World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: வட அமெரிக்காOn eve of Republican Convention Massive anti-Bush march in New York குடியரசுக்கட்சி மாநாடு நடைபெறுவதை ஒட்டி நியூயோர்க்கில் பிரமாண்டமான புஷ்-எதிர்ப்புப் பேரணி By a WSWS reporting team ஞாயிறன்று இலட்சக்கணக்கான மக்கள் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை பெருமளவில் புறக்கணிக்கும் வகையில் குடியரசுக்கட்சி தேசிய மாநாடு நடைபெறவிருக்கும் நியூயோர்க் நகர Madison சதுக்க தோட்டத்தை தாண்டி ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர். அந்த அணிவகுப்பை நடத்தியவர்கள், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் 4,00,000 பேர் என மதிப்பிட்டனர், நியூயோர்க் நகர போலீஸ் துறையைச்சார்ந்த (NYPD) சில அதிகாரிகள் குறைமதிப்பீடு செய்து 120,000- பேர் என்று கொடுத்ததைவிட இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாகும். Manhatan வழியாக ஏறத்தாழ 40- பிளாக் கட்டடங்களைத்தாண்டி ஊர்வலத்தினர் சென்றபோது இன்னும் ஏராளமான மக்கள் ஊர்வலத்தின் தொடக்க நிலையிலேயே இருந்தனர். நெருக்கமான கூட்டம் ஏழாவது அவெனியூவில், 34-வது தெருவின் மேற்குப்பகுதியில் Broadway பகுதியில் 5-மணி நேரம் முழுவதும் அலை அலையாய் எழுந்தது. ஈராக்கிய போர், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமுதாய பிற்போக்கு கொள்கைகள் மீதாக புஷ் நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே நிலவிவரும் மகத்தான சமூக எதிர்ப்புணர்வு இந்தப்பேரணியில் வெளிப்படுத்தப்பட்டது. ஜனநாயகக்கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும் குடியரசுக்கட்சிக்கு தெரிவித்துவரும் அரைகுறை எதிர்ப்பு மற்றும் சிதைந்துவிட்ட தாராளவாத கொள்கைகளுக்கு கடும் வேறுபாடு கொள்ளும் வகையில் அப்பேரணியின் போர்க்குணம் விளங்கியது. கெர்ரி போரை ஆதரிக்கின்ற சூழ்நிலையின் கீழ், ஊர்வலத்தில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கானவர்கள் -அவர்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற பலர்- அரசியல் ரீதியில் தங்களது வாக்குரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். நகர அதிகாரிகளும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் FBI- ஐ போன்ற அதிகாரிகள் கண்டனப்பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களை அச்சுறுத்துவதற்கு எவ்வளவோ கெடுபிடிகள் செய்த பின்னரும் ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாத கூட்டு நடவடிக்கை படையினர் கண்காணிப்பு மற்றும் தொந்தரவுகளையும் பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று NYPD- லிருந்து அச்சுறுத்தலையும் மற்றும் ஊர்வலத்திற்குப் பின்னர் மத்திய பூங்காவில் கண்டனப்பேரணி நடத்துவதற்கு நியூயோர்க் நகர கோடீஸ்வர குடியரசுக்கட்சி மேயர் Michael Bloomberg அனுமதி மறுத்தலையும் எதிர்கொண்டனர். மேலும் நியூயோர்க் நகரம் ''ஆரஞ்சுவர்ண'' எச்சரிக்கை என்றழைக்கப்படும் உஷார் நிலையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது, அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற கிட்டத்தட்ட நாள்தோறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலம் சென்ற வழியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் அணிவகுத்து நின்றனர். 