:
வட அமெரிக்கா
The socialist alternative to Bush and Kerry
புஷ் மற்றும் கெர்ரிக்கான சோசலிச மாற்றீடு
* ஈராக்கில் போரை நிறுத்து! அனைத்து அமெரிக்க துருப்புக்களையும் உடனடியாக
திரும்பப்பெறு!
* வேலை வாய்ப்பிற்கு, கல்விக்கு, சுகாதாரத்தித் திட்டங்களுக்கு சோசலிச
வேலைத்திட்டம் தேவை.
* ஜனநாயகக்கட்சியை விட்டு விலகு! தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வெகுஜனக்
கட்சியை கட்டு!
Statement of the Socialist Equality Party
28 August 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
நியூயோர்க் நகரத்தில் இந்த வாரக்கடைசியில் குடியரசுக்கட்சி நடத்தவிருக்கும் தேசிய
மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் கண்டனப்பேரணிகளில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்களால்
கீழ்க்கண்ட அறிக்கை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வெளியீடு
PDF வடிவத்திலும்
கிடைக்கிறது. இதனை கணினியிலிருந்து இறக்கம் செய்து
பரவலாக விநியோகிக்குமாறு வாசகர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நாட்டிலும் உலகம் முழுவதிலும், ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
மற்றும் வாஷிங்டனின் இராணுவவாத, ஒடுக்குமுறை மற்றும் சமுதாய பிற்போக்கு கொள்கைகளை முறியடிக்க வேண்டுமென
விரும்பும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இருக்கின்ற அரசியல் மாற்று என்ன?
நியூயோர்க் நகரத்தில் குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கு எதிராக நடைபெறவிருக்கும்
கண்டனப்பேரணியில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி இதுதான்.
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப்போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையில்
2003-ல் பெப்ரவரியில் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கண்டனப்பேரணிகளை நடத்தினர். அதற்கு
ஒருமாதத்திற்கு பின்னர் புஷ் நிர்வாகம் படையெடுப்பை நடத்தியது, மக்களது விருப்பிற்கு அரசாங்கத்தின்
அலட்சியப்படுத்தலையும், நவம்பர் தேர்தலில் பெருவர்த்தக வேட்பாளர்களில் எவர் வெற்றிபெற்றாலும், அவரை,
பெரிய மற்றும் சிறப்பான எதிர்ப்புக்கள் மட்டுமே கட்டுப்படுத்தும் என்ற முன்னோக்கின் போலித்தன்மையையும்
அம்பலப்படுத்துகின்றது.
''குறைந்த தீங்குவாத'' அரசியலும் ஜோன் கெர்ரிக்கு ஆதரவு தருவதும்
போன்றவை ஈராக் போருக்கு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு மற்றும் ஏற்றதாழ்வுகள் பெருகுவதற்கு
எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச்செல்வதற்கு எந்த வழிகளையும் வழங்காது.
கெர்ரி ஈராக் ஆக்கிரமிப்பை நீட்டிக்கவும், விரிவுபடுத்தவும்கூட உறுதியளித்துள்ளார்.
ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று தெரிந்திருந்தால் கூட முன்கூட்டி திடீர்த் தாக்குதல் நடத்துவதற்கு புஷ்ஷிற்கு
அனுமதி தரும் தீர்மானத்திற்கு தான் ஒப்புதல் அளித்திருக்கூடும் என்று இந்த மாத தொடக்கத்தில் கெர்ரி குறிப்பிட்டார்.
ஈராக்கையும் அதன் எண்ணெய் வளத்தையும் வென்று கைப்பற்றல் அமெரிக்க நிதியாதிக்க செல்வந்தத்தட்டின் நலன்களில்
மேற்கொள்ளப்படும் இரு கட்சியும் உடன்படும் கொள்கை என்பதை இது உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்தத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் ஜனநாயகக் கட்சியை இடது
பக்கம் தள்ளிவிட முடியுமென்று கூறும் ரால்ப் நாடெர் மற்றும் பசுமைக் கட்சிக்காரர்களை போன்றவர்கள், அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் கட்சியான இதை ஏதோ ஒரு வகையில் சமாதானம் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான வாகனமாக
மாற்றிவிட முடியும் என்று ஒரு மாயையே விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு கட்சி முறையுடன் ஒரு முறிவைச் செய்வதற்காகவும் உழைக்கும் மக்களது புதிய
வெகுஜன சோசலிச இயக்கத்தை கட்டி எழுப்புவும் போராடுவதற்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சி நவம்பர்
தேர்தல்களில் போட்டியிடுகிறது. நமது பிரச்சாரம் ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சிக்கு ஒரு உண்மையான ஜனநாயக
மற்றும் சோசலிச மாற்றை முன்னெடுக்கிறது, மற்றும் பூகோள முநலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப்
போராட்டத்தில் அமெரிக்க உழைக்கும் மக்களை உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தோடு ஐக்கியப்படுத்தும்
முன்னோக்கின் மீதாக நிறுவப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது.
எங்களது பிரச்சாரம்தான் ஈராக் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அமெரிக்கத்துருப்புக்கள்
அனைத்தையும் நிபந்தனை எதுவுமில்லாமல் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டுமென்றும் கோருகிறது.
நமது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான பில்வான் ஒகென்,
மற்றும் ஜிம் லோரன்ஸ் நியூ ஜெர்சி,
கொலராடோ, அயோவா மற்றும் வாஷிங்டன் மாகாணத்தில்
வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றனர். ஓகியோவில் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறோம்.
Minnesota -வில் வான் ஒகென் மற்றும் ஜிம் லோரன்சை
வாக்குச்சீட்டில் இடம்பெறச்செய்வதற்கு தற்போது மனு கொடுத்து வருகிறோம்.
நாடாளுமன்றத்திற்கான நமது வேட்பாளர்களாக மிச்சிகனில் ஜெர்ரி வைட்டையும்,
Maine-ல் கார்ல் கூலியையும் கூட வேட்பாளர்களாக
வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்திருக்கிறோம், அதேபோல இல்லினோயில் மாநில பிரதிநிதிக்கான வேட்பாளராக
ரொம் மக்காமன்-ஐ இடம்பெறச் செய்திருக்கிறோம்.
வரும் ஜனவரியில் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி இவர்களில் யார்
அதிகாரத்தை கைபற்றினாலும் அந்நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக கட்டாயம் தயார்
செய்யப்பட வேண்டும் என்பதுதான் சோசலிச சமத்துக் கட்சியின் செய்தியாகும். ஈராக் ஆக்கிரமிப்பு தொடரும்
மற்றும் எதிர்கால போர்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகிறது. சென்ற மே-யில் ஜனநாயகக்
கட்சிக்காரர்களோடு அமெரிக்க கீழ் சபையில் இணைந்து ஈரானின் அணுத்திட்டங்கள் தொடர்பாக 376- க்கு 3-
என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, ஆத்திரமூட்டல்
எதுவுமில்லாமல் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அதே வாசகங்கள் இதிலும்
காணப்பட்டன.
வரும் தேர்தல்களில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாத பட்ஜெட்
பற்றாக்குறைகள், வெளிநாட்டுக் கடன்கள் அத்துடன் ஏறிவரும் விலைவாசி, வட்டிவிகிதங்கள் உயர்வு ஆகியவற்றால்
தூண்டிவிடப்பட்ட தீர்த்துவைக்க முடியாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கும். இந்நெருக்கடி தவிர்க்க முடியா
அளவிற்கு அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தினால் ஆன கொந்தளிப்பு மிக்க போராட்டங்கள் நடக்கும் புது
யுகத்திற்கு வழிவகுக்கும்.
இந்த மகத்தான சக்திவாய்ந்த சமுதாய சக்தியை திரட்டுகின்ற வகையில் தான்
சோசலிச சமத்துவக் கட்சி தனது பிரச்சாரத்தை தொடக்கியுள்ளது. போர் மற்றும் ஜனநாயக உரிமைகளை
தற்காத்து நிற்பதற்கான போராட்டத்தை, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வாழ்க்கை
தொழிலாகக் கொண்டவர்கள் ஆகிய பரந்த தட்டினர்பால் திருப்பி, ஒரு பரந்த சோசலிச இயக்கத்தைக் கட்டி
எழுப்புவதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே முன்னெடுத்துச்செல்ல முடியும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
போர், ஒடுக்குமுறை மற்றும் பரந்த பொதுமக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியின்
ஆணிவேர்கள் இந்த அல்லது அந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளின் தனிச்சிறப்பான பண்புகளில் இல்லை, ஆனால்
தனியார் சொத்துடைமை மற்றும் பொருளாதார வாழ்வின் அடிப்படை சக்திகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது -
மனிதர்களது சமுதாயத் தேவைகளையும் தனிமனிதர்களது தேவைகளையும் லாபம் மற்றும் தனியார்
சொத்துக்குவிப்புக்கு கீழ்ப்படுத்துதலை பின்பற்றும் அமைப்புமுறையில்தான் உள்ளது.
உற்பத்தி சக்திகளை பெருநிறுவன மற்றும் நிதியாதிக்க சக்திகளிடமிருந்து விடுவிக்கப்
போராடும், மற்றும் அந்த உற்பத்தி சக்திகளை உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும்
ஒரு இயக்கத்தால்தான், உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டமுடியும் மற்றும் போர் மற்றும் வறுமையின்
கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அமெரிக்கப் பொருளாதாரத்தை இந்த வகையில் மறுஒழுங்கமைத்தல் தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மகத்தான அளவிற்கு முன்னேற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதற்கு
வளங்களை கிடைக்கச்செய்யும்.
சோசலிச சமத்துவக் கட்சி கோருவது:
* முழு வேலைவாய்ப்பு தருகின்ற வகையில் பிரமாண்டமான பொதுப்பணித்திட்டங்களை
மேற்கொள்ள வேண்டும்.
* மத்திய அரசாங்கத்தால் நிதிவழங்கப்படும் உத்திரவாதமுள்ள ஆண்டு வருமானம்
* வேலைவாரத்தை 40 மணித்தியால
ஊதியத்தோடு 30 மணித்தியாலங்களாக குறைக்க வேண்டும்
* உயர்தர கல்வி தருகின்ற பள்ளிகளை காப்புறுதி செய்ய இலவச உயர்கல்வி, அனைவருக்கும்
கிடைக்க அரசாங்க முதலீடு
* வரம்பற்ற மருத்துவ காப்பீடு
* ஊதியவெட்டு மற்றும் தொழிற்சங்கங்களை உடைப்பதை சட்டவிரோதமாக அறிவிப்பது
* உள்நாட்டு பாதுகாப்புத்துறையை ஒழித்துக்கட்டுவது மற்றும் தேசபக்தி சட்டத்தை
இரத்து செய்வது
தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிசக் கட்சியை உருவாக்குவதற்கான அரசியல்
மற்றும் வேலைத்திட்ட அடிப்படைகளை அமைப்பதற்குத்தான் 2004- தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு
செயய்கிறது. எங்களது கட்சிக்கு உங்களது வாக்கை அளிப்பது மட்டும்ல்லாமல், உலக சோசலிச வலைத்
தளத்தின் ஆய்வுகளைப் பின்தொடருமாறும் பரவலாக நமது சோசலிச வேலைத்திட்டத்தை முடிந்தவரை பரந்த
அளவில் விநியோகிப்பதற்கு உதவுமாறும் SEP
உங்களை வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.
நாடு முழுவதிலும், மாநிலங்களில் சோசலிச சமத்துவக்கட்சி தேர்தல் பிரச்சாரத்தில்
தொண்டாற்ற முன்வாருங்கள்.
http://www.wsws.org/us2004/index.html
சோசலிச சமத்துவக்கட்சி தேர்தல் பிரசாரத்திற்கு
Online- ல்
நன்கொடை வழங்குங்கள்
https://www.wsws.org/election/sepfund.htm.
Top of page
|