World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

Balkans continues to fracture

பால்கன் தொடர்ந்தும் சிதைவடைகிறது

பகுதி 1 | பகுதி 2

By Paul Mitchell
29 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

இது பால்கன் பகுதியில் வளர்ந்து வரும் ஸ்திரமற்ற தன்மை, பதட்டங்கள் பற்றிய இரு-கட்டுரைத் தொடரின் முதல் பகுதியாகும்.

அந்த பிராந்தியத்தின் அரசியல், பொருளாதார நெருக்கடியை மேற்கத்திய வல்லரசுகள் தீர்க்க இயலாததின் விளைபயனாக, பால்கன் பிராந்தியங்கள் தொடர்ந்து சிதைவிற்கு உட்பட்டு வருகிறது. மாறாக, அப்பகுதிகள் ஒரு மனித இன பேரழிவை ஏற்படுத்தியுள்ளதோடு, இனத்திற்குள்ளேயே பூசலை வளர்த்து பிராந்திய முழுவதையும் மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள சுதந்திர ஐரோப்பிய வானொலி (Radio Free Europe), கொசவோ, சேர்பியா, பொஸ்னியா-ஹெர்ஜிகோவினா ஆகிய பகுதிகளிலும், இன்னும் கூடுதலான பக்கத்து பிராந்தியங்களும் தோல்வியுற்ற அரசுகளாகிவிடும் அல்லது "கறுப்பு ஓட்டைகள்" ஆகிவிடும் என்று கூடுதலான அரசியல் பார்வையாளர்கள் கருதுவதாக எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பேரழிவிற்கும், அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் பிரிவினைவாதிகளுக்கும், முதலாளித்துவ சுதந்திர சந்தைக்கு வாதிடுவோருக்கும் ஆதரவு கொடுத்து முந்தைய யூகோஸ்லாவியாவை சிதைத்தற்கும் தொடர்பே இல்லை என்பது போல் இதை நடத்தும் முறை காணப்படுகிறது.

உறுதிமொழியளிக்கப்பட்ட வளமான வாழ்வு, சுதந்திரம் என்பதற்கு பதிலாக இப்பகுதி இப்பொழுது பெரிய ஏகாதிபத்திய சக்திகளின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இவற்றின் தயவில் இருப்பதுடன், சாரம்சத்தில் காலனித்துவ பாணியைக் கொண்டுள்ளது. இங்கு வெளிப்படையாக விஷயங்களில் முடிவெடுக்கப்படாது மேற்கத்திய சக்திகளால் திணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், நலன்புரி சீர்த்திருத்தங்கள் மற்றும் தனியார்மயமாக்கலின் கொள்கையை போதுமான அளவிற்கு கடுமையாக அமுல்படுத்த அரசாங்கம் உறுதியுடன் கையாளாவிட்டால் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நீக்கப்படும் என்று அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

இப்பகுதியில் சமூக நெருக்கடி தீவிரமாகியுள்ளது. வேலையின்மை 40ல் இருந்து 70 சதவிகிதம் வரை உள்ளது, சராசரி ஊதியம், மாதத்திற்கு 100 டாலரிலிருந்து 200 டாலர் வரை மட்டும்தான்.

பால்கன் பகுதிகளை "காப்பாற்றுபவர்கள்" என்று பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தலைவர்கள், அக்கொள்கைக்கு பொறுப்பேற்றவர்கள் அனைவரும் பால்கன் மக்களால் பெரிதும் அவநம்பிக்கை தன்மைக்குத்தான் உட்பட்டுள்ளனர். இது தேர்தலில் பங்கு பெறுவதில் எப்பொழுதையும் விடக் குறைவு என்ற விளைவை இப்பொழுது ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத்திறனில் அரசியல் ரீதியாக நம்பிக்கை இழக்கப்பட்டதும், சோசலிசப் புரட்சி வரும் என்ற நம்பிக்கை இற்றுப்போனதும், தேசியவாத, பிரிவினைவாத சக்திகளின் வளர்ச்சிக்கு வழி கொடுத்துள்ளன.