34-வது தெருவில் தலைக் கவசம் அணிந்த கலவரப் போலீசார் மற்றும் பெருகிய எண்ணிக்கையில் படைப்பிரிவுகள், மத்திய பூங்காவிற்கு வடக்கே ஊர்வலத்தினர் செல்லாது தடைசெய்யக்கூடியதாய் பலத்தைக்காட்டுமாறு பெருந்திரளாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. Madison சதுக்கத்தோட்டத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான போலீசார் -சிலர் தானியங்கித் துப்பாக்கிகளுடன் இருந்தனர்- தேசியக் காவலர் படை மற்றும் புலனாய்வுத்துறை முகவர்கள் திங்களன்று குடிரசுக்கட்சி மாநாடு தொடங்கும் Madison தோட்டத்தின் முன் நின்றனர். தோட்டத்தின் நுழைவுவாயில்கள் கான்கிரீட் தடுப்புக்கள் மற்றும் மணல் மூட்டைகள் அடங்கிய டிரக்குகளால் அடைக்கப்பட்டன.ஊர்வலத்தில் சென்றவர்கள் ''புஷ் வேண்டாம்'', ''போரை நிறுத்து, பொய்களை நிறுத்து'', ''மேலும் பல ஆண்டுகளை வீணாக்காதே'' போன்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர். பலர் கையினால் எழுதப்பட்ட ''நமது துருப்புக்களை ஆதரிக்க அவர்களை, தாய்நாட்டிற்கு கொண்டுவாருங்கள், "9/11க்காக நியூயோர்க் நகரத்திலிருந்து குடியரசுக்கட்சி தேசிய மாநாடு வெளியேறட்டும், மாண்டவர்கள் சார்பில் குடியரசுக்கட்சிக்கு வாக்கு கேட்காதே," ''வியட்நாமின் அரபு சொல்தான் ஈராக்'' போன்ற முழக்கங்கள் எழுதிய அட்டைகளை பிடித்துவந்தனர். தங்களது ஓட்டலுக்கு வெளியில் குடியரசுக் கட்சி மாநாட்டுப் பேராளர்களின் சிறு குழு ஒன்று பேரணியை பார்ப்பதற்காக கூடியபோது, ''நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்'' என்று ஊர்வலத்தில் சென்றவர்கள் முழக்கமிட்டனர். ஈராக்கிய போர் தொடங்கிய பின்னர் அமெரிக்கப்போர் வீரர்கள் பலியானதை குறிக்கும் அடையாளமாக ஊர்வலத்தின் ஒரு பிரிவு அமெரிக்கக் கொடிகள் போர்த்தப்பட்ட ஆயிரம் சவப்பெட்டிகளக் கொண்டு சென்றது. ஏறத்தாழ 90-பாகை பாரன் ஹீட் வெப்பத்தில் பேரணியினர் அணிவகுத்து வந்தனர், அவர்களில் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெக்சாஸ் போன்ற தொலைதூரத்திலிருந்து வந்து கலந்து கொண்ட இளைஞர்களும் உண்டு. நியூயோர்க் நகரத்தின் புலம்பெயர்ந்த சமுதாயங்களை சேர்ந்த கொரியர்கள், பிலிப்பைனியர்கள், ஹைட்டியர்கள், மற்றும் தெற்கு ஆசிய நாடுகளைச்சேர்ந்த இளைஞர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். புரூக்கிளினில் இருந்து வந்திருந்த Damien Neva மற்றும் Ula Bochinska இருவரும் "1939-ல் போலந்து, 2003ல் ஈராக்" எனும் பதாகையை சுமந்து வந்தனர். டேமியன் மிச்சிகனிலிருந்து வந்தவர், உலாவோ போலந்திலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர். அவர்களது பதாகைகள் பற்றி கேட்டபோது டேமியன் தந்த விளக்கம்: ''போலந்து படையெடுப்பின் மூலம் ஜேர்மனியின் இராணுவ வலிமை உச்சநிலைக்கு சென்றது. போலந்து மீது படையெடுத்து வந்தது, அவர்களது பாதுகாப்பிற்காகவும் கிழக்குப்பகுதியில் "வாழும் இடத்தை" உருவாக்குவதற்கும் என்று ஜேர்மனி சொன்னது. அதே போன்று அமெரிக்கா ஈராக் வசம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பது, அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கூறியது." ''இரண்டு படையெடுப்புக்களிலுமே ஒரு ஏகாதிபத்திய நாடு பலவீனமான ஒரு நாட்டைத்தாக்கியது.'' இந்தப் பேரணியில் முன்னாள் படையினர் பலரும், அதேபோல, பாலைவனத்தில் போர் சாரா பணிகளில் கலந்துகொண்ட ஈராக்கிலிருந்து திரும்பியுள்ள பணியில் இருக்கும் படையினரும், அணி வகுப்பில் கலந்து கொண்டனர். ஈராக்கிலிருந்து திரும்பியுள்ள படையினருள் ஒருவரான Mathias Feurer, இந்த அணிவகுப்பில் தான் கலந்து கொள்வது தற்போது ஈராக்கிலுள்ள தனது சக படையினர் தாய் நாட்டிற்கு திரும்ப அழைத்துவரப்பட வேண்டும் என்று கோருவதற்காகத்தான் என்று குறிப்பிட்டார். அவர் அமெரிக்க