:
ஐரோப்பா
:
பிரித்தானியா
Britain agrees to troop redeployment to
back Fallujah offensive
பல்லூஜா தாக்குதலுக்கு ஆதரவாக தனது துருப்புக்களை திரும்ப அனுப்ப பிரிட்டன் சம்மதிக்கிறது
By Julie Hyland and Chris Marsden
23 October 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
தெற்கு ஈராக்கிலுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்திலிருந்து ஏறத்தாழ 850-
துருப்புக்களையும் மற்றும் ஆதரவு ஊழியர்களையும் பாக்தாத் தலைநகருக்கு அருகிலுள்ள இராணுவ நிலைகளுக்கு அனுப்ப
வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று அக்டோபர் 21ல் டோனி பிளேயரின் தொழிற்கட்சி
அரசாங்கம் உறுத்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த முடிவை அறிவித்த பாதுகாப்பு அமைச்சர்
Geoff Hoon தொழிற்கட்சி அமைச்சரவை
அந்தக்கோரிக்கையை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது என்று குறிப்பிட்டார்.
''கவனமான மதிப்பீடுகளுக்குப்பின் முப்படை தலைமை தளபதிகள் எனக்கு தெரிவித்த
ஆலோசனை என்னவென்றால் பிரிட்டிஷ் படைகள் முன்மொழியப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் நிலையில்,
இராணுவ நடவடிக்கை அடிப்படையில் கட்டாயமான நியாயமுள்ளது. பிரிட்டன் படைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இராணுவ
ஆபத்துக்களும் உண்டு'' என்று Hoon
குறிப்பிட்டார்.
அக்டோபர் 10-ல் அமெரிக்காவிடம் இருந்து வந்த இராணுவ உதவிக் கோரிக்கையை
இன்னும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் நடத்திவந்த நாடகத்திற்கு அவரது அறிவிப்பு முற்றுப்புள்ளி
வைத்திருக்கிறது.
படைகளை திரும்ப அனுப்புவதுபற்றி எந்த முடிவும் செய்யப்படவில்லை என்று அமைச்சர்கள்
கூறிக்கொண்டிருந்த நேரத்திலேயே டெய்லி மிரர் அம்பலப்படுத்தியுள்ள ஒரு தகவலின் படி ஒரு பிரிட்டிஷ்
இராணுவ வீரர் படைகளின் வலைத் தளத்திற்கு ஆவேசமான ஒரு இ-மெயிலை அனுப்பினார், அதில் தமது பிரிவு நகர்வற்கு
தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பாக்தாத்திற்கு அனுப்பப்படவிருக்கின்ற பிளாக் வாட்ச் படைப்பிரிவு,
ஈராக்கிலுள்ள பெரும்பாலும் பாஸ்ரா துறை முகத்தைச்சுற்றி தளங்களிலுள்ள 7,500- பிரிட்டஷ் துருப்புக்களின் ஒரு
பகுதிதான்.
Hoon அறிவிப்பு வருவதற்கு முன்னர்
லிபரல் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் 44- தொழிற்கட்சி
MP- களும் வைத்த
கோரிக்கை என்னவென்றால், பிரிட்டிஷ் துருப்புக்கள் தங்களது இராணுவத் தளத்திலிருந்து திரும்ப பணிக்கு அனுப்பப்படும்
முன்னர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படவேண்டும் என்று கோரினார்கள் ஏனெனில் அதன் மூலம் பிரிட்டிஷ்
துருப்புக்களுக்கு ஆபத்து அதிகரிக்கக் கூடும் என்று அவர்கள் கூறினர்.
பாக்தாத்தை சுற்றியுள்ள பகுதி ''மரண பள்ளத்தாக்கு'' என்று அமெரிக்கப்
படைகளால் வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில் அங்கு ஆக்கிரமிப்பிற்கெதிராக கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க
வேண்டியிருக்கிறது.
ஆனால் கவலைக்கான பிரதான காரணம் பல்லூஜா மீது ஒட்டுமொத்தத் தாக்குதல்
நடத்துவதற்காக பாக்தாத் பகுதிகளிலிருந்து அமெரிக்க கடற்படையினரை விடுவித்து பல்லூஜா அனுப்புவதற்காக,
இப்படி துருப்புக்கள் திரும்ப அனுப்பப்படுகின்றன. கடைசியாக பல்லூஜா மீது நடத்தப்பட்ட தாக்குதலில்
நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் பலியானார்கள் பல்லூஜாவிலுள்ள 3,00,000 மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட
அந்தப்பெரிய தாக்குதலுக்கு மிகக்கொடூரமான எதிர்ப்பு உருவானதால், கிளர்ச்சிக்காரர்களுடம் இறுதியாக ஒரு
சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்றாலும் கடந்த வாரங்களில்
அமெரிக்கா அந்த நகரத்தின் மீது திரும்பத்தாக்குதலை தொடங்கிவிட்டது. பெரும்பாலான சாலைகளை மூடிவிட்டு
தினசரி விமான குண்டுவீச்சுத்தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் பல சிவிலியன்கள் 20-
கணக்கில் கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்ததாகவும் மருத்துவமனை தகவல் தந்திருக்கின்றன.
நவம்பர் 2-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்தவுடன் முழுவீச்சில் தரைப்படை
மற்றும் விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது. அந்த நகரம்
Abu Mu Saab Zarqawi
தலைமையில் இயங்குகின்ற பயங்கரவாதக் குழுவின் மையமாக விளங்குகிறது என்ற காரணத்தால், தாக்குதல் நடத்துவது
நியாயப்படுத்தப்படுகிறது. அந்தக்கூற்றை பல்லூஜா கவுன்சில் கடுமையாக எதிர்க்கிறது. அந்தத் தாக்குதலுக்கான
உண்மையான காரணம் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கின் தேசிய எதிர்ப்பு மையமாக விளங்குகிறது.
அந்த எதிர்ப்பு நசுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அமெரிக்காவின் பொம்மையாட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகார
முத்திரை தருவதற்காக திட்டமிடப்பட்டுள்ள ''சுதந்திர தேர்தல்கள்'' ஜனவரியில் நடத்தப்படமுடியும்.
அத்தகைய கொந்தளிப்பான ஒரு நேரத்தில் கூடுதலாக அமெரிக்கத் துருப்புக்களை
அழைப்பதற்கு புஷ்- நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் விரும்பவில்லை, எனவேதான் பிளேயர் அரசாங்கத்தின்
உதவியை அவர்கள் நாடினார்கள் என்பது தெளிவாகிறது.
அத்தகைய இரத்தக்களரிக்கு வித்திடக்கூடிய தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்படுவதில்
மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் மக்களுக்கு நியாயமான கவலை ஏற்பட்டிருக்கிறது. ஈராக் போரிலும் ஆக்கிரமிப்பிலும்,
அரசாங்கம் பங்கெடுத்துக் கொள்வதற்கு தாங்கள் தெரிவித்து வந்த எதிர்ப்பை உறுதிப்படுத்துவதாக பலர் கருதுகின்றனர்.
பொதுமக்களிடையே எந்த அளவிற்கு கலவர உணர்வு நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் அரசாங்கம்
30- நாட்களுக்குத்தான் தனது படைகளை அனுப்பமுடியும் என்றும் அறிவித்தார்கள். பிளேயர், பிளாக் வாட்ச் படைகள்
கிருஸ்துமஸிற்கு முன்னர் நாடுதிரும்பிவிடும் என்று உறுதியளித்தார். அப்படி அவர் சந்தேகமூட்டுகின்ற வகையில் அறிவித்த
வார்த்தைகள் அவருக்கு பீதியூட்டுகின்ற வகையில் திரும்ப நினைவிற்கு வந்துகொண்டேயிருக்கும்.
ஆனால் இந்த முற்போக்கான பொது மக்களுக்காக அறிவிக்கப்பட்ட உணர்வு
வெளிப்பாடு தொழிற்கட்சியிலும் பொதுவில் அரசியல் நிறுவனத்திலும் சிறிதளவுகூட எதிரொலிக்கவில்லை.
கன்சர்வேட்டிவ் கட்சி அந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது, அது ஒரு "இராணுவ
அவசிய" நடவடிக்கை என்றும் அரசாங்கத்தின் முயற்சியில் திட்டங்கள் எந்த வகையிலும் சிதைந்துவிடக்கூடாது என்றும்
உறுதியான நிலையை அது உருவாக்கிக் கொண்டது. தொழிற்கட்சிக்குள் போருக்கு எதிரான கொள்கை அடிப்படையிலான
எந்தவிதமான எதிர்ப்பையும் எவரும் தெரிவிக்கவில்லை.
ஜனாதிபதி புஷ்ஷை தொலைபேசியில் அழைத்து அவர் தனது கோரிக்கையை
திரும்பப்பெறுமாறு பிளேயர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தொழிற்கட்சி
MP- க்கள் அதை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிவிட வேண்டும் என்றும் போர் ஆதரவு
MP- களில் ஒருவரான
Andrew Mackinlay
பிரதமர் டோனி பிளேயருக்கு ஒரு ஆலோசனை கூறினார். இந்த சம்பவத்தில், பாரிய கிளர்ச்சி பற்றிய முன்கணிப்பு,
போர் ஆதரவு தொழிற்கட்சி MP-க்களில்
மன மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை.
நடைபெற்றதெல்லாம் பிளேயருக்கு எதிரான தெளிவில்லாத, கண்டனங்களின் வெளிப்பாடுதான்.
பிளேயர், புஷ்ஷிற்கு அரசியல் அடிப்படையில் உதவிக்கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அல்லது பல்லூஜா மீது
தாக்குதல் நடத்துவதற்கு உதவுவதால் ஏற்படுகின்ற அரசியல் மற்றும் இராணுவ அடிப்படையிலும் உருவாகக்கூடிய பாதிப்புக்கள்
பற்றிய அச்சத்தை போக்குவதற்கு வெற்றிகரமாக சமாளிக்கமுடியவில்லை என்பதுதான் இந்தத் தெளிவில்லாத கண்டனங்களின்
அடிப்படையாகும்.
போர் ஆதரவு அரசியலை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்ற கவலைகளில் ஏதோ ஒன்று
ஆழமான அருவருக்கத்தக்க அம்சம் உள்ளது. புஷ்ஷின் மறு தேர்தல் நம்பிக்கைகளை உற்சாகப்படுத்துவதற்காக பிரிட்டிஷ்
துருப்புக்கள் பலியிடப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு உண்மையான பிரச்சனையை திசைதிருப்புகின்ற நடவடிக்கையாகும்.
பிளேயரின் சொல் அலங்காரத்திற்கு முரணாக, ஈராக் போரில் பிரிட்டன் பங்கெடுத்துக்கொண்டமை
ஜனநாயக அடிப்படையை புதுப்பிப்பதற்காக ஒரு பழைய சகாவிற்கு உதவுவதை எப்போதுமே குறிக்கோளாகக்
கொண்டு நடைபெற்றதில்லை. பிரிட்டனின் நோக்கங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அதே கண்ணோட்டங்களை அடிப்படையாகக்
கொண்டு எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் அதன் பூகோள அரசியல் நலன்களை வலியுறுத்தும் அவசியத்தை அடிப்படாயாகக்
கொண்டதுதான். எனவே ஈராக்கில் தோல்வி ஏற்படுவதன் அரசியல் மற்றும் இராணுவ விளைவுகளை அமெரிக்க ஆளும்
வர்க்கத்தை போன்றே பிரிட்டனின் ஆளும் வர்க்கமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்கா ஈராக்கை அமைதிபடுத்தும் நோக்கத்தில் தோல்வியடையுமானால் அமெரிக்க
ஜனாதிபதியின் --அவர் புஷ்-ஆக இருந்தாலும் அல்லது அவரது ஜனநாயகக்கட்சி எதிர்பாளரான ஜோன் கெர்ரியாக
இருந்தாலும்-- அவர்களது அரசியல் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல பிளேயர் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கும் ஆபத்தாக
அமைந்துவிடும். பிரிட்டனின் ஆளும் மேல்தட்டினரின் வெளியுறவுக்கொள்கை மூலோபாயம் முழுவதும் ஈராக் மக்களை
அடக்கி ஆள்வதை அடிப்பைடயாகக் கொண்டதாகும்.
எனவேதான் நிர்வாக தரப்பைச் சேர்ந்த ஒருசில தனித்த குரல்கள் ஈராக்கிலிருந்து
"வெளியேறுகின்ற மூலோபாயம்" தொடர்பாக இதுவரை அரைகுறை கோரிக்கைகள் விடுப்பதாக அமைந்திருக்கின்றன.
ஐ.நா ஆதரவு இல்லாமல் போருக்கு சென்றதை எதிர்த்து நின்றவர்களில் கூட பெரும்பான்மையானவர்கள் இப்போது
ஆக்கிரமிப்பு வெற்றிபெற்றாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மற்றும் ஒரு கிரிமினல் நடவடிக்கை என்று
கருதப்படுவதில் மற்ற நாடுகளையும் எவ்வாறு சிறப்பான முறையில் ஈடுபடுத்துவது என்பதில் மட்டும் இப்போது கவனம்
செலுத்திவருகின்றனர். அவர்களில் பலர் கெர்ரி வெற்றியில் தங்களது நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். ஏனென்றால்
கெர்ரியின் வெற்றி புஷ்- நிர்வாகம் மேற்கொண்டுள்ள தன்னிச்சையான போக்கிலிருந்து மாறுகின்ற முயற்சிக்கு அது
சமிக்கைகாட்டுவதாக அமையுமென்று நம்புகின்றார்கள்.
இவர்கள் போர் எதிர்ப்பாளர்கள் அல்ல மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களும்
அல்ல ஆனால் போர் அதிக பயனுள்ளதாக அமையவேண்டுமென்று கூறுபவர்கள்.
தொழிற்கட்சிக்குள் இப்போதுள்ள
Casssandra
களின் கவலை என்னவென்றால், ஈராக்கில் பிரிட்டன் மனிதநேய பங்களிப்பு செய்து வருகிறது என்ற கட்டுக்கதை
பல்லூஜா-விற்கெதிரான தாக்குதல் சிதைந்துவிடும் மற்றும் அமெரிக்க நடவடிக்கைகளோடு சம்மந்தப்பட்ட வன்முறைப்
பாணியில் பிரிட்டனும் உடந்தையாக இருக்கிறது என்ற நிலையை உருவாக்கிவிடும் என்று கவலைப்படுகிறார்கள்.
அத்தகைய கவலைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையில் பாதுகாப்புத்துறை முன்னாள்
அமைச்சர் றொபின் குக் அக்டோபர் 22 கார்டீயன் இல், ஈராக்கில் பிரச்சனை என்னவென்றால் அமெரிக்கத்
துருப்புக்கள் பற்றாக்குறையல்ல, அமெரிக்காவின் சமாதானத்தை நிலைநாட்டுவதில் பயிற்சி பெற்ற துருப்புக்கள்
எதுவுமில்லை என்பதுதான் என்று தனது நம்பிக்கையை எழுதியிருக்கிறார்.
''அவர்கள் தங்களது இராணுவ கலாச்சாரத்தை மிகப்பெரும் படையோடு
ஈராக்கிற்கு கொண்டுவந்தார்கள் ஏதாவதொரு எதிர்ப்பு தோன்றினால் கூடுதல்படை வலிமைகொண்டு
எதிர்நடவடிக்கையில் இறங்கினார்கள், அமெரிக்கப்படைகளின் அதிக பலாத்காரம் நிறைந்த இராணுவ
தந்ரோபாயங்களால்தான் ஆக்கிரமிப்பிற்கு தற்போது நிலவுகின்ற எதிர்ப்பு உசுப்பிவிடப்பட்டது. மற்றும் அவர்கள்
ஈராக்கை சேர்ந்த ஒவ்வொருவரும் சாத்தியமான எதிரி என்று நினைத்து செயல்பட்டார்கள்.
''இதனுடைய தவிர்க்க முடியாத விளைவு என்னவென்றால் அமெரிக்கப் படைகள்
பணியாற்றுகின்ற பகுதிகளில் பிரிட்டிஷ் துருப்புக்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் மூலம் அந்த முடிவினால் அமெரிக்க
நடைமுறைகளோடு நமது படைகளையும் இணைத்து கரிபூசுகின்ற நிலை உருவாகி அதன்மூலம் ஏற்படுகின்ற சிவிலியன்
பாதிப்புக்களுக்கு நமது படைகளும் பொறுப்பு என்ற நிலை ஏற்பட்டது''
அதன் நீண்ட ஏகாதிபத்திய வரலாற்றின் காரணமாக பிரிட்டன், உள்ளூர் முதாலளித்துவ
சக்திகள் குட்டி முதலாளித்துவ சக்திகளிடையே தனக்கு ஆதரவை வளர்க்கின்ற போக்கை படைபிடிப்பதில் நிபுணத்துவம்
நிறைந்தது என்பது உண்மைதான். ஆனால் பிரிட்டன் பிடித்துக்கொண்டுள்ள பாஸ்ரா நாகரீக நடவடிக்கைகள் கொண்ட
தீவு என்று சித்திரிப்பது ஒரு கற்பனையாகும். பாஸ்ராவில் எந்தவிதமான ஆயுதமும் இல்லாத அப்பாவி சிவிலியன்கள்
கொல்லப்படுவது மற்றும் கொடூரச்செயல்கள் பற்றி திரும்பத்திரும்ப குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருவது அந்தக்
கற்பனையை பொய்யாக்குவதாகும்.
அது எப்படியிருந்தாலும் பாக்தாத்திற்கு திரும்ப துருப்புக்களை அனுப்புவதற்கான முடிவு
ஆரம்பத்திலிருந்தே சட்ட விரோதமான மற்றும் புதிய காலனியாதிக்க ஆக்கிரமிப்பு போருக்கு தூய்மையான மூலாம்
பூசுவதை சாத்தியமாக்கவில்லை.
நடவடிக்கையில் தவறுகள் ஊடுருவல் ஆபத்து என்று பேசுவது உண்மையை புறக்கணிப்பதாகும்.
ஆரம்பத்திலிருந்தே இந்த நடவடிக்கையில் கொடூரச்செயல்களும் வன்முறைகளும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. பிரிட்டிஷ்
துருப்புக்களை பாக்தாத் பகுதிக்கு அனுப்புவது என்ற முடிவில் ஒரு அரசியல் அம்சம் அடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அந்த அம்சத்தை Hoon
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். ''நாம் அந்தக் கோரிக்கையை ஏற்க
மறுப்போமானால் அமெரிக்காவுடன் மட்டுமல்ல, இந்தக் கூட்டணியின் இதர உறுப்பு நாடுகளுடன் நமக்கு இருக்கும்
உறவுகளின் உயிர்நாடியையே அந்த முடிவு தொட்டுவிடும்.
என்றாலும் இந்த படைநகர்வில் ஒரு இராணுவ தர்க்கவியல் முடிவும் அடங்கியிருக்கிறது
என்பதும் உண்மை. ஒரு ஆக்கிரமிப்பில் பங்கெடுத்துக்கொள்வது என்று சம்மதித்து விட்டால், அதை நிலைநாட்டுவதற்கு
தேவையான நடவடிக்கைகளிலும், பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மைதான்.
எனவே இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களின் கட்டுப்பாட்டில்
ஈராக் இருக்கும் ஒவ்வொரு நாளிலும் நிச்சயமாக மேலும் இரத்தக்களரி நடக்கத்தான் செய்யும். தொழிலாள
வர்க்கம் பிரிட்டனில் ஏற்றுக்கொள்கின்ற ஒரே ''வெளியேறும் மூலோபாயம்'' என்னவென்றால், அந்த
நாட்டிலிருந்து அனைத்து ஆக்கிரமிப்புப்படைகளும் உடனடியாகவும், நிபந்தனை இன்றியும் வெளியேறி ஈராக்கிய மக்கள்
தங்களது எதிர்காலத்தை முடிவு செய்ய அனுமதிக்கவேண்டும்.
Top of page |