முந்தைய யூகோஸ்லேவியாவின் நிலைமுறிவினால் எழுந்துள்ள மிகப் பெரிய உள்பொருள் வடிவமாக தோன்றியது 2002-ல் சேர்பியா, மான்டிநீக்ரோப் ஒன்றியம் ஆகும், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமிட்ட செயலாற்றலில் வந்தது. இரண்டு அரசுகளுக்குமிடையே உள்ள முக்கியமான பிரச்சினைகளை புதிய ஒன்றியம் தீர்த்துவைக்கப்படவில்லை. மான்டிநீக்ரோ முந்தைய தசாப்தத்தை காட்டிலும் சுதந்திரமாக வளர்வதற்கான கூறுபாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகள் அனுமதிக்கும், முழு சுதந்திரம் வரும் என்ற நம்பிக்கையும் தக்க வைக்கப்பட்டன--- அந்த விதியோ ஒன்றியத்தின் உறுப்புநாட்டு தகுதி மீண்டும் 2006ல் பரிசீலனைக்கு வரும் என்ற உறுதிமொழியில் விழிப்புடன் தங்கியுள்ளது.

இதை ஒட்டி விளைந்த எங்கும் செல்ல முடியாத நிலை, ஐரோப்பிய ஒன்றியத்தை மற்றொரு கொள்கை மாற்றத்தை வகுக்கவைத்து, அதனையொட்டி இரட்டை-வழி போக்கில் இரண்டு குடியரசுகளையும் அணுக வேண்டும் என்றும், சேர்பியா, மான்டிநீக்ரோப் பொருளாதாரங்கள் தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மான்டிநீக்ரோவிற்குக் கூடுதலான தன்னாட்சி, சுய-நிர்ணயம் என்பவற்றிற்கான கோரிக்கைகள், தொடக்கத்தில் மேற்கத்திய வல்லரசுகளால் ஸ்லோபோடன் மிலோசெவிக்கின் சேர்பிய ஆட்சியை கீழறுக்க ஊக்கம் கொடுக்கப்பட்டன. மான்டிநீக்ரிய அரசாங்கம் கூடுதலான கூட்டாட்சிப் பொறுப்புக்களான வெளிநாட்டு வர்த்தகம், சுங்கத்துறை போன்றவற்றை எடுத்துக் கொண்டு, 1998ஐ ஒட்டி வரிக் கொள்கை, நாணயமுறை (Monetary), வெளிநாட்டுக் கொள்கை இவற்றின் முழுப் பொறுப்பையும் அவற்றின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஜேர்மனிய மார்க் நாணயம் யூகோஸ்லாவிய டினர், மற்றும் அப்பொழுதிருந்த யூரோ இவற்றிற்கு இணையாகப் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசிற்கு பொதுவாக இறைமை பெற்ற அரசுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் அங்கீகாரம் அளிக்கப்பட்டு சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவன அமைப்புக்களில் இடமும் கொடுக்கப்பட்டது.

இராணுவத்தினால் மிலோசேவிக் அரசாங்கத்தைக் கவிழ்த்த பின்பு, மான்டிநீக்ரின் சுதந்திரத் கோரிக்கைகளை அதேபோல் ஒரு அரசியல் எதிர் எடையான பெல்கிராட் புதிய மேற்கு சார்ந்த ஆட்சிக்கு மேற்கத்திய வல்லரசுகள் நீண்ட காலமாக பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. 2001 ல் ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திரம் பற்றிய வாக்கெடுப்புத் திட்டத்தைக் கைவிடும்படி மான்டிநீக்ரிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது; அத்தகைய முயற்சி மான்டிநீக்ரோவிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும், ஏற்கனவே அங்கு பாதிக்கும் சற்று மேலான மக்கள்தாம் சுதந்திரத்தை விரும்பிகிறார்கள் என்றும் கூறியது. சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்பது கொசோவின் தீர்க்கப்படாத அந்தஸ்தை அச்சுறுத்தும் என்பதோடு, சேர்பியக் குடியரசான ஸ்ரப்ஸ்கா (Srpska) என்னும் பொஸ்னிய-ஹென்ஜிகோவினாவின் (Bosnia-Herzegovina) பக்கத்து பிராந்தியங்களிலும் பிரிவினை அழுத்தங்களை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.

இரட்டைப் பாதை அணுகுமுறை

செப்டம்பர் மாத தொடக்கத்தில் 25 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் முதன்முதலாக வெளிப்படையாக புதிய இரட்டைப் பாதை அணுகுமுறை முன்வைக்கப்பட்டது. செப்டம்பர் 10 அன்று மான்டிநீக்ரிய ஏடான Vijesti ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தொடர்பாளர் கிரைஸ் பாட்டென் எழுதியதாக கூறப்பட்ட, கசிந்த குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அது ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் Javier Solana-கும், ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் குழு தலைவர் மற்றும் டச்சின் வெளியுறவு மந்திரி பெர்னர்ட் போட்டிற்கு விலாசமிடப்பட்டு இருந்தது.

இந்தக் குறிப்பில் "நம்முடைய தற்போதைய கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றம்" தேவை என்று பாட்டென் தெரிவிக்கிறார் ஏனெனில், இரண்டு வெவ்வேறு பொருளாதார முறைகளைக் கொண்டுள்ள சேர்பியா, மான்டிநீக்ரோ பகுதிகளில், இரண்டு ஆண்டுகள் விவாதங்களுக்குப் பிறகும் பொதுப் பொருளாதாரச் சந்தை பற்றியோ, சுமூகமாக இணைந்து செயல்படுவது பற்றியோ எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் முன்னேற்றம் ஏற்படும்போலத் தோன்றவும் இல்லை என்றும் எழுதியுள்ளார். உலக வர்த்தக அமைப்பிற்கான மனு "முற்றிலும் தடைக்குட்பட்டுள்ளது" என்றும் ஒன்றியத்தின் கூட்டரசுச் சட்டமன்றத்திற்கான நேரடித் தேர்தல்கள், திட்டமிட்டபடி, மார்ச் 2005ல் நடக்குமா என்பது பற்றி "தீவிரச் சந்தேகங்களும்" அது "முற்றிலும் செயலாற்றும் தன்மையை இழந்துவிடுமோ" எனத் தோன்றுகிறது எனவும் விளக்கியுள்ளார்.

"ஐரோப்பிய சார்புடைய சீர்திருந்த நடவடிக்கைகள் வாக்களர்களுக்கு திருப்தி என்று காட்டக்கூடிய அளவிற்கு இல்லை எனவேதான் வருந்தத்தக்க முறையில் அதிக பட்ச 45 சதவிகித வாக்கு (சேர்பிய முற்போக்குக் கட்சி உறுப்பினர் Tomislav), சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலில் (சேர்பியாவில்) நிக்கோலிக்கு என்று உள்ளது. அதிருஷ்ட வசமாக, போரிஸ் டாடிக் (ஜனநாயக கட்சியின்) இறுதியில் வெற்றபெற முடிந்தது. ஆனால், இப்பொழுதுள்ள சிறுபான்மை அரசாங்கம் உறுதியற்ற, நீண்ட நாள் நிலைத்திருக்காது போல் தோன்றுகிறது" என்று பேட்டன் தொடர்ந்து கூறியுள்ளார்.

ஒரு புதிய EU கொள்கை Montenegrin சுதந்திர ஆதரவாளர்கள், சேர்பியாவுடன் ஒன்றிணைப்பு என்று விரும்புவர்களுக்கு தங்களுடைய இலக்குகள் வெற்றி பெற்றுள்ளன என்று கூறிக்கொள்ள வகை செய்கிறது.

இப்பொழுது ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும், பிரதம மந்திரி Milo Djukanovic மற்றும் அவருடைய ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியும் மான்டிநீக்ரோவின் சுதந்திரத்திற்காக அழுத்தம் கொடுத்து, இதற்காக வாக்கெடுப்பையும் விரும்புகின்றனர். மான்டிநீக்ரோவின் ஜனாதிபதி Filip Vujanovic கூறினார்: "ஓர் இரட்டை-உறுப்பினர் அரசு ஒன்றியம் என்னும் முன்மாதிரியில் புதிய உறவுகளை ஏற்படுத்தும் முயற்சியை பெல்கிராட் உடன்படிக்கை பிரதிநிதித்துவம்படுத்தியது. இதற்கு முன் அது போன்ற முன்மாதிரி, தத்துவத்திலோ, நடைமுறையிலோ இருந்ததில்லை." பின் அவர் தொடர்ந்தார்: "இந்த அரசுகளின் ஒன்றியத்தில் பிணைக்கைதிபோல் இருப்பதாக மான்டிநீக்ரோ உணருகிறது ...பொருத்தமற்ற செலவுகளை மட்டும் தான் இது உளதாக்குகிறது." அவர் மேலும் எச்சரித்தார்: "சேர்பியா இத்தகைய ஒன்றிணைப்பைக் காக்கவேண்டும் என்று வலியுறுத்தினால், குடிமக்களுடைய வாக்கெடுப்புத்தான் இறுதி முடிவு எடுப்பதற்கு நடத்தப்படவேண்டும்."

இதற்கு ஒன்றிணைப்பை ஆதரிக்கும் கட்சிகளிடம் எதிர்ப்பு இருப்பதுடன், கிட்டத்தட்ட 40 சதவிகித உறுப்பினர்களை மான்டிநீக்ரோச் சட்ட மன்றம் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒன்றியத்தின் கூட்டாட்சி சட்ட மன்ற நேரடித் தேர்தல் அடுத்த மார்ச் மாதம் நடக்கும்போது தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறார்கறள், சுதந்திரம் வேண்டும் எனக்கோரும் ஆதரவாளர்கள் அவர்களை ஒருவேளை புறக்கணிக்கக் கூடும்.

கூட்டு அரசிற்கான வலுவான ஆதரவு சேர்பிய-சார்பு மான்டிநீக்ரோ பகுதியில் இருப்பதாகவும், சேர்பியாவில் குறைவு என்றும் வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. சேர்பியாவில் பெரும்பாலான கட்சிகள் EU-வின் கட்டளைகளின்படி ஆதரவு கொடுக்கின்றன, ஆனால் சமீபத்திய மாதங்களில் சிறிய G 17 பிளஸ் கட்சிகள் செர்பியா, மான்டிநீக்ரோ ஒன்றிலிருந்து மற்றொன்று சுதந்திரமாக இருக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து வருகிறது. G 17 பிளஸ் குழுவின் மையத்தில் 17 சுதந்திர சந்தை பொருளாதாரவாதிகள், 2003 ல் அரசியல் கட்சியை உருவாக்குதற்கு முன் அழுத்தும் கொடுக்கும் குழுவாகச் செயல்பட்டிருந்தனர். G 17 பிளஸ் உடைய தலைவர் Miroljub Labus ஆவார். அவர் சேர்பிய அரசாங்கத்தின் துணை பிரதம மந்திரியாகவும் வெளியுறவு, பொருளாதார மந்திரியாகவும் பிரதம மந்திரி வோஜிஸ்லோவ் கோஸ்டுனிகாவின் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறார். இரட்டை பாதை கொள்கை, "மேற்கத்திய பால்கன்களில் ஐரோப்பிய கருத்திற்கு தோல்வி என்று பிரதிபலிக்காமல், மாறாக ஒருகாலத்தில் யூகோஸ்லாவிய ஐக்கிய பொருளாதாரம் அடிப்படையாகக் கொண்டிருந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதைத்தான் கூறுகிறது" என்று தெரிவிக்கிறார்.

கோஸ்டுனிகா அரசாங்கத்தின் பிற்போக்குத்தன்மைக்கும், சேர்பிய மரபுமுறைத் திருச்சபையின் செல்வாக்கிற்கும் அடையாளமாக இருப்பது, கல்வி மந்திரி Ljiljana Colic, இவர் பள்ளிகளில் ஆங்கில படிப்பை தடை செய்துள்ளார். கோஸ்டுனிகாவில் DSSஇன் நிறுவன உறுப்பினரான காலிக், டார்வினுடைய வளர்ச்சிக் கோட்பாட்டையும் தடை செய்ய விரும்பினார்; ஏனெனில் அதில் "நிறைய வெற்றிடங்கள்" உள்ளன என்பது அவருடைய கருத்து. ஆனால் பொதுமக்கள் கூக்கூரல் எழுப்பியதும் இவ்வம்மையார் அந்த மாற்றத்தை நிறுத்திக்கொண்டார். பின்னர் இவர் ராஜிநாமா செய்துவிட்டார்.

சேர்பியாவிற்குள்ளேயே, தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்களார்கள் பங்குபெறாமலிருக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் பல காரணிகள் இணைந்து Vojislav Seselj இன் தீவிர தேசியவாத சேர்பிய முற்போக்குக் கட்சியை (SRS) ஐ நாட்டின் பெரிய கட்சியாக ஆக்கியுள்ளன. எத்தனையோ ஆண்டுகளாக இருந்திருந்த பொருளாதாரக் கஷ்டங்கள், இன்னும் கூடுதலான முறையில் NATO 1999ல் நடத்திய குண்டுவீச்சுக்களினால் மோசமாயின. 35,000 தடவை குண்டுகள் வீசப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், நாட்டின் தொழிற்துறை, சமூக உள்கட்டமைப்புகளில் பெரும்பகுதி சிதைந்து போயின, இவற்றின் விளைவாக பல நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை வேலையின்றி உள்ளனர்.

பால்கன் மோதல்களின்போது, மேற்கத்திய வல்லரசுகள், யூகோஸ்லாவியா திடீரென்று சிதைக்கப்பட்டு விட்டதின் விளைவாகவும், பழைய கூட்டமைப்பின் பல பகுதிகளிலும் வாழ்ந்திருந்த சேர்பிய சமூகத்தினர் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிட்டதால், சேர்பியா அதிருப்தி அடைய போதுமான காரணம் கொண்டுள்ளது என்பதை மறுத்துள்ளன. மிக அதிகமான விகிதத்தில், அதற்குப் பின்னர் சேர்பியர்கள் ஹேகில் உள்ள போர்க்குற்ற விசாரணை மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்--- இந்த உண்மையை Seselj திறமையுடன் பயன்படுத்தி, தனக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்களுக்காக தானே விசாரணைக் குழுவின் முன் தோன்ற இசைந்தார்.

இந்தச் சூழ்நிலைதான் அப்பகுதியை பற்றிய பகுப்பாய்வாளர் Ines Sabalicஐ, "சேர்பியா கிட்டத்தட்ட வைய்மர் (Weimar ) நிலையில் உள்ளது" என்று குறிப்பிட வைத்துள்ளது.

SRS இன் நிகோலிக் டாடிக்கையும் ஜனநாயகக் கட்சியையும் சேர்பிய ஜனாதிபதி தேர்தல்களில் ஜூன் மாதம் (48.5 சதவிகித வாக்குப்பதிவு இருந்தது) கிட்டத்தட்ட தோற்கடிக்கும் அளவிற்கு வந்திருந்ததோடு, செப்டம்பர் 19 நடைபெற்ற உள்ளாட்சிக் குழுக்கள் தேர்தலின் முதல் சுற்றில், SRS, ஜனநாயக் கட்சி சமமான வாக்குகள் பெற்று எந்தக் கட்சிக்கும் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் போயிற்று. அக்டோபர் 3ம் தேதி, தேர்தலின் இரண்டாம் சுற்று நடைபெற உள்ளது.

இதே உள்ளாட்சித் தேர்தல்களில், கோஸ்டுனிகாவின் ஜனநாயக சேர்பியக் கட்சி (DSS) நான்காம் இடத்திற்குச் சரிந்தது. ஒரு காலத்தில் கோஸ்டுனிகா SRS ஐ ஒதுக்குவதற்குத் தாம்தான் சேர்பிய நாட்டை காப்பாற்றுபவர் என்றும் பழைய யூகோஸ்லாவிய முறிவை தவிர்ப்பதற்கு தான் எதிர்ப்புத் தெரிவித்திருந்த தீவிர தேசியவாதி என்று கூறுகிறார். ஆனால் இவருடைய தேசியவாத வாய்வீச்சுகள், அவர் வாதிட்டிருந்த மேலை நாடுகளின் பொருளாதாரத் திட்டத்தின் முழு விளைவுகளையும், சேர்பிய மக்கட்தொகையின் பரந்த வெகுஜனங்களுக்கு அது கொடுக்கக் கூடிய பேரழிவு விளைவுகளையும் மறைக்க முடியவில்லை.

தொடரும்......

Top of page