World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா Indian Stalinists' alliance with the Congress-led UPA: a trap for the working class காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இந்திய ஸ்ராலினிஸ்டுகள் கூட்டணி: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சிக்கவைக்கும் பொறியாகும் By Nanda Wickramasinghe and and Keith Jones அண்மை வாரங்களில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது CPI (M) தலைமையிலான நான்கு கட்சி தேர்தல் அணியான இடது முன்னணி திரும்பத்திரும்ப இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் (UPA) நடவடிக்கைகள் தொடர்பாக பீதியை தெரிவித்து வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த இந்த சிறுபான்மை அரசாங்கம் இடது முன்னணியின் பாராளுமன்ற ஆதரவு காரணமாகவே அது ஆட்சியில் நீடித்து வருகிறது. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களையும், அரசாங்கத்தின் ஊழியர்கள் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் 1 சதவீத வட்டி குறைக்கப்பட்டிருப்பதை மற்றும் இதர பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை கண்டித்து ஆகஸ்ட் மாதம், இடதுசாரி அணிகளோடு இணைந்திருக்கின்ற தொழிற்சங்கங்கள் ஒரு தேசிய நாள் நடவடிக்கையை நடத்தின. சென்ற வாரம், இடது முன்னணி நாட்டின் ஐந்தாண்டுத் திட்ட இடைக்கால ஆய்வில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுக்களில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, தனியார் நிர்வாக நிறுவனங்களான மெக்கன்சி மற்றும் போஸ்டன் ஆலோசனைக்குழு பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்ததை UPA ஆட்சி கைவிடுமாறு செய்தது. Cô CPM தலைவர்கள் 62 இடதுசாரி அணி MP-க்கள் UPA- விற்கு தங்களது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கருத்து கூறினர். அத்தகைய நடவடிக்கை நிலையாக நாலரை மாதங்களாக நடைபெற்றுவரும் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்துவிடும், ஏனெனில் காங்கிரஸ் தலைமையிலான UPA விற்கு 543- மக்களவை உறுப்பினர்களில் 220-பேர் மட்டுமே உள்ளனர். 1991 முதல் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்கள் கடைபிடித்துவந்த ஒவ்வொரு நவீன-தாராளவாத, பொருளாதார சீர்திருத்த வேலைத் திட்டங்களுக்கு பொதுமக்களிடையே அலையலையாக கிளம்பிய எதிர்ப்பு சென்ற மே மாதம் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெருமளவில் வியப்பூட்டும் வகையில், காங்கிரஸ் மற்றும் UPA வை ஆட்சியில் அமர்த்தும், இயக்க சக்தியாக செயல்பட்டது. வாய்ச்சவடால் அடிப்படையில் புதிய அரசாங்கம் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான முந்தைய கூட்டணி அரசாங்கத்தைவிட கூர்மையாக தன்னை வேறுபடுத்திக் காட்டியது. பிரதமர் மன்மோகச் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இதர UPA தலைவர்கள் தினசரி ஏழைகள் நிலைகுறித்து கவலையையும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கொள்கைகளில் உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்து வருகின்றனர். ஆனால் UPA -க்கு முந்திய BJP-யைப் போன்று இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வேலைத்திட்ட பிரதான அம்சங்களை அமுல்படுத்தி வருகிறது: தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் இன்னும் மிச்சமீதமிருக்கும் அம்சங்களையும் சிதைத்தும், இதன் மூலம் இந்தியாவை சர்வதேச முதலீடுகளுக்கான மலிவு கூலித் தொழிலாளர் அரங்கமாக மாற்றிக்கொண்டு வருகிறது, இந்தியாவின் இராணுவப்படைகள் மிகவேகமாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மூலோபாய பங்குதாரர் நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது கிராமப்பகுதிகளிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒரு நபருக்காவது குறைந்தபட்சம் 100 நாட்கள் சம்பளம்தரும் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உடனடியாக செயல்படுத்தப்போவதாக உறுதியளித்திருந்தாலும், UPA -வின் முதலாவது பட்ஜெட் கிராமப்புற வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை வெட்டியுள்ளது. இதற்கிடையில் இராணுவத்திற்கான செலவினம் மிகப்பெருமளவில் 17- சதவீதம் உயர்த்தப்பட்டது. பிரதமர் சிங் சென்ற மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றபோது புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான போருக்கு'' ஆதரவாய் உறுதிமொழி தந்தார், அதற்குப்பின்னர் இந்திய-அமெரிக்க உறவுகளில் ''இன்னும் சிறப்பானது வரவிருப்பதாக'' அமெரிக்க ஜனாதிபதிக்கு உறுதியளித்தார். UPA -ன் செயல்பாடுகள் தொடர்பாக உழைக்கும் மக்களிடையே நிலவுகின்ற ஆத்திரம் உண்மையானது, ஆழமாக வேரூன்றி நிற்பது. அதற்கு மாறாக, இடது முன்னணி தலைவர்கள் விடுத்துவரும் அச்சுறுத்தல்கள், UPA -அரசாங்கம் தனது நவீன-தாராளவாத சீர்திருத்தங்களின் வேகத்தை மட்டுப்படுத்தவும் இடதுசாரி அணியின் சிதைந்துவிட்ட சோசலிச நம்பிக்கைகளை புதுப்பிக்கவும், நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற அழுத்தம் தரும் தந்திரச்செயல்களாகும்.காங்கிரஸ் தலைமையிலான UPA -ஐந்தாண்டுகள் முழுமையாக பதவியில் இருக்கவேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்றும் அதுதான் தங்கள் நம்பிக்கை என்றும் CPM-ன் மிக மூத்த தலைவர்கள் திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர். ''ஐந்தாண்டுகளுக்கு UPA -பதவியில் இருக்க நாங்கள் விரும்புகிறோம்'' என்று CPM ன் மிக மூத்த தலைவர் என்று கூறப்படுகின்ற மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜோதிபாசு, செப்டம்பர் 19-ல் மன்மோகன் சிங்கையும், சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் சந்தித்த பின்னர் அறிவித்தார். UPA -அரசாங்கத்தின்செயற்திட்டங்களை செயல்படுத்தும்போது ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இடது முன்னணியை கலந்தாலோசிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு காங்கிரஸ் தலைமை ஆக்கபூர்வமான பதிலளித்ததாக பாசு கூறினார். ஆலோசனை என்பது இடது முன்னணியின் கோரிக்கைகளுக்கு அடிபணிவது என்று பொருளாகாது என்றும் அவர் கூறினார்.''எங்களது எதிர்ப்பையும், மீறி சில முடிவுகளை எடுக்கின்ற கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடும். ஆனால், அப்படியிருந்தாலும், நம்பிக்கையுடன் இடதுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் '' இடது முன்னணிக்கும் காங்கிரசிற்கும் இடையில் உருவாகியுள்ள கூட்டணி தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்ட வெகுஜனத்தையும் சிக்கவைக்கும் பொறியாகும். இந்து மேலாதிக்கவாத BJP-யைவிட காங்கிரஸ் கட்சி ''குறைந்த தீமை'' என்ற சாக்குப்போக்கில் CPM-ம் அதன் இடது முன்னணியும் சமூகரீதியாக தீங்குவிளைவிக்கின்ற செயற்திட்டங்களை பின் தொடரும், பெருவர்த்தக அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைத்திருக்கிறார்கள், இதனால் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையும் சமூக சமத்துவமின்மையும் அதிகமாக உருவாகியுள்ளது. இதனால் தொழிலாள வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களது சமூக நிலைமை மேலும் அரிக்கப்படுவது மட்டுமல்ல, ஸ்ராலினிஸ்டுகள் ஆழமாகிக் கொண்டுவரும் சமூக நெருக்கடிக்கு, ஒரு சோசலிச மாற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு தொழிலாள வர்க்கத்தை தடுத்தும் கொண்டிருக்கிறார்கள், காங்கிரஸ்-இடது முன்னணி கூட்டணி இந்து மேலாதிக்கவாத BJP உட்பட, அனைத்து விதமான பிற்போக்கு அரசியல் சக்திகளான வகுப்புவாத மற்றும் சாதிப் பிளவுகளை வளர்ப்பதற்கு வகை செய்வதாகவே உள்ளது. காங்கிரஸ்: இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சி இந்திய ஆளும் வர்க்கம் சென்ற மே மாதம் தேர்தல் முடிவுகளால் நிலைகுலைந்து விட்டது என்பதில் சந்தேமில்லை, அதன் முடிவுகள், திரிக்கப்பட்ட