World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Cheney bullies the American people: vote for Bush or else

செனி அமெரிக்க மக்களை அச்சுறுத்துகிறார்: புஷ்ஷிற்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால்

By Patrick Martin
10 September 2004

Back to screen version

நவம்பர் 2 ஜனாதிபதி தேர்தலில் புஷ்ஷை புறக்கணித்துவிட்டு கெர்ரியை தேர்ந்தெடுக்கிற துணிச்சலை அமெரிக்க மக்கள் பெறுவார்களானால் பயங்கரவாதிகள் அமெரிக்க மக்களை தாக்குவார்கள் என்று துணை ஜனாதிபதி டிக் செனி செவ்வாயன்று அறிவித்தார். Des Moines, Iowa இல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இந்த அசாதாரணமான அச்சுறுத்தலை வெளியிட்டார். ''இன்று முதல் எட்டு வாரங்களில் நவம்பர் 2, அன்று நாம் முற்றிலும் அவசியமான சரியான தேர்வை செய்யவேண்டியது அவசியமாகும். ஏனென்றால் நாம் தவறான தேர்வை செய்வோம் என்றால் மீண்டும் நாம் தாக்கப்படுகிற ஆபத்து உண்டு. அமெரிக்காவின் நிலைப்பாட்டிலிருந்து பேரழிவை உருவாக்குகின்ற வகையில் நாம் தாக்கப்படுவோம்'' என்று செனி கூறினார்.

செனியின் இந்த கருத்துகளில் அமெரிக்க மக்களை மிரட்டுகின்ற தெளிவான, பண்பற்ற போக்கு காணப்படுவதுடன் அது மூர்க்கமான மற்றும் ஆத்திரமூட்டலுமாகும். அமெரிக்காவிற்குள்ளேயோ, அல்லது சர்வதேச அளவிலோ அமெரிக்காவை குறிவைத்து புதிய பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து அரசியல் ரீதியாக இலாபம் அடைய புஷ் நிர்வாகம் முயற்சி செய்கிறது என்பதை அவரது அறிக்கை மறுபடியும் உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அத்தகைய தாக்குதல் நடக்குமானால், அந்தத் தாக்குதலை அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் புஷ்ஷின் மறுதேர்தலுக்கு உறுதிசெய்து தரும்வகையில் திட்டமிட்டு தூண்டிவிட்டார்கள் அல்லது அனுமதித்தார்கள் என்ற கவனமான ஆய்விலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

சில மணி நேரத்திற்குள் முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தெரிவித்த விமர்சனங்கள் மற்றும் ஊடகங்களின் விசாரணைகள் ஆகியவற்றிற்கு பதிலளிக்கின்ற வகையில் புஷ், செனி பிரச்சார அதிகாரிகள் துணை ஜனாதிபதி கருத்தின் முக்கியத்துவத்தை குழப்ப முயன்றனர். செனியின் பேச்சாளரான Anne Womack, கெர்ரியின் வெற்றிக்கும் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குமிடையில் ''எந்த தொடர்பையும் ஏற்படுத்த'' செனி முயலவில்லை என்று கூறினார். ''நவம்பரில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் சாத்தியக்கூறு உண்டு'' என்று குறிப்பிட்டார். ''நமது நாட்டை காப்பாற்றுவதற்கு சிறப்பான, சரியான கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா என்பதுதான் இதில் பிரச்சனையாகும்.'' அதைத்தான் துணை ஜனாதிபதி கூறினார்'' என்று அவர் குறிப்பிட்டார்.

செனியின் கருத்துக்கள் பற்றி நிருபர்களது கேள்விக்கு பதிலளிக்க புஷ் மறுத்துவிட்டார், ஆனால் வெள்ளை மாளிகையின் அதிகாரியான Scott McClellan, Wamack இன் கூற்றை எதிரொலித்தார், துணை ஜனாதிபதி எந்த அச்சுறுத்தலையும் வெளியிடவில்லை, ''அவர் பயங்கரவாத்தின் மீதான போரில் இரண்டு வேட்பாளர்களின் அணுகுமுறையில் காணப்படுகின்ற வேறுபாடுகளை விவாதித்தார்,'' என்று மட்டுமே குறிப்பிட்டார். பின்னர் வெள்ளை மாளிகை அவரது கருத்தின் வேகத்தை மட்டுப்படுத்துகின்ற முயற்சியில் செனி உரையின் திருத்தப்பட்ட அறிக்கையினை வெளியிட்டது.

ஆனால் செனி கூறியதை எவரும் மறுத்துவிட முடியாது. அவர் புஷ் மறு தேர்தல் பிரச்சாரத்தின் முழு உள்ளடக்கத்தை வெளிப்படையாக கூறுவதை தவிர வேறொன்றையும் செய்யவில்லை. இதன்மூலம் மிக அப்பட்டமாக பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்தி அமெரிக்க மக்களை பீதியூட்ட முயன்றிருக்கிறார். ஈராக் மீது படையெடுத்ததன் பேரழிவு விளைவுகளையும், உள்நாட்டில் உழைக்கும் மக்களில் மிகப்பெரும்பாலோர்கள் பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகள் படிப்படியாக சீர்குலைந்து கொண்டு வருவதை அமெரிக்க மக்கள் கவனிப்பதை திசைதிருப்பும் முறையில் அந்த மிரட்டலை செனி விடுத்திருக்கிறார்.

குடியரசுக்கட்சி மாநாட்டில் முக்கிய விவாதத்தில் உரையாற்றிய ஜனநாயகக் கட்சி செனட்டர் ஷெல் மில்லர் (ஜோர்ஜியா) இன் அடியைப்பின்பற்றி செனி கருத்துத்தெரிவித்திருக்கிறார். அவர் Joe McCarthy பாணியில் 20 நிமிடங்கள் ஆவேச உரையாற்றினார். போர்க்காலத்தில் புஷ்ஷின் கொள்கைகளுக்கு தெரிவிக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துமே நாட்டு துரோக குற்றத்திற்கு சமமானவை என்று கூறினார். தான் புஷ்ஷை ஆதரிப்பதற்கு காரணம் அவ்வாறு ஆதரிக்காவிட்டால் தனது குடும்பமே ஒழித்துக்கட்டப்பட்டுவிடும் என்று அஞ்சுவதாக ஷெல் மில்லர் குறிப்பிட்டார்.

ஷெல் மில்லர் இன் கருத்துக்களை சில ஊடகங்கள் விமர்சித்திருந்தாலும், ஷெல் மில்லர் போன்றவர்களது ஆவேசதொனியிலும், உள்ளடக்கத்தோடும் புஷ் தனது நிலைக்கு மேலாகவே சென்று கருத்து தெரிவித்திருக்கிறார். தொழிலாளர் தின வாரக்கடைசியில் ஓகியோவில் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய புஷ், மில்லர் உரையை பாராட்டி''அவர் இன்னும் நான்கு ஆண்டுகளில் டிக் செனியும் நானும் இந்த நாட்டை பாதுகாப்பு நிறைந்ததாக ஆக்குவோம் என்பதை புரிந்துகொண்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்'' என்று குறிப்பிட்டார். இதே போன்ற கருத்துக்கள் புஷ் பென்சில்வேனியா Wisconsin, மேற்கு வெர்ஜினியா மற்றும் lowaவில் ஆற்றிய உரைகளிலும், இடம்பெற்றன. குடியரசுக் கட்சிப் பிரச்சார அதிகாரிகள் எதிர்கால தேர்தல் பேரணிகளில் மில்லரும் புஷ்ஷோடு உரையாற்றக்கூடும் என்று குறிப்பிட்டனர்.

செனியின் கருத்துக்களுக்கு கெர்ரி-எட்வர்ட்ஸ் பிரச்சாரம் அரைமனதோடு பதிலளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வேட்பாளரான செனட்டர் ஜோன் எட்வர்ட்ஸ் அந்த பிரச்சாரத்திற்கு அதிகாரபூர்வமான மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ''டிக் செனியின் பீதியூட்டும் தந்திரங்கள் இன்றையதினம் எல்லையைக் கடந்துவிட்டன.'' அவர் அமெரிக்க மக்களுக்கு சொல்லியிருப்பது என்னவென்றால் நவம்பரில் நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று எங்களைத் தவிர வேறு எவருக்கும் வாக்களிப்பீர்களானால் அப்போது, பயங்கரவாத தாக்குதல் நடக்கும். அது உங்களது தவறுதான். "இது அமெரிக்க இயல்புக்கு விரோதமானது'' என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

என்றாலும் புஷ் தானே-பிரகடனப்படுத்திக் கொண்ட "பயங்கரவாதத்தின் மீதான போரில்'', தனது அடிப்படை ஒத்துழைப்பை எட்வர்ட்ஸ் வலியுறுத்திக்கூறினார். அந்தக் கொள்கைதான் புஷ் நிர்வாகம் தனது ஒவ்வொரு உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் செயற்திட்டங்களை நியாயப்படுத்தும் ஒட்டுமொத்த பிற்போக்கு நிகழ்ச்சி நிரலின் சாக்குப்போக்கிற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. ''அமெரிக்காவை பயங்கரவாதிகளது கொடூரமான தாக்குதல்களில் இருந்து காப்பது ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி பிரச்சனையல்ல, அது ஒரு அமெரிக்க பிரச்சனை இதை டிக் செனியும், ஜோர்ஜ் புஷ்ஷும் அறிந்திருக்க வேண்டும். ஜோன் கெர்ரியும், நானும் அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக ஆக்குவோம், அதற்காக அமெரிக்க மக்களை பிளவுபடுத்தமாட்டோம்'' என்று எட்வர்ட்ஸ் கூறினார்.

பின்னர் மின்னஸோட்டாவில் உரையாற்றிய கெர்ரி ''அவர்களது அரசியலுக்கு ஒரு கருவியாக பயங்கரவாதத்தின் மீதான போரை பயன்படுத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, ஆத்திரமூட்டுவது. நான் ஒரு இளைஞனாக இருந்தபோது இந்த நாட்டை பாதுகாத்து நின்றேன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற முறையில் நான் இந்த நாட்டை பாதுகாப்பேன்'' என்று கூறினார்.

அவரது சொந்த அரசியல் வரலாற்றில் ஆக்கபூர்வமான ஓர் அம்சமான, வியட்நாம் போர் எதிர்ப்பு வீரர்கள் அமைப்பின் சார்பில் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததை புறக்கணிக்கிற வகையில் கெர்ரி தற்போது ஒரே மாதிரியான கருத்தைக் கூறிக்கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் 1970-71 வியட்நாமில் கொடூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை அமெரிக்க தளபதிகளும் ஜோன்சன் மற்றும் நிக்ஸன் நிர்வாகங்களும் மேற்கொண்டதை அம்பலப்படுத்த உதவின. அமெரிக்காவையோ அல்லது அமெரிக்க மக்களையோ காப்பாற்றுவதற்காக வியட்நாமில் துருப்புக்கள் போரிட்டன என்ற கூற்றை அவர் அப்போது மறுத்தார்.

