World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்Hague tribunal stops Milosevic defending himself மிலோசிவிக் தானே வாதாடுவதற்கு ஹேக் நீதிமன்றம் தடை By Paul Mitchell யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி சுலோபோடன் மிலோசேவிக் ஹேக் போர்குற்ற நீதிமன்றத்தில் தானே வாதாடுவதை நீதிபதிகள் தடுத்துவிட்டு அவருக்கு வாதாடுவதற்கு ஒரு வழக்கறிஞரையும் நியமித்திருக்கின்றனர். செப்டம்பர் 7ல் நடைபெறவிருக்கும் விசாரணையில் முதலாவது எதிர்த்தரப்பு சாட்சியை விசாரிக்கவும் கட்டளையிட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு யூகோஸ்லாவியாவில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், இன மற்றும் மத அடிப்படையில் உடைப்பதற்கு ஊக்குவிக்கவும் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக மிலோசேவிக் அரசியல்ரீதியாக பிரச்சனைகளை உருவாக்கும் கேள்விகளை எழுப்பாமல் தடுக்கும் முகமாகவே வெளிப்படையாக நீதிபதிகள் அவருக்கு வாதாடும் வக்கீலை நியமித்திருக்கின்றனர். மிலோசேவிக்கின் உடல்நிலை சீர்குலைந்து கொண்டுவருவதாக வலியுறுத்தி அந்த பாசாங்கு நகர்வை சுரண்டிக்கொண்டு, அவர் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்கின்ற வாதங்களை நடத்துவதை முடிவுக்கொண்டுவரப்பட்டுள்ளது. 1991 முதல் 1995 வரை குரோசியாவிலும், 1992 முதல் 1995வரை பொஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாவிலும் 1998-1999ல் கொசாவோவாவிலும், போர்குற்றங்கள் மற்றும் இனபடுக்கொலையில் ஈடுபட்டதாக யூகோஸ்லேவியாவின் முன்னாள் அதிபர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICTY) குற்றச்சாட்டுக்கள் தாக்கல் தொடங்கப்பட்டு, 2002 பெப்ரவரி முதல் நடைபெற்றுவருகின்ற விசாரணையில் மிலோசேவிக் தன்னைதானே பாதுகாத்து வாதாடி வருகிறார். மிலோசேவிக்கிற்கு மிக உயர்ந்த இரத்தக்கொதிப்பு இருப்பதால் குறிப்பாக இந்த காலத்தில் அழுத்தங்கள் ஏற்படுகிறபோது அவருக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்துள்ளது என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். அவரது உடல் நலிவு காரணமாகவும், வைத்தியர்களது ஆலோசனைப்படியும் விசாணை ஆரம்பிப்பதை பலதடவை நீதிபதிகள் தள்ளிவைத்திருக்கின்றனர். என்றாலும் மிலோசேவிக் அவரது மோசமான உடல்நிலை காரணமாக மட்டுமே விசாரணையைத் தாமதப்படுத்தவில்லை. ஆனால் நீதிமன்றம் நியமித்த இதயநோய் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி மிலோசேவிக் அமைதிப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள மறுத்துவருகிறார் என்றும் நீதிபதிகள் கூறினர். ''குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து தானே வாதாடிக்கொண்டிருப்பாரானால் இந்த வழக்கு விசாரணை நியாயமற்ற வகையில் நீண்டகாலத்திற்கு நீடித்துக்கொண்டேயிருக்கும் அல்லது அதைவிட மோசமாக விசாரணை முடிவிற்கு வராத நிலை ஏற்பட்டுவிடும்'' என்று நீதிபதி பேட்ரிக் ரொபர்ட்சன் வாதிட்டார். மிலோசேவிக் எப்படியோ தூக்கமின்மை மற்றும் கவலைகளை கட்டுப்படுத்தும் benzodiazepine எனப்படும் அமைதிப்படுத்தும் மருந்தை அருந்துகிறார், அத்தகைய மருந்துகளை அவர் தொடக்கூடாது என்று அவர்மீது அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் வைத்தியர்கள் பரிந்துரைத்த வேறொருவகை அமைதிப்படுத்தும் மருந்துகளை அவர் உட்கொள்ள ஏற்கெனவே மறுத்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இரத்த அழுத்தத்திற்கு எதிரான மருந்துகளை அவர் உட்கொள்ள மறுத்துவருவதன் மூலம் இரத்தக்கொதிப்பை அதிகரிக்க செய்து அதன் மூலம் விசாரணையை நிறுத்த மேஉயலுகின்றார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். நீதிபதிகளின் நகர்வை முன்னணி வழக்குதொடுனர் Geoffrey Nice பாராட்டினார். மிலோசேவிக் தனது உடல்நலிவு பிரச்சனைகளை ''பெரும்பாலும் நிச்சயமாக பெரிதுபடுத்தக்கூடும்'' என்றும் அவர் குற்றம் சாட்டினார். ''சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஒரு அரசியல் அரங்காக'' மிலோசேவிக் பயன்படுத்துகின்ற ஆற்றலை கட்டுப்படுத்துகிற வகையில் நீதிபதிகள் முடிவு செய்திருப்பதாக வழக்குதொடுனர் தனது திருப்தியைத் தெரிவித்தார். மிலோசேவிக் இந்த முடிவை கண்டித்தார், தான் கவனம் செலுத்த முடியாத படி அமைதிப்படுத்தும் மாத்திரைகள் தனக்கு இடையூறு செய்வதாக மிலோசேவிக் குறிப்பிட்டார். அதனால்தான் இம்மாத்திரைகளை தான் பயன்படுத்தமறுத்ததாக் குறிப்பிட்டார். ''உங்கள் இந்த முடிவு சட்டவிரோதமானது, சர்வதேச சட்டத்தை மீறுவது மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறுவதை கருத்தில்கொள்ளக்கூடியது'' என்று அவர் கூறினார். ''தற்போது நான் என்னை தற்காத்துக் கொள்கிற உரிமையை பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் அந்த உரிமையை என்னிடமிருந்து பறிக்க முடிவுசெய்திருக்கிறீர்கள். அதுவே ஒரு மோசடியாகும். என்னை தற்காத்துக்கொள்வதற்கு நானே வாதாடும் உரிமையை நீங்கள் மறுக்க முடியாது'' என்று மிலோசேவிக் கூறினார். நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஒரு நோக்கத்தை செயல்படுத்துவதற்காக உடல்நல பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த விசாரணை துவங்கியது முதல் மிலோசேவிக் தனக்கு தானே வாதாடிக்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று குற்றம் சாட்டியவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூன்மாதம் நீதிமன்றம் இந்தக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது, ''விசாரணை நடைமுறைகளில் தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று'' நீதிமன்றம் கூறியது. இப்போது இரண்டு பிரிட்டிஷ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர், அவர்கள் எந்த வகையில் விசாரணை நடத்துவது என்பதை முடிவு செய்யும் உரிமை படைத்தவர் ஆவார்கள்''. மிலோசேவிக் நீதிமன்ற அனுமதியோடு அந்த வழக்கில் தீவிரமாக பங்கெடுத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அவர் சாட்சியங்களை விசாரிக்கலாம் நீதிமன்றம் நியமித்துள்ள சட்டத்தரணிகளின் விசாரணைக்கு பின்னர் இதை அவர் செய்யமுடியும் என கூறப்படுகின்றது. புதிய சட்டத்தரணிகளாக ஸ்டீவன் கே நியமிக்கப்பட்டுள்ளனர், 1995இல் இந்த நீதிமன்றத்தில் முதல் வழக்கு தொடரப்பட்டபோது ஸ்டீவன் கே ற்றம் சாட்டப்பட்டவர்களது சட்டத்தரணிகளாக பணியாற்றிவந்தார். அதற்குப்பின்னர் மிலோசேவிக் வழக்கு விசாரணை தொடங்கியவுடன் அவர் நீதிமன்ற பார்வையாளராக நியமிக்கப்பட்டார், இந்த ஆண்டு பெப்ரவரிமாதம் Higgins நியமிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவருக்கு சட்டத்தரணியாக பணியாற்றுவது நீதிமன்ற பார்வையாளராக பணியாற்றுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதென்று கே சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை மிக விரைவாகவும், முழுமையாகவும், எடுத்துக்கொள்வது சிரமமானது ஏனென்றால்----- இதை விட அந்த வழக்கு மிகப்பெரியது.'' என்று குறிப்பிட்டார். மிலோசேவிக் தனது பாதுகாப்பு வழக்கில் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்து முடிந்தவுடன் அவருக்கு சட்டத்தரணிகளை நியமிப்பது என்ற முடிவு திணிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் பல்வேறு இரகசிய சேவைகளின் நீதிமன்றத்திற்கு கட்டாயம் வரவைக்க ஆணையிடப்போவதாக அவர் அச்சுறுத்தியும், பல்வேறு மேற்கத்திய நாடுகளும், புலனாய்வு ஆவணங்களை வெளியிடுமாறு நீதிமன்றம் கட்டளையிடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குற்றம்சாட்டியவர்கள் மிலோசேவிக்கின் சட்டபூர்வமான உரிமையை கட்டுப்படுத்த விரும்புவது அந்த நீதிமன்றத்தின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் எந்த அளவிற்கு தவறாக சென்றிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக்காட்டுகிறது. ஏற்கெனவே ஒத்திசைந்து செல்கின்ற ஊடங்கள் முடிவு செய்தும் அதை ஏற்றுக்கொண்டள்ள குற்றச்சாட்டான யூகோஸ்லாவியா பிரிந்து விட்டதற்கு அடிப்படையாக அமைந்த இன மோதல்கள் வெடித்து கிளம்பியதற்கு இவர் ஒரே ஒருவர்தான் காரணம் எனறும், அதனால்தான் பால்கன் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகள் தலையிட்டார்கள் என்பதை இந்த வழக்கில் மிலோசேவிக்கின் குற்றம் உறுதிபடுத்தப்பட்டுவிடும் என்று நம்பினர். இதற்கு மாறாக மிலோசேவிக் சேர்பியா தலைமைதான் இனபடுகொலை பிராச்சாரத்திற்கும், இன ஒழிப்பிற்கும் காரணம் என்றும் தீவிரமாக சவால் விடுத்தார், இந்த மோதல் உருவாவதற்கான சூழ்நிலையை மேற்கு நாடுகள் திட்டமிட்டு உருவாக்கின என்றும் மிலோசேவிக் வாதாடினார். முன்னாள் யூகோஸ்லேவியாவில் நிகழ்ந்தவற்றிற்கான மிலோசேவிக் சொந்த பொறுப்பை இதில் தட்டிக்கழித்துவிட முடியாது. மதிப்பு வாய்ந்த பண்பான தனது பாதுகாப்பு வழக்கை அதை வெற்றுகரமாக நடத்துபவர் முந்தைய யூகோஸ்லேவியாவில் என்ன நிகழ்த்தினார் என்பது தெரியும். தற்போது மிலோசேவிக் மேற்கு நாடுகளின் மிகக்கடுமையான எதிரி என்று தன்னை சித்தரித்துக்கொண்டிருக்கிறார், சேர்பிய மக்களது நலனுக்காக போராடுபவராகவும் யூகோஸ்லாவியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாடுபடுவராகவும் சித்தரித்துக்காட்ட முயலுகிறார். உண்மையிலேயே பால்கன் பகுதிகளில் நடைபெற்ற துயர சம்பவங்களுக்கு அவருடைய சொந்த முதலாளித்துவ-சார்பு நடவடிக்கைதான காரணமாக இருந்தது. அவரும் அவரது முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரும் குரோசியாவில் பிரங்கோ ருஷ்மான் போன்ற தேசியவாதிகளும் மேற்கு நாடுகளின் கட்டளைப்படி சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டமைப்பு மாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் கொந்தளிப்பான சமூக மோதல்கள் உருவாகியதுடன், தொழிலாளவர்க்கத்தின் மத்தியில் ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகவும் காரணமாகியது. இந்த இயக்கத்தை திசை திருப்புவதற்காக மிலோசேவிக், ருஷ்மான் தொழிலாள வர்க்கத்தை ஒருவரோடு ஒருவரை பிளவுபடுத்துவதற்காக தேசியவாத கொள்கைகளை அதிகமாக பயன்படுத்த துவங்கினர். ஆனால் தேசியவாதம் என்கிற வலுவான அரசியல் ஆயுதத்தை மேற்கத்திய நாடுகள் தான் உறுதியாக கையில் எடுத்தக்கொண்டன. யூகோஸ்லாவியாவை மிக எளிதாக தங்களது செல்வாக்கு வட்டாரத்திற்குள் கொண்டுவந்துவிட முடியுமென்று கருதின. இந்த கொள்கை காரணமாக யூகோஸ்லாவியாவின் பல்வேறு குடியரசுகளைச்சார்ந்த முதலாளித்துவ குழுக்களின் விருப்பத்திற்கு எதிராக யூகோஸ்லாவியாவின் கூட்டரசு என்ற நிலையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்த மிலோசேவிக்குடன் அவர்கள் மோதுகின்ற நிலை உருவாயிற்று. அந்த பிராந்தியத்தில் இன அடிப்படையில் மோதல்கள் வெடித்துச் சிதறியதற்கு பிரதான பொறுப்பு அமெரிக்கா, ஜேர்மனி, மற்றும் இதர நேட்டோ வல்லரசுகள் தான் என்று மிலோசேவிக் இடைவிடாது வாதாடி வந்ததுடன், அவற்றின் மீதுதான் போர்குற்றம் சாட்டப்படவேண்டுமென்று குற்றம்சாட்டினார். எடுத்துக்காட்டாக, அவர் நீதிமன்றத்தில் தனது தரப்பு ஆரம்பவாதத்தை எடுத்துவைக்கும் போது பால்கனின் மோதல்களின் வரலாற்றை பார்க்கும்போது ''குற்றங்களுக்கு உண்மையான காரண கர்த்தாக்களை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக அவர்களை பாதுகாப்பதற்கு வழிசெய்கிற முறையில்'' அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். முந்தைய யூகோஸ்லாவியா சிதைந்வதற்கு ''முக்கியக்குற்றவாளியாக'' ஈடுபட்டிருந்தவர் 1974 முதல் 1992 வரை ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிவந்த Hans-Dietrich Genscher என்று அவர் கூறினார். சோவியத்யூனியன் சிதைந்துவிட்டபின்னரும் ஜேர்மனி ஒன்றாக சேர்ந்துவிட்ட பின்னரும் குரோசியாவின் சுதந்திரத்திற்கான Genscher இன் சிலுவை யுத்தம்தான் ஜேர்மனியின் மூர்க்கத்தனத்திற்கான முதல் சைகையாக இருந்தது. ஜேர்மனி வத்திக்கானின் உதவியுடன், வரலாற்றுப்பார்வையில் குரோசியாவை கம்யூனிசத்திற்கு எதிரான கத்தோலிக்க அரணாக கருதியதுடன், குரோசிய தேசியவாதத்திற்கு ஆதரவளித்தது என்று மிலோசேவிக் குறிப்பிட்டார். அந்தக்கட்டம் வரை ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அமெரிக்காவினதும் கொள்கை யூகோஸ்லாவியாவில் ''ஒன்றுபட்ட எல்லையை'' பாதுகாப்பதாக இருந்தன. ஆனால் 1991 டிசம்பர் 11இல் Genscher திடீரென்று பிரிந்துவிட்ட இரண்டு குடியரசுகளான ஸ்லோவேனியாவையும் குரோசியாவையும் ஜேர்மனி அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சிகள் குறித்து ஜேர்மனியின் ஏகாதிபத்திய போட்டி நாடுகளில் வளர்ந்து வந்த கவலைகளை மிலோசேவிக் சுட்டிக்காட்டினார், துவக்க விளைபயனாக குரோஷியாவிலிருந்து பொஸ்னியாவிற்குள் சேர்பியர்கள் கூட்டம் கூட்டமாக குடியேறினர். மிலோசேவிக் Cyrus Vance, Lawrence Eagleburger, Warren Christopher போன்ற பல்வேறு முன்னாள் அமெரிக்க அரசுத்துறை செயலர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டினார். முன்னாள் யூகோஸ்லாவியாவின் இரத்தக்களறி மோதல்களை ஜேர்மனிதான் ஆரம்பித்து என்று அவர்கள் அந்த அறிக்கைகளில் குற்றம் சாட்டியிருந்ததை சுட்டிக்காட்டினார். எடுத்துக்காட்டாக கிறிஸ்டோபர் USA Today-க்கு ''யூகோஸ்லாவியாவின் முன்னாள் மாநில அரசுகளான குரோஷியா மற்றும் ஸ்லோவேனியாவை சுதந்திரமான அரசுகளாக அங்கீகரிக்கிற நிகழ்ச்சிப்போக்கில் ஜேர்மனி ஒரு குறிப்பிட்ட தொடர் தவறுதல்களை உருவாக்கியுள்ளது, ஜேர்மனி தனது சகாக்களையும், ஐரோப்பிய யூனியனையும் அவ்விரு நாடுகளின் சுதந்திரநிலையை அங்கீகரிக்குமாறு செய்ததில் குறிப்பாக பொறுப்பு வகிக்கிறது. இந்த விடயங்கள் தொடர்பாக, குரோசியா அதற்கு அடுத்து பொஸ்னியா அங்கீகாரத்திலிருந்து இன்றையதினம் வரை நாம் எதிர்கொள்ளும் எழும் பிரச்சனை தொடர்பான பலர் கவனமாக சிந்திப்பார்கள்'' என்று குறிப்பிட்டார். முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICTY) ஏற்றுக்கொண்டிருக்கும் ''வெளிப்படாயான முரண்பாடுகளுக்கு'' இட்டுச்சென்ற காரணிகளை மிலோசேவிக் எடுத்துரைத்தார். பின்னர் கொசவோ சுத்திகரிக்கப்பட்ட குற்றச்சாட்டு போலல்லாது குரோசியா, பொஸ்னியா தொடர்பான குற்றச்சாட்டுகள் பிரிந்துவிட்ட குடியரசுகளை அங்கீகரித்ததுதான் ''போருக்கு இட்டுச்சென்றது'' என்பதை எடுத்துக்காட்டுகின்றது என மிலோசேவிக் சுட்டிக்காட்டினார். [குரோஷியா மற்றும் பொஸ்னியா தொடர்பான குற்றச்சாட்டுகளை] கூறியவர்கள், அதற்குப்பொறுப்பு ஏற்க வேண்டிவரும் என்பதை உணர்ந்துகொள்ளவில்லை என்பதையும் மிலோசேவிக் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சங்கடங்களை உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை மிலோசேவிக் எழுப்பகூடும் அதற்கான ஆற்றல் உள்ளவர்தான் அவர் என்பதால்தான் அவருக்கு வாதாடுவதற்காக வழக்கறிஞரை நீதிமன்றமே நியமித்துள்ளது. மிலோசேவிக்கை பால்கன் பகுதிகளின் ஹிட்லர் என்று சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கையில், அவருக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதில் சட்டபிரச்சனைகளை நீதிமன்றம் எதிர்நோக்குகின்றது. ஏனென்றால் சேர்பியாவின் அரசியல் தலைமை பரந்த சேர்பியாவை உருவாக்கும் ''கூட்டு குற்ற திட்டத்தில்'' சம்மந்தப்பட்டிருக்கிறது எனவும், அந்த ''மூலோபாயத்திட்டத்தின்'' மூலம் சிறுபான்மை இனத்தினரை வெளியேற்றினார்கள் அல்லது கொன்று குவித்தார்கள் என வழக்குதொடுனர் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த வழக்கில் ஏறத்தாழ 300 சாட்சிகள் அழைக்கப்பட்டனர், ஆனால் குற்றம் சாட்டியவர்கள் இனபடுகொலை தொடர்பான திட்டம் அல்லது கட்டளைக்கு காரணமாக இருந்தவர்களை அடையாளம் காட்டுகின்ற வகையில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. மிலோசேவிக் தன்னைத்தானே தற்காத்துகொள்வதற்கு உள்ள உரிமை மறுக்கப்பட்ட அதே நாளில் முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற காவலிருந்த பொஸ்னியாவின் முன்னணி தர சேர்பிய தலைவரும், Krajina தன்னாட்சி பிராந்தியத்தைச் சேர்ந்த போர்கால தலைவரான Radislav Brdjanin இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்ட சேர்பியர்களில் ஒரே ஒருவரான தளபதி Radislav Krstic மேல்முறையீட்டில், அவரது குற்றச்சாட்டு இனப்படுகொலைக்கு உதவியதாக தூண்டிவிட்டதாக குறைக்கப்பட்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டு அது நடத்தப்பட்டு வருகின்ற அடிப்படையையே மிலோசேவிக் தாக்கினார். ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம் 827ன் படி ஐ.நா சாசன அமைப்பு 29வது விதிப்படி முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 1993 மே மாதம் அமைக்கப்பட்டது. அதன்படி அமைதிப்பணிகளை மேற்கொள்வதற்கு ''துணை அமைப்புக்களை'' உருவாக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டது. என்றாலும் சர்வதேச ஒப்பந்தம் இல்லாமல் ஐ.நா பாதுகாப்பு சபை இந்த நீதிமன்றத்தை அமைத்தது. சர்வதேச ஒப்பந்தம் இருந்தால்தான் தேசிய நீதிமன்றங்களின் விசாரணை வரம்புகளிலிருந்து வழக்குகளை முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றமுடியும். ஐநா நிதியுதவியோடு இந்த நீதிமன்றம் நடத்தப்படவேண்டும், ஆனால் தனிப்பட்ட நாடுகள் பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் George Soros's Open Society Foundation போன்ற தனியார் அமைப்புக்களில் இருந்தும் நிதி வழங்கப்படுகிறது. முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பணிகளுக்கு பெரிதும் உதவுகின்ற Human Rights Watch மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுக்கு சோரஸ் அமைப்பு நிதியுதவி செய்துவருவதை மிலோசேவிக் சுட்டிக்காட்டினார். மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் தலைவர் Richard Dicker, மிலோசேவிக் சார்பில் வழக்கறிஞர் நியமிக்கப்படுவதை ஆதரித்தார். இதற்கு மாற்று இல்லையென்றும் நீதிபதிகள் தங்களது கடமையை செய்வதற்காக இவ்வாறு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அப்படி செய்யாவிட்டால் நீதிபதிகள் தங்களது கடமையை நிறைவேற்றமுடியாது'' என்றும் குறிப்பிட்டார். மிலோசேவிக்கின் முதலாவது சாட்சியான தீவிர தேசியவாதியான ஓய்வுபெற்ற சேர்பிய சட்டப்பேராசிரியர் Smilja Avramov செப்டம்பர் 7ல் சாட்சியமளிக்க தொடங்கினர். விசாரணையின் போது மிலோசேவிக் தனது சார்பில் ஆஜராகும் இரண்டு வழக்கறிஞர்களும் தாம்தான் நீதிமன்ற வக்கீல்கள் என ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியதாக தெரிவித்தார். அவர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார், நீதிமன்றம் இவ்வாறு வழக்கறிஞர்களை நியமிப்பது ''சட்டபூர்வமான கண்டுபிடிப்பு'' என்று குறிப்பிட்டார். அடுத்து இந்த விசாரணையில் என்ன நடக்கும் என்பதை கோடிட்டுக்காட்டும் வகையில் இந்த விசாணைக்கு தலைமை வகிக்கும் நீதிபதியான Patrick Robinson தனது ஒலிபெருக்கித்தொடர்புகளை துண்டித்துவிட்டு ''அதே தேய்ந்துபோன விவாதங்களை கேட்க தான் விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டார். |