பகுதி அளவிலான வடிவத்தில் காணப்பட்டாலும், பொதுமக்களது கோபத்தின் ஆழத்தையும், மிகப்பெருமளவில் வெகுஜன சமூக எழுச்சியை உருவாவதற்கான சாத்தியக்கூறையும் தெளிவாக எடுத்துரைத்தன. ஆனால் பொதுமக்களது அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் ஆதரவு என்ற வகையில் ஒரு அரசியல் வெளிப்பாடாக அமைந்தது, தேர்தல் முடிவுகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் மேலும் பொருளாதார ''சீர்திருத்தங்களை'' முன்னெடுத்துச் செல்வதற்கும், அவற்றின் உணர்வுகளை திசைத்தடுமாற செய்யவும், கட்டுப்படுத்தவும் ஒரு அரசியல் இயங்கு முறையை தந்தது. காங்கிரஸ் மொத்தத்தில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியாகும். மேலும் வரலாற்று அடிப்படையில் அந்தக் கட்சியின் வெற்றியின் இரகசியம் மக்களைக் கவரும் வார்த்தைகளை உறுதிமொழிகளை அள்ளிவீசுவதும், இந்தியா சுதந்திரம் பெற்ற ஆரம்பகால தசாப்தங்களில், தேசிய முதலாளித்துவ வேலைத்திட்டமான மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்த்திருத்தத்திற்கு வெகுஜனத்தை கட்டிப்போட்டதுமாகும். இந்த வகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தோடு BJP ஒத்துழைக்க மறுத்துக்கொண்டு வருவது, மிக முக்கியமானது ---கிளிண்டன் நிர்வாகத்தின்போது அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்காரர்கள்--- தேர்தல் முடிவுகளை புரட்டுவதற்கு முயன்றதைப்போல் இன்றுவரை BJP மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும் ஆதரவு எதையும் தரவில்லை. முதலாளித்துவம் கணக்கிடுவது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் அதனது மக்கள் விருப்பு வாய்ச்சவடால் காரணமாக BJP- யை விட உழைப்பு சந்தையை ''வளைந்து கொடுத்து'' முன்னெடுத்துச் செல்வதிலும் பொருளாதார சீர்திருத்தங்களை குவிமையப்படுத்தி புதிய கட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் செல்கிறதிலும் மிகவும் பயனுள்ள கருவியாக தற்பொழுது பயன்படும் என்று கருதுகிறது, BJP- பணக்காரர்கள், மற்றும் வகுப்புவாத பிற்போக்குவாதிகளின் கட்சியென பரவலாகவும், சரியாகவும் மதிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி முன்பிருந்த செல்வாக்கோடு இல்லை அதன் நிழல் தான் இப்போது உள்ளது. 1984 தேர்தலுக்குப் பின்னர் மக்களவையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை எந்தத் தேர்தலிலும் பெற்றதில்லை. இதில் இன்னும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கிராம மக்களுக்கும், காங்கிரசிற்கும் இடையில் நிலவிவந்த உறவுகள் நீண்டகால அடிப்படையில் வாடி வதங்கிக் கொண்டுவருகின்றன. நியாயமான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற நிலையில் பொதுமக்களோடு அடையாளப்படுத்தப்பட்டு வந்த காங்கிரஸ் குறுகிய அடிப்படை கொண்ட நேரு- இந்திரா காந்தி, குடும்ப ஊழல் மலிந்த பிற்சேர்க்கை என்றளவிற்கு குறைந்துவிட்டது. எனவேதான், முதலாளித்துவ அரசியலில் ஸ்ராலினிஸ்டுகள் இன்றியமையாத முக்கியத்துவம் பெறுகின்றனர். தேர்தலின் போதும் அதற்குப்பின்னரும் CPM-ம் அதன் இடது முன்னணியும், வெகுஜனங்களது அதிருப்பதியை நாடாளுமன்ற அரசியல் கட்டுக்கோப்பிற்குள்ளே கட்டுப்படுத்தவும் கொண்டுவர முயன்றுவருகின்றனர் மற்றும் அதை பெருவர்த்தக காங்கிரஸ் பின்னே தொழுவத்தில் அடைப்பதற்கும் முயன்றுவருகின்றனர். காங்கிரஸ் தலைமை அதன் பங்கிற்கு, ஸ்ராலினிஸ்டுகளை எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோம் என்பதை தெளிவாகவே அறிந்திருக்கிறது, எனவேதான் இடது முன்னணியை ஒழுங்குமுறையாக அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள முயன்றார்கள். இந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கணக்கு முக்கிய பங்களிப்பு செய்தது, காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ராலினிஸ்டுகளை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள முயன்றதற்கான அடிப்படை பெருவர்த்தக கட்டளைகளை அமுல்படுத்தும்போது அதற்கு அவசியமாக தேவைப்படும், பொதுமக்களது ஆதரவை இடது முன்னணி பெற்றுத்தரும் என்று உணர்ந்துதான் அவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் முயன்றார்கள். 1991-ல் காங்கிரஸ் அரசாங்கத்தின் நிதியமைச்சர் என்கிற முறையில் நவீன-தாராளவாத சீர்திருத்தங்களை ஆரம்பித்து வைத்த மன்மோகன் சிங்கை சோனியா காந்தி இந்தியாவின் பிரதமர் என்று அறிவித்ததும், பண சந்தைகள் மகிழ்ச்சிக் கூத்தாடின. அதற்குப்பின்னர் மந்திரி சபையில் இடம்பெறுமாறு இடது முன்னணியை ஏற்கச்செய்வதற்கு சோனியா காந்தி முயன்றார். இடதுசாரி அணியில் இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தனது பங்காளிகள் அவ்வாறே செய்வார்களானால் தானும் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இது சம்மந்தமான கலந்துரையாடல்கள் பல நாட்கள் நடைபெற்றன ''வெளியிலிருந்து கொண்டு'' அரசாங்கத்தை ஆதரிப்பதாக CPM அறிவித்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதால் தங்களது தேர்தல் அடிப்படை பெருமளவில் கீழறுக்கப்படுமென்று CPM தலைவர்கள் அஞ்சினர், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலத்தில் அக்கட்சிக்கான ஆதரவு வலுவாக உள்ளது, அங்கு காங்கிரஸ் கட்சி அதன் பிரதான எதிரியாகும். ஆனால் தங்களது முடிவை நியாயப்படுத்தும் வகையில் CPM தலைவர்கள் தாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தால் புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி என்கிற வகையில் BJP ஏகபோகத்தை செலுத்த ஆரம்பித்துவிடும் என்று வாதிட்டனர். இதை வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், காங்கிரஸ் தலைமையிலான UPA மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைப்பிடிக்க நிர்ப்பந்தம் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பகிரங்க அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும், ஸ்ராலினிஸ்டுகள் புதிய அரசாங்கம் பொதுமக்களது எதிர்ப்பை பரவலாக தூண்டிவிடும் பெருவர்த்தக கொள்கைகளை செயல்படுத்தப் போகிறது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதற்குப் பின்னர், முந்திய மக்களவையில் CPM-ன் பிரதிநிதிகளின் தலைவராக பணியாற்றி வந்த சோம்நாத் சாட்டர்ஜி மக்களவை சபாநாயகராக பணியாற்றவேண்டுமென்ற காங்கிரசின் கோரிக்கையை CPM ஏற்றுக்கொண்டது. புதிய அரசாங்கமும், நாடாளுமன்றமும் ''செயல்படுவதற்கு'' தனக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை CPI (M) -அங்கீகரித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் முழு ஐந்தாண்டு காங்கிரஸ் தலைமையிலான UPA பதவி வகிப்பதற்கு ஆதரவு தர உத்தேசித்துள்ளது என்ற பிரகடனத்திற்கு வலுச்சேர்க்கின்ற வகையிலும் CPM அந்த பதவியை ஏற்றுக்கொண்டது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் மோசடி குறைந்தபட்ச பொது செயல்திட்ட (Common Minimum Programme) வரையறையை உருவாக்கியது ஸ்ராலினிஸ்டுகளது பங்களிப்பாகும் என்று அரசியல்ரிதியாகவும் முக்கியமாகவும் கூறப்படுகிறது, அந்த ஆவணம் UPA அரசாங்கத்தின் செயல்திட்டமாக செயல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்களோடு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் வாசகங்களை உருவாக்குவதில் இடதுசாரி அணித்தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப்பின்னர் ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆளும் UPA பிரநிதிகள் குழுவில் அவர்கள் இடம்பெற்று, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துவதை ''ஒருங்கிணைக்கும் மற்றும் கண்காணிக்கும்''. குறைந்தபட்ச பொது செயல்திட்டம் ஒரு கற்பனை மற்றும் ஒரு மோசடியாகும், காங்கிரஸ் தேர்தல் பிரச்சார முயற்சியிலிருந்து அது உருவாயிற்று---- ''மனித நேயத்தோடு சீர்திருத்தம்'' என்று ரத்தினச்சுருக்கமாக அது குறிப்பிட்டது---- பொதுமக்களது அதிருப்தியை திசை தடுமாறச்செய்யவும், அதே நேரத்தில், தனியார்மயமாக்கல், நெறிமுறைகள் தளர்வு, தொழிலாளர்களை தற்காலிகமாக வேலை நீக்கி வைத்தல், நிறுவனத்தை மூடல் போன்ற நடவடிக்கைகளில் நிலவுகின்ற கட்டுப்பாடுகளை இரத்துச் செய்வதற்கும் பெருவர்த்தக நிறுவனங்களுக்கு உறுதியளிகிற வகையில் இந்த முழக்கம் எழுப்பப்பட்டது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் உயிர்த் துடிப்புக் கொள்கை முதலாளித்துவ வேலைத்திட்டமான, இந்தியாவை சர்வதேச மூலதனத்தின் புகலிடமாக மாற்றி, இந்தியாவை பெரு வல்லரசு அஸ்தஸ்திற்கு கொண்டு வருவது, இந்தியாவின் உழைக்கும் மக்களது அபிலாசைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்புடையதாகச் செய்யமுடியும் என்பதாகும். ஆனால் இந்தியாவில், உலகம் முழுவதிலும் நடப்பதைப்போல், முதலாளித்துவ பூகோளமயமாக்கலானது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாட்டின் மீது முடிவற்ற தாக்குதலால் சேர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது, வறுமையும், சமூக துருவமுனைப்பையும் வளர்த்து வருகிறது. UPA அரசாங்கத்தின் வலதுசாரி போக்கு குறித்து பொதுமக்களது கோபம் வளர்ந்துகொண்டு வருவதை கருத்தில்கொண்டு ஸ்ராலினிஸ்டுகள் தங்களது முதன்மை கோரிக்கையாக குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது, அதன் மூலம் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திற்கு மேலும், சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது மற்றும் காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பொதுமக்களது எதிர்ப்பை மட்டுப்படுத்த அது முயலுகின்றது.கடந்த 13- ஆண்டுகளாக CPM மூன்று மாநிலங்களில் ஆளுங்கட்சியாக பணியாற்றிவருகிறது, அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப இந்நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறது. CPM தலைமையிலான மேற்கு வங்காள, கேரள, திரிபுரா, அரசாங்கங்கள் நவீன-தாராளவாத கொள்கைகளை அமுல்படுத்தி சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முயற்சித்தன. இந்தியாவின் ஐந்தாண்டு திட்ட செயல்பாட்டை கண்காணிப்பதற்கான குழுக்களில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெறக்கூடாது என்று இடது முன்னணி விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், CPM தலைமையிலான மாநில அரசாங்கங்களே அடிக்கடி மெக்கன்சி மற்றும் அதுபோன்ற அமைப்புக்களின் முதாலளித்துவ பூகோளமயமாக்கல் ஆதரவாளர்களை தங்களது பொருளாதார கொள்கை ஆவணங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டதை சுட்டிக்காட்டினர். வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் முக்கியத்துவம் நிறைந்தது என்பதுடன், காங்கிரஸ் தலைமையிலான UPA- வை ஆதரித்து நிற்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் எடுத்துவைக்கும் பிரதான வாதம், இந்து- மேலாதிக்கவாத BJP-ஐ தடுத்து நிறுத்தும் வழி அது ஒன்றுதான் என்பதாகும். ''இதுதான் இன்றைய குறிப்பான நிலவரம். இன்றைய தினம், நாங்கள் கடந்த 45 ஆண்டுகளாக எதிர்த்து வந்த காங்கிரசை ஆதரிக்கிறோம், நாங்கள் அவர்களை நம்பியிருக்கின்ற அளவிற்கு அவர்களும் எங்களை நம்பியிருக்கிறார்கள். இந்த நிலைக்கு BJP தான் பொறுப்பு'' என்று ஜோதி பாசு கூறுகிறார். பாசுவின் அறிக்கை எழுப்புகிற கேள்வி: இதுவரை விளிம்பு நிலையில் இருந்துவந்த ---இந்து மேலாதிக்கவாதிகள்--- சுதந்திரம் பெற்றபின்னர் இந்திய முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கிய தேசிய வளர்ச்சி திட்டத்தால், உருவான நெருக்கடியை ஏன் சுரண்டிக்கொள்ள முடிந்தது? முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடுவதில் இந்தியாவின் உழைக்கும் மக்களின் தலைமையில் தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே நிறுத்திக் கொள்வதைத் தடுத்திருப்பது, அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கத்தை செயலிழக்கச் செய்திருப்பது சிபிஐ, சிபிஎம் ஸ்ராலினிச கட்சிகளின் அரசியலாகும். எப்போதுமே காங்கிரசை எதிர்த்து வந்ததாக பாசு கூறிக்கொண்டாலும், அவரது இடது முன்னணியின் பங்காளியான CPI அடிக்கடி பகிரங்கமாக காங்கிரஸோடு அணிசேர்ந்து நின்றது என்பது உண்மை ஆகும். இந்து மேலாதிக்கவாதிகள், பங்கெடுத்துக்கொண்ட (1977-79) ஜனதா ஆட்சி காலம் உட்பட உழைக்கும் மக்கள் ஏதாவதொரு முதலாளித்துவ அரசியல் அணியை ஆதரிக்க வேண்டுமென்று அடிக்கடி CPM வலியுறுத்தி வந்தது. அவர்களுக்குள், கருத்துவேறுபாடுகள் எவை இருந்தாலும், இரண்டு ஸ்ராலினிச கட்சிகளுமே தொழிலாள வர்க்கத்தை நாடாளுமன்ற அரசியல் கட்டுக்கோப்பிற்குள்ளும், தொழிற்சங்க போராட்டத்திற்குள்ளேயும், கட்டுப்படுத்த முயன்றன. இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் உருவாக்கப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் இறக்குமதிகளுக்கு பதிலீடு மற்றும் அரசு திட்டமிடல் கையாளப்பட்டு தேசிய மூலதனம் அபிவிருத்தி அடைந்தது, அந்தத் திட்டத்தை 1991-ல் இந்திய முதலாளித்துவ வர்க்கம் கைவிடும் முன்னர், ஸ்ராலினிஸ்டுகள் தங்களது ஆதரவு ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சிக்கு வழங்கப்படுவதை நியாயப்படுத்தினர். தொழிலாள வர்க்கம் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தில் ''முற்போக்குப் பிரிவை'' ஏகாதிபத்தியம் மற்றும் நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனத்துக்கு எதிராக ஆதரிக்க வேண்டுமென்று கூறிவந்தனர். இன்றைய தினம் முதலாளித்துவமே ஒரு புதிய நெருக்கமான, கூட்டாளியாயிருத்தலை ஏகாதிபத்தியத்தோடு உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து முடிச்சுப்போட்டு வருகின்றனர், BJP-ஐ எதிர்க்கவேண்டும், மற்றும் இந்தியாவின் மதச்சார்பற்ற, அரசியல் சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என்ற பெயரால் இதைச்செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்ராலினிஸ்டுகளே கூட திரும்பத்திரும்ப வகுப்புவாத பிற்போக்கு சக்திகளோடு, காங்கிரஸ் உடந்தையாக செயல்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டாலும், அதைப்பற்றி இன்றைய தினம் கவலைப்படவில்லை. BJP, சிவசேனா மற்றும் இதர தீவிர வலதுசாரி சக்திகள் வளர்வது நிச்சயமாக இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். என்றாலும், வறுமையும், சமூக சமத்துவமின்மையையும் மேலும் மோசமாக்குகின்ற காரியத்தை மட்டுமே செய்கின்ற பொருளாதார கொள்கைகளை கடைபிடித்துவருகின்ற ஒரு அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கம் அடிபணிந்து செல்வதன்மூலம் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை முறியடித்துவிட முடியாது, உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்கவும் முடியாது. மாறாக வகுப்புவாத, சாதி அரசியல் வளர்ந்து முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏகாதிபத்தியத்தோடு நெருக்கமான புதிய உறவை உருவாக்கிக் கொண்டிருக்கும் திருப்பத்தை போன்று, தொழிலாள வர்க்கம் ஒரு புதிய சுயாதீனமான, முன்னோக்கை, அடிப்படையாக முன்னெடுத்துச்செல்ல வேண்டிய அவசரத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது: வறுமையை ஒழிப்பதும், இந்தியாவின் கடந்தகால காலனித்துவத்தின் கடைசி எச்ச்சொச்சங்களை ஒழித்துக்கட்டுவதும், மிகத்தாமதமாக உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் மிச்ச மீதியை ஒழித்துக்கட்டுவதும் ஒரு சோசலிச போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்ற புரிதலின் அடிப்படையில், தேசிய முதலாளித்துவத்தின் கையிலிருந்து அதிகாரத்தைப் பறித்து எடுப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தோடு இணைந்து நின்று போராடுவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியாவின் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஈர்க்கின்ற துருவமுனைப்பாக ஆக்கும், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியாய் அணிதிரட்டும் முன்னோக்காகும். |