World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Magdeburg demonstrators denounce Hartz IV cuts

ஜேர்மனி: மாக்டாபேர்க் ஆர்ப்பாட்டக்காரர்கள் Hartz-IV வெட்டிற்கு கண்டனம்

By Marius Heuser
17 August 2004

Back to screen version

ஆகஸ்ட் 9 ல் உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் குழு மாக்டாபேர்க்கில் Hartz-IV நடவடிக்கைகளை கண்டித்து பேரணியில் கலந்துகொண்டவர்களை பேட்டி கண்டது.

ஜோர்கன் B, வேலையில்லாத மின்சார நிபுணர்: ''ஏற்றத்தாழ்வு மற்றும் அரைகுறையான Hartz சீர்திருத்த திட்டத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது எனக்கு 62 வயதாகிறது. நான் ஓய்வுபெறுமாறு விரட்டப்பட்டேன். நான் 65 வயதை எட்டும்வரை ஓய்வூதியம் பெறுவதற்குக் காத்திருக்க வேண்டும்.

''எப்போதும் பணியாற்றாத நலன்புரி உதவித் தொகைகளை பெறுவோருடன் நானும் இணைக்கப்பட்டு விடுவேன். நான் 46 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அதில் 20 ஆண்டுகள் மூன்று பணிக்கால முறையில் (three-shift system) பணியாற்றியிருக்கிறேன். நான் எப்போதுமே அடிமட்டத்தில் தான் இருக்கிறேன். இப்போது அவர்கள் செய்வதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது''

WSWS: ''1989 ல் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

JB: ''அந்த நேரத்தில், நான் திங்கள் பேரணிகளில் கலந்துகொண்டேன். இன்றைக்கும் கலந்து கொள்கிறேன். ஆனால், அரசியல் சம்பவங்களை இப்படி துல்லியமாக ஒப்பு நோக்கி ஆராய முடியாது. அந்த நேரத்தில் மக்கள் ஆவேசக்குரல் கொடுத்தனர். அதற்குப்பின்னர், மிகப்பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், வேலைவாய்ப்பை பொறுத்தவரை படுமோசமாகி இருக்கிறது. அந்த நேரத்தில் இப்படி படுமோசமாக ஆகிவிடுமென்று எவரும் ஊகித்திருக்க முடியாது. நாய்கள் செல்வதற்கு பெரும்பாலனவை அனுமதித்தாதால், மிகவும் மோசமடைவது சாத்தியமானதாகும் ''

WSWS: ''மற்றொரு கட்சி அல்லது PDS ஏதாவது மாற்றத்தைச் செய்யுமா?''

JB: ''Lofontaine ஒரு கட்சியை உருவாக்குவாரானால் உடனடியாக அதை நான் ஆதரிப்பேன். PDS ற்கு நான் ஆதரவு தர முடியாது. நான் ஒரு புதிய இடதுசாரி கட்சிக்கு அதை Lofontaine, அற்றாக் அல்லது வேறு எவர் நடத்தினாலும் ஆதரிப்பேன். PDS மற்றும் அதன் முன்னோடியான SED தொடர்பாக நாங்கள் மோசமான அனுபவங்களைப் பெற்றுள்ளோம்''

WSWS: ''Lofontaine தலைமையிலான கட்சியிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? பொருளாதார நிலையில் அந்தக் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை''

JB: ''Lofontaine னின் கட்சியிடமிருந்து அல்லது சமூக அடிப்படையில் அதிக நீதி உணர்வோடு செயல்படும் எந்தக் கட்சியிடமிருந்தும் நான் அத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கமுடியும். மேற்கு ஜேர்மனி அதிகாரிகள் கிழக்கு ஜேர்மனிக்கு வந்து புதிய சட்டங்களை செயல்படுத்தினால் அவர்களுக்கு எப்படி கூடுதல் ஊக்குவிப்புத் தொகைகள் வழக்கப்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. Hartz-IV உதவித் தொகையை பெறுபவர்கள் 331 யூரோக்களுக்குள் தங்களுக்குள்ள எல்லா வசதிகளையும் செய்துகொள்ள வேண்டும். இது நியாயமல்ல. சமூக அடிப்படையில் நியாயமற்றது.

''பணக்காரர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் இங்கே செல்வ வரிகட்டுமாறு சட்டம் கொண்டுவர வேண்டும். இதுதவிர வரி ஏமாற்றுபவர்கள் மற்றும் அதே அளவிற்கு ஊழல் செய்கிற அரசியல்வாதிகள் ஆகியோருக்கு புதிய வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகை பெறுகிறவர்கள் அளவிற்கு அந்தஸ்து குறைக்கப்பட வேண்டும். எங்களது கணக்குகளை எப்படி முழுமையாக சோதிக்கிறார்களோ அப்படி அரசியல்வாதிகளையும், அக்குவேறு ஆணிவேறாக சோதித்து அவர்களது கணக்குக்களை அம்பலப்படுத்த வேண்டும். அப்போது அது நியாயமாகக் கூட இருக்கலாம். இதற்கும் இடதுசாரி சிந்தனைக்கும் சம்மந்தமில்லை. நியாய உணர்வின் காரணமாக இதை நான் சொல்கிறேன்''

WSWS: ''SPD ஆட்சிக்கு வந்ததும் நிதி அமைச்சர் பதவியிலிருந்து Oskar Lafontaine ஏன் ராஜிநாமா செய்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

JB: ''ஏனென்றால், அரசியல் முரண்பாடுகளே காரணமாகும். ஷ்ரோடர், CDU அளவிற்கு வலதுசாரி மனப்பான்மை கொண்டவர். அவர் SPD யோடு எந்தவித உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்னும் கட்சியில் இருக்கிற விரல்விட்டு எண்ணத்தக்க இடதுசாரிகள் சமூக நீதிக்காக போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் அடக்கப்படுகிறார்கள். அவர்களது கருத்துக்களை எவரும் கேட்பதில்லை. Nahles போன்ற ஒரு இடதுசாரி ஏதாவது சொல்கிறார் என்றால் அதற்காக அவர்கள் முற்றிலும் கலவரம் அடைகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

* * * * * *

மோனிக்கா டிரொய்ட்ச், வேலையில்லாத ஒரு எழுத்தர்: ''இங்கே மனித உரிமைகளின் அடிப்படை சட்டத்திற்கு எதிராக எல்லாம் நடக்கிறது. திறமைமிக்கவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு மேலும் தகுதிகளை வளர்த்துக்கொண்ட பின்னர் இப்போது அழிவை எதிர்நோக்கி உள்ளனர். எனது இரண்டு குழந்தைகளுக்கு நான் மட்டும்தான் பெற்றோர். அவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட நான் எப்படி அடுத்த ஆண்டு என்னுடைய குழந்தைகளை காப்பாற்றப் போகிறேன்''

WSWS: ''தனிப்பட்ட முறையிலும் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?''

MT: ''ஆம் எனது கணவனிடமிருந்து 1989 ல் பிரிந்தேன். அதிலிருந்து நான் வேலையில்லாமல் இருக்கிறேன். வேலை கிடைக்காது ஏனென்றால் வேலையில் பழைய தொடர்புகள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன மற்றும் தற்பொழுது எல்லாவற்றையும் அவை கட்டுப்படுத்துகின்றன. பழைய நடைமுறைகளோடு சம்மந்தமில்லாதவர்கள் தற்போது ஒட்டுமொத்த உழைப்புச் சந்தைக்குள் நுழைய முடியவில்லை. 1989 முதல் இதுதான் எங்களது அனுபவம். இனி என்ன செய்வதென்று எங்களுக்கத் தெரியவில்லை. எங்களுக்கு அதிகாரம் எதுவுமில்லை. அந்த நேரத்தில், ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமென்று நாங்கள் கிளர்ச்சி செய்தோம். ஆனால் இன்றைய தினம் அதே ஆட்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர்''

WSWS: ''1989 சம்பவங்களைப்பற்றி இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

MT: ''ஜனநாயகவாதிகளான நாங்கள் எதையும் பெற்றுவிடவில்லை. இன்றைக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்னர் சர்வாதிகாரத்தை போற்றிப் புகழ்ந்தவர்கள், ஒவ்வொரு இடத்திலும் தீவிரமாக இருந்து வருகின்றார்கள். சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபட்டவர்கள் இன்றைய தினம் ஒதுக்கித் தள்ளப்பட்டு, எல்லா பதவிகளையும் பழைய அடிவருடிகள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து அதிகாரிகளுக்கும் நாங்கள் முறையிட்டோம். முன்னாள் கிழக்கு ஜேர்மனியை சேர்ந்தவரும், பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) தலைவருமான Frau Merkel க்கும் மனுச்செய்தோம். அவரிடமிருந்து மிகவும் வெட்கக்கேடான பதில்தான் கிடைத்தது. என்ன நடக்கிறது என்பது தமக்கு தெரியும் என்றும் ஆனால், தம்மால் எதுவும் செய்யமுடியாது என்றும் கடிதம் எழுதியிருந்தார். Schwerin பிராந்தியத்திலும் இதேகதை தான் தொடர்கிறது''

WSWS: ''PDS சிடமிருந்து நீங்கள் ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா?''

MT: ''இல்லை, எந்தக் கட்சியிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதிபராக இருந்த கோல் (CDU) வேறுபட்ட உறுதிமொழிகளை வழங்கியபோதிலும் எல்லாமே கீழ்நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது. எல்லாமே அழிக்கப்பட்டு விட்டது. மேற்கத்திய கம்பெனிகளோடு போட்டியிட்ட சிறந்த தொழிற்சாலைகள் கூட சிதைக்கப்பட்டுவிட்டன. இப்போது தொழிலாளர்கள் அனைவரும், வேலையில்லாமல் உள்ளனர். ஏனென்றால் இடதுகள் இல்லை. நமது குழந்தைகள் மேற்குப் பகுதியில் படித்தார்கள். இனி அந்த நாட்டோடு தங்களுக்கு தொடர்பில்லை என்றே கருதுகிறார்கள். அந்த அளவிற்கு முழுமையாகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன''

WSWS: ''நீங்கள் இதற்கு முன்னர் எங்கே பணியாற்றினீர்கள்?''

MT: ''நான் நிர்வாகத்தில் பணியாற்றினேன். நான் பணியாற்றுவதற்குத் தடைவிதித்தார்கள். இப்போது நான் நிவாரணம் தேட முயற்சிக்கிறேன். ஆனால், என்னுடைய சொல்லை யாரும் காதில் போட்டுகொள்ளவில்லை. இப்போது நான் சொல்வதை எவரும் கேட்பதில்லை. முன்பு ஆட்சி செய்தவர்கள் இப்போது தலைமைப் பதவிகளில் இருக்கின்றனர். எனது முன்னாள் பணி முதல்வர் இப்போது மிகச்சிறப்பாக நிலைப்பெற்று இருக்கிறார். மற்றும் என்னைப் பணியாற்ற அனுமதிப்பதில்லை. இங்கு நடப்பது கொடூரமானது. மேற்கு ஜேர்மனியிலுள்ள எவரும் இங்கு நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளவில்லை. எவரும் இந்தப் பிரச்சனைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை. வரலாறு முழுவதும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது''

WSWS: ''எப்படி மாற்றம் ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

MT : ''இறுதியாக மக்களது கருத்தைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று நான் நம்புகிறேன். Hartz-IV செயல்பட அனுமதிக்கக்கூடாது. அதனால், தனிப்பட்டவர்களது குடும்பங்கள் பல பாதிக்கப்படும். எதிர்காலத்தை எப்படி உறுதிசெய்து தருவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நீண்ட காலத்திற்கு எங்களால் செல்லமுடியாது. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு யூரோக்கள் தருகின்ற எந்தப் பணியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியே சென்று சுதந்திரமாக மூச்சுவிடலாம் என்று எவ்வளவோ இடங்களில் பணியாற்றினேன் என்றாலும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நான் சீர்குலைந்துள்ளேன் மற்றும் சோர்வடைந்தும் வருகிறேன். ஏனென்றால் எனது கோப்பில் இனி வேலையில்லை என்ற முத்திரை குத்திவிட்டார்கள். மேற்கு பகுதிக்கு முறையிட்டேன் எவரும் உதவவில்லை. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக உணருகிறேன். எதிர்காலத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன். பொருளாதாரம், சமூகக் கொள்கை ஆகியவற்றில் வல்லுநர்களாக இருக்கின்ற உண்மையான அறிவுஜீவிகளே அதிகாரத்தில் இருக்க வேண்டும். இப்போது வழக்கறிஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள், அவர்களிடம் ஒன்றுக்கும் தீர்வு கிடையாது.''

WSWS: ''இதே ஒத்த சூழ்நிலையை எதிர்கொள்கின்ற ஒவ்வொரு நாட்டு மக்களின் உண்மை நிலைபற்றி நீங்கள் சிந்தித்து பார்ப்பதுண்டா?''

MT: ''அது நமக்குத் தெரியும். எல்லா நாடுகளிலும் மக்களது அதிகாரபலத்தைக் கொண்டே சாதிக்க முடியும். மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கவேண்டும். இல்லையென்றால் எதுவும் நடக்காது. எனவேதான் இன்றையதினம் நாங்கள் தெருவிற்கு அணிவகுத்து வந்திருக்கிறோம். இங்கே பலர் தங்களை பாதிக்காது என்று நினைக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஒவ்வொருவரையும் இது பாதிக்கும். ஊதிய உடன்படிக்கைகள் சிதைக்கப்படுகின்றன. வேலை பாதுகாப்பு ஒழித்துக்கட்டப்படுகிறது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்''

WSWS: ''நாட்டின் மேற்குப் பகுதிகளில் சூழ்நிலை இதைவிட மிகவும் மாற்றமாக இல்லை''

MT: ''அங்கே அதிகாரிகள் மிகத்திறமையாக பணியாற்றுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் உங்களுக்காகப் பணியாற்றுகிறார்கள்......அதற்கெல்லாம் மேலாக தகுதிபடைத்தவர்களுக்காக பணியாற்றுகிறார்கள்''

* * * * * *

செபாஸ்டியன் ஜனாக், மேல்நிலைப்பள்ளி மாணவர்: ''இங்கே ஆர்பாட்டங்களால் எதுவும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஷ்ரோடர் அரசாங்கத்தை இனி சகித்துக்கொள்ள முடியாது. மாற்றம் செய்கிற எந்தக் கட்சியும் இல்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு எதுவும் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் Hartz-IV சென்றுக்கொண்டிருக்கும்.

* * * * * *

49 வயதான டீட்மா புரூகில்ச், செப்பனிடுவர்: ''சமுதாயம் முழுவதையும் அனைவருக்கும் போதுமான வேலை கிடைக்கிற அளவிற்கு மறுசீரமைக்க வேண்டும். இருக்கின்ற எந்தக் கட்சியும் அதை செய்யத் தயாராக இல்லை.''


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved