World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGerman Opel workers: "We cannot compete with wages of 3-4 euros" ஜேர்மன் ஓப்பல் தொழிலாளர்கள்: 3, 4 யூரோக்கள் ஊயதித்தோடு ''நாங்கள் போட்டிபோட முடியாது'' By our reporters Bochum, Langendreer நகரிலுள்ள Opel தொழிற்சாலை தொழிலாளர்களை WSWS நிருபர்கள் பேட்டி கண்டனர்.அச்சுக்கள் செய்யும் தொழிற்கூடத்தில் பணியாற்றுகின்ற வயதுமுதிர்ந்த ஊழியர்குழுவை சேர்ந்தவர்கள் Bochum நகர Opel தொழிற்சாலையில் தாம் 40 ஆண்டுகளாக பணியாற்றியதாக தெரிவித்தனர். ''இப்படியே போய் கொண்டிருந்தால் இது எங்கே போய் முடியும்? முதலில் Siemens இல் ஆரம்பித்தார்கள், அற்குப்பின்னர் மற்றைய நிறுவனங்கள் தொடர்ந்தன. இங்கே அவர்கள் செய்து கொண்டிருப்பது முதல் நடவடிக்கைதான். 2009 அல்லது 2010ல் முற்றிலுமாக மூடிவிட விரும்புகிறார்கள், அப்போது மக்கள் எங்கே பணியாற்றுவர்? Ruhr பகுதியில் எந்த புதிய வேலைவாய்ப்பும் உருவாகவில்லை'' என்று Franz கூறினார். ''ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கி விரிவடைவதைப் பயன்படுத்தி நல்ல ஊதியம் தரும் வேலைவாய்ப்புக்களை இங்கே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு பதிலாக மிகக்கடுமையான ஊதியக் குறைப்புப்பணிகளை உருவாக்கிவருகின்றனர். இதனுடைய விளைவு வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்து கொண்டிருப்பதுதான். மூன்று முதல் நான்கு யூரோக்கள் ஊதியப்பணிகளோடு (3.75-5 டொலர்கள்) போட்டிபோட முடியாது நாங்கள் வாடகை தரவேண்டும். இதர வீட்டுச்செலவுகளும் உண்டு, இவற்றை ஒரு மாதத்திற்கு 100யூரோக்களுடன் (125-டொலர்கள்) சமாளிக்கமுடியாது. தலைமையில் இருப்பவர்களுக்கு எங்களது வாழும் நிலைகுறித்து கவலையில்லை, ஏனென்றால் அவர்கள் மில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்'' என்றும் அவர் கூறினார். செய்வாய் கிழமையன்று நடவடிக்கை தினம் திட்டமிடப்பட்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்த Horst ''எங்களது ஸ்வீடன் சகாக்களும் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் எப்படி ஒருவருக்கு எதிராக மற்றொருவரை திருப்பிவிடப் போகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். எங்களது தொழிற்சங்கங்களும் கூட்டு தொழிற்சங்க நிர்வாகக் குழுவும், படிப்படியாக ஆனால் நிச்சயமாக தங்களை தாங்களே பிளவுபடுத்திக்கொள்ள அனுமதித்துவிட்டன. ஒரே வழியில் இணைந்து செயல்படுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கே நான் 1961இல் பணியாற்ற தொடங்கினேன் அந்த நாட்களில் இங்கே நாங்கள் வேலை நிறுத்தம் செய்தால் Ruesselsheim இலுள்ள எங்களது சகாக்களும், பங்கெடுத்துக் கொண்டனர். இப்போது அப்படியில்லை. இன்றையதினம் ஒவ்வொருவரும் தங்களது சொந்த தொழிற்சாலை பற்றியே சிந்திக்கின்றனர்'' என குறிப்பிட்டார். ஓப்பல் நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் குறித்து Horst அதிர்ச்சியடைந்தார். ''நாம் செய்யக்கூடியது என்னவென்றால் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவற்கு முன்வரும் வரை இங்கேயே இருந்து கொண்டிருப்பதுதான். வேறு என்ன நாங்கள் செய்ய முடியும்? இங்கிருந்து நாங்கள் வெளியேறிவிட்டால், எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை, எங்களுக்கு குடும்பம் இருக்கின்றன. வீடுகள் அல்லது மாடிக்குடியிருப்புக்களில் இருக்கிறோம். செலவினங்கள் பெருகிக்கொணடே இருக்கின்றன. இவை அனைத்திற்கும் பணம் செலுத்தியாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அரசாங்கத்தின், தொழில் சீர்திருத்தங்கள் மற்றும் வெட்டுக்கள் திட்டம் பற்றி Horst கூறினார்: ''Hartz-IV மூலம் நான் எனது குடும்பத்தை நடத்தமுடியாது. நாங்கள் வேலையில்லா திண்டாட்டம், முதியோர் ஓய்வூதியங்கள், முதலிய திட்டங்களுக்காக 40 ஆண்டுகளாக சந்தா செலுத்திவிட்டோம். அதற்கு நாங்கள் இப்போது உபரி உதவித்தொகையை பெறலாம். ஆனால் எங்களது வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகைகள் வெட்டப்படும் இதற்கு நாங்கள் ஒரு வழிகண்டாக வேண்டும்'' கியர் அசெம்ளி (gear assembly) தொழிற்கூடத்தில் பணியாற்றுகின்ற 29 வயது ஸ்டீபன் தொழிற்சங்கமும் கூட்டுக்குழுவும் தகவலை தங்களுக்கு தருவதற்கு தவறிவிட்டதை கண்டித்தார்: ''தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழுவிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலுமில்லை, எங்களுக்கு தெரிந்ததைவிட பத்திரிகைகளுக்கு அதிகம் தெரியும். என்ன நடக்கிறது என்பதை நாங்கள்தான் கடைசியாக தெரிந்துகொள்கிறோம். ஸ்வீடன் நிலவரம் குறித்து எங்களுக்கு எந்தத்தகவலும் இல்லை. பொதுவான மூலோபாயம் ஒன்று இருக்குமானால், நிர்வாகத்தை நாம் புரிந்துகொள்ளச்செய்ய முடியும். Ruesselsheim இலுள்ள எங்களது சகாக்கள் ஒதுங்கியிருக்கிறார்கள், அங்கே என்ன நடக்கிறது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. நேரடியான தொடர்புகள் எதுவுமில்லை'' வேலையிழந்துவிட்ட ஓப்பல் தொழிலாளர்கள் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்றும் புதிய
வேலையைத் தேட வேண்டும் என்றும் North Rhine West
Phalia மாகாண பிரதமர்
Peer Steinbrueck (SPD) கூறியிருப்பது பற்றி ஸ்டீபன் தனது
ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ''இங்கே நடந்துகொண்டிருப்பதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு நாங்கள் அல்ல.
ஏற்கனவே மற்ற 5 மில்லியன் மக்கள் புதிய வேலையைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்''' ''மிகச்சிறப்பாகவும், திட்டமிட்டும் தொழிற்சாலையை மூடுபவர்கள்தான் உயர்ந்த பதவிகளுக்கு தேந்தெடுக்கப்படுகிறார்கள். எல்லாமே அடித்து நொறுக்கப்பட்டு பங்குபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தில் தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ''அரசியல்வாதிகள் கெட்டதில் பாதியைத்தான் விலக்குகிறார்கள். ஆனால் தலைமை நிர்வாகிகள் தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக்கொள்கிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு உதவிக்குத்தான் மனுசெய்ய வேண்டியிருக்கிறது எங்களில் யாராவது ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது சொல்வாரானால் அவர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்'' தனது வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருப்பதாக Mueller குறிப்பிட்டார். ''எனது வயதில் நான் மற்றொரு வேலையை பெறமுடியாது. எனக்கு ஒரே வழி சொந்தமாக தொழில் செய்வதுதான், வேறு என்ன தரப்போகிறார்கள்?'' வேலை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்தும் அவர் கருத்துத்தெரிவித்தார்: ''மேலே இருந்து ஷிப்ட் தலைவர்கள் பெருமளவிற்கு நெருக்குதல்களை தந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உற்பத்தி, உற்பத்தி என்று கத்துவதால் தரம் வீச்சியடைகிறது. யாராவது ஒருவருக்கு உடல்நலம் இல்லையென்றால், அவர் நிர்வாகத்திற்கு அதை நியாயப்படுத்திக்காட்டவேண்டும். அடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள். இன்றைய தினம் எல்லா இடத்திலும், அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. ''ஸ்வீடனில் தொழிலாளர்களை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் அதனால் அவர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். போலந்தில் கார்களை தயாரிக்கும் தொழிலாளர்கள், அந்தக் கார்களை விலைக்கு வாங்க முடியாது, எனென்றால் அவர்கள் ஒரு மணிநேரத்திற்கு 4-யூரோக்களைதான் சம்பாதிக்கின்றனர். இங்கேகூட எந்தத் தொழிலாளியும் இன்றைய தினம் காரை வாங்க முடியும், வேலையில்லாதவர்களும், சமூக உதவித்திட்டத்தை பெறுபவர்களும் காரை வாங்கமுடியுமா?'' தொழிற்சங்கங்கள் பற்றியும் அவர் தனது சந்தேகங்களை வெளியிட்டார் ''தொழிற்சங்கங்கள் பெரும்பாலான தொழிலாளர்களுக்காகத்தான் பணியாற்ற வேண்டும், ஆனால் இங்கே அப்படியில்லை தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் உடன்பட்டே வேலைகள் வெட்டப்படுகின்றன. தொழிற்சாலை தொழிலாளர் குழு நிர்பந்தத்தில் இயங்கி வருகிறது. ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் அனைவரும் ஒரு பகுதி வேலையிழப்பிற்கு உள்ளாக வேண்டுமா? என்ற நிர்பந்தத்திற்கு இலக்காகின்றன. ''தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தால், நிலவரம் மாறுபட்டதாக தோன்றும், அப்போது அனைவரும் தெருவிற்கு வந்தாக வேண்டும். கடைசியாக 1970 களில் பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன போலந்து, ஸ்வீடன், மற்றும் பிற இடங்களிலுள்ள நமது சகாக்களோடு இணைந்து நாம் போராட வேண்டும். அமெரிக்காவிலுள்ள நிறுவன தலைமை அலுவலகங்களிலிருந்து நாம் கேட்கும் குரல்கள் எல்லாம் இலாபம், இலாபம், இலாபம் என்றே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கே தங்களது சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு அவர்களது விற்பனைகளையும், இலாபங்களையும் தான் பார்க்கிறார்கள், இதை நாம் எதிர்த்தாக வேண்டும்''. |