முதலாவது கவசவாகனப்பிரிவில் ஈராக்படையெடுப்பில் கலந்து கொண்டார் மற்றும் நான்கு மாதங்கள் அங்கு செலவழித்தார். இராணுவப்பணி முடிவில் இராணுவத்திலிருந்து திரும்புவதற்கு முயன்றார், ஆனால் அவரது சேவை அவரது விருப்பத்திற்கு மாறாக நீடிக்கப்பட்டது. தேசிய காவலர் பிரிவில் பணியாற்றுவதற்காக அவர் திரும்ப அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். ''போர் தொடங்கிய நேரத்தில் நான் நமது ஜனாதிபதி சொன்னதை நம்பினேன் அந்தப்போர் நியாயமானது என்று நினைத்தேன்" என்று Bronx வாசியான மாத்தியாஸ் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறினார். "அது நியாயப்படுத்தப்படும் என்று நான் நினைத்தேன் மற்றும் அங்கு பேரழிவு ஆயுதங்களை உண்மையிலேயே காண்போம் என்று கருதினேன், ஆனால் அங்கு ஒன்றுமே இல்லை.'' ஈராக் மக்கள் மீது போர் சுமத்திய வறுமை, அழிவு மற்றும் துன்பத்தால் தான் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார். ''முதலில் ஈராக்கில் அடியெடுத்துவைத்த போது அந்த நாட்டு குழந்தைகள் எங்களை வரவேற்கும், பரிசுகளை வழங்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நான் ஈராக்கைவிட்டு வெளியேறிய நேரத்தில் எல்லாமே நரகமாகி விட்டிருந்தது. நாம் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறார்கள். இன்றைக்கு இல்லாவிட்டாலும் வெகுவிரைவில் அதுதான் நடக்கும். அதற்கிடையில் ஏராளமான போர்வீரர்கள், ஏராளமான ஈராக் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று Mathias குறிப்பிட்டார். இளைஞர்கள் இராணுவத்தில் சேரவுரும்பும் எவருக்கும் அதனைச்செய்ய வேண்டாம் என்று தான் ஆலோசனை கூறவிரும்புவதாக மாத்தியாஸ் கூறினார். தற்போது போரில் கலந்துகொள்ள விரும்பாத இளைஞர்கள் சமையல்காரர்களாக கூட ஏதோ ஒன்றைத் தேர்ந்துகொள்ளலாம் என்றார். இப்போது காலாட்படையும் இராணுவப்போலீசும் தேவைப்படுகிறது, அந்தப் பணியில் சேர்ந்ததும், இந்த பயிற்சி எதுவுமில்லா இக்குழந்தைகளை போர்க்களத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள், அவர்கள்தான் போர்களத்தில் முதலில் மடிகிறார்கள். அங்குள்ள எவரும் நாட்டிற்கு திரும்பிவரவே விரும்புகின்றனர்" என்று Mathias குறிப்பிட்டார். முதலாவது வளைகுடாப் போரில் கலந்து கொண்ட Dave Pacella உடல் ஊனமுற்ற இராணுவத்தினர் சார்பில் பேரணியில் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டார். "ஈராக்கில் தற்போது நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும்" என அவர் சொன்னார். "அமெரிக்க நலன் எண்ணெய் ஆகும், ஆனால் ஈராக்கியர்கள் மதத்திற்காகவும் காலனியமயப்படுத்துவதற்கும் எதிராகப் போராடும்போது அவர்களுக்கு எதிரான ஒரு போரில் நீங்கள் வெல்ல முடியாது. ஈராக்கிலிருந்து திரும்பிவரும் போது அவர்களுக்கு சரியான சிகிச்சையளிக்கப்படவில்லை. இந்த நாட்டில் மக்கள் பட்டினி கிடக்கும்போது முன்னாள் போர்வீரர்களது சேவைகள் வெட்டப்படும் போது ஒரு நாளைக்கு ஈராக் போரில் 177- மில்லியன் டாலர்கள் செல்விடுவது மிகவும் அதிர்ச்சி தரத்தக்கது. ''ஈராக்கில் பணியாற்றும் இராணுவத்தினர் திரும்பி வரும்போது அவர்களுக்கு கலந்தாலோசனை தேவை. அவர்களது குடும்பங்களுக்கும் கலந்தாலோசனை தேவை. அவர்கள் அதைப் பெறவில்லை. உளவியல் மருத்துவ வசதிகள் வெட்டப்பட்டுவிட்டன.'' தனது தந்தை பென்சில்வேனியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிற முன்னாள் இராணுவத்தினர் என்றும், அவருக்கு வாரத்திற்கு ஒருமுறை உளவியல் சிகிச்சைத்தரப்பட்டு வருவதாகவும், ஆனால் தனது வீட்டிற்கு மிக அருகாமையில் இருந்த மருத்துவமனை மூடப்பட்டுவிட்டதாகவும், அதனால் சந்திக்க வாய்ப்பு வாங்குவதற்கு இரு வாரத்திற்கு ஒரு முறை அவர் நீண்டதூரம் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறதென்றும் Dave குறிப்பிட்டார். ''இராணுவத்தில் அதிகம் பேர் சேரவேண்டுமென்று விரும்புகிறார்கள் என நான் நம்புகிறேன், ஆனால் கடமை முடிந்ததும் உங்களை கவனிக்க விரும்பமாட்டார்கள் மற்றும் உங்களது மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் அடிக்கடி குறைக்கப்பட்டு விடுகின்றன'' என்று அவர் குறிப்பிட்டார். அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் வெகு சிலர்தான் கெர்ரி பிரச்சார பொத்தான்களை அணிந்திருந்தனர். ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவான பதாகைகள் மிக ஆபூர்வமாகவே காணப்பட்டன. இந்தப் பேரணியில் முன்னணி ஜனநாயகக்கட்சி தலைவர்கள் அல்லது தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கு எடுத்துக்கொள்ளவில்லை. போருக்கும் புஷ் நிர்வாகத்தின் இதர கொள்கைகளுக்கும் எதிராகக் கிளம்பியுள்ள பொதுமக்களது உணர்ச்சி வெளிப்பாட்டோடு தொடர்பறுத்துக்கொள்ள கட்சித்தலைமை விரும்பியது என்பதை இந்தப்பேரணி தெளிவாகக்காட்டியது. இந்த பேரணிக்கு தலைமைதாங்கி சென்றவர்களுள் Jesse Jackson, திரைப்படத் தயாளிப்பாளர் Michael Moore, நடிகர் Danny Glover மற்றும் சிறிதே நியூயோர்க் நகர கவுன்சிலர்கள் ஆகியோர் உள்ளடங்குவர். Madison சதுக்க தோட்டத்தின் முன் ஊர்வலம் சென்றடைந்தபோது, ஜாக்சன் ஊர்வலத்திற்கு முன்னால் சென்று ஒலிபெருக்கியில் முன் அணியில் இருந்த அனைவரையும் தரையில் அமருமாறு கேட்டுக்கொண்டார், "நம்பிக்கை ஒலியில், உதவி வழியில்" என்று திருப்பி உச்சரிக்கும்படி அழைப்பு விடுத்தார். அம்முழக்கம் கெர்ரி மற்றும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் எட்வார்ட்ஸ் சென்றமாதம் ஜனநாயக் கட்சி தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையை எதிரொலித்தது.சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ''புஷ்ஷிற்கும், கெர்ரிக்கும் சோசலிச மாற்றீடு'' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் 10,000- பிரதிகளை விநியோகித்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலருடன் விவாதங்களை நடத்தினர். பலர் கெர்ரிக்கு வாக்களிக்கப் போவதாக கூறினர், ஆனால் அது பற்றி அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றனர். மற்றவர்கள் SEP தேர்தல் பிரச்சாரத்தின் வலுவான அடிப்படையில் அக்கறை செலுத்தினர். லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க்கிற்கு வாகனத்தில் வந்த, வருகின்ற வழியில் தனது நண்பர்கள் பலரை அழைத்துகொண்டுவந்த, 25-வயது Alejandro Uruzmendi உடன் WSWS- உரையாடியது. அமெரிக்காவில் பிறந்த அவர், சில ஆண்டுகள் உருகுவே நாட்டிலுள்ள தனது குடும்பத்தினருடன் வாழ்ந்தார். அவர் சொன்னார்: "மூன்றாவது கட்சியை உருவாக்குவது கடுமையான பணி மற்றும் முயற்சியாகும். இதில் வருந்தத்தக்க அம்சம் என்னவென்றால், பெரும்பாலானோர் கெர்ரியை மட்டுமே மாற்றாகப் பார்க்கின்றனர். உண்மையான ஜனநாயகம் வருமானால் அது நன்றாக இருக்கும். ஜோன் கெர்ரி படையெடுப்பிற்கு உடன்பட்டார். புஷ் நிர்வாகத்தோடு எந்த கொள்கை மாற்றத்தையும் அவர் காட்டவில்லை அதற்குக்காரணம் புஷ்ஷை ஆதரிக்கின்ற அதே ஆட்கள்தான் கெர்ரியையும் ஆதரிக்கின்றனர். ''யார் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நமது நாட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கவே செய்யும்'' ஒரு பேக்கரி தொழிலாளி Carey Fay Horowitz பேட்டியளிக்கும்போது கூறினார்: ''ஈராக் போரை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். அந்தப்போர் பொய்களை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய்க்காக தொடக்கப்பட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் மீது விசுவாசத்தின் காரணமாக அந்தப் போர் இப்போது நீடித்துக்கொண்டிருக்கிறது. ''கெர்ரி இந்தப்போருக்கு ஆதரவு காட்டுவதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு நல்ல
மாற்று அல்ல. மற்றொரு கட்சி மாற்றாக இருக்க முடியும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டது.
மூன்றாவது கட்சி அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், அதுதான் சிறந்தது'' அவர் கூறினார்: ''ஜனநாயகத்தில் மாற்றுக்கள் பல இருப்பது மிக முக்கியமாகும். புஷ்ஷும், கெர்ரியும் மாற்றுக்களே அல்ல. ஹாலந்தில் பதினைந்துகட்சிகள் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டுள்ளன, அது அர்த்தமுள்ளது. அவற்றில் நான்கு அல்லது ஐந்து கட்சிகள் பெரிய கட்சிகள் ஆகும். ''புஷ்ஷினால் தான் ஐரோப்பாவில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகள் உருவாகியுள்ளன. ஹாலந்தில் உள்ள நண்பர்களும், சகாக்களும் அமெரிக்கா என்றாலே அதன் ஒவ்வொரு அம்சத்தையும் தவறான அடிப்படையில் எடுத்துக்கொள்கின்றனர். இது புஷ்ஷினால் மட்டும் ஏற்பட்டதல்ல, ஆனால் அமெரிக்கா ஈராக் தொடர்பாகவும் குறிப்பாக இஸ்ரேல் தொடர்பாகவும் மேற்கொண்டுள்ள கொள்கைகளினால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.'' கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக WSWS- பிரசுரங்களை படித்துவருகின்றதாக குறிப்பிட்ட ஜோன், இந்தப் பேரணியில் கலந்து கொண்டார். SEP தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவான பதாகைகயை ஏந்திவந்தார். அமெரிக்க துருப்புக்கள் உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்றும் இந்தப்போரை தொடக்குவதற்கு சதி செய்தவர்கள் மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ''குடியரசுக் கட்சியைப் போன்றே ஜனநாயகக் கட்சியும் அதே நிதி மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களை முன்னிறுத்தி சற்று வேறுபட்ட புனைவோடு பிரதிநிதத்துவம் செய்கின்றது என் நான் நினைக்கிறேன்" என்றார் அவர். ஈராக் பிரச்சனையை பொறுத்தவரை, மாற்று எதுவுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அமெரிக்கா உடனடியாக துருப்புக்களை விலக்கிக் கொள்ளாவிட்டால் ஈராக்கியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அல்லாவி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருவார். அமெரிக்க போர்வீரர்கள் மடிவதும், ஈராக் தரப்பில்சேதம் அதிகரிப்பதும் ஒரே உறுதியான நீரோட்டம்போல் இருக்கும்.'' வெள்ளிக்கிழமையன்று நியூயோர்க்கில் கண்டனப்பேரணிகள் தொடங்கியமை முதல் 400-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். Hudson ஆற்றுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒரு தற்காலிக காவல் முகாமில் NYPD அவர்களில் சிலரை காவலில் வைத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்றது, அதில் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாமலே பெரும்பாலோர் கைது செய்யப்பட்டனர் மற்றும் நகர போலீசார் மித மிஞ்சிய பலாத்காரத்தில் ஈடுபட்டனர். மாநாடு நடக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு 1000-பேரை கைது செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். |