WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
GM workers hold European-wide day of action against
job cuts
வேலை வெட்டுகளுக்கு எதிராக ஐரோப்பா தழுவிய ஜெனரல் மோட்டார்கள்
தொழிலாளர்களின் கண்டனப்பேரணிகள்
By our reporters
22 October 2004
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஜெனரல் மோட்டர்ஸின் ஐரோப்பிய துணை நிறுவனங்களில் 12,000 வேலைத்தலங்களை
வெட்டுவதற்கான திட்டங்களைக்கண்டித்து செவ்வாய்கிழமையன்று 50,000 கார் தொழிலாளர்கள் கண்டனப் பேரணிகளை
நடத்தினர். ஸ்வீடனிலுள்ள Trollhattan
இலிருந்து போர்த்துக்கலிலுள்ள
Azambuja வரை
மொத்தம் 13 பல்வேறு நகரங்களில் உள்ள ஒப்பல்
Vaxhall மற்றும்
Saab தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதில் பங்கெடுத்துக்கொண்டனர்.
பிரிட்டனிலுள்ள
Ellesmere Port இலுள்ள
Vaxhall தொழிற்சாலையை
சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு மணிநேர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஜேர்மனியிலுள்ள ஜெனரல் மோட்டர்ஸ் ஊழியர்களோடு
தங்களது ஐக்கியத்தை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டனர். பிரிட்டனில் 400 இற்கு மேற்பட்ட வேலைகள்
வெட்டப்படவிருக்கின்றன. அவற்றில் 340 Ellesmere
Port தொழிற்சாலையிலும், 94
Luton வேன்
தொழிற்சாலையிலும் வெட்டப்படவிருக்கின்றன.
ஜேர்மனியில் மிகப்பெருமளவில் கண்டனப்பேரணிகள் நடைபெற்றன. அங்கு ஜெனரல்
மோட்டர்ஸின் ஓப்பல் துணை நிறுவனத்தை சேர்ந்த 10,000 தொழிலாளர்கள் ஆட்குறைப்பிற்கு உள்ளாவுள்ளனர்.
ஆர்பாட்டங்களில் தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமல்ல, ஓய்வூதியம்
பெறுவோரும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். என்றாலும் எல்லா
ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்புக்களை
தற்காத்து நிற்பதற்கு தொழிலாளர்களை ஒன்றாக திரட்டிவிட முடியும் என்ற நம்பிக்கைக்கு மாறாக தொழிற்சங்க
அதிகாரிகளின் உரைகள் அமைந்திருக்கின்றன. அவை நிறுவனத்திற்கு மேலும் விட்டுக்கொடுப்புகளை தருவதற்கு தயாராக
இருப்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருந்தன.
Bochum இல் 25,000 பேர் ஆர்ப்பாட்டம்
செய்தனர்
கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு
Bochum பகுதியில்
ஓப்பல் தொழிலாளர்கள் மிகப்பெருமளவிற்கான கண்டனப்பேரணிகளில் ஒன்றை நடத்தினர்.
Bochum இலுள்ள
மூன்று ஓப்பல் தொழிற்சாலைகளை சார்ந்த ஏறத்தாழ 10,000 பேருடன்
Thyssen
Krupp
உருக்கு தொழிற்சாலை
Ruhrkohle AG
மற்றும் இதர தொழிற்சாலைகளை சேர்ந்த Ruhr
பகுதி தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்தனர்.
Bochum
நகரமையப்பகுதியிலுள்ள அந்தத் தொழிற்சாலை வாயிலில் இருந்து ஏறத்தாழ 15,000 பேர் அணிவகுத்து வந்தனர்.
அங்கு அவர்களுடன் மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நிறைவுரையை கேட்பதற்கு வந்தனர்.
IG Metall
தொழிற்சங்கமும் ஐரோப்பிய உருக்குத்தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பும் எதிர்பார்த்ததற்கு மேல் இரு
மடங்கு அதிகமாக தொழிலாளர்கள் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
Bochum நகரவாசிகள் பலரும்
Bogestra நகர போக்குவரத்து தொழிற்சாலையை சேர்ந்த
தொழிலாளர்களும், அந்தக் கண்டனப்பேரணியில் கலந்து கொண்டனர். சிறு வர்த்தக மற்றும் சுயமாக தொழில்செய்பவர்களும்
ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற வகைகளில் பதாகைகளும், கொண்டுவந்தனர். ''ஓப்பல்
Bochum இறந்துவிட்டால் மாவட்டம் முழுவதுமே மடிந்துவிடும்''
என்பது போன்ற பதாகைகள் கொண்டுவரப்பட்டன.
தொழிற்சங்க பதாகைகளுடன் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சி அரசாங்கத்தின்
தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் சேமநலத்திட்டங்களின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களான
Hartz-IV
என்றழைக்கப்படுவதை கண்டிக்கும் பதாகைகளும் கொண்டுவரப்பட்டன.
Bochum, Symphony
இசைக்குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக பேண்டு வாத்தியங்களை வாசித்தனர்.
மாலையில் மிக்சிகன் Flint
என்ற அமெரிக்க நகரத்தில் ஜெனரல் மோட்டர்ஸின் தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏற்பட்ட சீரழிவுகளை சித்தரிக்கும்
Micheal Moore
இன் திரைப்படமான
Roger & Me, ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக திரையிடப்பட்டது.
என்றாலும், சென்ற வாரம் ஜெனரல் மோட்டர்ஸ் ஆட்குறைப்பு திட்டத்தை அறிவித்த
பின்னர் Bochum
வளாகத்தில் தொழிலாளர்களின் சுயாதீனமான வேலைநிறுத்தத்தில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்கின்ற
வகையில் தொழிற்சங்க அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பார்வையில் இந்த
நடவடிக்கை தினத்தின் நோக்கம், தொழிலாளர்களை அமைதிப்படுத்திவிட்டு ஆட்குறைப்பு தொடர்பாக
தொழிற்சங்கமும், நிறுவனமும் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்துவதுதான்.
ஆரம்பத்திலிருந்தே
IG Metall
வேலை நிறுத்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. IG
Metall தலைவரான
Ludger Hinse
''சுயாதீனமான வேலைநிறுத்தங்கள் தொடர்பான பேச்சுக்கள்'' அனைத்தையும், கேட்பதே தமக்கு வருத்தத்தை
தருவதாக குறிப்பிட்டார். ''இங்கே முறையாக எல்லாவற்றையும் நிலைநாட்டுவதுதான் தொழிற்சங்கங்களின்
கடமை'' என்று அவர் அறிவித்தார்.
மீண்டும் வேலைக்கு திரும்புமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை
ஓப்பல் தொழிலாளர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது.
Bochum,
Opel தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர்
Dietmar Hahn,
ஐரோப்பிய உருக்குத்தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த
Klaus Hemmerling, North Rhine West Phalia
மாநில IG
Metall தொழிற்சங்கத்தை சேர்ந்த
Detlef Wetzeld
ஆகியோர் ஒரே குரலில் பேசுவதைப்போன்று மோதல் போக்கில் ஈடுபடுவதைவிட பேச்சுவார்த்தை நடத்துவதுதான்
சிறந்ததென்று வலியுறுத்திக்கூறினார். மற்றும் ''தொழிலாளர்கள் அமைதிகாத்து மீண்டும் மகத்தான கார்களை உற்பத்தி
செய்யவேண்டும்'' என்று கூறினார்.
ஓப்பல் நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக
இருக்கிறதென்ற உண்மையே ''வெற்றிதான்'' என்று அவர்கள் புகழ்ந்துரைத்தனர். பேச்சுவார்த்தைகளின்
முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் தொழிலாளர்கள் தங்களது தலையை உயர்த்தி மிடுக்கோடு பணிக்குத்திரும்ப
வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
Evangelical தேவாலயத்தை
சேர்நத பிரதிநிதியான Bishop Franz Grawe
இனை தார்மீக ஆதரவு தரும்வகையில் பேசுவதற்கு
தொழிலாளர்கள் அனுமதித்தனர். ஆனால் அவரும் சேர்ந்து கொண்டு தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை
கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதும், அவருக்கு எதிராக கூக்குரல்களும் விசிலடிக்கும் குரல்களும் எழுந்தன.
தொழிலாளர்களின் வெறுப்புணர்வை உணர்ந்து கொண்ட உள்ளூர் சமூக ஜனநாயக கட்சித் தலைவர்களான
North Rhine Westphalia
மாநில Harald
Schartau, மற்றும்
சமூக விவகாரங்கள் அமைச்சர்
Birgit Fischer போன்றவர்கள் அந்தக் கூட்டத்தில் பேச
முயலவில்லை.
தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால்
ஏற்கெனவே ஏற்பட்டுள்ள முடிவுகள் தொழிலாளர்களது நலன்களுக்கு முரணானவை. உடனடியாக தொழிற்சாலைகள்
மூடப்படமாட்டாது, கட்டாய ஆட்குறைப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டாலும் தொழிற்சங்ககம்
தனிப்பட்ட முறையில் விட்டுக்கொடுத்து செல்லுகின்ற ''சமூக அடிப்படையிலான தொழிலாளர் திருத்தங்களுக்கு''
ஒப்புக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிகளில் ஆற்றப்பட்ட உரைகளில் இருந்து
தொழிற்சங்கங்கள் அந்தத் தொழிற்சாலைகள் போட்டி போட்டு இலாபம் ஈட்டும் வகையில் நடக்கவில்லை என்பதை
ஒப்புக்கொண்டிருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது. ''எதிர்காலத்தில் ஓப்பல் இலாபம் தரக்கூடிய
தொழிற்சாலையாக'' மாறுவதற்குரிய விலையைத் தற்போது தொழிலாளர்கள் வழங்க வேண்டியுள்ளது.
இதன்பொருள் என்ன என்பது தொழிலாளர்களுக்கு நன்றாகத்தெரியும். நோக்கியா (Nokia)
தகவல் தொடர்பு சாதன உற்பத்தி நிறுவன முன்னாள் ஊழியர்கள் சிலருக்கு தொழிற்சங்கம் வேலைக்கு உத்திரவாதம்
தந்தன. பின்னர் அவர்களது வேலையை இழந்தனர். ''தொழிற்சங்க ஆலோசனைகள் மோசடியானவை அவற்றை
ஏற்றுக்கொள்ளக் கூடாது'' என்று கூறியபோது அவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.
அந்த ஊழியர்களில் ஒருவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். தொழிற்சங்கங்களின்
நிலைப்பாடுகளில் பொருள் மிகப்பெரும் அளவில் ஊதிய வெட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகும். ''தொழிற்சங்க
தலைவர்கள் கூறுகின்ற ஆலசோனைகளை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஒரு ஊரில் இருக்கும் தொழிற்சாலை
மீது இன்னொரு பகுதியிலிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களை மோதவிடுகின்ற போக்காகும். தென்னாபிரிக்காவிலுள்ள
தொழிலாளர்களைவிட ஜேர்மனியிலுள்ள தொழிலாளர்களுக்கு அதிகம் செலவாகிறது என்று உங்களிடம்
சொல்கிறார்கள். ஆனால் தென்னாபிரிக்க தொழிலாளர்களிடம் ஜேர்மனி தொழிலாளர்களின் உற்பத்தித்திறன்
அதிகமென்றும் மற்றும் தென்னாபிரிக்காவில் உள்ளதுபோல் வேலை நிறுத்தம் செய்வதில்லை'' என்றும் கூறுகிறார்கள்.
Bochum ஓப்பல் வேலைநிறுத்த
தலைவர், நிர்வாகத்தினால் வேலைநீக்கம் செய்யப்படவிருக்கிறார் என்ற செய்தி இரகசியமாக வெளிவந்துவிட்டது.
ஆனால் இதைப்பற்றி எந்த தொழிற்சங்க தலைவரும் பேசவில்லை. ஒரு தொழிலாளி, ஒலி வாங்கி முன்னே வந்து
தொழிலாளர்களிடையே பரவலாக நிலவுகின்ற உணர்வை வெளிப்படுத்தினார்: ''வேலை நிறுத்தம் செய்த தலைவர்
வேலை நீக்கம் செய்யப்படவிருக்கிறார் என்பது நம்மை இழிவுபடுத்துவதாகும். தொழிற்சாலைக்கு சென்று அவரை
நாம் ஆதரித்து நிற்கவேண்டும் அதை அனுமதிக்கக்கூடாது, ஏனென்றால் அரசியல் அடிப்படையில் தனது கருத்துக்களை
கூற ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு'' வேலை நிறுத்தம் செய்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படக்கூடாது
என்று ஒருமனதாக கோரிக்கை வைக்கப்பட்டது.
Bochum இல்
WSWS நிருபர்கள்
இரண்டு ஓப்பல் தொழிலாளர்களோடு கலந்துரையாடினர்.
Klaus Hamm
வயது 41 கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். புறநகரான
Gelsenkirchen இல் வாழ்கிறார்.
WSWS : ''உங்களது பிரிவில்
ஜெனரல் மோட்டர்ஸின் திட்டங்களைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?''
Hamm : ''வியாழனன்று எங்கள்
பிரிவு மூடப்படவிருக்கிறது என்பதைத்தெரிந்து கொண்டோம். மற்றும் அந்தப்பணிகள் வெளியிலுள்ள நிறுவனங்களுக்கு
ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆக வேலைகள் போய்விடும், சில பதவிகள் மூன்றாண்டுகளுக்கு நீடிக்கும்''.
WSWS:
''இது உங்களது குடும்பத்தையும், உங்களையும் எந்தளவிற்கு பாதிக்கும்?''
Hamm:
''முதல் விளைவு என்னவென்றால் நாங்கள் எங்களது வீட்டை விற்க வேண்டும். ஏற்கெனவே எனது குழந்தைகள் இப்போது
என்ன நடக்கும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவேதான் அவர்களும் இங்கே என்னோடு இருக்கிறார்கள்.
நான் வேலையை இழந்துவிட்டால் அது எங்கள் வாழ்வை அழித்துவிடும். ஆனால் அந்த வேலையில் நான் நீடித்தாலும்
நான் 30சதவீத ஊதிய வெட்டிற்கு சம்மதித்தாக வேண்டும் அதன் விளைவும் அதேதான். எங்களது வாழ்வு அழிந்துவிடும்''
''எங்களது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தப்படவேண்டும் என்பதை உறுதிசெய்து
கொள்ளவேண்டும். நாம் நம்மை பிளவுபடுத்த அனுமதிக்கக்கூடாது. தொழிலாளர்களாகிய நாங்கள்தான்
ஒட்டுமொத்தமாக மீண்டும் பணிக்கு செல்வதா என்பதை முடிவு செய்யவேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்பதையும்
நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும். அது எங்கள் கரங்களில் உள்ளது. அதன் மீது நாம் வாக்களித்து முடிவு
செய்யவேண்டும். நாங்கள் அனைவரும் ஒரே நலன்களை தான் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்''
WSWS : ''தொழிற்சங்கங்கள்,
வேலை நிறுத்தத்தை கைவிடுவது பற்றியும் நீங்கள் நெஞ்சை உயர்த்தி வேலைக்கு செல்லவேண்டும் என்றும் பேசிக்
கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களும் முதலாளிகளும் ஒருவரோடு ஒருவர் போரிட்டு கொண்டிருக்கக்கூடாது என்றும்
அவர்கள் சொல்கிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
Hamm : ''நான் ஏற்கெனவே
சொல்லியபடி நாமே அதுபற்றி முடிவு செய்யவேண்டும்''
WSWS : ''தொழிற்சங்கங்கள்
மற்றும்
தொழிற்சாலை தொழிலாளர் குழு (Betribsrat)
பற்றி உங்கள் கருத்தென்ன?''
Hamm
: ''தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர்கள் இன்னும் எங்களது நலன்களைத்தான் எடுத்து வைக்கிறார்கள்,
ஆனால் தொழிற்சங்கங்களில் இருந்து அதிகம் கேள்விப்படவில்லை. அது சற்றுபலவீனமாக இருப்பதாக காண்கிறேன்.
தொழிற்சங்கங்கள் எங்களது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். ஆனால் நீண்டகாலமாக அது நடக்கவேண்டுமென்று
நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்- தொழிற்சங்கங்கள் எங்கள் நலனில்தான் கவனம் செலுத்த வேண்டும், அதற்கு
எதிராக செயல்படக்கூடாது''
Hamm
இன் சகா Karl-Heinz Wittmann.
வயது 44 அதே துறையில் பணியாற்றுபவர். அவர் ஓப்பலில் 25 ஆண்டுகள் பணிபுரிகின்றார்.
WSWS : ''மத்திய தொழிற்துறை
அமைச்சர் Wolfgang Clement
போன்ற சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதிகள் நீங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பவேண்டும்
என்று விடுத்துள்ள அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?''
Wittmann:
''ஒவ்வொரு பேட்டியிலும் Clement
நாங்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்றுதான் சொல்லிவருகிறார். எங்களது நிலைமையை புரிந்து கொண்டிருப்பதாக
அவர் கூறுகிறார், ஆனால் நிச்சயமாக அவர் புரிந்துகொள்ளவில்லை! மற்ற பலரைப்போல் அவரும் ஓப்பல் நஷ்டத்தில்
நடக்கிறது என்று கருதிக்கொண்டிருக்கிறார். அந்தக் கருத்து சரியல்ல. ஓப்பல் இங்கு நஷ்டத்தை சந்திப்பதற்கு காரணம்
Detroit
இலுள்ள
ஜெனரல் மோட்டர்ஸ் இலாபங்களுக்கான இலக்கை நிர்ணயிக்கிறது. தற்போது
இந்த எதிர்பார்ப்புக்களைவிட சற்று குறைவாக நாங்கள் இருக்கிறோம். அதுதான் இங்கே துண்டுவிழுகிற தொகையாகும்.
உண்மையில் இங்கு இலாபத்தில் தான் இயங்குகின்றது. ஆனால் ஜெனரல் மோட்டர்ஸ் நிர்ணயித்துள்ள விகிதத்தில் அல்ல.
ஓப்பல் ஐரோப்பிய தலைமையிடமாக Zurich
இல் இதை ஈடுகட்டுவதற்கு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப
முயன்றுகொண்டிருக்கிறார்கள். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களின் இலாபத்திற்காக நாங்கள் இரத்தம்
சிந்தவேண்டும் என்பது சரியாக இருக்க முடியாது''
WSWS : ''நீங்கள் உங்களது
வேலையை இழந்துவிட்டால் எத்தகைய விளைவுகள் வரும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள்?''
Wittmann
:''வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு உள்ளாகிவிடுவேன் என்று அஞ்சுகிறேன். அப்போது வேலையில்லாதிருக்கின்ற
4.5 மில்லியனில் ஒருவனாகிவிடுவேன் இந்தப் புள்ளிவிவரம் ஊடகங்கள் தந்திருப்பது ஆனால் உண்மையில் அதைவிட
அதிகமானவர்கள் வேலையில்லாதிருக்கிறார்கள் 44 வயதில் நான் வேறு எங்கே புதிய வேலைதேடுவேன்? அது மிக
மோசமான சூழ்நிலையாகும்.
" வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு
சுருள்போல் சுற்றிக்கொண்டிருக்கிறது. Bochum
இல் 4000 பேர் வேலையிழக்கிறார்கள் என்றால் ஓப்பலில் வேலையிழக்கும் ஒவ்வொருவருக்கும் இணையாக கார்
விநியோகதொழிலில் 2 அல்லது 3 பேர் வேலையிழப்பார்கள் மற்றும் சில்லறை வர்த்தகத்திலும் வேலைவாய்ப்பு
குறையும். இந்த சுழற்சி கீழ்நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும். அது எங்கே முடியும்? எனக்கு வேலை
தேடுகின்ற சந்தையில் மேலும் வாய்ப்புக்கள் இருக்காது. எனது குடும்பத்தின் நிலை என்னவாகும், மூன்று
குழந்தைகளும் எனது மனைவியும் என்ன செய்வோம்? நான் கழுத்துவரை கடனில் மூழ்குவேன்''
WSWS : ''தொழிற்சங்கங்கள்
மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழு கொள்கைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
Wittmann:
''அதிகமில்லை; அவர்கள் வேதனையில் முனங்கிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களது பேச்சுவார்த்தைகள் பற்றி நான்
அதிகம் நம்பவில்லை. அண்மையில் உள்ளூர் நிறுவனங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்தைகள் பற்றி நான் அறிவேன்.
அத்தகைய பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் அழிவுகரமான சமரசமாகத்தான் முடியும். என்னை பொறுத்தவரையில்
தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் நடத்திவருகின்ற உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள்
முன்னோக்கு அடிப்படையில் அமைந்தவையல்ல, ''சமூகரீதியான வேலைவாய்ப்பு குறைப்பு'' என்று கூறப்படுவது ஒரு
மாற்று அல்ல, ஏனென்றால் எனது குழந்தைகளுக்கும் கூட வேலை தேவை. வெட்டப்படுகின்ற ஒவ்வொரு வேலையும்
இந்த மண்டலம் முழுவதிலும் நிரந்தரமாக அடிபட்டு போய்விடுகிறது. சில்லறை விற்பனை பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் துன்புறுகிறார்கள்''
WSWS:
''உங்களது சகாக்களிடையே, எப்படிப்பட்ட உணர்வு நிலவுகிறது?''
Wittmann : ''எங்களது
சகாக்களிடையில் நல்ல உணர்வுதான் நிலவுகிறது. 2010 மற்றும் அதற்கப்பாலும், நம்பகத்தன்மையுள்ள
உத்திரவாதம் பெறுகிறவரை இந்த வேலை நிறுத்தம் நடந்தே ஆகவேண்டும்,
தொழிற்சாலை தொழிலாளர் குழு ஒரு சீரழிந்த சமரசத்தை
உருவாக்கிவிடாது நான் கவனமாக கண்காணிக்கவேண்டும் அது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்''
WSWS:
''தொழிலாளர்களது நலனுக்கு விரோதமாக செல்கின்ற
தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் எந்த முடிவையும்
ஏற்பதில்லை என்று உங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதா?''
Wittmann : ''அது சரிதான்
அப்படி ஒரு உடன்பாடு ஏற்படுமானால் அதை ஏற்பதா? அல்லது மறுப்பதா? நாம் வாக்களித்து முடிவு செய்யவேண்டும்.
அதை தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு விட்டுவிடக்கூடாது ஏனென்றால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள்''
ஜேர்மனி Russelsheim
Frankfurt Main அருகிலுள்ள
Russelsheim
புதிய ''Adam Opel House''
முன்னர் பல்லாயிரக்கணக்கான ஓப்பல் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும்
கண்டனப்பேரணி நடத்தினர். தொழிற்சங்கங்கள் தந்துள்ள மதிப்பீட்டின்படி 20,000 பேர் கண்டனப்பேரணியில் கலந்து
கொண்டனர். போலீசார் 12,000 என்றுதான் தகவல் தந்தனர். பெரும்பாலான தொழிலாளர்கள்
Russelsheim
இலுள்ள பிரதான தொழிற்சாலையிலிருந்து வந்தனர். நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள
Eisenach மற்றும்
Dudenhofen பகுதியிலிருந்தும் தொழிலாளர் பிரதிநிதிகள்
வந்திருந்தனர். ஓப்பல் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் நிதி அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களும்
மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். சென்ற வாரம் அவர்கள் தனியாகவும் ஆர்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், பதாகைகளையும், கையினால் எழுதப்பட்ட
முழக்கங்களையும் மற்றும் அணிந்திருந்த மேற் சட்டைகளில் முழக்கங்களையும் வெளிப்படுத்தி வந்தனர். ''ஓப்பல்
நிலைத்திருக்க வேண்டும்'' Opel Russelsheim
இல் மற்றும்
Saab Trolihittan
தொழிற்சாலையில் உற்பத்தியை நிலைநாட்ட வேண்டும்'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள்
ஏந்தி வந்தனர். Eisenach
இல் இருந்து வந்த தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்டுவந்திருந்த பதாகைகளில்
''மீண்டும் அடிமைத்தனமா? எங்களோடு வேண்டாம்! சமூகக் கொள்ளையையும், அச்சுறுத்தலையும் நாங்கள் எதிர்த்து
நிற்கிறோம்'' என்பது போன்ற வாசகங்கள் அடங்கியிருந்தன. குழந்தைகள் ஏந்திவந்த அட்டைகளில் ''எங்களது
தந்தைமார் வேலைகளில் நீடிக்க விரும்புகின்றனர்'' என்ற வாசகம் அடங்கியிருந்தது.
Bochum ஓப்பலில்
தொழிலாளர்கள் தாங்களே முன்வந்து தன்னிச்சையாக நடத்திய வேலைநிறுத்தத்தை அந்த தொழிற்சங்கம் தகவல்
பரிமாற்றக்கூட்டம் என்று கூறியதை கருத்தில் கொண்டு சில தொழிலாளர்கள் தங்களது பதாகைகளில் ''மேலும்
அதிகமான தகவல் பரிமாற்ற கூட்டங்களை நடத்துங்கள்! நாம் செயல்படுவோம், அச்சுக்களை செய்யமாட்டோம்''
என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.
Merck, Mercedes Benz
மற்றும் Teves
மற்றும் Russelsheim
ஐ சேர்ந்த நகர தொழிலாளர்கள் உட்பட அந்த மண்டலத்தை சேர்ந்த இதர தொழிற்சாலை ஊழியர்களும்
இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். Teves
தொழிலாளர்கள் ஏந்தி வந்த ஒரு பதாகையில் ''இன்றைக்கு நீங்கள் நாளை நாங்கள், வேலைகளை ஏற்றுமதி
செய்வது, பணியை ஒழித்துக்கட்டுகிறது; இலாபவெறி நோக்கு வேலைவாய்ப்பை அழிக்கிறது'' என்ற வாசகங்கள்
இடம்பெற்றிருந்தன.
முன்னணி வரிசைகளிலிருந்து பேச்சாளர்களுக்கு பாராட்டும் கைத்தட்டலும் மிதமான அளவிற்கு
இருந்தது. முன்வரிசைகளில் சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதிகள்
Russelsheim
மேயர் மற்றும் உள்ளூர் தொழிற்சங்கப் பெருந்தலைவர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு பேசப்பட்டது குறித்து
பெரும்பாலான தொழிலாளர்கள் மிகவும் சந்தேகக்கண்ணோடும் விழிப்புணர்வோடும் எடுத்துக்கொண்டனர்.
அனைத்து ஓப்பல்
தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவரான
Klaus Franz ஓப்பல்
அடையாளத்தின் முன்னணி ஆதரவாளராக தன்னை காட்டிக்
கொண்டார். ஜெனரல் மோட்டர்ஸ் நிர்வாகத்தின் அமெரிக்க முறைகளின் முரட்டுத்தன்மை குறித்து தனது கோபத்தை
வெளிப்படுத்தினார். ''தங்களது சொந்த தயாரிப்புக்கள் குறித்து
Detroit மற்றும்
Zurich இலுள்ள நிறுவன அதிபர்கள் அளவிற்கு எந்த நிர்வாகியும்
உரிமை எடுத்துக்கொண்டதில்லை'' என்று அவர் அறிவித்தார். ஓப்பல் மக்கள் அனைவரிடத்திலும் வேர்விட்டிருக்கிறது
என்பதை அங்கீகரிக்குமாறு நிர்வாகத்தை அவர்கேட்டுக்கொண்டார்.
தொழிற்சங்க தலைமை ஆட்குறைப்பில் பங்கெடுத்தக்கொள்ள தயாராக இருக்கிறது
என்பதில் எந்த சந்தேகத்தையும் Franz
விட்டுவைக்கவில்லை. ''வேலைவாய்ப்புக்கள் வெட்டு நம்மை விட்டுவிடும் என்ற மாயைக்கெதிராக நான் எச்சரிக்கை
விரும்புகிறேன். அல்லது சில நூறு வேலைவாய்ப்புக்கள் தான் பாதிக்கப்படும் என்று மாயைக்கும் எதிராக எச்சரிக்கை
விரும்புகிறேன். ஜெனரல் மோட்டர்ஸ் ஐந்தாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் அது பற்றி
ஆராய்வதற்கும், ஒரு தீர்வு காண்பதற்கும் நாம் தயாராக இருந்தோம், இப்போது தயாராக இருக்கிறோம்
பேச்சுவார்த்தைகள் மூலம் இது நடைபெறவேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் ஒரு தியாகத்தை
செய்ய தயாராக இருக்கிறோம், இந்த தியாகம் ஊதியத்தில் 10 சதவீதத்திற்கு மேற்படாத வெட்டாக இருக்கக்கூடாது''
என்று அவர் அறிவித்தார்.
Bochum இல் நடைபெற்ற வேலை
நிறுத்தத்தை அவர் எதிர்த்தார். 1998 இல் Flint
தொழிற்சாலை மூடப்பட்டதற்கெதிராக அமெரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை
நிறுத்தத்தை தொடக்கியதை அவர் கண்டித்தார் ''அது வெறும் வாய் சொல்லங்காரமல்ல, அப்போது நாங்கள்
எச்சரித்தோம். 1998ல் நடந்ததைப்போன்ற மற்றொரு நிலையை நாம் உருவாக்கிவிடக்கூடாது. அப்போது
அர்த்தமற்ற ஒரு தொழிற்தகறாரால் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. இந்த வேலை நிறுத்தம் ஜெனரல்
மோட்டர்ஸ் பங்குகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்திவிட்டது'' என்று அவர் கூறினார்.
Opel Russelsheim ,
தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவரான
Udo Lowenbruck
அமெரிக்க நிர்வாகத்தின் ''தவறுகளை'' கண்டித்தார். ஜேர்மனி தொழிற்சாலை தொழிலாளர் குழு விரும்புகிற,
ஆதரிக்கிற ''நியாயமான தீர்வுகளுக்கு'' மாறாக அதுபற்றி ஜெனரல் மோட்டர்ஸ் முதலாளிகள், ''கற்பனை
செய்துகூட பார்க்கமுடியாதவர்களாக'' குற்றம் சாட்டினார்.
Darmstadt இலுள்ள
IG Metall தொழிற்சங்க தலைவரான
Gunthur Lorenz, Russelsheim இலுள்ள புதிய ஓப்பல்
தொழிற்சாலை ஊழியர்களது ஊதிய வெட்டுக்களால் உருவாக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார். அது
வெற்றிகரமான தொழிற்சங்க நடவடிக்கை என்றும் கூறினார். தொழிற்சங்கத்தின் குறிக்கோள் பேச்சுவார்த்தைகளில்
நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் போன்று அமைந்திருக்கிறதே தவிர தொழிலாளர்களை காத்து நிற்கும் உறுதிமொழியைத்
தருவதாக இல்லை என்பது அவரது உரையிலிருந்து தெளிவாக தெரிகிறது.
Daimler இலும்,
Karstadt
இலும் நடைபெற்றது ஜெனரல் மோட்டர்ஸ் இற்கும் ஓப்பல்க்கும்
பொருந்தும்'' என்று அவர் கூறினார்.
Daimler மற்றும்
Karstadt
இரண்டிலும் கணிசமான சலுகைகளை தொழிலாளர்களிடமிருந்து கசக்கிபிழிந்து பெற்றுக்கொண்டு அதற்கு கைமாறாக
ஒரு குறிப்பிட்ட இடங்களில் தொழிற்சாலைகளை தொடர்ந்து வைத்திருப்பதாக பயனற்ற உறுதிமொழிகள் தரப்பட்டது
அனைவருக்கும் தெரியும்.
மேடையில் பேசியவர்களுக்கு முரணாக பல தொழிலாளர்கள்
Bochum இல்
தங்களது சகாக்கள் தாங்களே விரும்பி மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். ஓப்பல் ஊழியர்
ஒருவரின் மனைவி, இந்தப்பேரணியை ஆதரிப்பதற்காக ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு கலந்து கொண்டார்.
அவர் WSWS
நிருபரிடம் பின்வருமாறு கூறினார்:
"Bochum இல்
காட்டப்பட்டுவரும் எதிர்ப்பு நல்லது என்று இங்குள்ள பலர் நினைக்கின்றனர். என்றாலும்
Bochum தான்
ஆட்குறைப்பில் முதலில் பாதிக்கப்படவிருக்கிறது என்று ஊகிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அது மிக
மோசமானதாகும். நிர்வாகம் தருகின்ற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அவர்கள்
வேலைநிறுத்தம் செய்திருப்பது நல்லது''
தொழிற்சாலையில் நிலவும் உணர்வு கசப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு நடவடிக்கையையும் நீங்கள் நியாயப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ''எடுத்துக்காட்டாக
எனது கணவர் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் நோய்விடுப்பு எடுத்தார். 20 ஆண்டுகள் பணியில்
ஒரு நாள்தான் நோய்வாய்ப்பட்டார்! ஆனால் அப்படியிருந்தும் முதலாளி முன்பு அவர் நிறுத்தப்பட்டார்'' என்று குறிப்பிட்டார்.
ஒரு ஓப்பல் தொழிலாளி
WSWS இற்கு பின்வருமாறு கூறினார்; ''இந்த புதிய தொழிற்சாலை
Russelsheim
நகரில் எங்களது பணத்தால் உருவாக்கப்பட்டது. அது உலகிலேயே நவீன
தொழிற்கூடம் என்று கருதப்பட்டது. அதன் உற்பத்தி முழு அளவிற்கு இருக்கும் என்று கூறப்பட்டது'' தற்போது அந்த
தொழிற்சாலை தனது உற்பத்தித்திறனில் 53 சதவீதத்தை மட்டுமே எட்டியுள்ளது. அந்தத் தொழிற்சாலை மூடப்படவிருக்கிறது
என்று கசப்போடு கூறினார்.
ஓப்பல் Russelsheim
இல் 27ஆண்டுகள் பணியாற்றிய
Manfred கூறினார்:
கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தையே நாங்கள் பெற்றுக்கொண்டு வருகிறோம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்
எங்களது தொழிற்சாலை இங்கேயே இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் நிர்வாகத்திற்கு சலுகைகள் தரும் ஒப்பந்தம்
ஒன்று ஒருவாக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஊதிய உயர்வுகள்
எங்களுக்கு தரப்படவில்லை.
''இப்போது நாங்கள் பெருகின்ற ஊதியத்தில், எமது குடும்பத்தை நடத்துவது மிகுந்த
சங்கடத்திலுள்ளது, எங்களது வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து கொண்டேவருகிறது. எங்களது நிகர ஊதியம் அதே
அளவிற்கு உள்ளது. ஆனால் விலைவாசிகள் நிரந்தரமாக ஏறிக்கொண்டிருக்கின்றன.
''என்னுடைய கட்சி எப்போதுமே சமூக ஜனநாயக கட்சியாகத்தான் இருந்தது.
என்னுடைய அரசியல் கருத்துக்கள் மாறுமென்று நான் எப்போதுமே நினைத்ததில்லை ஆனால் நான் ஐரோப்பிய
தேர்தல்களில் கூட வாக்களிக்க வேண்டும் என்று கருதவில்லை'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
See Also :
ஓப்பல்
தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சனைகள்
ஜேர்மன்
ஓப்பல் தொழிலாளர்கள்: 3, 4 யூரோக்கள் ஊயதித்தோடு ''நாங்கள் போட்டிபோட முடியாது''
ஜேர்மனி:
ஓப்பல் 10,000 பேரை வேலைநீக்கம் செய்கின்றது
Top of page |