மேலும் Cincinati யில் செவ்வாகிழமையன்று உரையாற்றிய கெர்ரி, புஷ் நிர்வாகத்தின் மிகப்பெரிய பொய்யை எதிரொலித்தார். 2001 செப்டம்பர் 11 இல் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக தான் ஈராக் மீது படையெடுத்து அந்த நாட்டை வெற்றி கொண்டதாக புஷ் நிர்வாகம் கூறிவருவது மிகப்பெரிய பொய்யாகும். ஈராக்கில் நடைபெறுகின்ற போரில் பலியான அமெரிக்கத்துருப்புக்களின் எண்ணிக்கை 1,000தை கடந்துவிட்ட ஒரு மைல் கல்லை குறிப்பிடுகின்ற வகையில் கருத்துத் தெரிவிக்கும்போது, கெர்ரி அங்கே மடிந்தவர்கள் ''பயங்கரவாதத்தின் மீதான போரில் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக மடிந்தவர்கள்'' என்று கூறினார்.

வியாழனன்று நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு தலையங்கத்தில் செனியின் கருத்துக்கள் ''வெட்கக்கேடானவை'' என்று வர்ணித்துள்ளது. வழக்கமான குழப்பமான மொழியில் டைம்ஸ் கூறியிருப்பதாவது: ''இந்த தேர்தல் போட்டியில் ஏதோ ஒரு பக்கத்தில் பயங்கரவாதிகள் காலூன்றி இருக்கிறார்கள் என்பதுபோல் கூறுவது மிகவும் வெறுக்கத்தக்கது என்பதை கெர்ரி மற்றும் புஷ் தேர்தல் பிரச்சார அணியினருக்கு ஒன்று இயல்பாகவே தெரிந்திருக்கவேண்டும். ஆனால், இப்படி வெளிப்படையற்ற ஒரு தடையை இந்த வாரம் Des Moines இல் துணை ஜனாதிபதி டிக் செனி மீறிவிட்டதாகத் தோன்றுகிறது.''

''உள்ளார்ந்த நல்லெண்ண முன்னெச்சரிக்கையோடு'' புஷ்ஷின் மறுதேர்தல் பிரச்சாரம் நடைபெறவில்லையே என்று டைம்ஸ் வருந்தியுள்ளது----- இப்படிப்பட்ட அடிப்படை கவனமின்மை, போக்கிரித்தனங்களை நான்காவது ஆண்டில் எப்படி அவர்கள் கண்டு பிடித்தார்கள் என்பதை அந்தப் பத்திரிகை விளக்கவில்லை.

ஜனநாயகக் கட்சிக்காரர்களோ, அல்லது தாராளவாத ஊடக விமர்சகர்களோ செனியின் கருத்திற்கு பதில் சொல்லியிருக்கிறார்களே தவிர அவரது விமர்சனத்தின் உள்ளார்ந்த தாக்கத்தின் கடுமையான விளைவுகளை ஆராயவில்லை. நவம்பர் 2 இல் நடைபெறுகிற வாக்குப்பதிவின் முடிவு தனக்கு சாதகமாக இல்லாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள புஷ் நிர்வாகம் தயாராக இல்லை என்ற விரிவான ஒரு நிலைப்பாட்டின் ஓர் அங்கம்தான் Des Moines இல் செனி கூறிய கருத்துக்களாகும்.

புஷ் நிர்வாக அதிகாரிகள் இந்த கோடைகாலத்தில் புதிய பயங்கரவாத தாக்குதல் நடக்குமானால் தேர்தலை தள்ளிவைப்பது அல்லது இரத்து செய்துவிடுவது என்றதற்கான சாத்திக்கூறு குறித்து விவாதிக்க தொடங்கினார்கள். ஆனால், அப்போதைய கருத்துக்கணிப்புக்களில் புஷ் ஓரளவிற்கு முன்னணியில் இருந்ததால் தற்காலிகமாக அந்த விவாதம் தள்ளிவைக்கப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பு வெள்ளை மாளிகைக்கு எதிராகத் திரும்புமானால் ஒத்திவைப்பு அல்லது இரத்து செய்வது மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நீதித்துறை, மற்றும் பென்டகனில் இதற்கான இதற்கான சாத்தியமான திட்டங்கள் தீட்டப்பட்டுவருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved