும்
தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டதுடன், செவிலியரின் பணிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளன.
தளத்திலும், கருவிகளிலும் நிறைந்துள்ள
C.difficile
பாக்டீரியாக்களை அகற்றுவது
எளிதல்ல. வேலைச்சுமை அதிகரிக்கும்பொழுது கை முறையில் சுத்தத்தைக் காக்கும் நடவடிக்கைகள் கடினமாகின்றன.
தனிமைப்படுத்தப் படவேண்டியதற்கான நெறிகள் குறைவாகக் கொள்ளப்படும்போது, கூடுதலான சுற்றுச் சூழல்
திரட்டின் சுமை ஒன்று சேர்ந்து
C.difficile
கலப்புத்தொற்றை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடும்." என்று கூறப்பட்டுள்ளது.
"பல மருத்துவமனைகளிலும் இப்பொழுதுள்ள வசதிகள் பழமையானவை; தனி அறைகளோ,
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறைகளோ மிகக் குறைவாக உள்ளன. பொது வார்டுகளிலும், அவசரக்காலத் துறைகளிலும்,
கூட்டம் பெருத்து, மொத்த நபர்கள் கட்டிலுக்கு என்ற விகிதம் விரைவாகியுள்ளது. இது
C.difficile
ஐக் கட்டுப்டுத்துவதைக் கடினமாக்கியுள்ளது;
குறிப்பாகக் குடல்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத நோயாளிகளிடையே
இது மிகவும் கடினமான செயலாகும். ஒரே அறையில் பல நோயாளிகளின் கட்டில்கள் இருந்து கழிப்பறை உபயோகம்
பகிர்ந்து கொள்ளப்படுதல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது."
"CHUS
ல் சில நேரம் நாற்பது நோயாளிகள் ஒன்று அல்லது இரண்டு கட்டில்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலை இருக்கிற
துறைகளும் உள்ளன. ...இதன் விளவாக, சில பழைய கட்டிடங்களில் சுகாதார வசதிகள் சகித்துக்கொள்ள
முடியாமல் இருக்கின்றன. நான் என்ன கூறுகிறேன் என்றால் இது மிக இழிவானது" என்று டாக்டர் பெபன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் கியூபெக்கோடு மட்டும் நின்றுவிடவில்லை. "மொன்ட்ரீயலில் செய்திகளைக்
கேட்டால் பீதி வருகிறது. நாளை இதே போன்ற நிலைமை டோரோன்டாவிற்கும் வரக்கூடும்." என்று
டோரோன்டோவின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் தொற்று நோய் வல்லுனர் டாக்டர் ஆல்லிசன் மக் கீர் கூறியுள்ளார்.
2003 ம் ஆண்டில், டோரோன்டாவில், கிழக்கு ஆசியாவிற்கு வெளியில், வேறு எந்த
நகரம், பகுதி, நாட்டிலும் இல்லாத அளவு நெருக்கடியையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திய
SARS
க்கும், C. dificile
தொற்றுநோய் பரவுதலுக்கும் பல
முக்கியமான ஒற்றுமைகள் இருக்கின்றன.
SARS
ன் பாதிப்பில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதை மருத்துவமனைகளில் இருந்து நோயாளியாக அல்லது
பாதுகாப்புத் தொழிலாளராக இருந்து பற்றிக் கொண்டவர்கள்தாம்.
ஒன்டாரியோ அரசாங்கம் நியமித்திருந்த விசாரணைக்குழு, கூட்டாட்சி தாராள மற்றும்
ஒன்டாரியோ கன்சர்வேட்டிவ் அரசாங்கங்கள், ஒன்டாரியோவின் சுகாதாரத்திற்கான செலவினங்களைக் குறைத்தது
பற்றியதில் கொண்டிருந்த பங்கை பூசிமறைத்துவிட்டன என்றாலும்,
SARS
தொற்றின் பரவியதன்மை, மாநிலத்தின் சுகாதாரப் பிரிவின் வலுவற்ற தன்மை, மருத்துவமனைகள் கூடுதலான
நோயாளிகளைச் சமாளிக்கும் நிலை, காலம் கடந்துவிட்ட உட்கட்டுமானம், ஊழியர்களுக்கு போதிய நேரம்,
வசதிகள் இவற்றின் குறைவு, முழுநேர செவிலியர்கள் நியமனம் செய்யாதது என்பவை அரசாங்கத்தின் செலவினக்குறைப்பினால்
ஏற்பட்டன என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. (வரவையும் செலவையும் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்
செவிலியர் பல மருத்துவமனைகளில் பகுதிநேர வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் தங்களையும்
அறியாமல் SARS
ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கவனக்குறைவாக பரப்பவும் காரணமாயிருந்தனர்.)
Top of page |